Jump to content

இந்த நேரத்தில் ஏன் இந்தியப் பயணம்?


Recommended Posts

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய இந்தியப் பயணத்தை நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப் போகிறார். அவரது இந்தப் பயணத்தின் நோக்கம், புத்தகாயாவுக்கும், திருப்பதிக்கும் புனித யாத்திரை செல்வது தான் என்று கூறுகிறது அரசாங்க அறிக்கை.

 

பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகாயாவில் 1500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பௌத்த விகாரை உள்ளது. இங்கு தான் புத்தருக்கு ஞானம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள மகாபோதி விகாரையில் இருந்த வெள்ளரச மரக் கிளையில் ஒன்றைத் தான், அசோக மன்னனின் மகளான சங்கமித்தை, இலங்கைக்கு கொண்டு வந்து அநுராதபுரத்தில் நாட்டியதாகவும் வரலாறு கூறுகிறது.


பௌத்தர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக கருதப்படும், புத்தகயாவுக்கும் இலங்கைக்கும் நெருக்கமான உறவுகள் உள்ளன. இலங்கையில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான பௌத்தர்கள் புத்தகாயாவுக்கு யாத்திரை செல்கின்றனர்.

இதற்கு வசதியாக, மிஹின் லங்கா விமானம் புத்த கயா சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவைகளை நடத்தி வருகிறது. இதன்மூலம் அண்மைக்காலத்தில் புத்தகாயாவுக்கான இலங்கை பௌத்தர்களின் யாத்திரைப் பயணங்கள் அதிகரித்துள்ளன.


கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மிஹின் லங்கா சிறப்பு விமானத்தில் வரும் வெள்ளிக்கிழமை, புறப்படும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புத்தகாயாவில் வழிபாடுகளை நடத்தப் போகிறார். அதன் பின்னர், பீகார் மாநில முதல்வர் நித்தீஸ்குமாருடனும் அவர் பேச்சு நடத்துவார்  என்று புதுடில்லிக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவாசம் தெரிவித்துள்ளார்.

 

அதையடுத்து, ஆந்திர மாநிலத்தில் உள்ள ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு தனி விமானத்தில் செல்லும் அவர் அங்கிருந்து கார் மூலம் திருப்பதிக்குச் செல்கிறார். அங்கும் சிறப்பு வழிபாடுகளை முடித்துக் கொண்டு மீண்டும் ரேனிகுண்டா விமான நிலையத்தில் இருந்து கொழும்பு திரும்பப் போகிறார்.


இது ஒரு அரசுமுறைப் பயணம் அல்ல என்றும் புனித தலங்களுக்கான யாத்திரையே என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இதற்குள்ளேயும் ஒரு அரசியல் நோக்கம் இருக்காமல் இல்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா வரப்போகிறார் என்ற செய்தி கடந்தவாரம் வெளியானதுமே, அதற்கு எதிரான போராட்டங்களை நடத்தும் முயற்சிகளும் ஆரம்பமாகி விட்டன.

 

இப்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டங்கள் இந்தியாவில் மூன்று இடங்களை மையப்படுத்தி நடக்கப் போகின்றன. முதலாவது சென்னையில், இரண்டாவது திருப்பதியில், மூன்றாவது புதுடில்லியில்.


கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்தார். அதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கறுப்புக்கொடி காண்பித்துப் போராட்டம் நடத்தவதற்கென, வைகோ தலைமையிலான ம.தி.மு.க.வினர் சாஞ்சிக்கு பஸ்களில் புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்களை மத்தியப் பிரதேச எல்லையில் வைத்தே அந்த மாநில அரசு தடுத்து வைத்தது.


எனினும், எதிர்ப்புப் போராட்ட பயத்தினால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிட்டத்தட்ட ஒரு அதிகாரபூர்வமற்ற ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்தி, கடுமையான பாதுகாப்புக் கொடுக்கப்பட்டது. சாஞ்சிக்கு செல்லும் வீதிகள் அடைக்கப்பட்டு, குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்காக சேவைகள் நிறுத்தப்பட்டு, கிராமங்களில் உள்ள மக்கள் வீதிகளுக்கே வரமுடியாமல் தடுக்கப்பட்டு, பாதுகாப்புக் கொடுக்க பெரும் சிரமப்பட்டது மத்திய பிரதேச மாநில அரசு.

அதேநிலை இப்போது மீண்டும் வந்துள்ளது.  ஆனால், பீகார் மாநில அரசுக்கு இப்போது அவ்வளவு சிரமம் ஏற்பட வாய்ப்பில்லை. ஏனென்றால், எந்தவொரு தமிழ் அமைப்புமே புத்தகயாவில் எதிர்ப்பைத் தெரிவிக்கப் போவதாக, இன்னமும் அறிவிக்கவில்லை. ஆனால், சத்தமில்லாமல் சென்று யாரேனும் எதிர்ப்புக்காட்ட முனையலாம் என்பதால், பீகார் அரசினாலும், நிம்மதியாக இருந்து விடமுடியாது.


கடந்த ஆண்டு சாஞ்சியில் காண்பிக்கப்பட்ட அதே பாதுகாப்பு இறுக்கத்தை புத்தகயாவிலும் எதிர்பார்க்கலாம். அடுத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செல்லப் போகும் இடம் திருப்பதி. அது உண்மையிலேயே சவால் நிறைந்த இடம்தான். ரேனிகுண்டா விமான நிலையத்தில் இருந்து  சுமார் 38 கி.மீ தொலைவில் தான், திருப்பதி திருமலை தேவஸ்தானம் உள்ளது. அதுவும் தரைவழியாக காரில் தான் அங்கு செல்ல வேண்டும்.

 

ஏற்கனவே, திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு விட்டன. ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளும், இந்திய பாதுகாப்பு அதிகாரிகளும், இணைந்து தேவஸ்தான நிர்வாகத்துடன் பேசி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


ஆனாலும் எப்போதும் பக்தர்களால் நிரம்பியிருக்கும், திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி எவராவது எதிர்ப்புத் தெரிவித்து விடுவார்களோ என்ற அச்சம் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உள்ளது.

 

அதைவிட, ரேணிகுண்டாவுக்கும், தேவஸ்தானத்துக்கும் இடைப்பட்ட 38 கி.மீ வீதியில் எங்காவது எதிர்ப்புத் தெரிவிக்கப்படலாம் என்ற  எதிர்பார்ப்பும் உள்ளதால், இந்தியக் காவல்துறையும், மத்திய புலனாய்வுப் பிரிவுகளும் உசார்படுத்தப்பட்டுள்ளன.


திருப்பதியில் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகளே போராட்டத்தை அறிவித்துள்ளது. இவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் என்பதால், தமிழக எல்லையில் வைத்தே இவர்களை தடுக்கும் முயற்சிகளில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயணத்தினால், புதுடில்லியிலும் சென்னையிலும் இரு வேறு போராட்டங்கள் நடக்கவுள்ளன. அவற்றினால், நேரடி அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும், இந்தப் பயணத்துக்கு உள்ள எதிர்ப்பை வெளிப்படுத்தும். புதுடில்லில் நடக்கப் போவது பிரதமர் மன்மோகன் சிங் வீட்டை முற்றுகையிடும் போராட்டம்.


அதை நடத்தப் போவது வைகோ தலைமையிலான மதிமுகவினர். இதற்கென அவர்களில் ஒருபகுதியினர் ஏற்கனவே சென்னையில் இருந்து ரயிலில் புறப்பட்டுவிட்டனர். ஏற்கனவே கடந்த செப்ரெம்பரில் சாஞ்சிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்த போது மத்தியப் பிரதேசம் வரை சென்று எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இவர்கள்.

 

இன்னொருமுறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா வந்தால்,  பிரதமர் மன்மோகன்சிங் வீட்டையே முற்றுகையிடுவோம் என்று அப்போது வைகோ எச்சரித்திருந்தார். அதன்படியே இப்போதைய போராட்டம் நடக்கப் போகிறது.


புதுடெல்லிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செல்லும் திட்டத்தை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும், பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தை முற்றுகையிடுவதன் மூலம், இந்தப் போராட்டத்துக்கு பெரியளவிலான பிரசாரம் கிடைக்கும். அதேவேளை, சென்னையில் திமுகவின் தலைமையிலான டெசோ அமைப்பு

கறுப்புச்சட்டையில் எதிர்ப்புப் போராட்டம் நடத்தவுள்ளது.

 

தி.மு.க பங்கேற்பதால், இதில் பெருந்திரளானோர் பங்கேற்க வாய்ப்புள்ளது என்ற போதிலும், இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்தியப் பயணத்தில், பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்திய அரசாங்கம் வரவேற்கிறதோ இல்லையோ, புனித தலங்களுக்கு வரும் அவரை தடுக்கக் கூடாது என்று கூறியுள்ள ஒரே ஒருவர், இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் தான்.


ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த மாதக் கூட்டத்தொடரில் இலங்கை நெருக்கடிகளை எதிர்நோக்கவுள்ள சூழலில், பொதுநலவாய மாநாடு தொடர்பான சர்ச்சைகள் நீளும் நிலையில், நிம்மதி தேடி இந்தப் புனித யாத்திரையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்வதாக தெரிகிறது. இன்னும் சிலர் இது தோச நிவர்த்திக்கானது என்கின்றனர்.

 

எது எவ்வாறாயினும், இந்தப் பயணத்தின் மூலம் சந்தர்ப்பம் கிடைத்தால்,  இந்தியாவின் ஆதரவு காரி அவர் கதவுகளைத் தட்டாமல் விடப் போவதில்லை. குறிப்பாக, மாநில அரசுகளுடன் உறவுகளை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. காரணம், இந்தியாவில் தனிக்கட்சி ஆட்சி என்பது இல்லாமல் போய் விட்டது.


இப்போதும் இனிமேலும் மாநிலக் கட்சிகளின் கையில் தான் எல்லாமே இருக்கப் போகிறது. எனவே காங்கிரஸ் கட்சியை மட்டும் நம்பிக் கொண்டிருந்தால் சரிவராது என்பது இலங்கை அரசுக்கு நன்றாகவே புரிந்து விட்டது. அதனால், மாநில அரசுகளுடன் இலங்கை உறவுகளை ஏற்படுத்தி புதுடில்லியில் இலங்கையின் நலனை உறுதிப்படுத்த முனைகிறது.

 

கடந்த செப்ரெம்பரில் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் சௌகானுடன் பேசி உறவை ஏற்படுத்தினார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதேபோல, இதற்கு முன்னர் திருப்பதி சென்றிருந்தபோது, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியுடன் பேசியிருந்தார். இப்போது பீகார் முதல்வருடன் பேசப் போகிறார்.


இந்த மூன்று மாநிலங்களும் உத்தரப் பிரதேசத்துக்கு அடுத்ததாக அதிகளவிலான நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்ட மாநிலங்கள் என்பது கவனிக்கத்தக்கது. பீகாரில், 54 தொகுதிகளும், ஆந்திராவில் 42 தொகுதிகளும், மத்தியப் பிரதேசத்தில் 40 தொகுதிகளும் உள்ளன.

 

மாநில அரசுகளை வளைத்துப் போடும் நோக்கம் என்ற கணிப்பு சரியாக அமைந்தால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அடுத்த இலக்கு உத்தரப் பிரதேசமாக இருக்கும். அதுதான் 85 தொகுதிகளைக் கொண்ட மாநிலம் என்பதுடன், வாரணாசியில் சாரநாத் மற்றும் குஷிநகர் என்று இரு பௌத்த யாத்திரைத் தலங்களையும் கொண்டது.

சாரநாத்தில் தான் புத்தர் முதல் முறையான ஐந்து சீடர்களுக்கு தர்மபோதனை செய்தார். குஷிநகரில் தான் புத்தர் மரணத்தைத் தழுவினார் இப்படியான உறவுக்கு இந்தத் தலங்கள் அவருக்கு கைகொடுக்கும். இவ்வாறு மாநில அரசுகளுடன் உறவுகளை ஏற்படுத்துவதால், இலங்கைக்கு உடனடியாகப் பெரிய  இலாபம் கிடைத்து விடவோ, பெரிய திருப்பங்கள் ஏதும் நிகழவோ வாய்ப்பில்லை.

 

 

நீண்டகால நோக்கில் இது இலங்கையின் நலன்களுக்கு உறுதியான ஆதரவைக் கொடுக்கக் கூடியது. தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்புகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் எதிர்கொள்ளும் நிலையில், அதுபற்றி அரசாங்கம் அவ்வப்போது ஒன்றைக் கூறுவது வழக்கம். எமக்கு பேச்சு, உறவுகள் எல்லாம் மத்திய அரசுடன் தான். மாநில அரசுகளைப் பற்றிக் கவலையில்லை என்று அடிக்கடி அரசாங்கம் கூறுவதுண்டு.


ஆனால் அதையும் மீறி மாநில அரசுகளுடனும், மாநில முதல்வர்களுடன் இலங்கை அவ்வப்போது பேசவே செய்கிறது. தமிழ்நாடு முதல்வருக்குக் கூட அழைப்பு விடுத்தது. வெளிப்படையாக அரசாங்கம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்தப் பயணம் புத்தகயா மற்றும் திருப்பதிக்கானது என்று கூறினாலும், உள்ளூர அதற்குள்ளேயும் ஒரு அரசியல் உள்ளது.

 

அதுமட்டுமன்றி, தமிழ்நாட்டின் எதிர்ப்புகளையெல்லாம்  கண்டுகொள்ளப் போவதில்லை என்ற அலட்சியமும் இதன்மூலம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதையும் மறுக்க முடியாது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-31-14-50-37/58486-2013-02-07-17-00-02.html

Link to comment
Share on other sites

ஜனாதிபதி இந்தியா விஜயம்; தமிழகம், டில்லியில் ஆர்ப்பாட்டம்; பிரதமர் வீடு முற்றுகை; ஆயிரக்கணக்கானோர் கைது
வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013 08:56  

 


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை காலை இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், ஜனாதிபதியின் இந்த விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மற்றும் புதுடில்லி ஆகிய மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

 

அத்துடன், டில்லியிலுள்ள இந்திய பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையிலான 500க்கும் மேற்பட்ட அக்கட்சி ஆதரவாளர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும், பெங்களூரிலிருந்து கோயம்புத்தூர் சென்றுகொண்டிருந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ்த் தேசிய பொதுவுடமைக் கட்சி மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும் பொலிஸாருக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து அக்கட்சியின் ஆதரவாளர்கள் 100பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை, திருப்பதி செல்லவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கறுப்புக்கொடி காண்பிக்கப் புறப்பட்ட ம.தி.மு.க. ஆதரவாளர்களில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.


இன்று வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புத்தகாயாவில் வழிபாட்டில் ஈடுபடவுள்ளார். அதன் பின்னர் திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்யவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்நிலையில், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கத் தவறிவிட்டார் மற்றும் அம்மக்கள் மீதான அழுத்தங்களுக்கு ஜனாதிபதியே காரணமாகவுள்ளர் என்று வலியுறுத்தி தமிழக கட்சியினர் ஜனாதியின் இந்திய விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


 

தி.மு.க.வினர் கறுப்பு உடை ஆர்ப்பாட்டம்

அந்தவகையில், ஜனாதிபதி ராஜபக்ஷவின் இந்திய விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமாக மு.கருணாநிதி தலைமையில் கறுப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

 

இதில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர் என்று அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

 

 

புதுடில்லியில் பிரதமர் வீடு முற்றுகை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவுக்குள் அனுமதித்த பிரதமர் மன்மோகன்சிங் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் 500க்கும் மேற்பட்ட ம.தி.மு.க.வினர் புதுடில்லி, ஜந்தர் மந்தர் அருகே குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் கலவரங்கள் ஏற்படாதிருக்கும் வகையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

 

சென்னையில் சட்டசபை வாயிலில் போராட்டம்

சென்னையில் இன்று காலை சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதிய தமிழகம் எம்.எல்.ஏ.க்கள் அவை வாயிலில் நின்றபடி ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

 

 

ஓசூரில் ரயில் மறியல்

ஜனாதிபதியின் விஜயத்தைக் கண்டித்து ஓசூரில் தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியினர் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பெங்களூரில் இருந்து கோயம்புத்தூர் சென்ற ரயிலை அவர்கள் மறிக்க முயன்றபோது பொலிஸார் அவர்களைத் தடுத்துள்ளனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டோர் பொலிஸாரைத் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் நடத்திய 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பதியில் ம.தி.மு.க.வினர் கைது

ஜனாதிபதிக்கு கறுப்புக் கொடி காண்பிப்பதற்காக ம.தி.மு.க.வினர் திருப்பதிக்கு ரயில் மற்றும் சாலை வழியாக சென்றனர். ரயிலில் சென்ற ஆயிரக்கணக்கான ம.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். வீதியால் சென்றவர்கள் எல்லைப் பகுதியிலே தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

 

உருவ பொம்மை எரிப்பு

பொள்ளாச்சி காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அக்கட்சியைச் சேர்ந்த சுமார் 10பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

திருப்பதியில் 144 தடை உத்தரவு

மேலும் இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்டாக்கிலிருந்து திருப்பதி சென்றடைகிறார். அங்கும் போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு தமிழர் அமைப்புகள் அறிவித்துள்ளன.

 

இதனால் ரேணிகுண்டா விமான நிலையம் முதல் திருமலை செல்லும் வழியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

 

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/58491-2013-02-08-03-27-37.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நெடுமாறன் ஐயா முதலில் காங்கிரசில் இருந்தவர்தான். இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தார். ஆனால் என்றும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை மாற்றியதில்லை. பிஜேபி எதிர்ப்பு என்பது இப்போ தமிழகத்தில் உள்ள மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைத்துக்கும் வாழ்வா, சாவா போராட்டம். இதில் எங்களுக்கு காங்கிரசை பிடியாது என்பதால் நெடுமாறன் போனோர் இந்தியா கூட்டணியை ஆதரிக்க கூடாது என நாம் நினைப்பது சுயநலமும், தேவையில்லாமல் அவர்கள் வீட்டு விசயத்தில் மூக்கை நுழைக்கும் செயலுமாகும். ஈழ போராட்டம் தமிழ்நாட்டு அரசியலில் தீர்மானிக்கும் விடயம் அல்ல. அவர்கள் தமக்கு முக்கியமான விடயங்களின் அடிப்படையிலேயே விடயங்களை தீர்மானிப்பர். மன்சூரும் ஈழவிடுதலை நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை எனிலும், இவர் காங்கிரசில் சேர்ந்தது சுய இலாபத்துக்கு. நெடுமாறன் ஐயா இந்தியா கூட்டணியை ஆதரிப்பது பிஜேபி வரக்கூடாது என்பதால்.
    • இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.   வித்துபோட்டம் என்று சொல்வதற்கு வெட்கம் ....இதிலை பீலா வேறை..
    • வயது கூடும் போது வந்த ஞானோதயங்களில் இந்த உறைப்பு குறைப்பும் ஒன்று. தவிரவும் இறைச்சியின் சுவையே தெரியாது - மிளகாய்தூள் கறிக்குள் இறைச்சி துண்டை போட்டு சாப்பிட்டால், மான் ஏது, மரை ஏது - தூளின் சுவைதான் தெரியும்.  
    • நீங்க‌ள் ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யா ப‌ற்றி எழுதின‌து100/100 உண்மை இதை விய‌ன‌ரசு ஜ‌யா கூட‌ அன்மையில் சொல்லி இருந்தார் ஆனால் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா கூட‌ ப‌ய‌ணம் செய்த‌ சில‌ருக்கு கூட‌ ஜ‌யாவின் செய‌ல் பாடு பிடிக்க‌ வில்லை   க‌ந்துப்பு அண்ணா கோவிக்க‌ வேண்டாம் 2009த‌லைவ‌ரின் ம‌றைவோட‌ இல‌ங்கை அர‌சிய‌லை நான் எட்டியும் பார்ப்ப‌து கிடையாது   க‌ண்ண‌ க‌ட்டி காட்டில‌ விட்ட‌ மாதிரி தான் என‌க்கும் இல‌ங்கைக்குமான‌ அர‌சிய‌ல் அங்கு ந‌ட‌ப்ப‌து ப‌ற்றி என‌க்கு ஒரு கோதாரியும் தெரியாது.........................த‌லைவ‌ர் 2002க‌ளில் உருவாக்கின‌ த‌மிழ்தேசிய‌ கூட்ட‌மைப்பில் இருப்ப‌வ‌ர்க‌ள் ஒரு சில‌ர‌ தெரியும் மீதிப் பேர‌ தெரியாது....................................................
    • அவுஸ்திரேலிய கடற்கரையில் 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில், குறித்த திமிங்கிலங்கள் நேற்று (25) காலை கரை ஒதுங்கியுள்ளன. இவ்வாறு கரை ஒதுங்கிய திமிங்கிலங்களைக் காப்பாற்றுவதற்கு, கடல் உயிரியலாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கரை ஒதுங்கிய 26 திமிங்கிலங்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய திமிங்கிலங்களை மீட்டு கடலில் விடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/300286
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.