Jump to content

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தமிழ்க் கூட்டமைப்பின் தன்னிச்சையான அறிவிப்பு என்கிறது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்


Recommended Posts

வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்து வரும் நிலையில், கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்களுக்கான தீர்வு என்னவாக இருக்கும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அசன் அலி தெரிவித்துள்ளார்.
 
வடக்கையும் கிழக்கையும் இணைப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளியிட்ட கருத்திற்கு முஸ்லிம் சமூகம் வெறுமனே உடன்படாது என்ற நிலைப்பாடு இருக்கிறது.
 
அது அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கலாம் என்றும் எனினும், கிழக்கிலுள்ள முஸ்லிம்களுக்கும் கோரிக்கைகள் இருப்பதாகவும் அவர்களுக்கான தீர்வாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனை முன்மொழிகிறது என்பது தெளிவாகக் கூற வேண்டும் எனவும் அசன் அலி மேலும் தெரிவித்தார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மௌனத்தைக் கலைத்தார் சந்திரிக்கா!

 

 

இது சுத்திச்சுத்தி சுப்பர்ரை கொல்லையுக்கை நிக்கிற சண்டாளி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சுத்திச்சுத்தி சுப்பர்ரை கொல்லையுக்கை நிக்கிற சண்டா

ளி.

அண்ணர் அவசரத்தில இடம்மாறி வந்திட்டார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களுக்கு வடக்குக் கிழக்கு பிரிந்தால் என்ன சேர்ந்தால் என்ன.. அதைப் பற்றி அவர்களுக்கு பிரச்சனை இல்லை. காரணம்.. முஸ்லீம்கள் வடக்குக் கிழக்கை விட.. பெருமளவில்.. சிறீலங்காவின் பிற இடங்களில் தான் வாழ்கிறார்கள்.

 

வடக்குக் கிழக்கில்.. குறிச்சிகளாக வாழும் முஸ்லீம்கள்.. வெறும் மத அடையாளத்துக்காக தனி நாடு கோர முடியாது. அவர்களுக்குரிய தனித்துவத்தோடு அவர்களின் சம அரசியல் சமூக உரிமையை தமிழ் மக்கள் அங்கீகரிக்கத் தயாராக உள்ள நிலையில்.. வடக்குக் கிழக்கு இணையக் கூடாது என்ற தொனியிலான முஸ்லீம் காங்கிரஸ் கூக்குரல்.. சலுகை அரசியலை மையமாகக் கொண்ட ஒன்றே அன்றி வடக்குக் கிழக்கு முஸ்லீம் மக்களின் உண்மையான நலன் கருதியதல்ல..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
இலங்கைத்தீவில் வாழும் முஸ்லிம் சகோதரர்களில் ஒரு பகுதியினரால் விதண்டாவாதத்திற்காகவும், வடகிழக்கிற்கப்பால் சிங்களப் பெருந்தேசியவாதத்தோடு இணைந்து நிற்கும்தரப்பினர் தமது இருப்பிற்காவும் தமது பெருமுதலாளித்துவக் கனவுகளிற்காகவும் சாதாரண முஸ்லிம்களைப் பலிக்கடாவாக்க முனைகின்றனர். ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் ஒடுக்கும்  தரப்போடு எந்தவகையில் போராடுவது என்பதை புரிந்துணர்வின் அடிப்படையில் கூடிப்பேசித் திட்டுமிட்டு நகர்வதூடாகவே சாத்தியமாகும். அதேவேளை வடகிழக்கென்பது வரலாற்றுக் காலம்முதல் தமிழ்பேசும் மக்களின் தாயகமாகும் என்பதை சொல்லிப் புரியும் சிறுபிள்ளைத்தளமான நிலையில் நிற்கின்றார்கள் என்பதை நினைத்தால் அழுவதா சிரிப்பதா தெரியவில்லை. கொழும்பை மையப்படுத்திய முஸ்லிம் தலைமைகளால் சரியான திசையைக் காட்டமுடியாதென்பதையே இதுபோன்ற கருத்தகள் வெளிப்படுத்துகின்றன. நிலங்கள் பறிக்கப்படும் சூழலில் வடகிழக்கு இணைந்தாயகம் என்பதே தமிழ்பேசும் தரப்பின் இருப்பை உறுதி செய்ய அவசியமானதொரு முதலாவது செயல்நெறியாகும். வடக்கும் கிழக்கையும் பிரிப்பதூடாக தமிழ்பேசும் மக்களை தமது பேரினவாதத்துக்குப் பலியாக்கி இரண்டாந்தரக் குடிமக்களாக்கி இறுதியில் 
முழு இலங்கைத்தீவையும் சிங்களவருக்கானதாக்குவதே நீண்டகாலத்திட்டமாகும் என்பதைச் சொல்லிப் புரிய வேண்டியதில்லை. ஏலவே சொல்லாமல் சொல்லும் விடயங்கள் பேருவளை, தர்காநகரென நடந்தேறியுள்ளன.
நீங்கள் என்னதான் அவர்களோடு கட்டிப்பிரண்டு உருண்டாலும் சிங்களம் சரியான சமயத்தில் வெட்டியாடுவதில் வல்லவர்கள். அயலிலே தாமரை மலர அதற்கு முஸ்லிம்களின் குருதியால் பூசித்துப் பேர்வாங்கத் துடிப்பவர்கள் என்பதையும், மேற்கிலே இஸ்லாம் கறாம் இங்கும் அதுதானென்று பொதுபலசேனா முதல் கெலஉறுமயவரை தூண்டிவிட்டுச் சொல்லவைத்துவிட்டு தங்களது காரியமாற்றும் தரப்போடு ஊறிய உங்களது குரலும் சிங்களச் சார்பானதேயன்றி வேறில்லை.இதனையே வீரவன்சாவூடாக வழக்கைப்போட்டுச் சிங்களம் செய்தததை இப்போது நீங்கள் சொல்கையிலே அவர்களுக்கும் உங்களுக்கும் வேற்றுமை தெரியவில்லை. அழிந்தது நாங்கள்! பறிபோவது எமது நிலம்! விதைவகளாகவும் பெற்றொரை இழந்தோராகவும் கொடும்துயரில் துடிக்கும் மக்கள்மீது வேல் பாய்ச்சுவதைவிடுத்து அர்த்தமுள்ள செயல்குறித்து சிந்தியுங்கள்.  
நன்றி!
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.