Jump to content

மீள்குடியேற்றப் போர்வையில் மரணப் பொறிக்குள் தள்ளப்படும் வன்னி மக்கள்!


Recommended Posts

இன்னும் சில வாரங்களுக்குள் வவுனியா செட்டிகுளம் நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்பட்டு விடுவர் என்று மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோன் அறிவித்திருக்கின்றார். இதேபோன்று மீள்குடியேற்றம் தொடர்பிலான செய்திகள் நாளாந்தம் ஊடகங்களை ஆக்கிரமித்தாலும் மீள்குடியேற்றத்தின் பின்னர் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் வெளித்தெரியாத பல்வேறு விடயங்கள் குறித்து தமிழ்லீடர் அம்பலப்படுத்துகின்றது.

[size=4]அண்மையில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தை அண்மித்த கிராமங்களில் மீள்குடியேற்றம் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியிருந்த போதிலும் அவ்வாறு மீள்குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள் தொடர்பிலான தகவல்கள் பெரிய அளவில் வெளிவரவில்லை. அவற்றில் சில சம்பவங்களைக் குறிப்பிடுகின்றோம்.[/size]

[size=4]புதுக்குடியிருப்பின் கிழக்குப் பகுதியில் நந்திக்கடலுக்கு மிக நெருக்கமாக மல்லிகைத்தீவு என்றொரு கிராமம் உள்ளது. குறித்த கிராமத்தில் வாழும் மக்கள் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழேயே வாழ்ந்து வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட அதே நாள் ஒரு குடும்பப் பெண் தனது காணியில் தனது குடும்பத்தாருக்கு தேநீர் தயாரிப்பதற்காக அடுப்பு மூட்டியிருக்கின்றார். அதன் போது அடுப்பின் கீழிலிருந்த வெடிபொருள் ஒன்று வெடித்துச் சிதறியிருக்கின்றது. சம்பவத்தில் அவருடைய நெஞ்சுப் பகுதியைத் துளைத்த வெடிச்சிதறலால் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கின்றார்.[/size]

[size=4]அதே போல ஆனந்தபுரத்தினை அண்மித்த சிவநகர் ஏழாம் வட்டாரம் பகுதியில் இரண்டு இடங்களில் காணிகளை துப்புரவு செய்த மக்கள் குப்பைகளுக்கு தீயிட்ட பொழுது குண்டுகள் பாரிய சத்தங்களுடன் வெடித்துச் சிதறியிருக்கின்றன.[/size]

[size=4]இந்த விடயங்கள் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தப்படவில்லை என்ற போதிலும் தமிழ்லீடர் சம்பவங்களை உறுதிப்படுத்தியிருக்கின்றது.[/size]

[size=4]இவ்வாறான நிலைகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? என்று நோக்கினால் குறித்த பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்படுவதற்குப் பதிலாக காணிகளில் உள்ள பற்றைகளுக்கு தீயிட்டு இராணுவத்தினர் எரித்திருக்கின்றனர். அவ்வாறு எரிக்கப்பட்டதன் பின்னர் மக்களை மீள்குடியேற அனுமதித்திருக்கின்றனர்.[/size]

[size=4]வன்னியின் இறுதிப் போரில் மிக உக்கிரமான சண்டை நடைபெற்ற பகுதி ஆனந்தபுரம் என்ற கிராமத்தினை மையமாகக் கொண்ட பகுதி என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். அவ்வாறான மிகத் தீவிரமான போர் இடம்பெற்ற பகுதியில் முழுமையாக கண்ணிவெடிகள் அகற்றப்படாமல் மக்களை அனுமதித்திருப்பதன் மூலம் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கையாக இந்தச் சம்பவங்கள் இருக்கக் கூடுமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.[/size]

[size=4]இதேவேளை மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்படுகின்ற மக்களுக்கு எந்தவிதமான அடிப்படைத் தேவைகளும் நிறைவு செய்து கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சிறு சிறு கொட்டில்களைக் கட்டிக்கொண்டு தான் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது. தமது காணிகளை விட்டு வெளியே சென்று காட்டுப் பகுதிகளில் தடிகளை வெட்டிக்கொள்வதிலும் அச்சம் காணப்படுகின்றது. காடுகளுக்குள் செல்வதற்கு இராணுவம் அனுமதி மறுக்கின்றமை மற்றும் காடுகளுக்குள் வெடிபொருள் ஆபத்துக்கள் இருக்கலாம் போன்ற அச்ச நிலைகள் காரணமாக மக்கள் காடுகளுக்குச் சென்று மரம் தடிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.[/size]

[size=4]தொடர்ந்தும் முகாம்களில் அடைக்கப்பட்டு அவர்களின் கிராமங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அவர்கள் தமது அனைத்துத் தேவைகளையும் தொடக்கத்தில் இருந்தே தேடிக்கொள்ள வேண்டிய நிலையே உள்ளது. கிராமங்களில் தொழில்களை உடனடியாகத் தொடங்க முடியாத நிலை, கிணறுகளையோ கழிப்பிடங்களையோ சுற்றி அடைப்பதற்குக் கூட ஓலைகள் இல்லாத நிலையில் அந்த மக்கள் வாழ்க்கையை கழிக்கவேண்டிய நிர்க்கதியான சூழல் காணப்படுகின்றது. வீடுகளே இல்லாத நிலையில் தற்காலிகக் கொட்டில்களில் வாழும் மக்கள் இரவு வேளைகளில் அச்சமான சூழல் காரணமாக விடியும் வரை விழித்திருந்தே காலத்தைக் கழிப்பதாக கவலை வெளியிட்டிருக்கின்றனர்.[/size]

[size=4]வசதியோடும் வனப்போடும் வாழ்ந்த மக்கள் பிச்சைக்காரர்களாக வாழ்வை மீளத் தொடங்கி முன்னெடுக்கும் சூழலில் மக்களின் எஞ்சிய வீட்டு யன்னல்கள், அவர்கள் விட்டு வெளியேறிய வாகனங்கள் அனைத்தையும் இரும்பிற்காக பிடுங்கிச் செல்லும் இரும்பு வியாபாரிகளும் தென்னிலங்கையில் இருந்து சென்று வன்னியை ஆக்கிரமித்திருக்கிறார்கள். அவர்களும் முடிந்த அளவில் அனைத்து இரும்புப் பொருட்களையும் வன்னியில் இருந்து அபகரித்து செல்ல முற்படும் அதேவேளை சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதுகளில் திருடுவதற்கும் தயங்குவதில்லை அவர்களிடம் இருந்தும் தாம் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருக்கும் சிறிய அளவிலான பொருட்களையாவது காத்துவிடவேண்டும் என்ற ஏக்கமும் வன்னியில் மீளக் குடியேற அனுமதிக்கப்பட்ட மக்களிடத்தில் காணப்படுகின்றது.[/size]

[size=4]இதேவேளை வன்னியில் அதிக தூரத்துக்கு ஒரு வீடு என்ற நிலையே காணப்படுவதால் அங்கு அச்சம் நிறைந்த பொழுதுகளையே கழிக்கவேண்டிய நிலை இளம் பெண்களையும், பெண் பிள்ளைகளையும் கொண்ட குடும்பங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. தனித்துச் செல்லும் பெண்கள் இராணுவ நிலைகளையோ, இராணுவத்தினரையோ கடந்து செல்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தனியாகச் செல்லும் இளம் பெண்களிடம் இராணுவத்தினர் வலிந்து தமது கையடக்கத் தொலைபேசி இலக்கங்களைக் கையளித்து வருவதாக பெற்றோர் கவலை வெளியிட்டிருக்கின்றனர். இதேபோன்று இராணுவத்தினர் வழங்கும் தொந்தரவுகளை அச்சம் காரணமாகவும் சமூகத்தில் நிலவும் மரியாதையின் நிமித்தமும் பலர் வெளிப்படுத்த முற்படுவதில்லை என்று தெரியவருகிறது.[/size]

[size=4]இன்னும் அளவிட முடியாத நெருக்கடிகளுக்குள் மீள்குடியேற்றம் என்ற போர்வையில் தள்ளப்பட்டிருக்கின்ற வன்னி மக்களை மீட்டெடுத்து அவர்களை மீண்டும் தமது பழைய நிலைக்கு இட்டுச் செல்லும் பாரிய பொறுப்பினை தமிழ்த் தலைமைகள் முன்னெடுக்க முன்வருவார்களா?[/size]

[size=4]நான்கு மேடைகளில் நான்கு வீரவசனம் பேசி மக்களை உணர்வின்பால் உந்தி வாக்குகளைப் பெற்றுக்கொண்டாலோ, நான்கு பென்சில்களையும், ஐந்து மண்வெட்டிகளையும் மக்களுக்கு கொடுத்துவிட்டு அதனைப் படம் பிடித்து இணையத்தளங்களில் வெளியிட்டாலோ மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கப்போவதில்லை. நாங்கள் தனி ஈழம் கேட்கவில்லை, எங்களுக்கு வடக்கு - கிழக்கு இணைப்பு வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் மட்டும் நின்றுவிட்டால் போதுமா?[/size]

[size=4]முதலில் எமது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கு நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். அதனை நடைமுறைப்படுத்த முற்பட வேண்டும். அதனைவிடுத்து கட்சிக்குள் இருக்கும் பிடுங்குப்பாடுகளை வளர்த்துக்கொள்ள எதிர்க்கட்சியினர் போல ஆளுக்கு ஆள் அடித்துக் கொண்டு வசைபாடிக்கொண்டு தனிப்பட்ட நபர்களுக்கு ஆள்பிடிப்பதில் பலன் இல்லை. கட்சி அரசியலை விடுத்து மக்களுக்கான அரசியலை செய்வதற்கு தமிழ்த் தலைமைகள் முன்வரவேண்டும். மக்களின் உண்மையான பிரச்சினைகளை கையிலெடுத்து தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.[/size]

[size=4]-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்[/size]

http://tamilleader.com/mukiaya/5730-2012-08-25-12-42-38.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.