Jump to content

யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன் ஐயா!

உந்த அமாவாசை பறுவத்துக்கு மட்டும் வந்து குலைக்கிறவையாலைதான் பிரச்சனை வருது போலை கிடக்கு :lol: இல்லாட்டி பாவிக்க வேண்டிய குளிசையளை நேரகாலத்துக்கு எடுக்காதவையும் இஞ்சைவந்து கிறுக்கிறதாலையும் பிரச்சனை வருது போலைகிடக்கு :lol:

என்ன கோதாரியோ எனக்கும் பின் வரிசையிலை நிண்டு குலைச்சு குலைச்சு பழகிப்போச்சு :lol: என்ரை வாயும் சும்மா கிடக்காது பழஞ்சீலை கிழிஞ்சமாதிரி எப்ப பாத்தாலும் புறுபுறுத்துக்கொண்டு :(

நீங்க முன்வரிசைக்கு வாங்கோ

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தின் வேகம் கொஞ்சம் குறைந்தா மாதிரி இருக்கே.......................

Link to comment
Share on other sites

திரு மோகன் அவர்களே........

உங்களின் இந்த முடிவை சற்று நேரத்துக்கு முன் தான் பார்த்தேன். வேதனையாகவும் அதே நேரம் அதிர்ச்சியாகவும் இருந்தது. உலகெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் தினமும் வந்து ஒரே இடத்தில் அனைத்து கடந்த, சமகால செய்திகளையும் தெரிந்துகொள்ளும் இடம் தான் யாழ் இணையம். புலம் பெயர் நாடுகளில் சிறீ லங்காவின் குற்றச்சாட்டுக்களால் சில தொலைக்காட்சி ஒளிபரப்புக்கள் நிறுத்தப்பட்டன. இதனை நீங்களும் அறிவீர்கள். இன்று தமிழர்களை ஒருங்கிணைக்கும் இடமாக திகழும் யாழ் இணையம் நிறுத்தப்பட்டால் அது எமது விடிவுக்கான எதிகால முன்னெடுப்புகளுக்கு மிகப்பெரும் தடையாக இருக்கும்.

எமது தாயக அவலங்களை உலக தமிழனுக்கு எடுத்துச்சென்ற ஒரு ஊடகம் தனது செயற்பாட்டினை நிறுத்தினால் எதிர்காலத்தில் சிங்களவர்களின் பரப்புரைகள் மேலோங்கிவிடும். நிச்சயமாக இந்த இணையம் உங்களுக்கு அதிக பாரமாக இருக்கும் இது எங்களுக்கு தெரியும். இருந்தாலும் தாயக விடிவுக்கு உங்களின் பணி இன்றி அமையாத ஒன்று. இதனால் தயவு செய்து நிறுத்திவிடாதீர்கள் என்பது எனது பணிவான வேண்டுகோள்.

அலட்டல்களுக்கு கருத்துக்களம் ஏற்ற இடம் இல்லை. தயவு செய்து கருத்துக்களத்தில் தலைப்போடு தொடருங்கள். மட்டுறுத்தினருக்கு தலையிடிகளை கொடுக்காதீர்கள். இதனை பயன்படுத்திகொண்டு துரோகிகளும், தமிழின எதிரிகளும் இணையத்தை நிறுத்த முயல்வர். தயவு செய்து நாம் அவர்களுக்கு இடமளிக்க கூடாது.

என்னால் முடிந்தவரை எதிர்காலத்தில் கண்ணியமாக செயற்பட விரும்புகின்றேன்.

உங்கள் முடிவை எமது தாயகத்தில் அல்லலுறும் தாயக உறவுகளையும், ஏதிலிகளாக உலகமெங்கும் அலையும் எம் போன்றவர்களையும் நினைத்து மீள் பரிசீலணை செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தின் வேகம் கொஞ்சம் குறைந்தா மாதிரி இருக்கே.......................

பற்ரி (Battery) இறங்கீட்டுதாம் :lol:

Link to comment
Share on other sites

இங்கு களத்திலும், தனிமடல், மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் messenger மூலம் கருத்துப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

கருத்துக்களத்தில் நான் செலவு செய்யும் நேரம் மிக அதிகம் அத்துடன் பணம். இவ்வளவு நேரம், பணம் செலவு செய்து எந்தளவுக்கு பயன் எனப் பார்த்தால் அதன் அளவு மிகவும் குறைவு. ஒரு குறிப்பிட்ட அளவு பயனான கருத்துக்களைத் தவிர அதிகமாக தூரநோக்கற்றதும், அரட்டையானதுமான கருத்துக்கள், அவைகளை மட்டுறுத்த வேண்டிய தேவைகள் போன்ற சூழலினாலேயே களத்தினை தொடர்ந்து நடாத்துவதா, விடுவதா என்ற ஒரு மனப் போரட்டம் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. அவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே நேற்று "யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா?" என தெரிவித்திருந்தேன். எனினும் அனைவரினதும் வேண்டுகேளுக்கிணங்க நிச்சயம் சில மாற்றங்களுடன் களம் தொடர்ந்து இயங்கும்.

கருத்துக்களத்தில் உடனடியாக இல்லாதுவிடினும் படிப்படியாக நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு வழி செய்யப்படும். அம் மாற்றங்களை ஏற்படுத்தவும் சிறிது கால அவகாசம் தேவைபடுகின்றது. அதற்கு உங்கள் ஆலோசனைகளை தாராளமாக இங்கோ, அல்லது தனிமடல் மூலமாகவே அறியத் தாருங்கள்.

இங்கு களத்தில் யாரையும் கருத்துக்கள் எழுத வேண்டாம் என்று சொல்லவில்லை. ஒரு விடயம் தொடர்பாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணங்கள், கருத்துக்கள் இருக்கும். கருத்துக்களை எழுதுங்கள். அவற்றை ஆரோக்கியமாக, எழுத்து நாகரீகத்திற்கு உட்பட்டு எழுதுங்கள். நிச்சயமாக அவை வரவேற்கப்படும்.

உங்கள் ஒத்துழைப்புத்தான் சரியான முறையில் களத்தினைக் கொண்டு நடாத்த உதவும். ஒருவர் தவறாகக் கருத்தெழுதினால் அதை நிர்வாகத்திற்கு சுட்டிக் காட்டுங்கள். முன்னர் குறிப்பிட்டது போல தொடர்ச்சியாக களத்தில் மட்டுறுத்துனர் யாரும் இருப்பதில்லை. அதனால் தவறான கருத்து நீக்கப்படுவதற்கு காலதாமதமாகலாம். அதற்கான சந்தர்ப்பத்தினையும் நிர்வாகத்திற்கு வழங்குங்கள்.

அடடா பதிவுகளை முழுமையாக பாருங்க.. யாழ்களம் தொடர்ந்து நூறாண்டு காணும். :lol:

Link to comment
Share on other sites

கறுப்பி அக்கா சொன்னமாதிரி வேகம் இண்டைக்கு குறைவாகத்தான் இருக்கிது. நான் நினைச்சன் எனக்கு மாத்திரம்தான் இப்பிடியாக்கும் எண்டு.

Link to comment
Share on other sites

நான் களத்திற்கு அடிக்கடி வருபவன், ஆனால் கருத்துக்கள் எதனையும் பதிவு செய்வதில்லை. எனக்கும் மோகன் அண்ணாவின் திடீர் முடிவு கவலையாக இருந்தது....

Link to comment
Share on other sites

நான் இணையத்தில் தமிழ் எழுதி அழித்து தவழ்ந்து விளையாடி ஓடி ஆடிய களம் மூடப்பட போகிறது என்ற கதையை இப்பத்தான் பார்த்தன் ...அது தொடர்ந்து இயங்கும் என்ற செய்தி கேட்டு மிக்க மகிழ்ச்சி..

(இப்ப தான் பார்த்தன் ...ஏன் இவ்வளவு நாளும் இது தெரியாமால் நீர் கோமாவிலையோ இருந்தனீர் என்று யாரும் ஏச வேண்டாம் :rolleyes: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இணையத்தில் தமிழ் எழுதி அழித்து தவழ்ந்து விளையாடி ஓடி ஆடிய களம் மூடப்பட போகிறது என்ற கதையை இப்பத்தான் பார்த்தன் ...அது தொடர்ந்து இயங்கும் என்ற செய்தி கேட்டு மிக்க மகிழ்ச்சி..

(இப்ப தான் பார்த்தன் ...ஏன் இவ்வளவு நாளும் இது தெரியாமால் நீர் கோமாவிலையோ இருந்தனீர் என்று யாரும் ஏச வேண்டாம் :rolleyes: )

ஆஆஆஆஆஆ..........சின்னக்குட்டி சார் வாயில் வருது உங்களை பேசனும் போல.............

Link to comment
Share on other sites

தற்போதுதான் மோகனின் இச்செய்தி பார்த்தேன்! முதலில் முழு கருத்தையும் வாசிப்பதற்கு முன் சில .....

என் போன்றோருக்கு கணனியில் தமிழ் எழுதப்பழக்கியதே, யாழ்களம்தான்!! அதை மறவோம்!!!

மோகனின் பெருஞ்சுமைகளில், சிறிதாவது சுமக்க தயார், மோகன் விரும்பினால்!!

Link to comment
Share on other sites

மோகன் அண்ணாவிற்கு நன்றி மீண்டும் இயங்கும் என்று வாக்களித்ததற்கு. என்னால் தவறு வராது என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் களத்தில் யாருக்கும் அறிவுரை சொல்ல தெரியாது எனவே மீண்டும் நன்றி மோகன் அண்ணா.

Link to comment
Share on other sites

ஆஆஆஆஆஆ..........சின்னக்குட்டி சார் வாயில் வருது உங்களை பேசனும் போல.............

ஹி. ஹி .ஹி.....என்னங்க..நீங்க.... வாயில் வருது என்று கொ்ண்டு :( ..பொதுவாக வாயிலை வருது என்று ....பாவிப்பது? :rolleyes:

ஏதாவது கெட்ட வார்த்தையாலை திட்ட போ்றீங்களா? :D:(

Link to comment
Share on other sites

யாழினால்............... எமது தேசிய நலனுக்கு நன்மை எதுவும் இருப்பதாக தெரியவில்லை. புலிக்கெதிரான விதண்டாவாதங்களை அனுமதிப்பதையும் இந்தியாவுக்கெதிரான கோபத்தை அழிப்பதும் ஏன் எண்டு புரியவில்லை(!). ஆனால் கணனியில் தமிழ் எழுதப்பழக்கியதே, யாழ்களம்தான்!! அதை மறவோம்!! :rolleyes:

Bye, Bye, Yarl.com.............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது தான் இந்தச் செய்தியைப் பார்த்தேன். இறுதியில் நல்ல முடிவுக்கு மகிழ்ச்சி. நான் யாழ் களத்தின் பல வருட கால வாசகன். ஆனால் உறுப்பினராகி கொஞ்சக் காலம்தான் நான் பல பேருக்கு இந்தக் களத்தைப் பாரக்குமாறு தூண்டியிருக்கிறேன்.

கு.சா இரண்டு வரியில் பல நூறு கருத்து வர எழுதுபவர். நகச்சுவையாகவும் எழுதுபவர்.அவர் வர மாட்டேன் என்று குழந்தை மாதிரி கண்ணீர் மல்க எழுதியது கவலையைத் தந்தது. மீண்டும் வந்ததற்கு நன்றி.

Link to comment
Share on other sites

I am very glad that Mohan has changed his mind.

As a long standing member I never miss to visit yarl.com a single day.

Though I can't write in tamil , Yarl.com is my home page for last few years.

Good job Mohan , Keep it up

-Thevaki Acca-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

I am very glad that Mohan has changed his mind.

As a long standing member I never miss to visit yarl.com a single day.

Though I can't write in tamil , Yarl.com is my home page for last few years.

Good job Mohan , Keep it up

-Thevaki Acca-

உங்கட பெயர் தேவகியோ தமிழ் தெரியாதோ உங்களுக்கு இங்கிலீசு தெரியும் ஆனால் எனக்குத் தெரியாது ஒருக்காத் தமிழில பதியுங்கோவன்

பிழையென்டால் மன்னிக்கவும் சகோதரி(ரன்)

Link to comment
Share on other sites

வேற ஒண்டும் இல்லை புஸ்பாவிஜி. இஞ்ச நீங்களும் மற்றும் பலரும் யாழில தினமும் எழுதுகின்ற கட்டுரைகளை, அரசியல் ஆய்வுகளை தான் மிகவும் இரசிச்சு படிப்பதாகவும், அவை தொடரவேண்டும் எண்டும், மேலும் அதற்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் தேவகி அக்கா சொல்லி இருக்கிறா.

Link to comment
Share on other sites

உங்கட பெயர் தேவகியோ தமிழ் தெரியாதோ உங்களுக்கு இங்கிலீசு தெரியும் ஆனால் எனக்குத் தெரியாது ஒருக்காத் தமிழில பதியுங்கோவன்

பிழையென்டால் மன்னிக்கவும் சகோதரி(ரன்)

I am sorry puspaviji,

I did not say I don't know tamil . I said I don't know how to type in Tamil

Thevaki Acca

Link to comment
Share on other sites

I am sorry puspaviji,

I did not say I don't know tamil . I said I don't know how to type in Tamil

Thevaki Acca

களத்தில் நீண்ட கால உறுப்பினர், களத்தை தினமும் வாசிப்பதாக சொல்லும் நீங்கள், இதுவரை களத்தில் தமிழில் எவ்வாறு எழுதுவது என பலருக்கும் கொடுக்கப்பட்ட விளக்கங்களை காணாதது ஆச்சரியம். அல்லது உங்களின் ஆர்வமின்மை என்பதா? புலத்தில் தமிழ் படித்து தமிழில் கதை எழுதும் வல்லமையோடு சிலர் உருவாகும் வேளை, தமிழை எப்படி தட்டச்சுவது என்று தெரியாமலும் பலர் இருக்கிறார்கள் என்ற நிதர்சனத்தையும் ஏற்கத்தான் வேண்டும்.

http://www.yarl.com/forum3/index.php?autom...amp;showentry=1

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே சென்று http://sathesan.tripod.com/tamilkeyboard.html எந்த எந்த எழுத்துக்கு எந்தெந்த தமிழ் எழுத்து என்று தெரிந்து கொண்டு மெது மெதுவாக பழகுங்கள் பிழைவிட்டால் பரவாயில்லை முதலில் எல்லோரும் அப்படித்தான் போகப்போக பழகிவிடும் தமிழச்சியே தமிழ் தெரிவது அவசியம் மற்றதெல்லாம் நமக்குப் பின்னால் வந்தவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சென்று http://sathesan.tripod.com/tamilkeyboard.html எந்த எந்த எழுத்துக்கு எந்தெந்த தமிழ் எழுத்து என்று தெரிந்து கொண்டு மெது மெதுவாக பழகுங்கள் பிழைவிட்டால் பரவாயில்லை முதலில் எல்லோரும் அப்படித்தான் போகப்போக பழகிவிடும் தமிழச்சியே தமிழ் தெரிவது அவசியம் மற்றதெல்லாம் நமக்குப் பின்னால் வந்தவை

அது தானே தேவகி ....

இப்ப குட்டிப்பையனே பிச்சு வாங்குறான் .

முயற்சி திருவினையாக்கும் .

இதுக்கெல்லாம் யோசிக்கலாமா ? :lol:

Link to comment
Share on other sites

மோகன் அவர்களே உங்கள் செய்தி தற்போதுதான் பார்த்தேன்...மிக கவலையாகவும் வேதனையாகவும் இருக்கிறது...

எந்த சூழ் நிலையிலும் யாழ்களத்தை நிறுத்தவேண்டாம்.. நீங்கள் ஒரு நல்ல நேக்கத்திற்காக பல வருடங்களாக உலகத்தமிழனத்தை ஒருங்கிணைத்து வைத்து சேவை செய்து வரும் யாழ்களம்.

அண்மைக்காலமாக சிலரின் அறியாமை, சுதந்திரத்தை இழக்கப்போகும்வரை அதனை தவறாகபயன்படுத்தும் மனப்பாண்மை, எதிரியின் சூழ்ச்சிக்கு துணைபோகும் திட்டமிட்ட குழப்பிகள்,தற்புகழ்ச்சிபிடி

Link to comment
Share on other sites

தொடரனும் மோகன் அண்ணா.

உங்கள் இந்த முடிவு

யாழை உண்மையாக நேசிப்போரை இனம் கானவைத்தது.

தொடர்க உங்கள் பணிகள்..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழினால்............... எமது தேசிய நலனுக்கு நன்மை எதுவும் இருப்பதாக தெரியவில்லை. புலிக்கெதிரான விதண்டாவாதங்களை அனுமதிப்பதையும் இந்தியாவுக்கெதிரான கோபத்தை அழிப்பதும் ஏன் எண்டு புரியவில்லை(!). ஆனால் கணனியில் தமிழ் எழுதப்பழக்கியதேஇ யாழ்களம்தான்!! அதை மறவோம்!!

வெட்டி ஒட்டுவதாக நினைக்க வேண்டாம்

என்கருத்தும் இதுவே

ஆனால் பொறுத்தார் பூமியாழ்வார்

இப்போ உங்கள் சேவையின் மறுபக்கத்தை நாம் சோதிக்கும்வேளைஇது

ஏனெனில் முடிவு எடுத்தபின்பே அறிவிக்கப்பட்டுள்ளது

பொறுத்துப்பாருங்கள் என்பதே என் கருத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழினால்............... எமது தேசிய நலனுக்கு நன்மை எதுவும் இருப்பதாக தெரியவில்லை. புலிக்கெதிரான விதண்டாவாதங்களை அனுமதிப்பதையும் இந்தியாவுக்கெதிரான கோபத்தை அழிப்பதும் ஏன் எண்டு புரியவில்லை(!). ஆனால் கணனியில் தமிழ் எழுதப்பழக்கியதே, யாழ்களம்தான்!! அதை மறவோம்!! :lol:

Bye, Bye, Yarl.com.............................

இது பனங்காய் , சொன்ன மாதிரி இருக்குது , குகதாசன் .

உண்மை தான் பனங்காய் கொஞ்சம் , பொறுத்திருக்கலாம் .

கவலைப்படாதீர்கள் அவர் மீண்டும் வருவார் ,

என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.