Jump to content

Recommended Posts

சக்கரவர்த்தி முதல் குறுநில மன்னர்கள் வரை அந்தப்புரம் வைக்காத மன்னர்களே கிடையாது. இந்த வார்த்தையை உபயோகிக்காத எந்த வரலாற்று எழுத்தாளரும் இல்லை, அந்தப்புரம் எப்படி இருந்திருக்கும் என்பதை பற்றி அறியும் ஆவலில் வாங்கியதே முகில் எழுதிய "அகம் புறம் அந்தப்புரம்"  என்ற வரலாற்று நூல். ஆயிரம் பக்கங்களை தாண்டிய இந்த புத்தகத்தை தூக்குவதே பெரிய பயிற்சி தான்.  இணயத்தில் அந்தப்புரம் பற்றிய தேடலில் ஒன்னும் அகப்படவில்லை. ஆதலால் வரும் தலைமுறையினருக்கு அந்தப்புரத்தை பற்றிய அறிவை உண்டாக்கவே இந்தப் பதிவு :)
 
துருக்கி சுல்தான்களின் அந்தப்புரம்தான் உலகிலேயே மிகவும் பிரசித்தப் பெற்றதும், சரித்திர ஆசிரியர்களால் கொண்டாடப்படுவதும் ஆகும். இணைத்திருக்கும் படங்கள் எல்லாம் இணையத்தில் இருந்து எடுத்தது, ஒட்டாமன் மன்னர்களின் அந்தப்புரம் பற்றியது. 
 
சரி அந்தப்புரம் எப்படி இருக்கும் ??
 
நீண்ட திரைச் சீலைகள்... அலங்கரிக்கப்பட்ட மாடங்கள்..எங்கு நோக்கினும் அழகிகள்....சில மன்னர்கள் தங்கள் வருவாயில் அறுபது
சதவீதம் அந்தப்புரத்திற்கு செலவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...  
 
 
அந்தப்புரத்தின் தலைவி பட்டத்து மகாராணிதான். அந்தப்புரத்து பெண்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகிறார்கள்.

1.  மகாராணி - மன்னர் அதிகாரபூர்வமாக திருமணம் செய்து கொண்ட பெண்கள்
2.  ராணி - திருமணம் செய்து மனைவி போல நடத்தப்படுபவர்
3. ஆசை நாயகிகள் - மன்னனோடு கலவி கொண்டவர்கள்
4. அழகிகள் - மன்னனின் கடைக்கண் பார்வைக்காக காத்திருப்பவர்கள்

சரி இவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் எப்படி ?

harem-terrace-of-seraglio.jpg

குளிக்குமிடம்   

 

 

 

the_mystery_of_the_ottoman_harem_back_co

தங்குமறை

 

Rosati_harem-dance.jpg

நடனம்

 
மகாராணிகள் அறைகள் மிகப் பெரியது. சேவகம் செய்யவே நூற்றுக்கணக்கான பெண்கள் இருப்பர்கள்.  ராணிகள் அறைகள் ஓரளவுக்கு பெரிதாக இருக்கும். ஆசை நாயகிகளுக்கு ஒரே ஒரு அறைதான். மற்ற அழகிகள் பொது அறையில் தான் தங்க வேண்டும்.

உணவைப் பொருத்தவரையில் அரண்மனையில் ஒரு நாளைக்கு எழுபது பதார்த்தங்கள் சமைத்தார்கள் என்றால் மகாராணி எதுவேண்டுமென்றாலும் கேட்டு சாப்பிடலாம். தங்க தட்டில் பரிமாறப்படும். ராணிகளுக்கு முப்பது பதார்த்தங்கள் வரை வெள்ளித் தட்டில் வைத்து கொடுக்கப்படும். ஆசை நாயகிகளுக்கு அதிகப் பட்சம் பத்து பதார்த்தங்கள் பித்தளை தட்டில் வைத்து பரிமாறப்படும். 

சரி இவர்களது வேலை என்ன?
 
 
ottoman_harem_1.jpg
தங்கள் அழகுக்கு அழகு சேர்ப்பது...மன்னரை மகிழ்விப்பது. இசை, ஆடல், பாடல், கூடல் கலைகளைக் கற்றுக் கொடுக்க அதில் அனுபவமிக்க தனித்தனி ஆசிரியைகள் உண்டு. பட்டத்து மகாராணிக்குத்தான் கொஞ்சம் அதிகப்படியான வேலை. அந்தப்புரத்தின் வரவு செலவு கணக்குகளைப் பார்ப்பது, சமையல்  துறை, மருத்துவ துறை, மன்னர் திருமணம் செய்த பெண்களையும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் பற்றி கணக்கு  வைத்துக் கொள்வது .... ஒவ்வொன்றையும் கவனிக்க தனித்தனி செயலர்களை மகாராணி வைத்துக் கொள்ளலாம். 

காவல்??
Ottoman_Eunech_1912.jpg
அந்தப்புரத்தில் நுழைய மன்னருக்கு மட்டுமே அனுமதி உண்டு. காவலுக்கு பிறப்புறப்பு நீக்கப்பட்ட திருநங்கைகள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். பல நேரங்களில் மன்னனின் நம்பிக்கைக்குரிய காவலர்கள் நியமிக்கப்படுவதும் உண்டு. அத்து மீறி நுழைபவர்களின் தலை அல்லது வேற உறுப்புகள் வெட்டப்படும். 

சரி அந்தப்புரத்திற்கு பெண்கள் எப்படி தருவிக்கப்படுகிரார்கள்?
 
Slave+market+jean+leon+gerome+1866.jpg

பகை நாட்டிலிருந்து போரின் மூலம் பிடித்து வரப்படும் அழகான பெண்கள் அந்தப்புரத்தில் சேர்க்கப்படுவார்கள்(தமிழ் இலக்கியங்களில் கொண்டி மகளிர் என அழைக்கப்படுவார்கள்). குறுநில மன்னர்களிடமிருந்து அன்பளிப்பாக வரும் அழகிகளும் அந்தப்புரத்திற்கு அனுப்படுவார்கள். மாற்றப்பட்டு மன்னர் நகருலா வரும்போது, வேட்டைக்குச் செல்லும்போது அகப்படும் அழகான பெண்களும் அந்தப்புரத்திற்கு அனுப்படுவார்கள்.

 

அந்தப்புர பெண்கள் பெரும்பாலும் அதை விட்டு வெளியே செல்லக் கூடாது. சென்றாலும் எதாவது விழாக்களுக்கோ, ஆறு குளங்களில் நீராடவோ, கோவிலுக்கோ மொத்தமாக செல்ல அனுமதிக்கப்படுவர். ஓரளவு வயதான பின்பு அந்தப் பெண்கள் அந்தப்புரத்திலிருந்து வெளியற்றப்படுவார்கள். அந்தப்புரத்திலிருந்து பெண்கள் வெளியேறினாலும், வேறு யாருடன்
தொடர்பு வைத்திருந்தாலும் மரண தண்டன் நிச்சயம். 

 

நோய் உள்ளவர்கள்(காய்ச்சல், சளி) , மாதவிடாய் கொண்டவர்கள் கூந்தலை அள்ளி முடியக் கூடாது. அதுதான் மன்னருக்கு கொடுக்கப்படும் சமிக்கை. அந்த சமிக்கையை உணர்ந்து மன்னர் கூந்தல் அள்ளி முடியாதவர்களை தொட மாட்டார். நீண்ட திரைக்கு பின்னால் அமர்ந்துதான் வைத்தியம் பார்க்க வேண்டும். எந்த ராணிக்கு எந்த வியாதி, என்ன மருந்து கொடுக்கப்பட்டது என்ற விபரங்கள் மருத்துவர் மூலம் தினமும் மன்னருக்கு தெரிவிக்கப்படும். இன்னும் நிறைய எழுத இருந்தாலும் தலைப்பைக் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

 

 

Link to comment
Share on other sites

நமது தமிழ் மன்னர்களின் திருவிளையாடல்கள் பற்றிய குறிப்புகள் ஏதாவது உண்டா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மன்னர்களைப் பற்றித் தெரியவில்லை.. தசரதன் உள்ளிட்ட வட இந்திட மன்னர்களின் நிலையை தானே படிக்கிறமே. அப்ப எல்லாம்.. ரீச்சரட்ட.. கேட்டா அவருக்கு மூனு நாலு பொண்டாட்டி சரியா ரீச்சர் என்றால்.. ரீச்சர் சும்மா மூடிக்கிட்டு படிட்டா என்று சொல்லுவா. இப்ப விளங்குது. :)

 

அதுசரி.. உந்த மன்னர்கள்... இப்படி எல்லம் நாளுக்கு ஒன்றோடு.. மிணக்கட்டிருக்கிறாய்களே.. அவங்களுக்கு எப்படி எயிட்ஸ் வராமல் போச்சுது. அப்பவே கொண்டோம் பாவிக்க ஆரம்பிச்சிட்டாய்களா..???! :D:lol:

Link to comment
Share on other sites

உலகத்தில் எல்லா அரசர்களும் உந்த ராஜபோகத்தை அனுபவித்தே வந்துள்ளார்கள் .

சீன,ஜப்பானிய சினிமாக்கள் பார்க்கும் போது மன்னர்கள் மட்டும் அல்ல பணம் படைத்த பிரபுக்கள் போன்றவர்களும் இதே வாழ்க்கை தான் வாழ்ந்துள்ளார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எங்கட கடவுள்களே விளையாடாத விளையாட்டு எல்லாம் விளையாடி இருக்கும் போது மன்னர்கள் விளையாடினால் என்ன தப்பு :rolleyes:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.... நாங்க வாழுறதெல்லாம்  ஒரு வாழ்க்கையா என்று சிந்திக்க வைக்கும் பதிவு!

 

நன்றிகள், ஆதித்ய இளம்பிறையா! :D

Link to comment
Share on other sites

மன்னனாக பிறக்கமுடியவில்லை எண்டு கவலையாக இருக்கிறது

அந்தகாலத்தில் மன்னர்கள் எல்லாம் கண்ணில காண்கிறதயெல்லாம் வீட்டுக்க கொண்டுவந்து வச்சிருக்கிறாங்கள் இந்தக்காலத்தில றோட்டில போறதுகள பார்தாலே போச்சு பொம்பிள பொறுக்கி அது இது எண்டு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுத்துவைச்ச மன்னர்கள்....

அதுசரி.. உந்த மன்னர்கள்... இப்படி எல்லம் நாளுக்கு ஒன்றோடு.. மிணக்கட்டிருக்கிறாய்களே.. அவங்களுக்கு எப்படி எயிட்ஸ் வராமல் போச்சுது. அப்பவே கொண்டோம் பாவிக்க ஆரம்பிச்சிட்டாய்களா..
.அதுதான் வேறு ஆண்களை உள்ளே அனுமதிக்கவில்லை :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அதுதான் வேறு ஆண்களை உள்ளே அனுமதிக்கவில்லை :D

 

 

ஓ.. அந்தக் காலத்தில எச்சில் இலைக்கு கிராக்கி இல்லைப் போல. அதுபோக.. பிடிச்சு..மன்னர் ஒட்ட நறுக்கிடுவாராமில்ல. இப்ப அடுத்தவன் காதலியை தள்ளிட்டுப் போறது.. அடுத்தவன் பொண்டாட்டிய தள்ளிட்டுப் போறதுக்குன்னே கொஞ்சம்.. தலையில கொம்பு சீவிட்டு அலையுதுங்களே. அதுங்க பின்னாடி பொண்ணுங்களும் அலையுதுங்க. அதுதான் எயிட்ஸும் அதுங்க கூட தொத்திக்கிட்டு திரியுது போல. :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டிலை கிளி மாதிரி ஒரு பொண்டாட்டி  இருந்தாலும் குரங்குமாதிரி ஒரு வைப்பாட்டி வைச்சிருக்கிற சுகமே தனிச்சுகம்.... :wub: .... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மன்னன் என்றபடியால் அந்தப்புரம் அரன்மனைக்குள் இருந்தது , இப்ப எல்லோரும் இந்நாட்டு மன்னர்  அதுதான் எல்லா இடமும் அந்தப்புரமாய்க் கிடக்கு...! :lol:

Link to comment
Share on other sites

நமது தமிழ் மன்னர்களின் திருவிளையாடல்கள் பற்றிய குறிப்புகள் ஏதாவது உண்டா? :D

 

பெரிதாக ஒன்றும் அறிந்த்திருக்கவில்லை இசை. ஆனால் தமிழகத்தில் நாயக்கர் காலத்தில்தான் அதிகப்படியான இந்தப் அந்தப்புர லீலைகள் இருந்துள்ளன. "கூளப்பன் நாயக்கன் காதல்", "விரலி விடு தூது" மற்றும் குறவஞ்சி போன்ற சிற்றிலியக்க நூல்களை படித்தால் நாயக்கர் மன்னர்கள் எப்படிப்பட்ட இலக்கியங்களை விரும்பி ஆதரித்தார்கள் என்று தெரிய வரும்.  கூளப்பன் நாயக்கன் காதலில் சில பகுதிகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்டவை. அந்த அளவுக்கு அதில் சில பலான விடயங்கள் இருந்திருக்கிறது (என்னிடம் இருப்பதும் நீக்கப்பட்ட பகுதிகள் அடங்கிய புத்தகம் தான் censored version ) :(

Link to comment
Share on other sites

தமிழ் மன்னர்களைப் பற்றித் தெரியவில்லை.. தசரதன் உள்ளிட்ட வட இந்திட மன்னர்களின் நிலையை தானே படிக்கிறமே. அப்ப எல்லாம்.. ரீச்சரட்ட.. கேட்டா அவருக்கு மூனு நாலு பொண்டாட்டி சரியா ரீச்சர் என்றால்.. ரீச்சர் சும்மா மூடிக்கிட்டு படிட்டா என்று சொல்லுவா. இப்ப விளங்குது. :)

 

அதுசரி.. உந்த மன்னர்கள்... இப்படி எல்லம் நாளுக்கு ஒன்றோடு.. மிணக்கட்டிருக்கிறாய்களே.. அவங்களுக்கு எப்படி எயிட்ஸ் வராமல் போச்சுது. அப்பவே கொண்டோம் பாவிக்க ஆரம்பிச்சிட்டாய்களா..???! :D:lol:

 

சமஸ்தான மன்னர்களின் அரண்மனையில் ஒரு மருத்துவ பட்டாளமே உண்டு.  ஐரோப்பிய, யுனானி,ஆயுர்வேத இப்படி எல்லா வகையான மருத்துவக் குழுவும் உண்டு. இவர்களின் பாதி நேர வேலை சிட்டுக் குருவி லேகியம் தயாரிப்பதுதான். இதில் சில விதிவிலக்கான மன்னர்களும் உண்டு. அதுபோல அந்தப்புரத்தில் புதிதாக சேர்க்கப்படும் பெண்கள் முதலில் பல படி மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, மனதளவில் தயாரான பின்பு தான் மன்னர்களுக்கு சொல்லியனுப்ப்படுமாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஜ்மீர் சுல்தான்களின் மனைவியரின் (சுல்தானா) லீலைகளை ஒர் ஆங்கில நூலில் வாசித்துள்ளேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஜ்மீர் சுல்தான்களின் மனைவியரின் (சுல்தானா) லீலைகளை ஒர் ஆங்கில நூலில் வாசித்துள்ளேன். :D

 

அதை யாழ்நூலில் தைக்கிறதுதானே....! :rolleyes::D

 

Link to comment
Share on other sites

திங்கள் கிழமை காலையில் அலுவலகத்துக்கு வந்தமா வேலைகளைச் செய்தமா என்று இருக்காமல் நான் தெரியாத்தனமாக இந்த திரியை வாசிச்சுப் போட்டன்... வயிரெல்லாம் எரிஞ்சு பெருமூச்சு வளையம் வளையமாக வருது...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.