Jump to content

அலைபாயும் மனத்தால் இலட்சியத்தை அடைய முடியாது

Recommended Posts

chelsea-focus1.png?w=300&h=214நமது எண்ணங்கள் எங்கெங்கோ திரிகின்றன. வினாடிக்கு வினாடி மாறிக்கொண்டே இருக்கின்றன. எந்த ஒரு சிந்னையும், எண்ணமும் தொடர்ந்து 20 வினாடிக்குமேல் தொடராது என்கிறது விஞ்ஞானம்.

எவ்வளவுதான் முனைப்பாக இருந்தாலும் நமது மனமானது, தான் சிந்தித்த பொருளைவிட்டு வேறு ஒன்றுக்கு தாவி விடுகிறது. எனவேதான் நாம் தடுமாறுகிறோம். நமது எண்ணங்கள், ஆசைகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன.

அனைத்து மதங்களிலும் உள்ள நூல்களில் “எண்ணம் அலைந்துகோண்டேதான் இருக்கும். அதை அடக்க முடியாது!” ஆனால் அதை மிகுந்த மனக் கட்டுப்பாட்டினாலேயே வழிக்கு கொண்டுவர முடியும்’ என்று சொல்லபட்டுள்ளது.

எனவே, நமது வருங்கால கொள்கைகளை, இலட்சியத்தை அடைய வேண்டுமெனில் நமது அலையும் மனத்தை முதலில் ஒருமைப்படுத்த வேண்டும்.

நாம் நம்முடைய ஆற்றலை, அறிவை கவனத்தைச் சிதறவிடாது ஒரே செயலில் செலுத்தினால் மட்டுமே அதில் வெற்றபெற முடியும்.

நியூட்டன் என்னும் சிறுவன் ஒரு நாள் காலையில் தனது தோட்டத்தில் அமர்ந்திருந்தான். அவன் ஆப்பிள் மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தான். திடீரென அந்த மரத்திலிருந்து ஒரு ஆப்பில் அவன் மீது விழுந்தது.

நாமாக இருந்தால் என்ன செய்வோம். ஆகா! இந்தப் பழம் இனிக்கும் என்று உடனே அதை சாப்பிட்டுவிட்டு, ஆப்பிளை பற்றியே மறந்துவிடுவோம்.

ஆனால் அந்தச்சிறுவனோ, ‘இந்த ஆப்பிள் பழம் ஏன் கீழே விழ வேண்டும்? மேலே ஏன் செல்லக்கூடாது? என்று விநோதமாகச் சிந்தித்தான்.

தனது மனம், எண்ணம், செயல் மூன்றையும ‘ஆப்பிள் ஏன் கீழே விழுந்தது’ என்று பல காலம் மனத்தை ஓர்மைப்படுத்தி சிந்தித்தான். இயற்கையும் அந்த சிறுவனின் விடாமுயற்சிக்குப் பணிந்து தனது இரகசியத்தை அவனுக்கு விளங்க வைத்து. அதனால்தான் “பூமிக்கு கீழே இழுக்கும் ஆற்றல் (Gravitaion) உண்டு. என்ற தனது புதிய கண்டுபிடிப்பை உலகத்திற்கு கொடுத்தார். அந்தச் சிறுவன்தான் சர். ஐசக் நியூட்டன். அவரது கண்டுபிடிப்புதான் மற்ற கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது.

எனவே நாம் நம்மைச் சுற்றி தினமும் நடக்கின்ற நிகழ்ச்சிகளையும், காட்சிகளையும், கூர்மையாக மனம் ஒருமைப்படுத்தி (Concentration ) பார்த்தோமேயானால், நமது வெற்றிக்கான அடித்தளம், தானாகவே நமக்குத் தெரியும்.

ஒரு ஊசியை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் ஒரு முனை கூர்மையாக இருப்பதால்தான் மட்டுமே அதனால் துணிக்குள் நுழைந்து தைக்க முடிகிறது. ஆனால் அதே ஊசியின் பின்புறம் கொண்டு நீங்கள் எதுவுமே செய்ய முடியாததற்கு காரணம்? நமக்குத் தெரிந்ததுதான்.. முனை கூர்மையில்லாததுதான்.

எனவே நமது எண்ணங்களைக் குவித்து, அதை ஊசிமுனை மாதிரி கூர்மையாக வைத்துக்கொண்டால் தான் நமது இலட்சியங்கள் எல்லாம் நிறைவேறும். அதை விட்டு விட்டு இலட்சியம், இலட்சியம் என்று கூறிக்கொண்டே வெறுமனே செயலாற்றுவதில் பயன் ஒன்றும் ஆகப் போவதில்லை.

மனிதன் சந்தர்ப்பங்களின் படைப்பு அல்ல. வெற்றி பெறும் மனிதன், சந்தர்ப்பங்களைத் (வாய்ப்புகளை) தானே படைத்துக்கொள்கிறான் என்பதை உணரவேண்டும்.

ஆங்கில அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் என்ற மேதை மிகமிக வறுமையில் வாடியவர்தாம். அவரால் எப்படி உலகத்தின் புகழ்பெற்ற முதல் ஆங்கில அகராதியை எழுத முடிந்தது. அவரது தணியாத இலக்கியக் காதல் தான் அதற்குக் காரணம். தான் கொண்ட இலட்சியத்தின் மீது கொண்ட பிடிவாத்த்தால்தான். பலவருட காலம் உழைத்து உலகத்தாருக்கு ஒரு அகராதியை வழங்க முடிந்தது.!!!

Link to comment
Share on other sites

யாழ்அன்பு,

தயவு செய்து உங்கள் ஆக்கத்தின் மூலத்தை குறிப்பிடுங்கள்

http://www.thangampa...og-post_13.html#

அது அந்த ஆக்கத்தை படைத்தவனுக்கு பெருமை சேர்க்கும்.

அலைபாயும் மனத்தால் இலட்சியத்தை அடைய முடியாது.

நமது எண்ணங்கள் எங்கெங்கோ திரிகின்றன. வினாடிக்கு வினாடி மாறிக்கொண்டே இருக்கின்றன. எந்த ஒரு சிந்னையும், எண்ணமும் தொடர்ந்து 20 வினாடிக்குமேல் தொடராது என்கிறது விஞ்ஞானம். எவ்வளவுதான் முனைப்பாக இருந்தாலும் நமது மனமானது, தான் சிந்தித்த பொருளைவிட்டு வேறு ஒன்றுக்கு தாவி விடுகிறது. எனவேதான் நாம் தடுமாறுகிறோம். நமது எண்ணங்கள், ஆசைகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன.

பகவான் கிருஷ்ணன் கீதையில் கூறுகிறார். 'பார்த்தா, எண்ணம் அலைந்துகோண்டேதான் இருக்கும். அதை அடக்க முடியாது! ஆனால் அதை மிகுந்த மனக் கட்டுப்பாட்டினாலேயே வழிக்கு கொண்டுவர முடியும்'

krishnan_1.png கீதை உபதேசம் எனவே, நமது வருங்கால கொள்கைகளை, இலட்சியத்தை அடைய வேண்டுமெனில் நமது அலையும் மனத்தை முதலில் ஒருமைப்படுத்த வேண்டும்.

நாம் நம்முடைய ஆற்றலை, அறிவை கவனத்தைச் சிதறவிடாது ஒரே செயலில் செலுத்தினால் மட்டுமே அதில் வெற்றபெற முடியும்.

நியூட்டன் என்னும் சிறுவன் ஒரு நாள் காலையில் தனது தோட்டத்தில் அமர்ந்திருந்தான். அவன் ஆப்பிள் மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தான். திடீரென அந்த மரத்திலிருந்து ஒரு ஆப்பில் அவன் மீது விழுந்தது.

நாமாக இருந்தால் என்ன செய்வோம். ஆகா! இந்தப் பழம் இனிக்கும் என்று உடனே அதை சாப்பிட்டுவிட்டு, ஆப்பிளை பற்றியே மறந்துவிடுவோம்.

ஆனால் அந்தச்சிறுவனோ, 'இந்த ஆப்பிள் பழம் ஏன் கீழே விழ வேண்டும்? மேலே ஏன் செல்லக்கூடாது? என்று விநோதமாகச் சிந்தித்தான்.

தனது மனம், எண்ணம், செயல் மூன்றையும 'ஆப்பிள் ஏன் கீழே விழுந்தது' என்று பல காலம் மனத்தை ஓர்மைப்படுத்தி சிந்தித்தான். இயற்கையும் அந்த சிறுவனின் விடாமுயற்சிக்குப் பணிந்து தனது இரகசியத்தை அவனுக்கு விளங்க வைத்து. அதனால்தான் "பூமிக்கு கீழே இழுக்கும் ஆற்றல் (Gravitaion) உண்டு. என்ற தனது புதிய கண்டுபிடிப்பை உலகத்திற்கு கொடுத்தார். அந்தச் சிறுவன்தான் சர். ஐசக் நியூட்டன். அவரது கண்டுபிடிப்புதான் மற்ற கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது.

samuel_johnson.png சாமுவேல் ஜான்சன் எனவே நாம் நம்மைச் சுற்றி தினமும் நடக்கின்ற நிகழ்ச்சிகளையும், காட்சிகளையும், கூர்மையாக மனம் ஒருமைப்படுத்தி (Concentration ) பார்த்தோமேயானால், நமது வெற்றிக்கான அடித்தளம், தானாகவே நமக்குத் தெரியும்.

ஒரு ஊசியை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் ஒரு முனை கூர்மையாக இருப்பதால்தான் மட்டுமே அதனால் துணிக்குள் நுழைந்து தைக்க முடிகிறது. ஆனால் அதே ஊசியின் பின்புறம் கொண்டு நீங்கள் எதுவுமே செய்ய முடியாததற்கு காரணம்? நமக்குத் தெரிந்ததுதான்.. முனை கூர்மையில்லாததுதான்.

எனவே நமது எண்ணங்களைக் குவித்து, அதை ஊசிமுனை மாதிரி கூர்மையாக வைத்துக்கொண்டால் தான் நமது இலட்சியங்கள் எல்லாம் நிறைவேறும். அதை விட்டு விட்டு இலட்சியம், இலட்சியம் என்று கூறிக்கொண்டே வெறுமனே செயலாற்றுவதில் பயன் ஒன்றும் ஆகப் போவதில்லை.

மனிதன் சந்தர்ப்பங்களின் படைப்பு அல்ல. வெற்றி பெறும் மனிதன், சந்தர்ப்பங்களைத் (வாய்ப்புகளை) தானே படைத்துக்கொள்கிறான் என்பதை உணரவேண்டும்.

ஆங்கில அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் என்ற மேதை மிகமிக வறுமையில் வாடியவர்தாம். அவரால் எப்படி உலகத்தின் புகழ்பெற்ற முதல் ஆங்கில அகராதியை எழுத முடிந்தது. அவரது தணியாத இலக்கியக் காதல் தான் அதற்குக் காரணம். தான் கொண்ட இலட்சியத்தின் மீது கொண்ட பிடிவாத்த்தால்தான். பலவருட காலம் உழைத்து உலகத்தாருக்கு ஒரு அகராதியை வழங்க முடிந்தது.!!!

thread_and_needli.png ஊசி நூல் samuel-johnson%2527s-dictionary.png சாமுவேல்ஸ் டிக்னரி

orignal_page_samuel-johnson%2527s-dictionary.png ஒரிஜினல் சாமுவேல் டிக்னரியின் முதல் பக்கம்.

ஆக்கம் - தங்கம்பழனி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலை பாயும் மனதால் எதையும் சாதிக்கமுடியாது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.