Jump to content

எல்லாளனின் மீள்வருகை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாளனின் மீள்வருகை

யாழ் இணைய செய்தி அலசல்

கடந்த திங்கட்கிழமை (22 - 10 - 2007) அதிகாலை 3 மணியளவில் அனுராதபுர விமானப் படைத் தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் 18 ஆண்களையும் 3 பெண்களையும் கொண்ட சிறப்புக் கரும்புலி கொமாண்டோ அணியினதும் அதனோடு ஒருங்கிணைத்த வான்புலிகளினதும் "எல்லாளன் நடவடிக்கை" என்ற குறியீட்டுப் பெயருடன் நடாத்தப்பட்ட துணிகரத் தாக்குதல் உலக ஊடகங்களில் முதன்மையான ஆய்வுக்குத் தொடர்ந்தும் உட்படுத்தப்பட்டு வருகின்றது. மேலதிக அரசியல் இராணுவப் பரிமாணங்களுடன் கூடிய "ஆய்வுகள்" சிறிலங்கா ஊடகங்களிலும், சர்வதேச ஊடகங்களிலும் தொடர்ந்து வந்தாலும் உண்மையான விளைவுகளை அறிய இன்னும் சில காலம் எடுக்கவே செய்யும். இந்நிலையில் இந்த அலசலானது இலங்கைத் தீவின் அரசியல், இராணுவ நடைமுறைகளில் எத்தகைய மாற்றங்களை எல்லாளன் நடவடிக்கையானது ஏற்படுத்தக் கூடும் என்பதைத் தொட்டுச் செல்கின்றது.

எல்லாளன் யார்?

முதலில் எல்லாளன் யார் என்று பார்ப்போம். சிறிலங்காவின் வரலாற்றுக்கு ஆதாரமாக கொள்ளப்படும் மகாவம்சத்தின்படி கி.மு. 145 ஆண்டு அளவில் எல்லாளன் என்ற சோழ இளவரசன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்து இலங்கைத் தீவு முழுவதையும் கைப்பற்றி, அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு 44 ஆண்டுகள் அரசாட்சி புரிந்துள்ளான்.அவனது நீதி வழுவாத ஆட்சி குறித்து மகாவம்சம் பல இடங்களில் குறிப்பிடுகின்றது. கி.மு. 101 இல் மகாவம்சக் கதாநாயகனான சிங்கள இளைஞன் துட்ட கைமுனுவுடன் முதியவனாக இருந்த எல்லாளன் சமர் செய்து இறந்ததன் காரணமாக எல்லாளனின் தோல்வியானது தமிழ் மக்களின் தோல்வியாகவே சிங்களப் பேரினவாதிகளால் கருதப்படுகின்றது.

இதன் காரணமாகவே தற்போதைய சிங்கள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தன்னை ஒரு நவீன துட்டகைமுனுவாகப் பாவனை செய்து தமிழர்களைத் தோற்கடித்து இலஙைத் தீவு முழுவதையும் சிங்கள மயமாக்கும் "மகிந்த சிந்தனை"யை நடைமுறைப் படுத்த முயன்று வருகின்றார். மகிந்தவின் கனவுகள் நனவாகும் என்று பேரினவாதச் சிங்களவர்களும் நம்பி வருகின்றனர். இத்தகைய பின்புலத்தில் பெளத்த சிங்கள மக்களின் பண்பாட்டு மையமாக விளங்கும் அனுராதபுரத்தில் உள்ள வான்படைத் தளம் மீதான வெற்றிகரமான அதிரடித் துணிகரத் தாக்குதலானது "எல்லாளன் நடவடிக்கை" எனக் குறியீட்டுப் பெயர் சூட்டப்பட்டதானது சாலவும் பொருத்தனாதே.இது தமிழர்கள் தோல்வியடையவில்லை என்பதை சிங்கள மேலாதிக்கவாதிகளுக்கு உணர்த்துவதோடு அவர்களை உளவியல் ரீதியாகவும் பாதிக்கவே செய்யும்.

எல்லாளன் நடவடிக்கைக்கு முன்னர்

இரு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் "மகிந்த சிந்தனை"யை சிங்கள மக்களின் முன்வைத்து நூலிழையில் வெற்றிபெற்ற மகிந்த ராஜபக்ச, பன்டாரநாயக்கா குடும்பத்தின் கையிலிருந்து சிறிலங்காவின் ஆட்சியதிகாரத்தை ராஜபக்ச குடும்பத்திற்கு விரைவாக மாற்றினார். அத்தோடு முன்னைய ரணில் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் செயலற்றதாக்கி, அரசியல் தீர்வு மூலமாக இனப் பிரச்சினையைத் தீர்க்கக் கூடியதாக இருந்த வழிமுறைகளுக்கும் சாவுமணி அடித்தார்.

மேலும் ஒற்றையாட்சியைத் தொடர்ந்தும் தக்கவைத்து, தமிழர்களைத் தொடர்ந்தும் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடாத்தத் தடையாக இருக்கும் தமிழ்த் தேசியத்தின் பாதுகாவலர்களான புலிகளை அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் அழித்து ஒழிக்கும் நடவடிக்கைகளை மும்முரப்படுத்தினார்.

முதலாவதாக புலிகளின் அர்சியல் நடவடிக்கைகளை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் முடக்கினார். அடுத்து நேரிடையாகவே சிங்களப் படைகளை ஏவி தமிழர் தாயகப் பகுதிகளான மூதூர் கிழக்கு, வாகரை, மட்டக்களப்பின் படுவான்கரை, அம்பாறை கஞ்சிகுடிச்சாறு, மன்னார் சிலாவத்துறை போன்ற இடங்களை சிங்கள ஆக்கிரமிப்பிக்கு உள்ளாக்கினார். இதன்போது உண்டான மனிதப் பேரவலங்களை எல்லாம் புலிகள் மீதான தாக்குதல்களாக சர்வதேச நாடுகளுக்கு திரிபுபடுத்திக் காட்ட முற்பட்டார்.

உயிரழப்புக்கள், சொத்தழிவுகள், இடப்பெயர்வுகள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பங்கோருதல் போன்ற மனிதவுரிமை மீறல்களை சிங்கள அரசபடைகளும் அதனோடு சேர்ந்தியங்கும் துணைப்படைகளும் கேள்வி கேட்பாரின்றி செய்ய அனுமதித்தார். மனிதவுரிமை மீறல்கள் அளவுக்கதிகமாக இடம்பெற்று, அவை உலக நாடுகளுக்குத் தெரிய வந்து அழுத்தங்கள் வந்தபோதும், அவற்றையெல்லாம் தட்டிக் கழிக்கவும், பூசி மெழுகவும் தொடர்ந்தும் முயன்று வருகின்றார். அண்மையில்கூட ஐ.நா. மனிதவுரிமைக் கண்காணிப்பாளர்களை இலங்கையில் அனுமதிக்கவேண்டும் என்று அமெரிக்கா விடுத்த வேண்டுகோளையும் புறக்கணித்தார்.

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவீனம், கூட்டுக் கட்சிகளினூடான பேரம் பேசுதலில் உள்ள இடர்பாடுகள், மனிதவுரிமை மீறல்களினால் உலக நாடுகளில் இருந்து வரும் அழுத்தங்கள் போன்ற தன் முன்னேயுள்ள தடைகள் எல்லாவற்றையும் நீக்கித் தனது அரசைத் தக்கவைத்துக் கொள்ள தமிழர் மீதான போர் ஒன்றுதான் வழி என்பதால், சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாயா ராஜபக்சவுடனும், கடும்போக்காளரான இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடனும் கூட்டுச் சேர்ந்து வன்னி மீது போர் தொடுக்கும் திட்டங்களைத் தீட்டிக் காத்திருந்தார் மகிந்த ராஜபக்ச.

தமிழர் தரப்பு கடந்த இரு ஆண்டுகளாக பல்வேறு சவால்களை தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் எதிர்கொண்டு வருகின்றது. "புலிகள் பலமுள்ளவர்களாக இருக்கும் வரையிலும் ஒரே நாட்டிற்குள் அரசியல் ரீதியான தீர்வுக்குச் சம்மதிக்க மாட்டார்கள் எனவே புலிகளை ஒடுக்க வேண்டும்" என்ற சிறிலங்கா அரசின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து, சிங்கள அரசின் தமிழர் மீதான போருக்கு ஒப்புதல் அளித்து இணைத்தலைமை நாடுகளும், இந்தியாவும் தமிழர்கள் போரினால் அனுபவிக்கும் அவலங்களை கண்டும் காணாமல் இருப்பதும் அல்லது ஒப்புக்கு அறிக்கை விடுவதுமாக உள்ளனர். அண்மைய காலங்களில் தமது சொந்தக் குடிமக்களை ஒடுக்கும் சூடான், பர்மா போன்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட அக்கறை காட்டும் இந்த நாடுகள், அந்நாடுகளைவிட அதிக மனிதவுரிமை மீறல்களை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசை மேலும் ஊக்குவிக்க மறைமுகமாக இராணுவ உதவிகளைச் செய்தவண்ணமே உள்ளன. அத்தோடு நிற்காமல் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்த் தேசியச் செயற்பாடுகளை முடக்க புலிகள் மீதான தடைகளைப் படிப்படியாக ஏற்படுத்தியதும், தேசியச் செயற்பாட்டார்களையும் ஆதரவாளர்களையும் சிறையில் அடைத்தும், மறைமுகமாகப் பயமுறுத்தியும் வருகின்றன. மேலும் அண்மைய காலங்களில் புலிகளின் கப்பல் போக்குவரத்து பற்றிய செய்மதி வேவுத் தகவல்கள், புலிகளின் ஆயுதக் கொள்வனவுகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை சிங்கள அரசுக்கு வழங்கிப் பல கப்பல்களினது அழிவுக்கும், கடல் அனுபவம்மிக்க போராளிகளினது இழப்புக்களுக்கும் காரணாமாக இருந்துள்ளன.

"கிழக்கு முடிந்தது; இனி வன்னிதான் பாக்கி" என பகிரங்கமாகவே அறிவித்து, வன்னி மீது மரபு ரீதியற்ற போர்முறைகளைக் கையாண்டு சிறுகச் சிறுக அரித்து இடங்களைப் பிடிக்கும் முயற்சியில் சிங்களப் படைகள் ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய பல்வேறு நெருக்குவாரங்களை எதிர்கொண்டு தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தேவையான தருணத்தில்தான் "எல்லாளன் நடவடிக்கை"யும் செயற்படுத்தப்பட்டது.

எல்லாளன் நடவடிக்கை

அனுராதபுரம் வான்படைத்தளம் வானூர்தித் தளமாகவும், பயிற்சிக் கல்லூரியாகவும் மாத்திரம் இருக்கவில்லை. வடபகுதியிலுள்ள தளங்களைப் பாதுகாக்கின்ற பிந்தளமாகவும், வடபகுதி மீதான தாக்குதல்களுக்குத் தேவையான விநியோகத் தளமாகவும், ஆழ்கடல் விமான ரோந்துகளை மேற்கொள்ளும் மையமாகவும், வடபகுதித் தாக்குதல்களில் காயப்படுவோரை ஏற்றி இறக்கும் முக்கிய தளமாகவும், கட்டளைத் தளமாகவும் உள்ள இராணுவ மையத் தளமாகும். மிகவும் இறுக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டிருந்த இத்தளத்தினுள் கிபீர், மிக் ரக போர் விமானங்களை நிறுத்திவைக்கும் நோக்கில் விரிவாக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

நீண்ட காலமாகப் பலத்த சிரமங்களுக்கிடையே திரட்டப்பட்ட வேவுத் தரவுகளைக் கொண்டு தளத்தின் சகல பகுதிகளையும் அக்கு வேறு ஆணி வேறாக அறிந்து, அதனைத் தாக்கியழிக்கும் கடினப் பயிற்சிகளை திரும்பத் திரும்பப் பல தடைவைகள் மேற்கொண்டு, துல்லியமாக வரைந்த திட்டத்தில் இம்மியளவும் பிசகு ஏற்படாமல் மிக நேர்த்தியாக தமது கடமைகளைச் செவ்வனே செயற்படுத்திய கரும்புலிகளின் வியத்தகு ஆற்றலையும், தியாகத்தையும் எவராலும் ஆய்வு செய்யமுடியாது.

தாக்குதல் தொடங்கிய 20 நிமிடங்களுக்குள்ளேயே கரும்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வீழ்ந்த தளத்தினுள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கக்ப்பட்டிருந்த 8 வானூர்திகள் உடனடியாகவே அழிக்கப்பட்டன. மேலும் பல வானூர்திகள் சிதைக்கப்பட்டன. இறுதியான பத்திரிகைத் தகவல்களின்படி 10 வானூர்திகள் முழுமையான அழிவுக்கும், மேலும் 14 வானூர்திகள் சிதைவுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன. சேதமான வானூர்திகளில் பல மீளவும் பாவனைக்கு வரமுடியாதவையாகவே உள்ளன.

உள்நுழைந்த கரும்புலிகளின் தாக்குதல்களுக்கு உதவியாக வான்புலிகளையும் ஒருங்கிணைத்து நடாத்தப்பட்ட தாக்குதலால் வெளியில் இருந்து இராணுவத்தினரால் உடனடியாக உதவிக்கு வரமுடியவில்லை. அத்தோடு வவுனியாவில் இருந்து உதவிக்குப் புறப்பட்ட பெல் உலங்கு வானூர்தி, வான்புலிகளின் தாக்குதாலுக்கு உள்ளாகி வீழ்ந்து நொருங்கியதாகவும் கொழும்பு ஆங்கில ஏடு என்று தெரிவித்துள்ளது. இப்படியாக 8 மணித்தியாலங்கள் வான் படைத் தளத்தை தமது கட்டுப்பாடிற்குள் வைத்திருந்த கரும்புலிகள் வான் தளத்தின் 80% வீதமான பகுதிகளை துடைத்தழித்து தமது நோக்கத்தைக் கச்சிதமாக முடித்துள்ளனர். 2001 ஆம் கட்டுநாயக்காவில் ஏற்பட்ட வான்படையின் அழிவைவிட அனுராதபுர வாந்தளத்தினுள் ஏற்பட்ட அழுவுகள் அதிகம் என்றும் பிந்திக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

எல்லாள நடவடிக்கயின் பின்விளைவுகள்

தாக்குதல் மூலம் அழிக்கப்பட்ட வானூர்திகள் மற்றும் படைகலங்கள் 40 மில்லியன் டொலர்கள் என்று கூறப்பட்டாலும், ஐ.தே.க. வின் கூற்றுப்படி, இது 430 மில்லியன்களாகவும் இருக்கலாம். மேலும் 40 மில்லியன் டொலர் முன்பு வானூர்திகளை வாங்கச் செலவு செய்த தொகையே. தற்போதையெ ரூபாவின் வீழ்ச்சியினால், இவ்வானூர்திகளை மீளவும் கொள்வனவு செய்ய இன்னும் அதிக தொகை செலவாகும் என்பதே உண்மை. இதன் உடனடித் தாக்கம், சிங்கள அரசின் பாதுகாப்புச் செலவீனத்தில் 20% க்கும் மேல் இருக்கும்.

வேவு விமானங்களின் அழிவினால் வன்னிப் பரப்பு மீதான துல்லிய வேவு நடவடிக்கைகள் முடங்கிவிட வாய்ப்புக்கள் உள்ளன. அத்தோடு இரவு நேர வேவுகளும் உடனடியாகச் சாத்தியமில்லையென்பதால் இரவு நேரத் தாக்குதல்களும் நடாத்த முடியாமல் போகலாம். போதிய வேவுத் தரவுகள் இல்லாவிட்டால், மிக், கிபீர் போன்ற போர்விமானங்களின் தாக்குதிறன் குறையவே செய்யும். துல்லியமற்ற தரவுகளைக் கொண்டு நடாத்தப்படும் தாக்குதல்களினால் பொதுமக்களின் பாதிப்பு அதிகரிக்கவும் செய்யலாம்.

2001 கட்டுநாயக்கா தளம் மீதான தாக்குதல் சிறிலங்காவின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியையும், உல்லாசப் பயணத்துறையின் சரிவையும் ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே அப்போதைய அரசாங்கத்தின் வீழ்ச்சியும், பேச்சுவார்தைகளும் சாத்தியமாகின. எனினும் தற்போதைய தாக்குதலானது தெற்கு அரசியலில் பாரிய மாற்றங்கள் எதையும் ஏற்படுத்த மாட்டாது. ஆனாலும் மகிந்தவினதும் அவரது அரசினதும் செல்வாக்கு சிங்கள மக்கள் மத்தியில் தொடர்ந்தும் குறைந்து கொண்டே செல்லும். எதிர்க் கட்சிகள் வங்குரோத்து நிலையில் உள்ளதால், அவற்றால் ஒன்றிணைந்து மகிந்த அரசைக் கலைக்க முடியாது. அப்படி அரசு கலைந்தாலும், மகிந்தவைப் பதவி இறக்க அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரும் வரையிலும் (2011) காத்திருக்க வேண்டும். தமிழர் தரப்பைப் பொறுத்த வரை சிங்கள இனவாதிகள் ஆட்சியில் இருப்பதுதான் தமிழரும் சிங்களவரும் ஒரு நாட்டுக்கள் இருக்கமுடியாது என்பதை சர்வதேசத்திற்கு உணர்த்த உதவும். எனினும் ஸ்திரமற்ற தெற்கு தமிழரது விடுதலையை இன்னனும் விரைவுபடுத்தும்.

ஏற்கனவே பாதாளத்தில் உள்ள பொருளாதாரம் இத்தாக்குதலால் அதல பாதாளத்தை நோக்கிச் செல்லும். தொழிலதிபர்கள் கவலையடைந்துள்ளனர். முதலீட்டாளர்கள் பின்வாங்குகின்றனர். சற்றே தலை நீட்டிய உல்லாசப் பயணத்துறையும் படுத்துவிட்டது. இத்தகைய நிலையில் அதிகரிக்கும் பாதுகாப்புச் செலவீனம் சாதாரண சிங்கள மக்களின் வாழ்வினை ஆட்டம் காணவைக்கும் காலம் அதிக தூரத்தில் இல்லை.

அனுராதபுரச் சிங்கள மக்களின் உளவியல் தற்போது அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமது முற்றத்தில் நடந்த தாக்குதலால் பலர் அனுராதபுரத்தைவிட்டு வெளியேறியுள்ளனர். இதைப்போலவே எல்லைப் புறச் சிங்களவர்களும் பயபீதியில் உள்ளனர். இவ்வாறு சிங்கள மக்களின் மனவுறுதி குலையும்போது, போர் மூலமான தீர்வை ஆதரிக்கும் போக்கும் சரியலாம்.

சிங்களப் படைகளினதும் மனோதிடம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கிழக்கில் 20 000 பேரும் வடக்கில் 80 000 பேருமாக இடைவிடாத யுத்தத்தில் ஈடுபடும் படையினர் முன்னர் போராடிய தீவிரத்திடன் போராடமுடியாது போகலாம். சிறப்புப் படைகளே எல்லா முனைகளுக்கும் அனுப்பப்படுவதால், அவர்களின் ஆளணி சேதாரங்கள் அதிகரிப்பதும், மனவுறுதி குலைவதும் தவிர்க்கமுடியாததாகிவிடும். எனினும் கோத்தபாயா, சரத் பொன்சேகா பொன்றோர் இராணுவ நடவடிக்கைகளை முனிறுத்த முயல, அது முன்னரங்குகளிலுள்ள இராணுவத்தில் மனச்சோர்வையும், பிளவுகளையும் ஏற்படுத்தும்.

பல்வேறு நெருக்குவாரங்களுக்கும் உள்ள தமிழர் தரப்பு வலிந்த தாக்குதல்களை இதுவரை தொடுக்கவில்லை. எனினும் எல்லாளன் நடவடிக்கை போன்ற துணிகர அதிரடித் தாக்குதல்கள் இராணுவ இலக்குகள் மீது தொடரவே செய்யும். இத்தகைய தாக்குதல்கள் தமிழரின் மனவுறுதியைப் பலமடங்கு அதிகரிக்கச் செய்யும் அதே வேளை, சிங்களப் படைகளினதும், சிங்கள மக்களினதும் மனவுறுதியைக் குறைக்கும்.

சிங்கள அரசு புலிகளை அழிப்பதனூடாக தமிழர்களின் தாயக விடுதலைப் போராட்டத்தை அழிக்கலாம் என்று கருதிச் செயற்படுகின்றது. இதற்காகத் தொடர்தும் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடமிருந்து நேரிடையாகவும், இந்தியாவிடமிருந்து மறைமுகமாகவும் இராணுவ உதவிகளைப் பெறவே செய்யும். ஆனாலும் எவ்வளவு காலம் தனது சொந்த மக்களின் விருப்பங்களை மீறிச் செயற்படும் என்பது உடனடியாகத் தெரிய வாய்ப்பில்லை.

தமிழர் தரப்பு எத்தகைய நிலை வந்தாலும் சலிக்காமல் விடுதலைப் போராட்டத்டை முன்நகர்த்திச் செல்லத் தேவையான மனவுறுதியைக் கொண்டுள்ள தலைவரையும், போராளிகளையும் கொண்டுள்ளது. எனவே எத்தனை ஆண்டுகள் ஆனாலும், மனம் தளராமல் எத்தகைய நிலைகளையும் தாக்குப் பிடித்து எமது நியாப்பாட்டை உலகறியச் செய்வதில்தான் வெற்றி தங்கியுள்ளது.

உண்மையான தீர்வை விரும்பும் சர்வதேச நாடுகள் ஒரு தரப்பை அழிக்க உதவுவதில் எதனையும் அடையமுடியாது என்று உணரும் தருணம் வரும்போது தமிழர் போராட்டம் மீதான தமது பார்வையையும் மாற்றக் கூடும். அண்மையில் கூட எதிர்கால அமெரிக்க ஜனாதிபதியாக போட்டியிட முனையும் ஹிலரி கிளின்ரன் பயங்கவதத்தைப் பொத்தாம் பொதுவாக வரைவிலக்கணம் செய்வது பிழை என்ற தொனியில் செவ்வியளித்திருந்தார். எனவே சந்தர்ப்பம் சூழ்நிலைகள் வரும்போது சர்வதேசம் தமிழர் தரப்பை ஆதாரிக்கும் நிலை ஏற்படலாம். இந் நிலையை விரைவுபடுத்தும் பொறுப்பு புலம்பெயர் தமிழர் கைகளிலேயே தங்கியுள்ளது. ஒவ்வொருவரும் தமது கடமைகளை உணர்ந்து செயலாற்றினால் தமிழர் விடுதலை நிச்சயமே என்பதைத்தான் எல்லாளனின் மீள்வருகை உணர்த்துகின்றது.

Link to comment
Share on other sites

நல்ல ஆய்வு கிருபன் அண்ணா அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கிலாரி கிளிங்டன் வெற்றியடைய கூடும் என பரவாலக கதைக்கப்படுவதாக அறிந்தேன் ஆனால் பதவிக்கு முன் எதையும் பேசும் அரசியல்வாதிகள் பதவி கிடைத்த பின்னும் அதையே பேசுவார்கள் என்பது கேள்விக்குறியே

Link to comment
Share on other sites

எனக்கு முக்கியமாக ஒண்று விளங்கவில்லை. கட்டுரையாளர் ஆயுதபலம் பெருக்க பட வேண்டும் என்பவர்களில் ஒருவர். அதை யாழ் களத்தை வாசித்து வரும் எல்லாரும் அறிவர். அதோடு தாக்குதலை இட்டு தமிழர்கள் புளகாகிதம் அடைவதை வெறுப்பவர் அவர். ஆனால் எல்லாளன் நடவடிக்கையை இட்டு மிகவும் புளகாகிதம் அடைந்து இருப்பது தெரிகிறது. ஏன் இந்த மாற்றம்.?

தமிழர் படை தமது முழுமையான பலத்தை பிரயோகிக்கவும் இல்லை. விமான தாக்குதல் கூட ஒரு பயிற்ச்சி நடவடிக்கியாகத்தான் நடாத்தப்பட்டது. அதை அனுராதபுரம் முகாமில் இருந்த விமானபடைகளின் மனவுறுதியை உடைக்க நடாத்தப்பட்டதாக கூட சொல்ல முடியும். ஆனால் முழுமையான படைய பலம் அங்கு பிரயோகிக்க படவில்லை இலகுரக ஆயுதங்கள்தான் பாவிக்க பட்டு உள்ளது. அப்படி இருக்க திருவாளர் ஆய்வாளர் எப்படி வெற்றியை இட்டு மகிழ்கிறார்.?

தவிர இன்னும் ஒரு வேண்டாத பொய்யான மாயை ஒண்றை தமிழ் மக்களிடையே புகுத்த நிக்கிறார். அதாவது

வேவு விமானங்களின் அழிவினால் வன்னிப் பரப்பு மீதான துல்லிய வேவு நடவடிக்கைகள் முடங்கிவிட வாய்ப்புக்கள் உள்ளன. அத்தோடு இரவு நேர வேவுகளும் உடனடியாகச் சாத்தியமில்லையென்பதால் இரவு நேரத் தாக்குதல்களும் நடாத்த முடியாமல் போகலாம். போதிய வேவுத் தரவுகள் இல்லாவிட்டால், மிக், கிபீர் போன்ற போர்விமானங்களின் தாக்குதிறன் குறையவே செய்யும். துல்லியமற்ற தரவுகளைக் கொண்டு நடாத்தப்படும் தாக்குதல்களினால் பொதுமக்களின் பாதிப்பு அதிகரிக்கவும் செய்யலாம்.

இப்படி சொல்வதின் மூலம் இலங்கை படைகள் இவ்வளவு காலமும் புலிகள் இலக்குகள் மீது துல்லியமான தாக்குதலை நடாத்தினார்கள் இனிமேல் காலங்களில் தான் மக்களின் இலக்குகள் தாக்கப்படும் அபாயம் உள்ளதாக கோடிட்டு காட்டுகிறார். இவ்வளவுகாலமும் புலிகள் மக்களின் இலக்குகள்தான் தாக்கபடுகின்றன எண்று சொன்னவைகளுக்கு அது எதிராக இருக்கிறது. அப்படி புலிகளின் இலக்குகள் தாக்குதல் இலக்குகள் மக்களின் இலக்குகளாக மாற்றம் பெறுவதுக்கு எல்லாளன் நடவடிக்கை காரணமாகிறது எனும் தோற்றத்தை உண்டுபண்ணுகிறார். இது கண்டனத்துக்குரியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சொந்த ஆய்வாய்த்தாத் தெரியல்ல. சிங்கள ஊடகங்கள் மற்றும் ஆங்கில ஊடகங்களில் வந்த செய்திகளின் தொகுப்பு.

உதாரணத்துக்கு.. சிறீலங்கா விமானப்படையிடம் உள்ள உளவு விமானங்களின் எண்ணிக்கை அறியாத,தகவல்களைச் சரிவரப் பெற்று அலசும் திறனில் உள்ள முதிர்ச்சி இன்மையை இது எடுத்துக்காட்டுகிறது.

அதுமட்டுமன்றி நெருக்கடி நிலையில் சிறீலங்காவுக்கான அவசர இராணுவ தொழில்நுட்ப உதவிகளை வழங்க அமெரிக்க இந்தியா இஸ்ரேல் சீனா பாகிஸ்தான் உட்பட பலநாடுகள் அணிவகுத்து நிற்கும் நிலையில்.. இந்த தாக்குதலால் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் விமானப்படை நடவடிக்கைகள் முடங்கிடும் என்பது தவறான தகவலை மக்களுக்கு இட்டுச் செல்வதாக அமையும்.

சிறீலங்கா அரசின் போர்த்திட்டத்தில் சிறிய தாமதத்தை இத்தாக்குதல் வழங்கியுள்ளது. அதைத் தலைவர் தனக்கு சாதகமாகப் பயன்படுத்த பிந்நிற்க மாட்டார் என்பதும் உலகறியும். பொருளாதார ரீதியில் சிறீலங்காவின் இராணுவ செலவீனத்தை இது அதிகரிக்கலாம். அதன் விளைவு பால்மாக்களின் விலை 80 ரூபாவால் அதிகரித்துள்ளதை சொல்லலாம். இந்தத் தாக்குதலை விட இந்த 80 ரூபா அதிகரிப்பே சிங்களவர்களைப் பெரிதும் தாக்கும். அது அரசியல் ரீதியில அரசுக்கு நெருக்கடிகளை அதிகரிக்கவே செய்யும். நெருக்கடிகளைத் தவிர்க்க அரசுக்கு உள்ள ஒரே வழி.. போரை முன்னெடுப்பது அல்லது சமாதானம் பேச முனைவது. அரசுடன் உள்ள கூட்டணிகளின் நெருக்கடியில் உடனடியாக சமாதானம் பேசுவது புலிகளிடம் சரணடைவைதற்கு ஒப்பானது என்பதால் விரைவில் வட போர் முனையில் தற்காலிக வெற்றிக்கான பெரும் முழக்கம் ஒன்றை எதிர்பார்க்கலாம். :):)

Link to comment
Share on other sites

புலம்பெயர்ந்த தமிழர்கள் பங்கு மிக அதிகம் உள்ளது சிங்கள ராணுவத்தின் அனாகரீக செயல்களை (போராளிகளின் உடல்களை நிர்வாணப்படுத்தி அவமதித்தது) உலகுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

இலங்கை அரசுக்கோ இல்லை விமான படைகளுக்கோ இழப்பு எண்றால் மிகவும் முக்கியமானது விமானிகளின் இழப்பு ஆகும்....

ஒரு விமானத்தை இலகுவில் பணம் புரட்டி வாங்கிவிடலாம் அது கடனாக கூட இருக்கலாம்.... ஆனால் அங்கு இலங்கை படைகளின் அதிகாரிகள் தரத்திலான விமானிகள், படை வீரர்தரத்திலான அதிகாரிகள் என்பவர்கள் அனுபவம் வாய்ந்த பயிற்றப்பட்ட வர்களின் இழப்பு என்பது ஈடு செய்யப்பட காலங்கள் பல ஆகலாம்...

விமானபடையில் மிகவும் உயர் குடிகளே இணைவதும் இணைக்க படுவதும் வழமை... அப்படி பார்த்தால் காயம் அடைந்த விமான படையினர் திரும்பவும் சேவைக்கு வருவதும் கேள்விக்கு உரியது....

அனுபவன் உள்ள விமானிகள் ,தொழில் நுட்பவியல், தகவல் சேகரிப்பாய்வாளர்களின் இந்த இழப்புத்தான் இலங்கைக்கு மிகவும் பின்னடிப்பான விடயமாக படுகிறது...

அதுவும் விமான பயிற்சிக்கு வந்தவர்களின் மீதான தாக்குதல் இன்னும் பல பரிணாமங்களை இட்டுத்தரும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு முக்கியமாக ஒண்று விளங்கவில்லை. கட்டுரையாளர் ஆயுதபலம் பெருக்க பட வேண்டும் என்பவர்களில் ஒருவர். அதை யாழ் களத்தை வாசித்து வரும் எல்லாரும் அறிவர். அதோடு தாக்குதலை இட்டு தமிழர்கள் புளகாகிதம் அடைவதை வெறுப்பவர் அவர். ஆனால் எல்லாளன் நடவடிக்கையை இட்டு மிகவும் புளகாகிதம் அடைந்து இருப்பது தெரிகிறது. ஏன் இந்த மாற்றம்.?

நெடுக்கு கூறிவிட்டார்ரே..

இது சொந்த ஆய்வாய்த்தாத் தெரியல்ல. சிங்கள ஊடகங்கள் மற்றும் ஆங்கில ஊடகங்களில் வந்த செய்திகளின் தொகுப்பு

தாக்குதலை இட்டுப் புளகாங்கிதம் அடைந்து "இத்தோடு சிங்களவர்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம்" என்று ஓடப்போவதாகச் சொல்லவில்லையே.. முன்னைய நிலையில் இருந்து மாற்றம் ஏற்படும் என்றுதான் தோன்றுகின்றது. எனினும் அதிகளவு மாற்றங்களை ஏற்படுத்த புலத்தமிழர் அரசியல் ரீதியாகச் செய்யவேண்டிய வேலைகள் நிறைய உள்ளன என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

தவிர இன்னும் ஒரு வேண்டாத பொய்யான மாயை ஒண்றை தமிழ் மக்களிடையே புகுத்த நிக்கிறார். அதாவது இப்படி சொல்வதின் மூலம் இலங்கை படைகள் இவ்வளவு காலமும் புலிகள் இலக்குகள் மீது துல்லியமான தாக்குதலை நடாத்தினார்கள் இனிமேல் காலங்களில் தான் மக்களின் இலக்குகள் தாக்கப்படும் அபாயம் உள்ளதாக கோடிட்டு காட்டுகிறார். இவ்வளவுகாலமும் புலிகள் மக்களின் இலக்குகள்தான் தாக்கபடுகின்றன எண்று சொன்னவைகளுக்கு அது எதிராக இருக்கிறது. அப்படி புலிகளின் இலக்குகள் தாக்குதல் இலக்குகள் மக்களின் இலக்குகளாக மாற்றம் பெறுவதுக்கு எல்லாளன் நடவடிக்கை காரணமாகிறது எனும் தோற்றத்தை உண்டுபண்ணுகிறார். இது கண்டனத்துக்குரியது

துல்லியமான வேவுத் தகவல்களைப் பெறத்தானே "வண்டு" என்று அழைக்கப்படும் ட்ரோனர்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். வேவு விமானங்களின் இழப்பினால் கண்மூடித்தனமான தாக்குதல்கள் அதிகரிக்கும். அதற்காக இவ்வளவு காலமும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடக்கவில்லை என்று அர்த்தம் அல்ல.

வேவு விமானங்களின் எண்ணிக்கைகள், அவற்றில் இழப்புக்களினால் உருவாகக்கூடிய தாக்கங்களை அரூஸ் போன்றோரின் கட்டுரைகளில் இருந்து அறிந்து கொள்ளலாமே.

இது சொந்த ஆய்வாய்த்தாத் தெரியல்ல. சிங்கள ஊடகங்கள் மற்றும் ஆங்கில ஊடகங்களில் வந்த செய்திகளின் தொகுப்பு. உதாரணத்துக்கு.. சிறீலங்கா விமானப்படையிடம் உள்ள உளவு விமானங்களின் எண்ணிக்கை அறியாத,தகவல்களைச் சரிவரப் பெற்று அலசும் திறனில் உள்ள முதிர்ச்சி இன்மையை இது எடுத்துக்காட்டுகிறது.

இது செய்திகளின் அலசல்.. ஆய்வாளாராகும் எண்ணமெல்லாம் நமக்கில்லை. அதற்குப் பலர் உள்ளனர்.

Link to comment
Share on other sites

எல்லாளனின் மீள்வருகை தமிழரின் விடிவை நோக்கிய நகர்விற்கு உறுதுணையாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுரைக்கு நன்றி கிருபன் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆய்வு கிருபன் அண்ணா அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கிலாரி கிளிங்டன் வெற்றியடைய கூடும் என பரவாலக கதைக்கப்படுவதாக அறிந்தேன் ஆனால் பதவிக்கு முன் எதையும் பேசும் அரசியல்வாதிகள் பதவி கிடைத்த பின்னும் அதையே பேசுவார்கள் என்பது கேள்விக்குறியே

ஈழவன் கிளாரி கிளின்டன் தெளிவான பெண்மணி. அவரிடம் இருந்து வரும் கருத்து என்பது இடத்திற்கு ஏற்றபடி குத்துக்கரணம் அடிக்கும் என்று கூறமுடியாது. அமெரிக்காவில் அவர் வெற்றி பெற்றால் பல நாடுகளுக்கு நன்மை ஈழவன்

Link to comment
Share on other sites

உண்மையான தீர்வை விரும்பும் சர்வதேச நாடுகள் ஒரு தரப்பை அழிக்க உதவுவதில் எதனையும் அடையமுடியாது என்று உணரும் தருணம் "வரும்போது தமிழர் போராட்டம் மீதான தமது பார்வையையும் மாற்றக் கூடும். அண்மையில் கூட எதிர்கால அமெரிக்க ஜனாதிபதியாக போட்டியிட முனையும் ஹிலரி கிளின்ரன் பயங்கவதத்தைப் பொத்தாம் பொதுவாக வரைவிலக்கணம் செய்வது பிழை என்ற தொனியில் செவ்வியளித்திருந்தார். எனவே சந்தர்ப்பம் சூழ்நிலைகள் வரும்போது சர்வதேசம் தமிழர் தரப்பை ஆதாரிக்கும் நிலை ஏற்படலாம். இந் நிலையை விரைவுபடுத்தும் பொறுப்பு புலம்பெயர் தமிழர் கைகளிலேயே தங்கியுள்ளது. ஒவ்வொருவரும் தமது கடமைகளை உணர்ந்து செயலாற்றினால் தமிழர் விடுதலை நிச்சயமே என்பதைத்தான் எல்லாளனின் மீள்வருகை உணர்த்துகின்றது. "

அரசியல் பல்டி அடிப்பதில் உலக அரசியல் வாதிகட்கு அமெரிக்கா ஒன்றும் குறைந்தவர்களில்லை.நாம் எவ்வளவு பலமுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை பொறுத்து தான் நாங்கள் கணிக்கப்படுகிறோம் என்பதை முன்னை நாள் மலேசிய சனாதிபதி கூறியதை இவ்விடத்தில் நினைவு கூறலாம்.இதற்கு உதாரணமாக அமெரிக்கா -இஸ்ரேலிய உறவை கூறலாம்.இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் கலாச்சார தொடர்பு இல்லாத போதும் இஸ்ரேலியர்களை நண்பர்களாக்கியது அவர்களது திறமையால் மட்டும் தான்.யப்பானின் மீது அணு குண்டு வீசியும் இன்று இவ்விரு நாடுகளும் மிக பெரிய வியாபார நண்பர்கள் ,யப்பானின் திறமையால் மட்டுமே சாத்தியமானது. ஆகவே தமிழ் மக்களின் விவேகமான நடவடிக்கை மூலம் தான் நாங்கள் விரைவில் அடையாளம் காணப்படுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாளனின் மீள்வருகை - நம்பிக்கையின் வெளிப்பாடு.

அலசலைத்தந்த கிருபனுக்கு நன்றிகள்.

மேலும் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

உங்கட ஆய்வு நல்லா இருந்தது மற்றும் ஆரம்பத்தில் எல்லாலனைப்பற்றி சற்று விளக்கியது நன்றாக இருந்தது ஏனெனில் புலம் பெயர்ந்த எமது சந்ததிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆதலால் உமது ஆரம்பம் நன்றாக இருந்தது ஆனால் அதில் சில விளக்கக்குறை இருப்பதாக நான் உணர்கிறேன்...

நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் எல்லாலனை துட்டகைமுனு போரில் வென்றதாக !! ஆம் ஆனால் சிங்களவர்கள் எப்பொழுதாவது தமிழனை வீரத்தல் வென்றதாக கேள்விப்பட்டுள்ழீர்களா ??? அன்று தொட்டு இன்றுவரை சூழ்ச்சியால்த்தான் தமிழனை வெல்கிறார்கள் .. அதற்கு நினைற உதாரணங்கள் உண்டு...-> கருனா பிரிந்தது .. ஆரம்ப காலத்தில் இருந்த 15 க்கும் மேற்பட்ட விடுதலை இயக்கங்களை உடைத்தமை....

எனது குறிப்பிற்கு வருகிறேன்... இப்படியாக சூழ்ச்சி மூலம்தான் வீரம் செறிந்த எல்லாளனும் வீழ்த்தப்பட்டான்.. அதாவது .. போர் நடைபெறுவதற்கு முதல் எல்லளனுடைய யானைக்கு மயக்க மருந்து யானை பாகனின் உதவியுடன் துட்டகைமுனுவின் ஆட்களால் கொடுக்கப்பட்டது .. ஆகவே போர் நடைபெறும் பொழுது எல்லளனின் யானை மயக்கமுற எல்லளன் தடுமாறி கீழே விழும் பொழுது துட்டகைமுனு எல்லளனை வீழ்த்தினான்.. ஏனெனில் வீரம் செறிந்த எல்லாளனை விழ்த்துவது அவ்வளவு சுலபமானதல்ல என்று துட்டகைமுனு அறிந்திருந்தான்......... இந்த ஆகவே இங்கு சூழ்ச்சியின் மூலமே வென்றானே தவிர ..வீரத்தால் வெல்லவில்லை.... இப்படிதான் அன்று தொட்டு இன்று வரை சிங்களவர்கள் வெல்வதாக காட்டிக்கொள்கிறார்கள்.................

Link to comment
Share on other sites

"எல்லாளன் நடவடிக்கை" தொடர்பான செய்திகளை அலசி நல்ல அலசலை ஒழுங்குபடுத்தி எழுதியிருக்கிறீர்கள். எல்லாளனின் மீள்வருகை தமிழீழத்தின் வெற்றியை விரைவுபடுத்தும்.

Link to comment
Share on other sites

கிருபனின் அலசலுக்கு நன்றி.

அன்று முதல் இன்றுவரை சிங்களவன் சூழ்ச்சியிலேயே வெல்லுறான் வீரத்தால் அல்ல என்று எங்கடை ஆக்கள் ஒப்பாரி வைக்கிறதில கெட்டிக்காறர்.

அன்று முதல் இன்றுவரை தமிழர்கள் சூழ்ச்சியால் ஏமாற்றப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்ற சுயவிமர்சனத்தை செய்யுங்கள்.

அன்று ஏன் யானைப்பாகனிற்கு தமிழில் தமிழ்த் தேசியத்தில் தமிழ் மன்னர் எல்லாளனில் விசுவாசம் இருக்கவில்லை? எல்லாளனின் ஒற்றர்படையால் இப்படிப்பட்ட சூழ்ச்சிகளை ஏன் தடுக்க முடியவில்லை என்று யோசியுங்கள்?

இன்று கருணாவிற்கு ஏன் தமிழில் தமிழ்த் தேசியத்தில் விசுவாசம் இல்லாது போனது?

கீதையால் மூளைச் சலவை செய்யப்பட்ட நீங்கள் எதிர்பார்க்கிறமாதிரி சறுக்கி விழுந்தா இன்று போய் நாளை வா என்று சிங்களவன் அனுப்புவான் எண்டு எதிர்பார்க்கிறியளோ?

LTTE attack and national conscience

By MSM Ayub, [ Daily Mirror - Oct 31 200]

Was it surprising to hear that on October 22 the LTTE launched a massive air and land attack on the Anuradhapura air force base located within a predominantly Sinhala area --one of the major security installations of the Government armed forces? Yes, it might have been a surprise had we believed media reports quoting some of the defence experts saying the Tamil rebels had been deprived of their capacity to strike outside the north and east following the humiliating defeat in the east.

The defeat of the LTTE in the eastern province culminated with the seizure of Thoppigala, also known as Kudumbimalai by the security forces in July. It had no bearing on attacks like the one on Anuradhapura base by the LTTE, since such an attack required only the accumulation of precise intelligence, meticulous planning and a dedicated group of guerillas. The defeat in the eastern province led to LTTE cadres stationed there to drift away possibly with most of their weaponry and therefore one might argue that the capture of eastern province by the troops itself might have given the LTTE additional resources --human and military--to utilize in the type of attack on the A’pura base.

The attack on the Anuradhapura Base code-named by the Tigers as “Operation Ellalan” (Elara), signified the historic war in the sacred city between King Dutugemunu and King Elara centuries ago. The ground and air offensive by the rebels came on the heals of another relatively surprising attack on another security forces installation in the south -- the Thalgasmankada Army detachment in the Yala National Park on October 15. This might have been a diversionary action by the Tigers to facilitate the air base attack.

With these two attacks, the rebels seemed determined to alter the climate of the battlefield which is currently favourable to the government troops. With the A’pura attack, the Tigers might have also intended to prevent a preemptive military thrust into the Vanni. A thrust into the Vanni had for sometime been the subject of political rhetoric by some top brass of the government. In addition the two attacks – Yala and A’pura -- would have certainly supercharged the morale of Tiger cadres whose fighting spirit might have been sagged due to repeated defeats in the east and in Mannar, and continuous reports of weapons seizures and the destruction of shipping fleets.

There is a school of thought that attributes each attack by the LTTE to a recent act by the government troops, implying that the LTTE would not act unless it is provoked.

However, in a war situation any belligerent party would seek to exploit any favourable opportunity to stage a successful offensive or to inflict damage-militarily or psychologically to the foe without a pinch of provocation. That was what the government did when the LTTE’s former Ampara and Batticaloa districts’ special commander Vinayagamoorthi Muralidharan alias Karuna broke away from the group, by giving him shelter even when a peace process and a ceasefire were on.

The targetting of the Air Force particularly at this juncture by the LTTE could not be accidental or random since it was the air force that gave air cover to the Army and the Navy operations on the ground and in the sea and also coming to the assistance of the two other forces during offensives by the rebels and it was the air force that the LTTE could not match so far. It is natural therefore for the LTTE to target the Air Force when a thrust by the security forces into Vanni was impending. And there were indications in recent months that the Tigers were reposing high hopes on the operations in the air.

One month ago on September 26 Sea Tigers leader Thillayampalan Sivanesan, better known as Soosai appearing for the first time in public after recovering from his injuries following a major sea accident where his son and some others were killed said that although Sri Lankan Air Force’s Kfir fighters frighten the Tamil children in order to wreck the morale of the Tamil people, they will be able to create history with the strength that has been instilled into them by their “National Leader” who is the first Tamil to acquire an Air Force.

Another noteworthy fact here was that he was talking of creating history at a function where a compact disc titled “Sirahu Wiriththa Puligal (Flying Tigers), containing songs on the LTTE’s air wing, was launched.

Targeting of the Air Force is similar to the selection of Sampur by the security forces when they decided to begin offensive operations after four years following the suicide bomb attack within the Army headquarters in April 2006. There was a massive LTTE build up around Trincomalee when the Mavil Aru sluice gate was blocked by the Rebels endangering the Trincomalee harbour which is the main supply point for the forty thousand troops in the Jaffna peninsula. Therefore it was logical for the troops to begin the offensives practically ending the four year old but fragile ceasefire by clearing the risk on the strategic port.

The impact of the attack on the Anuradhapura Air Base could be calculated only by the military experts. Minimization of it by the ruling party politicians as well as maximization by the opposition would not serve any purpose worth and is ridiculous. The reactions of the southern politicians and Government leaders to the Anuradhapura Air base attack are mixed and most of them are disheartening for they are gravely politicised and do not appear to serve the larger interest of the nation, but only addressing their petty party interests. First they played politics with the numbers of casualties. Government’s initial version on the damage inflicted by the onslaught was that four aircraft were damaged and thirteen airmen have been killed whereas Prime Minister Rathnasiri Wikramanayaka on Wednaesday told in parliament that eight aircraft have been destroyed including one in an accident related to the incident. On the other hand the main opposition UNP announced that 18 aircraft were destroyed.

An interesting but frustrating psychological warfare ensued the attack between most of the supporters of the two main parties on the casualty numbers with people in Government rank seeking to conceal the damage that even they inferred and opposition supporters needing to amplify what they were aware of or guessed. It is ironic to listen to these debates in buses, trains and other public places where some ordinary members of society apparently prayed that the number of casualties rise and others sought otherwise, depending on their political allegiance.

As usual political parties are seeking to blame their rivals and adversaries on the debacle. Some UNP bigwigs questioned as to where the MiG fighter planes were that were procured through what they called a shady deal during the LTTE’s ground and air offensive and Government leaders on their part identified their critics with the LTTE and told them not to boost the enemy’s spirit. The main opposition is calling the resignation of the Air force Commander Roshan Gunathilaka and Defence Secretary Gothabaya Rajpaksa- a thorn in their eye.

Government spokesman Keheliya Rambukwella described the Anuradhapura attack as a terrorist act by the Tigers due to the pressure the security force exerted on them.

This statement by the Minister complicates the already controversial global definition of terrorism which is that an offensive of one armed group on another combatant party is a terrorist act.

The Tiger onslaught is a cowardly act according to the JVP leaders which again complicates the meaning of some words in human language. In spite of the fact that one may agree with the JVP that the Tigers must be defeated militarily, it is difficult for him or her to grasp that the action of a small group of 21 persons who infiltrate a heavily guarded and well equipped military base, with the knowledge that they will not return alive, and destroy several aircraft overpowering the sentry personnel and fight with the soldiers in the base for several hours, is cowardice.

Every time the LTTE launched a massive attack on the security forces or on the civilians, it was the practice of some politicians, journalists and most NGOs to vindicate their ideologies, one group saying that peace with the Tigers was impossible given the attack and yet others arguing that the incident itself is proof that there was no military solution and renewed calls for a negotiated settlement.

Over the last two decades we have experienced this kind of interpretation, rhetoric, challenges, or calls for resignation by politicians alternatively changing their stance depending on what party they are attached to -- the party in power or the party seeking to grab power. This is nothing other than an indication of the leaders of this country having failed since independence to build a national conscience at least in relation to national security.

http://www.dailymirror.lk/2007/10/31/opinion/02.asp

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.