Jump to content

கையொப்பம் இடுங்கள்: அண்ணா நூலகம் இடமாற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை கோட்டூர்புரத்தில், 8 ஏக்கர் நிலப் பரப்பில் மக்கள் பணம் 180 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்ட அண்ணா நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டிடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எனும் சிறப்புகொண்ட இந்த அண்ணா நூலகத்தை விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக (Super Specialty Paediatric Hospital) மாற்றி அமைக்கப்படும்” என இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 1.1.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தலைமைச் செயலகக் கட்டடத்தைத் தொடர்ந்து இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகமும் மாற்றப்படுவது அரசியல் பகையுணர்வின் அப்பட்டமான வெளிப்பாடாகவே இருக்கிறது.

குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவது என்பது வரவேற்கத்தக்கதே. அதற்குப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து புதிதாக ஒரு கட்டடத்தை அங்கு எழுப்ப முடியும். அதற்காக தேவையான உள்கட்டமைப்போடு உருவாக்கப்பட்ட ஒரு நூலகத்தை மாற்ற வேண்டியது இல்லை. மேலும், அண்ணா நூற்றாண்டு நூலகம் தற்போது அமைந்திருக்கும் இடம், அதனைப் பயன்படுத்துவோருக்கு எவ்வகையிலும் இடைஞ்சலாக இல்லை. இதிலேயே மேற்கொண்டு பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி வலுப்படுத்தவும் முடியும்.

ஆகவே, தமிழக அரசு தனது அமைச்சரவை முடிவைக் கைவிட்டு, நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகிறோம்

http://www.change.org/petitions/chief-minister-of-tamil-nadu-miss-jjayalalithaa-to-withdraw-the-decision-of-shifting-anna-centenary-library

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தமிழ் வேந்தன்,

தமிழக முதலமைச்சர், பழைய படி தனது அகங்காரத்ததை காட்டுவது அவருக்கு அழகல்ல.

கருணாநிதி ஆரம்பித்த நூலகம் என்ற, படியால்.. மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

திரும்ப.... கருணா வந்தாலும் இதை செய்வார்.

போங்கடா...... நீங்கள எல்லாம்... தமிழ் நாட்டு அரசியல்வியாபாரிகள் .

தமிழுக்கு ஏதாவது உருப்படியாய்... பாருங்கோ. ப்ளீஸ்.

இயலாவிட்டால்... சக்கரநாற்காலியில் சுத்தாமல் இருந்தாலே... தமிழுக்குப்பெருமை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.