Jump to content

இந்தியாவுடன் பேசிய விடயங்களை வெளியிட முடியாது என்கிறார் மாவை


Recommended Posts

mavai%20931de.jpg

 

இந்தியாவுடன் என்ன கதைத்தோம் என்பதை முழுமையாக இந்தியாவும் வெளியிடமாட்டாது; நாமும் வெளியிட முடியாது. இராஜதந்திர ரீதியாக நடக்க வேண்டிய கால கட்டம் இது. அதனைப் பின்பற்றி நாமும் செயற்பட வேண்டியமை மிகவும் அவசியமாகும். - இவ்வாறு தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா.
 
இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் எண்பத்தாறாவது ஆண்டு பிறந்த நாள் நிகழ்வை நினைவு கூரும் வகையில் நேற்று செவ்வாய்ககிழமை பிற்பகல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைக் கிளையின் தெல்லிப்பழையில் அமைந்துள்ள அலுவலகத்தில் 'இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இலட்சியப்பாதை' என்னும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. வலி. வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேசுகையிலேயே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடாந்து பேசும் போது கூறியவை வருமாறு:-
 
இன்று உலக நாடுகள் தமக்குள் இராஜதந்திர ரீதியிலான உறவுகளைக் கொண்டுள்ளன. இந்த வகையில் பொருளாதார ரீதியாக அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் கூட்டாக உடன்படிக்கையில் கையொப்பம் இட்டு, பொருளாதார ரீதியாகச் செயற்படுகின்றன. உலக நாடுகளின் இராஜதந்திரப் போக்குகளை நாம் புரிந்து கொண்டு செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்த வகையில் இந்தியாவினுடைய இராஜதந்திரப் போக்குளையும் மற்றும் அதனுடைய செயல்பாடுகளையும் உணாந்து செயற்பட வேண்டியதும் அவசியமாகும்.
 
அன்று கட்சிக் கொள்கைக்கு கட்டுப்பாடாமல் செயற்பட்டமையால்தான் ஊர்காவற்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வி.நவரத்தினம் மற்றும் யாழ்ப்பாணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் போன்றவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள். அன்றைய கால கட்டத்தில் கொள்கைக்காக பதவியைத் துறந்தவர்தான் திருச்செல்வம். கட்சியின் கொள்கையைக் கருத்தில் கொண்டு தலைமைக்கு கட்டுப்பட்டுத்தான் தனது பதவியைத் துறந்தார்.
 
1972 ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்பட்ட நிலையில்தான் அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து அதற்கு எதிராக ஒன்று ஐக்கியப்பட்டுச் செயற்பட்டன. இன்று எத்தனையோ பேர் கட்சித் தலைமையின் முடிவை ஏற்றுக்கொள்ளாது பதவிகளுக்காகப் போராட்டங்களை நடத்தும் நிலைமைதான் காணப்படுகின்றது. அன்று அண்ணன் அமிர்தலிங்கம் பல்வேறு போராட்டங்களையும் முன்னின்று நடத்தியுள்ளார். அன்று தந்தை செல்வா தனது பதவியைக் கட்சியின் முடிவுக்கு ஏற்ப இராஜினாமாச் செய்தார்.
 
அன்று மிகவும் கஷ்டமான நிலையில் காணப்பட்டார். இதேபோன்றே அண்ணர் அமிர்தலிங்கத்தின் வாழக்கையும் கஷ்டமானதாகவே காணப்பட்டது. அவரும் சொத்து சேர்த்தவர் அல்லர். வழக்கறிஞராக இருந்த வேளையில் ஒரு வீட்டை மட்டும்தான் கட்டினார். பின்னர் மிகவும் கஷ்டமான நிலைமைக்கு உள்ளாகினார். தான் கஷ்டப்பட்டாலும் கூட வடக்கு, கிழக்கின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று கட்சியின் பணிகளை நல்லமுறையில் செய்து வந்துள்ளார். 'ட்ரயல் அட்பார்' வழக்கில் கூட அவருக்கு எழுபது ஆண்டுகள் சிறைத்தண்டனை, சொத்தக்கள் பறிமுதல் என்று தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும் கூட அவர் பயந்தவர் அல்லர். ஏன் என்றால் அவரிடம் சொத்துக்கள் எவையும் இருக்கவில்லை. - எனக் குறிப்பிட்டார். -
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தானே மாவை அண்ணே.. உங்கட அண்ணனும் செய்தவர். டெல்லிக்குப் போவார்.. சென்னையில மாளிகையில் தங்குவார்.. அப்புறம் கொழும்பில்.. வீட்டில் உறங்குவார். கேட்டால் ராஜதந்திரம்.. செய்கிறோம். அதனை வெளியில சொல்ல முடியாது.

 

கடைசில ஒரு இராஜதந்திரம் செய்தார் பாருங்கள்.. இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் ரப்பர் செல் மட்டுமே அடிக்கிறது என்று. இறப்பர் செல்லுக்கு.. உறவுகளை.. சொத்துக்களை.. தேசத்தைப் பறிகொடுத்த மக்களின்.. நெஞ்சு மறக்குமா அந்த இராஜதந்திரத்தை..! :icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவினுடைய இராஜதந்திரப் போக்குளையும் மற்றும் அதனுடைய செயல்பாடுகளையும் உணாந்து செயற்பட வேண்டியதும் அவசியமாகும்
புரியுது அண்ணோய்.......நல்லூரானுக்கு இராணுவம் காவடி எடுத்து அவங்கள் ஒரு வித ராஜதந்திரம் செய்கிறாங்கள்....நீங்கள் இந்தியாவுக்கு காவடி எடுத்து புதுவித ராஜதந்திரம் செய்கின்றீர்கள்....
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்ன சம்பந்த இரகசியம் கதைத்திருக்கப் போகிறார்கள்.தருவதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று மோடி சொல்லியிருப்பார்.அதை தமிழ்மக்களிடம் சொல்லப்பயந்து கவுண்டமணி பாணியில் உதார் விடுகிறார் பாருங்கோ!!!!!!!!!!!!!https://www.youtube.com/watch?v=qDzKEuxF6qU&index=1&list=PL508893A06B13A8D8

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடன் பேசிய விடயங்களை வெளியிட முடியாது 

 

ஒன்றுமில்லாதையும் வைத்து

படம் காட்டும்நிலையில் தமிழன்.... :(  :(  :(

Link to comment
Share on other sites

கொழும்பில் பேசிய சுப்பிரமணியசுவாமி வெளியுறவுத்துறை அமைச்சர் மட்டுமே தமிழர் கூட்டமைப்பை சந்திப்பார். பிரதமர் சந்திக்க மாட்டார் எனக் கொக்கரித்திருந்தார். இதுவே ராஜபக்சவினதும் சில அயல்நாட்டு அதிகாரிகளினதும் எதிர்பார்ப்பு. இப்போது மேல்மட்டச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. 

 

இந்தியா அமரிக்கா அல்லது வேறு எந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நிகழ்ந்தாலும் பேச்சுவார்த்தைகளில் இருதரப்பும் வெளியிட ஒப்பிய விடயங்களைத் தவிர ஏனைய விடயங்களை ஊடகங்களுக்கு வெளியிடுவது இராசதந்திர மரபும் நெறியுமல்ல.இது தொடர்ந்து பணியாற்றுவதைச் சிக்கலாக்கும். 

 

மாவை அண்ணா அவர்கள் பேசும்போது இராசதந்திர மரபுகளை மீறி  "என்ன கதைத்தோம் என்பதை முழுமையாக இந்தியாவும் வெளியிடமாட்டாது; நாமும் வெளியிட முடியாது" என்று கூறியுள்ளார்..இப்படி மறைப்பதற்க்கு ஏதோ இருக்கு என்ற தொனியில் அப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல பேசுவதும் இராசதந்திர நெறிமுறைகளுக்கு மாறானது. இது நம்பகத் தன்மையை பாதிக்கும்.

 

 இந்தியாவோ அமரிக்காவோ யாருடன் பேசினாலும் இருதரப்பும் வெளியிட ஒப்புக்கொண்ட விடயங்களை மட்டும் சொல்லி மெளவுனம் சாதிப்பதே மரபு. செல்வநாயகம் காலத்தில் இருந்தே எங்கள் வரலாற்றில் இராசதந்திரம் வலுவற்றதாகவே இருந்து வருகிறது.

 

இந்த உலகமயமாதல் காலக் கட்டத்தில் இராசதந்திர மரபுகளை மீறினால் நாம் தனிமைப் பட்டு விடுவோம். உலகமயமாதலின் இராசதந்திரம் என்ன விலைகொடுத்தும் நம் போராட்டத்தை உலகமயமாவதுதான். கொசோவா தெற்க்கு சூடான் தெற்க்கு தீமோர் போன்ற நாடுகள் கொடுத்த விலையும் விட்டுக்கொடுப்புகளும்தான் அவர்கலது விடுதலைகான முதலீடு ஆனது. அதற்க்கு அவர்களது தனிமைப்படாமையை  முன்னிலைப்படுத்திய அரசியலும் இராசதந்திர நகர்வுகளும்தான் காரணம். அவர்களது இராசதந்திரத்தின் அடிப்படையாக விடுதலை தொடர்பான அரசியல் உறுதிப்பாடு இருந்தது. பரந்துபட்ட ஐக்கியம் இருந்தது. இந்த இரண்டும் அமைந்ததால்தான் அவர்களால்  விடுதலைக்குக் குறைந்த தீர்வுகளை விடுதலையை வெல்லுவதற்கான படிக்கட்டுகளாக்க முடிந்தது.  நமது புலம் பெயர்ந்த விடுதலைக் குழுக்களும் கூட்டமைப்பு அரசியல் வாதிகளும் கற்றுக்கொள்ள வேன்டிய பாடம் இதுதான்.

 

 விடுதலையில் உறுதியோடு  விடுதலைக்கு முதலீடாகக்கூடிய விடயங்களில் மட்டும் தற்காலிக விட்டுக்கொடுப்புகளோடு நமக்குள்ளும் உலக அரங்கிலும்  தனிமைப் படுதலை தவிர்த்து முன்னேறுவதுதான் நமக்குள்ள ஒரே வழி. இந்த உலகமயமாதல் காலக்கட்டத்தில் தனிமைப்படுதல் தோல்விக்கே வழிவகுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு இராஜதந்திரம் தெரிய வேண்டாம். கடைசியில.. இராஜதரித்திரமாக.. உந்த இராஜதந்திரங்கள் மக்களை ஏமாற்றாமல் இருந்தாலே போதும்.

 

மக்கள் ஏலவே உங்களின் இரகசிய இராஜதந்திரங்களை இட்டு நன்கு அனுபவப்பட்டிட்டார்கள். எனியும் தாங்காது. அந்த வகையில்.. விலாவாரியா... ஏதேனும் மக்களுக்கு தெம்புவாற மாதிரி சொல்லுங்க.. மாவை. அரைச்ச மாவையே அரைக்காமல்..! :icon_idea::)

Link to comment
Share on other sites

யாழ் குடும்பத்துக்கு அன்பான வணங்கங்களும் வாழ்த்துக்களும், .

 

பெரும்பாலான இனைய தளங்களில் என் கருத்துக்களுக்கு வரவேர்பிருந்தாலும் குடும்ப உணர்வே என்னை யாழில் எழுதத்தூண்டுகிறது. இதற்காக ஒரிருவரால் நான் பட்ட அவமானம் கொடுத்த விலை அதிகம். அவர்கள் ஓயாத அலைகளின் சுதந்திரத்தோடு இயங்குகிறார்கள்.                      

 

நான் ஒரு ஆரோக்கியமான விவாத்தை வேன்டியே உங்கள் முன் என் கருத்துக்களைச் சமர்பிக்கிறேன். அதற்கான சூழலை நீங்கள் எனக்கு உறுதிப்படுத்த வேண்டும். அல்லது என்னை யாழ்க் குடும்பத்தைவிட்டு வெளியேற்ற வேண்டும்.

 

குரங்கேற்றுக்கொள்ளாத கொப்புண்டோ உண்டோ - என்னை

விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்து   - கம்பர் 

Link to comment
Share on other sites

சுயநலன்களுக்காக தாயகத்தை விட்டு ஓடிவந்ததேல்லாம் கருத்தெழுதினால் விடுதலை கிடைக்குமென்று கனவு காணுதுகள் ,சீமானின் கொள்கைப்படி தமிழ் ஈழம் வேண்டுமாயின் நீங்கள் தான் போராடவேண்டும் .

Link to comment
Share on other sites

சுப்புசாமியையும் குறைவாக நாம் எடை போட முடியாதல்லவா பொயட். அவர் முக்கிய மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க கொள்கை வகுப்பாளர் கொண்ட உள் வட்டத்திற்குள் ( Inner circle ) உள்ளது போல் ஒரு தோற்ற‌ம் இருக்கிறதே.

Link to comment
Share on other sites

தங்களுடைய சுயநலன்களுக்காக தாயகத்தை விட்டு ஓடிவந்ததேல்லாம் கருத்தெழுதினால் விடுதலை கிடைக்குமென்று கனவு காணுதுகள் ,சீமானின் கொள்கைப்படி உங்களுக்கு தமிழ் ஈழம் வேண்டுமாயின் நீங்கள் தான் போராடவேண்டும் .

கள் உறவு poet ன் ஆக்கபூர்வமான ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய கருத்துக்களை வாசித்த பின்னரும் இப்படி வீண் சீண்டல் விவாதங்களை ஆரம்பிக்க உங்களுக்கு எப்படி மனசு வருகிறது.

Link to comment
Share on other sites

யாழ் குடும்பத்துக்கு அன்பான வணங்கங்களும் வாழ்த்துக்களும், .

 

பெரும்பாலான இனைய தளங்களில் என் கருத்துக்களுக்கு வரவேர்பிருந்தாலும் குடும்ப உணர்வே என்னை யாழில் எழுதத்தூண்டுகிறது. இதற்காக ஒரிருவரால் நான் பட்ட அவமானம் கொடுத்த விலை அதிகம். அவர்கள் ஓயாத அலைகளின் சுதந்திரத்தோடு இயங்குகிறார்கள்.                      

 

நான் ஒரு ஆரோக்கியமான விவாத்தை வேன்டியே உங்கள் முன் என் கருத்துக்களைச் சமர்பிக்கிறேன். அதற்கான சூழலை நீங்கள் எனக்கு உறுதிப்படுத்த வேண்டும். அல்லது என்னை யாழ்க் குடும்பத்தைவிட்டு வெளியேற்ற வேண்டும்.

 

குரங்கேற்றுக்கொள்ளாத கொப்புண்டோ உண்டோ - என்னை

விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்து   - கம்பர்

வெற்று வேட்டுகளுக்கு பயந்து யாழுக்கு வராமல் விடாதீர்கள் . நீங்கள் தொடர்ந்து பயணியுங்கள் .

கள் உறவு poet ன் ஆக்கபூர்வமான ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய கருத்துக்களை வாசித்த பின்னரும் இப்படி வீண் சீண்டல் விவாதங்களை ஆரம்பிக்க உங்களுக்கு எப்படி மனசு வருகிறது.

நான் இதை poet க்கு எழுதவில்லை .தொப்பி அளவானவர்கள் போடலாம் .poet யதார்த்தவாதி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Poet எனும் வசெ ஜெயபாலனுக்கு,

1) மாவையின் வீண் அலம்பல் ராஜதந்திர பின்னடைவே - மற்றயர்கள் எல்லோரும் மெளனம் காக்க - இவர் முந்திரிகொட்டை மாரி பேசியது இவரின் தலமைதுவமற்ற நிலையையே காட்டுகிறது. உங்கள் கருத்து சரி.

2) தமிழ்நெட் வகையறாக்களுக்கு தெரிந்த ஒரே ராஜதந்திரம் பலமிருக்கும் போது மண்டையில் போடுவது, பலமிழந்தால் - வெள்ளைகொடியோடு காலில் விழுவது. அவர்களை பற்றி கவலைபடாதீர்கள்.

3) உங்கள் சுயதம்பட்டத்தை குறையுங்கள். நீங்கள் கம்பனும் இல்லை, நாங்கள் பாண்டியனும் இல்லை. இது பல்துறை விற்பனர்களும் உரையாடும் களம். இங்க வந்து என்னை "அவுக கேட்டாக, இவுக கேட்டாக' ஆனா நான் உங்களிட்ட பேச வந்தேன் எண்டு கோவை சரளா ரேஞ்சுக்கு உதார் விட்டா, மக்களுக்கு கெட்ட கோபம் வரும். பிச்சு மேஞ்சுடுவார்கள்.

உங்கள் கருத்து அடிபட்டுபோக நீங்கள் விவாத் பொருளாய், கேலிப்பொருளாய் ஆகிப்போவீங்க.

Poet எனும் வசெ ஜெயபாலனுக்கு,

1) மாவையின் வீண் அலம்பல் ராஜதந்திர பின்னடைவே - மற்றயர்கள் எல்லோரும் மெளனம் காக்க - இவர் முந்திரிகொட்டை மாரி பேசியது இவரின் தலமைதுவமற்ற நிலையையே காட்டுகிறது. உங்கள் கருத்து சரி.

2) தமிழ்நெட் வகையறாக்களுக்கு தெரிந்த ஒரே ராஜதந்திரம் பலமிருக்கும் போது மண்டையில் போடுவது, பலமிழந்தால் - வெள்ளைகொடியோடு காலில் விழுவது. அவர்களை பற்றி கவலைபடாதீர்கள்.

3) உங்கள் சுயதம்பட்டத்தை குறையுங்கள். நீங்கள் கம்பனும் இல்லை, நாங்கள் பாண்டியனும் இல்லை. இது பல்துறை விற்பனர்களும் உரையாடும் களம். இங்க வந்து என்னை "அவுக கேட்டாக, இவுக கேட்டாக' ஆனா நான் உங்களிட்ட பேச வந்தேன் எண்டு கோவை சரளா ரேஞ்சுக்கு உதார் விட்டா, மக்களுக்கு கெட்ட கோபம் வரும். பிச்சு மேஞ்சுடுவார்கள்.

உங்கள் கருத்து அடிபட்டுபோக நீங்கள் விவாத் பொருளாய், கேலிப்பொருளாய் ஆகிப்போவீங்க.

Link to comment
Share on other sites

இரு நாட்டுத் தலைவர்கள் பேசுகின்ற விடயங்கள் முழுமையாகத் தெரியப்படுத்தப்படுவது உலக நடைமுறையாக இல்லை. அப்படி இருந்தால் பல விடயங்களை வெளிப்படையாகக் கதைக்க முடியாது. 

அதே போலத் தான் தமிழர் தரப்பு இந்தியப் பிரதமருடன் கதைத்த விடயங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்பட வெண்டும் என எதிர்ப்பார்ப்பதிலும் நியாயமில்லை.. உதாரணமாக யுத்தம் செய்தாவது தமிழருக்குரிய அதிகாரத்தைப் பெற்றுத் தருவோம் என்று மோடி தமீழர் தரப்பிடம் கூறினார் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அதை அப்படியே வந்து பத்திரிகை அறிக்கையாக வெளியிட முடியுமா?

 

அப்படி வெளியிட்டால் தமிழர் தரப்பை இன்னொரு நாட்டுத் தலைவர் மீளவும் சந்திக்கச் சம்மதிப்பாரா?

 

13+ ஐ செயற்படுத்துவதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று மோடி நொன்னார் என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினரர் கொழும்பு வந்த பின்னர் தெரிவித்த போதே அது குறித்து எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. இப்போது வரிக்கு வரி அவர்  என்ன சொன்னார் என்று சொல்ல வேண்டும் என்று அடம்பிடிப்பதில் எந்த நீயாயமும் இருப்பதாகப் படவில்லை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான கருத்து மணி. மாவை இவ்வளவு சொன்னதே டூமச், அவரின் கத்துகுட்டிதனத்தின் வெளிப்பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலே அரசியல் விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதில்லை என்பது உண்மைதான்.

ஆனால் செல்வநாயகம் காலத்திலிருந்தே என்னத்தை கதைக்கினம் எண்டதுதான் இப்ப கேள்வி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலே அரசியல் விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதில்லை என்பது உண்மைதான்.

ஆனால் செல்வநாயகம் காலத்திலிருந்தே என்னத்தை கதைக்கினம் எண்டதுதான் இப்ப கேள்வி

 

 

மாவையின் பார்வையில்...

அப்படி ஒரு.. இராஜதந்திரத்தால் தான்.. நாங்கள் எல்லாம் சாகாமல் இருந்து இன்னும் இராஜதந்திரமா வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழர் விடுதலைக் கூட்டணி முன் செத்துப்போய் கிடந்த தமிழரசுக் கட்சியை.. தம்பி பிரபாகரன் காட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கூடாக வளர்த்து விருட்சமாக்கி விட்டிருக்கிறம்.

 

நமக்குப் பின்னாடி பிறந்ததுகள்.. வந்ததுகள் எல்லாம்.. வந்ததும் போனதும் என்றாகிவிட்டது. இதுவே ஒரு இராஜதந்திரம் தானே..! :D

Link to comment
Share on other sites

படம் காட்டுவது என்பது இதுதான் .

 

கனடாவில் மாவையின் பேச்சை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது , எழுபதுகளுக்கு கூட்டிக்கொண்டு போனார் .

நண்பர் சொன்னார் நாட்டில் இப்படித்தான் இன்றும் அரசியல் செய்யவேண்டும் என்று .எதை கேட்டாலும் அது இரகசியம் என்பது (எதை கேட்டாலும் இராணுவ இரகசியம் வெளிநாட்டிலும் எம்மவர் பலர் விட்ட கணக்குகள் சொல்லி மாளாது )

 

வெளிப்படை அரசியல் எமக்கு சரிவராது உண்மையை சொன்னால் ஓட்டைவாயன் என்று ஒதுக்கிவிடுவார்கள் . :icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது Okay 3) உங்கள் சுயதம்பட்டத்தை குறையுங்கள். நீங்கள் கம்பனும் இல்லை, நாங்கள் பாண்டியனும் இல்லை. இது பல்துறை விற்பனர்களும் உரையாடும் களம். இங்க வந்து என்னை "அவுக கேட்டாக, இவுக கேட்டாக' ஆனா நான் உங்களிட்ட பேச வந்தேன் எண்டு கோவை சரளா ரேஞ்சுக்கு உதார் விட்டா, மக்களுக்கு கெட்ட கோபம் வரும். பிச்சு மேஞ்சுடுவார்கள்.

மன்னர்.-அமைச்சரே ஏன் அவனை இந்த அடி அடிக்கிறீர்கள்? மநதிரி-இராணுவ இரகசியத்தை வெளியில் சொல்லி விட்டான் மன்னா!!!!! மன்னர்-நமக்குத்தான் இராணுவமே கிடையாதே!!!!!! மந்திரி-அதைத்தான் மன்னா வெளியில் சொல்லி விட்டான்!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

மோடியுடனான சந்திப்புத் தொடர்பில் சென்னையில் சம்பந்தன் ஊடகர் சந்திப்பு!

 

 

sampanthan-BJP.jpgஇலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட இந்தியப் பிரதமர் நரேந்திர உறுதியான நடவடிக்கை எடுப்பார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு புதன்கிழமை மாலை வருகை தந்த அவர், மத்திய கனரகத் தொழில்கள் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மூத்த தலைவர்கள் இல. கணேசன், எச்.வி. ஹண்டே, மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜூலு, மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இச்ந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி. சுமந்திரனும் உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சம்பந்தன் கூறியது:

கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில்  சந்தித்துப் பேசினோம். அனைத்தையும் மிகவும் பொறுமையுடன்  கேட்டறிந்த மோடி, எங்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார்.

பிரதமராக பதவியேற்ற 24 மணி நேரத்துக்குள் இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் நடந்த பேச்சின்போது, இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என உறுதியுடன் தெரிவித்ததாக மோடி எங்களிடம் கூறினார்.

ஒருங்கிணைந்த இலங்கை என்ற வரையறைக்குள் தமிழர்கள் சம உரிமை, சுயமரியாதை, கண்ணியம், கௌரவத்துடன் வாழ, அரசியல் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது இந்தக் கருத்தை நாங்களும் ஏற்கிறோம்.

13-வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழர்கள் பூர்விகமாக வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு மாநிலங்களை இணைக்க வேண்டும், சிங்களர்களுக்கு சமமாக அனைத்து உரிமைகளுடன் வாழ தமிழர்களுக்கு அதிகாரம் வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற இந்திய அரசு உதவ வேண்டும் என மோடியிடம் வலியுறுத்தினோம்.

வடக்கு மாகாண அரசை முடக்க திட்டம்:

வடக்கு, கிழக்கு மாநிலங்களில் சிங்களர்களையும், ராணுவத்தினரையும் நிரந்தரமாக குடியமர்த்தும் முயற்சியில் ராஜபட்ச அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழ் பள்ளிக்கூடங்களும், ஆலயங்களும் இடிக்கப்படுகின்றன.

தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் மொழி, கலாசார மாற்றத்தை ஏற்படுத்திவிட்டால் அரசியல் தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்படாது என இலங்கை அரசு கருதுகிறது. வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள தமிழர் அரசையும் முடக்க நினைக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் ராஜபட்ச அரசுக்கு அக்கறை இல்லை.

இதுபோன்ற விஷயங்களை பிரதமர் மோடியிடம் தெரிவித்தோம்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்னைகள் தீர அனைத்து நடவடிக்கையும் எடுப்பதாக மோடி உறுதி அளித்தார். அவருடனான சந்திப்பு மிகவும் திருப்திகரமாகவும், முழு நம்பிக்கை அளிப்பதாகவும் இருந்தது. இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க மோடி உறுதியான நடவடிக்கைகள் எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மோடியுடனான சந்திப்பின் தொடர்ச்சியாக தமிழக பாஜக தலைவர்களை சந்தித்து விவாதித்தோம். இதனால் இலங்கைத் தமிழர் பிரச்னை தீரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. பிரச்னைகள் இல்லாமல் மீன் பிடிப்பதற்கு இந்திய – இலங்கை மீனவர்கள் சந்திóத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என்றார் சம்பந்தன்.

பேட்டியின்போது பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், தமிழிசை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் உடனிருந்தனர்.

http://tamilleader.com/?p=40062

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் இப்படி சொல்ல ...... ......நாங்கள் கஷ்மீரில் செய்வதை மகிந்தா வடமாகாணத்தில் செய்கின்றார்,ஒரு நாட்டின் தலைவர் அப்படி செய்வதில் தப்பில்லை என மோடி மனதில் நினைத்திருப்பார்

ஆலயங்களும் இடிக்கப்படுகின்றன.
நான் நம்பமாட்டேன், நேற்று நல்லூர் கந்தனுக்கு இராணுத்தினர் காவடி எடுத்து ,ஊர்வலமாக நடந்து போனவையள் அவர்களாவது கோவிலை இடிப்பதாவது.....
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.