Jump to content

நினஞ்சலா: கல்விக்காக ஏங்குபவள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நினஞ்சலா: கல்விக்காக ஏங்குபவள்!

ஜெரா

10592025_674447749305448_413390570_n-800

படம் | கட்டுரையாளர்

சங்குப்பிட்டிப் பாலம், வடக்கில் நடைபெற்றுவரும் அபிவிருத்தியின் குறியீடாக நிமிர்ந்து, வளைந்து நிற்கின்றது. மாலைப் பொழுதொன்றிலோ, காலைப் பொழுதொன்றிலோ அந்தப் பாலத்தடியில் நிற்கும் ஒருவர் வடக்கின் அழகை முழுவதுமாக உய்த்து அனுபவிக்க முடியும். பிரமாண்டமான அலைகள், பெருஞ்சாலையில் அடித்துத் தூறலாக நனைக்கும். மெல்லிய ஈரம் தொட்டிருக்கின்ற இதமான வேளையில் ஒரு பக்கம் நீண்டு நிமிர்ந்த யாழ்ப்பாணத்துப் பனைகளும், இடையிடையே முளைத்திருக்கும் கட்டடங்களும், மறுபுறம் ஆனையிறவின் பெருவெண் உப்பு வெளியும், மறுபுறம் வன்னிக் காட்டின் குளிர்ச்சியும், எல்லாவற்றையும் குறுக்கே பிரித்து நிற்கும் கடலின் அழகும், கடலுக்குக் குறுக்கான தார் வீதியும் நம்மை ரசணையின் மிகுதியில் கூக்குரலிட வைக்கும்.

இவ்வளவு அழகுதரும் சங்குப் பிட்டிப்பாலத்தடியின் அபிவிருத்தி இன்னமும் முற்றுப் பெறவில்லை என்பதை நம்புவீர்களா? இப்போதும் அங்கு வீதிப் பணிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இதை ரசித்தபடியே கொஞ்சத் தூரம் மன்னார் பக்கமாக நகரலாம். அதில் முதலாவதாக வருகின்ற சந்திக்குப் பெயர் கவுதாரி முனைச் சந்தி. அதற்குள்ளாகப் பயணித்தால், சங்குப் பிட்டிப் பாலத்தில் நின்று ரசித்த மொத்த அழகும் ஊனம் வடிக்கும். அபிவிருத்தியின் துர்நாற்றம் ‘கப்’ என அடிக்கும் புழுதியாக. மூச்சே நின்றுபோகும். அவ்வளவு புழுதிக்குள்ளும்தான் அங்கு வாழும் யாழ்ப்பாணத்துத் தென்கரையினதும், வன்னியின் வட கரையினதும் மக்களின் வாழ்க்கை தொலைகிறது.

“மணல் அள்ளுறவங்கள், கிரவல கொட்டி நிரவின றோட்டுத்தான் இது. அவங்களும் இல்லாட்டி இந்த றோட்டும் இல்ல” என்று புறுபுறுத்தபடி நடக்கும் நடைபயணிகளோடு பேசிக் கொண்டே, அந்தப் புழுதித் தெருவின் ஓரங்களில் அமைந்திருக்கும் கிராமங்களைத் தரிசிக்கலாம். இதற்குள் போரில் முறிந்த மொட்டைப் பனைகளை, கைவிடப்பட்ட பதுங்குழிகளை, செக் பண்ணும் இராணுவ காவலரண்களை, வானைத் தொடும் மணல் கும்பிகளை, அதைக் குடைந்து விற்கும் மணல் கொள்ளையர்களை, தூரத்து தெரியும் யாழ். பல்கலைக்கழகத்தை, எப்போதாவது வரும் வாகனங்களை எனப் பலவற்றையும் புதினம் பார்க்கலாம்.

அந்தத் தொலைதெருவின் முடிவில்தான் விநாசியோடைக் கிராமம் அமைந்திருக்கிறது. அங்கு என்ன புதினம்? அவள்தான் ஒரே புதினம். அவளால் ஊரே புதினம். யாரைக்கேட்டாலும், “அந்தப் பள்ளிக்கூடத்துக் பின்னால இருக்கிற வீடு” என்று முகவரி காட்டிவிடுகின்றனர்.

உதயகுமார் நினஞ்சலா. 9ஆம் ஆண்டு வரை மட்டுமே இருக்கின்ற அந்தக் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிறாள். சமூக, விஞ்ஞான போட்டியில் மாகாண மட்ட ரீதியில் முதலிடம் வந்ததே அவளின் சாதனை. ஏனைய மாவட்ட மாணவர்களின் சாதனைகளுடன் ஒப்பிடுகையில் இது சிறியதுதான். ஆனால், இது போன்றதொரு எந்த அடிப்படை வசதியுமற்ற அதிகஸ்ட கிராமத்தில், அங்கேயே இருந்து, தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லாது, படித்து வட மாகாணத்து அனைத்துப் பாடசாலைகளினது மாணவர்களுடனும் போட்டியிட்டு முதலிடத்து வருவதென்பது வலி நிறைந்த சாதனை.

ஒருயொரு தற்காலிகத் தகரக் கட்டடத்துடன் இயங்குகின்றது அவள் படித்த பாடசாலை. இன்னொரு கட்டடம் இடிந்தும் உடைந்தும் சிதைந்தும் கிடக்கின்றது. கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை. ஒழுங்கான தனியார் கல்வி நிலையங்கள் இல்லை. இதுமாதிரியான பிரச்சினைகள் அவளுக்கும் பொதுவானதாக இருக்கின்றது.

இவ்வளவுக்கும் மத்தியில் சுயமாகப் படித்தாள் அவள். வீட்டில் தொலைக்காட்சி இல்லை. பொழுதுபோக்கு வசதிகளோ, மேலதிக அறிவைப் பெறும் தொழில்நுட்ப வசதிகளோ, நூலகங்களோ இல்லை. வீடு, முற்றம் எனப் பார்க்குமிடம் முழுதும் வறுமைதான் நிரம்பியிருக்கிறது. இரவு 9 மணிவரைக்கும், காலை 5 மணியிலிருந்து குப்பி விளக்கில் அன்றாடம் படிக்கும் அறிவே அவளை முன்னேற்றி வருகின்றது. அவ்வப்போது ஆறுதலளிக்கும் யாழ்ப்பாணத்து ஆசிரியை ஒருவர் அவளுக்குத் துணையாக இருக்கிறார். கதைகளில் நன்றியோடு நினைவுகூறுகின்றாள். அதைவிட உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டாள் அண்ணா என்கிறாள்.

அண்ணா பக்கத்திலேயே இருக்கிறார். அவரால் அசையக்கூட முடியாது. இருந்த இடத்தில் அப்படியே இருக்கிறார். இடையிடையே சிரிக்கிறார். எதையோ சொல்ல முயற்சிக்கிறார். தேங்கிய வார்த்தைகள் முழுதுமாக வெளியில் வர சிக்கிக் கொள்கின்றன.

அவளின் அண்ணாவுக்குப் இப்போது 14 வயது. திக்கித் தடுமாறும் வார்த்தைகளில் அவன் தன்னைச் சொல்கிறான். தங்கையை முந்திக் கொண்டு தன் திறமைகளை நினைவுகூர்கின்றான்.

10567358_674447379305485_787387108_n.jpg

“நான் சரியான கெட்டிக்காரன் அண்ணா, இங்கயே படிச்சி, ஸ்கொலர்ஷிப் கூட பாஸ் பண்ணினன். அதுக்குப் பிறகு இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்கால் போயிட்டம். அங்க பங்கருக்குள்ள இருக்கேக்க ஷெல் விழுந்து காயப்பட்டு, முன் பாதித் தலை துண்டாகிட்டுது. பிளந்தபடி இருந்தது. சில நரம்புகள் அறாமல் தொடர்போட இருந்ததால தலையப் பொருத்திக் கட்டி காப்பாத்திட்டினம். பிறகு ஹொஸ்பிட்டலுக்குப் போய், ஒப்பரேசன் செய்துதலைய ஜொயின்ட் பண்ணிட்டினம். (தலையைத் தொட்டுக் காட்டுகிறார்) அதோட கால், கை எல்லாம் இழுத்துட்டுது. நடக்க மாட்டன். தள்ளுவண்டியில வச்சித்தான் தள்ளிக் கொண்டு போகோனும். நெடுகலும் நடக்கிற பயிற்சி செய்யச் சொல்லிச்சினம். இந்த மணலுக்க அம்மாவால தள்ள ஏலாது. பள்ளிக்கூடத்தில கொண்டு போய் இருத்திவிட்டா, பள்ளிக்கூடம் முடிய அம்மா வந்து தள்ளிக் கொண்டு போகவேணும். அங்க பெடியள் எல்லாரும் விளையாடுறதையும், படிக்கிறதையும் பாக்க ஆசையா இருக்கும். இப்ப படிக்கிற எதுவும் நினைவு நிக்குதில்ல. நெடுகலும் மணலுக்க தள்ளித் தள்ளி தள்ளுவண்டியும் உடைஞ்சிட்டுது. அதால பள்ளிக்கூடம் போறத நிப்பாட்டிட்டன். எனக்குப் படிக்கப் போகோணும் போல இருக்கு அண்ணா…” என்கிறவனிடம் பதில் சொல்ல எதுவுமிருக்கவில்லை. ஆறுதலாக தங்கையைப் பார்ப்பதை விட எந்த நம்பிக்கையை அவனுக்குக் கொடுக்கமுடியும்?

“இங்கயே இருந்தா மகளாலையும் 9ஆம் ஆண்டு வரைக்கும்தான் படிக்க முடியும் தம்பி” என்கிறார் நினஞ்சலாவின் அம்மா.

ஏன் அப்படி?

உங்களுக்கே தெரியும். இங்க அடிக்கடி பஸ் இல்ல. காலம ஒரு பஸ், பின்னேரம் ஒரு பஸ். 9ஆம் ஆண்டுக்குப் பிறகு படிக்கப் போறதெண்டா பூநகரிக்குத்தான் போகவேணும். அங்க போய் படிக்க நேரத்துக்கு பஸ் வறாது. காலம வந்தாலும், பள்ளிக்கூடம் விடுற நேரத்துக்குப் பின்னேரம் நடந்துதான் வரவேணும். இவ்வள தூரம்? இப்ப இருக்கிற நிலைமயில பொம்பிளப் பிள்ளையள் இந்தக் காட்டுக்குள்ளால சயிக்கிளில போய் படிச்சிட்டு வாறதும் சாத்தியமில்ல” என்கிறார் நம்பிக்கை அறுந்த வார்த்தைகளில்.

இது மாதிரியான அதிகஸ்ட பிரதேசங்களில் மிளிரும் சிறு நட்சத்திரங்களின் பிரகாசம் இப்படித்தான் அணைந்துபோகின்றது என்பதற்கு ஒரு சாட்சியாகத் தெரிகிறாள் நினஞ்சலா.

இப்போது வாருங்கள் சங்குபிட்டிப் பாலத்திற்கு. மறுபடியும் அந்த அபிவிருத்தியையும், அழகையும் ரசியுங்கள். சிலவேளைகளில் உங்களுக்கு அங்கு அடிக்கும் மெல்லிய அலைகளில் அழுக்குத் தெரியலாம். தூரத்தே தெரியும் எல்லா அழகுகளிலும் துர்நாற்றம் மேற்கிளம்பி வரலாம். அங்கு நின்று உரத்துக் கத்திப் பார்க்கலாம், எது அபிவிருத்தி?

நன்றி: உதயசூரியன்

http://maatram.org/?p=1745

Link to comment
Share on other sites

இவரைப் பற்றி எனக்குத் தெரிந்தவர்களிடம் கூறுகிறேன்.  இவர் விரும்பும்பட்சத்தில் வேறு இடத்திலிருந்து படிக்க ஏற்பாடு செய்ய முனைகிறேன்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.