Jump to content

அடுத்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி? ஒரு பார்வை


Recommended Posts

அடுத்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி? ஒரு பார்வை

 

ஒபாமாவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தை வரும் அதை மாதம் பதவி  ஏற்பார். அப்பொழுது தனது அமைச்சரவையில் பல மாற்றங்களை விரும்பியும் விரும்பாமலும் செய்தே ஆகவேண்டும்.

 

தற்போதைய இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டன் நான்கு வருடங்கள் இந்த பதவியை வகித்தவர். இப்பொழுது ஒபாமாவின் பின்னராக தன்னை சனாதிபதி தேர்தலில் நிறுத்த தயாராகி அதற்கு பலம்சேர்க்க இந்த தடவை தான் இந்த பதவியை வகிக்கமாட்டேன் என முற்கூட்டியே அறிவித்துள்ளார்.

 

ricekerry.jpg

 

அமெரிக்காவின் தற்போதைய ஐ.நா. தூதுவரான சூசன் ரைசும் மாசசூசட்ஸ் மாநில ஜனநாயக கட்சி செனட்டருமான ஜோன் கெரியும் கிலரியை  மாற்றீடு செய்யக்கூடியவர்களாக கணிக்கப்பட்டது. இதில் சூசன் ரைஸ் தென் சூடான் ஐ.நா. வாக்கெடுப்பிற்கு உதவியர். பல நாடுகளிலும், அரபு வசந்தம் உட்பட, மக்கள் எழுச்சிற்கு அமெரிக்க ஆதரவை தந்தவர். ஆனால், இலிபியாவில் அண்மையில் அமெரிக்க தூதுவர் கொல்லப்பட்ட விடயத்தில் இவரின் கருத்திற்கு பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பின. இதனால் அவர் தான் இந்த பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று ஒபாமாவிற்கு கடிதம் எழுதி விலகியுள்ளார்.

 

எனவே தற்போது ஜோன் கெரி அடுத்த அமெரிக்க இராஜாங்க செயலாளராக வரும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. இவர் முன்னைய அமெரிக்க சனாதிபதி வேட்பாளர் ஆவார். அத்துடன் அமெரிக்க ஆட்சியில் உள்ள பலவேறு குழு அமைப்புக்களில் ஒன்றான செனட்டின் வெளிவிகார அலுவல்களின் குழுவின் பணிப்பாளராக உள்ளார்.  இந்தப்பதவி காரணமாக இவருக்கு எமது தமிழீழ போரும் அங்கு நடக்கும் அரசியலும் பரிச்சயமானவை.

 

220px-John_F._Kerry.jpg

 

 

24 ஆம் திகதி மார்ச் மாதம் 2009 ஆம் ஆண்டு கேரி கூறிய கருத்து:

  • இலங்கையின் வடபகுதியில் யுத்தம் காரணமாக அல்லலுறும் அப்பாவிச் சிவிலியன்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுnமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், அமெரிக்காவின் முக்கிய செனட்டர்களில் ஒருவரான ஜோன் கெரி கோரிக்கை விடுத்துள்ளார்.
  • பாதுகாப்பு வலயங்களில் சிவிலியன்கள் தாக்குதல்களுக்கு உள்ளாவது மற்றும் கொல்லப்படுவது பெரும் கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
  • சிவிலியன் பாதுகாப்பு குறித்த அரசாங்கத்தின் கரிசனை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • அரசாங்கப் படையினர் சிவிலியன் நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல் மேற்கொள்வதாக வெளியாகும் செய்திகள் பெரும் வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • அரசாங்கம் யுத்த பிரதேசங்களுக்கு ஊடகவியலாளர்களையும், தொண்டு நிறுவன ஊழியர்களையும் அனுமதிக்காமை ஏற்றுக்கொள்ள முடியாதென ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/28828/language/ta-IN/-----.aspx

 

 

முள்ளிவாய்க்கால் முடிந்த ஆறாவது மாதம் ஒரு அறிக்கை வெளிவந்தது. அமெரிக்க செனேற் சபை வெளிவிவகார குழுத் தலைவர் ஜோன் கெரி பெயரில் (John Kerry Senate Foreign Relations Committee Report) 2009 டிசம்பர் 07ம் நாள் வெளிவந்தது.

 

 

“ இலங்கையை இழக்க அமெரிக்காவுக்குக் கட்டுப்படியாகாது” என்ற செய்தி அதில் கூறப்படுகிறது. ஈழத் தமிழர்களுக்கு நல்லிணக்கத்தையும் மேம்பாட்டையும் (Reconciliation and Development) வழங்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

 

http://www.foreign.senate.gov/imo/media/doc/SRI.pdf

 

அடுத்த நாலு வருடங்களில் ஆசியா ஒபாமாவின் வெளிவிவகார கொள்கையில் மையப்பொருளாக இருக்ககூடும். இதை அவர் பல முறை கூறியுள்ளார். அவ்வாறு அமைகின்றபொழுது இலங்கையும் அவர்கள் கண்ணில் படும்.சிங்கள ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் திட்டங்களுக்கு அமைவாக செயல்பட்டால் தமிழர்கள் சார்பில் அமெரிக்கா எதையும் கையில் எடுக்காது என நம்பலாம். ஆனால் சீனாவின் செல்வாக்கு கூடியுள்ள நிலையில் சிங்கள ஆட்சியாளர்கள் அமெரிக்காவை சமாளித்து போகவே பார்ப்பார்கள். இங்கேதான் தமிழர் தரப்பு தமது இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னேடுக்கவேண்டும். 

 

  1. சிங்கள தேசம் அமெரிக்க ஆதரவு சக்தியாக இருக்கப்போவதில்லை என்பதை நம்ப வைக்கவேண்டும்
  2. தமிழர் தாயகம் ஆசியாவில் அமெரிக்க - மேற்குலக நட்புதேசம் என்பதை ஏற்கவைக்க வேண்டும்

 

இந்த இரண்டையும் கூட்டமைப்பில் இருந்து நாடுகடந்த அரசு தொடக்கம் அமெரிக்க வாழ் தமிழ் அமைப்புக்கள் செய்தால் நிச்சயம் எமக்கு சாதகமான ஒரு நிலையை அமெரிக்கா எடுக்கும்.

Link to comment
Share on other sites

ஒய்வு பெறும் ஹிலாரி

 

ஒபாமா வெற்றி பெற்று இரண்டாம் தடவையாக ஆட்சியை பிடித்தாலும், வெளியுறவுத் துறை செயலாளராக (அமைச்சர்) தொடர்வதில் தமக்கு விருப்பம் இல்லை என்று ஹிலாரி உறுதியாக தெரிவித்து விட்டார்.

 

இதுவரை பணியாற்றிய வெளியுறவுத் துறை செயலாளர்களில், ஹிலாரி அதிகப்படியான தூரம் பயணம் செய்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவரது செயல்பாடுகள் பெரும்பான்மையானவர்களால் வரவேற்கப்பட்டுள்ளன.
பதவியிலிருந்து ஒய்வு பெற்ற பின்னர் குடும்பத்தினருடன் செலவிட விரும்புவதாக சொன்னாலும், 2016 தேர்தலில் போட்டியிடுவதற்காகத்தான் பதவி விலகுகிறார் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவில் அமைச்சர் பதவியில் இருப்பவர்கள் தேர்தல் பிரச்சாரம் கூட செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

ஒதுங்கிய சூசன் ரைஸ்
ஒபாமாவின் முந்தைய அமைச்சரவையில் யு.என் அமைப்பிற்க்கான அமெரிக்க செயலாளராக பதவி வகித்த சூசன் ரைஸ் தான், ஹிலாரயின் இட்த்தை நிரப்பப் போகிறார் என்ற செய்திகள் பலமாக வந்து கொண்டிருந்த்து. ஒபாமாவும் அவருக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்திருந்தார். பெங்காஸி சம்பவத்தில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கொடுத்துவிட்டார் ரைஸ் என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தன.


அமெரிக்காவில் அமைச்சர் பதவி ஏற்பவர்கள் பாராளுமன்ற குழுவினர் முன்பு இன்டெர்வியூ போல் நேர்முக அழைப்பில் பங்கேற்று, உறுப்பினர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். செனட், காங்கிரஸ் உறுப்பினர்கள் நினைத்தால் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் செய்ய முடியும். சூசன் ரைஸ் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுக்கத் தொடங்கியதால், அவர் தனது விருப்பத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
 

 

முன்னாள் அதிபர் வேட்பாளர் ஜான் கெர்ரி
சூசன் ரைஸ் போட்டியில் இல்லாத நிலையில், 2004 தேர்தலில் ஜார்ஜ் புஷ்ஷை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்ற, மச்சூசெட்ஸ் செனட்டர் ஜான் கெர்ரி, ஒபாமாவின் அடுத்த தேர்வு எனத் தெரிகிறது. அவர் தற்போது செனட் வெளியுறவுக் குழுவின் தலைவராக இருந்து பல்வேறு நாடுகளுக்கிடையே உறுவுகளை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

 

அதனால், அடுத்த வெளியுறவுத்துறைச் செயலாளருக்கு பொருத்தமானவர் என்று குடியரசுக் கட்சியினரும் தெரிவித்துள்ளனர். எதிர்க் கட்சியைச் சார்ந்த ஜான் மெக்கய்ன் ‘ அடுத்த செயலாளர் என்றே கெர்ரியை ஜாலியாக கிண்டல் செய்து அழைத்து விட்டார்.

 

 


சிஷ்யனுடன் பணியாற்றப் போகும் குரு
 

இலனாய் மாநில செனட்டாரக இருந்த ஒபாமா 2004 தேர்தலில் முதன் முறையாக அமெரிக்க செனட்டர் பதவிக்கு போட்டியிட்டார். அப்போது நடந்த ஜனநாயகக் கட்சி தேர்தலில் அதிபர் பதவிக்கு ஜான் கெர்ரி தேர்வு செய்யப் பட்டார். மாநாட்டில் சிறப்புரையாற்ற யாரை அழைக்கலாம் என்று கெர்ரியிடம் கேட்ட போது அவர் ஒபாமாவை அழைத்தார். தேசிய அளவில் ஒபாமாவுக்கு கிடைத்த முதல் வாய்ப்பு அது தான். ஒபாமாவின் சிறப்புரை பெரும் வரவேற்ப்பை பெற்று தேசிய அளவில் கவனிக்கப்பட்டார்.
 

அந்த வகையில் ஒபாமாவுக்கு தேசிய வாய்ப்பு கொடுத்த ‘குரு’ ஜான் கெர்ரி தான். 2008 தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமா, ஜான் கெர்ரிக்கு மிகுந்த மரியாதையுடன் பயன்படுத்திக் கொண்டார். 2012 தேர்தலில் ஜான் கெர்ரி, ஒபாமாவுக்கு பெரும் உதவியாக இருந்து தேர்தல் சவால்களை முறியடிக்க உறுதுணையாக இருந்தார். அதிபர் விவாதத்திற்கு தயார் செய்ய, கெர்ரி எதிர்கட்சி வேட்பாளர் ‘மிட் ராம்னி’ போல் பயிற்சி விவாதத்தில் பங்கு எடுத்துக் கொண்டார்.
 

அன்று மாநாட்டு சிறப்பு சொற்பொழிவாளராக ஒபாமாவை தேர்வு செய்தார் கெர்ரி. இன்று வெளியுறவு அமைச்சராக கெர்ரியை தேர்வு செய்வாரா ஒபாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

http://www.alaikal.com/news/?p=118924

Link to comment
Share on other sites

Obama to nominate John Kerry for Secretary of State, network sources say

 

Senator John Kerry will be U.S. President Barack Obama’s nomination for Secretary of State, CNN and ABC news are reporting based on tips from unnamed sources. The White House has not confirmed the reports.

 

The White House issued a statement late in the week to say that Susan Rice, the U.S. ambassador to the UN, had taken herself out of consideration for the role of Secretary of State.

 

Rice had come under scrutiny recently from everything from her inaccurate explanations of the attacks in Benghazi; to her extensive investments in the oil sector, including a large stake in TransCanada Pipelines.

 

Senators from both parties have expressed support for Kerry, who chairs the Senate Foreign Relations Committee.

But, as Luiza Ch. Savage reported earlier this week, choosing Kerry presents a dilemma for Obama: should he vacate his Senate seat, there is a good chance it would be won by former Massachusetts senator Scott Brown, who narrowly lost a bid for the state’s other senate seat this November. With the Democrats’ narrow lead in the Senate, every seat makes a difference.

 

http://www2.macleans.ca/2012/12/15/obama-to-nominate-john-kerry-for-secretary-of-state-network-sources-say/

Link to comment
Share on other sites

  • 1 month later...

ஜான் கெர்ரி நியமனத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

 

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக ஜான் கெர்ரி நியமனம் செய்யப்பட்டதற்கு அந்நாட்டு நாடாளுமன்ற செனட் (மேலவை) ஒப்புதல் அளித்துள்ளது.

 

இது தொடர்பாக செனட்டில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஜான் கெர்ரிக்கு ஆதரவாக 94 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் பதிவாகின.

 

இப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள ஹிலாரி கிளிண்டனின் பதவிக்காலம் வரும் வெள்ளிக்கிழையுடன் முடிவடைய உள்ளது.இதைத் தொடர்ந்து ஜான் கெர்ரி வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.

 

அமெரிக்க அதிபராக 2-ம் முறை ஒபாமா தேர்வு செய்யப்பட்ட பின், அவர் அமைச்சராக தேர்வு செய்த முதல் நபர் ஜான் கெர்ரி. ஜான் கெர்ரியின் தேர்வுக்கு பல்வேறு செனட் உறுப்பினர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். வியத்நாம் போரில் சிறப்பாக பணியாற்றிய ஜான்கெர்ரி, அமெரிக்க செனட் வெளியுறவு கமிட்டியின் தலைவராக உள்ளார்.


"ஜனநாயகம், மனித உரிமை மற்றும் உலக அமைதி ஆகியவற்றில் கெர்ரி பின்பற்றும் சிறப்பான கொள்கைகள், வெளியுறவு அமைச்சகத்திலும் தொடரும். இராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

 

மேலும் ஆப்கன் மற்றும் சூடானில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலும் கெர்ரி வழிகாட்டியுள்ளார்' என்று செனட் உறுப்பினர் பென் கார்டின் தெரிவித்தார்.

 

http://dinamani.com/world/article1443097.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.