Jump to content

கதிர்காமத்தில் விபத்து ; ஐவர் சாவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கதிர்காமத்தில் விபத்து ; ஐவர் சாவு news
87fc214aa1f98ba484b85bf4441bff86.jpg
கதிர்காமம், திஸ்ஸ வீதியில் தெட்டகமுவ வாவிக்குள் வானொன்று இன்று சனிக்கிழமை அதிகாலை விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
 
அந்த வானிலிருந்து ஐந்து வயது சிறுவன் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் வேறுயாராவது இருக்கின்றார்களா என்பது தொடர்பில் தேடப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
19 ஏப்ரல் 2014, சனி 9:25 மு.ப
Link to comment
Share on other sites

At least five people were killed after their van fell into the Detagamuwa tank in Kataragama in the early hours today, Police said.

 

They said that a five-year-old child was rescued. The group was traveling to Kataragama from Ambatenna in Kandy.

DSC03650.jpg

DSC03642.jpg

DSC03637.jpg

 
dailymirror
Link to comment
Share on other sites

கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில் கதிர்காமம் நகருக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இறந்த ஐந்து பேரின் சடலங்கள் இன்று சொந்த இடமான கண்டி,அம்பதென்ன முல்லேகம பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதி பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிவிக்கும் எமது செய்தியாளர், நாளை இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார். 
kathirkama-aciident.jpg
சித்திரை புத்தாண்டுக்காக கதிர்காமத்திற்கு சென்றிருந்த தந்தை தாய் இரு மகள்கள் தாயின் தந்தை மற்றும் உறவினரின் குழந்தை ஒன்று உற்பட ஆறு 
பேர் பயணித்த  வேன் ஒன்று, நேற்று அதிகாலை 5 மணியளவில் கதிர்காமம் நகருக்கு அருகில் உள்ள தெட்டுகம வாவியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. 
 
இவ் விபத்தின் போது ஐவர் உயிரிழந்துள்ளதுடன் எட்டு வயதுடைய ஒரு குழந்தை மாத்திரம் உயிர் தப்பியுள்ளது.
 
இவ் விபத்தில் உயிரிழந்தவர்கள் லலித் கிரிஷாந்த பண்டார (45) யொவ்வனிகா 
சிரோஷனி தாபரே (38) ஏஷனி பண்டார (11) சரத் தாபரே (70) இந்துனி 
ஆதித்யா பண்டார (14) ஆகிய ஐந்து பேர்களுமாவர். இவ் விபத்தில் ஜனக சாமிகர 
தாபரே என்ற எட்டு வயது குழந்தை மாத்திரம்; உயிர் தப்பியுள்ளது.
 
உயிரிழந்தவர்களது சடலங்கள் அவர்கள் வாழ்ந்த வீட்டுக்கு 
எடுத்துவரப்பட்டுள்ளதோடு நாளை இறுதி கிரியைகளும் இடம்பெற உள்ளன.
 
virakesari.lk
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில நாட்களாக ஸ்ரீ லங்காவில் விபத்துக்கள் அதிகம். கடந்த கிழமை உடுப்பிட்டி இலக்னாவத்தை பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் மரணமானது உட்பட.

பாதைகள் சீரமைக்க படுகின்றன ஆனால் வாகனங்கள் இன்னும் பழையன. சாரதிகள் அதிகாலை வேளையில் அரை தூக்கத்தில் ஓடுகிறார்கள் போலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின்... கோவிலைக், களவெடுத்து.... கும்பிடப் போனால், உது தான் நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின்... கோவிலைக், களவெடுத்து.... கும்பிடப் போனால், உது தான் நடக்கும்.

 

உண்மைதான்  சிறி

படிப்பது தேவாரம்

இடிப்பது தமிழன் தலையை...

 

துக்கம்  வரவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்  சிறி

படிப்பது தேவாரம்

இடிப்பது தமிழன் தலையை...

 

துக்கம்  வரவில்லை

 

சேம்.... பிளட், பிரதர்.

எனக்கும்... துக்கம் வரவில்லை. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.