Jump to content

பிணங்களை பராமரிக்கும் பணியாளர்கள்: (மோச்சரி பணியாளர்கள்.)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பிணங்களை பராமரிக்கும் பணியாளர்கள்:
5909315039_1f3dc475af_z.jpg

'பிணவறை பணியாளர்கள்' என்று சொல்லும்போதே பலருக்கு பயம் இருக்கும். உயிருக்கு உயிராய் பழகிய நண்பன் ஆனாலும், 10 மாதம் கருவில் சுமந்த தாயாயினும், உயிருடன் இருக்கும் வரை கட்டித்தழுவிய உறவுகள் கூட, இறந்த பிறகு அவர்களது சடலங்களை தொட முன் வருவது இல்லை. இந்த உழைப்பாளிகள் தான் அவற்றைக் கையாள்கிறார்கள். தற்கொலை செய்து கொண்ட உடல், முழுவதும் எரிந்து போன உடல், நோயால் அவதிப்பட்டு உயிரிழந்த உடல், இறந்து பல மாதங்களான உடல், அடையாளம் தெரியாத உடல் என அனைத்து சடலங்களையும் வெட்டுதல், தேவை இல்லாத பாகங்களை அகற்றுதல், விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழந்து சிதைந்து வரும் உடலுக்கு உருவம் கொடுத்தல் போன்ற வேலைகளை இவர்கள் செய்கிறார்கள்.

ஒருவர் இறந்து பல மாதங்கள் ஆகி அழுகிய உடலானாலும் அந்த உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது இவர்களே வரவேண்டும். மருத்துவர்கள் பார்வை சோதனை மட்டுமே நடத்துவார்கள். அது முடித்த பிறகு மீண்டும் அந்த உடலை கோரமாக இல்லாமல் நல்ல முறையில் சீர்படுத்தி உறவினர்கள் கையில் ஒப்படைக்கிறார்கள்.

பொதுவாக சடலங்களை குளிரூட்டப்பட்ட அறை அல்லது குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் வைத்து பராமரிப்பார்கள். தற்போது ஏற்படும் மின் தட்டுப்பாட்டால். சடலங்கள் விரைவில் அழுகி புழுக்கள் வர ஆரம்பித்து விடுகின்றன. அவற்றை சுத்தப்படுத்துதல் மிகவும் கடினம் அவற்றை கையாளுவதில் கொஞ்சமும் அருவருப்பு பயம் இல்லாமல் அவர்கள் கையாள்வதை பார்க்கும்போது அவர்களுக்குள் இருக்கும் சகிப்புத் தன்மை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

தங்கள் கைகளுக்கு கவசம் அணிந்துக்கொள்ளும் இவர்கள், சுவாசக் கவசம் அணிவதில்லை. இந்த வாடை பழகிப் போனதே அதற்குக் காரணம்.

உழைப்பே தெய்வமாக வணங்கி இந்த பணியை மேற்கொள்ளும் இவர்கள், சடலத்தை கையாள்வதற்கு முன் இறந்தவரின் கால்களை தொட்டுக் கும்பிட்ட பின்னரே வேலையை தொடங்குகிறார்கள்.
 
எத்தனையோ சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி அங்கீகாரம் அளிக்கும் அரசாங்கம், இறந்தபின் நமக்கு அங்கீகாரம் கொடுக்கும் இவர்களுக்கு என்ன செய்திருக்கிறது?
 
1002376_642598015806450_1364505790_n.jpg

 

 

நன்றி முகநூல்: பதிவர்: நட்பும்காதலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிணங்களை புசிக்கும் அகோரிகள்,

 

http://www.youtube.com/watch?v=mkbvRyaX8kU&oref=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DmkbvRyaX8kU&has_verified=1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிட்ட‌ த‌ட்ட‌ ஒரு மாத‌மும் ஒரு கிழ‌மையும் இருக்கு வீர‌ர்க‌ளுக்கு ஓய்வில்லாம‌ போட்டிய‌ தொட‌ர்ந்து ந‌ட‌த்துகின‌ம் ஜ‌பிஎல் முடிந்த‌ கையோடு வீர‌ர்க‌ள் க‌ர்விய‌ன் தீவை நோக்கி ப‌ய‌ணிக்க‌னும்........................... நியுசிலாந் Bரீம் பாக்கிஸ்தான் சென்று பாக்கிஸ்தானை வென்று விட்டின‌ம் தொட‌ரையும் வென்று விட்டின‌ம்.................சென்னை அணிக்காக‌ விளையாடும் இர‌ண்டு நியுசிலாந் வீரர்க‌ள் இதுவ‌ரை அடிச்சு ஆட‌ வில்லை இவ‌ர்க‌ளுக்கு ப‌தில் பாக்கிஸ்தான் தொட‌ரில் சிற‌ப்பாக‌ விளையாடின‌ வீர‌ர்க‌ளை நியுசிலாந் தேர்வுக்குழு தேர்வு செய்யுக் கூடும் என்று நினைக்கிறேன்.............................  
    • தமிழரசு கட்சியாலேயே அந்த எதிர்ப்பு  மேற்கொள்ளப்பட்டதாகவே நான் கூறியுள்ளேன். அதை வாசிக்க வில்லையா?  அல்லது வாசித்தும்  ஏதோ எழுதவேண்டும் என்பதற்காக எழுதி உள்ளீர்களா?  இப்போதும் கருத்துக்களை நேர்மையாக எதிர் கொள்ளாமல் தந்தை செல்வாவின் பிரபல்யத்துக்கு  பின்னால் ஒழிய வேண்டிய நிலை.  
    • என் inspiration ஆல் இப்படி பல தரவுகளை ஆராய்ந்தமை அதை நான் உட்பட பலருக்கு அறியதந்தமைக்கு நன்றி. என் கட்டுரை வேறு எந்த பலனை தராவிடிலும் - இது ஒன்றே போதும். நான் எப்பவுமே இவற்றை அங்குதான் போய் சாப்பிடுவது.  தவிரவும் கோப்பித்தூள், மிளகாய்தூள், எல்லாம் அங்கே இருந்து நேரடியாக அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டேன்.
    • அடிப்படை சம்பளமே அந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது.
    • ஒரு பொய்யை மறைக்க இன்னொரு புரட்டு. ஆக இப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திறப்பதற்கான எதிர்ப்பு மேல்த்தட்டு வர்க்க யாழ்ப்பாணிகளினால் இல்லை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழரசுக்கட்சியின் உந்துதலினால் மக்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு என்று வந்துவிட்டது.  கூறப்பட்டது புரட்டு என்றாலும், அதில் அன்றிருந்த தமிழரசுக் கட்சி மீதான காழ்ப்புணர்வு கொட்டிக் கிடக்கிறது.  ஆக, தமிழர் கண்ட ஜனநாயகவழி அரசியல்வாதிகளில் மிகவும் சிறந்தவரான தந்தை செல்வா அன்று ஆரம்பித்த கட்சியும், அதன் செயற்பாடுகளும் உணர்ச்சியால் தூண்டப்பட்டவை என்ற முடிவிற்கு வந்தாயிற்று. அன்றிருந்த தமிழர்களுக்க்கு ஒரே நம்பிக்கையாக இருந்தவர் செல்வா. அவரது அரசியலே தவறு என்றால், இக்கருத்தாளர் அன்று எந்தப் பக்கம் நின்றிருக்கிறார் என்பது தெளிவாகிறது. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.