Jump to content

YARL கள அப்பாகளுக்கு

Recommended Posts

சிவனேன்னு.. பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்த மனிசனுக்கு முன்னால ரீ யை கொண்டு வந்து வைச்சிட்டு.. சண்டித்தனமும் பண்ணினதுமில்லாம.. வன்முறையில் ஈடுபட்டிட்டு.. அந்தப் பழிய அப்படியே தூக்கி அந்த ஆண் மீது போடுவது.. ரெம்பக் கொடுமை. இது பெண்கள் மீதும் அவர்களின் நடவடிக்கைகள் மீதும்.. ஆண்களுக்கு சந்தேகப் பார்வையையே உருவாக்குகிறது..! இந்த வீட்டு வன்முறை அணுகுமுறைகளை பெண்கள் கைவிட வேண்டும். அமைதி வழிக்கு அவர்கள் திரும்ப வேண்டும்..! :lol::)

அண்ணை,

அந்த ஆண் என்ன கூறியிருப்பார் என்று தெரியாமல் அந்த பொண்ணு மேலை பழியைப்போட்டதுமில்லாம... வன்முறையில் ஈடுபடுறா என்று வேற நீங்கள் சொல்வது ரொம்ப கொடுமை. இது ஆண்கள் மீதும் அவர்கள் நடவடிக்கை மீதும் பெண்களுக்கு சந்தேகப்பார்வையை உருவாக்குகிறது. இந்த வீட்டு வன்முறைகளை ஆண்கள் கைவிட வேண்டும். அமைதி வழிக்கு அவர்கள் திரும்ப வேண்டும். :lol:

அப்படியும் சொல்லலாம் தானே. :icon_mrgreen:

"சிவனேன்னு.. பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்த மனிசனுக்கு முன்னால ரீ யை கொண்டு வந்து வைச்சிட்டு.. சண்டித்தனமும் பண்ணினது" எல்லாம் வீடியோ எடுக்கினம் என்று தெரிந்து கொடுத்த போஸ் தான். அது உண்மையில் நடக்கவில்லை. :D அப்படி இருக்க அந்த வீடியோவை பார்த்து விட்டு நாங்கள் இப்பிடி பகிடிக்கு சண்டை பிடிக்கிறமே. வீடியோவில் சண்டை பிடித்தவர்கள் கூட ஒற்றுமையாகி விட்டார்கள். :lol: அவா கூட பிறகு ரீ யை அவரிட்டை குடுத்திட்டா. :(:lol:

சரி, இனி யாழ் களத்தில் உள்ள வேறு தந்தைகள் வந்து உங்கள் தந்தைகளை பற்றி கருத்து எழுதுங்கோ. நாங்கள் வாசிக்கிறம். :D

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply

[size=4]இந்த தலையங்கத்தை பார்த்தவுடன் நான் ஒன்றுமே எழுதக்கூடாது என்ற முடிவில் வந்தேன். ஆனால் என் மனச்சாட்சி விடவில்லை திரும்பவும் ,திரும்பவும் ஏதோ எழுது எழுது என்று உறுத்தியதால் எழுத ஆரம்பித்துவிட்டேன். நான் இன்று நானாக இருப்பதும்,ஆரோக்கியமாய் இருப்பதும்,ஒட்டுமொத்தத்தில் ஓர் மனிதனாய் இருப்பதும் என் தந்தை தந்த பிச்சை...........15 வயதில் என் தாயை இழந்தேன் .........அந்த நேரத்தில் எனது அப்பாவிற்கு இன்னொரு திருமணம் செய்யும் எல்லாத்தகுதியும் இருந்தது,பணம்,பொருள் வயது,அழகு,[சிவாஜி கணேசன் போல் தோற்றம்] ஆனால் அவர் தெரிந்தெடுத்த பாதை இன்று நான் நானாக இங்கிருக்க ,என் தங்கை வைத்தியராக இருக்க,தம்பி chartered accountant [பட்டைய கணக்காளர் ] ஆகா இருக்க ,இன்னொரு தம்பி கனடாவில் ஓர் பிரபல்யமான பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் ஆகா இருக்க இன்னும் இன்னும் எத்தனையோ .........தாயகத்தை ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வங்கிரோத்து நிலைமைக்கு வந்துவிட்ட என் அப்பா என்ன என்ன எல்லாம் செய்து எங்களுக்கு ஓர் தந்தைக்குரிய வரைவிலக்கனத்தொடு இருந்தார் என்று இங்கு சொல்வதானால் சகோதரர் நெல்லையன் கூறியது போல் யாழ் களம் போதாது.அன்று அவர் இன்னொரு திருமணம் செய்திருந்தால் நாம் எல்லாம் சீரளிந்திருப்போம்.........ஆனால் இரு ஆண்டுகளுக்கு முன் அந்த தெய்வம் தனது கடமைகளை வெற்றிக்களிப்போடு நிறைவேற்றி விட்டு எனது அம்மாவிடம் சென்றுவிட்டது....... இன்று நான் எனது குடும்ப வாழ்க்கையை அவரின் வழிகாட்டலிலேயே வாழ முயர்சித்துவருகிறேன். இதை நான் எனது பெருமைகளை சொல்ல எழுதவில்லை ......என் தந்தையை பற்றி என் உறவுகளாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவல்பட்டே எழுதுகிறேன். இந்த தலைப்பை ஏற்படுத்தித்தந்த சகோதரர் அபராஜிதனுக்கும் நன்றி.[/size]

[size=4]இந்தப்பாடலின் வரிகள் எனக்கு பிடிக்கும் .சுமாராக பாடுவேன்.[/size]

[size=4][size=5]சிலுவைகளை நீ சுமந்து மாலைகள் எமக்கு சூடினாய் [/size][/size]

[size=4][size=5]சிறகடிக்கும் பறவைக்கெல்லாம் வானத்தைப்போல மாறினாய் [/size][/size]

[size=4][size=5]ஒரு சேவல் தான் [/size][/size]

[size=4][size=5]அடை[/size][/size]

[size=4][size=5] காத்ததை அதிசயம் பாருங்கள் [/size][/size]

[size=4][size=5]தந்தையை வாழ்த்துங்கள் .............................[/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடை காத்ததை .................இறுதிவரிகளில் ஏற்பட்டுள்ள எழுத்துப்பிழை...வேறை என்னத்தை எழுதுவது எல்லாம் நீங்களே சொல்லிட்டீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை,

அந்த ஆண் என்ன கூறியிருப்பார் என்று தெரியாமல் அந்த பொண்ணு மேலை பழியைப்போட்டதுமில்லாம... வன்முறையில் ஈடுபடுறா என்று வேற நீங்கள் சொல்வது ரொம்ப கொடுமை. இது ஆண்கள் மீதும் அவர்கள் நடவடிக்கை மீதும் பெண்களுக்கு சந்தேகப்பார்வையை உருவாக்குகிறது. இந்த வீட்டு வன்முறைகளை ஆண்கள் கைவிட வேண்டும். அமைதி வழிக்கு அவர்கள் திரும்ப வேண்டும். :lol:

அப்படியும் சொல்லலாம் தானே. :icon_mrgreen:

"சிவனேன்னு.. பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்த மனிசனுக்கு முன்னால ரீ யை கொண்டு வந்து வைச்சிட்டு.. சண்டித்தனமும் பண்ணினது" எல்லாம் வீடியோ எடுக்கினம் என்று தெரிந்து கொடுத்த போஸ் தான். அது உண்மையில் நடக்கவில்லை. :D அப்படி இருக்க அந்த வீடியோவை பார்த்து விட்டு நாங்கள் இப்பிடி பகிடிக்கு சண்டை பிடிக்கிறமே. வீடியோவில் சண்டை பிடித்தவர்கள் கூட ஒற்றுமையாகி விட்டார்கள். :lol: அவா கூட பிறகு ரீ யை அவரிட்டை குடுத்திட்டா. :(:lol:

சரி, இனி யாழ் களத்தில் உள்ள வேறு தந்தைகள் வந்து உங்கள் தந்தைகளை பற்றி கருத்து எழுதுங்கோ. நாங்கள் வாசிக்கிறம். :D

பேசாம இருக்கிற ஒருத்தரை சும்மா வம்புக்கு இழுத்து அவர் மீது வன்முறையை பிரயோகிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. அந்த வகையில்.. இந்தப் பெண் கொடும் வன்முறையை செய்கிறார்.

வீடியோ.. அந்தப் பெண்ணிற்கு தெரியாமல் அவரின் வன்முறையை இனங்காட்ட பதிவு செய்யப்பட்டதாகக் கூட இருக்கலாம். இல்ல.. பெண்கள் இவ்வாறான வீட்டு வன்முறையை ஆண்கள் மீது பிரயோகிக்கிறார்கள் என்பதை இனங்காட்டவும் எடுக்கப்பட்டிருக்கலாம்.

எதுஎப்படியோ.. பெண்கள்.. வன்முறை வழியை கையில் எடுத்தால் அவர்களுக்குத் தான் சேதாரம் அதிகமாக இருக்கும். ஆண்களும் ஒரு எல்லைக்குத் தான் பொறுமை காக்க முடியும்..! இவ்வாறான.. வன்முறைகளுக்கு ஆண்களும் வன்முறையால் பதில் அளித்தால்.. பெண்களின் நிலை..???! :lol::D

Link to comment
Share on other sites

ஆடை காத்ததை .................இறுதிவரிகளில் ஏற்பட்டுள்ள எழுத்துப்பிழை...வேறை என்னத்தை எழுதுவது எல்லாம் நீங்களே சொல்லிட்டீர்கள்.

நன்றியம்மா ........பிழையை திருத்திவிட்டேன்

Link to comment
Share on other sites

பேசாம இருக்கிற ஒருத்தரை சும்மா வம்புக்கு இழுத்து அவர் மீது வன்முறையை பிரயோகிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. அந்த வகையில்.. இந்தப் பெண் கொடும் வன்முறையை செய்கிறார்.

வீடியோ.. அந்தப் பெண்ணிற்கு தெரியாமல் அவரின் வன்முறையை இனங்காட்ட பதிவு செய்யப்பட்டதாகக் கூட இருக்கலாம். இல்ல.. பெண்கள் இவ்வாறான வீட்டு வன்முறையை ஆண்கள் மீது பிரயோகிக்கிறார்கள் என்பதை இனங்காட்டவும் எடுக்கப்பட்டிருக்கலாம்.

எதுஎப்படியோ.. பெண்கள்.. வன்முறை வழியை கையில் எடுத்தால் அவர்களுக்குத் தான் சேதாரம் அதிகமாக இருக்கும். ஆண்களும் ஒரு எல்லைக்குத் தான் பொறுமை காக்க முடியும்..! இவ்வாறான.. வன்முறைகளுக்கு ஆண்களும் வன்முறையால் பதில் அளித்தால்.. பெண்களின் நிலை..???! :lol::D

நீங்கள் சொன்னபடி நடந்திருந்தால்,

ஒரு வீட்டில் நடக்கும் சம்பவத்தை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்து அதை youtube இல் போடுவதென்பது உச்சக்கட்ட வன்முறை. :lol: :lol: இந்த விதத்தில் அந்த ஆண் ஒரு வன்முறையாளர். :lol:

பெண்கள் சும்மா இருக்கும் போதே குடித்து விட்டு ஆண்கள் பெண்களை அடிப்பதும் நடக்கிறது அண்ணை. உலகத்தை கொஞ்சம் ஊடுருவி பாருங்கோ. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்னபடி நடந்திருந்தால்,

ஒரு வீட்டில் நடக்கும் சம்பவத்தை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்து அதை youtube இல் போடுவதென்பது உச்சக்கட்ட வன்முறை. :lol: :lol: இந்த விதத்தில் அந்த ஆண் ஒரு வன்முறையாளர். :lol:

பெண்கள் சும்மா இருக்கும் போதே குடித்து விட்டு ஆண்கள் பெண்களை அடிப்பதும் நடக்கிறது அண்ணை. உலகத்தை கொஞ்சம் ஊடுருவி பாருங்கோ. :icon_idea:

வீட்டுக்குள் பெண்கள் செய்யும் அநியாயத்தை.. அராஜகத்தை வெளில கொணர இப்படியான வீடியோக்களைப் பயன்படுத்துதல் தவறல்ல. அது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றும் கூட. இது வன்முறை அல்ல..!

மேலும்.. ஒரு ஆண் குடிக்கிறானுன்னா.. அவனுக்கு வீட்டில அமைதியான அன்பான நிம்மதியான சூழல் இல்லை என்று தான் அர்த்தம். அதற்கு காரணம்.. பெண்களே..! அந்த வகையில்.. பெண்கள் சும்மா இருக்க ஆண்கள் குடிக்கினம் என்று சொல்ல முடியாது. பெண்களின் தொந்தரவு.. அவர்கள் கொடுக்கும் மன உளைச்சல் தாங்கேலாது குடிக்கும் ஆண்களே அதிகம். அந்த வகையில் ஆண்கள் மீது வன்முறையை பிரயோகிக்கும் பெண்கள்.. ஆண்கள் வன்முறையை தெரிவு செய்யவும் அவர்களே காரணமாக இருக்கின்றனர் என்பது வெள்ளிடைமலையாகும்..!

பெண்கள் எப்போது அன்பு.. பாசம்.. கருணை.. புரிந்துணர்வு..நேசம்.. விட்டுக்கொடுப்பு.. இந்த 6 ஐயும் கையில் எடுக்கிறார்களோ அன்று தான் அவர்களுக்கும் அவர்கள் சார்ந்தோருக்கும் நிம்மதியும் அமைதியும் சாந்தமும் பிறக்கும்..! செய்வார்கள் என்று நினைக்கிறீங்க..????! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் சண்டை போடும் போது ஆண்கள்,பெண்கள் ஆ...நாங்கள் சண்டை போடுறம் நீங்கள் வீடியோ எடுங்கோ என்று எல்லாம் தயார் படுத்தி விட்டா சண்டை போடுவார்கள்.....இது காசுக்காக தயாரிக்கப் பட்ட மெகா சீரியலாகவும் இருக்கலாம் இல்லயா....?

ஆம் அக்கா, அதை தான் சொன்னேன். நெடுக்ஸ் அண்ணா இல்லை என்றார். அதனால் அவர் கூற்று படி அவருக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. :D மற்றபடி இது தயாரிக்கப்பட்ட ஒரு வீடியோ தான். :) நீங்கள் குழம்பாதீர்கள். :D

[size=5]Note: ஆனால் வெளிநாடுகளில் சில வீடுகளில் வீட்டிற்கு முன், வீட்டினுள் (rest room [/size]இல்[size=5]) கமரா பொருத்தப்பட்டுள்ளது. தெரியாதவர்கள் கவனித்து நடப்பது நல்லது.[/size][size=5] :rolleyes:[/size]

[size=5]சிலர் வம்புக்கு room இனுள்ளும் பொருத்துவார்கள். :wub: வாடகைக்கு தங்கும் பெண்கள் முதலே கவனித்து பாருங்கள். [/size][size=5]அவதானம் உங்களுக்கு முக்கியம்.[/size] [size=5]இல்லாவிட்டால் உங்களை வீடியோ எடுத்து விட்டு blackmail பண்ணவும் சந்தர்ப்பமுண்டு.[/size][size=5] :wub:[/size]

[size=5]கண்ணுக்கு தெரியும் கமராக்களை கண்டு பிடிக்கலாம். :rolleyes: [/size]

[size=5]மிக சிறிய அளவில் உள்ள கமராக்களை கண்டுபிடிக்க முடியாது.[/size][size=5] :([/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் சண்டை போடும் போது ஆண்கள்,பெண்கள் ஆ...நாங்கள் சண்டை போடுறம் நீங்கள் வீடியோ எடுங்கோ என்று எல்லாம் தயார் படுத்தி விட்டா சண்டை போடுவார்கள்.....இது காசுக்காக தயாரிக்கப் பட்ட மெகா சீரியலாகவும் இருக்கலாம் இல்லயா....?

நிஜமோ.. மெகா சீரியலுக்கு தயாரானதோ.. வீடுகளில்.. பெண்கள் காட்டும் அராஜகத்தின்.. நிஜத்தை தானே பிரதிபலிக்கிறது. இது சமூகத்தில்.. பெண்ணாதிக்கக் கொடுமைகளை வெளிப்படுத்தும் முக்கிய காணொளியும் கூட..! இதையே ஒரு ஆண் செய்வதாக காட்சிப்படுத்தி இருந்தால்.. நீங்கள் எல்லாரும் இப்படி சமாளிப்புக்கேசனுகளை அள்ளி வீசுவீங்களா அல்லது அந்த ஆணை வைச்சு அவனின் செயலுக்கான பின்னணி பற்றி ஆராய்வீங்களா.. இல்லாமல்.. ஒரு பெரிய ஆணாதிக்க அத்தியாயமே எழுதுவீங்களா..???! கடைசியில் சொன்னதை தானே செய்வார்கள் அநேக பெண்கள்..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களோடை கதைச்சு வேலையில்லை..எந்த ஒரு பிரச்சனைக்கும் நீங்கள் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் தான்.ஒன்றை மட்டும் சொல்லிட்டு போறன். என் கண்ணில் படுகிற எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு ஒரு தலைப் பட்சமானதாக இருக்கவே இருக்காது....

இதில முயலும் இல்ல அதுக்கு மூன்று காலும் இல்ல.. ஆண்கள் வீட்டுக்குள் பெண்களால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற நிஜத்தை தான் சொல்கிறோம். அதை உங்களால் மறுதலிக்க முடியுமா..??!

நாங்கள் பெண்களால் தூண்டப்படும் ஆண்கள் வன்முறைகளில் ஈடுபடவில்லை என்று சொல்லேல்ல.. அதேநேரம்.. பெண்கள் வன்முறைகளில் ஈடுபடுவதோடு.. ஆண்களையும் தூண்டுகின்றனர் என்ற நிஜத்தை தான் சொல்கிறோம். அதில் எங்கே தவறிருக்கிறது..! முயல்.. மூன்று கால் இருக்கிறது..???! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

[size=5]ஒரு ஆண் உழைக்கப் போகாமல் வீட்டிலிருந்து கொண்டு மனைவி, மக்கள் கொண்டு வரும் காசில் சூடு, சுறணை இல்லாமல் சீவிச்சுக் கொண்டு இருப்பது பத்தாது என்று அவர்களின் காசில் பத்திரிகையையும் வாங்கி வாசித்துக் கொண்டு அதுவும் பத்தாது என்று இருக்கிற இடத்திலும் தேனீர் :rolleyes: [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காணொளியில் உள்ள ஆண் உழைக்கல்ல.. என்று இஞ்ச கொஞ்சப் பேருக்கு போன் போட்டு சொன்னவராக்கும்..???!

அதுபோக.. ஏன் ஆண் என்றால் உழைக்கனும்.. மனைவியிட உழைப்பில சாப்பிடக் கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்குது..????!

எத்தனையோ பெண்கள் காலம் காலமா தகப்பன்.. சகோதரங்கள்.. கணவன்.. காதலன் என்று ஆண்களின் உழைப்பில் ரீவி சீரியல் பார்த்துக்கிட்டு.. சீவிக்கினமே.. அதை எவர் தட்டிக்கேட்டா..??! அங்கெல்லாம் ஆண்கள் மனைவியை தாக்கினமா..???!

இது அப்பட்டமான பெண்ணாதிக்கம் இந்த உலகில் தலைவிரித்தாடுவதையே காட்டுகிறது. ஆண் தன் சுயத்திற்கு தீர்மானம் எடுக்க முடியாதபடி பெண்கள் அழுத்தம் கொடுக்கிறது.. ஆணின் அடிப்படை மனித உரிமைகளையே மீறச் செய்கிறது.

ரீ கேட்டா போட முடியாது என்றிட்டு போறது. அதைவிட்டிட்டு.. ரீ யை கொண்டு வந்திட்டு.. அதை கருவியா வைச்சு அந்த ஆண் மீது வன்முறையைப் பிரயோகிப்பது உணவை கருவியாக்கி உயிர்களைத் தண்டிக்கும் மிலேச்சத்தனத்தின் வெளியீடு. பெண்கள் இவ்வளவு மிலேச்சத்தனமான ஆக்களா..???! என்று சிந்திக்கத் தூண்டுகிறது மேற்படி காணொளி..! இந்த நிலையை பெண்கள் கைவிட்டு அமைதி வழிக்கு அன்பு வழிக்கு திரும்ப வேண்டும்..! :icon_idea::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஆண்களை ஆண்கள் என்டே சொல்லக் கூடாது கோழைகள் :D ...மனிசிட்ட பேச்சை வேண்டினது பத்தாமல் அந்த ரீயை வேற வெட்கமில்லாமல் குடிக்கப் போறார் :lol: ....வட்ட சேம் :icon_idea:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் அண்ணா, நீங்களும் நாற்சந்தியில் ஒரு திரி தொடங்கினால் நல்லது. :lol: அப்பாக்களுக்கான திரியில் ஒரு சில அப்பாக்களை தவிர வேறு அப்பாக்களை காணவில்லை. :D அதனாலையோ என்னமோ பிள்ளைகள் நின்று சண்டை பிடிக்கிறார்கள். :lol:

இதில் திருமணமான ஆண்கள் வந்து பதில் எழுத மாட்டார்கள் அவர்கள் வீட்டில் தினம்,தினம் நடப்பது தானே இது :lol:

பி;கு;நீங்கள் நாற்சந்தியில் திரியை ஆரம்பித்தது பத்தாமல் நெடுக்கரை வேற நாற்சந்தியில் போய் புதுத் திரி ஆரம்பிக்க சொல்கிறீர்கள் ஏன் என்று சொல்வீர்களா?

Link to comment
Share on other sites

பி;கு;நீங்கள் நாற்சந்தியில் திரியை ஆரம்பித்தது பத்தாமல் நெடுக்கரை வேற நாற்சந்தியில் போய் புதுத் திரி ஆரம்பிக்க சொல்கிறீர்கள் ஏன் என்று சொல்வீர்களா?

அதுக்கு ஏன் அக்கா என் திரியை இழுக்கிறீங்கள். :o :o

இல்லை அக்கா, தந்தையர் தினத்துக்கு ஆரம்பிக்கப்பட்ட திரியில் (வேறு திரி என்றால் பரவாயில்லை) தந்தைகளுக்கெதிரான சண்டையும் சச்சரவுமாய் இருப்பதால் சொன்னேன். நிச்சயம் உங்கள் கருத்துக்கு நெடுக்ஸ் அண்ணா பதில் கருத்து எழுதுவார். :lol: பிறகு அதற்கு திரும்ப யாராவது பதில் கருத்து எழுதுவார்கள். :D இது தொடரப்போகுது. நானும் கருத்து எழுதுவம் என்று தொடங்கி இடையில் நிறுத்தி விட்டேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி.. அமைதி.. அமைதி..! :rolleyes:

நீங்கள் இப்படி பொங்கினால், மற்ற அப்பாக்கள் எப்படி இங்கே வருவர்? :o

நான் கேட்டது நீங்கள் போய் ஏன் நாற்சந்தியில் அந்தத் திரியைத் தொடங்கினீர்கள்?...அதில் மறைத்து எழுதுவதற்கு என்ன இருக்கு என்று புரியவில்லை :unsure:

Link to comment
Share on other sites

நான் கேட்டது நீங்கள் போய் ஏன் நாற்சந்தியில் அந்தத் திரியைத் தொடங்கினீர்கள்?...அதில் மறைத்து எழுதுவதற்கு என்ன இருக்கு என்று புரியவில்லை :unsure:

அக்கா, நான் எதையும் மறைத்து எழுதுவதற்கு அந்த திரியை தொடங்கவில்லை. :( நிழலி அண்ணாவின் தந்தையை பற்றிய திரியில் யாழ்ப்பாணத்தவர் பற்றிய சண்டை தொடரக்கூடாது என்று நினைத்து நாற்சந்தியில் திரி தொடங்கினான். :)

அமைதி.. அமைதி.. அமைதி..! :rolleyes:

நீங்கள் இப்படி பொங்கினால், மற்ற அப்பாக்கள் எப்படி இங்கே வருவர்? :o

:lol: :lol: :lol:

மற்ற அப்பாக்களை வந்து தங்கள் அப்பா பற்றி கருத்து எழுத சொல்லுங்கோ. பிள்ளைகளின் சண்டை நின்று விடும். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

உங்களுடைய அப்பாக்கள் பற்றி பகிர்ந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அப்பா

ஐந்து பெண் பிள்ளைகளுக்கு பின் கதிர் காமத்தில் தவமிருந்து பிறந்த ஆண் குழந்தை நான்.

ஏற்கனவே முருகன் கோயில் தர்மகர்த்தா என்பதால் நானும் முருகன் அவருக்கு.

காலையில் அம்மா எழும்பி ஆட்டில் பால்கறந்து அதில் அவருக்கு மட்டும் தேனீர் போடுவார். மற்றவர்களுக்கு மாட்டுப்பால் அல்லது மாப்பால். அதை குடித்தபடி அவர் கூப்பிடுவது என்னைத்தான். கால் கப் எனக்குத்தருவார். இது நான் ஊரிலிருக்கும் வரை தொடர்ந்தது. இரவு படுக்கை அவரது நெஞ்சின் மீது. இது வயது வந்து நானாக கீழிறிங்கி படுக்கும் வரை இருந்தது. எனகக்கு ஒருரு அண்ணர் உண்டு. அவருக்கும் எனக்கும் 15 வயது இடைவெளி. அவரையும் நான் தகப்பன் என்று தான்சொல்வதுண்டு.

அவரை தர்மன் என்று அப்பா சொல்வார். ஏனெனில் நான் செல்லம் காரணமாக நேருக்கு நேர் கதைப்பேன். அண்ணர் அப்பாவை நிமிர்ந்து பார்த்தே கதைத்ததில்லை. எனது கேள்விகளும் சேட்டைகளும் அநேகமான நேரங்களில் அவருக்கு கோபத்துக்கு பதிலாக சிரிப்பை வரவைத்துவிடும். சிரித்து விட்டு போய்விடுவார். ஆனால் வீட்டில் அவரைத்தவிர எவரும் என்னை தண்டிக்க உரிமையில்லை. அக்காமார் சொல்வார்கள் சின்ன வயயதில் தாங்கள் எனக்கு ஏதாவது செய்து விட்டால் அப்பர் வரும்வரை அழுது கொண்டு இருப்பேனாம். அதை நிற்பாட்ட தாங்கள் படும்பாடு என்பார்கள்.

கொஞ்சம் எனக்கு வயது வர அக்காமார் வெளியில் போவதென்றாலும் என்னிடம் தான் அனுமதி பெறணும் என பொறுப்பை என்னிடம் மெதுவாக ஒப்படைத்துவிட்டார்.

பொழுபோக்காக வீட்டில் அத்தனை வேலைகளையும் தானே செய்வார். அத்தனை மரக்கறி வகைகள் பழவகைகள் மற்றும் செவ்விளநீர் முதற்கொண்டு பல மருந்துக்கான வகைகள் வரை வீட்டில் இருக்கும். (நாங்கள் எழும்பி கிணற்றடிக்கு போகும் முன்பே பாத்தி கட்டி வீடுவார் இன்றைக்கு எதற்கு தண்ணீர் போகணும் என.) சில ஆடுகள் சில மாடுகள் பல கோழிகள் வண்டில்மாடு (திறமான காளை மாடு பார்த்து வாங்கிவருவார்) என வாழ்க்கைக்கு தேவையான அத்தனையும் வீட்டு வளவில் இருக்கும். ஆனால் அவரது தொழில் வேறு.

இவற்றை நினைக்கும்போது தாயகத்தில் நாம் இழந்தவை இவை அனைத்தும் என கண்கள் கலங்குகின்றன.

இப்படிடி எனது தகப்பனார்பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.

பிரான்சில் வந்து என்னுடன் இரண்டு வருடங்கள் இருந்தார். எங்கள் எவருக்கும் விருப்பமில்லாத போதும் அடம்பிடித்து ஊர் திரும்பினார்.

அங்கு போயும் பல காலம் நோய் நொடியின்றி நன்றாக வாழ்ந்தார்.

அம்மாவுக்கு ஏற்பபட்ட சிறு வயிற்று நோவுக்கு கமரா வைத்து பார்க்க வெளிக்கிட்டு அது குடலில் சிறு காயத்தை ஏற்படுத்தியதால் அவர் 3 நாட்கள் வைத்தியசாலையில் தங்கவேண்டி வந்ததால் தன்னை தனியே விட்டு விட்டு போய் விடுவாவோ என்ற பயம் காரணமாக ஏற்பட்ட வருத்தத்தால் மரணமானார்.

அவர் இறப்பதற்கு முன் தன் மூத்தமகனிடம் சொன்னது

எனக்கு எந்தக்குறையுமில்லை. எல்லாம் பெற்றுவிட்டேன்.

எனது சாவீட்டை திருமணவீடுபோல் நடாத்துங்கள் என்று.

அது போலவே நல்லூரிலிருந்து செம்மணிவரை மலர் தூவி அனுப்பிவைத்தோம்.

என்னால் மட்டுடுமே பேபாகமுடிடியவில்லை.

அவரை எரியூட்டியபோது இங்கு எனது ரத்தம் பலவாறு ஓடித்திரிந்ததை உணர்ந்தேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.