Jump to content

யாழுக்கு வயது 14 !!


Recommended Posts

அன்பான தமிழ் பேசும் உறவுகளே,

பல தடைகள், சவால்கள் எல்லாம் கடந்து அனைத்து உறவுகளினதும் அன்புடனும் ஆதரவுடனும் மார்ச் 30 ஆம் நாளாகிய இன்று (தமிழீழ நேரப்படி) யாழ் 14 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது.

தமிமீழப் போராட்டம் தமிழ் ஈழ மண்ணில் இராணுவ வடிவப் போராட்டமாக வீறு கொண்டு நடைபெற்று வந்த காலகட்டத்தில் அந்த மக்களின் விடுதலை அவாவையும், சுதந்திரத் தாகத்தையும், அதற்காக அவர்கள் சுமந்த வலிகளையும், விடுதலை நெருப்பில் தம்மை கொடையாக்கிய மாவீரச் செல்வங்களின் தியாகங்களையும் தமிழ் பேசும் உலகெங்கும் இணையத்தினூடாக எடுத்தியம்ப மோகன் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட யாழ் இணையம், இன்று இராணுவ ரீதியான போராட்டம் உறைநிலைக்கு வந்து அதை முன்னின்று நடத்திய மக்களின் வாழ்வில் வலி மட்டுமே மிகுதியாகி, போராளிகளில் ஆயிரக் கணக்கானோர் முகாம்களிலும், திறந்த வெளிச் சிறைகளிலும் அடைபட்டுக் கொண்டிருக்கும் துன்பமிகு காலத்தில் தன் 14 ஆவது வயதுக்குள் யாழ் இணையம் காலடி எடுத்து வைக்கின்றது.

தமிழீழ மண்ணில் அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டு, வாழ்வாதாரங்கள் அனைத்தும் செயலிழக்கப்பட்டு, கலாச்சார விழுமியங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கப்பட்டு சூனியமாக்கப்பட்ட இன்றைய நாளில் மீண்டும் மீண்டு எழுவதைத் தவிர விதி எதையும் எமக்கு விட்டு வைக்கவில்லை என்ற யதார்த்தத்துக்கு இணங்க யாழ் களமும் எதிர்காலம் பற்றிய ஒரு சிறு நம்பிக்கையின் மேல் நம்பிக்கை வைத்து தன் மிகுதிப் பயணத்தை தொடர முயல்கின்றது.

எல்லா ஆயுதங்களும், எல்லாச் சக்திகளும் ஈற்றில் மக்களை வஞ்சித்து விட்ட சூழ்நிலையில், அந்த மக்களின் விடிவு இன்னும் மிகவும் தொலை தூரத்தில் இருக்கப் போகும் யதார்த்தபூர்வ உண்மையை உள்வாங்கி, அந்த தொலை தூர விடியலுக்காக யாழ் களமும் தன்னாலான சிறிய பங்களிப்பையாவது நல்கும்; நல்க முடியும் என்ற நம்பிக்கையின் பால் தன் 14 ஆவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கின்றது

இந்தப் பயணம் தொடர்வதற்கு என்றுமே எம்முடன் துணைவரும் உங்களின் அன்பும் ஆதரவும் தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடருகின்றோம்

நன்றி

யாழ் களம்

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கைகள் கைகூடும். யாழ் இணையம் புதுப் பொலிவுடன் நிமிர மனமார்ந்த வாழ்த்துக்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

யாழின் இனிய நாதம் புது ஆண்டில் புதுப்பொலிவுடன் இசைக்கட்டும்.

இனிய பிறந்தாள் யாழுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் நீண்ட காலம் நிலைத்து நின்று சேவையாற்ற, எனது வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

உறுதுணையாய் துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம்.

நிர்வாகத்திற்கும் சக உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

நாம் பலவீனப்பட்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில்தான் கூடிய உழைப்பு, கூடிய நம்பிக்கையூட்டல் தேவையாகிறது.அதனால்

அறத்தில் நம்பிக்கை வைப்போம். உண்மை வெல்லும். எமது போராட்டம் நீதிநியாயத்திற்கான போராட்டம். அது வென்றே

ஆகவேண்டும். இது வெறும் ஆசை வார்த்தைகளல்ல. ஏற்கனவே நல்ல அறிகுறிகள் தெரியத்தொடங்கிவிட்டன. புலம்பெயர்

தமிழர்கள், தமிழ்நாட்டுத்தமிழர்கள் ஒருங்கிணைந்து செயற்பட்டால் வெற்றி நிச்சயம். யாழ்களம் அதற்கு தொடர்ந்து உதவட்டும்.

வாழ்க, வளர்க என வாழ்த்துகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14வது வயதில் காலடி எடுத்து வைக்கும், யாழ் களத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் என்னும் தாயானவள், தன் சிறகுகளை அகல விரித்துத், தப்பியோடும் குஞ்சுகளையும் மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொண்டு, இன்னும் பல்லாண்டு வாழ வேண்டுமென்று இன் நன்னாளில் வாழ்த்துகின்றேன்!

Link to comment
Share on other sites

வயதுக்குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. முன்னைய காலங்களிலும் கூறியிருந்தேன். 1999இல் ஆரம்பிக்கப்பட்டால் எப்படி 14 வயது என்று கூறுவது? 1999இல் பிறந்த எனது ஒரு மருமகனும், மருமகளும் தமது13ம் வயது பிறந்தநாளைக்கொண்டாடினார்கள். யாழுக்கு தற்போது 14 வயதென்பது இளைஞன் மூலம் ஏற்படுத்தப்பட்ட வயசுக்கோளாறு என்று நினைக்கின்றேன். அவர் ஒழுங்காய் கணக்கில் கவனம் செலுத்தியிருப்பின் இப்படி வந்திருக்காது. அல்லது தமிழ்முறையில் இப்படித்தான் கூறுவார்களோ!

:::::::::::::::::::::::::::::::::::::::::

Whois Record For Yarl.com

Whois Record

ICANN Registrar:WILD WEST DOMAINS, LLC

Created:1999-03-30

Expired: 2014-03-30

:::::::::::::::::::::::::::::::::::::::::

என்னமோ, நான் இங்கு எழுதினாலும், எழுதாவிட்டாலும், வந்தாலும், வராவிட்டாலும் யாழ் இணையம் எனது வாழ்க்கையிலேயே பல மாற்றங்களிற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாக அமைந்துவிட்டது. நாளை மீண்டும் மோகன் அவர்கள் யாழின் பூங்காவனத்திருவிழாபற்றி அறிவிப்பினும், வாழ்க்கையில் இருந்துபிரிக்கப்படமுடியாத ஓர்விடயமாகிவிட்டது இங்கும், இதன்பாதிப்பின் தொடர்ச்சியாகவும் பெற்ற நல்லதும், கெட்டதுமான அனுபவங்கள்!

யாழுடன் இணைந்த, இணைந்துள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்!

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...இன்று போல என்றும் வாழ வாழ்த்துகிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அதோட இன்னொரு விடையம்.எமது கலாச்சாரங்களில் :rolleyes: மொய் எழுதும் பழக்கம் உண்டு.அது போல் ஏன் யாழுக்கும் பிறந்த நாளுக்கு மொய் எழுதக்கூடாது.மொய் எழுத அனுமதிப்பதால் யாரும் பிள்ளை வளர்ப்பில் தலையிடுவனம் என்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை.நிர்வாகம் இரு paypal கணக்கை தந்தால் மொய் எழுத உதவியாக இருக்கும். நன்றி. :)

Link to comment
Share on other sites

யாழிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும் அதனை சளைக்காது தொடர்ந்து இயக்கும் மோகனுக்கும் மட்டுறுத்துனர்களிற்கும் பாராட்டுக்களும் உரித்தாகுக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மென்மேலும் வளர்ந்து தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொண்டாற்ற வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் புதியபொலிவுடன்,

புதுமுகங்களின் வரவுடன்,

சிறப்புற வாத்துகின்றேன்.

வாழ்க பல்லாண்டு என்று ........

best_wishes.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

birthday-cake-candles-10.gif

14 வது பிறந்த நாள் காணும் யாழ் இணையத்திற்கு நல் வாழ்த்துக்கள். இலட்சிய உறுதியோடு.. யாழும் அடைய வேண்டிய இலக்கை நோக்கி வெற்றி நடை போட வாழ்த்துகின்றேன்..! :)

Link to comment
Share on other sites

யாழிற்கு எனது பிறந்தாநாள் வாழ்த்துகள்! இந்தளவு காலமும் யாழை சிறப்பாக இயக்கிய மோகன் அவர்களுக்கு எனது நல வாழ்த்துக்கள்! யாழை தொடர்ந்து நடாத்த முடிவு எடுத்து இருக்கும் நிழலி அவர்களுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்.

Link to comment
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துக்கள், சண்டை சச்சரவின்றி ஒற்றுமையுடன் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.