Jump to content

யாருக்கு வாக்களிக்கலாம்!


Recommended Posts

இலங்கையில் தமிழ்ப்போராளிகளின் ஆயுதப்போர் அநீதியான முறையில் முடிவிற்கு கொண்டுவந்ததன் பின்பு அரசாங்கத்திலும், அரசியலிலும் நம்பிக்கையற்று எதிலும் ஆர்வமற்ற நிலைக்கு அதிகளவான தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் உண்டு, உடுத்து, உறங்குவதற்கும், சடங்குகளைத் தடையின்றிச் செய்வதற்கும் வசதிகள் இருந்தாலே போதும் என்ற மனநிலைக்கும் வந்துள்ளனர். இந்த நிலையைப் பயன்படுத்தி அதற்கு மேலும் உதவிசெய்வதுபோல் பாசாங்குபண்ணி, வெளிநாட்டு உதவிகளையும் தாங்களே செய்வதாக ஏமாற்றிச் சிறீலங்கா அரசானது தனதும், தனக்குச் சார்பான ஒட்டுக்குழுக்களின் தலைவர்களையும் தவிர, மற்றும் அனைவருமே, தவறானவர்கள் என்று நம்பிக்கை கொள்ளும்படியான அறிக்கைகளையும், செய்திகளையும் அவர்களுக்கு வழங்கியும் வருகிறது.

 

இன்றைய தேர்தல்கள நிலையில், இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன என்ற மனநிலையில் உள்ள தமிழ்மக்கள் பலரும் தடுமாற்றமடைந்து, யாரோ ஒருவருக்கு, அதுவும் தங்களுக்கு உதவிசெய்தவர்களுக்கே புள்ளடி போட்டுவிடும் எண்ணத்திலும் உள்ளனர். புலம்பெயர் தமிழர்கள் இன்று இலட்சக் கணக்கில் இலங்கைசென்று வருகின்றனர். இவர்களுக்கு, உற்றார், உறவினர், நண்பர்கள் என்று பெரும்பாலனவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய நிலமையும் உள்ளது. ஆகவே தங்களைத் தமிழர்களாக உணரும் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் தாங்கள் தொடர்புகள் கொள்ளக்கூடியவர்களுடன் தொடர்புகொண்டு, தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என்றுமட்டும் கூறினாலே போதும். யாருக்கு வாக்களிக்கலாம் என்று தடுமாற்றம் அடைபவர்கள் தங்கள் சொந்தங்கள் காட்டிய வழியை நிச்சயம் பின்பற்றிக் கொள்ள முன்வருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை

அனைவரும்  செய்யணும்

 

வாக்குகளைச்சிதறாமல்  பார்ப்பதோடு  மட்டுமல்ல

வாக்களிக்க அனைவரும் செல்லவேண்டிய  நிலையும்  உள்ளது

எனவே அதற்காகவும் பேசணும்

 

நன்றி

வேண்டுதலுக்கும் ஆக்கத்துக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.