Jump to content

புலிகள் இல்லாத இலங்கைத் தீவும் இந்தியாவும் - நிலாந்தன்-


Recommended Posts

விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு ஏறக்குறைய மூன்றே முக்கால் ஆண்டுகளாகிவிட்டன. எனினும் ஈழத் தமிழர்கள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய திருப்பகரமான மாற்றங்கள் எதையும் அவதானிக்க முடியவில்லை. அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு பேட்டி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதைச் சுட்டிக்காட்டியிருந்தார். விடுதலைப்புலிகள் இல்லாத இன்றைய அரசியல் சூழலில் இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள்விடுத்திருந்தார்.

 

இந்தியாவின் மாறாத இந்நிலைப்பாட்டிற்கு காரணம் என்ன? விடுதலைப்புலிகள் தான் காரணம் என்றால் அவர்கள் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின் இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றியிருந்திருக்க  வேண்டும். எனவே, விடுதலைப்புலிகள் அல்லாத வேறொரு பலமான காரணமே இந்தியாவின் அணுகுமுறையை தீர்மானிக்கின்றது என்ற முடிவுக்கு வரலாம். ஆயின் அது என்ன?


முதலில் ஈழத்தமிழர்கள் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும். ராஜீய உறவுகளில் சென்ரிமென்ற்களுக்கு இடமில்லை. அவை அநேகமாக நலன் சார் உறவுகள் தான். இந்தியா ஈழத்தமிழர்களை தனது புவிசார் நலன்களுக்கூடாகவே பார்க்கிறது. தமிழர்களிடத்தில் அதற்கு தனிப்பட்ட ரீதியில் காதலோ வெறுப்போ கிடையாது. ஆனால், தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களை தேர்தல் நோக்கு நிலையிலிருந்து கையாள வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. ஆனால், தமிழ் நாட்டிற்கும் ஈழத் தமிழர்களுக்குமிடையில் உணர்ச்சிகரமான ஒரு பிணைப்பு உண்டு. இது காரணமாகவே ஈழத்தமிழர்களைக் கையாளும் போது தமிழ் நாட்டையும் கவனத்தில் எடுக்கவேண்டிய தேவை இந்திய மைய அரசுக்கு உண்டு. இதுகூட ஒரு நலன் சார் அணுகுமுறை தான்.

 

கெடுபிடி போர் காலத்தில் அமெரிக்காவை நோக்கி சாந்திருந்த ஜெயவர்த்தன அரசாங்கத்தை வழிக்கு கொண்டு வரவேண்டிய தேவை மொஸ்கோவுக்கு நெருக்கமாக இருந்த இந்தியாவிற்கு ஏற்பட்டது. எனவே, இலங்கை இனப்பிரச்சினையை அது கையில் எடுத்தது. இந்திய இலங்கை உடன்படிக்கை மூலம் தனது நோக்கம் நிறைவேற்றப்பட்டதும் அது இனப்பிரச்சினையை கைவிட்டது.


ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கம் விட்டுக்கொடுப்பின்றி போராடியதால் இந்தியாவின் நிகழ்ச்சி நிரல் குறிப்பிடத்தக்க அளவிற்கு குழம்பியது. கெடுபிடிப் போர் கால கட்டத்தின் இறுதிப் படை விலகல்களில் ஒன்றாக ஐPமுகுஇன் படை விலகல் அமைந்தது.

 

ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதோடு இந்தியாவிற்கும் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கும் இடையில் ஒரு சட்டப்பூட்டு போடப்பட்டுவிட்டது. இதில் ஈழத்தமிழர்கள் குறித்து இந்தியாவின் தெரிவுகள் மிகவும் சுருங்கிக் காணப்பட்டன. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரும் அதன் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் இந்தியாவில் தேடப்படும் நபர்களாயினர். அதற்குப் பின் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் இந்தியாவோடு எத்தகைய ஒரு வெளிப்படையான உத்தியோகபூர்வ உறவையும் பேணமுடியாது போயிற்று. ராஜீவ் கொலை எனப்படுவது மெய்யான விளக்கத்தின் அடிப்படையில் ஒரு சட்ட விவகாரம் அல்ல. அது ஒரு அரசியல் விவகாரமே. ஆனால், இந்தியா அதை ஒரு சட்ட விவகாரமாகவே அணுகியது. அது ஒரு அரசியல் தீர்மானம் தான்.


விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் நிலைமைகளை சீர்செய்வதற்குப் பல தடவைகள் முயற்சித்தார். குறிப்பாக ரணில் - பிரபா உடன்படிக்கையின்போது அவர் இந்தியாவில் வந்திறங்குவதற்கு அனுமதிகேட்கப்பட்டது. ஆனால், அதற்கு சட்டப்பூட்டு தடையாக இருந்தது. நாலாம் கட்ட ஈழப் போரை ஓட்டிய காலங்களிலும் பாலசிங்கம் சில முன் முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. குறிப்பாக, இந்திய ஊடகமொன்றிக்கு ராஜீவ் கொலை தொடர்பில் அவர் வழங்கிய கருத்துக்கள் வன்னியில் பெரும் சர்ச்சையை கிளப்பின. அதன் விளைவாக இயக்கத்தில் அவருடைய முதன்மை ஸ்தானம் குறைக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு. அதனால் மனமுடைந்து காணப்பட்ட நாட்களிலேயே அவருக்குப் புற்றுநோய் தீவிரமடைந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்குப் புற்றுநோய் என்று கண்டுபிக்கப்பட்ட பின் விடுதலைப்புலிகளின் தலைவரும் பிரதானிகளும் அவருடன் அதிகம் பரிவோடும் மதிப்போடும் நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தான் சார்ந்த இயக்கத்pற்கும் இந்தியாவின் புவிசார் நலன்களுக்குமிடையே போடப்பட்டிருந்த சட்டப்பூட்டை திறக்க முடியாத ஆற்றாமையோடும் நிராசையோடும்தான் அன்ரன் பாலசிங்கம் இறந்துபோனார். நந்திக் கடற்கரையில் புலிகளின் வீழ்ச்சியோடு அந்தச் சட்டப்பூட்டு திறக்கப்பட்டது.

 

இப்பொழுது சட்டப்பூட்டு இல்லை. ஆனாலும் இந்தியா அதன் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவில்லை. ஏன்?

விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு 'அரசல்லாத  தரப்பாக| (ழேn ளவயவந) இருந்தபோதிலும்கூட இந்தப் பிராந்தியத்தில் சக்திமிக்க  அரசுகளின் நிகழ்ச்சி நிரல்களை வெற்றிகரமாக குழப்பியிருக்கிறது. முதலில் இந்திய இலங்கை உடன்படிக்கையை முறித்ததன் மூலம் இந்தியாவின் நிழ்ச்சி நிரலை குழப்பினார்கள். அதன் பின்னர் ரணில் - பிரபா உடன்படிக்கையை முறிக்கும் விதத்தில் நிலைமைகளை நகர்த்தியதன் மூலம் அதாவது ரணில் விக்கிரமசிங்காவைத் தோற்கடித்ததன் மூலம் மேற்கு நாடுகளின் நிகழ்ச்சி நிரலை குழப்பினார்கள். ரணில் தோற்கடிக்கப்பட்டபோது இலங்கைத் தீவில் மேற்கிற்கான கதவுகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு மூடப்பட்டன. அதேசமயம் சீனாவிற்கான கதவுகள் அகலத் திறக்கப்பட்டன.

 

சீனாவின் செல்வாக்கு மண்டலத்துள் கொழும்பானது மேலும் ஈர்க்கப்படுவதை தவிர்ப்பதே அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் முன்னுள்ள சவால்களாகும். கொழும்பை முறிக்காமல் வளைத்தெடுக்க இவ்விரு நாடுகளும் முயற்சிக்கின்றன. இம்முயற்சியில் கொழும்பிற்கும் தனக்குமான நெருக்கத்தை தொடர்ந்தும் பேணுவதற்காகவே புதுடெல்லியானது தமிழர்களிடமிருந்து விலகி நிற்பதாக காட்டிக்கொள்ள முற்படுகின்றது.

இது காரணமாகவே நந்திக் கடலில் சட்டப்பூட்டு உடைக்கப்பட்ட பின்னரும் இந்தியாவானது அதற்கு முன் கடைப்பிடித்த அதே அணுகுமுறையைத் தான் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றது. இலங்கைத்தீவில் மேற்குநாடுகளின் நிகழ்ச்சி நிரல் குழப்பப்பட்டதால் உடனடியாக அதிகம் நன்மைபெற்ற தரப்பாக சீனாவே காணப்படுகிறது.

 

ஆனால், எந்த நோக்கத்திற்காக புதுடெல்லியானது கொழும்பை தொடர்ந்தும் ஆரத்தழுவி வருகின்றதோ அந்த நோக்கத்தில் இன்று வரையிலும் அவர்களால் பூரண வெற்றியைப் பெறமுடியவில்லை. இதனால், இடையிடை சில மென் அழுத்தங்களை பிரயோகித்தபோதிலும்கூட இலங்கை தொடர்பான அதன் அணுகுமுறையில் அடிப்படை மாற்றங்கள் எதுவும் தென்படவில்லை. கடந்த மார்ச் மாதம் இந்தியா ஜெனீவாவில், அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டுவந்த பிரேரணையை ஆதரித்தது. எனினும் சில பல ஊடல்கள், முகமுறிவுகள் போன்ற எல்லாவற்றிற்கும் அப்பால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான தேனிலவு முறியாது தொடர்கிறது.

இந்த இடத்தில் ஈழத்தமிழர்கள் ஒரு ராஜீய யதார்த்தத்தை விளங்கிகொள்வது நல்லது. இந்தியாவோ அமெரிக்காவோ சீனாவோ எந்தவொரு சக்திமிக்க நாடும் இலங்கை அரசாங்கத்தை தான் ஒரு மையமாக கருதுகின்றன.

 

தமிழர்களையல்ல. இலங்கை அரசாங்கத்தை கையாள்வதில் நெருக்கடிகள் ஏற்படும் போது தமிழர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தி அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வருவதே இலங்கைத் தீவின் நவீன வரலாற்றின்  பெரும் போக்காய் உள்ளது. இப்போக்கில் அவ்வப்போது சிறு விலகல்கள் ஏற்பட்டிருந்தாலும் கூட தமிழர்களை ஒரு மையமாக கருதி             கையாள்வது என்பது ஒரு பலமான போக்காகவே காணப்படவில்லை. இந்திய இலங்கை உடன்படிக்கை என்பது தமிழர்களை ஒரு மையமாகவே பொருட்படுத்தவில்லை. ஆனால், ரணில் - பிரபா உடன்படிக்கையானது தமிழ் மையத்தை ஏற்றுக்கொண்டது. ஆனால், அது மேற்கு நாடுகளின் அணுகுமுறைதான். இந்தியா இன்றளவும் கொழும்பைத் தான் ஒரு மையமாக கருதுகிறது.

 

எனவே, கொழும்பை வென்றெடுப்பதற்காக அவ்வப்போது தமிழர்கள் பிரச்சினை கையிலெடுக்கப்படுகிறது. மேலும் தமிழ் நாட்டில் மைய அரசுக்கு எதிரான உணர்வலைகள் அதிகரித்து வருவதையும் அவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.


வன்னியில் விடுதலைப்புலிகள் ஒரு மையத்தை கட்டியெழுப்பினார்கள். ஆனால், அது நந்திக் கடற்கரையில் தகர்க்கப்பட்டுவிட்டது. அது அதிகபட்சம் படைத்துறைப் பரிமாணங்களைக் கொண்ட ஒரு மையம்.  குறைந்தளவு சர்வதேச அங்கீகாரமே அதற்கு இருந்தது. அதற்கு பிரதான காரணம் இந்தியாதான். இந்தியாவிற்கும் விடுதலைப்புலிகளின் பாதி அரசிற்கும் இடையிலிருந்த சட்டப்பூட்டின் விளைவாக அப்பாதி அரசிற்கு குறைந்தளவு சர்வதேச அங்கீகாரமே கிடைத்தது. ஆனால், இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஒப்பீட்டளவில் விடுதலைப்புலிகளை விடவும் கூடுதலான சர்வதேச அங்கீகாரம் உண்டு. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஜனநாயக இருப்பே இதற்குக் காரணம்.

 

ஜனநாயக ரீதியாகத்தெரிந்தெடுக்கப்பட்ட அமைப்பு என்பதே அதன் பிரதான பலமாகும். ஆனால், அது தன் பலத்தையும் வரலாற்றுப் பாத்திரத்தையும் எந்தளவுக்கு விளங்கி வைத்திருக்கிறது? இலங்கைத்தீவில் தன்னை ஒரு தவிர்க்கப்படவியலாத மையமாகக் கட்டியெழுப்பும் விதத்தில் அதன் நிகழ்ச்சி நிரல் காணப்படுகிறதா?

 

இந்தியாவுக்கும் தனக்குமுள்ள சுமுகமான உறவை தங்குநிலை உறவு என்ற நிலையிலிருந்து நலன்சார் பரஸ்பர உறவு என்ற வளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்லவல்ல தீர்க்கதரிசனமும் உரிய நிகழ்ச்சி நிரலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உண்டா?


13ஆவது திருத்தச் சட்டத்தைக் கடந்துபோவதென்றால் இந்தியா தமிழர்களை ஒரு மையமாகக் கருதினால்தான் அது முடியும். ஈழத்தமிழர்களை இந்தியா ஒரு மையமாக அங்கீகரித்தாற்றான் உலக சமூகம் அவ்விதம் செய்யும். இந்தியாவை மீறி ஈழத்தமிழர்களை யாரும் தத்தெடுத்துவிட முடியாது. தென்னாசியாவின் புவிசார் அரசியல் யதார்த்தம் அது. இந்திய - இலங்கை உடன்படிக்கை கைச்சாத்தாகி ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களின் பின்னரே யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் துணைத்தூதரகம் திறக்கப்பட்டது.    கலை பண்பாட்டுத்தளங்களில்  அது ஓர் இடை ஊடாட்ட மையமாகத்திகழ்வதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. தமிழர்களின் அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல, படித்த, நடுத்தர வர்க்கத்தின் இதயத்தை அது மேலும் நெருங்கிச் செல்லவேண்டியிருக்கிறது.

 

முன்பொரு காலம் யாழ்ப்பாணத்தின் படித்த நடுத்தர வர்க்கத்தின் கல்வீடுகளிலும் சலூண்களிலும் சனசமூக நிலையங்களிலும் இந்திய தலைவர்களான காந்தி, நேரு நேதாஜி மற்றும் ஆன்மீக வாதிகளான சுவாமி விவேகானந்தர், ரமணர் போன்றோரின் படங்கள் கொழுவப்பட்டிருந்தன. அப்பொழுது  யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகம் இருக்கவில்லை. இப்பொழுது யாழ்ப்பாணத்தில் விசா வழங்கும் அந்தஸ்துடைய துணைத் தூதரகம் உண்டு. ஆனால், யாழ்ப்பாணத்தின் கல்வீடுகளில் காந்தி, நேரு போன்றோரின் படங்களைக் காண முடிவதில்லை.

 

- நிலாந்தன்-

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87999/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் புலிகள் இல்லாதது.. கமலஹாசனையும்.. தமிழகத்தை விட்டு விரட்டச் செய்கிறது. தமிழனுக்கு உதவ யாரும் இல்லை என்ற நிலை மீண்டும் உலகில் ஏற்பட்டுள்ளது..!

 

புலிகள்.. பாரம்பரியமாக இந்திய உபகண்டம் வாழ் தமிழர்களின் நலன் காப்பதில் ஆற்றிய பங்கை இன்று எந்த ஒரு துரும்பாலும் ஏற்படுத்த முடியவில்லை..! இதில............ கட்டுரைகளுக்கு குறைச்சலில்ல..! :(:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் தமிழினப்படுகொலையை ஊக்குவித்த.. ஊக்குவிக்கும்.. அதே இந்திய ஒருமைப்பாடு தான் இன்று கமலஹாசன் (இந்திய ஒருமைப்பாட்டை கடமையாகக் கருதியவர்களில் ஒருவர்) என்ற ஒரு கலைஞனின் கலைத்திறனையும் படுகொலை செய்துள்ளது. தமிழர்களின் பொது எதிரி இந்திய ஒருமைப்பாடு தான். இது எத்தனை தமிழர்களின் உயிரைக் குடிச்சிருக்கும்.. சுதந்திரமாக.. அவர்களை வாழ வைச்சதற்குப் பதில்.. அடிமைகளாக்கி விட்டிருக்கும்..! ஹிந்தியர்களின் இருப்புக்கு தமிழன் என்ன சாவு பொருளா..?????!

எய்தவன் எங்கோ இருக்க.. புலிகளை பற்றிப் பேசுவதே சிலருக்கு பொழுதாப் போச்சுது.

 

 

kamal-3355.jpg

 

 

விஸ்வரூபம் திரைப்படம் தடை குறித்து நடிகர் கமலஹாசன் சென்னையில் செய்தியாளர்களை இன்று (30.01.2013) காலை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

 

என்னுடைய ரசிகர்கள் தியேட்டர்களுக்கு போய் வெளியே அனுப்பப்பட்டுள்ளார்கள்
போலீஸ்காரர்களால். எனக்கு என்ன அவசரம் என்பதை நான் சொல்லுகிறேன்.
மற்றவர்களுக்கு என்ன அவசரமோ எனக்கு தெரியாது. என்னுடைய இந்தப் படத்தை
எடுப்பதற்காக பெரும் செலவு ஆகியிருக்கிறது. இதனை நம்பி எடுத்திருக்கிறேன்.

காரணம்,


இந்தப் படம் நன்றாக ஓடும் என்று அனுபவத்தினாலும், எனக்கு இருக்கும் ஓரளவு
தொழில் நுட்பத்தினாலும், இதை நடத்திக் காட்ட முடியும் என்று என்னுடைய
வியாபார அனுபவத்தில் எல்லாவற்றையும் முதலீடு செய்திருக்கிறேன்.

 

எனக்கு பெரிய சொத்துக்கள் கிடையாது என்பது ஊர் அறிந்த விஷயம். ஆனால் சென்னையில்
எனக்கு இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் இந்தப் படத்திற்காக எழுதி
கொடுக்கப்பட்டிருக்கிறது. ரிலீஸ் தேதி தள்ளிப் போக போக எனக்கு பணம்
கொடுத்தவர் இதை எழுதி அவர் பெயருக்கு மாற்றிக்கொண்டுவிட்டார். ஆக இந்த
தேதியை கடந்தோமேயானால் இந்த வீடு எனது அல்ல. இந்த வீட்டில் நான் நிறைய
அனுபவத்துள்ளேன். டான்ஸ் கத்துக்கிட்டேன், பல பிரஸ்மீட் வைத்துள்ளேன்.

 

ஒரு வேளை இன்றைய தீர்ப்பு எனக்கு சாதமாக வரவில்லை என்றால், இனிமேல் பிரஸ் மீட்
இங்க நடத்த முடியுமா என்று தெரியவில்லை. அதனால் சந்தோஷமாக ஒரு பிரஸ் மீட்
நடத்திவிடலாம் என்று உங்களை அனைவரையும் அழைத்தேன். என்னடா சிரித்துக்கொண்டே
சொல்கிறேன் என்று பார்த்தீர்கள் என்றால், எங்க வீடே அப்படித்தான். எங்க
குடும்பமே அப்படித்தான்.

 

பணம் பெரிதல்ல. நீதிபதி சொன்னார்கள், ஒரு தனி மனிதனுக்கு செலவானது முக்கியமா.
நாட்டின் ஒற்றுமை முக்கியமா என்று.
எனக்கு நாட்டின் ஒற்றுமைதான் முக்கியம்.
நான் சொத்தை இழக்க தயார். மாண்புமிகு நீதிதேவன் அவர்களுக்கு சொல்ல
விரும்புவது இதுதான். அவர் விருப்பப்பட்டதுபோல் நாடு ஒற்றுமையாக
இருக்கட்டும். அதற்காக நான் விழுந்தாலும் பரவாயில்லை. ஆனால் விழுந்தால்
விதையாக விழுவேன். தனி மனிதன் தானே வீழ்த்தி பார்க்கலாம் என்று தமிழகம்
நினைக்கக் கூடாது. விழுந்தால் விதையாக விழுவேன். மரமாக வளர்வேன். தனி
மரம் தானே தோப்பாக முடியாது என்று நினைத்துவிடாதீர்கள். பல சுதந்திர பறவைகள்
வந்து அமரும் மரமாக நான் இருப்பேன். மீண்டும் விதைகள் விழும். சோலையாகும்.
காடாகும். ஆனால் விதை நான் போட்டது. எனது வசனமே எனக்கு கைவருவது சந்தோஷமாக
இருக்கிறது.  (
இந்த வரிகள் இந்திய ஒருமைப்பாட்டுக்காக பலியிடப்பட்ட புலிகளுக்கும்
ஈழத்தமிழ் மக்களுக்கும் பொருந்தும்..!)

 

எனக்கு அரசியல் கிடையாது. மதம் கிடையாது என்பது எல்லோருக்கும் தெரியும். எல்லா
கட்சிப் பிரமுகர்களும், இந்த வீட்டிற்குகூட பல முதல் அமைச்சர்கள் வந்து
சென்றிருக்கிறார்கள். என் தகப்பனாரின் நண்பர்களாக. நானும் அப்படித்தான்
எல்லோருடனும் நழுவாமல், யார் மனதும் புன்படாமல், மனித நேயம் பாதகப்படாமல்
எனக்கு மனதில் பட்ட நியாயங்களை தைரியமாக சொல்லக்கூடியவன் நான். எனக்கு மதம்
கிடையாது. மனிதம் தான் என்பது உங்களுக்கு பலருக்கு தெரியும்.

 

இப்போது நான் இங்கே வந்திருப்பது நிலை விளக்கம். தன்னிலை விளக்கம் அல்ல. இப்ப என்ன
பண்ண போறீங்க. எனக்கு நிறைய வீடு இருக்கு சாப்பிடறதுக்கு. தங்கத்தானே
இடமில்லை. என்னை குடியமர்த்துவது எப்படி என்று தமிழ் ரசிகர்களுக்கு
தெரியும்.

 

என்னுடைய மூத்த சகோதரர் உடல்நலமில்லாமல் இருக்கிறார். ஒன்னும் புரியலையா உலக நாயகன்
என பெயர் வைச்சதே, ஊரை விட்டு வெளியே போ, உள்ளூரில் என்ன பண்ணிக்கிட்டு
இருக்கே என்று சொல்கிறார்கள் என்றார்.

 

எனக்கு மதசார்ப்பற்ற ஒரு இடம் வேண்டும். அது தமிழகமாக இல்லாமல் போய்விட்டால்,
மதசார்ப்பற்ற மாநிலம் இந்தியாவில் உள்ளதா என்று தேடி குடியமர்வேன்.
இருந்ததெல்லாம் போய்விட்டது. இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்னும் பொழுது,
குடியமர நான் உகந்ததாக கருதும் மாநிலத்தில் தங்கலாம் என்று இருக்கிறேன்.
காஷ்மீர் முதல் கேரளம் வரை ஒதுக்கி வைத்திருக்கிறேன் நீங்கள்
பார்ப்பீர்கள். எனக்கு இடம் கிடைக்கவில்லை என்றால்,  மதசார்ப்பற்ற
ஒரு நாடு தேடி போவேன். திரைகடல் ஓடி திரைவியம் தேடு. ஆனால், யாருக்கும்
கடன் வைக்க மாட்டேன். என் பழக்கம் அதுவல்ல. ஜூரோ டேக்ஸ் அரியர்ஸ். அந்த
தைரியத்தில்தான் நான் இங்கே உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன்.

 

இன்று மறுபடியும் சந்திக்க வேண்டியிருக்கும். அதுவரைக்கும் வீடு இருக்கும் என
நினைக்கிறேன். அதை அப்புறம் பார்ப்போம் (சிரித்துக்கொண்டே).

 

எனக்கு மதம் இல்லை. குலம் இல்லை. பணமும் இல்லை என்றால், பணம் எப்ப வேண்டுமானாலும்
சம்பாதித்துக்கொள்ளலாம். ஆனால் என்னுடைய திறமை என்னுடன் இருக்கும். உங்கள்
எல்லோருக்கும் இந்த செய்தியை சொல்ல வேண்டியிருப்பது என்னுடைய கடமையாக
இருக்கிறது.

 

இது மதசார்ப்பற்ற ஜனநாயக நாடு என்று நான் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறேன்.
நீதி தர மறுப்பதும், தாமதிப்பதும் ஒன்றுதான் என்கிறது ஒரு ஆங்கில பழமொழி.
எனக்கு கிடைக்க வேண்டிய நீதி தாமதப்பட்டுவிட்டதாக நான் நினைக்கிறேன்.
அது
என் தனிப்பட்ட கருத்து. இருப்பினும் எனக்கு நீதியின்பால் நம்பிக்கை உள்ளது.
பொருத்திருந்து பார்ப்போம். இதை தவிர எனக்கு சொல்லுவதற்கு வேறொன்றும்
இல்லை.

 

இவ்வாறு கூறினார்.

 

தகவல் - நக்கீரன்.கொம்

================================

 

பாகிஸ்தானை.. பங்களாதேசை பிரிக்கேக்க காணப்படாத இந்திய ஒருமைப்பாட்டை
தமிழீழத்திலும்.. தமிழகத்திலும் திணிக்க விரும்புவதன் விளைவே கமல்
அகதியாகவும் காரணம்.

 

 

இதற்கு முஸ்லீம் மதத் தீவிரவாதத்தை ஹிந்தியம் தனக்குச் சார்ப்பாக
பயன்படுத்திக் கொள்கிறது..! ஹிந்தியம்... இன்று தமிழகத்தில் தூண்டிவிட்டு..
கமலை அகதியாக்கி மகிழும்.. இதே முஸ்லீம் மதத் தீவிரவாதம் ஒரு நாள் அதன்
உயிர் குடிக்கும் போது.. வலியில் துடிக்கும். இந்திய ஒருமைப்பாடு
சின்னாபின்னமாகி.. சுக்கு நூறாகி இருக்கும்..!


தமிழகத் தமிழர்கள் எனியாவது சிந்திக்க வேண்டும்.. ஹிந்தியன்..
ஹிந்தியா.. ஹிந்திய ஒருமைப்பாடு என்பவை.. அவைக்கு அவசியமான்னு..! அதனால்
அவர்கள் அடையும் நன்மைகள் என்ன என்று...???! தனித் தமிழக சுதந்திர தேசம்
குறித்து தமிழக மக்கள் சிந்திக்கவும் செயலாற்றவும் வேண்டும். ஐக்கிய
இராச்சியத்தில் (United Kingdom) உள்ள ஸ்காட்லண்ட் தனிநாடாக ஒரு
வாக்கெடுப்போடு பிரிந்து சுதந்திர நாடாகப் போக முடியும் என்ற ஜனநாயகம்
உலகில் இருக்கென்றால்.. ஏன் இந்தியா என்ற யூனியனில் இருந்து தமிழகம்
பிரிந்து செல்ல முடியாது. இலங்கை என்ற தீவில் தமிழீழம் பிரிந்து சொல்ல
முடியாது..???!!! அப்படிப் பிரிந்து செல்வதன் மூலமே தமிழர்களின் உரிமைகளை
ஹிந்திய மேலாதிக்கத்திடம் இருந்தும்.. முஸ்லீம் மதத் தீவிரவாதம்..சிங்களப்
பேரினவாதத்திடம் இருந்தும்..  காக்க முடியும். இது நடந்தால் மட்டுமே..
உருப்படியாக தமிழர்களின் கலையை.. பண்பாட்டை.. கலாசாரத்தை.. விழுமியங்களை..
திறமைகளையும் காக்க வளர்க்க முடியும்.
:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியதேசம் தமிழர் விரோததேசம் என்பதை, இன்னுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. நேற்றிலிருந்து ஈழத்தமிழன் அகதி, இன்றிலிருந்து தமிழனின் ஒரு அடையாளமாக விளங்கும் கமல்ஹாசன் எனும் கலைஞன் அகதி.

திரு கமல்ஹாசன் அவர்களே உலகில் கருத்துச் சுதந்திரத்தை முழுமையாகப் பேணிப்பாதுகாக்கும் நாடுகளில் முதன்மைவகிப்பது பின்லாந்து நாடு என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே வாருங்கள் அகதியாகவில்லை உலகக் கலைஞனாக இந்நாடு உங்களை செங்கம்பளம் விரித்து வரவேற்கும்.

Link to comment
Share on other sites

 முன்பொரு காலம் யாழ்ப்பாணத்தின் படித்த நடுத்தர வர்க்கத்தின் கல்வீடுகளிலும் சலூண்களிலும் சனசமூக நிலையங்களிலும் இந்திய தலைவர்களான காந்தி, நேரு நேதாஜி மற்றும் ஆன்மீக வாதிகளான சுவாமி விவேகானந்தர், ரமணர் போன்றோரின் படங்கள் கொழுவப்பட்டிருந்தன. அப்பொழுது  யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகம் இருக்கவில்லை. இப்பொழுது யாழ்ப்பாணத்தில் விசா வழங்கும் அந்தஸ்துடைய துணைத் தூதரகம் உண்டு. ஆனால், யாழ்ப்பாணத்தின் கல்வீடுகளில் காந்தி, நேரு போன்றோரின் படங்களைக் காண முடிவதில்லை.

 

 

மகாத்மா காந்தியின் 63 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

 

14(200).jpg



இந்தியாவின் சுதந்திர தியாகி  மகாத்மா காந்தியின் 63 ஆவது நினைவு தினம் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

 

வட இலங்கை காந்திசேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.


இதன்போது, யாழ்.வைத்தியசாலை முன்பாக உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு வட இலங்கை காந்திசேவா சங்கத்தின் உறுப்பினர்கள் மலர் மாலை செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/77--image/58001--63-.html

Link to comment
Share on other sites

அமரிக்காவின் இலங்கை அணுகுமுறையில் இந்தியாவை மீறி மாற்றங்கள் நடந்தால் ... இந்தியாவும் மாறியே ஆகவேண்டும். இந்தியாவால் அமெரிக்காவை எதிர்க்க முடியாது.

 

கடந்த ஐ.நா. மனித உரிமை தொடரில் இருந்து இந்த ஒருவருட காலத்தில் இந்தியாவின் அணுகுமுறை அதன் வெளிவிவகார கொள்கை தோற்று வந்துள்ளமை தெளிவாக கோடு போட்டு காட்டப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் இந்தியாவின் நலன்களுக்கு உதவி செய்யக்கூடிய மையத்தில் இல்லை என்பது தற்போது உண்மைதான். எனினும் இலங்கைத் தீவில் இனப்பிரச்சினை தொடரும்வரை தமிழர்கள் இந்திய நலன்களில் செல்வாக்குச் செலுத்தும் பாத்திரத்தை வகிப்பார்கள். ஆனால் அதை தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்ளுவதற்கு எப்படிப் பாவிக்கப்போகின்றார்கள் என்பதற்கு விடை இருப்பதாகத் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

மிக யதார்த்தமான உண்மை .

 

 

புலிகளை தவிர புலிகள் பிழை என்று தொடர்ந்து விமர்சித்தவர்கள் தொடக்கம் ஆயுதபோராட்டம் சரிவராது என்று சிங்கள அரசுடன் இணைந்த அனைவரும் சிறிலங்காவில் தான் உள்ளார்கள்.இவர்களால் தமிழர்களுக்கு என்றாவது தீர்வு வாங்கி தர முடியுமா??(விமர்சிக்கின்ற அளவுக்கு செயலில் செய்யவும் தெரிய வேண்டும்). இதுவும் யதார்த்தமான உண்மை தான்.
Link to comment
Share on other sites

இந்த கட்டுரைக்கு நான் இட்ட பின்னூட்டத்தை இணைக்கின்றேன் .

 

நல்லதொரு கட்டுரை .எனக்கு டெல்கியில் சிலகாலங்கள் அரசியல் வேலை செய்ய
சந்தர்ப்பம் கிடைத்தது.இந்திய அரசியல்வாதிகள் (தமிழர்கள்
உப்பட),பத்திரிக்கை நிருபர்கள் ,வெளிநாட்டு தூதுவர்கள் என்று பலருடன்
உரையாடிஇருக்கின்றேன் .
இந்தியாவுடன் பகைக்காமல் உங்களது போராட்டத்தை
உங்கள் நிலத்திற்கு நகர்த்துங்கள் என்பதுதான் பலரது வேண்டுகோளாக இருந்தது .
இந்தியா தனது கட்டுப்பாட்டிற்குள் இயக்கங்களை வைத்திருந்து தனது தேவைகளை
பூர்த்தி செய்ய முனையும் பின்னர் ஒரு அரசியல் தீர்வை(மாநில சுயாட்சி)
திணித்து மிதவாதிகளின் கையில் தான் அதிகாரத்தை கொடுக்கும் .
இந்தியா
தனக்குள் வைத்திருக்கும் பிரச்சனைகளுடன் ஒப்பிடும் போது எமது பிரச்சனை
அவர்களுக்கு ஒரு கடுகளவு .டெல்கி தென்னிந்திய அரசியல்வாதிகளை கணக்கில்
எடுப்பதே இல்லை குறிப்பாக காங்கிரஸ்காரர்கள் வெள்ளையும் குல்லாயுமாக
வெத்திலை குதப்பியபடி ராமராஜ்யம் வைத்திருக்கின்றார்கள் .இவர்களையெல்லாம்
எமது பிரச்சனை பக்கம் எட்டி பார்க்க சொல்வது எக்காலமும் முடியாத ஒரு
காரியம் அதுவும் ராஜீவின் மறைவிற்கு பின்னர் எதுவும் சாத்தியமற்றதாக
ஆகிவிட்டது .
தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு முதலமைச்சர் மிக ஆணித்தரமாக
இலங்கை தமிழருக்கு ஒரு தீர்வு வைக்க வேண்டும் என்று டெல்கியுடன்
மல்லுக்கட்டினால் ஒழிய டெல்கி எம்மை திரும்பியே பார்க்காது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஈழத் தமிழர் மேல் அக்கறை கொண்டதுபோலச் செயற்பட்டது திமிர் பிடித்த சிங்கள அரசை வழிக்குக் கொண்டுவரவே என்று பலர் சொல்லியாயிற்று. இங்கும் சிலர் குறிப்பிட்டதுபோல, இந்தியாவில் எமது பிரச்சினை ஓரளவிற்காவது பேசப்படுகிறது என்றால் அது தமிழ்நாட்டில் மாட்டும்தான். அதற்கு வெளியே சிறிலங்கா என்றால் அதன் கிரிக்கெட் மட்டுமே தெரிகிறது.அத்துடன் ரஜீவைக் கொன்றவர்கள் என்றும் நினைவு வைத்திருக்கிறார்கள். ஆகவே அவ்வாறானவர்களிடமிருந்து நாம் எமக்கு நியாயம் தாருங்கள் என்று கேட்பது சாத்தியமில்லை. ஓரிரு வருடங்களுக்கு முன்னர் இங்கே அவுஸ்த்திரேலியாவில் நடைபெற்ற ஈழத்தமிழர் தொடர்பான கருத்தரங்கொன்றில், ராமன் மற்றும் சூரிய நாராயணன் போன்ற முன்னால் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களிடம் தமிழர் சார்பாகக் கலந்துகொண்ட சிலர் இந்தியாவின் கடும் போக்கிற்கான காரணம் பற்றி வினவியிருந்தனர். பலரும் எதிர்பார்த்த ராஜீவ் கொலை எனூம் காரணத்திற்கு மாறாக 1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை புலிகள் எதிர்த்து இந்தியப் படைகளுடன் போரிட்டதும், பின்னர் பிரேமதாசாவுடன் சேர்ந்து இந்தியாவை 1989 இல் வெளியேற்றியதும் தான் காரணம் என்று பதில் வந்தது.ஆனால் புலிகளின் அழிவிற்குப் பின்னரும் இந்தியாவின் கடும்போக்கிற்கான காரணத்தை அவர்களால் கூறமுடியவில்லை. 1987 இற்குப் பின்னர் புலிகள் அதி தீவிர வளர்ச்சி பெற்றிருந்தாலும் கூட, அக்காலப்பகுதியில் புலிகள் நடந்துகொண்ட விதமே 2009 இல் அவர்களின் அழிவிற்குக் காரணம் என்று நான் நினைக்கிறேன். தனது முகத்தில் கரிபூசி உலகின் 5 ஆம் வல்லரசு என்கிற நாமத்தை களங்கப்படுத்திய புலிகளை அழிக்கக் இந்தியா தருணம் பார்த்திருந்தது. 2009 இல் தனக்குச் சாதகாமான கடும்போக்குச் சிங்கள அரசை புலிகளே அமைக்கக் காரணமாகியது இந்தியாவின் வேலையைச் சுலபமாக்கியது. மீதி நடந்தது சரித்திரம். தமிழர் நலனில் அக்கறையுடன் போராடிய புலிகள் தம்மைச் சுற்றிப் பின்னப்பட்ட இந்தியாவின் வலையை உணரவில்லை. இந்தியாவுக்கும் தமக்குமிடையிலான பகையை காலம் ஆற்றும் என்று நம்பியிருக்கிறார்கள். இதையேதான் முள்ளிவாய்க்கால் இறுதிநாட்களில் உள்ளே அகப்பட்டிருந்த புலிகளின் தலைவர்கள் சிலரும் நம்பியிருந்தனர். அமரர் புலித்தேவன் அவர்கள் தான் இறகும் சில கணங்களுக்கு முன்னரும் கூட பிராண்சிஸ் ஹரிசன் மற்றும் தனது நெருங்கிய உறவினருடன் தொடர்பு கொண்டபோது, " இந்தியா எம்மைப் பாதுகாக்கும் என்று இறுதிவரை நம்பியிருந்தோம், ஆனால் அது எங்களை ஏமாற்றி விட்டது" என்று கூறியிருந்தார். இது புலிகளை குறைகூறும் நோக்கத்துடன் எழுதப்படவில்லை. நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்தியா எமது வாழ்வினுள் நுழைந்துவிட்டது. அதன் நலன்களினூடே எமது நலன்களையும் நாம் நகர்த்துவதற்கு சந்தர்ப்பம் ஒன்று எமக்கு முன்னர் கிடைத்திருந்தது. ஆனால் நாம் அதை நழுவவிட்டோம். அதன் விளைவு 2 லட்சம் மக்களினது உயிர்களும், எமது நம்பிக்கையான விடுதலைப் போராட்டமும் இனிமேல் எழ முடியாதவாறு அழிக்கப்பட்டது. இன்று எமது தாயகம் முற்றான சிங்கள ஆக்கிரமிப்பொன்றினுள் அலைக்கழிக்கப்படுகிறது. 1987 இல் இருந்ததைக் காட்டிலும் மிகவும் ஆபத்தான சூழ்நிலைக்குள் எமதினமும் தேசமும் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்தியா தனது பழைய பழிவாங்கல் உணர்வுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஈழத்தமிழருடம் புதிய அத்தியாயம் ஒன்றைத் தொடங்கினால் ஒழிய எமக்கு விமோசனமில்லை. ஏனென்றால் இந்தியாவைத் தாண்டி எந்த வல்லரசும் அங்கே போகப்போவதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.