Jump to content

வானூர்தியில் பறக்கும் வயசுக்கு வந்த பொண்ணு நிகழச்சி

Recommended Posts

இந் நிகழ்வு அக் குடும்பத்தின் தனிப்பட்டவிடயம். அதில் இனம் கலாச்சாரம் என்பதினூடாக தலையிட முடியாது. பல இனக் குழுமங்களில் இருந்து பொறுக்கப்பட்ட கலாச்சாரமே கலாச்சாரம் என்ற போர்வையில் பேசப்படுகின்றது. இரவல் கலாச்சாரம். அதற்கும் எந்த வரைமுறையும் கிடையாது. யாரும் ஒருத்தன் வித்தியாசமாகப் பண்ணிவிட்டால் உடனே புலிக்காசில் பண்ணிவிடடான் என்பது பொது வழக்கு. அதனால் அது செல்லாது. அந்தக்காலத்தில் பல்லாக்கு இருந்தது அதில் பவனிபோனார்கள் இந்தக்காலத்தில் உலங்கு வானூர்தி இருக்கின்றது அதில் போகின்றார்கள். அவர்கள் உழைப்பு அவர்கள் காசு அவர்கள் சந்தோசம் அவர்கள் திருப்தி. இதில் கருத்துக்கூற நாம் யார்? பரணி பாடிய தேசீயவாதிகள் இப்போது புறணிபாடும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அதை விடுத்து அவர்களுக்கு வாழ்த்து சொல்லுங்கள்.

சண்டமாருதன்,

இக்கொண்டாட்டத்தை கொண்டாடுவது அவர்களது தனிப்பட்ட விருப்பம். ஆனால் பலர் கடன் எடுத்து கொண்டாடிவிட்டு பின்னர் பொருளாதார இறுக்கத்தில் மாட்டிக்  கொள்கிற சம்பவங்களே அதிகம்.

இக்கடனை பிள்ளையின் எதிர்கால கல்விக்கு அல்லது சேமிப்பாக கொடுத்தாலே அது பெரும் பயனைக் கொடுக்கும்.

  இது முந்தியே கன இடங்களிலை குசுகுசுத்த விசயம்.... காணானதை கண்ட சனம் செய்யுது.....இதுக்குப்போய் பெரியவசனம் எல்லாம் போட்டு கதைக்கக்கூடாது. பாரம்பரியம் தெரிஞ்சவன்....பகுத்தறிவு தெரிஞ்சவன்...பள்ளிக்கூடம் போய் நாலெழுத்து படிச்சவன் ஒருகாலமும் இந்த வேலை செய்யமாட்டான்.....

படிச்சு சமூகத்தை மாற்றியமைக்கிறோம் என புறப்பட்ட பலரும் இவ்விழாவை கோலாகலமாக கொண்டாடுவது தானே இப்ப நாகரீகம்.

Link to comment
Share on other sites

  • Replies 113
  • Created
  • Last Reply

பல்லுள்ளவன் பக்கோடா சாப்பிடுகிறான்..
இங்கு (யாழில்) உள்ள எல்லோருமே எங்களால் இயலக்கூடிய அளவில் பகட்டாக
தான் இருக்கிறோம்..நாங்கள் யாருமே கிழிந்த உடையை திருத்தி அணிந்து எவ்வளவு காலமாகிறது?
வேலைக்கு போகும் பொது உடுப்புகள்
Tommy Hilfiger
Nautica
Mark & Spencer
etc ....
எங்களது வீடுகள் ..நாங்கள் யாரவது எங்களது வசதிகளை ஒடுக்கி
எளிமையாக வாழ்கிறோமா?

Link to comment
Share on other sites

நைக்கி போடுவதற்கும் கெலிகொப்டரில் சாமத்திய வீட்டிற்கு பெண்ணை ஏற்றுவதற்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கு .

தானே கஷ்டப்பட்டு  உழைத்து  தனது பெண்ணை அப்படி ஒரு நிலையில் பார்க்க அவர் விரும்பினால் பார்த்துவிட்டு போகட்டும் .

நாட்டில சனம் பிச்சை எடுக்குது என்று உதராணம் கொண்டுவர புலம்பெயர்ந்த எந்த தமிழனுக்கும் அருகதை இல்லை .அங்கு சனம் எல்லோரும்  பட்டினி என்றால் இங்கு நாம் சாப்பிடாமல் இருக்கபோவதில்லை .

சாமத்தியவீடு தேவையோ என்பது வேறு அதில் ஆடம்பரம் வேண்டுமோ என்பது வேறு .

Link to comment
Share on other sites

கனடாவில் இவ்வாறான Youtube வீடியோக்கள் குவிந்து போய் இருக்கின்றன.  அதைவிட திருமணம் செய்பவர்களும் திரைப்பட ரேஞ்சில் வீடியோ எடுத்து உலா விடுகிறார்கள்.  இவ்வாறு திரைப்படங்கள் எடுப்பதற்கு எக்ஸ்ரா பீஸ்.  :o    நான் பார்த்தவரையில், வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பணம் அதிகரித்து விட்டது.  அதனால் எதற்கெதற்கெல்லாம் செலவழிக்க வேண்டும் என்ற வரைமுறையின்றிச் செலவழிக்கிறார்கள்.  இவற்றைச் செய்பவர்கள் கு.சா. குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தவர்கள்தான்.  படித்த பெற்றோரின் பிள்ளைகள் இவ்வாறு அநாவசியமாகச் செலவுகள் செய்வதில்லை.   கனடாவில் இப்போது சாமத்தியச் சடங்கு செய்வதற்குரிய செலவு 25,000 டொலர்களுக்கு மேல்.  திருமணத்திற்கு 40,000 டொலர்களுக்கு மேல்.  இவற்றை விட, 16, 18, 21 வயது பிறந்தநாட்களும் உண்டு. அவையும் மண்டபங்களிலேயே செய்யப்படுகின்றன.   போன தலைமுறையைவிட அதிகம் கெட்டுப் போயிருப்பது எமது இளைய தலைமுறையே. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  இது முந்தியே கன இடங்களிலை குசுகுசுத்த விசயம்.... காணானதை கண்ட சனம் செய்யுது.....இதுக்குப்போய் பெரியவசனம் எல்லாம் போட்டு கதைக்கக்கூடாது. பாரம்பரியம் தெரிஞ்சவன்....பகுத்தறிவு தெரிஞ்சவன்...பள்ளிக்கூடம் போய் நாலெழுத்து படிச்சவன் ஒருகாலமும் இந்த வேலை செய்யமாட்டான்.....

அதுகும் அவர், சுவிசில் புலிகளுக்கு... காசு சேர்த்தது உண்மையாக இருந்திருந்திருந்தால்....

உலங்குவானூர்தியில், சாமத்திய வீடு செய்ததை தவிர்த்திருக்கலாம்.

இப்போ... வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு, கை நிறைய அவலை அள்ளிக் கொடுத்துள்ளார்.

Link to comment
Share on other sites

இடம் கனடாபோல் இருக்கு.. :unsure:  கனடாவில் இருந்து ஊருக்குப் போறது கனநேரம் எடுக்கும்தானே.. :D அதுக்குத்தான் மாடு, கோழியை எல்லாம் கனடாவுக்கு கூட்டி வந்திட்டோம்.. :icon_idea:

அது சரி.. பெயர் றெபெக்கா என்று இருக்கு.. கிறித்துவர்களும் இதை செய்வார்களா?

அண்ணா இப்ப பெயரில் கிறிஸ்தவனையோ இண்டுவையோ இஸ்லாமியனையோ கண்டு பிடிக்க முடியாது தமிழர்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு மட்டுமே தமிழ்ப் பெயர் அதிகம் வைக்கிறார்கள் பிள்ளைகளுக்கு வேறு பெயர்களே . அதிலும் கிந்தி ,அரபுப் பெயர்கள் இப்ப அதிகம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் பூப்படைகிறாள் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு!

அது ஒரு சாதனையோ, அல்லது மற்றப் பெண்களால், இலகுவில் சாதிக்க முடியாத ஒரு செயலோ அல்லவே!

எதற்காகப் பாரிய செலவில் விழா எடுக்க வேண்டும் என்பது எனக்கு விளங்கவில்லை!

முந்தைய காலங்களில், தங்கள் வீட்டிலும் ஒரு பெண் திருமணத்திற்குத் தயாராக இருக்கிறாள் என்று ஊருக்குத் தெரிவிக்க வேண்டிய தேவை இருந்தது!

இப்போதெல்லாம், பெண்ணே தன்னை விளம்பரப் படுத்தச் சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன!

ஒருவேளை, எங்கள் வீட்டில் ஒரு பணக்காரப்பெண் இருக்கிறாள் என்று சுண்டல், சுபேஸ் போன்றவர்களுக்குக் காட்டுவதற்கோ என்னவோ! :D

எனக்கும்... அதுதான் விளங்கவில்லை புங்கையூரான்.

பெண் பதின்மூன்று வயது வந்தவுடன், இயற்கையாகவே... பூப்படைவது சர்வ சாதரணம்.

இதற்காக நித்திரை முழித்து படித்து பட்டம் பெறவோ...

ஜிம்முக்குப் போய், விசேட பயிற்சியோ எடுக்காமல் தன்ரை பாட்டில் நடக்கும் விசயத்துக்கு, ஏன்.. இவ்வளவு எடுப்பு எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.helikopter_0008.gif

அந்தப் பெண், பதினெட்டு வயதிலும்.. பூப்படையாமல் இருந்திருந்திருந்தால்.....

எனது மகள், இன்னும் பூப்படையவில்லை என்று...

உலங்கு வானூர்தியில்... சுத்திக்காட்டி, ஊருக்கு அறிவித்திருந்தாலாவது...

ஆரும் மாப்பிள்ளை, இரக்கப் பட்டு கலியாணம் கட்ட, ஒரு உந்து கோலாய் இருந்திருக்கும். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சிலரின் கருத்துக்களை  வாசித்ததில்.............

எல்லோரும் அந்த பிள்ளையின் விருப்பமில்லாமல்

அல்லது அதை பகடைக்காயாக உபயோகித்து இது நடப்பதாக எழுதியுள்ளீர்கள்.

எனது அனுபவத்தை  எழுதுகின்றேன்.

எனக்கும் இதில் உடன்பாடில்லை.

ஆட்களை அதிக அளவில் அழைப்பது

கொடுப்பது

வாங்குவது.............

இவற்றிலும் உடன்பாடில்லை.

ஆனால் எனது மகள் இது போன்ற நிகழ்வுகளுக்கு போகும்போது

அல்லது இது போன்ற நிகழ்வுகளின் படங்களைப்பார்க்கின்ற போது......

எனக்கும் இப்படி  வேண்டும்

சின்ன வயதிலேயே அது மூப்பெய்தினால்தான் செய்வது என்ற அறிவு வரமுதலேயே  கேட்பாள். கேட்டுக்கொண்டேயிருந்தாள்.

அவள் பெரிய மனுசியானபோது

அவளை பக்கத்தில் இருத்தி கேட்டேன்

அம்மா

இது ஒரு நாள் பவிழாவாக இருக்கும்

சாறி  கட்டணும்

மாலை தூக்கணும்

கன நேரம் நிற்கணும்

வலிக்கும்

.................  இப்படி எல்லாவற்றையுமே சொன்னேன்.

அவளது ஒரே பதில் எனக்கும்  அப்படி வேண்டுமப்பா.

அவளது ஆசைகளைக்கேட்டு

அதில் சிலவற்றை செய்தேன்.

அது ஒரு நாள் திருவிழா.

அதை வைத்துக்கொண்டு அப்படியே தான் பிள்ளை  வளரும் என்பது  சரியான பார்வையல்ல.

விடுமுறைகளில்  செல்லும்போது   ஐந்துநட்சத்திர கோட்டல்களில் தங்குகின்றோம்

அதையே பின்னர் தொடர்வதில்லை.

இதில் எழுதுபவர்களுக்கும் அதே பதில்தான்

உங்கள் பிள்ளையிடம்  ஒரு சொல் கேளுங்கள்.

முடிந்தால் நிறைவேற்றுங்கள்.

(அதே நேரம் அதிக ஆடம்பரங்களை எமது இனத்தினர் செய்வது தற்போதைய  சூழலில்   தவிர்க்கப்பட வேண்டியதே. ஆனால் மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். மல்லுக்கட்டமுடியுமா?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர் சொல்வதை, இப்படியான விழாக்களைப் பார்க்கின்ற வெள்ளைக்காரப் பிள்ளைகளிடம், அந்தப் பிள்ளையின் பெற்றோர் கேட்டாலும், தனக்கும் அப்பிடியொன்று வேண்டுமென்று தான் அடம் பிடிக்கும்!

ஆனால், அதன் பெற்றோர் அதனிடம் கேட்க மாட்டார்கள்! 

ஏனெனில், அது குழந்தை! :D

Link to comment
Share on other sites

விழா எடுப்பதற்குத்தான் பிறந்த நாள்கள் இருக்கின்றனவே.   சேலை கட்டும் வயது வந்தவுடன், அந்த வயதுப் பிறந்தநாளின் போது அழகழகாக சேலைகளைக் கட்டிப் பிள்ளைகளைப் படமெடுங்களேன்.   ஏன் இத்தனை சிறிய வயதில் இப்படி ஆடம்பரம் எடுக்க வேண்டும்?

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா சொல்வதுபோல் எல்லாவற்றையும் பொதுமைப்படுத்த முடியாது.. ஆனால் சிறு வயதில் இருந்துசிலவற்றை "உபதேசித்து வந்தால் " கேட்பார்கள்..! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைக்கிறன், இங்கே ஆடம்பரம் என்று சொல்லபடுவது பிரதானமாக "ஹெலி" ..ஒரு விழாவிற்கு ஹெலி கொண்டுவர எவ்வளவு முடியும் என்று யாரவது சொல்லுங்கோ? அது சிலவேளை ஒரு 4000 ஓ 5000 டொலர் என்றால் காரியமில்லை. 30000-40, 000 சிலவளித்து விழா செய்யும் போது.

How Much Does It Cost to Rent a Helicopter?

Answer

The cost of renting a helicopter varies depending on company, type of helicopter to be used, length of flight, and time of flight. For a 2 place piston helicopter like Schweizer 300C, it costs around $400 per hour for day time flight while $500 per hour for night time flight. A higher cost is expected for a 7 place turbine helicoper like Eurocopter EC134 which costs $4350 and $4850 for day time and night time flight hour respectively.

Link to comment
Share on other sites

வானத்தில் இருந்து தேவதை வந்து இறங்கினாள் என்று பாட்டு போடும்போது காரில் வந்து இறங்க முடியாதுதானே.. :D

எனது மகளை  எனது காரில்தான் மண்டபத்துக்கு கொண்டு போவதாக இருந்தேன்.

சுவிசிலிருந்து வந்திருந்த அண்ணரின் மகன் தனது காரில்தான் தங்கையை  ஏற்றுவேன் என்று தனது காரில் ஏற்றினான்.

இவன் தன் தங்கையை BMW  இல் ஏற்றினான்

அங்கும் அவளது அண்ணன் helicopter  இல் ஏற்றியிருந்தால்............??? :rolleyes: 

வானத்தில் இருந்து தேவதை வந்து இறங்கினாள் என்று பாட்டு போடும்போது காரில் வந்து இறங்க முடியாதுதானே.. :D

அது தானே?

பாட்டுக்கு சரியான காட்சி வைக்கவில்லை என்று பின்னர் இங்கு விமர்சனம் வரும்...... :D

இந்த திரியிலும்  heliயை விட புலி தானே அடி வாங்குது............. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இதற்காகத்தான் செய்யபடுகிறது என்கிற நாங்கள் நினைக்கிற "சமூக stigma" தவிர இப்படி ஒரு நிகழ்வு நடப்பதில் குறையும்  இல்லை. இங்கே கனடாவில் இது எல்லாவற்றையும் ஒரு குறுப் இடம் கொடுத்து விட்டால் அவர்கள் எல்லாம் செய்வார்கள். போற சனத்தில் அரைவாசிக்கு என்னத்திர்ற்கு போனது என்ற "நோக்கமே" மறந்து போடும். அண்மையில் எனது மனைவி இப்படியான ஒரு நிகழ்விற்கு போய், கன காலம் சந்திக்காத உறவுகளை எல்லாம் சந்திந்த்துப்போட்டு, வந்தா. முந்தின மாதிரி பொம்பிளை அப்படி இருந்தது, அவர்கள் இது செய்தார்கள், அப்படி செய்தார்கள் என்கிற கதையே இல்லை. என்ன சாப்பாடு, ..ஒரு கதையும் இல்லை. தனியே தான் யார் யாரை சந்த்தது என்கிற கதைதான் சொன்னவ.  

செலவு என்று பார்த்தால், எதுதான் செலவில்லை..

என்ன பெயர் சொல்லி அழைத்தாலும்; "சாமத்திய" படாமலும், பட்டும் வைத்தியர் மாரிடம் வருட கணக்கா அலைகிற ஆட்களும் உள்ளார்கள். -எனக்கும் உனக்கும் சரியாக வந்திருக்கு என்பதற்காக இது ஒரு "சாதாரண நிகழ்வு அல்ல"

தற்பொழுது பெண்கள் 10 அல்லது 11 வயதிலேயே பெரிய மனுசி ஆகிவிடுகிறார்கள்.

ஆனால் நீங்கள் இங்கு எழுதியது போல் பிரான்சில் இப்படி விழாக்களை நடாத்திக்கொடுக்கும் ஒருவருடைய பிள்ளை 17 வயதுவரை பெரிய மனுசி ஆகவில்லை.

அவரது  தவிப்பு........................

யாரறிவார். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலையும் செத்த வீடுகள், அவரவர் வசதிகேற்பச் செய்வார்கள்!

ஏழைகள், சும்மா சோடினைகளோட, பறை மேளத்தோட போவார்கள்!

பணக்காரர், கொஞ்சம் விசேசமான 'பாடைகளில்' பாண்ட் வாத்தியங்கள் முழங்கப் போவார்கள்!

நாளைக்கு, இவர்களும் 'ஹெலியில' போகும் சாத்தியங்களும் உண்டு என்பது தான் எனது 'ஆதங்கம்'!

அவர்களிடம் பணமிருக்கு, செய்கிறார்கள்!

நாளைக்குப் பணமில்லாதவன், விரும்பாவிட்டாலும், வீங்கித் தானாக வேண்டும் என்ற நிலைவரக் கூடாது, என்பது தான் எனது கருத்து!

கோபுரத்தைத் திரும்பத் திரும்ப உடைத்து, திரும்பத் திரும்பக் கட்டுபவனைச், சில ஆகம விதிகள், ஒரு அளவுக்கு மேல் போகவிடாமல், மட்டுப்படுத்துகின்றன! ஒன்பதுக்கு மேலே, அடுக்காதே என்று!

சாமத்திய வீட்டுக்கு ஆகம விதிகள் இல்லை!

எனவே நாளை விண் வெளியிலும் 'பூப்புனிதம்' கொண்டாடுவான்!

விண்ணுக்குப் போன முதல் பெண், 'வலண்டைனா ரெறஸ்கோவா'' மாதிரித் தமிழனுக்கும் பெருமை தானே!

வீங்கித் தானாக வேண்டும் என்ற நிலைவரக் கூடாது, என்பது தான் எனது கருத்து!

இந்த விடயத்தில் மட்டுமே எமக்கு சிக்கல்

அதை மட்டும் நாம் சொல்லிக்கொடுத்துவிட்டால்....

எனது வீட்டில் போன கிழமை நடந்ததை எழுதுகின்றேன்.

மகள் யூனியில் சாதாரணமாக 2 ஈரோக்களுக்குள் சாப்பிடலாம்.

போன திங்கள் வேறு ஒரு இடத்தில் பரீட்சை என்று வெளிக்கிட்டாள்.

சரி வேறு இடம் என்று 10  ஈரோக்களை கைக்குள் வைத்துவிட்டு வந்தேன்.

அவள் பின்னேரம் வீட்டுக்கு வரும்போது பாண் பைக்கற்றுடன் வந்தாளாம்.

வந்து அம்மா

இதில் சண்விற்ச்  நாளைக்கு செய்து வையுங்கோ.  நாளைக்கு கொண்டு   போய்ச்சாப்பிடணும் என்று.

தாய்  கேட்டிருக்கின்றா. ஏன் சாப்பாட்டுக்கு  காசு தரவா என்று.

இல்லையம்மா

ஒரு சண்விற்ச் 6 ஈரோ. ஒரு கொக்கா 3 ஈரோ  கொள்ளை அடிக்கிறார்கள் என்று.

இது என் வளர்ப்பு.

(சாதாரணமாக 1 கொக்கா 1 ஈரோக்கு எங்கும் வாங்கலாம்.பாடசாலைகளில் 50  அல்லது 60 சதம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்பொழுது பெண்கள் 10 அல்லது 11 வயதிலேயே பெரிய மனுசி ஆகிவிடுகிறார்கள்.

ஆனால் நீங்கள் இங்கு எழுதியது போல் பிரான்சில் இப்படி விழாக்களை நடாத்திக்கொடுக்கும் ஒருவருடைய பிள்ளை 17 வயதுவரை பெரிய மனுசி ஆகவில்லை.

அவரது  தவிப்பு........................

யாரறிவார். :(

17 வயது என்பது கொஞ்சம் பிந்திய நிலைமை, குழந்தை வைத்தியரிடம், அல்லது Pediatric Endocrinologist  இடம்  அழைத்து செல்லுவார் என்று நினைக்கிறன். - அண்மையில் ஒரு படம் பார்த்தேர்ன் எதிர்நீச்சல் என்று, அதிலும் இப்படியான ஒரு நிலை வருகிறது,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் நட்பு வட்டத்தில் சாமத்தியச் சடங்குகளை "சாறிப் பார்ட்டி" என்றே அழைப்போம்! :) 
 
பெண் பிள்ளைகள் தாங்களும் சாறி அணிந்து மேக்கப் போட்டு ஃபோட்டோக்கள், வீடியோக்கள் எல்லாம் எடுக்கவேண்டும் என்று ஆசைப்படுவதால், அவர்களின் பெற்றோர்களும் இப்படியான நிகழ்ச்சிகளை நடாத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனினும் ஒரு குறித்தளவினர் இப்படியான விழாக்களை தமது பணத்தையும், பகட்டையும் காட்ட ஆடம்பரமாகச் செலவு செய்கின்றனர் என்பது உண்மைதான். இந்த சாமத்திய சடங்குகள் புலம்பெயர் தமிழர்களின் வாழ்வில் ஒரு கட்டாயமான அங்கமாக மாறிவிடும் என்றுதான் தெரிகின்றது.

எனவே என்னதான் சொன்னாலும் (எவ்வளவு பகுத்தறிவு வாதியாக இருந்தாலும்) இப்படியான விழாக்களைத் தவிர்க்கமுடியாது என்பதுதான் எனது அனுபவப் பாடம். :mellow:  ஆகவே விழாவுக்கான காரணத்தை ஆராய்வதை விட்டு நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து சந்தோஷமாகக் குடித்துக் கும்மாளம் அடித்துவிட்டு இறுதியில் மேடையில் ஏறிப் பெண் குழந்தைக்கு "Congratulations! You're a big girl now" என்று சொல்லி கன்னத்தில் ஒரு முத்தத்தைக் கொடுத்துவிட்டு வரவேண்டியதுதான் :wub: .

சாமத்திய விழாவுக்குக் கொடுப்பதற்கு என்று நல்ல வாசகம் உள்ள வாழ்த்து அட்டை வாங்குவதுதான் கடினமான விடயம். ஒரு நண்பர் கொடுத்த வாழ்த்து அட்டையில் பின்வரும் வாசகம் இருந்தது. அது இன்றளவும் எமது நண்பர் வட்டத்தில் பேசப்படுகின்றது. :icon_mrgreen:

well-done.jpg
 
Link to comment
Share on other sites

இதில் சிலரின் கருத்துக்களை  வாசித்ததில்.............

எல்லோரும் அந்த பிள்ளையின் விருப்பமில்லாமல்

அல்லது அதை பகடைக்காயாக உபயோகித்து இது நடப்பதாக எழுதியுள்ளீர்கள்.

எனது அனுபவத்தை  எழுதுகின்றேன்.

எனக்கும் இதில் உடன்பாடில்லை.

ஆட்களை அதிக அளவில் அழைப்பது

கொடுப்பது

வாங்குவது.............

இவற்றிலும் உடன்பாடில்லை.

ஆனால் எனது மகள் இது போன்ற நிகழ்வுகளுக்கு போகும்போது

அல்லது இது போன்ற நிகழ்வுகளின் படங்களைப்பார்க்கின்ற போது......

எனக்கும் இப்படி  வேண்டும்

சின்ன வயதிலேயே அது மூப்பெய்தினால்தான் செய்வது என்ற அறிவு வரமுதலேயே  கேட்பாள். கேட்டுக்கொண்டேயிருந்தாள்.

அவள் பெரிய மனுசியானபோது

அவளை பக்கத்தில் இருத்தி கேட்டேன்

அம்மா

இது ஒரு நாள் பவிழாவாக இருக்கும்

சாறி  கட்டணும்

மாலை தூக்கணும்

கன நேரம் நிற்கணும்

வலிக்கும்

.................  இப்படி எல்லாவற்றையுமே சொன்னேன்.

அவளது ஒரே பதில் எனக்கும்  அப்படி வேண்டுமப்பா.

அவளது ஆசைகளைக்கேட்டு

அதில் சிலவற்றை செய்தேன்.

அது ஒரு நாள் திருவிழா.

அதை வைத்துக்கொண்டு அப்படியே தான் பிள்ளை  வளரும் என்பது  சரியான பார்வையல்ல.

விடுமுறைகளில்  செல்லும்போது   ஐந்துநட்சத்திர கோட்டல்களில் தங்குகின்றோம்

அதையே பின்னர் தொடர்வதில்லை.

இதில் எழுதுபவர்களுக்கும் அதே பதில்தான்

உங்கள் பிள்ளையிடம்  ஒரு சொல் கேளுங்கள்.

முடிந்தால் நிறைவேற்றுங்கள்.

(அதே நேரம் அதிக ஆடம்பரங்களை எமது இனத்தினர் செய்வது தற்போதைய  சூழலில்   தவிர்க்கப்பட வேண்டியதே. ஆனால் மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். மல்லுக்கட்டமுடியுமா?)

இதுவும் உங்கள் வளர்ப்புத்தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப எப்ப கிருபனுடைய வீட்டில் :icon_idea: / மகளுக்கு :icon_mrgreen: , சாறி பட்டி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எப்ப கிருபனுடைய வீட்டில் :icon_idea: / மகளுக்கு :icon_mrgreen: , சாறி பட்டி?

என்னுடைய கொள்கையில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்பதால் நான் நம்பாத கடவுள் எனக்குப் பெண் குழந்தையைத் தரமாட்டார் என்று நம்புகின்றேன் <_<

எனவே எனக்கு தர்மசங்கடமான நிலை வராது!

Link to comment
Share on other sites

ஒருகாலகட்டத்தில் ஆறேழு வயதிலேயே பிள்ளைகளுக்குத் திருமணம் பேசிவிடுவார்கள்.  பெண்பிள்ளை வயதுக்கு வந்ததும் திருமணத்தை நடத்தி வைத்துக் கணவன் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.  அந்தச் சடங்குதான் பின்னர் சாமத்திய வீடாக மாறியது.  சாமத்திய வீட்டின்போது, தாய்மாமனே அனைத்து நிகழ்வையும் பொறுப்பெடுத்துச் செய்ய வேண்டும்.  இது கணவரின் குடும்பமாக இருந்து பின்னர் தாய்மாமன் ஆகியது.   அப்படியான ஒன்றை இன்றைய காலகட்டத்திலும் பின்பற்றுவது மட்டுமின்றி அதை அடுத்த தலைமுறைக்கும் ஓதிவிட்டார்கள். 

சாறி உடுப்பதற்கும் ஒரு வயது இருக்கிறது.     ஏன் இத்தனை சிறிய வயதிலேயே செய்ய வேண்டும்? 

 இங்கு, இவ்வாறான விழாவிற்கு முன்னரே முக்கியமான, வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில்  :icon_mrgreen:  அப்பெண்ணை வைத்துப் படப்பிடிப்பு நடத்தி அதனை அந்த விழாவில் திரையிடுவதோடு Youtube இலும் வெளியிடுவார்கள்.   நான் இங்கத்தையை உடைமுறையைப் பின்பற்றுபவள்.  அந்தப் படப்பிடிப்பில் அந்தப் பிள்ளை அணிந்த உடையும் படம்பிடித்தமுறையும் எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.  அவர்களின் மகளை அவர்களே நடிகையாக்கி விட்டார்கள் என்றே எனக்குத் தோன்றியது.  :mellow:

அது மட்டுமின்றி, அதற்குள் குடும்பப் பழிவாங்கல்களும் நடைபெற்றது வேறுகதை.  அந்த விழாவின்போது, தாய்மாமன் மண்டபத்தில் இருந்தபோதும் முறைகள் செய்தது வேறொருவர்.  :rolleyes:    இது தேவைதானா? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.