Jump to content

விசு அண்ணாவின் மகனை வாழ்த்துவோம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் யாழ்களத்து அண்ணா ஒருவரது மகன் படித்து நல்லதொரு பதவியில் இருப்பது மகிழ்ச்சி...மேலும்,மேலும் வளர்ந்து எம் நாட்டுக்கும்,வீட்டுக்கும் சேவை செய்ய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • Replies 88
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணாவுக்கும் மகனுக்கும்

 

 

நன்றி  தம்பி

 

எப்படி பொழுது போகுது?

அண்ணனுக்கு வருத்தம் என்றவுடன் பலமுறை  தொடர்பு கொண்டபோதும்

நான் வேறு அலுவல்களில் நின்றதால் பதிலளிக்காத போதிலும் மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டு

என்னுடன் பேசினீர்கள்

ஆறுதல் தந்தீர்கள்

கொடுத்து வைத்திருக்கணும்  இவ்வாறான உறவுகள்  

தம்பிகள் கிடைப்பதற்கு...

 

நன்றி  தம்பி

எங்கள் சந்திப்பு பற்றி  வேற ஒரு திரியில் எழுதலாம் என்றிருக்கின்றேன்

நீங்கள் தந்த பொருள் அப்படியே  உள்ளது :D

வாழ்த்துக்கள்  செல்வன் விசுவுக்கு...! :D

 

மாதா பிதாவை மதித்து வாழ்ந்தால் மென்மேலும் சிறப்புக்கள் கிட்டும்...! :)

 

நன்றியண்ணா

 

போன  மாதம் உங்களை  சந்திக்கவேண்டியது

ஆனால் நேரம் இடம் தரவில்லை

மகனும் வந்திருந்தான்

அடிக்கடி  வரும் இடம் தானே

அடுத்தமுறை  சந்திக்கலாம்

 

லா  சப்பல் வந்தால் தொடர்பு கொள்ளுங்களண்ணா

 

நன்றியண்ணா

அன்புக்கும் வாழ்த்துக்கும்

விசுகு, உங்கள் மகனுக்கு என் இனிய வாழ்த்துக்கள். மேலும் மேலும் உயரம் எட்டி சிகரம் தொடட்டும்.

 

 

நன்றி  தம்பி  நிழலி

உங்களை  நான் அவனுடன் சந்திப்பேன்

போன முறை  நாங்கள் சந்தித்தபோது

அவன் மலேசியாவில்  3 மாதப்படிப்புக்காக போயிருந்தான்...

 

நன்றி  தம்பி  வாழ்த்துக்கும் 

ஊக்கத்துக்கும்

 

மகனுக்கு வாழ்த்துக்கள் ஐயா, 

 
நீங்கள் பட்ட கஷ்டங்களை பிள்ளைகள் அனுபவிக்ககூடாது என அவர்களுக்காக பல விடயயங்களை தியாகம் செய்துள்ளீர்கள். உங்களுக்கும் பாராட்டுக்கள்

 

 

நன்றி  கொழும்பான்

 

வாழ்வில் ஒரு முக்கிய  காலப்பகுதியில்

கொழும்பில்  இருந்துள்ளேன்

உங்கள் பெயரைப்பா◌ார்க்கும் போதெல்லாம்

அந்த நினைவுகள் வந்து கண் பனிப்பதுண்டு....

அது ஒரு கனாக்காலம்..

 

நன்றி  ஐயா

பாராட்டுக்கும் அன்புக்கும்

உங்கள் போன்றவர்களின் அன்பைப்பெற்றதே பெரும் செல்வம் எனக்கு..

வாழ்க  வளமுடன்

விசுகு ஐயாவின் மகனுக்கு மென்மேலும் உயரங்களை விரைவாகத் தொட வாழ்த்துக்கள்.

நெடுக்ஸின் கேள்வி சிறு ஆச்சரியத்தை உண்டுபண்ணியது. மருத்துவத்துறையை அல்லது சட்டத்துறையைத் தேர்ந்தெடுப்பவர் அத்துறையிலேயே தொடர்ந்து வேலை செய்து இளைப்பாறுவர். எனினும் பொறியியல் துறை என்பது அடிப்படையில் கணிதவியலாகவே இருக்கும் என்பதால் எந்தத்துறையிலும் இலகுவாக நுழைந்து வேலை செய்யக்கூடியதாக இருக்கும். விசுகு ஐயாவின் மகன் பொறியியலையும் அதன் பின்னர் information system இல் master உம் செய்துள்ளார். High frequency trading மூலம் அதிக பணத்தை உழைப்பதற்கும், risk modelling, investment modelling போன்றவைக்கும் கணிதமும், கணணி அறிவும் தேவையான பொறியியலாளர்களே வங்கிகளுக்குத் தேவை. இத்தகைய வேலைகளுக்கு CIMA சரிவராது.

பெயர்போன பல்கலைக் கழகங்களில் படித்தவர்கள் பலர் பொறியியல் துறைக்குள் நுழையாது நேரடியாகவே investment banking, consultancies என்று போய் இன்று president, vice president என்று இருக்கின்றார்கள்.

 

 

நன்றி  கிருபன் ஐயா

 

விளக்கத்துக்கும் நன்றிகள்

அத்துடன் எனது படிப்பையும் (இலக்கு) ஞாபகப்படுத்திவிட்டீர்கள் (ICMA)

 

நன்றி  கிருபன்

வாழ்த்துக்கும் அன்புக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும் என்பது திருவள்ளுவரின் கூற்றுகளில் ஒன்றாகும். அத்தகைய செல்வத்தை தன்மகன் பெறுவதற்கு உதவிய விசு அவர்களுக்கும் அவர் குடும்பத்துக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள்!!
 
"அவன் பிறப்பாலேயே  ஒரு நல்ல பிள்ளை....
இதுவரை
எனக்கு பிடிக்காத எதையும் செய்யமாட்டான்
உண்மையில் இவ்வாறு பிள்ளைகள் அமைவது   தெய்வ  வரம்
அதை நான் பெற்றிருக்கின்றேன் என்று தான் சொல்வேன்
 
உழைத்ததை
எனது நேரத்தை
இந்த 4 பகுதிக்கும் கொடுத்தேன்
 
எனக்காக வாழ்ந்ததில்லை
இதுவரை எனக்கென்று நிலையான  சொத்து எதையும் பிரான்சிலோ
உலகின் எந்த மூலையிலோ வாங்கியதில்லை
வீடு உட்பட...
காரணம்
எனக்கென்று ஒரு குறியுண்டு
அது தாயகம் நோக்கி  மட்டுமே இருந்தது
இருக்கிறது
அதை  அடைய நான் சொத்து சேர்ப்பது  இடைஞ்சலாகிவிடக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தேன்.
தேசியத்துக்காக உழைப்பவர்கள் கச்சான் வாங்கி  சாப்பிடுவதே 
வாதத்துக்குரிய  பொருளாவதை  கண்டிருக்கின்றேன்."
 
மேற்சொல்லப்பட்டுள்ள ஊட்டங்களைப் பின்பற்றும் மனிதர்களில் மனிதத்தைக் காணலாம். விசு அவர்களில் மனிதத்தைக் காண்கிறேன்.

 

 

நன்றி  ஐயா

அடுத்த தலைமுறைக்கு நாம் எதைக்கடத்துகின்றோம்

எதைக்கொடுத்து செல்லப்போகின்றோம்

எதை முன்னுதாரணமாக வைக்கப்போகின்றோம்....

என்பது எமது சொல்லில் அல்லாது செயலில் தான் உள்ளது

அதை மனப்பூர்வமாக ஏற்று நடப்பவன் நான்.

எமது செயல்கள் அவர்களுக்கு வழிகாட்டியாக முன்னதாரணமாக இருக்கவேண்டும் என நினைத்து அதன்படி நடப்பவன்.

அதைத்தான் எனது பிள்ளைகளிடமும்  விதைத்து வருகின்றேன்.

 

எனக்கு 25வது திருமண வாழ்த்தை எனது மக்கள்  வந்து சொன்னபோது

அதை அம்மாவிடம் சொல்லுங்கள் என்று சொன்னேன்

ஏனப்பா நீங்களும்சேர்ந்தது தானே இந்த  வாழ்க்கை என்று மக்கள் சொன்னபோது

 

எனக்கான மரியாதை என்பது அம்மாவிடமிருந்தே ஆரம்பிக்கின்றது

அவர் என்னை எவ்வாறு நடாத்துகின்றார் என்பதிலிருந்தே

நீங்கள் எனக்கான இடத்தை தெரிவு செய்கின்றீர்கள்

அம்மாவும் நீங்களும் தரும் இடமே எனக்கு சமூகத்தில் அதற்கேற்ற  இடத்தை தருகிறது

ஒரு மனைவியின்

பிள்ளைகளின்அன்புக்கும் மரியாதைக்கும் உட்படாதவனால் சமூகத்துக்கு எந்த பலனும் இல்லை

சமூகத்துக்கு  நற்பிரசைகளைத்தரமுடியாது மட்டுமல்ல

சமூகத்துக்கு பெரும் இடைஞ்சல்களை  மட்டுமே தரமுடியும்  என்றேன்.

 

(நான் எனது மனைவியுடன் பேசுவது குறைவு.  ஆனால் மக்களுக்கு அவளது அருமைகளை கூறிக்கொண்டே இருப்பேன்.  நன்றி  மறப்பது நன்றன்று))

 

அந்தவகையில் வாழ்வில் எனது இலக்குகளை அடைந்திருக்கின்றேன் என்று தான் சொல்வேன்.

 

நன்றி  ஐயா

வாழ்த்துக்கும் அன்புக்கும் ஊக்கத்துக்கும்

விசுகு அண்ணாவுக்கும் அவர் மகனுக்கும் வாழ்த்துக்கள்...!!

 

 

நன்றி  தம்பி  வாழ்த்துக்கும் அன்புக்கும்

உங்களுக்கு உள்ள வேலைப்பழுக்களுக்கு முன் அண்ணனையும் மகனையும் நினைத்ததையிட்டு பெரு மகிழ்வு.

வாழ்க  வளமுடன் ராசா..

வாழ்த்துக்கள் பல .....

 

 

நன்றி  குஞ்சி

வாழ்த்துக்கும் நேரத்துக்கும்

விசுகு அண்ணா உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்.

வாழ்க்கையில் இன்னும் முன்னேறி வெற்றி நடைபோட வாழ்த்துகின்றேன்

 

 

நன்றி  தம்பி  வாத்தியார்

 

வாழ்த்துக்கும் அன்புக்கும் ...

 

சந்திப்புத்தான் தள்ளித்தள்ளிப்போகுது...

போன  கிழமை  டென்மார்க் போய் வரும் போதும் நினைத்தேன்

நேரம் கிடைக்கவில்லை

பார்க்கலாம்

எங்கள் யாழ்களத்து அண்ணா ஒருவரது மகன் படித்து நல்லதொரு பதவியில் இருப்பது மகிழ்ச்சி...மேலும்,மேலும் வளர்ந்து எம் நாட்டுக்கும்,வீட்டுக்கும் சேவை செய்ய வாழ்த்துக்கள்

 

 

நன்றி  தங்காய்.........

 

ஒரு அண்ணனாக  உங்கள் ஒவ்வொருவரையும் நான் அப்படித்தான் பார்க்கின்றேன்

நீங்கள் அனைவரும் படிகளை  ஏறணும்

உச்சிகளைத்தொடணும்

அதுவே எனக்கு பெரும் மகிழ்வு தரும்

 

வாழ்த்தியபடியும்

வேண்டியபடியும் நான்  என்றுமிருப்பேன்

 

நன்றி  தங்கச்சி

வாழ்த்துக்கும்  ஊக்கத்துக்கும்  அன்புக்கும்..  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகரின் மகன் சிறு வயதிலேயே சிகரம் தொட்டிருக்கிறார்.அவருக்கு எனது வாழ்துக்களைத் தெரிவித்து விடுங்கள்.இந்த வெற்றியில் பெரும் பங்குஉங்களையும் உங்கள் மனைவியையும் சாரும்.உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.கள உறவு ஒருவரின் பிள்ளையின் முன்னேற்றம் என் பிள்ளையின் முன்னேற்றம் போன்ற உணர்வே ஏற்படுகிறது.எவை எல்லாம் எமக்கு மறுக்கப்பட்டதோ அவற்றை எமது சந்ததி பெற்று இனத்துக்கு பெருமையும் புகழையும் ஈட்டித்தரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா உங்கள் மகனார் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். கனடாவைப் பொருத்தமட்டில் வங்கியில் இளவயதிலேயே நம்முடைய சமூகத்தினர் அதிகமானோர் கொடிகட்டிப்பறக்கின்றனர். இங்கு அத்தகைய பணி என்பது சாதாரணமானது அதே வேளை நீங்கள் வாழும் நாட்டில் இப்படியான பணிகள் என்பது நம்மவர்களுக்கு பெருமைசேர்க்கும் விடயமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. பெற்றோருக்கு பெருமையையும் மதிப்பையும் உருவாக்குபவர்கள் பிள்ளைகளே உங்கள் மனதிற்கு உகந்த மகவாக இன்னும் மிளிர்வாராக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு திருமதி விசுகு தம்பதிகளுக்கு

 

ஒரு பிள்ளையின் வளர்ச்சி என்பது உண்மையில் பெற்றோர்களிலேயே அதிகம் தங்கியுள்ளது.

 

அந்த வகையில் உங்களுக்கு எனது குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகரின் மகன் சிறு வயதிலேயே சிகரம் தொட்டிருக்கிறார்.அவருக்கு எனது வாழ்துக்களைத் தெரிவித்து விடுங்கள்.இந்த வெற்றியில் பெரும் பங்குஉங்களையும் உங்கள் மனைவியையும் சாரும்.உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.கள உறவு ஒருவரின் பிள்ளையின் முன்னேற்றம் என் பிள்ளையின் முன்னேற்றம் போன்ற உணர்வே ஏற்படுகிறது.எவை எல்லாம் எமக்கு மறுக்கப்பட்டதோ அவற்றை எமது சந்ததி பெற்று இனத்துக்கு பெருமையும் புகழையும் ஈட்டித்தரவேண்டும்.

 

நன்றி  புலவர்அன்புக்கும் நேரத்துக்கும்  வாழ்த்துக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா உங்கள் மகனார் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். கனடாவைப் பொருத்தமட்டில் வங்கியில் இளவயதிலேயே நம்முடைய சமூகத்தினர் அதிகமானோர் கொடிகட்டிப்பறக்கின்றனர். இங்கு அத்தகைய பணி என்பது சாதாரணமானது அதே வேளை நீங்கள் வாழும் நாட்டில் இப்படியான பணிகள் என்பது நம்மவர்களுக்கு பெருமைசேர்க்கும் விடயமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. பெற்றோருக்கு பெருமையையும் மதிப்பையும் உருவாக்குபவர்கள் பிள்ளைகளே உங்கள் மனதிற்கு உகந்த மகவாக இன்னும் மிளிர்வாராக.

 

நன்றி  சகோதரி

 

நான் கனடவ  வந்திருந்தபோது அவன் வரவில்லை

வந்திருந்தால் நீங்கள் சந்தித்திருப்பீர்கள்

 

மற்றும் கனடாவில் எனது 3  மருமக்களும் வங்கிகளில் தான் வேலை  செய்கிறார்கள்

அத்துடன் லட்சம் டொலருக்கு அதிகமாக வருடச்சம்பளம் எடுக்கிறார்கள்

தெரியும்

ஆனால் பிரெஞ்சைப்பொறுத்தவரை தற்பொழுது தான் ஆரம்பம்

அத்துடன் இவர் ஒரு தராதரத்துடன் உள்ளே  நுளைகின்றார்

அதுவே எனது சந்தோசம்

 

நன்றி  சகோதரி

நேரத்துக்கும்  வாழ்த்துக்கும் 

திரு திருமதி விசுகு தம்பதிகளுக்கு

 

ஒரு பிள்ளையின் வளர்ச்சி என்பது உண்மையில் பெற்றோர்களிலேயே அதிகம் தங்கியுள்ளது.

 

அந்த வகையில் உங்களுக்கு எனது குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள்.

 

 

நன்றி  சகோதரா

 

உங்கள் பெயரில்   ஈழமுண்டு

அதனால் அதிலொரு கூடுதல் ஈர்ப்பு எனக்கு....

குடும்பத்துடன்  வாழ்த்தியுள்ளீர்கள்

நான் பெற்ற பெரும் பயன் அது

 

நன்றி  சகோதரா

நேரத்துக்கும்  அன்புக்கும்..

Link to comment
Share on other sites

விசுகு அண்ணாவின் மகனுக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் மேற்படிப்புகளை கற்று பல வெற்றிகளைப் பெற்று, பெற்றோர்க்கும் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள். ஒரு மாணவனின் வெற்றியில் அவரின் பெற்றோருக்கு நிச்சயம் பெரும் பங்கு இருக்கும், திரு திருமதி விசுகு தம்பதிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா தம்பதிகளுக்கும்,  அவர் மகனுக்கும் வாழ்த்துக்கள்...!! 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடன் பிறவா சகோதரனுக்கு வாழ்த்துக்கள்...............

Link to comment
Share on other sites

விசு தம்பதியினருக்கும் மகனுக்கும் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் உறவுகளே....

 

முதன் முதலாக

இன்று எனது மகன் வேலைக்குப்போகின்றார்............

 

 

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா, புதிய பாதையில் அடி எடுத்து வைக்கும் உங்களது மகன் வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈன்ற   பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகவை சான்றோன் எனக் கேட்ட  தந்தை ... :lol:

 

மேலும் தங்கள் மகன்  முன்னேற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா, புதிய பாதையில் அடி எடுத்து வைக்கும் உங்களது மகன் வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

 

நன்றி  இணையவன்

ஒரு ஞாயிறு  சந்திக்கலாம்...

ஈன்ற   பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகவை சான்றோன் எனக் கேட்ட  தந்தை ... :lol:

 

மேலும் தங்கள் மகன்  முன்னேற வாழ்த்துக்கள்.

 

 

நன்றி  பாட்டி

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்.

Link to comment
Share on other sites

 உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்.

 

இப்ப இன்னொரு பிள்ளையை புதுசா பெத்து வளர்க்க ஆசை வரும். எனவே அந்த முயற்சியிலும் தீவிரமாக இறங்க என் வாழ்த்துக்கள். மூலிகைகள், இலேகியங்கள் வேண்டும் என்றால் 'நிழலியானந்தா சரஸ்வதி மகா புருஷ பராக்கிரம' ஆசிரமத்தினை நாடவும். செய்முறையும் விளக்கப்படும்.

Link to comment
Share on other sites

விச்சு அண்ணாவுக்கும் மகனுக்கும் வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசு 'அண்ணா'வுக்கும், மகனுக்கும் வாழ்த்துக்கள். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.