Jump to content

மோடியுடன் பேச விக்னேஸ்வரன் விருப்பம்


Recommended Posts

கொழும்பு: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் விருப்பம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து, இலங்கை பிரச்னை தொடர்பாக பேசினர். அப்போது தன்னை சந்திக்க வருமாறு வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனிடையே, பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள விக்னேஸ்வரன், மோடியுடன் வடக்கு மாகாண சபை மற்றம் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்த பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தெரிவித்தார்.
 
Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கனம் சிவி அவர்களே,

நீங்களும் விரும்பிறியள் அவரும் விரும்பிறார். இதென்ன கல்யாண பேச்சே, சட்டு புட்டு என்று சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள் ஐயா.

ராஜதந்திரத்தில் தனிமனிதர்களிடியான உறவு மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தட்சர்-ரேகன்-கொர்பசேவ் உறவுபோல.

எதிர்மறையாயும் நடப்பதுண்டு. ராஜீவும் - பிரபாவும் போல.

நீங்களும் மோடியும் தோற்ற ஒற்றுமை மட்டுமல்ல மத நம்பிக்கையிலும், வினைதிறன் விரும்புவதிலும் ஒத்து போகிறிகள்.

You both are on the same wavelength.

நீங்கள் மோடியுடன் ஒரு 1-1 உறவை ஸ்தாபிப்பது இன்றிஅமையாதது.

உங்கள் priority list இல் இதை 1 ஆவதாய் கொண்டு செயல்படுங்கள் என்பது என் தாழ்மையான விண்ணப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனம் சிவி அவர்களே,

நீங்களும் விரும்பிறியள் அவரும் விரும்பிறார். இதென்ன கல்யாண பேச்சே, சட்டு புட்டு என்று சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள் ஐயா.

ராஜதந்திரத்தில் தனிமனிதர்களிடியான உறவு மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தட்சர்-ரேகன்-கொர்பசேவ் உறவுபோல.

எதிர்மறையாயும் நடப்பதுண்டு. ராஜீவும் - பிரபாவும் போல.

நீங்களும் மோடியும் தோற்ற ஒற்றுமை மட்டுமல்ல மத நம்பிக்கையிலும், வினைதிறன் விரும்புவதிலும் ஒத்து போகிறிகள்.

You both are on the same wavelength.

நீங்கள் மோடியுடன் ஒரு 1-1 உறவை ஸ்தாபிப்பது இன்றிஅமையாதது.

உங்கள் priority list இல் இதை 1 ஆவதாய் கொண்டு செயல்படுங்கள் என்பது என் தாழ்மையான விண்ணப்பம்.

அதுதானே, சட்டுபுட்டன்று சிங்களம் சுதாகரிப்பதிற்குள், மோடியை சந்தியுங்கள்...அல்ல்து மோடியை மோடயா சந்திப்பான் பின் மோடியை எமக்கெதிராக திருப்புவான் ...,

ஆறின் கஞ்சி பழங்கஞ்சி....

ஆவதற்குள் சந்தியுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே, சட்டுபுட்டன்று சிங்களம் சுதாகரிப்பதிற்குள், மோடியை சந்தியுங்கள்...அல்ல்து மோடியை மோடயா சந்திப்பான் பின் மோடியை எமக்கெதிராக திருப்புவான் ...,

ஆறின் கஞ்சி பழங்கஞ்சி....

ஆவதற்குள் சந்தியுங்கள்

 

 

பாவம் மோடி

ஒன்றும் தெரியாத பாப்பா... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிகமாக அரசியல் அறிவு வேணுமென்றால் ஒவ்வொறு நாளும் யாழ்களத்திற்கு வந்து உங்கள அரசியல் அறிவை வளர்த்த பின்பு மோடியை சந்தியுங்கள்.... கனம் நீதிபதி ஐயா அவர்களே...:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிகமாக 'அரசியல் அறிவு' வேணுமென்றால் ஒவ்வொறு நாளும் யாழ்களத்திற்கு வந்து உங்கள அரசியல் அறிவை வளர்த்த பின்பு மோடியை சந்தியுங்கள்.... கனம் நீதிபதி ஐயா அவர்களே... :D

அரசியல் அறிவுன்னா எதைப்பற்றி? கூட இருந்து கும்மியடிச்சி, குழாயடி கும்மவா..? :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா கொஞ்சம் ஆசுவாசமாப் பேசுங்கள்.

 

ஏற்கனவே பேசிட்டு வந்தவையில...

 

ஊர் திரும்பினவை.. ராஜதந்திரம் பேசிட்டு வந்திருக்கம் வெளில ஒன்றும் சொல்ல முடியாது என்றினம்..

 

தமிழ் நாட்டுக்குத் திரும்பினவை.. பிரிவினையை இந்தியா விரும்பல்ல.. (அப்ப எதுக்கு ஆயிரத்தெட்டு இயக்கங்களை வளர்த்தெடுத்து தமிழீழம் எடுங்கோடா என்று ஆயுதத்தையும் கொடுத்து... ஆளையாள் அடிபட விட்டவை. தமிழன் செத்துத் தொலையவா..?!) எல்லாம் 13 மயம் என்றினம்.

 

அங்கால மகிந்த.. டெல்லிக்குப் போறியளோ.. போங்க.. போங்க.. வீட்ட திரும்பி வரத்தானே வேணும் என்று பொருமுறார்.

 

இங்கால பசில்.. எங்கின போயும் ஒன்றும் ஆகப் போறதில்ல. நான் நினைக்கிறது தான் நடக்கும் என்றார்.

 

கூட.. டக்கியர்.. என்ர நரைத்த தாடி டையடிச்சால் கறுப்பாகும்.. நான் ஒரு போதும் சிங்கள அரச விசுவாசத்தை கைவிட மாட்டன் என்று கூட முன்னும் பின்னும் அலையுறார்.

 

இப்படியான ஒரு காலக்கட்டத்தில்... நீங்க வேற 13 காணாது.. அதுக்கு மேல போகனுன்னு சொல்லுறீங்க. இதைச் சொல்லிக் கொண்டு.. மோடியை சந்திச்சு.. என்னாகப் போகுது..??! ஆளையாள் பார்த்து தேவாரம் தான் பாடலாம். தமிழ் மக்களுக்கு நிகழக் கூடிய சாத்தியமான உடனடி நன்மை என்று பார்த்தால்.. சூனிய வெளி தான் மிச்சமாகக் கிடக்குது. அங்கின ஐ நாவா பார்த்து.. உந்தப் போர்க்குற்ற விசாரணையை முன்னெடுத்து.. ஏதேனும்.. உருப்படியா சொன்னாலே தவிர.. தமிழர்களுக்கு இப்போதைக்கு உய்வில்லை..! :icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்ற விசாரணை எப்படித்தீர்வைத்தரும்?

அது எப்படி நடக்கும் என்ற பொறிமுறையை சொல்லுங்களேன்.

1ம் படி - போர்குற்றம் இலங்கை படைகள் இழைத்ததாக ஐநா அறிவிக்கிறது. கமாண்டர் இன் சீவ் ஆக மகிந்தவும் குற்றவாளி ஆக அறிவிக்கப் படுகிறார் ( கற்பனைதான், பரவாயில்லை).

கடைசி படி - தமிழ் ஈழம் கிடக்கிறது. ஐநா அதை ஒரு தனிநாடாக அங்கீகரித்து பொது சபை உறுப்புரிமையும் கிடைக்கிறது.

இடையில் உள்ள படிகளை சொல்லுங்களேன்.

இதில் ஒரு மாறிலி -இந்தியாவின் தமிழ் ஈழம் அமைவதற்க்கான எதிப்பு மாறாது. என்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய வல்லரசாக தன்னை கற்பனை செய்யும் இந்தியாவைக் கேட்டா அமெரிக்கா.. ஆப்கானிஸ்தானை தாக்கிச்சுது. பாகிஸ்தானில்.. ரோன்களை இயக்கித் தாக்குது.

 

இந்தியாவின் நண்பனாக இருந்து இந்தியா எதிர்த்த போதும் அமெரிக்கா ஈராக்கை தாக்கவில்லையா..??!

 

இந்தியா எதிர்த்த போதும்.. லிபியாவை தாக்கவில்லையா..??!

 

இந்தியா எதிர்த்த போதும் இஸ்ரேல் பலஸ்தீனத்தை தாக்கவில்லையா..???!

 

இந்தியா எதிர்த்த போதும்.. ஜே ஆர் ஒப்பரேசன் லிபரேசனை நடத்தவில்லையா..???!

 

எதுக்கும் இந்தியா இந்தியா என்ற பூச்சாண்டி அவசியமில்லை.

 

விடுதலைப்புலிகள் விடயத்தில்.. துரதிஷ்டவசமாக.. மேற்குநாடுகளும்.. இந்தியாவும்.. சிறீலங்காவும்.. சீனாவும்.. பாகிஸ்தானும்.. ரஷ்சியாவும்.. ஒரு நேர்கோட்டில் நின்று கொண்டு விட்டார்கள். அதற்காக அந்த நேர்கோடு எப்போதும்  சாத்தியம் என்று சொல்ல முடியாது.

 

இன்று மேற்குநாடுகள் சிந்திக்கின்றன. புலிகளை முற்றாக பலவீனப்படுத்த அனுமதித்ததை இட்டு அவர்களுக்குள் வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. அவர்களின் பிராந்தியப் பிடி இழகி உள்ள இந்தத் தருணத்தில்... இந்த நேர்கோடு எப்போதும் சாத்தியமில்லை..! இந்தியா ஆசிய வல்லரசும் இல்லை. தெற்காசி வல்லரசும் இல்லை..!

 

அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் நினைத்தால்.. இப்பவும் நினைத்ததை சாதிப்பார்கள். ஆனால் இந்தியாவால் அது முடியாது. :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் மேற்கு நாடுகள் எதுவும் இன்றுவரை ஒன்றுபட்ட இலங்கை க்கு வெளியான எந்த தீர்வையும் ஆதரிப்பதாக சொல்லவில்லை. தொடர்சியாக யூகேயும் அமெரிக்காவும் ஒன்றுபட்ட இலங்கை என்பதையே வலியுறுத்துகிறன.

போர்குற்ற விசாரணையின் முடிவு இந்த நிலைப்பாட்டை மாற்றும் என்பதற்கு ஒரு அறிகுறியும் இல்லை.

நீங்கள் 1ம் படிக்கும் கடைசி படிக்கும் இடையானதை சொல்லாமல் நழுவி விட்டீர்கள். நான் ஒரு அனுமானம் சொல்கிறேன் கேளுங்கள். இது கூட எல்லாம் உங்கள் விருப்பு படி நடந்தால் நடக்கப்போகும் maximum positive outcome தான்.

1) ஏலவே பார்த்தது

2) மேற்கு நாடுகள் குற்றவாளிகளை தண்டிக்க கோரும், இந்தியா சீனா எதிர்க்கும்

3) மகிந்த மறுப்பார்

4) பொருளாதார தடை பாயும், assets freeze, travel ban எல்லாம் பாயும் - இந்தியா சீனா தொடர்ந்து முண்டு கொடுக்கும்

5) சிங்கலவரின் மத்தியில் மகிந்தவின் இமேஜ் எகிறும். தேர்தல்களில் யு என் பி காணமல் போகும்

6) பாதுகப்பு கவுன்சில் எதை செய்யவிடாது சீனா ரஸ்யாவின் வீட்டோ முடக்கும்

7) 2009 இல் குற்றம் நிகழ்ந்த போதே விமானங்களையோ படைகளையோ அனுப்பாத அமெரிகாவும் மேற்கும், தம்சொந்த படைகளை, விமானக்களை பாவித்து எதுவும் செய்யாது.

8) கொஞ்சகாலம் checkmate நிலை தொடரும்

9) மகிந்த மீது International Criminal Court வாரண்டு பாயும். நாட்டுக்குள் முடங்கிப் போவர்.

10) எல்லா கோவமும் தமிழர் மீது திரும்பும், சிங்களமயமாதல் தீவிரப்படும்

11 -A ) மகிந்தவின் காலம் முடியும், புதிய ஒரு தலைமை (யுத்த கரை அற்ற தலைமை) இலங்கையில் உருவாகும்(நாமல், சஜித்). சர்வதேசம் மீண்டும் கைகுலுக்கும், தமிழர்கள் 13A யும் இல்லாமல் 3 வது இனக்குழுவாக ஒதுக்கப்பட்டிருப்பர்.

11 -B) இந்தியாவும் சீனாவும் மகிந்த வை கைவிடும். மகிந்த ICC யால் ஆயுட்தண்டனைக்கு ஆளாவார் ( சார்லஸ் டெய்லர், மிலோசவிச் போல). இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழர்களுக்கு 13A தரும் தீர்வை கொடுப்பதாக புதிய ஆட்சியாளர் சொல்வார். இதை ஏற்கும் படி மேற்கும் இந்தியாவும் தமிழரை நெருக்கும்.

இங்கே நான் சொல்லவருவது யுத்த விசாரணை வேண்டாம் என்பதில்லை. அது தன்பாட்டில் நடக்கட்டும்.

ஆனால் இந்த விசாராணையின் பயனாக, இந்தியா சைனாவின் எதிர்ப்பை மீறி, மேற்க்கின் அமெரிக்காவின் தற்போதைய நிலைப்பாட்டில் ஒரு 180 பாகை திருப்பம் ஏற்பட்டு, இலங்கையை துண்டாடி, ஒன்று பட்ட இலங்கைக்கு வெளியே ஒரு தீர்வு கிடைக்கும் என்பது மிகவும் மிகையான கற்பனை.

ஒரு கருவியின் பயன் என்ன என்பது நமக்கு தெரிந்திருக்க வேண்டும். There is only a limit to what this investigation can achieve. 13க்கு மேலான எந்த தீர்வும் இது வழியாக வர முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடபோங்கப்பா.. நேற்று ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஸ்டி என்றீர்கள். இன்றைக்கு சம்பந்தன் வகையறாக்கள்.. கொழும்பு திரும்பியதும்.. 13 ஐ எதுவும் தாண்டாது என்கிறீர்கள். சம்பந்தன் வகையறாக்களின் அரசியல் படி.. 13 என்ன.. 0 கூடக் கிடைக்காது. இது தான்... நிஜம்.

 

போர்க்குற்ற விசாரணை.. என்பது சர்வதேசத்தின் இழுத்தடிப்பு. அவர்களின் குறிப்பாக மேற்குலகின் கை இலங்கைத் தீவில் இறுகும் வரை.. அதாவது தமக்குச் சார்ப்பான ஒரு அரசியல் மாற்றம் நிகழும் வரை இதனை உற்சாகமாகக் கொண்டு செல்வது போலக் கொண்டு செல்வார்கள். அதற்குள் அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் நிகழவில்லை என்றால் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி.. அதன் மூலம் மாற்றத்தை கொண்டு வர முயற்சிப்பார்கள். அப்போது மகிந்த கம்பனி இன்னும் நெருக்குவாரங்களை சந்திக்கும். அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்காகும்.

 

இந்தச் சந்தர்ப்பங்களில்.. தமிழர்கள்.. சம்பந்தன் வகையறாக்களோடு நின்று கொண்டிருந்தால்.. எந்தச் சிங்களவனுக்கு வாக்குப் போட்டால் விடிவு கிடைக்கும் என்று கணக்குப் போட்டே காலத்தை கழிப்பார்கள். ஒரு விமோசனமும் வராது.

 

இருக்கின்ற ஒரே வழி.. போர்க்குற்ற விசாரணைக்குச் சமாந்திரமாக.. தமிழ் மக்கள் முன்னெடுக்கும்.. இனப்படுகொலை சார்ந்த விடயங்களும்.. அவை சார்ந்த சர்வதேச மயப்படுத்தலும். தமிழக மக்களின் உணர்வெழுச்சியும் தான்... தமிழ் மக்களுக்கு ஒரு மாற்றீடு அவசியம் இன்றேல்.. இவர்களை கட்டுப்படுத்த முடியாது என்று உலகமும் இந்தியாவும் தீர்மானிக்கும் நிலையைக் கொணரும்.

 

தமிழகம்.. சர்வதேச மத்தியஸ்தத்துடன் ஐநாவின் மேற்பார்வையில் நடத்தப்படும்.. தமிழீழத்துக்கான வாக்கெடுப்புத் தொடர்பில்.. தொடச்சியாகவும்.. பெரும் எழுச்சியாகவும் குரல்கொடுக்க ஆரம்பிக்கும் போது.. இந்திய நடுவன் அரசுகளுக்கு அது உள்ளூர் அரசியல் செய்யச் சவாலாக மாறும் போது.. இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மாறியே ஆக வேண்டிய நிலை வரும். ஒரு காலத்தில் எம் ஜி ஆரின் தீவிர ஈழ சார்ப்புக் கொள்கையால்.. இந்திரா அம்மையார் ஈழப் போராட்ட இசைவுப் போக்கை ஓர் எல்லை வரை நகர்த்தி வந்தது போன்ற ஒரு நிலை வரும்.

 

அப்படியான ஒரு நிலையில்.. தமிழர்களின் பேரம் பேசும் வலுவாக.. புலம்பெயர் தமிழர்களும்.. தாயகத்தமிழர்களும்.. தமிழகத்தமிழர்களும்.. உலகத் தமிழர்களும் ஒன்றிணைந்து ஒரு கோரிக்கையை.. சர்வதேசத்தின் முன் போர்க்குற்றம்.. இனப்படுகொலை சார்ந்து முன்வைக்கும் போது.. அது.. சர்வதேசம்.. மாட்டேன் என்ற நிலைக்கு அப்பால் செயற்பட வேண்டிய சூழலை தோற்றுவிக்கும். அந்த வேளையில் தான்.. தமிழர்கள் ஓரளவு நியாயமான தீர்வை பெற்றுத்தரச் சொல்லி சர்வதேசத்தை தலையீடு செய்யக் கோர முடியும். சர்வதேசத் தலையீடு இன்றி.. எனி தமிழர்களுக்கு அது எந்தச் சிங்கள அரசாக இருந்தாலும் தீர்வு இல்லை. சர்வதேசத் தலையீடு என்பதில் இந்தியாவின் மறைமுக ஆதரவு தமிழக எழுச்சியால் உருவாகும் ஒரு நிலையில் தான் இது சாத்தியம்.

 

இதனை நோக்கி நகர வேண்டின்.. தமிழ் தேசிய உணர்வூட்டல் என்பது உலகத்தமிழினத்தை ஒன்றிணைக்கும் கோட்பாட்டியலாக வலுப்பெறுதல் வேண்டும். தமிழக கட்சிகள்.. குறிப்பாக தமிழ் தேசிய உணர்வுள்ள கட்சிகள் பலம் பெறுவதும் மக்கள் செல்வாக்குப் பெறுவதும் திராவிடக் கட்சிகளுக்கு சவாலாக நிற்பதும் அவசியம். அந்த வகையில்... நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளின் பலம் இன்னும் இன்னும் பெருக வேண்டும்.

 

இவை எதுவும் இன்றி.. நேர்க்கோட்டுத் தேற்றம் போல.. போர்க்குற்றம்.. விசாரணை.. தண்டனை என்று எதிர்பார்த்தால் எதுவும் தானா சும்மா நடக்காது. நாங்கள் தெற்காசியாவில்.. அரசியல்.. சமூகச் சூழலில் செல்வாக்குச் செய்யாமல்.. பொருண்மிய.. புவியியல் சூழல் மாற்றத்தை இனங்காட்டாமல்.. எமக்கு சர்வதேசம்.. உதவும்.. இந்தியா உதவும் என்று கனவு காண்பது.. வெறும் பகற்கனவாகவே முடியும்..! போர்க்குற்றம் குரல்கள் கூட வலுவிழந்து போகலாம். சிங்களம்.. மேற்குலகை கைக்குள் போட்டுக் கொண்டால்...!!!!  அந்த நிலை வந்தாலும்.. அதற்குள் இருந்து வெளிவரக் கூடிய எழுச்சிச் சூழலை தமிழகம் கொண்டிருந்தால் ஒழிய.. நமக்கு விடிவில்லை.

 

எமது மக்களின் விடிவு.. இன்று தமிழக எழுச்சியிலும்.. புகலிட மக்களின் ஒற்றுமையுடன் கூடிய சமயோசித.. ராஜதந்திர போராட்டங்களிலும்.. காய் நகர்த்தலிலும் தான் பெரிதும் தங்கி உள்ளது. இதனை நோக்கி மக்களை அறிவூட்டுவதை விடுத்து.. 13.. சமஷ்டி.. என்று படம் காட்டுவது.. மீண்டும் எம் மக்கள் எதிர்பார்த்து ஏமாறும் நிலைக்கே கொண்டு செல்லும்.

 

சம்பந்தன் வகையறாக்கள்.. இன்று பயணிக்கும் தமிழீழத்தை மறுதலிக்கும்.. தமிழ் தேசியம் சாராத.. தமிழக மக்களை ஓரம் கட்டும்.. அரசியல் என்பது எம்மை விட சிங்களவர்களுக்கே கூடிய பலனுள்ள தாக இருக்கும். இதனை புலம்பெயர் சமூகம் எனியும் தொடர அனுமதிக்கக் கூடாது. புலம்பெயர் சமூகமும் தமிழகமும் நெருங்குவதன் மூலமே சம்பந்தன் வகையறாக்களின் தவறான சோரம்போதல் அரசியல் நகர்வுகளில் இருந்தும் தமிழ் மக்களையும் எதிர்காலத்தையும் காக்க முடியும்..!! :icon_idea:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூரை ஏறி முடியும் போது கூப்பிடுங்கோ, வானம் ஏற நானும் வாறன்.

நீங்கள் சொல்வது 3 படைகளுடன் நிண்ட பிரபாவாலேயே முடியவில்லை.

இப்போ புலத்தில், துண்டு துண்டா மாவீரர் தினம் கொண்டாடும் கூட்டம், நெடியவன், நெடுக்கர் தலைமையில் இதை அடையுமாக்கும்.

கனவு காணலாம், ஆனால் நடைமுறைச் சாத்தியம் எண்டு ஒரு கோதாரியும் இருக்கே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு உங்களுக்கு ஒரு சவால், பிரபா காலத்தில் லண்டனில் கூடியது போல ஒரு புலம்பெயர் solidarity நிகழ்வை ஏற்பாடு செய்து, ஐரோப்பா எங்கிருந்தும் குறைந்த பட்சம் 2 லட்சம் புலம்பெயர் தமிழரை ஓரிடத்தில் குவியுங்கள்.

நானும் வருவேன். இது நடந்தால் உங்கள் போராட்ட பொறிமுறை சாத்தியமானது என ஏற்றுக்கொள்வேன்.

பிரபா, பிரபாதான். நெடுக்கு நெடுக்குத்தான், நெடியவன் நெடியவந்தான்.

உயரப் உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது.

பருந்தாலே முடியாது எனும் போது, புழுணிகளால் முடியும் என்றால் - நம்பவா முடியும்?

Link to comment
Share on other sites

மிக நல்ல விடயம் ,

உதவிகள் பெற்று  கஸ்டப்படும் நாலு தமிழர்களை வாழ வைத்தாலே பெரும் புண்ணியம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு உங்களுக்கு ஒரு சவால், பிரபா காலத்தில் லண்டனில் கூடியது போல ஒரு புலம்பெயர் solidarity நிகழ்வை ஏற்பாடு செய்து, ஐரோப்பா எங்கிருந்தும் குறைந்த பட்சம் 2 லட்சம் புலம்பெயர் தமிழரை ஓரிடத்தில் குவியுங்கள்.

நானும் வருவேன். இது நடந்தால் உங்கள் போராட்ட பொறிமுறை சாத்தியமானது என ஏற்றுக்கொள்வேன்.

பிரபா, பிரபாதான். நெடுக்கு நெடுக்குத்தான், நெடியவன் நெடியவந்தான்.

உயரப் உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது.

பருந்தாலே முடியாது எனும் போது, புழுணிகளால் முடியும் என்றால் - நம்பவா முடியும்?

 

இது சும்மா வாதத்துக்காக பேசுகின்றீர்கள்

நடக்காது என்ற முடிவில் எழுதுகின்றீர்கள்...

 

ஆனால் அதே பிரபாகரனால் அது முடிந்தது

அவரை ஆதரித்தீர்களா?

அதரிக்கின்றீர்களா???

எல்லாத்தமிழரும் ஆதரித்தீர்களா?

 

முப்படையுடன் நின்ற அவரை

எல்லாத்தமிழரும் ஆதரித்திருந்தால் வென்றிருப்போமே..

இங்கு உங்களுக்கு ஒத்தூதல் செய்பவர்கள்

பிரபாவை படுத்தியபாடு அறிவீரோ....??? :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடியுடன் பேச விக்கினேஸ்வரனுக்கு விருப்பம்.
ஆனால் அது சம்பந்தருக்கோ மகிந்தவிற்கோ விருப்பமாக இருக்காது.
பொறுத்திருந்து  பார்ப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாததுக்காக சொல்லவில்லை, மனசாரத்தான் சொல்கிறேன்.

பிரபா அவர்களை படுத்தினார், அவர்களும் பிரபாவை படுத்தினர் - இறுதி முடிவு என்ன? தமிழர்களே தமிழர்களை படுத்தினர்.

பிரபாகரன் போன்ற வலுமிக்க,உயிரை துச்சமென மதித்த போராளிகளை தன்னகத்தே கொண்ட, சர்வாதிகாரியாலேயே தமிழர்களை ஓரணியில் திரட்ட முடியாதபோது, தும்படிக்கவும், மோர்ட்கேஜ் கட்டவும் நேரம் கிடைக்காமல் ஓட்டுமாட்டு பட்டு திரியும் புலம்பெயர் தமிழர் மற்றும் Gap year விடுமுறை காலத்தில் இல் போராட வரும் அவர்களின் பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து, இந்திய, அமெரிக்க, இலங்கை, சீன எதிர்ப்பை மீறி தனிநாடு அடைந்து காட்டுவார்கள் என்ரால் அது நம்பும் படியா இருக்கு?

என்ன ஒரு 1000 புலம்பெயர் குடும்பங்களாவது நெடுக்கின் வேலைத்திட்டத்துக்கு பங்களிகளாக வரத் தயரா?

எந்த பொறிமுறையும் நடைமுறைசாத்தியமாய் இருக்கவேணும்.

78 எந்த பிளானும் இல்லாமல் அமிர் தமிழீழம் பெறுவோம் எண்டு சொன்னதுக்கும், இப்ப நெடுக்கு சொல்றதுக்கும் ஒரு வித்யாசமுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளைகளில் விக்கினேஸ்வரனின் ராஜதந்திரத்தில் மயங்கி

மோடி அவருடன் தமிழீழத்திற்கான ஒப்பந்தத்தையும் செய்யலாம்.

ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் மகிந்த அன்ட் கோ  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாததுக்காக சொல்லவில்லை, மனசாரத்தான் சொல்கிறேன்.

பிரபா அவர்களை படுத்தினார், அவர்களும் பிரபாவை படுத்தினர் - இறுதி முடிவு என்ன? தமிழர்களே தமிழர்களை படுத்தினர்.

பிரபாகரன் போன்ற வலுமிக்க,உயிரை துச்சமென மதித்த போராளிகளை தன்னகத்தே கொண்ட, சர்வாதிகாரியாலேயே தமிழர்களை ஓரணியில் திரட்ட முடியாதபோது, தும்படிக்கவும், மோர்ட்கேஜ் கட்டவும் நேரம் கிடைக்காமல் ஓட்டுமாட்டு பட்டு திரியும் புலம்பெயர் தமிழர் மற்றும் Gap year விடுமுறை காலத்தில் இல் போராட வரும் அவர்களின் பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து, இந்திய, அமெரிக்க, இலங்கை, சீன எதிர்ப்பை மீறி தனிநாடு அடைந்து காட்டுவார்கள் என்ரால் அது நம்பும் படியா இருக்கு?

என்ன ஒரு 1000 புலம்பெயர் குடும்பங்களாவது நெடுக்கின் வேலைத்திட்டத்துக்கு பங்களிகளாக வரத் தயரா?

எந்த பொறிமுறையும் நடைமுறைசாத்தியமாய் இருக்கவேணும்.

78 எந்த பிளானும் இல்லாமல் அமிர் தமிழீழம் பெறுவோம் எண்டு சொன்னதுக்கும், இப்ப நெடுக்கு சொல்றதுக்கும் ஒரு வித்யாசமுமில்லை.

 

 

இது தான் பிரச்சினை

 

நீங்கள் இங்கு நல்ல ஆரோக்கியமான விவாதங்களை  விரும்பவில்லை

இதற்கு மேல் நான் உங்களுக்கு எழுதியுள்ள பதிலில் எந்த குத்துதலும் வைக்கவில்லை.

ஆனால் எனக்கு தலைவர் பிரபாகரனைப்பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு

அவரை சர்வாதிகாரி  என்கிறீர்கள்

இது தான் தங்களது   நோக்கம்

எம்மை எப்பொழுதுமே ஒரு கொதி  நிலைக்கு கொண்டு சென்று அப்படியே  வைத்திருப்பது...

இதன் மூலம் இழப்பு யாருக்கு என்பது பற்றி  எந்த அக்கறையுமில்லை தங்களுக்கு..

இதுவே களத்திலும் நடந்தது

இன்றும் தொடர்கிறது

தொடருங்கள்..

 

நேரம் பொன்னானது

இந்த நேரத்தில்

நாலு பேருக்கு தொலைபேசி எடுத்தால் நாலு நல்லவிடயங்களை  மக்களுக்கு செய்யலாம்

நன்றி  வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயா பிரபாகரன் சர்வாதிகாரி என்று நான் சொன்னது உங்களை சீண்டவல்ல.

எந்த கேள்வியும் இல்லாத அதிகாரத்தை கொண்டிருந்த (சர்வ அதிகா-ரி) ஒருவராலேயே தமிழர்களை ஓரணியில், மிரட்டியோ உருட்டியோ திரட்ட முடியாத போது - அட்றசே இல்லாத நெடுக்கு போன்ற புலத்தமிழர்கள் எப்படி இப்படி ஒரு மாபெரும் விசயத்தை செய்யப் போகிறார்கள் என்பதை சுட்டவே அப்படிச் சொன்னேன்.

பிரபாகரன் சர்வாதிகாரியா இல்லையா என்று கேட்டால் அவரே ஆம் என்றுதான் சொல்லி இருப்பார். இதில் நீங்கள் ஓவரா இமோஷனல் ஆகிறீர்கள் என்பதே என்கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மானுட வரலாற்றில் 100% ஒரு சனத்தொகை ஒற்றுமையாக நின்று போராடிய களம் இன்னும் அமையவில்லை. எனியும் அமையப் போறதில்லை.

 

இன்றும்.. பெரும்பான்மையான மக்கள்.. வீழ்ந்து போன மக்களின் கனவுகளை சுமந்து கொண்டே வாழ்கிறார்கள். அவர்களின் மனங்களை காயப்படுத்தி.. சம்பந்தன் வகையறாக்கள் எதனையும் சாதிக்கப் போறதில்லை. அது திட்டவட்டம்.

 

ஆனால் நிச்சயமாக இந்தப் பெரும்பான்மை தமிழ் மக்கள் என்றும் ஒற்றுமையாக நிற்பார்கள். இலட்சியத்தை வெல்லப் பாடுபடுவார்கள்.

 

நீங்கள் எல்லாம் எதிர்பார்க்கும் ஒற்றுமையை இன்று இளைய சமூகம் உணர்த்தியே வருகிறது. இன்று புலம்பெயர் நாடுகளில் சம்பந்தனின் மகன்களோ.. அமிர்தலிங்கத்தின் மகன்களோ.. சங்கரியின் மகன்களோ போராடவில்லை. தமிழ் தேசிய உணர்வு பெற்ற பெற்றோரின் பிள்ளைகளே தமிழ் இளையோர் என்று போராடுகிறார்கள். சிங்கள அரசின் கோரத் தடை அவர்கள் மீது பாய்ந்ததில் இருந்து அதன் அந்த இளையோரின் போராட்ட ஓர்மம் வெளிப்பட்டிருக்கிறது.

 

தமிழகமும்.. புகலிடமும்.. தாயகமும்.. உலகத் தமிழினமும்.. இன்றும் பெரும்பான்மை எண்ணத்தில் ஒன்றாகவே உள்ளது. சம்பந்தனின் பேட்டிகளை கேட்டு முகம் சுழிக்கும் மக்கள் தான் அதிகம். இன்னும் சம்பந்தன் எவ்வளவு காலத்தை எதுவுமே அற்று கடத்தப் போகிறார் என்றும் பார்க்கலாம். ஆனால் அவரின் நகர்வுகளுக்கு சமாந்திரமாக பெரும்பான்மை மக்கள் நாங்கள் சொன்ன வழியில் நிச்சயம் பணித்துக் கொண்டே இருப்பார்கள்.

 

துரோகிகளும்.. காட்டிக்கொடுப்பாளர்களும் கூட வருவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தால்.. பிரபாகரன் என்ற ஒரு பெரும் வீரனால்.. கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் போராட முடிந்திருக்காது. அவரால் வெல்லவும் முடிந்திருக்கும். ஆனால் மாறி வந்த சர்வதேசச் சூழல் அவரின் சக்திகளுக்கு அப்பால் எதிரிக்கு சாதகமாக அமைந்தமை தான்.. பின்னடைவுகளுக்குக் காரணம்.

 

அந்த நிலையை மாற்றி அமைக்கும் போராட்ட வடிவம் ஒன்றே தமிழ் மக்களுக்கு விடிவை பெற்றுத்தரும். எந்த சர்வதேசம் எம்மை வீழ்த்தியதோ.. அதே சர்வதேசம் குற்ற உணர்வு பெறும் போது.. தன் பிடி அது விரும்பும் களத்தில்.. தளரும் போது.. எமக்கு நிச்சயம் உதவ வேண்டிய சூழல் வரும். அதனை உருவாக்குவதில் தான் எங்கள் வெற்றி தங்கி உள்ளது. அதனை பெரும்பான்மை தமிழ் மக்கள் நிச்சயம் ஒற்றுமையால் சாதிக்க முடியும்..! துரோகிகளை கவனத்தில் எடுத்துக் கொண்டிருந்தால்.. இந்த உலகில் எந்தப் போராட்டமும் வெல்லப்பட முடியாது. அது அரசியல் ஜனநாயகப் போராட்டமாக இருந்தால் கூட..!!! :icon_idea::)

Link to comment
Share on other sites

எம்மால் முடியும் என நினைத்தால் தான் அதனை செயல்படுத்த முடியும். உதாரணமாக யூத மக்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். சொந்த நாடே இல்லாமல் இருந்தார்கள். ஆனால் தன்னம்பிக்கையும் ஒற்றுமையும் அவர்களை இன்று பலம் பொருந்திய நாடாக வைத்திருக்கிறது. ஈழத்தமிழர்களில் கடின உழைப்பு இருக்கிறது ஆனால் ஒற்றுமையை இல்லாமல் பண்ணுவர்கள் ஒரு துளி விசம் பாலில் விழுந்தால் முழுபாலையும் நச்சு ஆக்குவது போல் இருந்து கொண்டு அடிமைதனமே எமக்கு சிறந்த வழி என வழிகாட்டுகிறார்கள்.1956 இல் இருந்தே சிங்களத்திடம் அடிவாங்கி, வாங்கி மரமான மக்களை சொந்த மூளைக்கு வேலை கொடுக்காமல் மற்றவர்களையும் இழுத்து விழுத்துகிறார்கள்.. இவர்களை நினைக்க பரிதாபமாக இருக்கிறது.. புலிகளை பழிவாங்குவதாக நினைத்து சொந்த இனத்தையே பலிவாங்குகிறார்கள்.. மற்ற இனங்களைப்பார்த்தாவது திருந்துகிறார்கள் இல்லை.சிங்கள இனத்திற்கு வக்காலத்து வாங்குகிறார்கள். இனியாவது திருந்துங்கள் மக்காள். எம்மினத்திற்க்காகவே வாழுங்கள்.. முடியாவிட்டால் ஒதுங்குங்கள்..மக்காள்

Link to comment
Share on other sites

எந்தத் திரியை பார்த்தாலும் இந்தியாவை நம்பிறமாதிரி கருத்து வைக்கிறாங்களே.. முடியல்ல.. :D இந்தியா தமிழருக்கு ஆப்பு இறுக்கும் என்பதை மறுக்க முடியாது. ஆனால் அந்த இந்தியாவுக்கே ஆப்பு இறுக்கிறவன் சிங்களவன்.. :o இந்தியாவால் ஒரு துரும்பைத்தன்னும் அசைக்கமுடியாது.. ஆனால் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.

Link to comment
Share on other sites

இந்தியாவால் ஏதும் முடியாத போது இந்தியாவை பார்த்து ஏன் பயப்படுவான்??????

Link to comment
Share on other sites

நாந்தான் அந்த பிசாசு தமிழரை அழிக்குமாறு சிங்களவரை தூண்டிவிடுமோ என்று தான் தமிழர் நாம் பயப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.