Jump to content

ஈழக்கவிஞன் புதுவை இரத்தினதுரைக்கு இன்று வயது 65...!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஈழக்கவிஞன் புதுவை இரத்தினதுரைக்கு இன்று வயது 65...!
 
மரணித்துப்போவது மனிதர்கள் மட்டுமே...ஒப்பற்ற கவிஞ்ஞனே உன் கவிதைகளில் எல்லைகளற்று விரிந்து பரந்திருக்கும் பிரபஞ்சத்தில் தமிழின் முடிவு நாள்வரைக்கும் உன் வரிகளில் வாழ்ந்துகொண்டேயிருப்பாய்...காலம் எப்படி உன்னைக்கைவிடும்?..ஒரு காலத்தின் பிரதியாய் உன் எழுத்துக்கள் இருக்கையில்....
 
வேரில் தமிழ் பாய்ந்த வீரமரம் சாயாது....
 
 
1474475_10151871501464891_1955141806_n.j
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து மண் ஈன்றெடுத்த கவிஞனே,

உன் வாயிலிருந்து,

'தோல்வி' என்ற வார்த்தை,

தவறிக் கூட விழுந்ததில்லை!

 

வெறும் வாடைக்காற்றோடும்,

வயல் நிறைந்து கொட்டும்,

மொட்டைக்கறுப்பன் சோற்றோடும்,

திரளி மீன் குழம்போடும்,

திருப்தி கண்டவன் நீ!

 

கரிக்குருவி கத்தும் கீச்சல்,

கூடச் சங்கீதமானது உனக்கு! 

யாழ் தேவி எழுப்பிய சத்தத்திலும்,

வாழ்வின் துடிப்பைக் கண்டவன் நீ!

 

சிங்களக் கிராமங்களின்,

செழிப்பைக் கூட,

சங்கேனம் இல்லாமல் வர்ணிக்க,

உன்னால் தான் முடிந்தது!

 

நீ நடந்து போன,

காலடிப்பாதை இன்னும் கூட,

ஈரம் காயாமல் உள்ளதே!

 

களம் பல  கண்ட கவிஞனே,

இளமை குன்றாது என்றும் நீ வாழ,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழக்கவிஞன் புதுவை இரத்தினதுரைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

பிறந்ததின நல் வாழ்த்துக்கள் தோழா. 1965ல் சாதி எதிர்ப்பு மேடைகளை பகிர்ந்துகொண்டதில் ஆரம்பித்து பின்னர் விடுதலை அரங்கில் தளைத்த எங்கள் நட்பு காலத்தால் அழியாது. உங்கள் புகழை எப்பவும் பாடுகிற வானம்பாடி நான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழக்கவிஞன் புதுவை இரத்தினதுரைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழக்கவிஞன் புதுவை இரத்தினதுரைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !


நீ  வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பெருமை எனக்கு..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.