Jump to content

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் 28 நினைவு தினம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் 28 நினைவு தினம் மட்டக்களப்பு மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதரதலிங்கம், கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம், மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எஸ்.குணசேகரம், மாவட்ட உப செயலாளர் எஸ்.சற்குணராஜா, கட்சியின் மூத்த உறுப்பினர்களான எஸ்.ஞானப்பிரகாசம், எஸ்.தேவராஜா மற்றும் கட்சி அங்கத்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதரதலிங்கம் ஆகியோரால் திருவுருப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

அத்துடன் கட்சியின் உப தலைவர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுமான பிரசன்னா இந்திரகுமார், கோ.கருணாகரம் ஆகியோரால் திருவுருப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு கூறப்பட்டதுடன், நினைவுப் பேருரையும் இடம்பெற்றது.

1986 ஆம் ஆண்டு இதேநாளில் விடுதலைப்புலிகளினால் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தினம் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

P1310398.JPG

 

P1310400.JPG

 

P1310401.JPG

 

P1310404.JPG

 

P1310403.JPG

 

P1310402.JPG
P1310405.JPG

 

P1310410.JPG

 

P1310414.JPG

 

P1310418.JPG

 

 

 

 
P1310416.JPG

 

P1310417.JPG

 

 

 

P1310421.JPG

 

P1310420.JPG

 

P1310422.JPG

 

P1310427.JPG

 

P1310459.JPG
 
 
 
Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கங்கள் 

Link to comment
Share on other sites

அப்படியே அமிர்,உமா,பத்மநாபா,மாணிக்கதாசன்,சங்கிலி ஆக்களின்ர அஞ்சலியையும் கொண்டுவந்து போடுங்கோ ஒருக்கா விழுந்து எழும்புவம்.

Link to comment
Share on other sites

i

 

அப்படியே அமிர்,உமா,பத்மநாபா,மாணிக்கதாசன்,சங்கிலி ஆக்களின்ர அஞ்சலியையும் கொண்டுவந்து போடுங்கோ ஒருக்கா விழுந்து எழும்புவம்.

போலியாக வாழா பழகிவிட்டோம் .எங்கள் வியாபாரத்திற்கு எது வசதியோ அவர்களுக்கு வணக்கம் வைக்கலாம் .

Link to comment
Share on other sites

சுட்டவர்களுக்கு வீரவணக்கம் சூடுவேண்டியவர்களுக்கு நினைவுவணக்கம் !  இதில்தான் எத்தனை முரண் !!

 

 

 

 

Link to comment
Share on other sites

வடக்கு கிழக்கில் கூட்டமைப்பினர் ஒற்றுமையாகத்தான் தேர்தலில் போட்டியிட்டார்கள். கூட்டமைப்பு தமிழ் மக்களின் நன்மை கருதி ஒன்றாகத்தான் இருக்கிறது.

 

மையவாதம் பேசும், இந்துக்களை கருவறுக்கும், பௌத்தம் பரப்பும் சுற்றம் -உறவு- இனம்-குலம் இல்லா பரதேசிகள் கூட்டம் மேட்டுக்குடி - ஓட்டுக்குடி, சாதியம்-அசாதியம், வடக்கு-கிழக்கு, முஸ்லீம்-இந்து பிரிவினைகளை வளர்க்கப் போய் தங்கள் அடையாளங்களை இழந்ததுதான் மிச்சம். இவர்கள் இந்துக்களோ சிங்கள பௌத்தர்களோ இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறார்கள். ஏன் எனில் கைமுணு தான் பலவருடங்களாக தயார் செய்து போரிட்ட எல்லாளன் என்ற தனது எதிரிக்கு நினவுச் சமாதிகட்டி அவ்வழி போவோர் எல்லாள மன்னனை வணக்கம் செய்துவிட்டு போக உத்தரவிட்டிருந்தான். அவன் சிங்கள பௌத்தன். மன்னன் மெய்பொருள்கண்டார் தன் எதிரி தன்னிடம் போரில் தோற்றத்திற்கு பழிவாங்கத்தான் வந்திருக்கிறான் என்றதை தெரிந்தும் தன் அரன்மனைக்குள் அனுமதித்து அவன் விரும்பங்களை நிறைவேற்றி தனது மெய்பாதுகாப்பாளர்களின் துணையுடன் அவனை பாதுக்காப்பாக நாட்டுக்கு வெளியே அனுப்பி வைத்துவிட்டுத்தான் இறந்தார் என்று சரித்திரம் சொல்கிறது.

 

மாடு, ஆட்டை அறுப்பது போல மனித சனங்களை கறுவறுக்கும் கொடூரப் பண்பு,  இரண்டாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து போரிடும்  தமிழ் இந்துக்களுக்கோ, சிங்கள பௌத்தர்களுக்கோ இருந்ததாக இல்லை.இது இலங்கையில் தோன்றியிருக்கும் ஒரு தனி புதிய அலகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டவர்களுக்கு வீரவணக்கம் சூடுவேண்டியவர்களுக்கு நினைவுவணக்கம் !  இதில்தான் எத்தனை முரண் !!

 

ஒற்றுமை   வேண்டும் என  கூக்குரலிட்டுக்கொண்டு

தமிழரின் பலவீனங்களை வசை  பாடிக்கொண்டு

 

ஆனால் அவற்றிற்கு முன் உதாரணமாக ஏதாவது செய்யப்பட்டால்

அவற்றில் வந்து இது போன்று மயிர் புடுங்குவதை  எப்பொழுது நிறுத்துவோம்???? :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே அமிர்,உமா,பத்மநாபா,மாணிக்கதாசன்,சங்கிலி ஆக்களின்ர அஞ்சலியையும் கொண்டுவந்து போடுங்கோ ஒருக்கா விழுந்து எழும்புவம்.

 

என்னை பொருத்தவரை தப்பேயில்லை.....எங்களை விட ஒரு படி மேலானாவர்கள்.இளம்வயதில் உரிமைக்காக குரல் கொடுக்க புறப்பட்டவர்கள்.என்னைப் போல சுழிச்சுகொண்டு புலம் பெயரவில்லை.

அவற்றில் வந்து இது போன்று மயிர் புடுங்குவதை  எப்பொழுது நிறுத்துவோம்???? :(  :(  :(

 

இது மயிர்வாதம் ,இதை நிறுத்தமுடியாது :D

Link to comment
Share on other sites

ஒற்றுமை   வேண்டும் என  கூக்குரலிட்டுக்கொண்டு

தமிழரின் பலவீனங்களை வசை  பாடிக்கொண்டு

 

ஆனால் அவற்றிற்கு முன் உதாரணமாக ஏதாவது செய்யப்பட்டால்

அவற்றில் வந்து இது போன்று மயிர் புடுங்குவதை  எப்பொழுது நிறுத்துவோம்???? :(  :(  :(

 

முன்னுதாரணமாக செயற்படுவதானால் சபா உமா பத்மநாபா மற்றும் தாயக விடுதலைக்கென்று புறப்பட்டு மடிந்தவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துங்கள். அவர்களையும் உள்ளடக்கி மாவீரர்தினத்தை நினைவு கூருங்கள். இருப்பவர்கள் நூறாக பிரிந்து சிதைந்து கிடப்பது யதார்த்தம் ஆனால் தாயக விடுதலைக்கென்று புறப்பட்டு இறந்தவர்களை ஒன்றாக அணுகுவதே முன்னுதாரணம். எதிர்வரும் மாவீரர் தினங்களில் இவ்வாறான தியாகிகளின் படங்களும் மாவீரர் மண்டபத்தில் இருந்தால் அதுவே முன்னுதாரணம்.

 

Link to comment
Share on other sites

முப்பது வருடமாக வராத ஒற்றுமை 2009 ஆண்டிற்கு பிறகு சிங்களவன் கொடுத்த அடிக்கு பிறகு வருகுது பலபேருக்கு .

 

முப்பதுவருடமாக செய்த கொலைகளையும் நியாயப்படுத்தி துரோகிகள் என்று தூற்றி திரிந்தவர்கள் ஒற்றுமை என்ற சொல்லை கூட ஊச்சரிக்க தகுதியற்றவர்கள் .

வந்துவிட்டார்கள் அடுத்தவன் இறப்பிலும் வியாபராம் செய்ய .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1986 இல் படுகொலை செய்யப்பட்ட தலைவர் சிறிசாபாரத்தினம் மற்றும் அனைத்து தமிழீழ விடுதலை இயக்கப் போராளிகள் அனைவருக்கும் நினைவு வீரவணக்கம்!

Link to comment
Share on other sites

முப்பது வருடமாக வராத ஒற்றுமை 2009 ஆண்டிற்கு பிறகு சிங்களவன் கொடுத்த அடிக்கு பிறகு வருகுது பலபேருக்கு .

 

முப்பதுவருடமாக செய்த கொலைகளையும் நியாயப்படுத்தி துரோகிகள் என்று தூற்றி திரிந்தவர்கள் ஒற்றுமை என்ற சொல்லை கூட ஊச்சரிக்க தகுதியற்றவர்கள் .

வந்துவிட்டார்கள் அடுத்தவன் இறப்பிலும் வியாபராம் செய்ய .

 

முப்பதல்ல முன்நூறு வருடங்களையும் அதையும் தாண்டி இன்று வரை தமிழன் ஒற்றுமையாய் இருந்ததும் இல்லை அதற்கான வரலாறும் இல்லை.

 

சிஙகளவன் மற்றும் ஏனைய சக்திகளும் அடித்தது ஒற்றுமையற்ற இந்த இனத்துக்கத்தான் தவிர இனத்தில் இருந்த நாலுபேருக்கு மட்டுமில்லை. நானும் நீங்களும் என்னுமொரு நாட்டில் இரண்டாந்தரப்பிரஜைகளாக இருப்பதற்கும் இந்த அடித்தான் காரணம். அடிவாங்கிய பிறகும் ஞானம் பிறக்கவில்லையாயின் அதில் அர்த்தம் என்ன இருக்கமுடியும்?  பலபேருக்கில்லை எல்லோருக்கும் அடிவாங்கிய பின் ஒற்றுமை உணர்வு வரவேணும் இல்லையேல் அடிவாங்கிக்கொண்டே இருப்போம். அடிவாங்கினாலும் பரவாயில்லை ஒற்றுமையாக இருக்கமுடியாது என்பதையே நீங்கள் முன்வைக்கின்றீர்கள்.

 

ஆம் ! புலம்பெயர்வும் ஒரு வியாபரம் தான். தேசீயத்தை சிங்களவனுக்கு விற்று அதற்குப் பதிலான வாழ்வுதான் புலம்யெர்வாழ்வு. ஆனால் என்ன நாட்டில் உள்ள வறிய மக்களுக்கு தெரியாமல் அவர்களையும் விற்றுவிட்டோம். இது ஒரு போதைக் கடத்தலை விட மோசமான டீல்.

 

 

Link to comment
Share on other sites

1461472_738073599566682_2936033960017194s


சிறி சபாரட்ணம் சுடப்பட்ட இடத்திலும் அஞ்சலி செய்தார்கள் .சிவாஜிலிங்கம் நிற்கின்றார் .

 

(சிறு வயதில் நான் ஓடித்திரிந்த காணி இது .)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெலோவினால் பேச்சுவார்த்தைக்கென அழைக்கப்பட்டு வங்சகமான முறையில் கொல்லப்பட்ட கப்டன் லிங்கம் அண்ணாவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

முன்னுதாரணமாக செயற்படுவதானால் சபா உமா பத்மநாபா மற்றும் தாயக விடுதலைக்கென்று புறப்பட்டு மடிந்தவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துங்கள். அவர்களையும் உள்ளடக்கி மாவீரர்தினத்தை நினைவு கூருங்கள். இருப்பவர்கள் நூறாக பிரிந்து சிதைந்து கிடப்பது யதார்த்தம் ஆனால் தாயக விடுதலைக்கென்று புறப்பட்டு இறந்தவர்களை ஒன்றாக அணுகுவதே முன்னுதாரணம். எதிர்வரும் மாவீரர் தினங்களில் இவ்வாறான தியாகிகளின் படங்களும் மாவீரர் மண்டபத்தில் இருந்தால் அதுவே முன்னுதாரணம்.

 

நடப்பதை தெரியாத வீரப்பிரதாப ஆலோசனை இது. நாடுகடந்த அரசை பொறுத்தவரைக்கும் மாவீரர் தினம் விழுந்த வீரர்கள் எல்லோருக்கும் தான். இது தெளிவாக அவ்ர்களால் சொல்லப்பட்டது. அவர்கேளேதான் மசூதிகள் அடிக்கப்பட்ட போது சர்வமத வழிபாடு நடத்தினார்கள். அலோகர்கள் இந்து மததைதை கருவறுத்த ஆலோசனைகள் மட்டும்தான் படிப்பித்தார்கள். என்ன தனமான குடிகாறன் பேச்சுக்கள் அப்ப இது வெல்லாம்.. 

 

கழு வேற்றுவது ஆரிய மதங்களான சமணமும் புத்தமும் தமிழரிடம் கொண்டுவந்தவை. கல்லால் எறிந்து கொலை செய்வதும், கருவறுத்து பெண்களின் நடத்தையை தண்டிப்பதும் அராபிய மதம் தமிழருக்கு கொண்டுவந்தும் அவற்றின் கொடூரத்தனத்தாலும், தமிழரின் நாகரீக முதிர்ச்சியாலும் அவை தமிழரிடம் எடுபடவில்லை. 

Link to comment
Share on other sites

முப்பதல்ல முன்நூறு வருடங்களையும் அதையும் தாண்டி இன்று வரை தமிழன் ஒற்றுமையாய் இருந்ததும் இல்லை அதற்கான வரலாறும் இல்லை.

 

அதில் எந்த உணமியும் இல்லை. 10,000 ஆண்டுகாலமாக மண்ணில் இருக்கும் ஒரே குடி தமிழன். மதங்களின் மிக இளமையான இஸ்லாம் சீனா, இந்தியா, யப்பான், எல்ல மேர்குநாடுகள்,  எல்ல் கிழக்கு ஐரோபியநாடுகளிலும் பிரச்சனையை உருவாக்கி அழிவை தெடிக்கொண்டிருக்கிறது. தனது நிலங்களான, மத்திய கிழக்கில் அது தன்னுள் காட்டும் பொறாமையும் போட்டியும் உலகின் அந்த மதமும் காட்டுவதில்லை.   தமிழரின் சரித்திரத்தை தமிழில் இருப்பது போல கூற வந்தால் அதை விவாதிக்கலாம். தயாரா

 

சிஙகளவன் மற்றும் ஏனைய சக்திகளும்(-அது எந்த எனைய சக்திகள் என்று கூற முடியமா? தங்களின் மத வெறியர்களைப்பற்றியா ? வெளிப்படையாக கூறினால் உங்களையே அவர்கள் அடித்து நொறுக்கி விடுவார்கள் என்பத்தால் இப்படி ஒழிவு மறைவாக ஏனைய சக்திகள் என்கிறீர்கள்.? உங்களுக்கு நீங்களெ பயந்து கொண்டா தமிழனுக்கு ஒற்றுமைப்பாட்டம்?)அடித்தது ஒற்றுமையற்ற இந்த இனத்துக்கத்தான் தவிர இனத்தில் இருந்த நாலுபேருக்கு மட்டுமில்லை. நானும் நீங்களும் என்னுமொரு நாட்டில் இரண்டாந்தரப்பிரஜைகளாக இருப்பதற்கும் இந்த அடித்தான் காரணம். (நீங்கள் இன்னொரு நாட்டில் இரண்டாம்தர பிரச்சையானகாராணம் தமிழனிடம் ஒற்றுமை இல்லாது மட்டுமா? எனக்கு உங்கள் நாட்டின் குடிவரவு அகதி கொள்ளகைகளை இந்த இணையத்தில் இணைப்பாக கொடுக்க முடியுமா? எந்த நாட்டில் முக மூடி போட்டேய்க்க தமிழன் ஒற்றுமை இன்மை சட்டமாக்கப்பட்டிருக்கு.  தமிழன் பட்ட அவஸ்த்தையை வைத்து பிழைத்துக்கொண்டு அவனுக்கே பாடமா?)ஆருக்கையா டூப் எழுதுகிறீர்கள்?)அடிவாங்கிய பிறகும் ஞானம் பிறக்கவில்லையாயின் அதில் அர்த்தம் என்ன இருக்கமுடியும்?  பலபேருக்கில்லை எல்லோருக்கும் அடிவாங்கிய பின் ஒற்றுமை உணர்வு வரவேணும் இல்லையேல் அடிவாங்கிக்கொண்டே இருப்போம். அடிவாங்கினாலும் பரவாயில்லை ஒற்றுமையாக இருக்கமுடியாது என்பதையே நீங்கள் முன்வைக்கின்றீர்கள். (இப்போது அடி விழ ஆரம்பித்திருக்கு. இப்போ ஞானம் பேர ஆரம்பமாயிருக்கு. நாங்களும் தொடர்ந்து எழுதுவதை தொடர்ந்து படிதுக்கொண்டுதான் வருகிறோம். BBSன் அடியில் தமிழனுக்கு போதித்துகொண்டாவது அவனுடன் போய்ச் சேரவேண்டும் என்று ஞானம் பிறப்பதையும் அவதானித்துக்கொண்டுதான் வருகிறோம். மனிசராக மாறி வராத வரக்கும் சேர்ப்பது என்பது நடக்கபோவத்தில்லை. )

 

ஆம் ! புலம்பெயர்வும் ஒரு வியாபரம் தான். தேசீயத்தை சிங்களவனுக்கு விற்று அதற்குப் பதிலான வாழ்வுதான் புலம்யெர்வாழ்வு. (உங்களை நம்பித்தான் அரசு 16 அமைப்புக்களையும், 424 தனி நபர்களையும் புலிகள் என்று பிராகடனப்படுத்தியிருக்கு. அரசை, வியாபாரத்தனமான பொருளாதார அகதிகளை பயங்கரவாதிளாக்குகிறது என்று எதிர்த்து எழுதி அரசின் பகமையை தேடிக்கொண்டால் சம்பளம் வராது. ஊருக்கு திரும்பி போக ஏலாது- கவனம் இப்படியான மடைத்தனமான அரசு எதிர்ப்பு கதைகளை வெளிநாடுகளில் பரப்பும் போது) ஆனால் என்ன நாட்டில் உள்ள வறிய மக்களுக்கு தெரியாமல் அவர்களையும் விற்றுவிட்டோம். இது ஒரு போதைக் கடத்தலை விட மோசமான டீல். நாம் மக்களுக்கு தெரியாமல் அவர்களை விற்பத்தாலா கக்கீம், அஸ்வர், பதியுன் பக்கத்தில் இருந்து கொண்டே விற்கிறார்கள்? எம்மை பற்றி நாங்கள் பார்த்துக்கொள்வோம். உங்களை பற்றி இனி பார்த்துக்கொள்ளலாம். 

 

நாகரிகம் தெரிந்து எழுதுவதாக நடிப்பவர்கள் BBS அடிக்கு பிறகு மகிந்தாவை  மகிந்தன் என்று எழுதினார்கள். அவை ஒற்றுமையில் இருந்தும் யாழ் நிர்வாகம் அகற்றவில்லை. குத்தியை செயலாளர் நாயமாக மாற்ற முயன்றவர்கள் தாம் இவர்கள்.  அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவுவதில்லைத்தான். பௌத்தம் அரபியா முழுவதும் பரவினால் பல நனமைகள் வர இடமுண்டு.

 

Link to comment
Share on other sites

10,000 ஆண்டுகாலமாக மண்ணில் இருக்கும் ஒரே குடி தமிழன்

தமிழன் என்ற ஒரு இனமோ இல்லை அவ் வினத்துக்கென்று ஒரு நாடோ இன்றுவரை உருவாகவில்லை. அதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை. இதற்குள் 10 000 யிரம் வருசத்துக்கு முதல் தமிழன் என்று எவனும் இல்லை. பலதரப்பட்ட மக்கள் கூட்டம் இருந்திருக்கும். விட்டால் பத்துக்கு பக்கத்தில் என்னும் பத்து சைபர் போட்டுவிடுவீர்கள்.

Link to comment
Share on other sites

தமிழன் என்ற ஒரு இனமோ இல்லை அவ் வினத்துக்கென்று ஒரு நாடோ இன்றுவரை உருவாகவில்லை. அதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை. இதற்குள் 10 000 யிரம் வருசத்துக்கு முதல் தமிழன் என்று எவனும் இல்லை. பலதரப்பட்ட மக்கள் கூட்டம் இருந்திருக்கும். விட்டால் பத்துக்கு பக்கத்தில் என்னும் பத்து சைபர் போட்டுவிடுவீர்கள்.

உங்களின் சத்திய வாக்கை தெரியாததால் இன்றுவரை அறிவிலிகளாக இருந்துவிட்டோம். நன்றீறீறீ. அடுத்த முறை தரும் சரித்திர பாடத்தை உங்களுக்கு BBS சரியாகத்தர அவர்களுக்கும் அரேபிய கதவுகளுகள் திறந்திருக்கட்டும். "வல்லவனுக்கு வல்லவன் ஒருத்தான் வந்தால் பார்த்துக்கடி."

 

 

---------------

 

நியானி: சில வரிகள் தணிக்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு போராளியின்ர அஞ்சலி திரியில என்னத்தை எழுதிக்கொண்டிருக்கிறியள்? 

 

இதில கேவலம் அந்த இயக்க ஆதரவாளர்கள் எழுதிற கேவலம். நல்ல வேளை இதை எல்லாம் பாக்க  அஞசலிககு சொந்தகாரர் இல்லை. 

 

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் 28 நினைவு தினம்

 

 

அந்த போராளி மீது உண்மையில அககறையுள்ளவர்களாக இருந்தால் அவரின் லட்சியத்திற்காக நீங்கள் தொடர்ந்து போராடுவது தான். தமிழீழம் என்பது அவரின் லட்சியமும் தான். இன்று அவரிற்கு அஞ்சலி செலுத்த முன்வந்த உங்களில் எத்தை பேர் அதற்காக போராடப்போகிறீர்கள்? அவர் மட்டும் சண்டையில் வீரச்சாவடைந்திருந்தால் இன்று அவரை யாரும் நினைத்துபார்த்திருக்க மாட்டீர்கள். புலிகளை விமர்ச்சிப்பதற்கு அவர் இப்பொழுது  உங்களிற்கு ஒரு கருவி. அவ்வளவு தான்! உண்மையில் அவரை நேசிப்பவர்களாக இருந்தால் அவரின் லட்சியத்திற்காக போராடியிருப்பீர்கள். ஆனால் இங்கே என்ன நடக்கின்றது? கோழைகளை போல் சிஙகளவன் அடித்தான் நாம் அடியை வாங்கி கொண்டு பேசாமல் இருப்பது தான் நல்லதாம். ஏன் இதை உங்களின் தலைவர் செய்திருக்கமாட்டாரா? அப்படி போராளியின் வழியில் வந்தவர்கள் என்று சொல்வதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்! தயவுசெய்து அவரை உங்களின் தலைவர் என்று சொல்லி அவரை கொச்சைப்படுத்தாதீர்கள். இது தான் அவரிற்கு நீங்கள் செய்யும் உண்மையான மரியாதை. 

 

உங்கட குழு மோதல்களை தயவுசெய்து உங்களோடையே புதைகுழிக்குள்ள கொண்டுபோங்கோ. அடுத்த சந்ததிக்கும் அதை கையளிக்காதேங்கோ. உங்கட இயக்கங்களின் குறிக்கோளை மட்டுமே கையளியுங்கள். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி சபாரத்தினம், பத்மநாபா, உமா மகேஸ்வரன், அமிர்தலிங்கம், இன்னும் பலர் கொல்லப்பட்டபோது தமிழீழத்தை அடைவதற்கான தடைக்கற்கள் அகல்கின்றன என்று மகிழ்ந்துவிட்டு இப்போது நினைவு வணக்கம் என்று போலியாக நடிக்கமுடியாதுள்ளது. அப்போது ஒரு சில தடைக்கற்கள் போன்று தோன்றியது இப்போது மலைபோன்று வளர்ந்த கற்குவியலாக ஆகிவிட்டது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி சபாரத்தினம், பத்மநாபா, உமா மகேஸ்வரன், அமிர்தலிங்கம், இன்னும் பலர் கொல்லப்பட்டபோது தமிழீழத்தை அடைவதற்கான தடைக்கற்கள் அகல்கின்றன என்று மகிழ்ந்துவிட்டு இப்போது நினைவு வணக்கம் என்று போலியாக நடிக்கமுடியாதுள்ளது. அப்போது ஒரு சில தடைக்கற்கள் போன்று தோன்றியது இப்போது மலைபோன்று வளர்ந்த கற்குவியலாக ஆகிவிட்டது!

 

உண்மைதான் ஆனால் ,அன்று நாங்கள் புனிதமாக நினைத்த இயக்கத்திலயே இன்று பலர் தடைகற்கள் போல் உருவாகியிருக்கிறார்கள்....போராட போய் மரணித்தவர்களை தவிர எனையோர் சந்தர்பவாதிகள் மட்டுமே .....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.