Jump to content

சிரிய தலைநகரில் மோதல்கள் உக்கிரம் இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு இதுவரை சிரியாவில் 19,000 பொதுமக்கள் பலி


Recommended Posts

[size=4]சிரிய தலைநகரில் மோதல்கள் உக்கிரம் இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு இதுவரை சிரியாவில் 19,000 பொதுமக்கள் பலி[/size]

[size=2]

[size=4]டமாஸ்கஸ்: சிரியாவின் இரு பாரிய நகரங்களான டமாஸ்கஸ் மற்றும் அலெப்போவில் இடம்பெறும் மோதல் சம்பவங்களினால் கட்டிடங்கள் தீப்பற்றி எரிந்து அப்பகுதிகள் புகைமண்டலமாக காட்சிதரும் நிலையில் பல இலட்சக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களை தேடிச் செல்கின்றனர். [/size]

[size=4]ஹெலிகொப்டர்கள் கனரக போர் வாகனங்கள் மூலம் அரச படையினர் போராளிகளின் இலக்குகளை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினரிடையேயும் மிகமோசமான மோதல்கள் இடம்பெற்றுள்ளது.

இருதரப்பிலும் கணிசமானளவில் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்று வருவதால் உயிரிழப்புகள் குறித்து சரியான தகவல்கள் வெளியாகவில்லை.

ஆரம்பத்தில் அரச படையினர் வசமிருந்த பகுதிகளைப் போராளிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தனர்.[/size]

[size=4]தற்பொழுது அப்பகுதிகளை மீட்பதற்கு அரச படைகள் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.

ஹெலிகொப்டர் மூலம் அரச படையினர் சிரியாவின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகள் வீடியோக்களில் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டுள்ளது.

நகர் முழுவதும் புகை மண்டலமாகக் காட்சிதருவதாகக் கூறப்பட்டுள்ளது. யுத்த டாங்கிகள் சகிதம் தரையில் அரச படையினர் போராளிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர்.

டமாஸ்கஸ் மற்றும் வரலாற்று புகழ்மிக்க நகரமான அலெப்பே ஆகிய நகரங்களின் பெரும்பாலான பகுதிகள் தொடர்ந்தும் போராளிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

அப்பகுதிகளை மீட்கவே அரச படைகள் மிகவும் உக்கிரமான தாக்குதல்களை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. [/size]

[size=4]இதேவேளை மத்திய ஆசிய நாடான சிரியாவில் நடைபெற்று வரும் கிளர்ச்சியால் இதுவரை 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் அசாத்துக்கு எதிராகப் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அரசு எதிர்ப்புப் படையினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.[/size]

[size=4]இப்போது மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் தலைநகர் டமாஸ்கஸை முற்றுகையிட்டு அரசு எதிர்ப்புப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் பல ஆயிரமாக அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டுக்கு மேல் நடைபெற்று வரும் கிளர்ச்சியில் மொத்தம் 19,106 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 13,292 பேர் அப்பாவி பொதுமக்கள், 4,861 பேர் அரசுக்கு ஆதரவாகப் போரிட்ட இராணுவத்தினர். [/size]

[size=4]அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற விபரம் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் தவிர ஆயிரக்கணக்கானோரின் நிலைமை என்ன ஆனது என்பதே தெரியவில்லை.[/size]

[size=4]தலைநகர் டமாஸ்கஸ் மட்டுமன்றி முக்கிய நகரங்களிலும் தாக்குதல்கள் தீவிரமாகியுள்ளன. இந்த வன்முறையால் ஏராளமான பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை ஒரு நாளில் மட்டும் 164 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 86 பேர் பொதுமக்கள். வீடுகள் இருக்கும் பகுதிகளிலும் அரசு எதிர்ப்புப் படையினர் பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசுகின்றனர். இதனால் வீடுகளில் பதுங்கியிருக்கும் பெண்கள், குழந்தைகளும் உயிரிழந்து வருகின்றனர்.

போதிய உணவு, மருந்து இன்றி பலர் அவதிப்படுகின்றனர். சிலர் குடும்பம் குடும்பமாக பாதுகாப்பான இடம் தேடி ஓடுகின்றனர். நாடு முழுவதுமே வன்முறையும் கண்மூடித்தனமான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. எனவே அடுத்த சில நாட்களில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது

.[/size]

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=16875:--------19000--&catid=290:world&Itemid=461[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.