Jump to content

நேரில் சென்று தனது படங்களது திருட்டு வீடியோவைப் பிடித்தார் பார்த்திபன்! Video..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

  partheepan-vcd-240814-300-seithycinema.j

தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த பார்த்திபன், மிகுந்த சிரத்தைக்குப் பிறகு இயக்கிய 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகி வெற்றிபெற்றிருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் திருட்டு வீடியோக்களை ஒழிக்கும் விதத்தில், சென்னை பர்மா பஜாரில் ஒரு கடையில், இயக்குநர் பார்த்திபன் தானே நேரில் சென்று கையும் களவுமாக ஒருவரை பிடித்துள்ளார்.

  

இதை வீடியோ பதிவாக எடுத்து தனது யூடியூப் சனலிலும் பார்த்திபன் பதிவேற்றியுள்ளார். பார்த்திபனின் உதவியாளர் ஒருவர் கடையில் நிற்க, தூரத்தில் கேமராவுடன் இருக்கும் பார்த்திபன், உதவியாளருடன் செல்பேசியில் பேசுகிறார். சிடி வாங்குவதற்காக ஒருவர் வந்து, காசு கொடுத்து, அவருக்கு 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படத்தின் திருட்டு விசிடி கைமாறும் போது, பார்த்திபன் தானே காரிலிருந்து இறங்கி, அந்தக் கடைக்குச் சென்று, சிடி விற்பவரை கையும் களவுமாக பிடிக்கிறார்.

மேலும், அந்தக் கடையில் சமீபத்தில் வெளியான அனைத்து தமிழ்ப் படங்களின் சி.டிக்களும் கிடைக்கும் என்பதையும் பார்த்திபன் தெரிந்து கொள்கிறார். பார்த்திபனைக் கண்டதும் கூட்டம் சேர, தனக்குத் தெரிந்த அதிகாரியையோ நண்பரையோ போனில் அழைத்து அங்கு நேரில் வருமாறு அவர் கேட்கிறார்.

அண்மையில் நடந்த தனது திரைப்படத்தின் வெற்றிவிழாவில், பார்த்திபன் 'கதை, திரைக்கதை, வசனம், இயக்க'ம் படத்தின் டி.விடியை பத்திரிக்கையாளர்களுக்கு எடுத்துக் காண்பித்து வருத்ததோடு பேசினார். சமீபத்தில் தான் நடிகர் விஷால் இதேபோல் கேபிள் டிவியில் புதுப் படங்களை ஒளிபரப்பிய கேபிள் டிவி ஆப்பரேட்டரை கையும் களவுமாக பிடித்த வீடியோ 'மலரும்' வாசர்களுக்கு நினைவில் இருக்கலாம்.

 

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=115534&category=EntertainmentNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடுமையா இருக்கே.... பாவம் கடைக்காரா்... இணையத்தி்ல் குவிந்து கிடக்கும் படங்களை என்ன செய்ய  போறாா் பாா்த்தீபன்... ஆக மொத்தத்தில் தமிழ் நாட்டில் வசதியற்றவா்கள் தியேட்டருக்கும் போக முடியாது... ஒன்லைன்லையும் பாாக்க முடியாது... திருட்டு வீசிடியும் வாங்க முடியாது....

பாவம் இந்த மக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய பட கம்பனிகளே செய்யமுடியாத காரியத்தை.....படங்களில் பத்துப்பேரை ஒரே நேரத்தில் அடிக்கும் சண்டைக்காட்சிபோல் ஒரு அப்பாவியை படம் பிடித்து சாதிக்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்திபன் தனிப்பட்ட முறையில், எப்படி காவல் துறையினரின் வேலையை... செய்ய முடியும்?
இதனால்... பார்த்திபன் பாதிக்கப் பட்டிருந்தாலும், சட்டத்தை கையில் எடுத்தது தவறு அல்லவா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கட காசைப் போட்டு படம் எடுக்கிறவர்களும் பாவம் தானே!.அவர்கள் கஸ்டப்பட்டு,காசைப் போட்டு படம் எடுக்க அந்தப் படத்தை திருட்டு விசிடியிலும்,இணையத்திலும்[என்னை மாதிரி] பார்த்தால் படம் எடுத்தவன் பாடு என்ன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தீபன் தோழமையோடு தான் நடந்து கொள்கிறார்.பொலீஸை கூப்பிடுவன்.. அடிப்பன் வீழ்த்துவன் என்று ஒன்றும் செய்யேல்லையே. :icon_idea:

 

படம் எடுத்தவனுக்கு போட்ட காசை எடுக்கனும் என்ற விருப்பம். எனவே கள்ள சிடி விக்கிறவங்க.. வரும் வருமானத்தில் குறித்த ஒரு சதவீதத்தை.. படத்தை தயாரிப்பவர்களுக்கு கொடுத்திட்டால் பிரச்சனை முடியுது. இப்படி சந்து பொந்து தேடித் திரியத் தேவை இல்லையே..!! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு என்னால் எழுதமுடியாது

படம் வெளியாகிய  அன்றே

இங்கு 1  ஈரோக்கு சிடி கிடைக்கிறது

அதைத்தான்  நான் பார்க்கின்றேன்

அப்படியென்றால் நானும் குற்றவாளிதானே... :(

Link to comment
Share on other sites

இதற்கு என்னால் எழுதமுடியாது

படம் வெளியாகிய  அன்றே

இங்கு 1  ஈரோக்கு சிடி கிடைக்கிறது

அதைத்தான்  நான் பார்க்கின்றேன்

அப்படியென்றால் நானும் குற்றவாளிதானே... :(

 

வெளிநாட்டில தியேடர்ல ஓடாத படத்தை நாங்க வேற எப்படி அண்ணே பார்க்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்டிக்காயை முறிச்சுப்பார்த்து வாங்கலாம்.வெள்ளரிக்காய்ன்னா சுண்டிப்பார்த்து வாங்கலாம்.தேங்காய்ன்னா குலுக்கிப்பார்த்து வாங்கலாம்.தோடம்பழம் என்றால் கசக்கிப்பார்த்தும் வாங்கலாம்.tv,computer ,mobile கூட பிடிக்கலைனா திருப்பிக்குடுத்து காசை வாங்கலாம். 50,60,பவுண் குடித்து 4 பேர் பாரக்கப்போய் படம் ( பெரும்பாலும்) மொக்கையாச்சுன்னா என்ன பண்ணிறது?1 பவுணுக்குdvd வாங்கி LCD tv இல் home theatre இல் பிடிக்காத பாட்டையும்,பைட்டையும் ஓடவிட்டுப்பார்த்தால் 45 நிமிடத்தில் படம் முடிஞ்சுடும்.இன்னார்படத்தை தியேட்டரில பார்த்தால் நல்லாய் இருக்கும் என்ற மாதிரி படம் எடுத்தால் சனம் தியேட்டருக்கு வரும்.

Link to comment
Share on other sites

இதற்கு என்னால் எழுதமுடியாது

படம் வெளியாகிய  அன்றே

இங்கு 1  ஈரோக்கு சிடி கிடைக்கிறது

அதைத்தான்  நான் பார்க்கின்றேன்

அப்படியென்றால் நானும் குற்றவாளிதானே... :(

 

ஐரோப்பாவில ஒருத்தர் இருக்கிறார்... 

படம் திரைக்கு வர முதலே கள்ள டீவிடி என்ற 'சுருதி'யோடை ஒன்று விடுவார்...

சனமும் உடன பாக்கிறா ஆசைல வாங்கி பார்க்கும். கள்ள டீவிடி வந்தீட்டுது என்றாதால, உண்மையாய் அந்த தொழில் செய்யுறவங்க குறிப்பிட்ட படத்தை திரும்பிப் பார்க்கமாட்டாங்க.

பிறகு.. படம் ஐரோப்பா சினிமா கொட்டகைகளில் ஓடி முடிய, விநாயகர் கடாட்சத்துடன் ஒரிஜினல் டீவிடீ வரும்.

 

ஆக, அசலும் நகலும் வெளியிட்டு காசு பார்த்த, பார்க்கும் கில்லாடியும் யூரோப்பாலதான் இருக்கிறார்.  :o  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.