Jump to content

யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா?


Recommended Posts

எதிர்பார்த்த நோக்கங்கள், இலக்குகள் முழுமையாக அடைய முடியாமையாலும், சரியான முறையில் யாழ் இணையம் பயன்படுத்தப்படாது வெறும் விதண்டாவாதங்களும், தனிப்பட்ட தாக்குதல்களும், அலட்டல்களும் இன்னும் வேண்டத்தகாத பல விடயங்களினாலும் மற்றும் எது வேண்டுமானாலும் எழுதலாம், எப்படியும் எழுதலாம் என்ற மனப்போக்கும், விபரீதமான கருத்துக்களை நீக்கும்போது புரிந்துணர்வற்ற தன்மையில் கள உறுப்பினர்கள் இருப்பதாலும் களத்தினை பெரும் நேரம், பணம் செலவு செய்யுது தொடர்வது பயனற்றது என்று கருதுகின்றேன். அதனால் யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா என்ற ஒரு நிலையினை எடுக்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இது பற்றி உங்கள் அபிப்பிராயங்கள் வரவேற்கப்படுகின்றது.

களத்தில் ஒரு சில நல்ல கருத்தாளர்கள் இருக்கின்றார்கள் என்றாலும் அவர்களுக்காக மட்டும் தொடர்ந்து நடாத்துவது முடியாத காரியம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தயவுடன் வேண்டிக் கொள்கின்றேன்.

அதேவேளை தளம் கைவிடப்படும் நிலைக்கு வந்தால் எந்த ஒரு காரணத்தினாலும் இன்னொருவரிமும் தளம் ஒப்படைக்கப்பட மாட்டாது.

முதற் கட்டமாக

- களத்தின் பல கருத்துப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளது.

- புதிய அங்கத்துவ பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

நன்றி

மோகன்

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply

களத்தில் பல பகுதிகள் மூடப்பட்டிருப்பதைப் பார்த்து நான் கூட அதிர்ச்சியடைந்தேன். பின்பு இப்பகுதியில் உங்கள் ஆதங்கத்தையும் பார்த்துப் புரிந்து கொண்டேன். உண்மையில் களத்தின் போக்கில் மாற்றங்கள் வர வேண்டும் என்பது உண்மையே. இதனை நிர்வாகம் அறிவுறுத்தி ஏனைய உறவுகள் செயற்படுத்துவதை விட, உறவுகள் தாமாகவே தமக்கு சுய கட்டப்பாடுகளை ஏற்படுத்தி ஒரு வரைமுறைக்குள் கொண்டு வருவதே நல்லது. அதே போல நிர்வாகமும் விதிமுறைகளை கட்டாயமாக எந்தவித பாரபட்சமும் காட்டாமல் எல்லோரிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

எனவே நீண்ட காலமாக பலருக்கு உறவுப்பாலமாக செயற்பட்டு வந்த இந்தக் களம் மேன்மேலும் தனது கடமைகளை தொடர்ந்து ஆற்ற நாம் ஒவ்வொருவரும் அதற்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கி, களம் தொடர்ந்து இயங்க மோகன் அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்போம். எனவே மோகன் நீங்கள் எதுவித அவசர நடவடிக்கைகளும் எடுக்காது கள உறவுகளுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி உங்கள் பணியை தொடர்ந்து ஆற்றுங்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

http://www.media-anthropology.net/eriksen_...scyberspace.pdf

தாயகத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிட்டத்தட்ட 70 வீதமான சுருங்கியது போல் இணைய உலகிலும் தமிழீழ தேசியம் அடுத்தடுத்த வருடங்களில் சுருங்கும்.

புலம்பெயர்ந்தவர்கள் சிந்தித்து செயற்படும் காலம் என்று சொல்ல முடியவில்லை. பல வழிகளில் பார்த்தால் அதற்கு காலம் கடந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். வருவதை எதிர்கொண்டு தெளிந்து எஞ்சுபவர்கள் ஒற்றுமையாக சயனிசம் போன்ற ஒன்றின் மூலம் எதையாவது இறுதியில் அடையலாம்.

Link to comment
Share on other sites

புரிந்துணர்வு..பொறுப்பு என்பவற்றை உறுப்பினர் கொண்டிராதவிடத்து உறுப்பினரை எச்சரித்தோ நீக்;கியோ விடலாம்... புது அங்கத்துவத்தை நிறுத்தி வைப்பதும் சரியாக இருக்கலாம். மற்றும் சினிமா போன்ற விடயங்களை நீக்கலாம். யாழ் நீண்ட நீடிக்கவேண்டும் என்பதே என் ஆசை..என்னுடைய ஒத்துழைப்பு நிச்சயமாக இருக்கும்.. மற்றைய உறுப்பினர்களும் யாழின் நீடிப்பையும் சேவையும் கருத்தில் கொண்டு புரிந்துணர்வோடும் கட்டுப்பாட்டோடும் செயற்படவேண்டுமென பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

எனவே நீண்ட காலமாக பலருக்கு உறவுப்பாலமாக செயற்பட்டு வந்த இந்தக் களம் மேன்மேலும் தனது கடமைகளை தொடர்ந்து ஆற்ற நாம் ஒவ்வொருவரும் அதற்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கி, களம் தொடர்ந்து இயங்க மோகன் அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்போம். எனவே மோகன் நீங்கள் எதுவித அவசர நடவடிக்கைகளும் எடுக்காது கள உறவுகளுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி உங்கள் பணியை தொடர்ந்து ஆற்றுங்கள்.

வசம்பு அவர்களின் கருத்தே எனதும். முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூநகரி ஆக்கிரமிப்போடு மனச்சோர்வு வந்துவிட்டது போலத் தெரிகின்றது??

யாழ் களத்தில் ஆரோக்கியமான விவாதங்கள், கருத்துப் பகிர்வுகள் குறைந்து கொண்டுதான் போகின்றன. எல்லோரும் தாம் தாம் அறிவாளிகள் என்று குதர்க்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. எனவே யாழ் களம் மூடப்பட்டால் பாதிக்கப்படுவது ஒவ்வொரு நாளும் யாழைப் பலதடவை பார்வையிடும் உறவுகளும், கருத்தாளர்களும் (?) மட்டுமே.

ஆரோக்கியமான கருதாடல்கள் மூலம்தான் ஒவ்வொருவரையும் அரசியல் பற்றி விழிப்பாக வைத்திருக்கமுடியும்.யாழ் களம் செயல் இழந்தால் பயனடைவது தமிழ்த் தேசியத்திற்கு எதிரான சக்திகள்தான்..

உலகத் தமிழர்களை ஒன்றிணைக்க யாழ்களம் பயன்படவேண்டும், அதன் நோக்கங்களை நிறைவேற்ற சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது நல்லதுதான்.

Link to comment
Share on other sites

வரவேற்கப்படவேண்டிய நல்ல முடிவு, தாமதிச்சாலும் சிந்திச்சு பொறுப்புணர்வோட முடிவெடுத்திருக்கிறியள், அநியாயமா காசை கொட்டி (என்ன மில்லியனா பில்லியனா??) என்ன பிரியோசனம்? ஒண்டுமில்லை.....

அதோட நாம என்ன பிறகும் பொழுது இன்ரர் நெட்டோடையா பிறந்தம்? இல்லை யாழ் மூலமாவோ வளர்ந்தம், யாழ் வேலை செய்யாட்டா வன்னிக்கு போவம்!

1வது யாழுக்கெண்டு பிரத்தீயோக செய்தியாளர்கள் தமிழீழத்தில இருந்து செய்திகளை நேரடியா தந்து அதனால இப்படி நிறுத்தப்படுறது எண்டு அறிவித்தால்த்தான் செய்திகள் வரமாட்டுதே எண்ட கவலை, இங்க வாறதெல்லாம் வெட்டி ஒட்டுதல் தானே, சோ செய்தி இங்க வாராட்டா வேற களங்களுக்கு போகலாம் அதால யாழ் முடப்பட்டால் 50% பாதிப்பு இல்லை,

2வது தமிழீழத்தில நடக்கிறதுகளை பற்றி இங்க கதைக்கிற கருத்தாளர்களது ஒட்டுமொத்த கருத்தை சுருக்கி தினக்குரல், விரகேசரி, பரபரப்பு எண்டு பல பத்திரிகைகள் ஒவ்வொரு வாரமும் ஏ4 பக்கத்தில கட்டுரை வெளியிடுது அதால கட்டுரைகளை இங்க வாசிக்கனும் எண்டு இல்லை அப்ப அதில ஒரு 10% பாதிப்பு இல்லை..

3வதா அலட்டல்கள், பிரியோசனமற்ற கருத்துக்களை இந்த களத்தில்த்தான் எழுதனும் எண்டில்லைத்தானே? எலகிரி, தாயகப்பறவைகள், அது இதெண்டு கனக்க இருக்கு, அங்க எழுதலாம் அதால அதுக்கும் ஒரு 10% ....

வேற என்ன? இருக்கு நாட்டுக்காக ஏதாச்சும் செயற்பாடுகள் செய்யிறமா இல்லை? அதான் எல்லாரும் ஒவ்வொரு நிறுவணம் ஊடாக லட்சக்கணக்கா அள்ளி அள்ளிகுடுக்கிறம் அம்புட்டும் போதும் பிறகு எதற்கு பிறிம்பா யாழ் ஊடாக அப்ப அங்கையுமொரு சிக்கல் இல்லை...

சரி கடைசியா அடிக்கடி அதான் 4,5 வருசமா சொந்த வீடு போல நினைச்சு இருக்கிறவங்களுக்கு ஆறுதல் தாற செய்தியை போட்டுட்டு இழுத்து முடுங்குகோ, நேரத்தை மிச்சம்படுத்துங்கோ, நேரம் இருக்கிறவையள் வலைப்பு செய்வினம், செய்யா தெரியாதைவையளுக்கு செய்து குடுப்பினம், வலைப்பூவீல கதைச்சு பலருக்கு புரியவைச்சு (நேற்று ஆரம்பிச்ச எமது போராட்டத்தை பற்றி யாருக்குமே எதுவும் தெரியா குறிப்பா வலைப்பூவில இருக்கிறவையளுக்கு இப்படி புரியவைச்சால் பிரச்சினை தீரும்) இந்திய மத்திய ஆரசாங்கம் தீர்த்துவைக்கும்.

சரி முடிஞ்சால் ஓசியில இயங்குறமாதிரி ஒரு களத்தை அதான் www.forumer.com/....... எண்டு ஆரம்பிக்கிற களத்தை திறந்து குடுத்துட்டு போங்கோ, அதுக்கு 2,3 வேலைவெட்டி இல்லாதவையளை நியமிச்சுட்டு போங்கோ.....

ஆ முக்கியமா ஒண்டை சொல்லமறந்துட்டன், பெண்கள் காவலர்கள் சிலர் சவுண்ட் விடுவினம் இப்படி திடுதிடுப்பு எண்டு மூடீட்டு போனால் யாழியை நம்பி இருக்கிற பெண்கள் கதை என்ன எண்டு? அவையளுக்கும் ஏதாச்சும் பறக்கிற ஐடியா குடுத்தீயள் எண்டால் சந்தோசமா இருக்கும்.

அப்புறம் முடிஞ்சால் ஒரு சர்வே எடுத்து பாருங்களேன்....

பூட்டுவமா?

வேண்டாமா?

பூட்டிபூட்டி திறப்பமா?

அப்படின்னு.......

பஞ்ச்; கண்ணா........................ இந்த சிட்டுவேசனுக்கு இது போதும்.

Link to comment
Share on other sites

யாழ் களத்தை கடந்த சில வருடங்களாக கவனித்து வருபவன் என்ற ரீதியில்.. சில கருத்துகளை கூறலாம் என நினைக்கிறேன்.

பழைய களங்களை எடுத்துக் கொண்டால்.. அரசியல் கருத்துகள் ஒரு பகுதியாகமட்டுமே இருந்தது.. ஆனால் தற்பொழுது தாயக அரசியலே யாழ் களமாகிவிட்டது. அரசியல் தேவைதான்.. ஆனால் எல்லாமே அரசியல் அல்ல. எத்தனையோ படித்த, படிக்கும் உறவுகள் இங்கே உள்ளார்கள்.. ஆனால் அவர்கள் இந்தத் தளத்தை அரசியல் கருத்துகளுக்காகமட்டும் பயன்படுத்தி வாக்குவாதப்படுவதையும்.. ஒருவர் மீது ஒருவர் குற்றம் கண்டுபிடிப்பதையுமே பெருமளவில் காணக்கூடியதாக உள்ளது.

ஒரு காலத்தில் யாழில் பெற்ற அறிவுடனும், யாழ் உறவுகளின் தொடர்புகளினாலுமே நான் இன்று ஒரு இணையத்தை நடாத்தக்கூடிய அளவுக்கு அறிவு பெற்றுள்ளேன்.. நான் இணையத்தளத்தில் ஈடுபடுவதைப் பார்த்து ஆர்வம் கொண்ட எனது மகன் இன்று தானே சிலருக்கு இணையத்தளத்தை அமைத்துக் கொடுத்து, தனது கைச் செலவைச் சமாளிக்கும் அளவுக்கு அறிவுபெற்றிருக்கிறான்.

அதுமட்டுமல்ல.. யாழில் அன்று பல உறவுகள் எனக்குத் தந்த ஊக்கத்தினாலும் உற்சாகத்தினாலும், 'ஐஸ்கிறீம் சிலையே நீ தானோ?' ( http://www.yarl.com/articles/blog/10 ) என்ற ஒரு தொடர்கதையை 20 அங்கங்கள் எழுதினேன். அது இன்றும் பேசப்படுகிறது.

இவ்வாறு இந்தக் களமானது என்னைப்போல பலருக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பட்டிருக்கிறது.

ஆனால்.. தற்போது.. இக் களமானது...

வெறும் அரசியல் வாக்குவாதங்களுக்கும்.. வெறும் அலட்டல்களுக்கும்.. சாதி சமய அளவீட்டுத் தராசுத்தட்டாகவும் பயன்பட்டு.. வீண் மனவலிகளையும், மனக் குரோதங்களையும் வளர்க்கிறதோ என்ற பார்வை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகத்தான் உள்ளது.

ஏற்கெனவே ஆரோக்கியமாக எழுதியவர்களையும் தற்போதைய கருத்தாடல்களில் பெரும்பாலானவை புறந்தள்ளியிருக்கிறது.

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள்.. தயவுதாட்சண்யமின்றி கருத்துகளை நெறிப்படுத்துங்கள்.. தேவையில்லாத நூறு கருத்துகளிலும் பார்க்க நல்ல ஒரு கருத்தே போதும் என்ற மனப்பக்குவத்துக்கு தயாராகுங்கள்!!

அதனால்.. இக்களத்தை ஆரோக்கியமானதாக.. ஆக்கத்துக்கு வழிசமைப்பதாக.. ஒவ்வொருவரையும் தட்டிக்கொடுத்து உற்சாகமூட்டி ஊக்கப்படுத்துவதாக மேம்படுத்தும் பொறுப்பு சகல அங்கத்தினர்களையுமே சார்ந்தது.

எனவே, நிர்வாகத்தின் கரங்களை உற்சாகப்படுத்தி.. நாமும் நமது வருங்காலமும் பயன்பாட வழிசமைப்போமாக!!

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா,

தயவு செய்து யாழ் களத்தினை நிறுத்த வேண்டாம்

யாழ் களத்தின் தேவை முன்னெப்போதையும் விட தமிழ் தேசிய விடுதலை போராட்டம் கடும் நெருக்கடிகளையும், சவாலையும் எதிர் நோக்கும் இக் கால கட்டத்தினில் அவசியமாகின்றது. ஒழுங்குகளில் கடுமை கொண்டுவந்து, பாரபட்சமின்றி நடந்து கொள்வதன் மூலம் விதண்டாவாதங்களை கட்டுப்படுத்தலாம்.

ஆரோக்கியமான கருத்தாடல்கள் தான் ஒரு சமூகத்தின் நாகரீக அடையாளம். அதனை கூட எம்மால் செய்ய முடியாத போது, ஒரு தேசிய இனமாக எம்மை கருதிக் கொள்வது எவ்வாறு? விமர்சனத்திற்கு அப்பாட்பட்ட ஒரு சமூகமாக தம்மை நினைக்கும் அளவிற்கு எம் சமூகம் வந்துவிட்டது தான் பெரிய துயரம். இந்த போக்கின் வளர்ச்சியிற்கு, யாழ் களம் மூடல் நிச்சயம் துணை போகும். அத்துடன், இதன் மூடல் மேலும் மேலும் மோசமான தமிழ் இணைய தளங்கள் உருவாகவும் வழி விடும்

-நிழலி-

Link to comment
Share on other sites

அண்ணா,

நான் இந்த களத்திற்கு புதியவன் , ஒரு நல்ல கருத்தாளனும் இல்லை, தமிழில் எழுதவேண்டும் எண்ட ஆர்வம் தான் என்னை இணைய தூண்டியது,

அரசியல் சம்மந்தமாக எழுத கூடாது எண்டு தான் நினைப்பேன் , ஆனால் கட்டுப்படுத்த முடியாமல் எதாவது எழுதிவிடுவேன்.

நான் கற்றுக்கொண்டு இருக்கும் துறையில் ,எழுத வேண்டும் என நினைத்திருந்தேன் , ஆயத்தமும் செய்துகொண்டிருக்கிறேன்

எனது கண்ணோட்டத்தில் இங்கு பிரச்சனைய உருவாக்குவது

தமிழ் ஊடகங்களை, எழுத்தாளார்களை , தமிழகம் சம்மந்தமாக் எழுந்தமானத்துக்கு விமர்சிப்பது இப்படி பல

எனது கருத்து,

உறுதிப்படுத்திய அரசியல் செய்திகளை மட்டும் இணைக்கவும்

அரசியல் சம்மந்தமான செய்திகளுக்கு பின்னூட்டல் இடுவதை நிறுத்தலாம்

எனைய அலட்டல் சம்மந்தமாக கட்டுபாடுகளை மேற்கொள்ளலாம்

தயவு செய்து நிறுத்தும் முடிவை எடுக்க வேண்டாம்

Link to comment
Share on other sites

மோகன் :):o

தயவு செய்து யாழ் களத்தினை நிறுத்த வேண்டாம்.......

என்ன நடக்கிறது.... களத்திலே.... இன்றைய நாளில் இந்த முடிவை எடுத்தது.... வார்த்தைகள் வரவில்லை... :lol::)

கொஞ்சம் பொறுங்கள்........ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன் அண்ணா கொஞ்சம் பொறுங்கள் எங்களை ஏமாற்றாதீர்கள் நல்ல தமிழ் வளர்க்கும் ஒரு சிறந்த ஆசானை நிறுத்தி தமிழை மறக்கப்பன்ன வேண்டாம் அப்படியானல் பிரச்சனையான விடயங்களை நீக்கிவிடவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா நீங்களா யோசிச்சு முடிவெடுங்கோ. இதில பாதிப்பேர் இப்ப ஒரு மாதிரி சொல்லுவினம்.. பிறகு இன்னொரு மாதிரிச் சொல்லுவினம். அவையவை பாதிப்படையேக்க.. கொதிச்செலுவினம். யாழ் மீதே காறி உமிழ்வினம்.

உங்கட பணம்.. உங்கட நேரம்.. உங்கட முயற்சி தான் இங்க அதிகம். எனவே தீர்மானம் எடுக்கிறதும் உங்கட கையிலதான் இருக்குது.

எனது தனிப்பட்ட விருப்பம்.. யாழ் இன்னும் இன்னும் மெருகேறிக் கொண்டு.. உங்களால் இன்னும் இன்னும் வெற்றியை நோக்கி நடத்தப்பட வேணும் என்றதுதான்.

நான் இதில வந்துதான்.. கணணித் தமிழே எழுதப்பழகினேன். சில ஆக்கங்களை தமிழில் எழுதத் தூண்டப்பட்டேன். அவை தமிழுக்கு யாழுக்கு பிரயோசனப்பட்டிச்சா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.

நிறைய வாதங்களில் வலிந்தும்.. உணர்ந்தும்.. ஈடுபட்டிருக்கிறேன். அதில சில தடவைகள் உங்களுக்கு சிக்கல்களையும் ஏற்படுத்தி இருக்கிறேன். அதற்கெல்லாம்.. என்னையும் மன்னிச்சுக்கோங்கோ.

நிதி நெருக்கடிகளை சமாளிக்க கள உறவுகளிடம் ஒத்துழைப்பைக் கோரிப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் அதிலும் சிக்கலை உண்டு பண்ணிவிடுவார்கள் என்ற பயமும் இருக்கத்தான் செய்கிறது.

யாழை.. இழக்க விரும்பவில்லை. யாழ் 10 ஆண்டுகள் கண்டுவிட்ட நிலையில்.. இன்னும் வளரனும்.. என்பதே அவா. ஆனாலும் இறுதி முடிவெடுப்பது உங்கள் கையில்..! :D

Link to comment
Share on other sites

இங்கே கருத்தொருமித்து இல்லாது எல்லாரையும் நக்கலும் நளினமாக உண்மையான தீவிர பிரச்சினைகளை கூட அணுக முற்பட்டதன் பின் விளைவுகள்தான் இவை...

கருத்துக்களை புரிய முடியாதவர்களுக்கு புரிய வைக்கும் நோக்கமே இல்லாது, அவர்களை சீண்டுவதும் அதற்கான பாணியில் அவர்களிடம் இருந்து பதில் வருவதையும் தடுக்க முடியவில்லை...

எவரையாவது எப்போதாவது குறை காண வேண்டும்... நட்புறவு என்பது மூண்றாம் பட்ச்சம் ஆகிவிட்டது....

கூட இருந்து கருத்து எழுதுபவர்களுடனையே பகைமை பாராட்டுபவர்கள், தாயக நலன் பற்றியும் மக்கள் ஒற்றுமை பற்றியும் பேசுவதுதான் இப்போதைய நாகரீக வழர்ச்சியாக உள்ளது...

ஆகவே மாற்றம் வேண்டும்... வராவிட்டால் மோகன் அண்ணாவின்( இவ்வளவுகால) உழைப்பு வீண்... இதை விட்டு அண்ணியையும் குழந்தைகளுடனும் நேரத்தை செலவளிப்பது நல்லது...

Link to comment
Share on other sites

அன்பின் மோகன்

எக் காரணத்தை முன்னிட்டும் யாழை நிறுத்த வேண்டாம். அதற்கு பல காரணங்கள் உண்டு.

ஏதாவது பிரச்சைனகள் இருக்கலாம்.

யாழில் தீங்கை விட நன்மைகளே அதிகம் என்பது எனது தாழ்மையான கருத்து.

யாழில் ஆரம்பம் முதலே அனைவரையும் ஒரேவிதமாக நடத்தியிருந்தால் மனதில் வேதனைகள் ஏற்பட்டிருக்காது என்பது என் தாழ்மையான கருத்து.

நட்பு காரணமாகவோ அல்லது வேறு ஒரு ஈர்ப்பு காரணமாகவோ எங்காவது சறுக்க நேர்ந்தால் அதுவே தொடர் கதையாகிவிடும். யாருக்கும் விட்டுக்கொடுத்து பொதுவேலைகள் செய்யக்கூடாது. அதை முளையிலே சரிசெய்துவிட வேண்டும்.

விட்டுக் கொடுப்புகளை பொதுவாழ்வில் பலர் செய்கிறார்கள். அவை உச்சத்துக்கு போனபின் அதற்காக வருந்தி பயனில்லை. அதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட்டால்....அவை ஒருபோதும் தொடராது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

சில தவறுகளை நாம் நட்பு காரணமாக கண்டுகொள்ளாமல் விட நேரும் போதுதான் அது பின்னர் பல பிரச்சனைகளை அதிகரிக்க செய்கிறது.

ஒன்றை அழிப்பது வெகு இலகுவானது.

அதை உருவாக்க அவ்வளவு இலகுவில் முடியாது.

அதேபோல யாழின் வளர்ச்சியோடு பலர் வளர்ந்திருக்கிறார்கள். நான் கூட தமிழில் தட்டச்சு செய்ய யாழ்தான் காரணம் என்பதை நான் எங்குமே மறுப்பதில்லை. சிலர் என்னை தாக்கி எழுதினாலும் கூட பல நல்ல உறவுகள் யாழ் மூலமாக எனக்கு கிடைத்தனர். என்னைப்போல் பலருக்கும் அந்த வாய்ப்பு கிட்டியிருக்கும். நான் பல இடங்களில் அது என் குடும்பம் என சொல்லியிருக்கிறேன்.

யாழில் எனக்கு ஏற்படும் பிரச்சனைகளை தனிமடல் மூலமோ அல்லது தொலைபேசி வழியோ யாழ்கள நிர்வாகிகளோடு ஒருபோதும் பேச விரும்பாதவன். பொதுவான பிரச்சனைகளை களத்தில் நேரடியாக எழுதியும் , தனிப்பட்ட பிரச்சனைகளை தனியாகவும் பேச விரும்புபவன். எனவே பல வேளைகளில் நேரடியாக களத்திலே என் குமுறல்களை வெளியிட்டேன். எனவே சற்று தள்ளி அதிகநேரம் பார்வையாளராகவே இருந்துள்ளேன்.

அது வேறு தற்போது மோகன் எழுதியிருக்கும் விடயம் வேறு.

ஏதாவது பகிர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தால் மோகன் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது வேறு ஏதாவது வகையில் உணர்த்த முடிந்தால் உணர்த்தலாம்.

யாழ் களத்தை எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் நிறுத்த வேண்டாம் மோகன்.

தொடர்ந்து பேசுவோம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரன் மோகனுக்கு,

யாழ்க் களத்தையிட்டு உங்களுக்குத் தோன்றியிருக்கும் எண்ணம் இன்றல்ல இதை நான் உங்களிடமிருந்து எப்போதோ எதிர்பார்த்தேன். யாழ்க்களத்தை மூடுவது என்ற உங்கள் எண்ணத்தை கைவிடவேண்டியது காலத்தின் அவசியம். இன்று புலம்பெயர்ந்து வாழும் ஈழவர்களுக்கு ஒரு உறவுப்பாலமாக யாழ் இணையம் இயங்குவதை யாராலும் மறுக்கமுடியாது. இருப்பினும் எங்கள் நாட்டின் தற்கால சூழலில் இங்கு இடம்பெறும் சில கருத்தாடல்கள் எங்களுக்கான ஆதரவுக்குரல்களை அழிக்கும் சூழலைத் தோற்றுவிப்பதையும் மறுக்கமுடியாது. இன்று தமிழகத்தின் எழுச்சிக்குரல்களை மத்திய அரசு அசட்டை செய்வதை அவதானித்தாலே கண்களுக்குப் புலப்படாத பல உண்மைகள் புலப்படும். ஒரு தமிழகம் போன்ற பெரிய நிலப்பரப்பில் வாழும் எங்கள் சகோதர உறவுகளின் பலமே அங்குள்ள அரசியல், மதம் போன்ற காரணிகளால் பிளவுபட்டதாக வலிமையிழந்ததாக ஆக்கப்படும்போது இந்த யாழ்க்களம் எம்மாத்திரம்? இதற்குள் இருக்கும் நல்ல கருத்தாளர்கள் காலத்தின் தேவை கருதி ஈழத்தின் விடுதலையை மட்டும் மனதில் சுமந்து கருத்து வைக்கவேண்டும். அத்தோடு மதங்களுக்காக நாங்கள் மதம்பிடிக்காமல் மானிடத்தை மட்டும் கருத்தில் கொண்டவர்களாக கருத்தாடவேண்டும். மதம் தோற்றுவிக்கப்பட்டதே ஒழுக்கநெறிக்குள்; மனிதர்கள் வாழவேண்டும் என்பதற்காகத்தான். சரி அதை விடுவோம் அரசியல் கட்டுரைகளையும், அடுத்தவர் கருத்துக்களையும் கேலி செய்வது..... நகைச்சுவைக்காக எழுதினோம் என்று இவ்விடத்தில் யாரும் தப்பிக் கொள்ளமுடியாது ஏனென்றால் இவை இன்று நேற்றல்ல எனக்குத் தெரிந்து நான்கைந்து வருடங்களாக இவற்றை அவதானிக்கமுடிகிறது. இதன் மூலம் நாங்கள் எங்களுக்குள் வளரும் ஆய்வாளர்களையும், படைப்பாளிகளையும் எம்மை அறியாமலே நோகடிக்கிறோம். கிண்டல் அடிப்பதற்கென்றுதான் தனிப்பட்ட பகுதிகளைத் திறந்து அனைவருக்கும் வழி சமைத்து வைத்திருக்கிறார்களே... ஒரு கருத்துக்களத்தில் எண்ணுக்கணக்கில் முதுகு சொறிவது அக்கருத்துக்களத்தின் வளர்ச்சியின்மைக்கு வழிவகுக்கும். இங்கு யாரையும் குறை கூறுவதற்காக இவற்றை நான் எழுதவில்லை. எங்களை அறியாமலே இக்களத்தின் வீழ்ச்சிக்கு நான் உட்பட அதிகமானோர் வழி வகுக்கிறோம் என்ற உண்மை உறுத்துவதாலேயே இக்கருத்தை இங்கு பதிகிறேன்.

சகோதரர் மோகன், உங்களுடைய மனத்தளர்ச்சி எமக்கும் புரிகிறது. காலத்தின் தேவை இருக்கிறது. எங்கள் மக்களின் வாழ்விற்கு ஒளிகூட்டும் கலங்கரையாக இணைய உலகத்தில் யாழின் பணி அதிகரிக்கவேண்டிய தேவை இருக்கிறது. பலதிரிகள் மூடப்பட்டுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. சில விடயங்களை எம்முடனேயே நாம் மட்டுப்படுத்திக் கொள்வது எங்களுக்குப் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். சில வேளைகளில் நான் இங்கு எழுதும் கருத்திற்கே கூட சீண்டல் பதில்கள் வரக்கூடும். இருப்பினும் யாழ்க்களம் எக்காரணம் கொண்டும் மூடப்படக்கூடாது என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.

Link to comment
Share on other sites

தொடர்ந்து யாழ்களம் இயங்குவது காலத்தின் தேவை.. களைகளுக்காக பயிர்களையும் சேர்த்து அழித்துவிட வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனச்சோர்வு வேண்டாம் மோகன் அண்ணா. எத்தடை வந்தாலும் என்றென்றும் யாழ் இணையம் இயங்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன் ஐயா!

நீங்கள் எடுக்கும் இந்த முடிவு நான் சில வருடங்களாக எதிர்பார்த்ததுதான்.

இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் நீங்கள் எடுத்த இந்த முடிவு பல பாரதூரமான விளைவுகளை புலம்பெயர் மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும்.

நீங்கள் எதிர்பார்த்தவை இங்கே உருவாகாமை என்னவோ உண்மைதான். அதை உருவாக்க வேண்டிய என்னைப்போன்றவர்களும் தவறிவிட்டோம். மன்னிக்கவும்.

அதற்காக இணையதளத்தை முற்றுமுழுதாக மூடிவிடாதீர்கள்.அது நீங்கள் எம் வருங்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம்.

தயவு செய்து தொடர்ந்து நடத்துங்கள்.

எனதருமை யாழ்கள சகோதர சகோதரிகளே!

நிர்வாகத்துக்கு கட்டுப்பட்டு நல்ல கருத்துக்களை எழுதுங்கள்.நல்ல ஆக்கங்களை படையுங்கள்.வேண்டாவிவாதங்களை தவிருங்கள்.நல்லதையே செய்யுங்கள்.

நான் யாழில் நீண்டகாலமாக பார்வையாளனாகவே இருந்தேன். மீண்டும் பார்வையாளனாகவே இருக்கவிரும்புகின்றேன்.

இன்றிலிருந்து எனதருமை யாழ்களத்தில் கருத்தெழுதுவதை நிறுத்திக்கொள்கின்றேன்.

இதை கண்ணீர்மல்க தெரிவிக்கின்றேன்.

எனதருமை உறவுகளே எப்போதாவது அல்லது எங்கேயாவது உங்களை நான் நேரடியாக சந்தித்தால் அது நான் செய்த புண்ணியம்

இப்படிக்கு

குமாரசாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழில் நீண்டகாலமாக பார்வையாளனாகவே இருந்தேன். மீண்டும் பார்வையாளனாகவே இருக்கவிரும்புகின்றேன்.

இன்றிலிருந்து எனதருமை யாழ்களத்தில் கருத்தெழுதுவதை நிறுத்திக்கொள்கின்றேன்.

இதை கண்ணீர்மல்க தெரிவிக்கின்றேன்.

எனதருமை உறவுகளே எப்போதாவது அல்லது எங்கேயாவது உங்களை நான் நேரடியாக சந்தித்தால் அது நான் செய்த புண்ணியம்

குமாரசாமி ஐயா, இப்படி சென்ரிமென்ற்றாக எழுதிவிட்டு ஒளிந்துகொள்வது நல்லாயில்லை..

மோகன் அண்ணா ஏதோ விசிறி தன்பாட்டில சுழலுது. எப்ப நிக்குதோ அப்ப நிக்கட்டும் எண்டு சொன்னார். இப்ப விசிறிக்கு கரண்டை நிப்பாட்டலாம் என்று யோசிக்கிறார்..

புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்தும் தமிழை வாசிக்க, எழுதப் பேருதவியாக யாழ்களம் இருந்தாலே அது பெரிய உபகாரம்தான். அதைவிடுத்து புலம்பெயர் தமிழ் சமுதாயத்தை ஒரு நோக்கம், இலக்கு நோக்கி ஒருமைப்படுத்திச் செயலாற்றப் பண்ண முயன்றால் அது தோல்வியிலேயே முடியும்!

Link to comment
Share on other sites

நான் யாழில் நீண்டகாலமாக பார்வையாளனாகவே இருந்தேன். மீண்டும் பார்வையாளனாகவே இருக்கவிரும்புகின்றேன்.

இன்றிலிருந்து எனதருமை யாழ்களத்தில் கருத்தெழுதுவதை நிறுத்திக்கொள்கின்றேன்.

இதை கண்ணீர்மல்க தெரிவிக்கின்றேன்.

எனதருமை உறவுகளே எப்போதாவது அல்லது எங்கேயாவது உங்களை நான் நேரடியாக சந்தித்தால் அது நான் செய்த புண்ணியம்

இப்படிக்கு

குமாரசாமி

உங்கள் போன்ற மூத்த உறுப்பினர்களின் பங்களிப்பு களத்துக்கு அவசியமானது. உண்மையை சொல்லப்போனால், என் போன்ற இளையவர்களை களத்தில் எழுத தூண்டியதே உங்கள் போன்றவர்கள் தான். இங்கு எழுத, கருத்து பரிமாற பல பிரயோசனமான விடயங்கள் உள்ளன. அதை விடுத்து எழுதுவதை நிறுத்துவது என்பது அவசியமற்றது. உங்கள் முடிவைப் மாற்றுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

நன்றி :D

Link to comment
Share on other sites

திரு. மோகன்,

முதற் கண் உங்கள் முய‌ற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மிக‌வும் சிற‌ப்பாக‌ இக்க‌ள‌ம் இய‌ங்கி வ‌ருகிற‌து. ஈழ‌ உற‌வுக‌ளை இணைக்கும் ஒரு பால‌மாக‌வும் தமிழ‌க‌ உற‌வுக‌ள் கூட‌ வ‌ந்து நோக்கி த‌ம் க‌ருத்துக்க‌ளை தெரிவிக்கும் ஒரு இட‌மாக‌வும் மிளிர்கிற‌து.

மேலும் சில‌ ம‌னித‌னேய‌ முய‌ற்சிக‌ளின் பிற‌ப்பிட‌மாக‌வும் இக்க‌ள‌ம் இருந்திருக்கிற‌து என‌ நின‌க்கிறேன்.

பானையில் உள்ள‌தே அக‌ப்பையில் வ‌ரும் என்பார்க‌ள். ந‌ம‌து ஈழ‌ச் ச‌முதாய‌ம் எப்ப‌டியோ அப்ப‌டியே அவ‌ர்க‌ள் ப‌ங்கு ப‌ற்றும் க‌ள‌மும் பிர‌தி ப‌லிக்கும்.

ப‌ல‌ க‌ருத்துக‌ளை நாம் இங்கு கூறி வ‌ருகிறோம். இவ‌ற்றிற்கெள்ளாம் நீங்க‌ளோ இக்க‌ள‌மோ பொறுப்பாளி அல்ல‌. இருப்பினும் சில‌ ம‌ட்டுப்ப‌டுத்த‌ல்க‌ள் அவ‌சிய‌ம் என் நினைக்கிறேன்.

ஒரு பாட‌சாலையையொ அல்ல‌து ஒரு ப‌ல்க‌லை கழக‌த்தையொ ந‌ட‌த்துப‌வ‌ர் அங்கு காண‌ப்ப‌டும் குள‌ப‌ங்க‌ளைக் க‌ண்டு அதை மூட‌ நினைக்கலாமோ ?

ஓட்டு மொத்தமாக ஒரு குறிப்பிட திசையில் மாத்திரம் களம் நக‌ர வேண்டும் என்று நினைப்பது நடைமுறைச் சாத்தியம் அற்றது. சிங்களவர்களினது களம், வெள்ளையர்களினது தொழில் நுட்பக் களம் போன்றவற்றில் மோசமான குளப்பங்களையே பார்கிறோம். எல்லார்க்கும் இப்பிரச்சனை உள்ளது.

நாட்டு எல்லைகள், கண்ட எல்லைகளைத் தாண்டி ஈழவர் நம்மை "நாங்கள்" என்ற புள்ளியில் யாழ் இணைத்து வைத்திருக்கிறது. மேலும் பலர் இணைந்து இந்த "நாங்கள்" வளர வேண்டும். யாழும் வளர வேண்டும்.

நிதி ரீதியாக‌ ஆத‌ர‌வு வேண்டும் என்றால் ஒரு ப‌குதியை ஆர‌ம்பித்து உறுப்பின‌ர்க‌ளின் க‌ருத்தை கேளுங்க‌ள். என்னால் ஆன‌ ப‌ங்க‌ளிப்பைச் செய்வேன். ஏன‌ய‌வ‌ரும் ப‌ங்க‌ளிப்பார்க‌ள்.

Link to comment
Share on other sites

வணக்கம் மோகன்,

நான் நேற்று வேற ஒரு ஊருக்கு போய் இருந்தன். நாளைக்கு வருவதாக இருந்தன். திடீரெண்டு இப்பிடி மோகனும் எங்கட ஸ்டைலில ஏதோ எழுதி இருக்கிறத பாத்துப்போட்டு கட்டாயம் உடனடியாக இதுபற்றி எனது கருத்தை சொல்லவேணும் போல இருந்திச்சிது. எண்டபடியால இண்டைக்கே திரும்பி வீட்டுக்கு வந்தாச்சி. எண்டாலும் நீங்கள் இப்படி ஒரு அறிக்கை விட்டதை பார்த்ததில பெரிதாக ஆச்சரியம் ஏற்படவில்லை. நானே பல தடவைகள் யாழைவிட்டு வெளியேற முயற்சித்து இருக்கிறன். அதற்கு முக்கியமான காரணம் யாழ் மூலம் ஏற்படுறகிற மன உலைச்சல். யாழில ஏதாவது எழுதுற எனக்கே மனம் உலைச்சல் அடைஞ்சு வெறுப்பு ஏற்பட்டு இனி யாழ்ப்பக்கமே வரக்கூடாது எண்டு எண்ணம் ஏற்படேக்க, யாழை உருவாக்கி நடத்துற உங்களுக்கு இப்படியான ஒரு எண்ணம் வந்தது வியப்பை தரவில்லை. உங்களுக்கு தினமும் ஏற்படக்கூடிய மன உலைச்சலை கற்பனை செய்து பார்க்கக்கூடியதாக இருக்கிது.

யாழுக்கு நான் வந்த முக்கியகாரணம் பொழுதுபோக்கை மையப்படுத்தியதாகவே இருந்தது. சத்திரசிகிச்சை ஒன்றின் காரணமாக வீட்டில மூன்று நான்கு மாதங்கள் முடங்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டு இருந்திச்சிது. இதனால ஏற்பட்ட வலியை மன அழுத்தத்தை குறைக்கலாம் எண்டு நினைச்சு யாழுக்க இணைஞ்சன். தவிர, செஞ்சோலை படுகொலை எனது மனநிலையை பெரிதும் பாதித்து இருந்திச்சிது. ஆத்திரமாக இருந்திச்சிது. இதுவும் இப்படி பலர்கூடுகின்ற ஒரு இடத்தில தமிழில எனது கருத்துக்களையும் சொல்லவேணும் எண்டு நான் வெளிக்கிட்டதுக்கு காரணமாக இருந்திச்சிது.

யாழ் மூலம் நான் பெற்ற நன்மைகள் எண்டு சொன்னால் கீழ்வருபனவற்றை சொல்லலாம்:

1. தமிழில இணையத்தில எழுதப்பழகினது. பலருக்கு அதை சொல்லிகுடுத்தது. மின்னஞ்சலில தமிழில எழுதுறதுக்கு சந்தர்ப்பம் கிடைச்சிது. மற்ற ஆக்களுக்கும் காட்டிக்குடுத்தது.

2. உலகத்தில வெவ்வேறு இடங்களில, வெவ்வேறு சூழ்நிலைகளில இருக்கிற ஆட்களோட கருத்தாடல் செய்து பல விசயங்களை அறியக்கூடியதாக இருந்திச்சிது.

3. மிகவும் அருமையாக ஒருசில நல்ல உறவுகள் எனக்கு யாழ் மூலம் கிடைச்சிது. இ்தனால் எனது தனிப்பட்ட வாழ்க்கையில பல மாற்றங்களை ஏற்பட்டிச்சிது. இதை யாழுக்கு வந்து இருக்காவிட்டால் நான் பெற்று இருக்கமுடியாது.

4. யாழில பொழுதுபோக்கி மகிழக்கூடியதாக இருந்திச்சிது.

யாழ் மூலம் நான் பெற்ற தீமைகள் எண்டு சொன்னால் கீழ்வருபனவற்றை சொல்லலாம்:

1. நேரம் வீண்விரயமாகிச்சிது. நான் நினைக்கிறன் கடந்த இரண்டு ஆண்டுகளில நான் சுமார் 2000 மணித்தியாலங்களை யாழில செலவளிச்சு இருப்பன். மணித்தியாலத்துக்கு ஆகக்குறைஞ்சது $15.00 படி பார்த்தால் நான் யாழில செலவளிச்ச இந்த நேரத்தில கனடாக்காசு ஆகக்குறைஞ்சது $30,000 வேலை செய்து உழைச்சு இருக்கலாம்.

2. மன உலைச்சல்கள் ஏற்பட்டிச்சிது. இதனால பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டி வந்திச்சிது. எனது பல ஆற்றல்கள் இதன்மூலம் வீண்போச்சிது.

3. தேவையில்லாத பலவிரோதங்கள் ஏற்பட்டிச்சிது. நான் யாழுக்கு வந்து இருக்காட்டிக்கு விரோதிகளை எனது வாழ்வில் நிச்சயம் சந்திச்சு இருக்கமாட்டன்.

யாழில இருக்கக்கூடிய சில பொதுவான சிக்கல்கள் எண்டு சொன்னால் கீழ்வருபனவற்றை சொல்லலாம்:

1. யாழில தனிமடலால வரக்கூடிய பிரச்சனைகள். பின்னர் எம்.எஸ்.என் மூலம் வரக்கூடிய பிரச்சனைகள். பலர் எமது தனிப்பட்ட வாழ்வு பற்றி அறிவதற்காக, எம்மைப்பற்றிய சில தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்காக தனிமடலை பாவிக்கிறீனம். இதனால நான் இப்போது யாழில தனிமடலே பாவிப்பதில்லை.

2. யாழில நல்ல குணம் படைச்ச ஆக்கள் இருக்கிறீனம். ஆனால்... எல்லாரும் அப்பிடி இல்லை. இதனால யாழ் கருத்தாடல் மூலம், தனிமடல்கள் மூலம் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் எமது தனிப்பட்ட வாழ்விலும் தொடரககூடிய ஆபத்து இருக்கிது. ஏன் எண்டால் இஞ்ச பலருக்கு தெரிஞ்சது யாழுக்க போற வாதங்கள்தான். ஆனால் இதுபற்றி எம்.எஸ்.என்னுக்கால, ஸ்கைப்புக்கால, மற்றும் தனிப்பட்ட தொலைபேசிகளுக்காக என்ன என்ன பிடுங்குப்பாடுகள் நடக்கிது எண்டு தெரியாது. இந்த வகையில தனிப்பட்ட வாழ்வு எண்டு பார்க்கேக்க யாழ்மூலம் பலவிதமான ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிது.

யாழில இருக்கிற தாயகம் சம்மந்தமான சில சிக்கல்கள் எண்டு சொன்னால் கீழ்வருபனவற்றை சொல்லலாம்:

1. சுய தணிக்கை

2. சுய தணிக்கை

3. சுய தணிக்கை

யாழ் இணையம் முன்னேறுவதற்கு நான் கூறக்கூடிய ஆலோசனைகள்:

  • யாழில இருக்கிற முற்றம் பகுதிபோல ஊர்ப்புதினம் பகுதியில கட்டுப்பாடு கொண்டுவரப்படவேண்டும். யாராவது ஊர்ப்புதினம் பகுதியில ஒரு தகவலை சொல்லவிரும்பினால் அதை மோகனுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். மோகன் அந்த செய்தியின் தன்மைபற்றி ஆராஞ்சு பின்னர் அதை ஊர்ப்புதினம் பகுதியில போடலாம்.

  • ஊர்ப்புதினம் பகுதியில பதில் கருத்துக்கள் எழுதப்படக்கூடிய வசதி நிறுத்தப்படவேண்டும். யாராவது நிதானமாக இருந்து அலசி ஆராய்ஞ்சு ஊர்ப்புதினம் பகுதியில இருக்கிற ஒரு செய்திக்கு விரிவான பதில் கருத்து எழுதி மோகனுக்கு அனுப்பினால் மோகன் பின்னர் அதை பிரதான செய்திக்கு கீழாக இணைத்து பிரசுரம் செய்யலாம்.

  • பொழுதுபோக்கு வாழ்க்கையிண்ட ஒரு அம்சமாக இருக்கிறமாதிரி யாழிலையும் பொழுதுபோக்கு ஒரு அம்சம் எண்டுற கருத்து ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். இங்கு வருகின்ற பலர் பொழுதுபோக்கவே வருகின்றார்கள். வன்னியுக்கு போய் ஆயுதம் தூக்கி அடிபடக்கூடிய நிலைமையில இங்கு எத்தனைபேர் இருக்கின்றார்கள் என்று தெரியாது. அப்படியான மனநிலையில் இருப்பவர்கள் நிச்சயம் யாழில மினக்கட்டுக்கொண்டு இருக்கமாட்டார்கள். அலட்டல் என்பது எமது நாளாந்த வாழ்வின் அம்சம் எனப்படுகின்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். உதாரணமாக கனடாவில் இருக்கிற எங்கட ஆக்கள் தொலைபேசிக்கால கதைக்கிற கதையில 95% அலட்டல் எண்டு நான் சொல்லத்தேவையில்லை. சீரியல், சினிமா, கொண்டாட்டங்கள் எண்டுறது எம்மவர் வாழ்க்கையிண்ட பகுதி. இந்தவகையில ஏதோ புதினமாக யாழில மட்டும் தேவாலயத்தில மதகுரு பிரசங்கம் செய்யேக்க எல்லாரும் அமைதியாக இருந்து தோத்திரம் சொல்லிறமாதிரியான நிலமை இல்லை எண்டு சொல்லி கவலைப்படஏலாது. யாழ் முகப்பில பொழுதுபோக்கு அம்சங்களுக்கு தனிப்பகுதி ஒன்றும், தாயகம் சம்மந்தமான விசயங்களுக்கு இன்னொரு தனிப்பகுதி ஒன்றும் ஏற்படுத்தப்பட்டால் வாசகர்கள் குழம்பமாட்டார்கள். இப்ப எல்லாம் கலந்து இருக்கிது.

  • கருத்து எழுதுபவர்கள் சட்டரீதியாக தாங்கள் எழுதுகின்ற கருத்துக்களுக்கு பொறுப்பாளிகள் எண்டு அறிவுறுத்தப்படவேண்டும். இங்கு எழுதப்படுகின்ற கருத்துக்களால எதிர்காலத்தில வரக்கூடிய சட்டரீதியான ஆபத்துக்கள் உணரப்படவில்லை. இங்கு எழுதுபவர்கள் தங்கடபாட்டுக்கு எழுதிவிட்டு போயிடுவீனம். ஆனால் கடைசியாக அப்பாவித்தனமாக இதன் பாதிப்பு ஏற்படப்போவது மோகனுக்கே. ஏன் எண்டால் மோகனிண்ட பெயரிலதான் யாழ் இணையம் இருக்கிது. விடுதலைப்புலிகள் கூட அங்கிருந்து மக்கள் படும் அவலங்களை போக்க, மக்களுக்கு உதவுவதற்கு உதவிகள் கேட்கின்றார்களே ஒழிய பகிரங்கமாக எம்மவர்களிடம் இருந்து இராணுவ ஆலோசனைகள் உதவிகள் கேட்கவில்லை. அப்படி யாருக்காவது இராணுவ விடயங்களில மேதவித்தனம் இருந்தால் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு நேரடியாக தமது கருத்துக்களை கூறலாம். பல்லாயிரம்பேர் கூடுகின்ற பொதுஇடத்தில ஆலோசனை கூறவேண்டிய அவசியம் இல்லை.

  • தாயகம் தவிர, வெளிநாடுகளில இருக்கிற தமிழ் மக்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கின்றது, வெளிநாடுகளில இருக்கிற தமிழ் மக்களின் நலன்களும் கவனிக்கப்படவேண்டும் எனப்படுகின்ற கருத்து விளங்கிக்கொள்ளப்படவேண்டும். வெளிநாடுகளில இருக்கிற தமிழ் மக்களுக்கு பயன் தரக்கூடிய பல்வேறு விடயங்களுக்கு யாழில முக்கியத்துவம் கொடுக்கப்படலாம். அண்மையில ஒருத்தர் Balanced Scorecard பற்றி உதவி கேட்டு இருந்தார். நான் உதவிசெய்து இருந்தன். இப்பிடி சில சின்னச்சின்ன தேவைகளை பூர்த்தி செய்வதற்கு யாழ் இணையமும் உதவமுடியும்.

  • யாழ் நிருவாகம் கருத்துக்களை வைத்து ஆட்களை எடைபோடும் நிலை மாறவேண்டும். ஒருவர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக எழுதுகின்றார் எண்டுபோட்டு அவர் யாழில வாய்க்கு வந்ததை எல்லால் சொல்லாம் எண்டுற நிலை கடைசியில ஆபத்துக்களில கொண்டுபோய் விடக்கூடும்.

  • யாழ் இணையம் மூலம் இஞ்ச இருக்கிற ஆக்கள் தங்கட பொன்னான கருத்துக்களை கூறி இதன்மூலம் நீண்டகால நோக்கில தாயகமக்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகளைவிட தீமைகளே அதிகமாக இருகக்க்கூடும். இந்தவகையில யாழ் கருத்தாடல் தளம் மூலம் தாயக மக்களுக்கு உதவலாம் எனப்படுகின்ற கருத்து கேள்விக்குறிக்குறியது. யாழ் கருத்தாடல் தளம் மூலம் தாயக மக்களுக்கு உபவத்திரவம் கொடுக்கலாம் எண்டுற கருத்து ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது. உதாரணமாக ஒரு கருத்தை சொலிறன். அண்மையில ஒருவர் யாழில கலைஞர் கருணாநிதியை மெண்டல் எண்டு எழுதி இருந்தார். இவரது கருத்தை தமிழ்நாட்டில இருக்கிற கலைஞரின் ஒரு ஆதரவாளன் வாசிச்சால் எம்மைப்பற்றி எப்படி நினைப்பான் என்று நினைக்கின்றீங்கள்? இவரது கருத்து தாயக மக்களுக்கு ஏதாவது விதத்தில உதவுமா இல்லாட்டிக்கு உபத்திரவம் கொடுக்குமா? இதுமாதிரி செல்வி.ஜெயலலிதா பற்றி தாறுமாறாக எழுதி இருந்தார்கள். இவர்களின் கருத்துக்கள் கடைசியில யாரை பாதிக்கும்?

மோகன் அவர்கள் உண்மையில தாயக மக்களுக்கு உதவவிரும்பினால் இந்த யாழ் இணையத்தை வர்த்தகமயப்படுத்தலாம். அதிக விளம்பரங்களை யாழில இணைக்கலாம். இந்த விளம்பரங்கள் மூலம் வருவாய் வந்தால் அதன் ஒரு பகுதியை தாயக மக்களுக்கு கொடுக்கலாம். யாழ் இணையம் தாயக மக்களுக்கு உதவவிரும்பினால் உண்மையில செய்யக்கூடிய அதிஉச்சமான பங்களிப்பு இதுவாகத்தான் இருக்கும். யாழ் மூலம் ஏவுகணை செய்து அனுப்புவது எல்லாம் சரிப்பட்டு வராது. விருப்பமானவர்கள் விடுதலைப்புலிகளை நேரடியாக தொடர்புகொண்டு தமது இராணுவ விற்பன்னத்தை நிரூபிக்கலாம்.

தாயக மக்களுக்கு தாயக போராட்டத்துக்கு ஆதரவு சேர்க்கிறம் எண்டு சொல்லிக்கொண்டு கடைசியில யாழில கண்டபடி கருத்துக்கள் எழுதப்பட்டால் அதன்மூலம் நீண்டகாலநோக்கில வரக்கூடிய சட்டச்சிக்கல்களும் உணரப்படவேண்டும். யாழ் இணையத்தை விடுதலைப்புலிகளிண்ட ஆதரவு, மற்றும் ஆலோசனை நிலையமாக பாவிச்சு அதனால் வரக்கூடிய எதிர்மறையான பின்விளைவுகளைவிட, யாழ் இணையத்தை உலகில வாழுகின்ற அகதித்தமிழனின் பிரச்சனைகளை, எமது அல்லல்களை, தாயக மக்களின் துயரங்களை சொல்லமட்டும் பாவிக்கக்கூடிய ஒரு ஊடகமாக பயன்படுத்தினால் இதன் மூலம்வரக்க்கூடிய நன்மைகள் ஏராளம். சட்டம் எண்டுறது எப்பவாவது ஏற்படுகின்ற பூமிஅதிர்ச்சி மாதிரி. வெளியில தெரியாது. எப்பவாவது இருந்திட்டுத்தான் அதிரும். அதிர்ந்திது எண்டால் எல்லாம் குழுங்கி விழுந்து பேரழிவுதான் ஏற்படும். இதற்கு யாழ் இணையம் விதிவிலக்காக இருக்கமுடியாது.

கடைசியாக நான் கூறக்கூடியது. நாம யாழில இருந்து எப்ப மறைவம் எண்டு எமக்கு தெரியாது. யாழுக்கு ஓரளவு அடிமையாகிவிட்டம் எண்டு சொல்லவேணும். ஒவ்வொருநாளும் கருத்து எழுதாவிட்டாலும் யாழுக்குவந்து வாசிச்சு பார்க்கிற ஆர்வத்தை குறைக்க முடியவில்லை. ஆனால்.. அதற்காக தொடர்ந்து இஞ்சஇருந்து மினக்கட்டுக்கொண்டு இருப்பம் எண்டும் இல்லை. எனினும் இவ்வளவு காலமும் யாழ்மூலம் பொழுதுபோக்கி மகிழ்ந்ததை ஏற்றுக்கொள்ளத்தான் வேணும். அந்தவகையில நான் மேலே கூறிய எனக்கு யாழ் மூலம் கிடைச்ச மேலே சொன்ன நான்கு விதமான நன்மைகளுக்கும் மோகனுக்கு நன்றிகள்!

கடைசியாக மோகன், நாம தெருவில போய்க்கொண்டு இருப்பவர்கள். நிறுவனம் உங்களுடையது. தெருவில நிண்டு எமது கருத்துக்களை சொன்னம். நீங்கள் எப்படியான முடிவுகள் எடுத்தாலும் அது வெற்றி பெற்று.. மேலும் உங்கள் தனிப்பட்ட வாழ்விலும் வெற்றியுடன், மகிழ்ச்சியுடன், நிம்மதியுடனும் வாழ வாழ்த்துகள், நன்றிகள்! வணக்கம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.