Jump to content

தமிழ் கடை முதலாளிக்கும், அவரது மனைவிக்கும் 14 மாதங்கள் சிறைத் தண்டனை


Recommended Posts

தமிழ் கடை முதலாளி அல்பிரேட் ஜீவராஜா, அவரது மனைவி ஆன் ஜீவராஜாவுக்கும் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் 14 மாதங்கள் சிறைத் தண்டனை Norwich Crown Court ல் வழங்கப்பட்டது.

இவர்களின் வாடிக்கையாளரான 73 வயதுடைய முதியவர் (Gwyn Badham-Davies) ஒருவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் லாட்டரி ஐந்து இலக்கங்களுடன் £156 659 தொகையக்கு அதிஷ்டசாலியானார். அவர் அல்பிரேட் ஜீவராஜா என்பவரின் கடையில் தனது அதிஷ்டச் சீட்டுடன் சென்றுள்ளார். அங்கு கடைக்காரரின் மனைவியிடம் (ஆன் ஜீவராஜா) தனது சீட்டைக் கொடுத்துள்ளார். ஆனும் சீட்டை அந்த வயதான வாடிக்கையாளரிடம் இருந்து பெற்று, அவர் வெறும் £10 மட்டுமே வென்றதா சொல்லி காசைக் கொடுத்து அனுப்பி வைத்து விட்டு அந்தத் தொகையை ( £156 659) தாம் பெற்றுக் கொள்ள முற்பட்டு இருக்கிறார்.

ஒரு வாரத்திற்குப் பிறகு, தாமே அந்தச் சீட்டை வாங்கியதாக £156 659 தொகைக்கு உரிமை கோரியுள்ளார்கள். அதில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அந்த லாட்டரி சீட்டு எங்கே வாங்கியது என்று உரிமை கோரியவர்களால் திட்டவட்டமாகக் கூறமுடியாமல் போய்விட்டது. 14 மாதச் சிறைத்தண்டனை முடியும் வரை இவர்களின் 10 வயது மகளை அவர்களது உறவினர்கள் பராமரித்துக் கொள்ளுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Gwyn Badham-Davies க்கு கிடைக்க வேண்டிய முழுத்தொகையும் அவருக்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மூலம்... http://www.dailymail...y-winnings.html

Link to comment
Share on other sites

£156 659 தொகையக்கு என்ன வான்கலாம் சார்?????? வீடு வான்க கானுமோ :unsure:

அப எனகும் இபிடிதான் நடன்ததோ????????

:( :( :(

வீடு வாங்கலாமோ இல்லையோ... ஒரு நல்ல தமிழ் வாத்தியாரை வைத்து அழகான தமிழைத் தெளிவாக எழுதக் கற்றுக் கொள்ளலாம்... (சும்மா பகிடிக்குக் கோவிக்கக் கூடாது... :D)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடு வாங்கலாமோ இல்லையோ... ஒரு நல்ல தமிழ் வாத்தியாரை வைத்து அழகான தமிழைத் தெளிவாக எழுதக் கற்றுக் கொள்ளலாம்... (சும்மா பகிடிக்குக் கோவிக்கக் கூடாது... :D)

நித்திரை கொள்பவரை எழுப்பமுடியும்

நித்திரைபோல் நடிப்பவரை....???? :lol::icon_idea: :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றரை லட்சம் பவுண்ஸ் பரிசு பெற்றவருக்கு, வெறும் பத்து பவுண்ஸ்சுடன், அல்வா கொடுக்க நினைத்திருக்கிறார்களே..... :o

நல்ல காலம், அந்த வயது போன தம்பதிகள் உசாராக இருந்ததால்.... குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க முடிந்தது.

இப்படிப் பட்டவர்களின் செய்கையால்.... தமிழ்க் கடைக்கே வெள்ளைக்காரன் வராமல் விடப் போகின்றான்.

Link to comment
Share on other sites

ஒரு வயதான உழைப்பாளியை ஏமாற்றி உள்ளார்கள். கேவலமானவர்கள்.

இன்று தினசரியிலும் வந்தது. இவர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ தமிழ் ஆக்கள் காசு பார்க்கிறதில கெட்டிக்காரர்கள். கள்ள மட்டை என்றால் என்ன.. சீட்டு என்றால் என்ன.. இப்படி களவெடுக்கிறது என்றால் என்ன.. உதுகளால இப்ப போற இடமெல்லாம்.. சட்டதிட்டங்களும் கடுமையாகிட்டு வருகுது.

முந்தி எல்லாம் வங்கிக் கணக்குத் திறக்க.. சும்மா ஒரு ஆள் அடையாளம் இருந்தா போதும். இப்ப அதைக் கொண்டுவா.. இதைக் கொண்டுவா.. இரண்டு கிழமை பொறு.. கடவுளே. நம்ம சனத்தில சிலதுகள் செய்யுற கூத்தால எல்லோருக்கும் பாதிப்பு..!

இதுகள் திருந்துங்கள்..என்று நினைக்கிறீங்க...???! :):(

Link to comment
Share on other sites

14 மாதத் தண்டனை போதாது. இவர்களின் பிள்ளை பாவம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.