Jump to content

Nature இன் சட்ட வெற்றியும்.. அறிவியல் ஊடக சுதந்திரமும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

_56669255_nature-cover.jpg

புகழ்பெற்ற அறிவியல் journal (சஞ்சிகை) லான நேச்சர் (Nature) இல் 2008ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரைக்கு எதிராக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு பொறுப்பானா பேராசிரியர் தொடுத்திருந்த.. குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில் இன்று லண்டனில்.. தீர்ப்பளிக்கப்பட்ட போது.. நேச்சரின் செயல் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி.. எகிப்து நாட்டு இயற்பியல் பேராசிரியர் தன் பாட்டுக்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுருந்ததோடு.. தனக்கு பிரசித்தி பெற்ற அறிவியல் professional bodies மற்றும் நிறுவனங்களில் பேராரிசியர் அங்கத்துவமும் தொடர்பும் இருந்ததாக குறிப்பிட்டிருந்துள்ளார்.அத்துடன் இவரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்.. போதிய சுயாதீனா சரிபார்ப்பையும் (independently checked).. மற்றும் பாண்டித்திய மீள்பார்வைகளையும் (peer reviews) கொண்டிருக்கவில்லை.

இதனை சுட்டிக்காட்டி நேச்சர் வெளியிட்ட கட்டுரை தொடர்பிலேயே பேராசிரியர் அதிருப்தி வெளியிட்டிருந்ததோடு தன் நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கப்பட்டுள்ளதாக.. நேச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தார்.

இந்த வெற்றி.. நேச்சருக்கு சாதகமாக உள்ள போதும்.. அறிவியலாளர்கள் தங்கள் கருத்தை சுயாதீனமாக வெளியிடுவதில் உள்ள சுதந்திரத்திற்கு.. தடைகளாக அமையலாம் என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் இது விடயமாக பிரித்தானிய நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டத்திருத்தத்தில் இன்னும் சரியான மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தல்கள் கிளம்பியுள்ளன.

http://www.nature.co...ll/456432a.html

http://www.bbc.co.uk...onment-15889634

http://www.bbc.co.uk...onment-18743472

===============================

நம்ம யாழிலும் மற்றும் ஒரு சில புலம்பெயர் தமிழ் ஊடகங்களிலும்.. சிலர் சகட்டு மேனிக்கு தனிநபர்கள்.. ஸ்தாபனங்கள்.. நிறுவனங்கள்.. அமைப்புக்கள்... பற்றி.. எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ஐயா பார்த்து.. உங்கள் மீது யாரும்.. sue பண்ண வாய்ப்புள்ளது. :):icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.