Jump to content

தனி நாடாக தமிழீழம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தீபச்செல்வன்

 

 

 

ஈழமும் சிங்கள தேசமும் வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் இரண்டு நாடுகளாகவே இருக்கின்றனஅந்நியர்களால் ஒன்றிணைக்கப்பட்ட இந்த தேசங்கள் இன்னமும் தனித் தனித் தேசமாகவேகாணப்படுகின்றன என்பதை அண்மையில் நடந்த நிகழ்வுகள் மீண்டும் உணர்த்தியிருக்கின்றனஇந்த இரு தேசங்களும் நிலத்தாலும் நிலத்தின் குணத்தாலும் இனத்தாலும் இரண்டாகப் பிரிந்திருக்கிறதுவடக்கில்பனைகளும் தெற்கில் தென்னைகளும் மாத்திரம் இந்தப் பிரிவை உணர்த்தவில்லைஇந்த நாட்டின் மக்களின் உணர்வுகளும் இரண்டாகவே பிரிந்திருக்கின்றன.

 

தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் பாரபட்சம் காட்டப்படுவதுதான் இந்த தீவின் அறுபதாண்டுகாலப் பிரச்சினைஸ்ரீலங்காவில் நாங்கள் இரண்டாம் தரப் பிரசைகள்கூட இல்லைஏனென்றால் இரண்டாம்பிரசை  என்றால் இரண்டாவது இடமாவது உண்டுஇங்கு எந்த இடமும் வழங்கப்படவில்லை என்பதுதான் உண்மைஎந்த உரிமையும் எங்களுக்கு இல்லைஎங்களை அழித்து ஒழிப்பதைத் தவிர சிங்கள அரசுக்குவேறு எந்த நோக்கமும் கிடையாதுஎங்களிடம் இருக்கும் சின்னச் சின்ன உரிமைகளைக்கூட மெல்ல மெல்ல சிங்கள அரசு பறித்துக் கொண்டிருக்கிறது.

முள்ளிவாய்க்காலில் நடந்த யுத்தம் ஈழ மக்களைப் பொறுத்தவரையில் அது ஒரு இனப்படுகெலை யுத்தம்மிகக் கொடிய - மனித குலத்திற்கு விரோதமானபோர்க்குற்றங்கள் நடந்தமனித உரிமைகள் மீறப்பட்டயுத்தம்எங்கள் போராட்டத்தை முறியடித்த கொடிய யுத்தம்வன்னி மக்களின் வாழ்க்கையை முற்றுமுழுதாக சிதறடித்த யுத்தம்ஆனால் சிங்கள மக்களுக்கு இது வீர யுத்தம்தமிழ் இனத்திற்கு எதிரான போரில்வீரப் படைகள் வென்ற யுத்தம்சிங்கள மக்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடலாம்ஆனால் தமிழ் மக்கள் இந்தக் கொடிய போரில் கொல்லப்பட்ட மக்களைக் கூட நினைவுகூர முடியாது என்பது இதனால்தானேசிங்கள மக்கள் இந்த நாட்டில் எங்கும் குடியமர்த்தப்படலாம்தமிழ் மக்கள் சொந்த நிலத்திலே வாழ முடியாதுதமிழர் நிலத்தில் இன்று மேற்கொள்ளப்படும் பலவந்ததிட்டமிட்ட சிங்களக்குடியேற்றம்மேற்கொள்ளப்படுவது ஏன்இதற்குப் பெயர் என்னவெசாக் அலங்காரங்களைக் பார்க்க தெற்கிலிருந்து வடக்கு கிழக்குக்கு மக்கள் வருகிறார்கள்யாழ்ப்பாணத்திலும் புத்தர் என்று இராணுவத்தினர் எழுதி மக்களைவரவேற்கிறார்கள்ஆனால் மாத்தறையில் தங்கியிருந்த வடக்கு கிழக்குப் பிரசைகள் இருபதுபேர் கைது செய்யப்பட்டு சிலர் பூசாவில் அடைக்கப்படுகிறார்கள்.

அது அவர்களின் நாடில்லை என்பதனாலும் அவர்கள் வேற்று நாட்டவர்கள் என்பதனாலும் அவர்களால் சிங்கள தேசத்திற்கு பாதுகாப்புப் பிரச்சினை என்பதனாலுமே அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்ஸ்ரீலங்காஅரசாங்கம் தன் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் ஈழ மக்களை அந்நியப் பிரசைகளாகவே காலம் காலமாக நடத்தி வருகிறது என்பது மாத்தறையிலும் அம்பலமாகியிருக்கிறதுஇந்த நிகழ்வு தெற்கை விட்டுத்தமிழர்கள் வெளியேற்றப்பட்டதையும் தெற்கில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதையும் நினைவுபடுத்துகிறது

கொல்லப்பட்ட தமிழ் மக்களை பயங்கரவாதிகள் என்று நினைவுகூர இடமளிக்காமல் சிங்கள இராணுவத்தின் யுத்த வெற்றியை வடக்கு கிழக்கு மக்களுக்குக் கிடைத்த சமாதானத்தின் வெற்றி என்று ஸ்ரீலங்காஜனாதிபதி மகிந்த ராஜபக்சே வாய்கூசாமல் சொல்லுகிறார்இப்படிச் சொல்லிக் கொண்டே தமிழில் பேசிக் கொண்டே தமிழ் மக்களை அழித்து ஒழிப்பதில் மகிந்த ராஜபக்சே வல்லவர்கொல்லப்பட்ட மக்களைநினைவுகூர அனுமதிக்காத சிங்கள அரசிடம் வேறு எதை எதிர்பார்ப்பது?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இறந்த மக்களுக்காக மாணவர்கள் தீபம் ஏற்றுவார்கள் என்பதற்காக பல்கலைக் கழகத்தை மூடுகிறார்கள்அதே பல்கலைக்கழகத்தில் வெசாக் தினத்திற்காக தீபங்கள்ஏற்றப்படுகின்றனதெற்கில் உள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களும் திறந்து கல்விச் செயற்பாடுகள் நடக்கின்றனஇன்றைய தலைமுறைமீதான இதைவிட கொடிய பாரபட்சம் என்னவாக இருக்கும்?

தமிழ் தாயகத்தில் வடக்கில் உள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மாணவர்கள் உள் நுழைய முடியாத அளவில் தடை போடப்பட்டிருக்கிறது.

இங்கு இரண்டாம் தர பிரசை மாணவர்கள் என்ற இடம் கூட தமிழ் மாணவர்களுக்கு இல்லையேயுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்ந்தால் மாணவர்களைப் படுகொலை செய்வோம் என்று சிங்களஇராணுவம் எச்சரிக்கிறதுபல்கலைக்கழக வளாகத்திற்குள் இராணுவம் நுழைய நேரிடும் என்று மிரட்டுகிறதுஆனால் உங்கள் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டோம் என்பதை உணர்த்திமுள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்அடக்குமுறை எழுச்சியைத்தான் உருவாக்கும் என்பதை சிங்கள இராணுவத்திற்கு பல்கலைக்கழகமாணவர்கள் உணர்த்தியுள்ளனர்.   ஜே.வி.பி.யின் ஆயுதப் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வீரமறவர்கள் தினத்திற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தடைவிதிக்கவில்லையேதெற்கில் உள்ளபல்கலைக்கழக மாணவர்களும் மக்களும் அந்த நாளை நினைவுகூருகிறார்கள்தானேதெற்குப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் கொல்லப்பட்ட ஜே.வி.பி.யினரின் படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன.கொல்லப்பட்ட மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்தத் தேவையில்லை என்று கூறும் ஜே.வி.பிவீரமறவர்கள் தினத்தைக் கொண்டாடாமல் இருக்குமாஸ்ரீலங்கா அரசாங்கத்தை ஆளும் கட்சியைப் போலவேஜே.வி.பி.யும் இப்படித்தான் பாரபட்சம் காட்டி உரிமை மறுக்கிறது

கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தவிடாமல வடக்கில் மிகப் பெரும்முற்றுகையை இலங்கை இராணுவம் மேற்கொண்டது ஏன் என்று ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் மாவை சேனாதிராசா இன்று கேள்விஎழுப்பினார்அவரைப் பேசவிடாமல் ஆளும் தரப்பு இனவாதிகள் கூச்சல் போட்டுக் குழப்பினார்கள்தமிழ் மக்கள் அவர்களின் சொந்த நிலத்தில் உயிர் வாழும் உரிமை மறுக்கப்படுவதுபோலகொல்லப்பட்டஅவர்களின் உறவுகளை நினைவுகூரும் உரிமை மறுக்கப் படுவதுபோலஸ்ரீலங்கா பாராளுமன்றத்திலும் அவரைப் பேசவிடாமல் இனவாதிகள் கூச்சலால் முற்றுகையிட்டார்கள்இங்கும் இரண்டாம்பிரசைகளுக்கான இடம்கூட இல்லையேமாவை சேனாதிராசாவுக்கு அருகில் இருக்கும் ஜே.வி.பிகட்சியின் தலைவர் அநுரகுமரா திஸ்ஸநாயக்கபேச முடியாத இனவாதக் கூச்சல் முற்றுகைக்குள் பேசும்மாவை சேனாதிராசாவைப் பார்த்துக் கிண்டலாக சிரித்துக் கொண்டிருந்தார்தமிழரின் நிலைமையை நினைத்து சிரித்திருப்பார்போல விமல் வீரவன்சவின் தம்பி அநுரகுமாரஅவர்களுக்குள் ஆயிரம் அதிகாரப்போட்டிகள் இருந்தாலும் தமிழ் மக்கள் விடயத்தில் அநுரகுமாரவும் விமல் வீரவன்சவும் ராஜபக்சேவும் ஒன்றுதான்அனைவரும் உரிமை மறுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதிகளே.

தெற்கில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே யுத்த வெற்றி அணிவகுப்புகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்வடக்கு மாகாண சபைப் பிரதிநிதியான அனந்தி கீரிமலைக்குச் சென்றபோது தடுக்கப்படுகிறார்.வடக்கில் உள்ள தமிழ் மக்களின் தலைவர்கள் தங்கள் சொந்த இடத்திற்கு செல்ல முடியாமல் தடுத்து வைக்கப்படுகிறார்கள்கூட்டமைப்பின் அலுவலகம் முற்றுகையிடப்படுகிறதுதெற்கில் சிங்களத் தலைவர்கள்யுத்த வெற்றி விழாக்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்வடக்கு கிழக்கிலோ தமிழ் தலைவர்கள் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாமல் திண்டாடுகிறார்கள்.

தெற்கு யுத்த வெற்றியைக் கொண்டாடுகிறதுவடக்கு யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களின் நினைவுகளில் தோய்ந்திருக்கிறதுதெற்கில் மாத்தறை நகரம் யுத்த வெற்றி வேட்டுகளால் அதிர்கிறதுவடக்கில் வன்னி,போரில் இறந்துபோன மக்களின்உறவுகளின் வாய்விட்டு அழ முடியாக் குரலில் அமுங்கியிருக்கிறதுயுத்த வெற்றி சாகசங்கள் தெற்கில் நிகழ்த்தப்படுகின்றனவடக்கில் மக்கள் தங்கள் உறவுகளை நினைவுகூரஇடமற்று ஆலயங்களுக்கு அலைகிறார்கள்தெற்கில் ராஜபக்சேவுக்கு இராணுவ மரியாதை செய்து சிங்கள மக்களுக்கு சாகசம் காட்டும் இராணுவம்வடக்கில் ஆலயங்களையும் நகரங்களையும் தெருக்களையும்வீடுகளையும் ஈழ மக்களையும் சுற்றி வளைக்கிறது.  முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்காக தீபங்கள் ஏற்ற அனுமதிக்கப்பட வில்லைதீபங்கள் ஏற்றி மக்கள் நினைவுகூரப்பட்டால் சட்டத்தின்அடிப்படையில் கைது செய்யலாம் என்று ஸ்ரீலங்கா அரசு அறிவித்ததுசிங்கள இராணுவம் தீபங்களைக் கண்டால் தனது சப்பாத்துக்கால்களால் மிதித்து அணைக்கிறதுவடக்கு மாகாண சபையில் சிவாஜிலிங்கம்மற்றும் அனந்தி ஏற்றிய தீபத்தை அவ்வாறே மிதித்தணைத்ததுஒரு தீபத்தைக்கூட தமிழ் மக்களுக்கு ஏற்ற உரிமையில்லை என்று சொல்கிறது ஸ்ரீலங்கா அரசுஆனால் வடக்கு கிழக்குப் பகுதியில் புத்தர்சிலைகளை வைத்து இராணுவம் வெசாக் தீபங்களை ஏற்றுகிறதுதமிழ் மக்களின் ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது மரபுஅந்த ஆலயங்களை எல்லாம் சுற்றி வளைத்து துப்பாக்கி ஏந்திய இராணுவம் நின்றுகொண்டிருக்கிறதுஆனால் வடக்கு கிழக்கு என்ற தமிழர் மண்ணில் புத்தருக்கு தீபங்களை ஏற்றி வெசாக் கொண் டாட்டங்களைச் செய்யும் இராணுவம் அந்த மண்ணின் மக்களுக்கு ஒரு தீபத்தை ஏற்றஅனுமதிக்காது துப்பாக்கியுடன் நிற்கிறதுஇது மிகப் பெரிய பாரபட்சமும் உரிமை மறுப்புமல்லவா?

இங்கு இலங்கை அரசால் காட்டப்படும் பாரபட்சம்தான் இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பும் அடிமைப்படுத்தலும்ஒரு  இனத்தின் அடிப்படை உரிமைகளைக்கூட இராணுவ வழிமுறைகளிலும் அரசியல்வழிமுறைகளிலும் உறிஞ்சி எடுக்கின்ற பேரினவாதப் போக்கே இதுஇலங்கை அரசு தனது இயந்திரமான இராணுவத்தை வைத்து அறிவித்து சட்டங்களை உருவாக்கி மனித உரிமைகளை மதிக்காமல் இதைச்செய்துகொண்டிருக்கிறதுமுள்ளிவாய்க்கால் நினைவுக்காலத்தில் ஈழத்தில் ஒரு போர் நடந்ததுஅக்காலம் ஒரு போர்க்காலமாகவே இருந்ததுஅறிவிக்கப்பட்டு மேற் கொள்ளப்பட்ட இந்த யுத்தம் கத்தியின்றிஇரத்தம் இன்றி கண்ணீருக்கும் வெற்றிக் கொண்டாட்டத்திற்கும் இடையில் நடத்தப்பட்டது.

அணுகுமுறைகளால்பாரபட்சங்களால் வடகிழக்கும் தெற்கும் பிரித்துப் பார்க்கப்படுவது அரசால்தான்பிரிவினையை ஏற்படுத்துவதே சிங்கள அரசுதான்இந்தப் பாரபட்சங்களும் பிரச்சினைகளும்தான்வடகிழக்கையும் தெற்கையும் இரண்டாகப் பிரிக்கிறதுஇரண்டு தேசங்கள் ஆக்குகின்றனசிங்கள தேசம் வேறுதமிழ் தேசம் வேறு என்பதையும் சிங்கள மக்களுக்கு உள்ள உரிமை தமிழ் மக்களுக்கு இல்லை என்றுகாட்டுவதுதான்இலங்கைத் தீவில் வடக்கு கிழக்குப் பகுதி தமிழீழம் என்ற தனித் தேசமாகவே இருக்கிறது என்பதை உணர்த்துகிறதுதமிழ் மக்களுக்கு அவர்களின் சுய நிர்ணய உரிமை தேவை என்பதைநிர்ப்பந்திக்கிறது.

இலங்கை அரசாங்கம் காட்டி வந்த இந்த பாரபட்சம் இன்று சிங்கள மக்களின் போக்குகளாக மாறிவிட்டனசிங்களவர்களை சந்திக்கும் எந்த இடத்திலும் சமத்துவம் இருப்பதில்லைஅவர்கள் தமிழர்களுக்கானஇடத்தைக் கொடுக்கும் மனநிலை இல்லாத இடத்திற்குச் சென்று விட்டார்கள்இவ்வாறான அணுகுமுறைகளினால் ஏற்படும் அநீதிதான் பிரிந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கிவிட்டன.எங்களுக்கான உரிமைகளைத் தட்டிக் கேட்கும் நிலைமையை ஏற்படுத்துகின்றனஇன அழிப்பை செய்யும் அணுகுமுறையான இந்தப் பாரபட்ச உரிமை மறுப்பு அரசியலுக்கு இன நல்லிணக்கம் என்று ராஜபக்சேபெயர் வைத்திருக்கிறார்.

நிறைவாகசுருக்கமாகவும் உறுதியாகவும் ஒன்றைக் குறிப்பிட முடியும்கடந்த யுத்த வெற்றி விழாவும் - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளும்இந்தத் தீவில் இரண்டு தேசங்கள் உள்ளனஅவைஸ்ரீலங்காவும் ஈழமும் என்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளனஸ்ரீலங்கா அரசு விடுதலைப்புலிகளை அழித்து ஒட்டுமொத்த நிலபரப்பையும் கைப்பற்றி ஆக்கிரமித்திருந்தபோதும் இன்னமும் தனி நாடாகவேதமிழீழம் இருக்கிறதுநீங்கள் வேறு நாடுநாங்கள் வேறு நாடு என்பதைத் தமிழர்கள் சொல்லவில்லைஸ்ரீலங்காவே எமக்குச் சொல்கிறது.

deebachelvan@gmail.com

http://www.uyirmmai.com/Contentdetails.aspx?cid=6566

Link to comment
Share on other sites

தீபச்செல்வன்

ஈழமும் சிங்கள தேசமும் வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் இரண்டு நாடுகளாகவே இருக்கின்றன.

இலங்கையில் தமிழ் மக்கள் கடுமையாக பாதிக்கப் படுகிறார்கள் என்பது உண்மை,ஆனால் அதை காரணமாக வைத்து ஆதாரம் இல்லாத வரலாற்றை மக்களுக்கு தருவது தவறானது.

வரலாற்றின் எந்த காலத்தில் ஈழம் என்ற நாடு சிங்கள தேசத்துக்கு அப்பாற்பட்டு இருந்திருக்கிறது? சேரர், சோழர், பாண்டியர் என்ற அரசுகளும் யாழ்ப்பாண ராச்சியம், வன்னி ராச்சியம் போன்றவையும் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இவற்றை ஒன்று படுத்தி ஆண்ட ஈழ மன்னன் யார்? சேர சோழ பாண்டிய ஆட்சிக்கு உட்பட்டு ஈழம் இருந்த காலங்கள் உண்டு. ஆனால் இவை ஈழ அரசாக இருக்கவில்லை.

சின்ஹல என்ற பெயரில் உள்ள ஹெல என்ற பதமே ஈழம் என்ற தமிழ் பதத்தின் சிங்கள சொல் ஆகும். சிங்களவர்கள் தம்மை ஹெல தேசத்தின் மக்கள் என்றே அழைக்கிறார்கள். தமது உரிமைகளுக்காக ஹெல உறுமைய என்ற தீவிரவாத அமைப்புகளை உருவாக்கி செயற்படுகிறார்கள். ஈழத்தின் பூர்விக மக்கள் ஹெல மொழி அல்லது எலு மொழி என்ற மொழியை பேசி வந்திருக்கிறார்கள். அந்த மொழியும் சமஸ்கிரதம், தமிழ், தெலுங்கு போன்றவையும் கலந்து சிங்களம் உருவானது.

வட்டுக்கோட்டை தீர்மானம் உருவாகும் வரை ஈழம் என்ற பதம் முழு இலங்கை தீவையும் குறிக்கும் சொல் ஆகும். வட்டுக்கோட்டை தீர்மானம் கூட தமிழ் ஈழம் என்ற பகுதியையே சிங்கள தேசத்துக்கு புறம்பான தனியான தமிழர் நாடாக காட்டுகிறது. ஆகவே "ஈழமும் சிங்கள தேசமும் வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் இரண்டு நாடுகளாகவே இருக்கின்றன." என்ற வசனம் முற்றிலும் தவறான தகவலை தருகிறது.

Link to comment
Share on other sites

ஈழம் என்னும் சொல் கீழம் என்பதன் மற்றொரு வடிவம் என்று விக்கிபீடியா சொல்லுகிறது. ஈழம் என்ற பதம் தவறாக இருக்கலாம் ஆனால் சிங்கள  அரசுகளும் தமிழ் அரசுகளும்(ஒன்றுக்கு மேற்பட்ட) தனித்தனி ராஜ்ஜியங்களாகத் தான் ஆண்டு கொண்டிருந்ததாக தெரிய வருகிறது. ஆகையால் இந்தக் கூற்றில் ஏதும் தவறு இருப்பதாக தெரியவில்லை.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழ் மக்கள் கடுமையாக பாதிக்கப் படுகிறார்கள் என்பது உண்மை,ஆனால் அதை காரணமாக வைத்து ஆதாரம் இல்லாத வரலாற்றை மக்களுக்கு தருவது தவறானது.

வரலாற்றின் எந்த காலத்தில் ஈழம் என்ற நாடு சிங்கள தேசத்துக்கு அப்பாற்பட்டு இருந்திருக்கிறது? சேரர், சோழர், பாண்டியர் என்ற அரசுகளும் யாழ்ப்பாண ராச்சியம், வன்னி ராச்சியம் போன்றவையும் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இவற்றை ஒன்று படுத்தி ஆண்ட ஈழ மன்னன் யார்? சேர சோழ பாண்டிய ஆட்சிக்கு உட்பட்டு ஈழம் இருந்த காலங்கள் உண்டு. ஆனால் இவை ஈழ அரசாக இருக்கவில்லை.

சின்ஹல என்ற பெயரில் உள்ள ஹெல என்ற பதமே ஈழம் என்ற தமிழ் பதத்தின் சிங்கள சொல் ஆகும். சிங்களவர்கள் தம்மை ஹெல தேசத்தின் மக்கள் என்றே அழைக்கிறார்கள். தமது உரிமைகளுக்காக ஹெல உறுமைய என்ற தீவிரவாத அமைப்புகளை உருவாக்கி செயற்படுகிறார்கள். ஈழத்தின் பூர்விக மக்கள் ஹெல மொழி அல்லது எலு மொழி என்ற மொழியை பேசி வந்திருக்கிறார்கள். அந்த மொழியும் சமஸ்கிரதம், தமிழ், தெலுங்கு போன்றவையும் கலந்து சிங்களம் உருவானது.

வட்டுக்கோட்டை தீர்மானம் உருவாகும் வரை ஈழம் என்ற பதம் முழு இலங்கை தீவையும் குறிக்கும் சொல் ஆகும். வட்டுக்கோட்டை தீர்மானம் கூட தமிழ் ஈழம் என்ற பகுதியையே சிங்கள தேசத்துக்கு புறம்பான தனியான தமிழர் நாடாக காட்டுகிறது. ஆகவே "ஈழமும் சிங்கள தேசமும் வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் இரண்டு நாடுகளாகவே இருக்கின்றன." என்ற வசனம் முற்றிலும் தவறான தகவலை தருகிறது.

 

அவர் சரியாகவே சொல்கிறார்

மனங்கள் கூட ஒன்றாக  இருந்ததில்லை

இருப்பதற்கு சிங்களம் விடுவதில்லை.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.