Jump to content

மாதம் 7 லட்சம் லீற்றர் மது குடிக்கின்றனர் யாழ்.மக்கள்; நகர வாசிகளே பெரும் குடிகாரர்கள்

Recommended Posts

மதுபானம் அதிகளவில் விற்பனையாவது தொடர்பாக சோதிநாதனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

drinking_problem%20(1).jpg

மாதாந்தம் சராசரியாக 2 லட்சத்து 82 ஆயிரம் லீற்றர் சாராயம் விற்பனையாகி றது. 4 லட்சத்து 9 ஆயிரம் லீற்றர் ஏனையவகை மதுபானம் விற்பனையாகிறது. இதனுள் பியர், விஸ்கி, பிரன்டி, ஜின், ரம் எனப் பலவகைகள் உள்ளடங்குகின்றன.

யாழ். மதுவரி நிலையம் தவிர்ந்த ஏனைய மதுவரி நிலையங்களில் 30 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 35 ஆயிரம் லீற்றர் வரையான சாராயம் விற்பனை யாகின்றன. 55 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 60 ஆயிரம் லீற்றர் வரையான ஏனைய மதுபான வகை கள் விற்பனையாகின்றன. எனத் தெரிவித்தார்.

யாழ்.மதுவரி நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஜனவரியில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 904 லீற்றர் மதுபான வகையும், பெப்ர வரியில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 450 லீற்றர் மதுபான வகைகளும் விற்பனையாகியுள்ளன என்று பிரதம மதுவரிப் பரிசோதகர் என்.கிருபாகரன் தெரிவித்தார்.

சாராயம் ஜனவரியில் ஒரு லட்சத்து 77 ஆயிரம் லீற்றரும் பெப்ரவரியில் 82 ஆயிரத்து 775 லீற்றர் விற்பனையாகியுள்ளது. கள்ளு ஜனவரியில் 38 ஆயிரத்து 900 லீற்றரும் பெப்ரவரியில் 70 ஆயிரத்து 900 லீற்றரும் விற்பனையாகியுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணத்துக்கு வரும் காலங்களில் மதுபான விற்பனை அதிகரிக்கின்றன. சுமார் 10 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 15 ஆயிரம் லீற்றர் வரையில் இத்தகைய காலங்களில் அதிகரித்து விற்பனையாகின்றது.

யாழ். மதுவரி நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தென்னை பனை, மரங்கள் அதிகளவில் காணப்படுவதனால் அத்தகைய இடங்களில் கள்ளு விற்பனை அதிகளவில் இடம்பெறுகிறது. சாராயம் மற்றும் ஏனைய மதுபான வகைகளின் விற்பனையை கள்ளின் விற்பனையும் தீர்மானிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு ஆண் ஒருவர் 3 யுனிற் அற்ககோலுக்கு அதிகமாகவும் பெண் ஒருவர் 2 யுனிற் அற்க கோலுக்கு அதிகமாகவும் அருந்துவார்களானால் அவர்களுக்கு ஈரல் பாதிப்பு உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

சாராயம் மற்றும் ஏனைய மது பானவகைகள் வேறுபட்ட அளவில் அற்ககோல் அளவைக் கொண்டுள்ளன. அதனை அவதானிக்காது அளவுக்கதிகமாக மது அருந்தும் போது அருந்துபவர்களுக்குத் தெரியாமலேயே நோய் அவர்களைப் பற்றிக் கொள்கிறது.

தற்காலத்தில் வயது வந்தவர்களுக்கு நிகராக 21 வயதுக்குட்பட்டவர்களும் தாராளமாக மது பாவிக்கிறார்கள். கடைகளில் நின்று மது அருந்தாது ரின்கள், போத்தல்களாக வேண்டிச் சென்று வீதிச் சந்திகளில் வைத்து அருந்துகிறார்கள்.

இதனைச் சமூகத்தவர்கள் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என்று அந்த வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=63247960508441073

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதன் மூலம் கிடைக்கும் வருமானம் சிங்கள ஆக்கிரமிப்பாளனையும்... அவனோடு ஒட்டிப் பிழைக்கும்.. ஒட்டுக்குழு சமூக விரோதிகளையும் இன விரோதிகளையுமே போய் சேர்கிறது..! மக்கள் இது குறித்து சிந்திக்க வழிகாட்டுவது அவசியம். :icon_idea::(

Link to comment
Share on other sites

யாழில் உள்ள சந்திரசிறியும், அங்குள்ள 40000 + ஆக்கிரமிப்பு இராணுவமும், முளைக்கும் சீனர்களும் அகற்றப்படல் வேண்டும்.

Link to comment
Share on other sites

இதன் மூலம் கிடைக்கும் வருமானம் சிங்கள ஆக்கிரமிப்பாளனையும்... அவனோடு ஒட்டிப் பிழைக்கும்.. ஒட்டுக்குழு சமூக விரோதிகளையும் இன விரோதிகளையுமே போய் சேர்கிறது..! மக்கள் இது குறித்து சிந்திக்க வழிகாட்டுவது அவசியம். :icon_idea::(

அப்போ குடித்தால் பறவாயில்லை, ஆனால் குடிக்கிறதால சிங்களவனுக்கும் ஓட்டுக்குழுக்களுக்கும் தான் வருமானம் என்றகவலையோ? :icon_idea::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாதம் 7 லட்சம் லீற்றர் மது குடிக்கின்றனர் யாழ்.மக்கள்; நகர வாசிகளே பெரும் குடிகாரர்கள்

முந்தி....அதுதான் எங்கடைகாலத்திலை....பனை,தென்னையாலை இறக்கினவுடனை முட்டியாடை சாத்தினதையெல்லாம் எவன் கணக்கெடுத்தவன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்ன முட்டியாடை சாத்தினது கு.சா தாத்தா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ குடித்தால் பறவாயில்லை, ஆனால் குடிக்கிறதால சிங்களவனுக்கும் ஓட்டுக்குழுக்களுக்கும் தான் வருமானம் என்றகவலையோ? :icon_idea::D

:rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ குடித்தால் பறவாயில்லை, ஆனால் குடிக்கிறதால சிங்களவனுக்கும் ஓட்டுக்குழுக்களுக்கும் தான் வருமானம் என்றகவலையோ? :icon_idea::D

குடிக்கிறதால வாற ஆபத்தைக் குறைக்கனுன்னா.. முதலில் குடிக்கத் தூண்டுறவனை தூக்கி வெளில போடனும். அதைச் செய்யாமல் குடியை குறைக்கவோ... நிறுத்தவோ முடியாது..!

மது.. சிகரெட்.. போதை..மாது இவற்றின் தீமை அறிந்தும் விற்பனை செய்கிறார்கள் அல்லது செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என்றால் அதற்கு இரண்டு காரணம் தான் முக்கியமாக இருக்க முடியும்..

1. வருமானம்..!

2. சமூகச் சீரழிவை ஊக்குவித்தல்.. அதன் மூலம் வேறு சிலர் நன்மை அடைதல்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் பேத்தை அமைச்சரின் குடியையும் சேர்த்தால் மில்லியன் லீட்டர் தாண்டும். 

Link to comment
Share on other sites

குடிக்கிறதால வாற ஆபத்தைக் குறைக்கனுன்னா.. முதலில் குடிக்கத் தூண்டுறவனை தூக்கி வெளில போடனும். அதைச் செய்யாமல் குடியை குறைக்கவோ... நிறுத்தவோ முடியாது..!

மது.. சிகரெட்.. போதை..மாது இவற்றின் தீமை அறிந்தும் விற்பனை செய்கிறார்கள் அல்லது செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என்றால் அதற்கு இரண்டு காரணம் தான் முக்கியமாக இருக்க முடியும்..

1. வருமானம்..!

2. சமூகச் சீரழிவை ஊக்குவித்தல்.. அதன் மூலம் வேறு சிலர் நன்மை அடைதல்..!

குடிப்பதை நிறுத்தும் போராட்டத்தை உடனே தொடங்குவோம் அதையும் இன்றே நாம் வாழும் நாடுகளில் இருந்து தொடங்வோம்.

:D:lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடிப்பதை நிறுத்தும் போராட்டத்தை உடனே தொடங்குவோம் அதையும் இன்றே நாம் வாழும் நாடுகளில் இருந்து தொடங்வோம்.

:D:lol::icon_idea:

அடுத்தவன்.. அதை அவங்களுக்கு ஏற்ற மாதிரி.. வடிவாவே பார்த்துக்குவாங்க.. முதலில.. உள் வீட்டில உள்ள பிரச்சனைகளுக்கு முடிவு கட்டிட்டு.. ஊர் அலுவலைப் பார்க்கிறது நல்லம்..! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன முட்டியாடை சாத்தினது கு.சா தாத்தா?

அதொண்டுமில்லை பாருங்கோ! மப்பிலை மதிகளண்டு எழுத்துமாறிப்போச்சுது......முட்டியாடை எண்டதை முட்டியோடை எண்டு மாத்தி வாசியுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த எழு லட்சத்தில வெளிநாட்டால வந்த ஆக்கள் கொண்டுவந்தது இல்லை அதையும் சேர்த்தால் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த எழு லட்சத்தில வெளிநாட்டால வந்த ஆக்கள் கொண்டுவந்தது இல்லை அதையும் சேர்த்தால் :)

அதை விட தவறணைக்கு வராமல் பனைக்கு கீழை இருந்து குடிச்சதும் கணக்கிலை இல்லையே தாத்தா? :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.