Jump to content

இஸ்ரேலியர்களின் புதிய ஆலோசனை சிறிலங்காவிற்கு வழிகாட்டுமா?


Recommended Posts

இஸ்ரேலிய அடிப்படைவாதிகள் பாலஸ்தீனர்களுடன் நிரந்தரமான அமைதி ஒப்பந்தம் ஒன்றை எழுதி அதில் முறைப்படி கையொப்பமிடுவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளனர்.


மேற்கண்ட கருத்தை இப்போதைய இஸ்ரேலிய பிரதமரான பென்ஜமின் நெட்டன்யாகுவின் அரசுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கும் முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் அவிக்டோர் லிபர்மான் தெரிவித்துள்ளார்.

 

நிரந்தரமான சமாதான ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதைவிட தற்காலிகமான சமாதான ஒப்பந்தம் ஒன்றை எழுதி அதில் கையெழுத்திட்டால் இஸ்ரேலிய யூத அடிப்படைவாதிகளை சமாதானம் செய்ய முடியும் என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

 

ஊல்ரா நாஷனல் கட்சியைச் சேர்ந்த இவர் கடந்த தை 22ம் திகதி தமது கட்சிக்கு அதிக ஆதரவு கிடைக்காததைத் தொடர்ந்து சிறிய மாற்றமடைந்துள்ளமை தெரிகிறது.

 

வரும் மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார், அத்தருணம் அமைதிப் பேச்சுக்களை முன்னெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையிலேயே வேறு வழியற்ற அடிப்படைவாதியான லிபர்மான் சிறிது இறங்கி வந்துள்ளார்.
சென்ற வாரம் ஐ.நா இஸ்ரேலுக்கு எதிரான காட்டமான அறிக்கை ஒன்றை முன் வைத்தது தெரிந்ததே..

 

நேற்று சனி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த லிபர்மான் மேலும் கூறும்போது, இஸ்ரேல் என்ற நாட்டையே உலகப்படத்தில் இருந்து அகற்றப்போவதாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கங்கணம் கட்டி வருகிறார்கள், அவர்களால் இஸ்ரேலை ஏற்க முடியுமா..? என்று கேள்வி எழுப்பினார்.

 

அதுபோலத்தான் யூத அடிப்படைவாதிகளின் எண்ணங்களும் விட்டுக்கொடுக்க முடியாத ஓரிடத்தில் இருக்கிறது என்றும் அவர் உதாரணம் காட்டியுள்ளார்.

 

அதேவேளை இஸ்ரேல் பாலஸ்தீனப்பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்களை அமைப்பதை நிறுத்தாவிட்டால் அமைதிப்பேச்சை முன்னெடுப்பதில் யாதொரு பயனுமில்லை என்கிறது பாலஸ்தீன தரப்பு.

 

அதேநேரம் புதிய குடியிருப்புக்களை அகற்ற வேண்டிய கட்டாயம் தமக்கு இல்லை என்கிறது இஸ்ரேல், இப்படியிருக்கிறது இழுபறி நிலை.

 

மேலும் கடந்த 2010ம் ஆண்டு இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை பயன்படுத்தி தீவிரவாதிகள் இஸ்ரேலை நோக்கி மோட்டார்களை ஏவ, இஸ்ரேல் பதிலடி கொடுக்க அந்த ஒப்பந்தம் முறிவடைந்தது தெரிந்ததே.

 

இப்படி இது நீண்ட புரையோடிய தொழு நோயாக இருப்பதால், முன்னெச்சரிக்கையுடன் இடைக்கால ஒப்பந்தம் செய்வது நல்லது என்றும் கூறினார்.

 

இதை அடியொற்றி வரும் மார்ச் அமெரிக்கா முன்னெடுக்கவுள்ள தீர்வு போல இலங்கையிலும் ஒரு தீர்வு எட்டப்பட வழி இருப்பது கவனிக்கத்தக்கது.

 

அமெரிக்கா பாலஸ்தீனத்தில் செய்வதை சிறீலங்காவிலும் செய்யும், இந்தியா குழப்ப இடமில்லை என்பது களநிலையாக உள்ளது.

 

மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைக் கூட்டமும், சம காலத்தில் நடக்கவுள்ள ஒபாமாவின் இஸ்ரேல் பயணமும் அவருடைய இரண்டாவது கட்ட அதிபர் பதவியின் முக்கிய பணிகளாக அமையவுள்ளன.

 

சிங்கள இனவாதம், இஸ்ரேலிய யூத இனவாதம், முஸ்லீம் மதவாதம், கடும்போக்கு தமிழ்வாதம் ஆகிய கடும்போக்குகள் அதிர்வுகளை சந்திக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.

 

http://www.alaikal.com/news/?p=122171

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நெடுமாறன் ஐயா முதலில் காங்கிரசில் இருந்தவர்தான். இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தார். ஆனால் என்றும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை மாற்றியதில்லை. பிஜேபி எதிர்ப்பு என்பது இப்போ தமிழகத்தில் உள்ள மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைத்துக்கும் வாழ்வா, சாவா போராட்டம். இதில் எங்களுக்கு காங்கிரசை பிடியாது என்பதால் நெடுமாறன் போனோர் இந்தியா கூட்டணியை ஆதரிக்க கூடாது என நாம் நினைப்பது சுயநலமும், தேவையில்லாமல் அவர்கள் வீட்டு விசயத்தில் மூக்கை நுழைக்கும் செயலுமாகும். ஈழ போராட்டம் தமிழ்நாட்டு அரசியலில் தீர்மானிக்கும் விடயம் அல்ல. அவர்கள் தமக்கு முக்கியமான விடயங்களின் அடிப்படையிலேயே விடயங்களை தீர்மானிப்பர். மன்சூரும் ஈழவிடுதலை நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை எனிலும், இவர் காங்கிரசில் சேர்ந்தது சுய இலாபத்துக்கு. நெடுமாறன் ஐயா இந்தியா கூட்டணியை ஆதரிப்பது பிஜேபி வரக்கூடாது என்பதால்.
    • இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.   வித்துபோட்டம் என்று சொல்வதற்கு வெட்கம் ....இதிலை பீலா வேறை..
    • வயது கூடும் போது வந்த ஞானோதயங்களில் இந்த உறைப்பு குறைப்பும் ஒன்று. தவிரவும் இறைச்சியின் சுவையே தெரியாது - மிளகாய்தூள் கறிக்குள் இறைச்சி துண்டை போட்டு சாப்பிட்டால், மான் ஏது, மரை ஏது - தூளின் சுவைதான் தெரியும்.  
    • நீங்க‌ள் ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யா ப‌ற்றி எழுதின‌து100/100 உண்மை இதை விய‌ன‌ரசு ஜ‌யா கூட‌ அன்மையில் சொல்லி இருந்தார் ஆனால் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா கூட‌ ப‌ய‌ணம் செய்த‌ சில‌ருக்கு கூட‌ ஜ‌யாவின் செய‌ல் பாடு பிடிக்க‌ வில்லை   க‌ந்துப்பு அண்ணா கோவிக்க‌ வேண்டாம் 2009த‌லைவ‌ரின் ம‌றைவோட‌ இல‌ங்கை அர‌சிய‌லை நான் எட்டியும் பார்ப்ப‌து கிடையாது   க‌ண்ண‌ க‌ட்டி காட்டில‌ விட்ட‌ மாதிரி தான் என‌க்கும் இல‌ங்கைக்குமான‌ அர‌சிய‌ல் அங்கு ந‌ட‌ப்ப‌து ப‌ற்றி என‌க்கு ஒரு கோதாரியும் தெரியாது.........................த‌லைவ‌ர் 2002க‌ளில் உருவாக்கின‌ த‌மிழ்தேசிய‌ கூட்ட‌மைப்பில் இருப்ப‌வ‌ர்க‌ள் ஒரு சில‌ர‌ தெரியும் மீதிப் பேர‌ தெரியாது....................................................
    • அவுஸ்திரேலிய கடற்கரையில் 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில், குறித்த திமிங்கிலங்கள் நேற்று (25) காலை கரை ஒதுங்கியுள்ளன. இவ்வாறு கரை ஒதுங்கிய திமிங்கிலங்களைக் காப்பாற்றுவதற்கு, கடல் உயிரியலாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கரை ஒதுங்கிய 26 திமிங்கிலங்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய திமிங்கிலங்களை மீட்டு கடலில் விடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/300286
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.