Jump to content

ஸ்ரீலங்கா எதிர் பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்


Recommended Posts

மஹேலவை கட்டுப்படுத்த வேண்டும்: மிஸ்பா
ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014

இலங்கை கிரிக்கெட் அணியின் மஹேல ஜெயவர்தெனவின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்தினாலேயே இலங்கை அணியை வெற்றி பெற முடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

 

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த வேளையில் பாகிஸ்தான் கராச்சியில் வைத்து இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் இலங்கையில் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் அவர்களின் துடுப்பாட்ட வீரர்களை முழுமையாக கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்ளவேண்டும். அதில் முக்கியமானவர் மஹேல ஜெயவர்தென. அவர் மீது எனக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. அவர் கிரிக்கெட்டில் நல்ல சாதனைகளை செய்துள்ள ஒருவர்.


ஆனால் நாங்கள் அங்கே வெல்வதற்காக செல்கின்றோம். அவர்களின் சிரேஷ்ட வீரர்கள் சிறப்பாக விளையாடுவதை தடுக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். இந்த தொடர் இலகுவாக எங்களுக்கு அமையாது. சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/120424-2014-08-03-02-31-44.html

Link to comment
Share on other sites

டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிப்போம்: மிஸ்பா உல் ஹக்
 

 

இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தானை நம்பர் ஒன் நிலைக்கு இட்டுச் செல்வதே இலக்கு என்று கூறியுள்ளார்.

 

தற்போது டெஸ்ட் தரவரிசையில் 3ஆம் இடத்தில் உள்ள பாகிஸ்தான், 2006ஆம் ஆண்டு 2ஆம் இடம் வரை உயர்ந்தது. ஆனால் நம்பர் ஒன் இடத்தை இதுவரை பிடித்ததில்லை.

இலங்கையை இந்தத் தொடரில் வீழ்த்தி பிறகு அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் வென்று பாகிஸ்தானை முதலிடத்திற்கு இட்டுச் செல்வோம் என்கிறார் மிஸ்பா.

"முதலிடத்தைப் பிடிக்க எங்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை தவறவிடப்போவதில்லை. நீண்ட நாட்கள் கழித்து டெஸ்ட் போட்டியில் விளையாடுவதால் அனுகூலமும் இருக்கிறது பிரதிகூலமும் இருக்கிறது.

 

இடைவெளி இருந்ததால் உடற்தகுதி உள்ளிட்ட விவகாரங்களில் நல்ல பயிற்சி செய்தோம், பிறகு உத்திரீதியாக சிறிது கவனம் செலுத்தினோம். இப்போதைக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி கால்லே மைதானத்தில் தொடங்கும் முதல் டெஸ்ட் பற்றியே கவனம் உள்ளது” என்றார் மிஸ்பா.

பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் கூறுகையில், “2015 உலகக் கோப்பையே இலக்கு, அதற்கு முன்னால் இலங்கைக்கு எதிரான தொடர் பிறகு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது இவற்றில் வெற்றி பெறுவதே நோக்கம்.

 

இலங்கைக்கு எதிராக கடந்த தொடரில் கடைசி நாளில் 302 ரன்கள் வெற்றி இலக்கைத் துரத்தியதிலிருந்து அணி வீர்ர்கள் ஊக்கம் பெற்றுள்ளனர்.

அதே பாதையில், தென் ஆப்பிரிக்காவை முன் உதாரணமாகக் கொண்டு இந்த்த் தொடரையும் கைப்பற்றுவோம்” என்றார்.

பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளராக ஜிம்பாவே அணியின் முன்னாள் வீரர் கிராண்ட் ஃபிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D/article6280771.ece


 

Link to comment
Share on other sites

சங்காவும் மஹேலவுமே எமது இலக்கு : மிஸ்பா

இலங்கைக்கு எதிராக இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரில் வெற்றி பெறவேண்டுமாயின் அனுபவ வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரை வீழ்த்துவதே எமது இலக்கு என பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இது தொடர்பில் பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் கருத்துதெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அணியுடன் இடம்பெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அனுப வீரர்களான ஜெயவர்தனே, சங்கக்கரா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இதனை எமது  அணி பந்துவீச்சாளர்களிடம் வலியுறுத்தி உள்ளேன் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/articles/2014/08/04/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE

Link to comment
Share on other sites

இலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை புதன்கிழமை காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.


இதில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, அவரது காலில் ஏற்பட்ட உபாதை குணமாகாததால் அவர் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் பங்குபற்ற மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் இலங்கை அணியின் அனுபவ வீரர் மஹேல ஜெயவர்தன டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2014/08/05/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

 

 

 

Link to comment
Share on other sites

இலங்கை - பாகிஸ்தான் 17ஆவது டெஸ்ட் தொடர் காலியில் இன்று ஆரம்பம்
2014-08-06 11:05:14

 

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 17 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகின்றது. இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடர் கூல் அண்ட் கூல் கிண்ணத்திற்காக நடைபெறவுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அந் நாட்டு மண்ணில் முதல் தடவையாக வெற்றிகொண்ட (1 - 0) பின்னர் கடந்த மாதம் தென் ஆபிரிக்காவுடனான தொடரை சீரற்ற கால நிலையால் 1 - 1 என சமப்படுத்தத் தவறிய இலங்கை அணி, பாகிஸ்தானுடான டெஸ்ட் தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்கின்றது.


அதேவெளை, தென் ஆபிரிக்கா (அக். 2013), இலங்கை (டிச. 2013 - ஜன. 2014) ஆகிய நாடுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடர்களை நடுநிலையான ஐக்கிய அரபு இராச்சிய மைதானங்களில் 1 க்கு 1 என சமப்படுத்திக்கொண்ட பாகிஸ்தான் சுமார் 8 மாதங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக டெஸ்ட் தொடர் ஒன்றில் விளையாடவுள்ளது.

இந்த இரண்டு நாடுகளும் 1982 முதல் 2014 வரை 16 டெஸ்ட் கிரிக்கட் தொடர்களில் 46 போட்டிகளில் சந்தித்துள்ளன. அவற்றில் 17இல் பாகிஸ்தானும் 11இல் இலங்கையும் வெற்றிபெற்றுள்ளன. 18 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளன.


இந்த இரண்டு அணிகளையும் பொறுத்தமட்டில் பாகிஸ்தானிலும் பார்க்க அனுபவம் வாய்ந்த வீரர்கள் இலங்கை அணியில் இடம்பெறுவதை அவதானிக்கலாம்.

147 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவசாலியான மஹேல ஜயவர்தன 34 சதங்கள், 48 அரைச் சதங்களுடன் 11,671 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளார். 126 போட்டிகளில் விளையாடியுள்ள குமார் சங்கக்கார 36 சதங்கள், 50 அரைச் சதங்களுடன் மஹேலவை விட 6 ஓட்டங்கள் குறைவாக 11,665 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் 42 போட்டிகளில் 4 சதங்கள், 17 அரைச் சதங்களுடன் 2856 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.


இந்த வருடத்தில் மாத்திரம் குமார் சங்கக்கார 1163 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் 1003 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 860 ஓட்டங்களையும் கௌஷால் சில்வா 728 ஓட்டங்களையும் பெற்று தத்தமது துடுப்பாட்ட ஆற்றல்களை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் அனைவருமே இவ் வருடம் இதுவரை தலா 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

தனது கடைசி டெஸ்ட் தொடரில் விளையாடுவதாக அறிவித்துள்ள மஹேல ஜயவர்தன இந்தத் தொடர் முடிவில் கௌரவத்தோடு விடைபெறும் வகையில் தனது துடுப்பாட்ட ஆற்றலை வெளிப்படுத்துவார் என எதிர்பாரக்கப்படுகின்றது.


பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 55 டெஸ்ட் போட்டிகளில் 237 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றியுள்ளதுடன் இவ் வருடம் 8 போட்டிகளில் 37 விக்கெட்களைக் கைப்பற்றி இவ் வருடம் அதிக விக்கட்களைக் கைப்பற்றியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர் இன்றைய போட்டியில் பிரதான சுழல் பந்துவீச்சாளராக இடம்பெறவுள்ளார்.

பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில் நான்கு அனுபசாலிகளே இடம்பெறுகின்றனர். யூனிஸ் கான், அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக், சயீத் அஜ்மால், அஸ்ஹர் அலி ஆகியோரே அந்த நால்வராவர்.


யூனிஸ் கான் 89 டெஸ்ட் போட்டிகளில் 23 சகதங்கள், 28 அரைச் சதங்களுடன் 7,399 ஓட்டங்களையும் மிஸ்பா உல் ஹக் 46 போட்டிகளில் 5 சதங்கள், 25 அரைச் சதங்களுடன் 3218 ஓட்டங்களையும் அஸ்ஹர் அலி 32 போட்டிகளில் 5 சதங்கள், 15 அரைச் சதங்களுடன் 2192 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

பந்துவீச்சில் சயீத் அஜ்மால் 33 போட்டிகளில் 169 விக்கட்களையும் அப்துர் ரஹ்மான் 20 போட்டிகளில் 95 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.


குழாம்கள்

இலங்கை: ஏஞ்சலோ மெத்யூஸ் (அணித் தலைவர்), லஹிரு திரிமான்ன (உதவி அணித்தலைவர்), கௌஷால் சில்வா, உப்புல் தரங்க, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, ஏஞ்சலோ மெத்யூஸ், நிரோஷன் டிக்வெல்ல, கித்ருவன் வித்தானகே, டில்ருவன் பெரேரா, ஷமிந்த எரங்க, தம்மிக்க பேரேரா, நுவன் ப்ரதீப், சாகன்க வெலகெதர.


பாகிஸ்தான்: மிஸ்பா உல் ஹக் (அணித் தலைவர்), அப்துர் ரெஹ்மான், அஹமத் ஷேஹ்ஸாத், அசாத் ஷஃவிக், அஸ்ஹர் அலி, ஜுனைத் கான், குரம் மன்சூர், மொஹமத் தல்ஹா, ரஹாத் அலி, சயீத் அஜ்மால், சார்ஃவ்ராஸ் அஹமத், ஷான் மசூத், உமர் அக்மால், வஹாப் ரியாஸ், யூனுஸ் கான்.

 

சற்று முன்னர் ஆரம்பமான இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6469#sthash.p4GtbjGy.dpuf

Link to comment
Share on other sites

முதல் டெஸ்ட்: யூனிஸ் கான் அடித்த சதத்தினால் மீண்டது பாகிஸ்தான்

கால்லேயில் இன்று தொடங்கிய இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்துள்ளது.

 

யூனிஸ் கான் 133 ரன்களுடனும், ஆசாத் ஷபீக் 55 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். யூனிஸ் கான் எடுக்கும் 24வது டெஸ்ட் சதமாகும் இது. இன்சமாம் உல் ஹக் 25 சதங்களை எடுத்ததே பாகிஸ்தான் டெஸ்ட் சாதனையாக இருந்து வருகிறது.

 

டாஸ் வென்ற 40 வயது கேப்டன் மிஸ்பா உல் ஹக் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். ஆனால் அது வினையாக முடிய 3 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் என்று பாகிஸ்தான் தடுமாறிய போது யூனிஸ் கானின் திறமையை நம்பியிருந்தது அந்த அணி.

 

90வது டெஸ்ட் போட்டியில் ஆடும் யூனிஸ் கான் பாகிஸ்தான் அணி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த போது களமிறங்கினார். மிஸ்பா வழக்கம்போல் நிதானமாக ஆடி 31 ரன்களை எடுக்க இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்காக 100 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் மிஸ்பா, ஹெராத் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

 

அதன் பிறகு ஆசாத் ஷபிக் நன்றாக விளையாட யூனிஸ் கான் சதமெடுக்க, இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் இதுவரை 105 ரன்களைச் சேர்த்தனர்.

யூனிஸ் கான் 228 பந்துகளை இதுவரை சந்தித்துள்ளார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரை அவர் அடித்துள்ளார். ஆனால் அவர் 59 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்பின்னர் பெரேராவிடம் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார். இந்த எல்.பி. தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்ய அதில் பந்து ஸ்டம்ப்களுக்கு மேல் சென்றது தெரியவந்தது. இதனால் நாட் அவுட் என்று தீர்ப்பு மாற்றியமைக்கப்பட்டது.

 

முன்னதாக இந்த 2 டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு அறிவிக்கவிருக்கும் ஜெயவர்தனே மைதானத்தில் களமிறங்கியபோது பள்ளிக் குழந்தைகள் புடைசூழ இறங்கினார். பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

147 டெஸ்ட் போட்டிகளில் 11,671 ரன்களை எடுத்து அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 6ஆம் இடத்தில் உள்ளார் ஜெயவர்தனே.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article6288311.ece

 

Link to comment
Share on other sites

பாக்., அணி ரன் குவிப்பு
ஆகஸ்ட் 07, 2014.

காலே: இலங்கை அணிக்கு எதிரான காலே டெஸ்டில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 451 ரன்கள் எடுத்தது.

இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 261 ரன்கள் எடுத்திருந்தது. யூனிஸ் கான் (133), ஆசாத் சபிக் (55) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

‘டெயிலெண்டர்கள்’ உதவி:

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஆசாத் சபிக் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். யூனிஸ் கான், சர்பராஸ் அகமது இணைந்து உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பின் பெரேரா சுழலில் 177 ரன்கள் எடுத்த யூனிஸ் கான் அவுட்டானார். நிதானம் காட்டிய சர்பராஸ் அகமது (55), அப்துர் ரெஹ்மான் (50) அரைசதம் அடித்து திரும்பினார்.

சயீத் அஜ்மல் 12 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 451 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. இலங்கை சார்பில் சுழற்பந்துவீச்சாளர் பெரேரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

 

தரங்கா ஏமாற்றம்:

அடுத்து முதல் இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு தரங்கா (19) அதிர்ச்சி கொடுத்தார். பின் இணைந்த கவுசல் சில்வா, சங்ககரா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தியது.

இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து, 352 ரன்கள் பின் தங்கியிருந்தது. கவுசல் சில்வா (38), சங்ககரா (36) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/08/1407431137/YounisKhanpakistan.html

 

Link to comment
Share on other sites

சங்ககரா அசத்தல் சதம்

ஆகஸ்ட் 08, 2014.

காலே: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையின் சங்ககரா சதம் கடந்தார்.

இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி காலேயில் நடக்கிறது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 451 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது.

இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. சில்வா, சங்ககரா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்தது. சில்வா அரை சதம்(64) எட்டினார். பின் ஜெயவர்தனா தனது கடைசி டெஸ்ட் தொடரில் களமிறங்கினார். இவருடன் கைகோர்த்த சங்ககரா அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது மழை வந்து தொல்லை தந்தது. சங்ககரா டெஸ்ட் அரங்கில் 37வது சதத்தை எட்டினார். மழை மீண்டும் குறுக்கிட மூன்றாவது நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்து, 199 ரன்கள் பின்தங்கியிருந்தது. சங்ககரா (102), ஜெயவர்தனா (55) அவுட்டாகாமல் இருந்தனர்.

4

இலங்கையின் சங்ககரா தனது 37வது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம், டெஸ்ட் போட்டியில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் 4வது இடத்தை பகிர்ந்து கொண்டார். முதல் மூன்று இடங்களில் இந்தியாவின் சச்சின் (51), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (45), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (41) உள்ளனர். இவர்கள் மூவரும் ஓய்வு பெற்றவர்கள்.

5

நேற்றைய ஆட்டத்தில் இலங்கையின் சங்ககரா பாகிஸ்தானுக்கு எதிராக 10வது சதம் விளாசினார். இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்தார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் (19, எதிர்–இங்கி.,), இந்தியாவின் கவாஸ்கர் (13, எதிர்–வெ.இண்டீஸ்), இங்கிலாந்தின் ஜாக் ஹாப்ஸ் (12, எதிர்–ஆஸி.,), இந்தியாவின் சச்சின் (11, எதிர்–ஆஸி.,) உள்ளனர்.

http://sports.dinamalar.com/2014/08/1407512244/Sangakkarasrilanka.html

Link to comment
Share on other sites

சங்ககாரா சதம்; இலங்கை பதிலடி
 

 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 80 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்துள்ளது. மழை காரணமாக 3-வது நாளில் 46 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இலங்கை இன்னும் 199 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

 

இலங்கையின் காலே நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 140.5 ஓவர்களில் 451 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக யூனிஸ்கான் 177 ரன்கள் குவித்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 34 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. ஜே.கே.சில்வா 38, சங்ககாரா 36 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

 

3-வது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் ஜே.கே.சில்வா 114 பந்துகளிலும், சங்ககாரா 123 பந்துகளிலும் அரைசதம் கண்டனர். இலங்கை அணி 144 ரன்களை எட்டியபோது இந்த ஜோடியைப் பிரித்தார் முகமது தல்ஹா. சில்வா 140 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதையடுத்து சங்ககாராவுடன் இணைந்தார் ஜெயவர்த்தனா. இவர் இந்த டெஸ்ட் தொடரோடு ஓய்வு பெறவிருப்பதால் பிரம்மாண்ட வரவேற்புக்கு மத்தியில் களம்புகுந்தார். இருவரும் சிறப்பாக ஆட, மதிய உணவு இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது இலங்கை.

 

இதன்பிறகு இருமுறை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கியபோது சிறப்பாக ஆடிய ஜெயவர்த்தனா 91 பந்துகளில் அரைசதம் கண்டார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 49-வது அரைசதமாகும்.

 

“டிரிங்க்ஸ் பிரேக்கிற்கு” பிறகு தொடர்ந்து அபாரமாக ஆடிய சங்ககாரா 216 பந்துகளில் சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 37-வது சதம் இது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக 10 சதங்கள் அடித்த 7-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார் சங்ககாரா.

 

இதன்பிறகு மோசமான வானிலை காரணமாக 5 நிமிடங்களுக்கு முன்னதாக தேநீர் இடைவேளை விடப்பட்டது. இதையடுத்து கனமழை பெய்ததைத் தொடர்ந்து 3-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இலங்கை அணி 80 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்துள்ளது. சங்ககாரா 218 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 102, ஜெயவர்த்தனா 109 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.

 

சங்ககாரா-ஜெயவர்த்தனா ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த ஜோடி டெஸ்ட் போட்டியில் 18-வது முறையாக 100 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கிறது. சச்சின்-திராவிட் ஜோடி 20 முறை 100 ரன்களுக்கு மேல் குவித்துள்ளதே இன்றளவும் உலக சாதனையாக உள்ளது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF/article6298201.ece

 

 

 

 

Link to comment
Share on other sites

சங்ககரா இரட்டை சதம்: இலங்கை முன்னிலை

 

காலே: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் சங்ககரா இரட்டை சதம் கடந்தார்.

இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி காலேயில் நடக்கிறது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 451 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்தது. 

 

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. ஜெயவர்தனா (59) கூடுதலாக 4 ரன்கள் மட்டும் எடுத்தார். அடுத்து வந்த மாத்யூஸ் 91 ரன்களில் அவுட்டானார். அபாரமாக ஆடிய சங்ககரா, டெஸ்ட் அரங்கில் தனது 10வது இரட்டை சதம் கடந்தார். இவர், அப்துர் ரெஹ்மான் பந்தில் 221 ரன்களில் அவுட்டானார். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 533 ரன்கள் எடுத்து,  ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் 82 ரன்கள் முன்னிலை பெற்றுது.

 

பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அஜ்மல் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணிக்கு மன்சூர் (3) ஏமாற்றினார். நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 4 ரன்கள் எடுத்து, 78 ரன்கள் பின்தங்கியிருந்தது. ஷெகாதத் (1), சயீத் அஜ்மல் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

இரண்டாவது இடம்

டெஸ்ட் அரங்கில் அதிக இரட்டை சதம் அடித்தவர்கள் பட்டியலில் சங்ககரா(10) இரண்டாவது இடத்தை பெற்றார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் (12) பிராட்மேன் உள்ளார். மூன்றாவது இடத்தில் வெஸ்ட் இண்டீசின் லாரா (9) உள்ளார். இந்தியாவின் சேவக், சச்சின் தலா 6 இரட்டைச்சதம் அடித்துள்ளனர்.

 

முதலிடம்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கையின் சங்ககரா நேற்று 221 ரன்கள் குவித்தார். இதன் மூலம், இந்த அணிக்கு எதிராக அதிக ரன்கள் (2707) எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இரண்டாவது, மூன்றாவது இடங்கள் முறையே இந்தியாவின் கவாஸ்கர் (2089), ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் (1666) உள்ளனர்.

 

நான்காவது இடம்

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கையின் சங்ககரா, டெஸ்ட் அரங்கில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தை அடைந்தார். இதுவரை 18 முறை இச்சாதனையை எட்டியுள்ளார். இந்தியாவின் சச்சின் (20), வெஸ்ட் இண்டீசின் லாரா (19), ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் (18) முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

 

http://sports.dinamalar.com/2014/08/1407603791/Sangakkarasrilanka.html

 

Link to comment
Share on other sites

ரங்கனா ஹெராத் அபாரம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை

 

கால்லேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 5ஆம் நாளான இன்று சற்றும் எதிர்பார்க்க முடியாத வகையில் பாகிஸ்தானை இலங்கை வெற்றி பெற்றது.

இலங்கையின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்ற பாகிஸ்தான் தன் 2வது இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து இன்று 21 ஓவர்கள் மீதமிருந்தது. அதில் இலங்கை 99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை தோன்றியது. இலங்கை 99 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

 

இலங்கை வெற்றி ரன்களை எடுத்து முடித்தவுடன் கனமழை கொட்டத் தொடங்கியது. பாகிஸ்தானுக்கு இயற்கை அனுகூலமும் இல்லாமல் போய் விட்டது.

நேற்றைய ஆட்ட முடிவில் 4 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது பாகிஸ்தான். இதனையடுத்து ஆட்டம் நிச்சயம் டிராவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இலங்கை கேப்டன் ஆஞ்சேலோ மேத்யூஸ் வேறு முடிவெடுத்தார். இரவுக்காவலனாக களமிறங்கிய சயீத் அஜ்மல் 4 ரன்களில் தம்மிக பிரசாத்திடம் அவுட் ஆகி சரிவைத் தொடங்கி வைத்தார். அடுத்து அகம்ட் ஷேஜாத் பெரெராவிடம் எல்.பி.ஆக, முதல் இன்னிங்ஸ் சத நாயகன் யூனிஸ் கான் 13 ரன்களில் ஹெராத்திடம் பவுல்டு ஆக பாகிஸ்தான் 55/4 என்று சரிவு கண்டது.

 

அதன் பிறகு அசார் அலி, மிஸ்பா இணைந்து ஸ்கோரை 111 ரன்களுக்கு உயர்த்திய போது அசர் அலியும் ஹெராத்திடம் அவுட் ஆனார். அடுத்த ஓவர் முதல் பந்தில் மிஸ்பா 28 ரன்களுக்கு பெரேராவிடம் எல்.பி. ஆனார்.

அடுத்தடுத்து ஆசாத் ஷபிக், அப்துர் ரஹ்மான், மொகமத் தால்ஹா என்று விக்கெட்டுகள் சரிய, விக்கெட் கீப்பர் சர்பராஸ் அகமட் ஒரு முனையில் 52 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். ஜுனைத் கானை ஹெராத் வீழ்த்தினார்.

ஹெராத் 30.2 ஓவர்களில் 11 மைடன்களுடன் 48 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

இதனையடுத்து இலங்கைக்கு வெற்றி இலக்கு 99 ரன்கள் ஆனது. கையிலிருக்கும் ஓவர்கள் 21 மட்டுமே. ஆனால் இலங்கை அதிரடி ஆட்டம் ஆடி 16.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. ஜெயவர்தனே 26 ரன்களையும், மேத்யூஸ் அதிரடி 25 ரன்களையும் எடுத்தனர். ஜுனைத் கான் ஓவர் சாத்தி எடுக்கப்பட்டது. 8 ஓவர்களில் அவர் 55 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஹெராத் ஆட்ட நாயகன் விருதைப்பெற்றார். இலங்கை 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article6301268.ece

 

Link to comment
Share on other sites

மஹேல ஆனந்த கண்ணீர், ஹேரத் அபார பந்து வீச்சு: பரபரப்பான போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கட்களால் வீழ்த்தியது இலங்கை

பாகிஸ்தானுக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் 7 விக்கட்களால் இலங்கை அணி அபார வெற்றியீட்டியது. இதனையடுத்து மஹேல ஜயவர்தன வெற்றி சந்தோசத்தில் ஆனந்த கண்ணீர் விட்டார்.
சீரற்ற காலநிலை காரணமாக மூன்றாவது நாள் ஆட்டம் சுமார் ஒரு மணித்தியாலம் தடைப்பட்டதாலும் இரண்டு அணிகளும் தத்தமது முதலாவது இன்னிங்ஸ்களில் தலா 450க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்ததாலும் இப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என்றே நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின்போது கருதப்பட்டது.

ஆனால் போட்டியின் கடைசி நாளான இன்று பாகிஸ்தானின் பலம்வாய்ந்த துடுப்பாட்ட வரிசையை ஊடறுத்த ரங்கன ஹேரத் ஆறு விக்கட்களைக் கைப்பற்றி இலங்கையின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த வெற்றியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் இரட்டைச் சதம் குவித்த குமார் சங்கக்கார, 9 ஓட்டங்களால் சதத்தைத் தவறவிட்ட ஏஞ்சலோ மெத்ய+ஸ், அரைச் சதம் குவித்த கௌஷால் சில்வா, தனது கடைசி டெஸ்ட் தொடரில் விளையாடும் முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன ஆகியோரின் பங்களிப்பும் இருப்பதை மறுக்கலாகாது.

போட்டியின் நான்காம் நாளன்று தனது முதலாவது இன்னிங்ஸை 533 ஓட்டங்களுக்கு 9 விக்கட்கள் என்ற நிலையில் நிறுத்திக்கொண்ட இலங்கை அணி, அன்றைய தினம் ஆட்ட நேர முடிவின்போது பாகிஸ்தானின் இரண்டாவது இன்னிங்ஸில் 4 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டைக் கைப்பற்றியிருந்தது.

போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் சார்பாக முதலாவது இன்னிங்ஸில் சதம் குவித்த ய+னிஸ் கான் பிரகாசிப்பார் என பெருவாரியாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரங்கன ஹேரத் அவரது விக்கட்டை நேரடியாகப் பதம் பார்ததன் மூலம் பாகிஸ்தான் அணி ஆட்டம் காணத் தொடங்கியது.

இன்றைய பகல்போசன இடைவேளையின்போது 4 விக்கட்களை இழந்து 66 ஓட்டங்களைப் பெற்றிருந்த பாகிஸ்தான், தேநீர் இடைவேளைக்கு சற்றுப் பின்னர் சகல விக்கட்களையும் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் மிகத் துல்லியமாக செயல்பட்ட ரங்கன ஹேரத் 11 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 30.2 ஓவர்கள் பந்துவீசி 48 ஓட்டங்களுக்கு 6 விக்கட்களைக் கைப்பற்றி பாகிஸ்தானியரை அதிரவைத்தார்.

ரங்கன ஹேரத்துக்கு பக்கபலமாக பந்துவீசிய டில்ருவன் பெரேரா 68 ஒட்டங்களுக்கு 2 விக்கட்களைக் கைப்பற்றினார்.

பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் எதிர்த்தாடுவதை விடுத்து தடுத்தாட விளைந்ததன் காரணமாகவே விக்கட்களை இழந்தனர்.

எட்டாம் இலக்க வீரர் சார்ஃப்ராஸ் அஹமத் நிதானத்துடனும் உறுதியுடனும் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களைப் பெற்றார்.
இவரை விட அஸ்ஹர் அலி 41 ஓட்டங்களையும் மிஸ்பா உல் ஹக் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

99 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அடைவதற்கு சீரற்ற கால நிலையும் போதிய வெளிச்சமின்மையும் தடையாக வந்து விடுமோ என எண்ணிய இலங்கை அணியினர் சிரேஷ்ட வீரர் மஹேல ஜயவர்தனவை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இரண்டாவது இன்னிங்ஸில் களமிறக்கியது.

ஆரம்ப வீரர்களான மஹேல 26 ஓட்டங்களையும் உப்புல் தரங்க 12 ஓட்டங்களையும் தொடர்ந்து குமார் சங்கக்கார 21 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். எனினும் ஏஞ்சலோ மெத்ய+ஸ் (25 ஆ.இ.), கித்ருவன் வித்தானகே (11 ஆ.இ.) ஆகிய இருவரும் 4.4 ஓவர்கள் மீதமிருக்க இலங்கையின் வெற்றியை உறுதி செய்தனர்.
ரங்கன ஹேரத் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது கடைசியுமான டெஸ்ட் போட்டி எஸ். எஸ். சி. மைதானத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்மாகவுள்ளதுடன் மஹேல ஜயவர்தனவின் பிரியாவிடை டெஸ்டாகவும் அமையவுள்ளது.

 

 

 

http://www.virakesari.lk/articles/2014/08/10/%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-7

Link to comment
Share on other sites

இலங்கை - பாகிஸ்தான் 2 ஆவது டெஸ்ட் நாளை ஆரம்பம் : மஹேலவுக்கு இறுதி டெஸ்ட்

இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் நாளை கொழும்பில் ஆரம்பமாகின்றது.

காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை, பாகிஸ்தானை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரான மஹேல ஜெயவர்தன, பாகிஸ்தானுக்கு எதிராக கொழும்பில் நாளை ஆரம்பமாகவுள்ள 2ஆவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

இது அவரது இறுதி டெஸ்ட் போட்டி என்பதால் அவரை கௌரவிப்பதற்கான அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டடுள்ளன.

17 ஆண்டுகள் இலங்கை அணிக்காக சிறந்த பங்களிப்பை வளங்கிய மஹேலவை வழியனுப்பி வைக்க இலங்கை கிரிக்கெட் சபை சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
1997ஆம் ஆண்டு கொழும்பில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் தனது 20ஆவது வயதில் அறிமுகமான ஜெயவர்தன, சொந்த மண்ணிலேயே தனது டெஸ்ட் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்.

இன்னொரு விசேட அம்சம் என்னவென்றால் இதே ஆகஸ்ட் மாதம் 14ஆம் 18ஆம் திகதி 1948ஆம் ஆண்டில் கிரிக்கெட்டின் பிதாமகன் அவுஸ்திரேலியாவின் டொன் பிராட்மன் டெஸ்டில் ஆடிய கடைசி நாட்கள் ஆகும்.

ஜெயவர்தன 148 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 சதத்துடன் 11,756 ஓட்டங்களையும் 420 ஒரு நாள் போட்டிகளில் 16 சதத்துடன் 11,681 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா), ரிக்கி பொண்டிங் (அவுஸ்திரேலியா), கலீஸ் (தென்னாபிரிக்கா), சங்கக்கரா (இலங்கை) ஆகியோர் வரிசையில், ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி ஆகிய இரண்டு வகையான கிரிக்கெட்டிலும் 11 ஆயிரம் ஓட்டங்களுக்கு மேல் பெற்ற 5ஆவது வீரர் ஜெயவர்தன ஆவார்.

தனது ஓய்வு குறித்து மஹேல கருத்துத் தெரிவிக்கையில்,
அணியில் இளம் வீரர்கள் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மெத்தியூசும், அணித்தலைவர் பணியில் தன்னை வலுவாக நிலை நிறுத்திக் கொண்டுவிட்டார்.

எனவே அணியில் எனது பணி நிறைவடைந்து விட்டது. இலங்கை அணிக்காக 17 ஆண்டுகள் விளையாடியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும்.

ஓய்வு முடிவை எளிதாக எடுத்து விடவில்லை. ஆனால் விலகுவதற்கு இதுவே சரியான நேரம் என நம்புகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

http://www.virakesari.lk/articles/2014/08/13/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D

 

Link to comment
Share on other sites

வெற்றிவாகையுடன் மஹேலவுக்கு விடையளிக்க உறுதிபூண்டுள்ளோம் : மெத்யூஸ்

 

சிரேஷ்ட வீரர் மஹேல ஜய­வர்­த­ன­வுக்கு வெற்­றி­வா­கை­யுடன் டெஸ்ட் கிரிக்கட் விளை­யாட்­டி­லி­ருந்து விடை­ய­ளிக்கும் வகையில் திற­மை­யாக விளை­யாட உறு­தி­பூண்­டுள்­ள­தாக இலங்கை அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் தெரி­விக்­கின்றார்.
பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக எஸ்.எஸ்.சி. மைதா­னத்தில் இன்று ஆரம்­ப­மாகும் இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கட் போட்­டிக்கு முன்­ப­தாக நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

மஹேல ஜய­வர்­தன தனது சொந்த மைதா­னத்தில் பிரி­யா­விடை டெஸ்ட் போட்­டியில் விளை­யா­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

மஹே­லவின் ஓய்வு எந்­த­ளவு அணிக்கு தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என ஏஞ்­சலோ மெத்­யூ­ஸிடம் கேட்­ட­போது, மஹேல போன்ற சிரேஷ்ட, அனு­பவம் வாய்ந்த ஒருவர் ஓய்வு பெறு­வது அணிக்கு பேரி­ழப்பு. இது அவ­ரது கடைசி டெஸ்ட் போட்டி என்­பதால் நாங்­களும் உணர்ச்­சி­வ­சத்­து­ட­னேயே இந்தப் போட்­டியை எதிர்­கொள்ளவுள்ளோம். மஹே­லவை போன்ற
அசாத்­திய திற­மை­வாய்ந்த ஒரு வீரரை மீண்டும் பெறு­வ­தற்கு நீண்ட காலம் செல்லும்.

அவர் நினைத்­துப்­பார்க்க முடி­யாத அள­வுக்கு திற­மை­சாலி ஆவார் எனவே அவர் மன­நி­றை­வுடன் விடைபெறும் வகையில் அவ­ருக்­காக இந்தப் போட்­டியில் வெற்­றி­பெ­று­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் விளை­யா­டுவோம்" என்றார்.

மஹே­ல­விடம் நானும் இதர வீரர்­களும் நிறைய கற்­று­கொண்­டுள்ளோம். அவைதான் எங்­களை இந்­த­ள­வுக்கு வளர்த்­து­விட்­டுள்­ளது" எனவும் ஏஞ்­சலோ மெத்யூஸ் கூறினார்.
ஷமிந்த எரங்­கவும் கித்­ருவன் வித்­தா­ன­கேயும் உபா­தைக்­குள்­ளா­கி­யி­ருப்­ப­தாகதெரிவித்த அவர், கித்ருவன் பூரணதேகாரோக்கியம் பெறாவிட்டால் வேறொருவர் அணியில் இணைத்துக் கொள்ளப்படலாம் எனவும் கூறினார்.

 

http://www.virakesari.lk/articles/2014/08/14/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D

Link to comment
Share on other sites

இலங்கை - பாகிஸ்தான் 2 ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்

 

இலங்கை - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று கொழும்பில் ஆரம்பமாகின்றது.
இன்றைய டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கை அணியின் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்தனவுக்கு இறுதிப் போட்டியாக அமைந்துள்ளது.

மிஸ்பா உல்-ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.
இதில் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்டில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இலங்கை-பாகிஸ்தான் இடையிலான 2ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று ஆரம்பமாகின்றது.

இலங்கை அணியின் மூத்த வீரர் 37 வயதான மஹேல ஜயவர்தனவுக்கு இது 149ஆவது டெஸ்ட் போட்டியாகும். இந்த போட்டியுடன் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதால் அவரை வெற்றியுடன் வழியனுப்ப வேண்டும் என்ற நோக்கில் இலங்கை வீரர்கள் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சொந்த மைதானத்தில் உள்ளூர் ரசிகர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும் ஜயவர்தனவுக்கு போட்டி நடக்கும் 5 நாட்களும் மிகவும் உணர்ச்சிபூர்வமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த மைதானம் ஜயவர்தனவுக்கு மிகவும் ராசியானது. இங்கு அவர் 26 டெஸ்டில் விளையாடி 11 சதங்களுடன் 2,863 ஓட்டங்களை குவித்துள்ளார். அகர் இன்னும் 137 ஓட்டங்களை பெற்றால் ஒரு மைதானத்தில் 3 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற அரிய பெருமை இவருக்கு கிடைக்கும். தனது கடைசி டெஸ்டில் அச்சாதனையை செய்வாரா? என்று உள்ளூர் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இலங்கைக்கு பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன் பாகிஸ்தான் வியூகங்களை வகுத்துள்ளது.

காலி டெஸ்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 451 ஓட்டங்கள் குவித்தும், 2ஆவது இன்னிங்சில் ஹேரத்தின் சுழலில் சிக்கி சின்னாபின்னமாகி  எதிர்பாராத தோல்வியை சந்தித்தது.

முதல் இன்னிங்சில் 450 ஓட்டங்களுக்கு மேல் குவித்தும் பாகிஸ்தான் தோற்றது இதுவே முதல் முறையாகும். முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் பந்தை எறிவதாக குற்றச்சாட்டில் சிக்கினாலும், இந்த டெஸ்டில் விளையாடுவதில் எந்தப்பிரச்சினையும் இருக்காது.

இந்நிலையில் போட்டி எவ்வாறு நகரப்போகின்றது என்பதை அனைவரும் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

http://www.virakesari.lk/articles/2014/08/14/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

 

Link to comment
Share on other sites

இலங்கை அணி திணறல்: பாக்., ‘வேகங்கள்’ அசத்தல்

ஆகஸ்ட் 14, 2014.

கொழும்பு: பாகிஸ்தான் அணியின் ஜுனைடு கான், வகாப் ரியாஸ் ‘வேகத்தில்’ திணறிய இலங்கை அணி, முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 261 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், கொழும்புவில் நேற்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

ஜெயவர்தனா ஏமாற்றம்:

இலங்கை அணிக்கு தரங்கா, கவுசல் சில்வா ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தபோது, சில்வா (41) அவுட்டானார். சங்ககரா (22) நிலைக்கவில்லை. இதன் பின் பாகிஸ்தான் அணி பவுலிங்கில் எழுச்சி பெற்றது.

கடைசி டெஸ்டில் களமிறங்கிய ஜெயவர்தனா, 4 ரன்னுக்கு சயீத் அஜ்மல் சுழலில், அவுட்டாகி அதிர்ச்சி தந்தார்.

வகாப் ரியாஸ் ‘வேகத்தில்’ தரங்கா (92) சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். திரிமான்னே (20), டிக்வெலா (24) நிலைக்கவில்லை. பெரேரா ‘டக்’ அவுட்டானார்.

கடைசியில் மாத்யூஸ் (39) ஏமாற்ற, முதல் நாள் ஆட்ட முடிவில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 261 ரன்கள் எடுத்தது. பிரசாத் (4) அவுட்டாகாமல் இருந்தார்.

பாகிஸ்தான் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜுனைடு கான் 4, வகாப் ரியாஸ் 3 விக்கெட் வீழ்த்தினர்.

மாத்யூஸ் ‘3000’

நேற்று இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் 28வது ரன் எடுத்தபோது, டெஸ்ட் அரங்கில் 3000 ரன்களை எட்டினார். இந்த இலக்கை எட்டிய 11வது இலங்கை வீரர் என்ற பெருமை பெற்றார். இதுவரை 44 டெஸ்டில், மாத்யூஸ் 3011 ரன்கள் எடுத்துள்ளார்.

http://sports.dinamalar.com/2014/08/1408034892/Sangakkarasrilanka.html

Link to comment
Share on other sites

ஹெராத் சுழல் ஜாலம்: பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்
ஆகஸ்ட் 15, 2014.

 

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், பாகிஸ்தான் அணி ரன்கள் சேர்க்க திணறி வருகிறது.      

இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், கொழும்புவில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட முடிவில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 261 ரன்கள் எடுத்திருந்தது.      

 

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. பிரசாத் (13), ஹெராத் (17) அவுட்டாக, இலங்கை அணி முதல் இன்னிங்சில் 320 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது. வெலகேதரா (27) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் ஜுனைடு கான் 5 விக்கெட் வீழ்த்தினார்.     

இரண்டு அரைசதம்: பாகிஸ்தான் அணிக்கு மன்சூர், ஷெசாத் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. 23 ரன்கள் எடுத்த மன்சூர், ஹெராத் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த அசார் அலி 32 ரன்கள் எடுத்து இவரிடமே வீழ்ந்தார். அரைசதம் அடித்த ஷெசாத்தை (58) பெரேரா வெளியேற்றினார்.  ‘அனுபவ’ யூனிஸ் கான் (13), கேப்டன் மிஸ்பாவும் (5) ஹெராத், ‘சுழல் வலையில்’ சிக்கினர். சற்று தாக்குப்பிடித்த ஆசாத் ஷபிக் 42 ரன்கள் எடுத்தார்.   

   

இரண்டாவது நாள் ஆட்ட முடிவில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 244 ரன்கள் எடுத்து, 76 ரன்கள் பின் தங்கியிருந்தது. அரைசதம் கடந்த சர்ப்ராஸ் (66), அப்துர் ரெஹ்மான் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் ஹெராத் 5 விக்கெட் கைப்பற்றினார்.

 

http://sports.dinamalar.com/2014/08/1408119789/HerathSriLankaPakistanTestCricket.html

 

Link to comment
Share on other sites

ரங்கனா ஹெராத் அபாரம்: 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்

பாகிஸ்தான் பேட்ஸ்மென் ஆசாத் ஷபீக்கை வீழ்த்தியதைக் கொண்டாடும் ரங்கனா ஹெராத். | படம்: ஏ.பி.

பாகிஸ்தானுக்கு எதிராக கொழும்புவில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் ஒரு இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை புரிந்தார்.

பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 332 ரன்களில் ரங்கனா ஹெராத் 33.1 ஓவர்கள் வீசி 3 மைடன்களுடன் 127 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

3ஆம் நாளான இன்று பாகிஸ்தான் உணவு இடைவேளைக்கு சற்று முன்னர் 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் ரங்கனா ஹெராத் பந்துவீச்சினால் தோல்வி கண்ட பாகிஸ்தான் இந்த முறையும் சுருண்டிருக்கும். ஆனால் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் சர்பராஸ் அகமட் அதிரடி சதம் கண்டார். 140/5 என்று பாகிஸ்தான் சரிவு நிலையில் இருந்தபோது களமிறங்கிய விக்கெட் கீப்பர் சர்பராஸ், ஆசாத் ஷபீக் (42) என்பவருடன் இணைந்து 6வது விக்கெட்டுக்காக 93 ரன்களைச் சேர்த்தார்.

சர்பராஸ் அகமட் 90 ரன்களில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் வெலிகேதராவை மிட் விக்கெட்டில் அதிர்ச்சிகரமான பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்து சதம் கண்டார். 127 பந்துகளில் அவர் 7 பவுண்டரி ஒரு சிக்சருடன் 103 ரன்கள் எடுத்து ஹெராத்திடம் அவுட் ஆனார்.

இன்று 244/6 என்று தொடங்கிய பாகிஸ்தான் அப்துல் ரஹ்மான் (16) விக்கெட்டை ஹெராத்திடம் இழந்தது, வஹாப் ரியாஸ் 17 ரன்கள் எடுத்து ஹெராத் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று லாங் லெக்கில் கேட்ச் ஆனார்.

இலங்கை முதல் இன்னிங்ஸில் 320 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தற்போது 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது.

சங்கக்காரா 22 ரன்களுடனும் மகேலா ஜெயவர்தனே 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/ரங்கனா-ஹெராத்-அபாரம்-9-விக்கெட்டுகளைக்-கைப்பற்றினார்/article6324033.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஒரு இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹேரத் சாதனை: பாக். 320 ஓட்டங்கள்

 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை வீரர் ரங்கன ஹேரத் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். நேற்றைய தினத்தில் தனது 250ஆவது விக்கெட்டை வீழ்த்திய ரங்கன ஹேரத், இன்று 9 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 2002ஆம் ஆண்டு 9 விக்கெட்டுக்களை ஒரு இன்னிங்க்சில் வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். இதற்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமையை ரங்கன ஹேரத் பெற்றுள்ளார்.

பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. முன்னதாக முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 320 ஓட்டங்கள் குவித்தது.

தரங்க அதிகபட்சமாக 92 ஓட்டங்கள் குவித்தார். நட்சத்திர ஆட்டக்காரர் ஜயவர்த்தனவுக்கு இந்த போட்டி கடைசி டெஸ்ட் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் 4 ஓட்டங்களில் வெளியேறி அவர் ஏமாற்றத்தை அளித்தார்.

பாகிஸ்தான் தரப்பில் ஜீனைட் கான் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை பாகிஸ்தான் தனது 2ஆவது நாளில் தொடங்கி விளையாடியது.

இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் 2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்கள் குவித்திருந்தது.

இதனையடுத்து பாகிஸ்தான் இன்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது.

இலங்கை வீரர் ரங்கன ஹேரத் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தவித்த பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் 332 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 12 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

பாகிஸ்தான் அணியில் சப்ராஷ் அகமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவர் 103 ஓட்டங்களை குவித்தார்.

இலங்கை தரப்பில் மிரட்டியெடுத்த ரங்கன ஹேரத் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பெரேரா மீதமுள்ள 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

 

 

http://www.virakesari.lk/articles/2014/08/16/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-320-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Link to comment
Share on other sites

சங்ககரா அரைசதம்: இலங்கை முன்னிலை
ஆகஸ்ட் 16, 2014.

 

கொழும்பு: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் 2வது இன்னிங்சில், சங்ககரா அரைசதம் அடித்து கைகொடுக்க, இலங்கை அணி முன்னிலை பெற்றது.     

இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இலங்கை அணி, 1–0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடக்கிறது.     

 

முதல் இன்னிங்சில் இலங்கை அணி 320 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 244 ரன்கள் எடுத்திருந்தது. சர்பராஸ் அகமது (66), அப்துர் ரெஹ்மான் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.     

 

சர்பராஸ் சதம்: நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தானின் அப்துர் ரெஹ்மான் (16), வாகாப் ரியாஸ் (17) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய சர்பராஸ் அகமது, சதம் அடித்தார். இவர், 103 ரன்களுக்கு ஹெராத் ‘சுழலில்’ சிக்கினார். அடுத்து வந்த சயீத் அஜ்மல் (4) போல்டானார். முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி, 332 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இலங்கை சார்பில் ‘சுழலில்’ அசத்திய ஹெராத் 9 விக்கெட் கைப்பற்றினார்.     

 

சங்ககரா அபாரம்: பின், 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு உபுல் தரங்கா, கவுசால் சில்வா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த போது, அப்துர் ரெஹ்மான் பந்தில் தரங்கா (45) அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் கவுசால் சில்வா (17) நிலைக்கவில்லை. பின் இணைந்த சங்ககரா, மகிளா ஜெயவர்தனா ஜோடி அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அபாரமாக ஆடிய சங்ககரா, அரைசதம் அடித்தார்.  

   

மூன்றாம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து, 165 ரன்கள் முன்னிலை வகித்திருந்தது. சங்ககரா (54), ஜெயவர்தனா (49) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் அப்துர் ரெஹ்மான் 2 விக்கெட் வீழ்த்தினார்.

 

இரண்டாவது வீரர்     

பாகிஸ்தானுக்கு எதிராக 9 விக்கெட் கைப்பற்றிய ஹெராத், டெஸ்ட் அரங்கில் ஒரு இன்னிங்சில் 9 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இலங்கை வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக, இரண்டு முறை (எதிர்–இங்கிலாந்து–1998, எதிர்–ஜிம்பாப்வே–2002) ‘சுழல் ஜாம்பவான்’ முத்தையா முரளிதரன் இம்மைல்கல்லை எட்டினார். தவிர, இந்த இலக்கை எட்டிய 15வது சர்வதேச வீரரானார்.     

 

* இதன்மூலம் ஹெராத், தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். முன்னதாக இரண்டு முறை (எதிர்–ஆஸ்திரேலியா–2011, எதிர்–வங்கதேசம்–2013), ஒரு இன்னிங்சில் தலா 7 விக்கெட் கைப்பற்றினார்.

 

 

http://sports.dinamalar.com/2014/08/1408201958/PakistanSriLankaTestCricketSankakara.html

Link to comment
Share on other sites

சதமடித்தார் சர்ஃப்ராஸ்; சாதித்தார் ஹெராத்
 

 

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது 2-வது இன்னிங்ஸில் 63 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்துள்ளது.

 

முன்னதாக பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 93.1 ஓவர்களில் 332 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. முன்னணி வீரர்கள் சொதப்பியபோதும் விக்கெட் கீப்பர் சர்ஃப்ராஸ் அஹமது சதமடித்து முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தானை 12 ரன்கள் முன்னிலை பெறவைத்தார்.

இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 99.3 ஓவர்களில் 320 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 70 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்திருந்தது. சர்ஃப்ராஸ் அஹமது 66, அப்துர் ரெஹ்மான் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

 

சர்ஃப்ராஸ் சதம்

3-வது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியில் சர்ஃப்ராஸும், ரெஹ்மானும் நிதானமாக ஆடினர். 3-வது நாளில் இந்த ஜோடி 8.4 ஓவர்களே தாக்குப்பிடித்தது. 47 பந்துகளைச் சந்தித்த ரெஹ்மான் 16 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த வஹாப் ரியாஸ் 17 ரன்களில் வெளியேற, சயீத் அஜ்மல் களம்புகுந்தார். அப்போது பாகிஸ்தான் 301 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பிறகு சூழ்நிலையை புரிந்துகொண்ட சர்ஃப்ராஸ் அதிரடியில் இறங்கினார். வெலகெதரா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசி சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இது. இதன்மூலம் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த முதல் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார்.

 

332 ரன்களுக்கு ஆல்அவுட்

127 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்த சர்ஃப்ராஸ், ஹெராத்தின் 8-வது விக்கெட்டாக அமைந்தார். ஹெராத் தனது 9-வது விக்கெட்டாக அஜ்மலை (4) வீழ்த்தி, பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸை (93.1 ஓவர்களில் 332 ரன்கள்) முடிவுக்கு கொண்டு வந்தார். ஜுனைத் கான் 13 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

வலுவான நிலையில் இலங்கை

முதல் இன்னிங்ஸில் 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணியில் உபுல் தரங்கா 45 ரன்களும், ஜே.கே.சில்வா 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 63 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. குமார் சங்ககாரா 54, ஜெயவர்த்தனா 49 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இலங்கை அணி 165 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

 

9 விக்கெட் வீழ்த்திய முதல் இடது கை பவுலர்

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் 33.1 ஓவர்களில் 127 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இடது கை பவுலர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதேபோல் சர்வதேச அளவில் (வலது கை, இடது என இரு பவுலர்களையும் சேர்த்து) 9 விக்கெட்டுகளை வீழ்த்திய 16-வது வீரர் ஹெராத் ஆவார்.

 

ஜூனைத் கானுக்கு காயம்

பாகிஸ்தான் பேட் செய்தபோது தமிகா பிரசாத் ஓவரில் ஜுனைத் கானின் ஹெல்மெட்டில் ஒரு பந்து தாக்கியது. அதில் அவருடைய முகத்தில் அடிபட்டது. எனினும் தொடர்ந்து ஆடிய அவர் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.

ஆனால் ஓய்வறைக்கு சென்ற பிறகு அவருக்கு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பாக அணி மேலாளர் மொயின் கான் கூறுகையில், “ஜுனைத் கான் நலமாக இருக்கிறார். வழக்கமான மருத்துவ பரிசோதனைதான் அவருக்கு மேற்கொள்ளப்பட்டது” என்றார்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/article6324033.ece

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் அணி 271 ரன்கள் எடுத்தால் இந்த டெஸ்ட் போட்டியை வெற்றி பெறலாம். ஆனால் பாகிஸ்தான் அணி 49 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வெற்றி பெற வேண்டும். அவ் வெற்றியை மகேலவுக்கு அர்ப்பணிக்க வேண்டும்

Link to comment
Share on other sites

இலங்கை வெற்றி பெற வேண்டும். அவ் வெற்றியை மகேலவுக்கு அர்ப்பணிக்க வேண்டும்

 

இலங்கை அணி அதை சாதிக்கும். :)

 

Link to comment
Share on other sites

வெற்றியை நோக்கி இலங்கை: ஹெராத் மீண்டும் அசத்தல்
ஆகஸ்ட் 17, 2014.

 

கொழும்பு: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், ஹெராத் மீண்டும் ‘சுழலில்’ அசத்த, இலங்கை அணி வெற்றியை நோக்கி செல்கிறது.

இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இலங்கை அணி, 1–0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 320, பாகிஸ்தான் 332 ரன்கள் எடுத்தன. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. சங்ககரா (54), ஜெயவர்தனா (49) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

ஜெயவர்தனா அரைசதம்:

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஜெயவர்தனா அரைசதம் கடந்தார். சயீத் அஜ்மல் ‘சுழலில்’ சங்ககரா (59), ஜெயவர்தனா (54) சிக்கினர். பின் வந்த திரிமான்னே (10), டிக்வாலே (21) நிலைக்கவில்லை. ரியாஸ் ‘வேகத்தில்’ தில்ருவான் பெரேரா, ஹெராத் ‘டக்–அவுட்’ ஆகினர். இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 282 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் ரியாஸ், அஜ்மல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

 

ஹெராத் அசத்தல்:

பின், 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணிக்கு மன்சூர் (10), அகமது ஷேசாத் (8) ஏமாற்றினர். அடுத்து வந்த அசார் அலி (10), மிஸ்பா (3), யூனிஸ் கான் (8) ஹெராத் ‘சுழலில்’ சரணடைந்தனர். ஆசாத் சபிக் (32) ஓரளவு கைகொடுத்தார். அப்துர் ரெஹ்மான் (5) ஏமாற்றினார்.

நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 127 ரன்களுக்கு, 144 ரன்கள் பின்தங்கியிருந்தது. சர்பராஸ் (38), ரியாஸ் (2) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஹெராத் 4 விக்கெட் வீழ்த்தினார்.

 

இன்று கடைசி நாள் என்பதால், பாகிஸ்தான் அணியின் மீதமுள்ள 3 விக்கெட்டுகளை, இலங்கை பவுலர்கள் விரைவில் வீழ்த்தும் பட்சத்தில், தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பெற்று, தொடரை கைப்பற்றலாம்.

 

 

http://sports.dinamalar.com/2014/08/1408297666/RanganaHerathcricket.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.