Jump to content

புலிப்பார்வை - சீமானின் விஷமும், விஷச்செடியும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
புலிப்பார்வை - சீமானின் விஷமும், விஷச்செடியும்! 
[Tuesday 2014-08-19 20:00]
seeman-puliparvai-visam-190814-300-seith
ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்ட வரலாற்றில் பல்வேறு சக்திகளோடு போராடி வந்திருக்கிறார்கள். இன்னமும் ஓய்ந்துவிடாத போராட்டத்தில் புதிது புதிதாக முளைக்கும் சக்திகளுக்கும், பிரச்சினைகளுக்கும் எதிராக போராட வேண்டியிருக்கிறது. சிலவேளை அந்த சக்திகளையும், பிரச்சினைகளையும் அதன் தன்மை தெரியாமல் வளர்த்து விட்டவர்களாகவும் ஈழத் தமிழர்களே இருக்கிறார்கள். (குறிப்பாக, புலம்பெயர் ஈழத் தமிழர்கள்.) ஆரம்பத்திலேயே பலமான குற்றச்சாட்டொன்றை வைத்து விட்டு 'எமது பார்வையில்' பகுதியைத் தொடர வேண்டிய இயலாமை ஆட்கொண்டிருக்கிறது. அது, 'புலிப்பார்வை - சீமான்' என்கிற விடயங்களினூடு தொடர்கிறது. இது, நாம் உருவாக்கி வளர்த்து விட்ட வினைகளில் சின்னதொரு உதாரணம்தான். ஆனாலும், அது தொடர்பில் பேச வேண்டியிருக்கிறது.
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் படுகொலை சம்பவத்தை அல்லது இறுதிப் போரின் கடைசி நாட்களை பிரதான கதைக் களமாக்கி (அப்படித்தான் முன்னோட்ட காட்சிகளை பார்க்கிற போது உணர முடிந்தது) 'புலிப்பார்வை' என்றொரு படத்தை வேந்தர் மூவிஸ் என்கிற தமிழகத்து சினிமா தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது. ரட்ஷகன், ஜோடி உள்ளிட்ட படங்களின் இயக்குனர் பிரவீன் காந்தி 'புலிப்பார்வை'யையும் எழுதி இயக்கியிருக்கிறார்.
 
படைத்தலுக்கான உரிமைக்காக தொடர்ந்தும் ஆதரவாக கருத்து வெளியிட்டு வரும் நாம், ஏன் 'புலிப்பார்வை' பற்றி பேச வேண்டி வந்தது? காரணங்கள் நிறைய உண்டு. அதுவும், ஈழத் தமிழர்களைப் பலிகடாவாக்கும் அரசியலுக்கும் - அடிப்படையே இல்லாத வியாபாரத்துக்கும் பதில் சொல்ல வேண்டியது எமது கடமை. அதனை தவறவிட்டு வந்த சந்தர்ப்பங்கள் தான் தமிழ்மக்களை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு வந்தது.
 
புலிப்பார்வையில், பாலச்சந்திரனை இராணுவ சீருடை அணிவித்து குழந்தைப் போராளியாக சித்தரிப்பது முதல் பிரச்சினை. அடுத்து, இன்னமும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற கருத்தை முன்னிறுத்தி இன்னும் பல தமிழக மற்றும் புலம்பெயர் ஊடகங்களும், அரசியல் பிழைப்பாளிகளும் செய்யும் வேலையை புலிப்பார்வையும் செய்திருக்கிறது. இவை, புலிப்பார்வை படத்தின் முன்னோட்டக்காட்சிகளினூடு தெரிகின்ற விடயங்கள். இன்னும் என்னென்ன வில்லங்கங்கள் அதற்குள் நிறைந்திருக்கின்றன என்று தெரியவில்லை. படம் வந்த பின்தான் அது பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.
 
இதனிடையே, புலிப்பார்வை தமிழ் போராட்ட வரலாற்றில் முக்கிய படம் என்று அந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சீமான் பேசியிருக்கிறார். இயக்குனர் சீமான், போராளி சீமானாக இலங்கையின் இறுதிப் போரின் கடைசி நாட்களில் தமிழகத்தில் வெளிப்பட்டார். அவரின் போராளி வாழ்க்கை என்பது புலம்பெயர் தமிழர்களினாலும், தமிழக உணர்வாளர்களினாலும்(?) ஊதிப்பெருப்பிக்கப்பட்டது. அந்த பிம்பம், வேலுப்பிள்ளை பிரபாகரின் வாரிசு, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் புதிய நம்பிக்கை என்கிற அளவுக்கெல்லாம் வடிவமைக்கப்பட்டது.
 
சின்ன உதாரணம், தமிழ் ஈழத்துக்கான ஆயுத போராட்டத்தின் வரலாறு, அதன் தீரம் பற்றியெல்லாம் பேசுவதற்கு ஈழத் தமிழர்களுக்கு குறிப்பாக புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கு சீமான் தேவைப்பாட்டார். புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மாவீரர் நாள் அனுஷ்டிப்புக்களிலும், முக்கிய நிகழ்வுகளிலும் பிரதம அழைப்பாளராக சீமான் வர வேண்டியிருந்தது.
 
வந்து, அவர் என்ன பேசினார் என்பதெல்லாம், எமது புத்திக்கு தெரிவதில்லை. பல நேரங்களில் நாம் மந்த புத்திக்காரர்களாக இருந்திருக்கிறோம். அதைத்தான், தமிழகத்தின் சாயம் பூசிய போராளிகள் வியாபாரமாகவும், அரசியலாகவும் ஆக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களின் வியாபாரத்துக்கு நாம் இன்னமும் எம்மை இழந்து கொண்டிருக்கிறோம்.
 
இலங்கையின் இறுதிப் போரின் போது மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன என்ற குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகளினால் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில், அதன் தன்மை - போக்கு விளங்காமல், போர்க்குற்ற ஆதாரங்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் பாலச்சந்திரனின் படுகொலையை, தமக்கு தேவையான மாதிரி, புரிதலற்று படமாக்கி வியாபாரம் ஆக்குகிறார்கள்.
 
அதை, ஈழத் தமிழர்களுக்கான போராளி என்கிற சீமானும் சேர்ந்து விற்பனை செய்கிறார். அதுவும், படத்துக்கும், சீமானுக்கும் எதிரான கேள்வியெழுப்பிய மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி, நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையை வளர்த்து விட்டவர்களும், கொண்டாடியவர்களும் ஓடி ஒழிந்து விட்டார்கள். ஆனால், அந்த விஷமச் செடி வளர்ந்து இன்று எமக்கு விஷத்தை ஊட்டுவதற்கு தயாராகிவிட்டது.
 
ஈழத் தமிழர்களாகிய நாம் அடிப்படையில் செய்ய வேண்டிய ஒன்று, யதார்த்தத்தை உணர்ந்து கொள்வது. அதன் வழி எமது போராட்ட களம் எது, அதன் போக்கு என்ன, எமது இலக்கு எப்படிப்பட்டது, எமது பலம் உள்ளிட்டவற்றை தெளிவாக புரிந்து கொண்டு போராட வேண்டும். இல்லாமல் விஷச் செடிகளை வளர்ப்பதும், விரலுக்கேற்ற வீக்கமற்ற தன்மைகளின் நம்பிக்கை கொண்டு அதனை வழிபாடு செய்வதும் மீண்டும் மீண்டும் தோற்றுப்போக வைக்கும்.
 
அதன் வலி எமது தலைமுறைகள் தாண்டியும் நீளும். ஆக, நாம் சுதாகரித்துக் கொண்டு எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதற்கு, அரசியல் பிழைப்பு வாதிகளையும், வியாபாரிகளையும் ஆரம்பத்திலேயே நாம் அடையாளம் காண வேண்டியது அவசியம். அது, இப்போதைக்கு அவசரமும் கூட!
 
நன்றி,
 
Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிப்பாா்வை என்ற படத்தின் வியாபரத்துக்கு தமிழ் ஊடகங்களும் முன்னின்று உழைக்கின்றன என்ற குற்றத்சாட்டை உறுதியாக கூற முடியும். புலிப்பாா்வை படத்தை இலவச விளம்பரம் செய்பனவாக அவை செயற்படுகின்றன. எங்கோ ஒரு மூலையில் கிடந்த படத்தை இன்று உலகத்தமிழினத்திற்க்கு அறிமுகப்படுத்திய பெருமை அனைத்து தமிழ் ஊடகங்களுக்கும் சாரும்.


சீமானை தமிழ் தேசிய வாதி என்று எழுதிய ஊடகங்களும், எங்கள் அண்ணன் என்று முழக்கமிட்டவா்களுக்கும் இன்று சீமான் துரோகியாகிவிட்டமை கொடுமை.

2009 ம் ஆண்டுக்கு பின்னா் எம்மால் துரோகி என பட்டமிடப்பட்டவா்கள் எத்தனை போ்? அதை யாராவது கணக்கெடுக்க முடிந்தால் (?) சொல்லுங்கள்.

இன்னோரு விடயத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும், தமிழகத்தில் இருப்பவா்கள் புலிப்பாா்வையை எதிா்க்க வேண்டும் என்று நினைக்கும் கனடாவில் இருக்க கூடிய நெற்றிக் கண், கனடாவில் இதுவரையில் அதிகார புா்வமாக எந்த அமைப்பு இது தொடா்பாக சொல்லவில்லை என்பதை சுட்டிக்காட்ட மறந்து விட்டாா்.

கனடாவில் குறிப்பாக ரொரன்ரோவில் இருக்க கூடிய இரண் திரையரங்குகள் (தமிழ் படங்களை திரையிடும்) தமிழா் நிா்வாகத்தில் இருக்கின்றன. ரொரன்ரோவில் திரையிடும் உாிமையை இவா்களே எடுக்க பொகின்றாா்கள். அவா்களோடாவது பேசியிருக்கலாமே!...

(குறிப்பு நான் கனடாவில் வசிப்பதால் ஏனைய நாடுகள் பற்றி எழுத முடியாது) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

புலிப்பார்வை - சீமானின் விஷமும், விஷச்செடியும்! 
[Tuesday 2014-08-19 20:00]
seeman-puliparvai-visam-190814-300-seith

 

......

 

இலங்கையின் இறுதிப் போரின் போது மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன என்ற குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகளினால் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில், அதன் தன்மை - போக்கு விளங்காமல், போர்க்குற்ற ஆதாரங்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் பாலச்சந்திரனின் படுகொலையை, தமக்கு தேவையான மாதிரி, புரிதலற்று படமாக்கி வியாபாரம் ஆக்குகிறார்கள்.
.......
 

 

 

இந்த சந்தர்ப்பத்தில் புலிப்பார்வை என்ற திரிபுபார்வை விசமத்தனமாதும் தேவையற்றதுமாகும். உணர்வுகளை எதிர்மறையாக பயன்படுத்தி காசாக்குவது வருந்தவேண்டிய, கண்டிக்கப்படவேண்டிய செயல்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன்னத்தில் முத்தமிட்டாளில்.. சர்ச்சைக்குரிய விடயங்கள் இடம்பெற்றிருந்தன. அதனை புலிகளே கண்டிக்கல்ல. மாறாக தமிழக சினிமா இன்னும் புரிந்துணர்வோடு நேரடி ஆலோசனைகளைப் பெற்று அதனைப் படைச்சிருக்கலாம் என்ற எண்ணப்பாடே வெளிப்பட்டது.

புலிப்பார்வை.. இன்னும் வெளிவரவே இல்லை. மேலும்.. புலிப்பார்வை தயாரிப்பு குழு.. மக்களின் கருத்துக்களை செவிமடுக்கவும் தயாராக உள்ளது. படத்தை கேட்போருக்கு எல்லாம் முன்னோட்டம் இட்டுக்காட்டவும் தயாராக உள்ளது. தேவையான திருத்தங்களை செய்யவும்.. முன் வருகிறார்கள்.

இவ்வளவு செய்தும்.... தவறுகள் திருத்தப்பட.. வசதிகள் செய்யப்பட்டும்..சீமானை முன்னிலையில் வைத்து.. இது விடயமாக..தொடர்ந்து நச்சுப் பாச்சும்.. ஊடகங்கள் மற்றும் அமைப்புக்கள்.. மற்றும் நபர்கள் குறித்துத்தான்.. இப்போ சந்தேகம் கிளம்புகிறது..!!!! உண்மையில் இவர்களின் நோக்கம்.. என்ன..??????????! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை நாங்கள் விட்டுக்குடுக்கவே மாட்டம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன்னத்தில் முத்தமிட்டாளில்.. சர்ச்சைக்குரிய விடயங்கள் இடம்பெற்றிருந்தன. அதனை புலிகளே கண்டிக்கல்ல. மாறாக தமிழக சினிமா இன்னும் புரிந்துணர்வோடு நேரடி ஆலோசனைகளைப் பெற்று அதனைப் படைச்சிருக்கலாம் என்ற எண்ணப்பாடே வெளிப்பட்டது.

புலிப்பார்வை.. இன்னும் வெளிவரவே இல்லை. மேலும்.. புலிப்பார்வை தயாரிப்பு குழு.. மக்களின் கருத்துக்களை செவிமடுக்கவும் தயாராக உள்ளது. படத்தை கேட்போருக்கு எல்லாம் முன்னோட்டம் இட்டுக்காட்டவும் தயாராக உள்ளது. தேவையான திருத்தங்களை செய்யவும்.. முன் வருகிறார்கள்.

இவ்வளவு செய்தும்.... தவறுகள் திருத்தப்பட.. வசதிகள் செய்யப்பட்டும்..சீமானை முன்னிலையில் வைத்து.. இது விடயமாக..தொடர்ந்து நச்சுப் பாச்சும்.. ஊடகங்கள் மற்றும் அமைப்புக்கள்.. மற்றும் நபர்கள் குறித்துத்தான்.. இப்போ சந்தேகம் கிளம்புகிறது..!!!! உண்மையில் இவர்களின் நோக்கம்.. என்ன..??????????! :icon_idea:

 

 

ஒரு  காலத்தில்

புலிகளை

பிரபாகரனை  தேடித்தேடி  விமர்சித்தபடி  ஒரு கூட்டம் வாழ்ந்தது

தற்பொழுது

அது சீமானைத்தேடி ஓடுகிறது

அந்தவகையில் பார்த்தால்

சீமான் சோறு போடும் அளவுக்கு வளர்ந்திருக்கின்றார்  என்றே  எடுத்துக்கொள்ளலாம்..

இந்தக்கூட்டம்  எதையும் செய்ததில்லை

செய்தவனை  விட்டதுமில்லை......

தி.மு.க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை நாங்கள் விட்டுக்குடுக்கவே மாட்டம் :D

 

நாங்கள் புலிக்கொடியையே விட்டுக்கொடுத்த துணிச்சனாங்கள்.. இதெல்லாம் யுயுபி இல்லையா அக்கா.

 

விட்டுக்கொடுப்பதல்ல.. பிரச்சனை. விட்டுக்கொடுக்க நியாமில்லாத இடத்தில் விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை. அதுதான்.. உண்மையை வலியுறுத்தும். சும்மா சும்மா விட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தால்.. நியாயமும்.. உண்மையும்.. கொள்கையும்.. வெல்லாது. நாளடவையில்.. உளுத்துக் கொட்டுன்னும்..! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன்னத்தில் முத்தமிட்டாளில்.. சர்ச்சைக்குரிய விடயங்கள் இடம்பெற்றிருந்தன. அதனை புலிகளே கண்டிக்கல்ல. மாறாக தமிழக சினிமா இன்னும் புரிந்துணர்வோடு நேரடி ஆலோசனைகளைப் பெற்று அதனைப் படைச்சிருக்கலாம் என்ற எண்ணப்பாடே வெளிப்பட்டது.

புலிப்பார்வை.. இன்னும் வெளிவரவே இல்லை. மேலும்.. புலிப்பார்வை தயாரிப்பு குழு.. மக்களின் கருத்துக்களை செவிமடுக்கவும் தயாராக உள்ளது. படத்தை கேட்போருக்கு எல்லாம் முன்னோட்டம் இட்டுக்காட்டவும் தயாராக உள்ளது. தேவையான திருத்தங்களை செய்யவும்.. முன் வருகிறார்கள்.

இவ்வளவு செய்தும்.... தவறுகள் திருத்தப்பட.. வசதிகள் செய்யப்பட்டும்..சீமானை முன்னிலையில் வைத்து.. இது விடயமாக..தொடர்ந்து நச்சுப் பாச்சும்.. ஊடகங்கள் மற்றும் அமைப்புக்கள்.. மற்றும் நபர்கள் குறித்துத்தான்.. இப்போ சந்தேகம் கிளம்புகிறது..!!!! உண்மையில் இவர்களின் நோக்கம்.. என்ன..??????????! :icon_idea:

ஏன் நெடுக்ஸ் கன்னத்தில் முத்தமிட்டால் படம் வந்து கொஞ்ச காலத்தின் பின்னர் பாரதிராஜா ஈழத்திற்கு போய் தலைவரை சந்திக்கும் போது தலைவர் தன் அதிருப்தியை பாரதிராஜாவுக்கு தெரிவித்ததாக ஊடகங்களில் வந்ததை வாசிக்கவில்லையா?...அப்போது வாசித்திருக்கா விட்டால் பரவாயில்லை இப்பவாவது அது தொடர்பான செய்திகளை தேடிப் பிடித்து வாசியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட ஒருத்தரும் அங்க உள்ள சனத்தை பற்றி யோசிக்க மாட்டீங்களா.சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையாலாம்.அங்கை சுவரே ஆட்டம் கானுது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு சில விபரம் தெரியாதுங்கள் எல்லாம் கருத்து எழுத வந்து விட்டதுங்கள்.........ஆயுத எழுத்து படத்தில் பாரதிராஜா அப்படி நடித்ததுக்கு தான் தேசிய தலைவர் தன் அதிருப்தியை பாரதிராஜாவுடம் சொன்னார் , கன்னத்தில் முத்தமிட்டால் 2002ம் ஆண்டு வந்த படம் ,ஆயுத எழுத்து 2004ம் ஆண்டு வந்த படம் , 
 
 
இப்படி தான் தவறுதலான புரிதளோடை அண்ணன் சீமானையும் கேவலமாக‌ எழுதியும் தூற்றியும் திரிவார்கள் :wub:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா நீங்கள் சொல்வது தான் சரி...உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் சரியா

அட ஒருத்தரும் அங்க உள்ள சனத்தை பற்றி யோசிக்க மாட்டீங்களா.சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையாலாம்.அங்கை சுவரே ஆட்டம் கானுது. :rolleyes:

திருப்பி எழுதா விட்டால் அவர்கள் சொல்வது சரி என்றாகி விடும் இல்லையா சுவைப்பிரியன்

Link to comment
Share on other sites

 

இலங்கையின் இறுதிப் போரின் போது மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன என்ற குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகளினால் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில், அதன் தன்மை - போக்கு விளங்காமல், போர்க்குற்ற ஆதாரங்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் பாலச்சந்திரனின் படுகொலையை, தமக்கு தேவையான மாதிரி, புரிதலற்று படமாக்கி வியாபாரம் ஆக்குகிறார்கள்.
 

 

 

 

என்ன சொல்ல வாறார்... 
 
ஐ.நா. இந்தபடத்தை விசாரணை ஆதாரமாக எடுக்கப் போகிறதா ?   :wub:  :D
 
 

 

 

 

ஈழத் தமிழர்களாகிய நாம் அடிப்படையில் செய்ய வேண்டிய ஒன்று, யதார்த்தத்தை உணர்ந்து கொள்வது. அதன் வழி எமது போராட்ட களம் எது, அதன் போக்கு என்ன, எமது இலக்கு எப்படிப்பட்டது, எமது பலம் உள்ளிட்டவற்றை தெளிவாக புரிந்து கொண்டு போராட வேண்டும். இல்லாமல் விஷச் செடிகளை வளர்ப்பதும், விரலுக்கேற்ற வீக்கமற்ற தன்மைகளின் நம்பிக்கை கொண்டு அதனை வழிபாடு செய்வதும் மீண்டும் மீண்டும் தோற்றுப்போக வைக்கும்.
 

 

 

 

ஒரு சினிமா பட சீன் உங்கள் போராட்டத்தையே தவிடு பொடியாக்கிவிடுமா ??
 
என்னையா போராட்டம் இது !!  :wub:  :lol:  :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

என்ன சொல்ல வாறார்... 
 
ஐ.நா. இந்தபடத்தை விசாரணை ஆதாரமாக எடுக்கப் போகிறதா ?   :wub:  :D
 
ஒரு சினிமா பட சீன் உங்கள் போராட்டத்தையே தவிடு பொடியாக்கிவிடுமா ??
 
என்னையா போராட்டம் இது !!  :wub:  :lol:  :lol:

 

 

வரலாற்றுத்திரிவுகள் நடைபெற்றுவிடும்  என்ற பயத்தை  நாம் விலத்திவிடமுடியாது

 

இலங்கையில் மகாவம்சமும்

ஏன் இன்றைய  பாடப்புத்தகங்களும் ஏன் புனைகதைகளை  புகுத்துகின்றன?

நாளடைவில் அவையே உண்மையாகிவிடக்கூடியவை.

 

இந்தப்படத்தை எனது பிள்ளை  பார்த்தால்

பாலச்சந்திரன்   பற்றி  அவனுக்குள் கேள்வி  வரும்

அவனது மனதுக்குள் வேறு ஒரு படம்  உருவாகும்

அதுவே நிலைக்கலாம்

 

ஊரில் சொல்வார்கள்

பத்து முறை  ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால்

அது உண்மையாகிவிடும் என்று

Link to comment
Share on other sites

வரலாற்றுத்திரிவுகள் நடைபெற்றுவிடும்  என்ற பயத்தை  நாம் விலத்திவிடமுடியாது

 

இலங்கையில் மகாவம்சமும்

ஏன் இன்றைய  பாடப்புத்தகங்களும் ஏன் புனைகதைகளை  புகுத்துகின்றன?

நாளடைவில் அவையே உண்மையாகிவிடக்கூடியவை.

 

இந்தப்படத்தை எனது பிள்ளை  பார்த்தால்

பாலச்சந்திரன்   பற்றி  அவனுக்குள் கேள்வி  வரும்

அவனது மனதுக்குள் வேறு ஒரு படம்  உருவாகும்

அதுவே நிலைக்கலாம்

 

ஊரில் சொல்வார்கள்

பத்து முறை  ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால்

அது உண்மையாகிவிடும் என்று

 

 

 

தமிழக மக்களை நோக்கி எடுக்கப்பட்ட ஒரு படத்தில் ஒரு சிறுவன் வீரனாகச் சித்தரிக்கப்படுவதில் எந்தத் தவறுமில்லை. இதனால் தமிழக மக்கள் தமிழுணர்வு பெறுவார்களாயின் என்ன தவறு ?
 
மன்னாரைச் சேர்ந்த அலோசியஸ் என்னும் சிறுவன் வீரமரணமடையும் போது வயது 11.
 
30 வருட வீர வரலாறு தமிழகத்தில் அன்னியமாகி காற்றில் கரைந்து தமிழகத் தமிழருக்கு சம்பந்தமேயில்லாத ஒன்றாக போய்க்கொண்டிருக்கிறது. இப்படியான ஒரு நிலையில் அற்ப காரணங்களுக்காக இப்படியான் ஒரு சில‌ முயற்சிகளையுமே (புலிப்பார்வை) எதிர்ப்பாதால் யாருக்கு நட்டம் ??
 
அம்மக்களுக்கு ஏற்றவகையில் செய்தியை அவர்களால் தான் சொல்லமுடியும்.
அற்ப காரணங்களுக்காக ( பிரபாகரனின் நடை சரியில்லை......) நாம் அதை எதிர்த்தால் யார் அதைச் செய்வார்கள் ?
 
எம் ஆதரவுகளை இழந்து நாம் தனிமைப் பட்டுக் கொண்டே போகின்றோம்.
Link to comment
Share on other sites

அண்ணை ஒரு படமும் பார்க்க தவறுவதில்லை போலிருக்கு . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னோரு விடயத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும், தமிழகத்தில் இருப்பவா்கள் புலிப்பாா்வையை எதிா்க்க வேண்டும் என்று நினைக்கும் கனடாவில் இருக்க கூடிய நெற்றிக் கண், கனடாவில் இதுவரையில் அதிகார புா்வமாக எந்த அமைப்பு இது தொடா்பாக சொல்லவில்லை என்பதை சுட்டிக்காட்ட மறந்து விட்டாா்.

கனடாவில் குறிப்பாக ரொரன்ரோவில் இருக்க கூடிய இரண் திரையரங்குகள் (தமிழ் படங்களை திரையிடும்) தமிழா் நிா்வாகத்தில் இருக்கின்றன. ரொரன்ரோவில் திரையிடும் உாிமையை இவா்களே எடுக்க பொகின்றாா்கள். அவா்களோடாவது பேசியிருக்கலாமே!...

(குறிப்பு நான் கனடாவில் வசிப்பதால் ஏனைய நாடுகள் பற்றி எழுத முடியாது) 

பிசினெஸ்ஸையும் தேசியத்தையும் கலக்கக் கூடாது. அது வேறு, இது வேறு. கனடாவில் நெக்டோ இறக்குமதி போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிபார்வை கதையை முழுமையாக எழுதினால் ஒரு முடிவுக்கு வரலாம்.

கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. தலைவர் மற்ற குழந்தைகளுக்கு போராட வாய்ப்பு கொடுத்ததுபோல தனது குழந்தைக்கும் கொடுத்திருக்க மாட்டாரா என்று யோசித்திருக்கிறார்கள்.

 

பாவம் அந்த இயக்குனர், புலிகள் இயக்கத்தில் 16 வயதுக்கு குறைந்தவர்களை இணைப்பதில்லை என்று தெரியாதவராக உள்ளார். அறிவிலிகள் திரைத் துறையிலும் உள்ளார்கள்தானே..

Link to comment
Share on other sites

புலிபார்வை கதையை முழுமையாக எழுதினால் ஒரு முடிவுக்கு வரலாம்.

புலிப்பார்வை படம் பற்றி பாக்கியராசன்.சே அவர்கள் முன்னர் ஒரு பதிவு போட்டிருந்தார். படத்தில் சுத்த சினிமா தனமும் திரிவுபடுத்தல்களும் போராளிகள் பற்றி தவறாக சித்தரிக்கும் சில சம்பவங்களும், பல கற்பனைகளும் உள்ளன. அவர் எழுதியதிலேயே பல பிழைகள் தெரியும் போது எழுதாமல் விடுபட்ட பகுதிகளில் இன்னும் எவ்வளவு பிழைகள் உள்ளனவோ தெரியாது.

சீமான் அண்ணாவின் போராட்டங்களை மதிக்கும் அதேவேளை இப்படத்துக்கு அவர் ஆதரவு கொடுத்ததை நான் எதிர்க்கிறேன்.

இந்த படத்தை திருத்த முடியுமா தெரியாது. ஒரு சிலவற்றை திருத்தினாலும் ஏனைய விடையங்களை திருத்த முடியுமோ தெரியாது.

அவர் பதிவை இங்கு இணைக்கிறேன்.

--------------------------------------------------------

எனக்கு இயக்குனர் பிரவீன்காந்தி என்றவுடன் ரட்சகன் படத்தில் இந்தியாவை தவறாக பேசியதற்கு நாயகன் நரம்பு புடைத்து கோவப்படும் காட்சி தான் முதலில் நினைவிற்கு வந்தது. அதிலும் தம்பியின் ராணுவ உடையோடு இருப்பதும், இந்தியா போரை நடத்தியது என்றிருக்க "We Love India" என்ற வாசகமும் மிக எரிச்சலை தந்தது. அத்தோடு தான் புலிப்பார்வை படம் பார்க்க அமர்ந்தேன். தம்பியின் புகைப்படத்தை வைத்து இயக்குனர் ஒரு கற்பனை கதையை உருவாக்கியிருக்கிறார். பிரவீன் காந்தி படங்கள் எல்லாமே immatured மேகிங்காக தான் எனக்கு தோன்றும். அந்த எண்ணத்தில் தான் போய் படம் பார்க்க தொடங்கினேன்.

இந்த படத்தில் தம்பியை ஒரு கதாநாயகனாக வீரமானவராக காட்ட முயற்சிக்கிறார். அதற்கு முட்டுகொடுக்க சில சாராசரிக்கு கூடுதலான சினிமாத்தனமான காட்சிகளை வைத்திருக்கிறார். தம்பியிடம் வந்து அவர் வயதை ஒத்த சிறுவர்கள் தங்கள் தந்தையின் கல்லறைகளில் வழிபட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். தம்பி அவர்களை அங்கே கூட்டி செல்கிறார் அப்பொழுது சிங்கள ராணுவத்தால் சிறைபிடிக்கப்படுகிறார். அங்கே தம்பி மிக தைரியமாக இருக்கிறார் எல்லோரையும் தைரியமாக எதிர்கொள்கிறார். அந்த இராணுவமுகாம் பொறுப்பாளரான ராணுவ அதிகாரிக்கு ஒரு மகன் இருக்கிறான் அச்சிறுவன் ஒரு கோழை. அச்சிறுவனையும் நம் தம்பியும் ஒப்பிட்டு காட்சிகளை காட்டுகிறார். தம்பியை வைத்து தலைவரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முயல்கிறார்கள். இதற்கு நடுவே இயக்கத்தில் இருக்கும் ஒரு போராளியின் காதல் கதை வருகிறது. போராளியின் காதலி இன்னொரு போராளியின் தங்கை. அவர் கண்ணிவெடியை எடுக்கும் வேலையை செய்கிறார். அவர் இந்த போராட்டம் வேண்டாம் வேறெங்காவது போய் வாழ வேண்டும் என்று எண்ணுகிறார். இச்சூழலில் அப்போராளியை சிங்கள ராணுவம் பிடிக்கிறது அவரிடம் தம்பியை வைத்து இயக்கத்தின் சரணடைய வேண்டும் என்று மிரட்டி எடுத்த காணொளியை சிடியாக தலைவருக்கு அனுப்புகிறது. ஆனால் அப்போராளியோ காதலியின் வற்புறுத்தலால் இந்தியா தப்பி போக முயற்சிக்கிறார். அப்பொழுது நடுவில் சிங்கள ராணுவத்திடம் மாட்டி தலைவரால் காப்பாற்றப்படுகிறார்கள். அப்பொழுது அந்த சிடி தலைவரிடம் கிடைக்கிறது. தலைவர் எல்லா மகனையும் போலத்தான் என் மகனும் ஆகவே இதற்கு அடிபணிய வேண்டாம் என்கிறார் இருந்தாலும் முக்கிய போராளிகள் தம்பியை காப்பாற்ற போய் வீரமரணம் அடைகிறார்கள். இதற்கு நடுவே இந்தியா தப்பி கிளம்பிய காதலர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதை படம் எடுத்த ஒரு வெளிநாட்டவரிடம் இருந்து படங்களை பெரும் சிங்கள ராணுவம் அவர்களை விரட்ட அவர்கள் இந்தியாவிற்கு படகு ஏறுகிறார்கள். அந்த போராளி காதலனுக்கு அப்பொழுது தான் தெரிகிறது தான் கொண்டு வந்த சிடியில் இருந்தது தலைவர் மகன் தான் என்று.. உடனே காதலியை விட்டுவிட்டு உன்னை விட இந்த போராட்டம் தான் முக்கியம் தலைவர் மகனை காப்பாற்றுவது தான் முக்கியம் என்று நடுகடலில் குதித்து மீண்டும் உள்ள வந்து தம்பியை மீட்க போராடி மடிகிறான்.

சிங்களன் வைத்த கோரிக்கையை தலைவர் ஏற்காததால் போரை தீவிரமாக்குகிறார்கள். தலைவரை வேறு இடத்திற்கு போக சொல்லி மக்கள் கேட்கிறார்கள். போராட்டத்தை விட்டு செல்ல முடியாது தலைவர் அதை மறுத்து அங்கேயே இருக்கிறார். தம்பி இருக்கும் இடத்தில ஒரு போர் முடிந்துவிட்டது என்று கொண்டாடுகிறார்கள் தலைவர் உடலை டிவியில் காட்டுகிறார்கள். தம்பி பார்த்து அழுதுவிட்டு திடீரென இது என் அப்பா இல்லை என்கிறான். உடனே ராணுவ அதிகாரிகள் என்ன என்ன என்று பதட்டமாகிறார்கள். அதற்கு தம்பி என் அப்பாவை பிடிக்க உங்களுக்கு அருகதை இல்லை என்று சொல்ல கோபமான ராணுவ அதிகாரி தம்பியை சுட்டு கொல்கிறார். அவர் போரில் இறந்ததை போன்று போராளிகளுக்கு நடுவே போட்டு நாடகமாடுகிறார்கள். தம்பியை கொன்ற அந்த ராணுவ அதிகாரி (ராஜபக்சே உடையில்) தன மகனை வந்து வீட்டில் சந்தோசமாக தேடுகிறார். அவர் மகன் நீச்சல் குளத்தில் பயத்தில் தற்கொலை செய்துகொண்டு மிதக்கிறான். உங்களுக்காக தான் நாங்கள் பலரை கொன்றோம் அது வீணாகி போய்விட்டதே என்று தலையில் அடித்து அழுகிறார். காதலனை கொன்றதற்கு பலிவாங்க மனித வெடிகுண்டாய் மாறி அங்கே வந்து இதை பார்த்துவிட்டு செய்த பாவம் பழி வாங்கிவிட்டது என்பதாக திரும்புகிறாள்.. இது தான் படக்கதை..

மேலே நான் சொன்ன கோர்வையில் கூட படம் இல்லை என்றே கருதுகிறேன்.. அங்கும் இங்கும் அலை பாய்கிறது காட்சிகள்.. பாடல்கள் தவறான இடத்தில வருகிறது. போராட்ட காட்சிகள் தரத்தில் இல்லை.. தலைவரின் வாரிசு தம்பி பாலா என்பதாக காட்டுவதாக நினைத்து ராணுவ உடையில் தலைவரை போலவே பேசுவது நடப்பது துப்பாக்கியில் தலைவரோடு குறிபார்ப்பது போன்ற கனவுக்காட்சிகள் சிறுபிள்ளைத்தனமாக எடுக்கபட்டிருக்கிறது. இந்தியா மிக நல்ல நாடு இந்த படுகொலைகள் அவர்களுக்கு தெரிந்தால் உங்களை சும்மா விடமாட்டார்கள் என்ற இந்தியா ஒரு பச்சை பிள்ளை போன்று தோற்றத்தை தரும் வசனங்கள் எரிச்சலை தருகின்றன. படம் ஆரம்பமே ஐந்து குண்டுகள் ஒரு பட்டாம்பூச்சியை விரட்டி சென்று சுடுகிறது.. விழுகிற பட்டாம் பூச்சியின் இரண்டு இறக்கைகள் புலியின் கண்களாக புலிப்பார்வையாக மாறுகிறது. படமுழுக்க புலிக்கொடி பறக்கிறது. தலைவரை பற்றியும் இயக்கத்தை பற்றியும் மிக உயர்வாகவே எடுத்துவைக்கபட்டிருக்கிறது. நடு நடுவே உண்மையான சேனல் 4 காட்சிகள் வருகின்றன. அறிவில் சிறந்த தமிழர்களை வளரவிட்டால் தங்களுக்கு சிக்கலாகிவிடும் அதனாலே அடக்குகிறோம் என்று சிங்களர்கள் சொல்கிறார்கள். தமிழீழமே தீர்வு என்பதை பல காட்சிகள் சொல்கின்றன...படத்தில் பாலாவை பற்றி ஈழம் பற்றி கீழுள்ளவாறு ஒரு பாடல் வருகிறது.

துணிந்தவன் கனவிலும் தோல்விகள் நுழைவதே இல்லை

துணிந்து எழுந்தவன் பார்வையில் வானத்தின் தூரமே எல்லை

தமிழா என் தமிழா

நம் வாழ்வு

எதிரி கையிலா?

பால பாலேந்திரா

யார் நிற்பார்

உனக்கு எதிரா?

தமிழனின் வெற்றியில் தமிழ் இன வெற்றியில்

மனம் தான் லயிகட்டும்

புஜம் தான் துடிக்கட்டும்

புகழ் எங்கும் ஒலிக்கட்டும்

பூமி எங்கும் அதிரட்டும்

தமிழனின் பரம்பரை

திசை எட்டும் பரவட்டும்.

புலிக்கொடி பரந்த தமிழ் மண்ணில்

புலிகள் மீது இன்று கருணையில்லை

இந்திய நாட்டின் எல்லையானது

கன்னியாகுமரி எல்லையானது

குமுறி குமுறி அழும் நிலை தான்

எங்கள் கன்னிப்பெண்கள் வாழ்க்கையானது

மாற்றிடுவோம் நிலை மாற்றிடுவோம்

ஏற்றிடுவோம் கொடி ஏற்றிடுவோம்

ராமாயணத்தில் யுத்த காண்டம்

நடந்தது அன்று பெண்ணிற்காக

சீதை தெய்வ பெண்ணிற்காக

இன்று இலங்கையில் யுத்த காண்டம்

நடப்பது ஈழ மண்ணிற்காக

தமிழ் ஈழ ஈழ மண்ணிற்காக

முருகனுக்கு தமிழ் கடவுள் முருகனுக்கு

அறுபடையுண்டு ஆறுபடையுண்டு

100 படையுண்டு தமிழினம் காக்க 100 படையுடு

அது உலகமெல்லாம் உண்டு

சிலுவை சுமந்த இயேசு கூட கூசிபோவார் குற்றம் கண்டு

போர் குற்றம் கண்டு

படம் பார்க்கும் முன்னர் அண்ணன் சீமான் வீட்டில் பிரவீன் காந்தியிடம் பேசியபொழுது அவர் போராட்டத்தை பற்றிய முழு புரிதலில்லாதவர் என்று தெரிந்தது ஆனால் எதிரான சிந்தனையில் இல்லை என்பது அதை விட தெளிவாக தெரிந்தது. இந்த படம் சென்சாரில் சிக்கல் இல்லாமல் வெளிவந்ததற்கு காரணம் பாலாவின் ஆன்மா தான் காரணம் என்று அவர் என்னிடமும் சீமான் அண்ணனிடமும் சொல்லும் பொழுது இருவரும் பார்த்து சிரித்துக்கொண்டோம். அந்த அளவிற்கு தான் அவரின் அரசியல் சார்ந்த சிந்தனை. அவர் சென்ற பிறகு இவர் உண்மையில் உணர்வாளரா என்று அண்ணனிடம் கேட்டேன். 2004 ஆம் ஆண்டு தங்கர் பச்சான் நடிகைகளை தவறாக பேசிவிட்டார் அவரை நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்தும் சரத்குமாரும் வரவைத்து நடிகைகள் காலில் விழவைத்தனர். அப்பொழுது பிரவீன் காந்த் துள்ளல் என்ற படம் அவரே நடித்து எடுத்து வெளியிட்டார் அந்த பட பாடல் வெளியீட்டு விழாவில் நானும் தங்கர் பச்சானும் கலந்து கொண்டோம். எல்லோரும் பேசியபின் பிரவீன் காந்தி பேச வந்தார். வந்தவர் இந்த படத்தின் மூலம் நானும் நடிகர் தான் நடிகர் சங்கத்தில் தங்கர் பச்சானுக்கு நடந்த அவமானத்தை போக்கும் விதமாக நடிகனான நான் அவர் காலில் விழுகிறேன் என்று சாஸ்டாங்கமாக தங்கர் காலில் விழுந்தார். அதை அவர் செய்திருக்க தேவையில்லை. உணர்வாளர் என்பதால் தான் செய்தார். இந்த படமும் அப்படியொரு உணர்வின் அடிப்படையில் எடுத்திருப்பார் என்றார். படம் பார்த்த பின் சீமான் அண்ணன் சொன்னது சரியே எனபட்டது.

ப்ரிவியு படம் பார்த்து வெளியே வந்து படம் பற்றிய கருத்தை இயக்குனர் கேட்கையில் சீமான் அண்ணன் சொன்ன முதல் வார்த்தை தம்பி ராணுவ உடையோடு இருக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் இது வந்தால் பாலா போராளி தான் என்று சுப்பிரமணிய சாமி போன்றார் சொல்வது உண்மையாகிவிடும் அது நம் போராட்டத்திற்கு மீக பெரிய சிக்கலை தந்துவிடும் என்பது தான். இயக்குனரோ படம் எடுக்கும் பொழுது தம்பிக்கு சாதாரண உடை போட்டு பார்த்தேன் அந்த கதாபாதிரத்திற்குரிய வீரம் வரவில்லை அதனால் தான் இந்த உடை போட்டுவிட்டேன். இப்பொழுது நீங்கள் சொன்னதும் தான் தவறென்று புரிகிறது என்றார். உடையோடு வரும் காட்சிகளை நீக்கிவிடுகிறேன் மாற்றிவிடுககிறேன் என்றார் பிரவீன் காந்தி. மாற்றிவிடுகிறேன் என்று சொல்பவரை எதிர்க்க தேவையில்லை என்று தான் பட விழாவிற்கு சென்றார் சீமான் அண்ணன். என்ன கருத்தை படம் பார்த்தபின் சொன்னாரோ அதே கருத்தை தான் பாடல் வெளியீடு விழாவிலும் சொன்னார். நம் போராட்டத்திற்கு எதிரான கருத்தை கொண்ட மத்திய அரசில் பங்கு பெற்றிருக்கும் மத்திய அமைச்சர் இருக்கும் அவையில் தம்பி பாலா போராளி இல்லை மாணவன் என்பதையும் புலிகள் இயக்கம் இறந்தவர்களுக்காக அழுதவர்கள் இல்லை அழுதவர்களுக்காக இருந்தவர்கள் என்பதையும் பதிவு செய்யும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொண்டார் சீமான் அண்ணன்.(http://tamilanseemanvideos.blogspot.in/2014/08/seeman-speech-at-puliparvai-audio.html) இத்தனைக்கும் பொன் ராதாகிருஷ்ணனை எதிர்த்து மிக கடுமையாக தேர்தல் பணி செய்தவர்கள் நாங்கள். எங்களோடு மேடையை பகிர அவர் தான் வெறுப்பாக வேண்டும் மறுக்கவேண்டும். அவரே சரி என்னும் பொழுது நமக்கெதுக்கு தயக்கம் என்று தான் அண்ணன் சீமான் அங்கே சென்றார்.

இதுவரை அப்படத்தை எதிர்ப்பவர்கள் அந்த புகைப்படங்களை பார்த்தவர்கள் தான். இல்லை சீமானுக்கு மட்டும் காட்டியிருக்கிறார்கள் நமக்கு காட்டவில்லை என்று வெறுப்பில் இருப்பவர்க்கள், படத்தை பார்க்காமலே என்னென்னமோ கதையை கட்டி பூதாகரமாக்கி கட்டுரையாக எழுதி தள்ளுகிறார்கள். படம் பார்த்தவர்கள் படத்தில் ஆதரவான கருத்துகளும் இருக்கிறது என்பதை எங்குமே பதிவு செய்யாததற்கான அரசியல் என்னவென்று தெரியவில்லை. நான் என் நினைவு தெரிந்த நாளில் இருந்து இப்போராட்டத்தை பார்த்து நேசித்து ஆதரித்து வருகிறேன். என் வாழ்வில் மாறாத ஆன்ம விருப்பம் தமிழீழமும் தேசிய தலைவருமே.. அவ்விரண்டையும் யார் விமர்சித்தாலும் எதிர் கேள்வி எழுப்பினாலும் அவர்களை எதிரியாகத்தான் பார்த்திருக்கிறேன். ஈழப்பிரச்சனையில் ஒருவர் எடுக்கும் நிலைபாடை வைத்து தான் அவரின் அரசியலையே நான் பார்க்கிறேன். அப்பார்வையில் சொல்கிறேன் இப்படத்தில் நம்மை சிதைக்கும் நம் போராட்டத்தை கேவலப்படுத்தும் நாசப்படுத்தும் எந்த பெரிய கருத்தும் இல்லை. இப்படம் தடை கோருவதற்குரிய படமல்ல. சில காட்சிகளை நீக்கினால் சரியாக இருக்கும். நமக்கு 100 சதவீதம் எதிர் கருத்து இருக்கும் ஊடகங்கள் இன்றளவும் தமிழ்நாட்டில் நடக்கிறது. காலம் முழுக்க எதிராக பேசும் ஆட்கள் இருக்கிறார்கள். சுசாமி இன்றவளவும் தமிழகதிற்குள் வந்து எதிர்த்து பேசிவிட்டு செல்கிறான். இது தான் தமிழகத்தின் எதார்த்த நிலை. இந்நிலையில் இம்மாதிரியான அரைகுறை புரிதலோடு எடுக்கப்பட்ட படங்களாவது வர துவங்கினால் தான் நாளை முழு புரிதலுடன் கூடிய படம் வர தளம் அமைக்கும்.

இப்படியான படங்களை இப்பொழுது தடை கோருவதால் நாளை மேலும் 'ஈழம்' என்ற வார்த்தையைகூட படங்களில் பயன்படுத்தாதவாறு பார்த்துககொள்கிறார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். புலிப்பார்வை போன்ற படத்தையே நாம் தடுத்தால் இனிமேல் ஈழப்போராட்டத்தை கருவாககொண்டு படம் எடுக்க துணிய மாட்டார்கள். பாரிவேந்தர் 2011 ஆண்டு நமக்கு எதிரான கருத்தை பதிவு செய்திருக்கிறார். இலங்கையில் அவர் கல்லூரியை தொடங்கினார். அப்பொழுது நாம் எதிர்த்தோம். இந்த படத்தையும் அதே கண்ணோட்டத்தோடு பார்த்து படம் பார்க்காமலே எதிர்ப்பது சரியாகாது. பாரிவேந்தருக்கு இந்த படத்தை நிறுத்துவதால் எந்த பெரிய நஷ்டமும் வந்துவிட போவதில்லை. ஆனால் குறைந்த பட்ச ஆதரவாக இருக்கும் இப்படம் நாம் முன் வைக்கும் திருத்தங்களுடன் வந்தால் நமக்கு தான் லாபம். பொது மக்களிடம் பரவலாக தம்பி பாலா போய் சேருவான். நம் போராட்டத்தின் நியாயம் பரவலாக போய் சேரும்.

இந்த கத்தியும் புலிபார்வையும் ஒட்டு மொத்த தமிழ்தேசிய விடுதலை அரசியலை மழுங்கடித்துவிடும் என்ற பிம்பத்தை உருவாக்கிவிடும் நோக்கம் யாருக்கானது(?) என்பதே இப்போதைய முக்கிய கேள்வியாக இருக்கிறது. தமிழ் திரை உலகில் ராஜபக்ஷேவின் முதலீடு அல்லது ஆதரவாளர்கள் வருகையின் மூலம் இனப்படுகொலை மறக்கடிக்கபடும் என்ற சிந்தனையை நம்புபவர்கள் ஏற்றுக்கொள்பவர்கள் எப்படியான படங்களை அனுமதிப்பார்கள் (?) என்பதே கேள்விக்குறியாக உள்ளது. லட்சகணக்கான தமிழர்களின் பிணங்கள் மீதான நீதி இந்த சொற்ப படங்களால் நீர்த்துபோயவிடும் என்ற மாயை யாரால் எப்படி நுட்பமாக பரப்பட்டது என்பதே விடைதெரியாத கேள்வியாகே இருக்கிறது.

# நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்பட்டதே சிறு குழுவாக இருக்கும் ஈழ ஆதரவு அரசியல் வெகு ஜன பொது வெளி அரசியலாக மாறவேண்டும் என்பதற்காகத்தான். புரிதலில்லாமல் படத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் தமிழர்களுக்குள் எல்லோரையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பது பெரிய பின்னடைவை தரும். மேலும் நாம் சிறு குழுவாய் மாறி நிற்போம். ராஜபக்சேவின் காசுக்கு விலை போவார்கள் என்று சொல்வதும் நம் போராட்டத்தை சிதைக்கும் படம் எடுத்து நம் போராட்டத்தை நசுக்குவார்கள் என்று சொல்வதும் உணர்வெழுச்சியோடு இருக்கும் திரைத்துறையை கீழ்த்தரமாக சிரித்தரிக்கும் வேலை. இது நம்மை அவர்களிடமிருந்து தனிமைப்படுத்திவிடும். நமக்கு அருகே இருக்கும் திரைத்துறை தமிழர்களிடம் நமக்கு முரணானதை எடுக்க சொல்வோம். நமக்கு சாதகமானதை உருவாக்குவோம். நமது கருத்தை புரியவைப்போம். நம்மிடமிருந்து மேலும் எதிரிகள் உருவாகாமல் தடுப்போம் அதுவே நாளை நமக்கு போராட்டத்திற்கான வலிமையை சேர்க்கும்..

பாக்கியராசன் சே

(Facebook)

Link to comment
Share on other sites

சீமான் இந்தப்படத்திற்கு ஆதரவு தரவில்லை.. காட்சிகளை மாற்றி திரையிடலாம் என்றுதான் சொல்லியுள்ளார்கள். அவ்வாறு மாற்றாமல் வெளியிட்டால் எதிர்ப்புப் போராட்டம் நடைபெறும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு கீழே விழுந்தால் மீசையில் மண் ஒட்டுமா/ஓட்டாதா எனக்கு தெரியாது ஆனால் இசைக்கு கடைசி வரை ஒட்டாது:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டுமா??....... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

சீமான் இந்தப்படத்திற்கு ஆதரவு தரவில்லை.. காட்சிகளை மாற்றி திரையிடலாம் என்றுதான் சொல்லியுள்ளார்கள். அவ்வாறு மாற்றாமல் வெளியிட்டால் எதிர்ப்புப் போராட்டம் நடைபெறும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.. :huh:

காட்சிகள் மாற்றப்பட்டு அதை உறுதி செய்த பின் சீமான் அண்ணா இசை வெளியீட்டிற்கு சென்றிருக்கலாமே. (இசை வெளியீட்டை வேறொரு நாளுக்கு மாற்றியிருக்கலாம்). அதற்கு முன்னமே சென்றதனால் சீமான் அண்ணா படத்துக்கு ஆதரவு என்பதே என் கருத்து.

இப்பொழுது படத்தை எதிர்ப்பவர்களை எதற்கு எதிர்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்டு விட்டு கொஞ்ச நாளால் படம் ஒழுங்காக வராவிட்டால் இவர்களும் சேர்ந்து எதிர்ப்பார்கள் என்பதில் என்ன நியாயம் உள்ளது? முதலிலேயே மற்றவர்களுடன் சேர்ந்து போராடி படத்திலுள்ள காட்சிகளை நீக்க சொல்லியிருக்கலாமே.

பாரிவேந்தர், பிரவீன்காந்தி போன்றவர்களுடன் பகைக்காமல் நடக்க சீமான் அண்ணா நினைக்கலாம். ஆனால் இவ்வளவு காலமும் போராட்டங்களுக்கு கூட நின்று ஆதரவு தந்தோரை பகைத்துக்கொண்டு அதை செய்வது தவறு.

ஆதரவு கொடுத்த பலர் இன்று சீமான் அண்ணா மேல் நம்பிக்கை இழந்து விட்டார்கள். இனி புலிப்பார்வை படமே சரியாக வந்தால் கூட இழந்த நம்பிக்கை மீள பெறப்படுமா தெரியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.