Jump to content

அப்பா - உலகின் அப்பாக்களுக்குத் தமிழே தாய்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக அப்பாக்களுக்குத் தமிழே தாய்

=================================

‘அப்பா’ என்ற தமிழ்ச்சொல் இன்று உலகித்தின் பல மொழிகளில் நேரடியாகவும் – மருவியும் – திரிந்தும் – சிதைந்தும் வழங்கிவருகின்றது என்ற செய்தி வியப்பிற்குரிய ஒன்று. தமிழ்மொழியின் தொன்மைக்கும் – முதன்மைக்கும் – தாய்மைக்கும் – தலைமைக்கும் இதுவொரு மிகச் சிறந்த சான்றாதாரம் அல்லவா?

உலகத்தின் மூத்த மொழியாகவும் முதல் மொழியாகவும் இருப்பதற்கு தமிழுக்கு இருக்கும் தகுதியை நிறுவுதற்கு இதுவொன்றே போதுமல்லவா?

சரி வாருங்கள், ‘அப்பா’ என்கிற தமிழ்ச் சொல் உலக மொழிகளில் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது – மருவியிருகிறது என்று பார்ப்போம்.

தமிழ்:- அப்பன் //

மலையாளம்:- அப்பன் //

கன்னடம்:- அப்ப //

துளு:- அப்ப //

குடகு:- அப்பெ //

கோண்டி:- ஆப்போ //

துளு:- அப்பெ(தாய்) //

மராத்தி:- பாப் //

குசராத்தி:- பாப் //

இந்தி:- பாப் //

வங்கம்:- பாப், பாபா //

மெச்சு:- அப்ப //

போர்த்துக்கீசியம்:- அப //

சிங்களம்:- அப்பா

எகிப்து:- ஆப் //

அரபி:- ஆப் //

கலதேயம்(Chaldean):- அப்பா //

சீரியம்(Syriac):- ஆபோ //

அரமிக்கு(Aramic):- அப்பா //

அபிசினியம்:- ஆப்பாத்

இலத்தின்:- பப்பா //

பிராகுவீ:- பப்பா //

ஆங்கிலம்:- பப்பா

ஓசித்தியம்(Ostiak):- ஊப், ஓப் //

பின்னியம்(Finnish):- அப்பி //

அங்கேரியம்:- இப், இப்ப, அப்பொஸ்

அப்பாவுக்கு தமப்பன், தகப்பன், அத்தன் என்றும் தமிழில் சொற்கள் உள்ளன. இவை எவ்வாறு பிற மொழிகளில் திரிந்துள்ளன என இனி காண்போம்.

தமிழ்:- தம்+அப்பன்= தமப்பன்= தகப்பன்.

தமிழ்:- அத்தன். // பிராகிருதம்:- அத்தா

துருக்கி:- அத்த // அங்கேரியம்:- அத்ய // பின்னியம்(Finnish):- ஆத்த // செர்மியம்(Chermiss):- ஆத்யா // மார்தூவின்:- அத்தை // ஓசித்தியம்(Ostiak):- அத்த // இலாப்பியம்(Lappish):- அத்ஜெ(பாட்டன்)

கோதியம்(Gothic):- அத்தன் // இலத்தின்:- அத்த // கிரேக்கம்:- அத்த

அத்தன் என்பதைப் போலவே அச்சன் என்பதும் தமிழ் சொல்தான். இந்த ‘அச்சன்’ இன்று மலையாளத்தில் அப்படியே இருக்கிறது. அச்சன் என்ற சொல் மற்ற தென்னிந்திய மொழிகளில் எப்படி மாறியிருக்கிறது பாருங்கள்.

தமிழ்:- அத்தன்= அச்சன் // மலையாளம்:- அச்சன்

கன்னடம்:- அஜ்ஜ(பாட்டன்) // துளு:- அஜ்ஜெ(பாட்டன்) // குடகு- அஜ்ஜெ(பாட்டன்) // குருக்கு:- அஜ்ஜொஸ்(பாட்டன்) // பிராகிருதம்:- அஜ்ஜ // மராத்தி:- ஆஜா(பாட்டன்) // இந்தி:- ஆஜா(பாட்டன்)

இலாப்பியம்(Lappish):- ஐஜ. அத்ஜ(பாட்டன்)

அப்பாவை ஐயன் என அழைக்கும் பழக்கமும் தமிழருடையதே. ஐயன் என்பது அப்பாவை மட்டுமல்லாது தமையன், பெரியோன், ஆசிரியன், குரு, முனிவன் என பல பொருளையும் குறிக்கிறது.

தமிழ்:- ஐயன் // மலையாளம்:- அய்யன் // கன்னடம்:- அய்ய // தெலுங்கு:- அய்ய, அய // துளு:- அய்யெ(ஆசிரியன்) // குடகு:- அய்யெ(தந்தையுடன் பிறந்தான்) // துடவம்:- இன், எயி // கோலாமி:- அய்யா(பாட்டன்), பஅய்ய

போர்த்துக்கீசியம்:- ஐயோ(ஆசிரியன்)

தமிழ்:- தந்தை // கன்னடம்:- தந்தெ // தெலுங்கு:- தண்ட்ரி

இப்படியாக, அப்பாவைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள் உலக மொழிகள் பலவற்றிலும் அப்படியே இருக்கிறது அல்லது ஓரளவு மாற்றமடைந்து காணப்படுகிறது. இதிலிருந்து தமிழ்மொழி உலக மொழிகளுக்கெல்லாம் சொற்களை வழங்கி தாய்மைத் தன்மையைப் பெற்று - உலக மொழிகளுக்குத் தாயாக - தாய்மொழியாக இருப்பது தெள்ளென தெரிகிறது.

தமிழே ஞாலத்தின் முதற்றாய்மொழி என்பதை நமது இன்னுயிர் தமிழ்மொழி இன்றும் இனிவரும் காலத்திற்கும் தானே நிறுவிக்கொள்ளும் என்பதை இனி சொல்லவும் வேண்டுமா?

மூலம்:- மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ் வரலாறு

 

Link to comment
Share on other sites

மிக மிக முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்கள்.
 
சீன மொழியில் அப்பா அப்பா தான்!!
 
சிங்களத்தில் அப்பா தாத்தா !!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா என்பது தந்தை என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது. சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் தாத்தே என்னும் சொல் பாவிக்கப்படுகிறது.  டடி என்னும் சொல்லும் தந்தையின் திரிபுதான்.

 

தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி .......கம்ராமாயணம்

 

அது சரி! ஏன் அம்மாவை விட்டுவிட்டீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா என்பது தந்தை என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது. சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் தாத்தே என்னும் சொல் பாவிக்கப்படுகிறது.  டடி என்னும் சொல்லும் தந்தையின் திரிபுதான்.

 

தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி .......கம்ராமாயணம்

 

அது சரி! ஏன் அம்மாவை விட்டுவிட்டீர்கள்?

 

அம்மாவைச் சொல்வதெனில் பசுவின் பாசையில் இருந்து தொடங்க வேண்டும்...! அதுதான் யோசிக்கினம்...!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்கத் தூண்டிய ஒரு பதிவு...!

 

நன்றிகள்..வில்லியம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா....... வாசிக்க, மகிழ்ச்சியாக உள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை நமக்குள் வைத்துக் கொள்வதிலும்... உலகெங்கும் கிடைக்கும்.. மொழியியல் ஆதாரங்களோடு இதனை ஆய்வுக்கு உட்படுத்தி உலக அரங்கில் ஒரு ஆய்வுக்குரிய தகுதியை பெற்ற ஒரு ஆய்வாக இதனை வெளியிட்டால் தான்... தமிழ் மொழியின் தொன்மை குறித்து உலகம் இன்னும் அறிய வாய்ப்புக் கிடைக்கும்.

 

பகிர்விற்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//இதனை நமக்குள் வைத்துக் கொள்வதிலும்... உலகெங்கும் கிடைக்கும்.. மொழியியல் ஆதாரங்களோடு இதனை ஆய்வுக்கு உட்படுத்தி உலக அரங்கில் ஒரு ஆய்வுக்குரிய தகுதியை பெற்ற ஒரு ஆய்வாக இதனை வெளியிட்டால் தான்... தமிழ் மொழியின் தொன்மை குறித்து உலகம் இன்னும் அறிய வாய்ப்புக் கிடைக்கும்.//

 

- சரியாகச் சொன்னீர்கள் நெடுக்ஸ்.

 

ஆய்வு செய்ய ஆர்வமுண்டு. இன்று நான் உலகின் எந்த மூலை முடுக்கும் செல்ல தயார். பொருளாதாரம் தேவை.  ஒத்த கருத்துள்ள மக்கள் வேண்டும். ஆய்வுக்கு உதவிசெய்ய அரசின் துணை வேண்டும், அது எங்கே கிடைக்கிறது.?????? முடிந்த அளவு செய்வோம்.

 

Link to comment
Share on other sites

நண்பர்களே ,  வாசிக்க, மகிழ்ச்சியாக உள்ளது.ஆனால் ,..............  அப்பா என்று  தந்தையை அழைப்பது இப்போ ஒரு ஐம்பது ஆண்டுகளாகத்தான் , அதற்குமுன் ஐயா , என்றும்  எனது தாயாரும் 1930--2012  அப்பு , என்றே  அழைத்தார்கள் . எனக்கு  தெரிந்த நன்கு அறிந்த விடயத்தையே இங்கு பதிவிடுகின்றேன் .நன்றி .

 

இதை  இங்கு பதியக்காரணம்  தவறான பதிவு  யாழில்  வரவேண்டாமே ,நன்றி .

 

Link to comment
Share on other sites

நண்பர்களே ,  வாசிக்க, மகிழ்ச்சியாக உள்ளது.ஆனால் ,..............  அப்பா என்று  தந்தையை அழைப்பது இப்போ ஒரு ஐம்பது ஆண்டுகளாகத்தான் , அதற்குமுன் ஐயா , என்றும்  எனது தாயாரும் 1930--2012  அப்பு , என்றே  அழைத்தார்கள் . எனக்கு  தெரிந்த நன்கு அறிந்த விடயத்தையே இங்கு பதிவிடுகின்றேன் .நன்றி .

 

இதை  இங்கு பதியக்காரணம்  தவறான பதிவு  யாழில்  வரவேண்டாமே ,நன்றி .

 

 

 

 

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே
 
 
-மாணிக்க வாசகர்
Link to comment
Share on other sites

நண்பர்களே ,  வாசிக்க, மகிழ்ச்சியாக உள்ளது.ஆனால் ,..............  அப்பா என்று  தந்தையை அழைப்பது இப்போ ஒரு ஐம்பது ஆண்டுகளாகத்தான் , அதற்குமுன் ஐயா , என்றும்  எனது தாயாரும் 1930--2012  அப்பு , என்றே  அழைத்தார்கள் . எனக்கு  தெரிந்த நன்கு அறிந்த விடயத்தையே இங்கு பதிவிடுகின்றேன் .நன்றி .

 

இதை  இங்கு பதியக்காரணம்  தவறான பதிவு  யாழில்  வரவேண்டாமே ,நன்றி .

 

 

முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன்

தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்

தன்னை அப்பா எனில் அப்பனும் ஆய் உளன்

பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத் தானே.

- திருமந்திரம்(கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரியமொழியில் அப்பா-அப்பா அம்மா-அம்மா மற்றும் பிதா-பாதர்(ஆங்கிலம்)-பார்டர்-ஜேர்மன் மாதா-மதர்(ஆங்கிலம்)-மூட்டர்-mutter9german)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மக்களவைத் தேர்தல் 7 PM நிலவரம்: தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு - கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குகள் திருக்காட்டுப்பள்ளி அருகே சரக்கு வாகனத்தில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விட்டலபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு ஊர் திரும்பிய லூர்துபுரம் கிராம மக்கள்.   சென்னை: தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 75.64 சதவீத வாக்குகளும், பதிவாகின. மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 67.37 சதவீத வாக்குகளும் பதிவாகின. சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியது: “தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். விளவங்கோடு இடைத்தேர்தல் நிலவரம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்படும். இந்த எண்ணிக்கை சதவீதத்தில், தபால் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த சதவீத எண்ணிக்கை வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே.     கடந்த 2019 தேர்தலில் 7 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அத்துடன் இதை ஒப்பிடுகையில் இந்த வாக்கு சராசரி நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த காரணத்தால், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிகமானோர் வாக்களிக்க வந்துள்ளனர். 6 மணிக்குள் வந்த பலரும் ஆர்வத்துடன் டோக்கன் பெற்றுக்கொண்டு வாக்களிக்க காத்திருந்தனர். நாளை பகல் 12 மணிக்கு துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகும்.   ADVERTISEMENT                                               முக்கியத் தகவல்: தேர்தல் ஆணையத்தில் இருந்து ஓர் அறிவுறுத்தல் வந்துள்ளது. அடுத்த கட்டமாக கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் சோதனை தொடரும். மற்ற இடங்களில் பாதுகாப்பு படையினரை திரும்ப பெற உள்ளோம்” என்று அவர் கூறினார். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான அசாம்பவித சம்பவங்களின்றி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சில இடங்களில் தாமதாக தொடங்கப்பட்டது; சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது போன்ற சின்னச் சின்ன சலசலப்புகள் மட்டுமே ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி வாரியான வாக்குப்பதிவு - இரவு 7 மணி நிலவரம்: கள்ளக்குறிச்சி - 75.67% தருமபுரி - 75.44% சிதம்பரம் - 74.87% பெரம்பலூர் - 74.46% நாமக்கல் - 74.29% கரூர்- 74.05% அரக்கோணம் - 73.92% ஆரணி - 73.77% சேலம்- 73.55% விழுப்புரம்- 73.49% திருவண்ணாமலை - 73.35% வேலூர் - 73.04% காஞ்சிபுரம் - 72.99% கிருஷ்ணகிரி - 72.96% கடலூர் - 72.40% விருதுநகர் -72.29% பொள்ளாச்சி -72.22% நாகப்பட்டினம் - 72.21% திருப்பூர் - 72.02% திருவள்ளூர் - 71.87% தேனி - 71.74% மயிலாடுதுறை - 71.45% ஈரோடு - 71.42% திண்டுக்கல் - 71.37% திருச்சி -71.20% கோவை - 71.17% நீலகிரி - 71.07% தென்காசி - 71.06% சிவகங்கை -71.05% ராமநாதபுரம் -71.05% தூத்துக்குடி - 70.93% திருநெல்வேலி - 70.46% கன்னியாகுமரி - 70.15% தஞ்சாவூர்- 69.82% ஸ்ரீபெரும்புதூர் - 69.79% வட சென்னை - 69.26% மதுரை - 68.98% தென் சென்னை -67.82% மத்திய சென்னை - 67.35% ஆளுநர் ரவி மகிழ்ச்சி: “ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி” என்று சென்னையில் வாக்குச் செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசினார். | வாசிக்க > “ஜனநாயகப் பெருவிழா இது!” - சென்னையில் வாக்களித்த ஆளுநர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி     சசிகலா நம்பிக்கை: "ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, எங்களுள் உள்ளவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு" என்று வாக்களித்த பிறகு வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். | வாசிக்க > “எங்களுள் உள்ளவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு” - வாக்களித்த பின்பு சசிகலா நம்பிக்கை தேர்தல் புறக்கணிப்புகள்: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விரிவாக வாசிக்க > ஏகனாபுரம் முதல் வேங்கைவயல் வரை: தேர்தல் புறக்கணிப்பும் பின்புலமும்     சேலத்தில் இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு: சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிசாமி என்பவர் வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே... - தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செலுத்தினார். அதேபோல், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்களித்தார். தனது குடும்பத்துடன் வந்து வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதேபோல் காரைக்குடியில் கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை செலுத்தினார். ப.சிதம்பரம் வாக்களித்துவிட்டு அளித்தப் பேட்டியில், “தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெறும்” என்றார். மலையாளத்தில் வேட்பாளர் பட்டியல்: நீலகிரி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் மலையாளத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20 சதவீதம் மலையாள மக்கள் வசிக்கின்றனர். இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 689 வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர் பெயர் பட்டியில் தமிழ் மற்றும் மலையாளத்தில் அச்சடிக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டிருந்தது. தமிழகத்தில் மலையாளம் மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பாளர் பெயர் பட்டியல் மலையாளத்தில் அச்சடிக்கப்படுவது குறிப்பிடதக்கது. அரசியல் பிரபலங்கள் வாக்களிப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் சென்னை எஸ்ஐடி கல்லூரி வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். திருச்சியில் தில்லைநகர் மக்கள் மன்றம் வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் கே.என். நேரு வாக்களித்தார். தென்சென்னை தொகுதியில் சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன். கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு. திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ். தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். “கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று உங்கள் மூலமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார். திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, “நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றிதான்” எனக் கூறிச் சென்றார். இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... - மேலும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!. அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... #Elections2024” என்று பதிவிட்டுள்ளார். வாக்குப்பதிவு நிலவரம்: முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கள்ளுக்குறிச்சியில் வாக்குப்பதிவு அதிகமாகப் பதிவாகி வருகிறது. படம்:ஜெ.மனோகரன் வேங்கைவயலில் வாக்குச் செலுத்த யாரும் வரவில்லை: வேங்கைவயல் கிராமத்தில் இதுவரை பொதுமக்கள் யாரும் வாக்குச்செலுத்த வரவில்லை. ஏற்கனவே, அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில், தற்போது வரை பொதுமக்கள் யாரும் வாக்குச் செலுத்த வரவில்லை. ரஜினி வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளனர். இயந்திர கோளாறு காரணமாக நடிகர் கவுதம் கார்த்திக் உட்பட பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: வேலூர் காந்திநகர் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலை 7 மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரமாக காத்துக்கிடக்கின்றனர். 7 கட்டங்களாக தேர்தல்: இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்காளர்கள் அதிக அளவில் காத்திருந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி, அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். களத்தில் 950 வேட்பாளர்கள்: தமிழகத்தை பொருத்தவரை 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள் என 950 வேட்பாளர்கள் மக்களவை தொகுதிகளில் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில், தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில், 10.92 லட்சம் முதல்முறை அதாவது 18-19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதுதவிர, பதிவு செய்ததன் அடிப்படையில் 85 வயதுக்கு மேற்பட்ட 6.14 லட்சம் வாக்காளர்கள், 4.61 லட்சம் மாற்றுத் திறன் வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.hindutamil.in/news/tamilnadu/1233008-lok-sabha-elections-2024-phase-1-voting-live-updates-in-tamil-nadu.html
    • உங்கள் எடிட் ரீசனை பார்த்தேன், சிரித்தேன். வீடியோவ பார்க்காமல் இணைத்தால் இப்படித்தான். நாம் தமிழர் தம்பியின் காணொளியில் தூசணம் இல்லாவிட்டால்தான் அது செய்தி🤣. நீங்களும், பையனும், புலவரும் எழுதியவை 6 கண்களால் அதே தமிழ் நாட்டில், நேரடியாக சேகரிக்கப்பட்டது🤣
    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையின் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை காசுக‌ள் க‌ட்சி சின்ன‌ம் நோடிஸ் எல்லாம் கீழ‌ விழுந்து போய் கிட‌க்கு ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.