Jump to content

டூரிஸ்ட் புரோக்கர் ஷாருக்கானின் காஷ்மீர் காதல்!


Recommended Posts

டூரிஸ்ட் புரோக்கர் ஷாருக்கானின் காஷ்மீர் காதல்!

“நான் இதய பூர்வமாய் சொல்கிறேன், என் இதயத்தில் காஷ்மீருக்கு எப்பொழுதுமே தனியான ஒரு இடம் இருக்கும்” என்று காஷ்மீர் மக்களை பார்த்து சொல்லியிருக்கிறார் இந்தி நடிகர் ஷாருக்கான். யாஷ் சோப்ரா இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்றது. அதன் முடிவில் கோடைக் காலத்தில் உருகும் காஷ்மீரின் பனி மலைகளை போல உருகி விட்டிருக்கிறார் ஷாரூக்கான்.

படிக்கவும்

“லண்டனிலோ ஸ்விட்சர்லாந்திலோ ஒரு படம் எடுக்கப்பட்டால் படத்தைப் பார்க்கும் மக்கள் அந்த இடங்களுக்கு போய் வர ஆசைப்படுவார்கள். அதே போல இந்தப் படம் காஷ்மீரில் பெருமளவு எடுக்கப்பட்டதால் பார்க்கும் மக்கள் இங்கு வர விரும்புவார்கள்” என்ற தனது நம்பிக்கையை அவர் வெளியிட்டார்.

பனி படர்ந்த மலைகள், சில்லென்ற குளிர் “புது வெள்ளை மழை பொழியும்” சூழலில் காதல் பாட்டு. இப்படி அழகாய் போய்க் கொண்டிருக்கும் இளம் காதலர் வாழ்க்கையில் ரோஜா மலரை சுற்றிய முட்கள் போன்ற முஸ்லீம் தீவிரவாதிகள் காதலனை கடத்தி சென்று விடுவார்கள். படம் பார்க்கும் நடுத்தர வர்க்க இந்தியர்கள் ‘இப்படிப்பட்ட அழகான ஊரில் தீவிரவாதமா?’ என்று தேசபக்தியில் கொதிப்பார்கள். 1990களில் காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ரோஜா படம் மூலம் இப்படிக் காட்டி பணம் சம்பாதித்ததோடு தேசபக்த மதிப்பெண்களையும் பெற்றுக் கொண்டார் மணிரத்தினம்.

அந்த கால கட்டத்தில் ‘காஷ்மீர் என்றாலே முஸ்லிம் தீவிரவாதம், காஷ்மீரிகள் நாட்டுக்கு எதிரானவர்கள்’ என்று ஆளும் வர்க்கம் மக்களிடையே உருவாக்க முனைந்த படிமத்துக்கேற்ப ஊடகச் செய்திகளும் ‘கலைப் படைப்புகளும்’ வெளி வந்தன.

போலீசும் ராணுவமும் இன்னமும் காஷ்மீரி மக்களின் குரல்வளையில் கால் பதித்து நிற்கின்றன. இந்திய ஆதிக்கத்துக்கு எதிராக சிறுவர்களும் பெண்களும் கூட தெருவில் இறங்கி போராடுகிறார்கள். காஷ்மீர் மக்களின் விடுதலைக்கான போராட்டத்துக்கு எந்த ஒரு தீர்வோ முடிவோ ஏற்பட்டு விடவில்லை.

இருந்தாலும் இப்போது காட்சிகள் மாற வேண்டிய நேரம் வந்து விட்டது. ஒளிரும் இந்தியாவின் முதலாளிகளுக்கு காஷ்மீரில் சுற்றுலா வளர்ச்சி தேவைப்படுகிறது, அது தொடர்பான ரியல் எஸ்டேட் வாய்ப்புகள் தேவைப்படுகின்றன, மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கத்திற்க்கு தேன் நிலவு செல்ல ‘பூலோக சொர்க்கம்’ ஒன்று இந்தியாவுக்குள்ளேயே தேவைப்படுகிறது.

கூடங்குளம் போன்ற பகுதிகளில் இந்திய மக்கள் அனுபவிப்பது போன்ற ஜனநாயகம் காஷ்மீரிலும் தளைத்து விட்டது. ‘அங்கு அமைதியும், அழகும், மகிழ்ச்சியும் பொங்குகின்றன’. அதை முன் வைக்க வேண்டிய இன்றைய தேவையின் வெளிப்பாடுதான் யாஷ் சோப்ராவின் திரைப்படமும் திரைப்படத்தை முன் நிறுத்தி அதன் மூலம் காஷ்மீரை உலகுக்கு விற்பதற்காக வெளிப்பட்டிருக்கும் ஷாருக் கான் என்ற தேவ தூதனும்.

அந்த திரைப்படத்தில் ஷாரூக் கான் ஒரு ராணுவ அதிகாரியாக வருகிறாராம். ஒரு இந்திய ராணுவ அதிகாரி தான் அடக்கி ஆளும் காஷ்மீரை எப்படி நேசிக்க முடியும்! தம்மை ஆயுதப் பிடிக்குள் வைத்திருக்கும் இந்திய ராணுவத்தின் ஒரு அதிகாரியை காஷ்மீர் மக்கள் எப்படி நேசிக்க முடியும்!

கொஞ்சம் யோசித்து பாருங்கள்! நாளையே ‘அணு விஞ்ஞானி’ அப்துல் கலாமும், ‘நாற வாய்’ நாராயணசாமியும் கூடங்குளத்தை தங்களுக்குப் பிடித்தமான இடம் என்று பிரகடனப்படுத்தலாம். கூடங்குளத்தின் பெயரில் (குறைந்த பட்சம் 300 கிலோமீட்டர் தொலைவில்) ஒரு IPL மேட்ச் நடத்த ஏற்பாடு செய்யலாம், ஏன் ஷங்கர் எடுக்கும் படத்தில் கூடங்குளம் ஒரு வசனமாக கூட இடம் பெறலாம்!

ஒரு கொலைகாரன் தனது கொலையை சிலாகிக்கலாம். கொல்லப்படுபவர்களால் அப்படி முடியுமா?

_______________________________________________________

தொடர்புடைய பதிவுகள்

Tags: அடக்குமுறை, இராணுவம், காஷ்மீர், சுற்றுலா, தீவிரவாதம், போராட்டம், யாஷ் சோப்ரா, விளம்பரம், ஷாருக் கான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.