Jump to content

இன்று சுதந்திரபுரப் படுகொலையின் 14 -ம் ஆண்டு நினைவுநாள்.


Recommended Posts

10.06.1998 அன்று வன்னியில் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரபுரம் என்ற கிராமத்தின்மீது சிங்களப்படையால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவரை அக்கிராமம் எவ்வித தாக்குதலுக்கும் ஆளாகவில்லை . யுத்த முனையிலிருந்து நன்கு பின்னுக்குத் தள்ளியிருந்த அழகிய அமைதியான கிராமம்.

அன்று காலை சிங்கள வான்படைக்குச் சொந்தமான இரு கிபிர் விமானங்கள் அக்கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தின்மீது குண்டுகள் போட்டன. அவை தாண்டவமாடி முடிந்து போனதும் அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த ஜெயசிக்குறு இராணுவம் ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின்மேல் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலை நடத்தின.

இத்தாக்குதலில் சிறுவர்கள் உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

ஒரு குடும்பத்தில் கைக்குழந்தையொன்றைத் தவிர மிகுதி ஐவரும் கொல்லப்பட்டதாக ஞாபகம். அதற்கு ஒரு கிழமைக்கு முன்புதான் கிளிநொச்சியிலிருந்து பெருமெடுப்பில் திருவையாறு வழியாக முன்னேறிய படையினரை முறியடித்தனர் புலிகள். அதில் சிங்கள அரசின் சிறப்புப் படைப்பிரிவொன்று நிர்மூலமாக்கப்பட்டது. மொத்தமாக நூற்றுக்குமதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.

இப்படுகொலை நடத்தப்பட்ட நாளுக்கு சரியாக ஒருவருடம் முன்பு ‘ஜெயசிக்குறு’ என்ற பேரில் நடவடிக்கை தொடங்கி வன்னியை ஆக்கிரமித்திருந்த இராணுவத்தினர் மீது புலிகள் அதிரடித்தாக்குதலொன்றை நடத்தி படைத்தரப்புக்குப் பாரிய இழப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

அன்றைய சுதந்திரபுரப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு எம் அஞ்சலிகள்.

http://thaaitamil.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/

Link to comment
Share on other sites

இத்தாக்குதலின்போது விடுதலைப் புலிகளின் வழங்கற்பிரிவுப் பொறுப்பாளரும் முன்னாள் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் அம்மா (அன்பு) அவர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

இவருக்கு எமது வீரவணக்கம்

83_lt_col_amma.jpg

Link to comment
Share on other sites

[size=4]கொலைகள், படுகொலைகள், இனப்படுகொலைகள், மதக்கலவரங்கள் மூலம் சிறுபான்மை மக்களை அழித்துக்கொண்டு வருகின்றது ஜனநயாக சிங்கள தேசம்.[/size]

[size=4]இந்தப்படுகொலையில் கொல்லப்பட்ட அனைத்து மக்களினதும் ஆத்மா சாந்தியடையுட்டும்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா அரசபயங்கரவாதிகளின் விமானங்கள் நடத்திய நாசகாரத்தாக்குதலில் கொல்லப்பட்ட அனைத்து மக்களினதும் ஆத்மா சாந்தியடையுட்டும் .

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.