Jump to content

முருங்கைமரப் புனைவுகள்


Recommended Posts

ஜெனிவாத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. திருவிழாவின் பிரதான உபயகாரர் தன்னுடைய திக்குப் பாலகர்களை இலங்கைக்கு அனுப்பத் தொடங்கிவிட்டார்.

 

ஏற்கனவே சொன்னபடி திருவிழாவுக்கு ஏற்ற ஆயத்தங்களை இலங்கை செய்து முடித்திருக்கிறதா அல்லது முருங்கை மரத்திலிருந்து இன்னமும் இறங்காமல் ஒட்டிக்கொண்டிருக்கிறதா என்பதை அறியவேண்டியது உபயகாரரின் கடமை. இல்லாவிட்டால் திருவிழா நடத்தியும் பயனில்லை.


ஒருவேளை இன்னமும் முருங்கை மரமே தஞ்சமென்று இலங்கை வேதாளக் குணங்களோடு இருந்தால், திருவிழா மங்கலகரமாக இருக்காது. மாறாக பேயோட்டும் சடங்காக மாறிவிடும்.

 

திக்குப் பாலகர்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்பி, தாம் குடிகொண்டிருக்கும் முருங்கை மரம் பற்றிய கணிப்புகளைக் கலைக்க இலங்கையில் மணிமுடிவாசிகள் புனைவுகளை எங்கும் பரவவிடத் தொடங்கியுள்ளனர். ஆனால் இதுபோன்ற நிறைய வேதாளங்களைக் கண்டவர்கள் உபயகாரர்கள். வேடிக்கை என்னவென்றால் உபயகாரர்கள்தான் வேதாளங்களின் தலைவர்களும்கூட.


அவர்களால் ஒரு சாதாரண வேதாளம் என்ன செய்யுமென்பதையும், எந்த முருங்கை மரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் என்பதையும் ஒரு நொடியிலேயே கண்டுபிடிக்க முடியும். அமெரிக்க திரிசூலக்குழு வந்து போய்விட்டது. இந்தக் குழு வருவதற்கு முன்னர் இலங்கைப் பாதுகாப்புச் செயலர் ஒரு கூற்றை வெளியிட்டிருந்தார்.

 

அண்மைய வெற்றிகரமான புளுகுகளில் ஒன்றுதான் "இறுதிப்போரில் படையினரிடம் சரணடைந்த எவரும் காணமால் போகவில்லை. போர் நடந்த பகுதியில் இந்திய வைத்தியசாலைகள், செஞ்சிலுவைக்குழு என்பவற்றின் மூலம் கையேற்கப்பட்டவர்கள் தான் காணாமல் போயிருக்கிறார்கள். எனவே, இதற்குரிய முழுப்பொறுப்பும் அவர்களுக்கே." என்று மிகச் சாதாரணமாக இந்தியா மீதும் செஞ்சிலுவைக் குழு மீதும் பூசிவிட்டு தன்பாட்டுக்கு "சோலியைப்' பார்க்க போய்விட்டார் பாதுகாப்புச்செயலர் கோத்தபாய.


ஆனால் அவருடைய புனைவை மிதித்துக்கொண்டு வந்திறங்கியது திரிசூலக்குழு. வந்தவர்கள் எல்லா இடங்களிலும் தமது கழுகுப் பார்வையைப் பதித்தனர். அவர்களிடம் உண்மையின் குரலாக காணாமற்போனோர் விடயமே தமிழர்களிடத்தே இப்போதுள்ள முதன்மையான பிரச்சினை என்பதை முன்வைத்தார் யாழ். ஆயர்.

 

அவர் வாய் மூடும் முன்னரே "பாதுகாப்புச் செயலர் சொன்னது உண்மையல்ல என்பதை நேரில் கண்டு உணர்ந்தோம். காணாமற்போனோரின் உறவுகள் இன்னமும் கண்ணீரோடு அவர்களை மீட்டுத் தரும்படி எம்மிடம் கெஞ்சினார்கள்." என்று திரிசூலக்குழு கூறியது.


ஓர் அரசன், நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தான். நாட்டின் பல பகுதியிலிருந்தும் பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

 

ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒரு ஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான். அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தான்.


அந்த ஏழை சொன்னான், "அரசே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்." அரசனுக்கு கோபம் வந்துவிட்டது. "நீ பொய் சொல்கிறாய். நானாவது  உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?' என்று கத்தினான்! உடனே ஏழை சொன்னான்,

 

"அரசே, நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள், நான் சரியான பொய் சொன்னேன் என்று. எனவே போட்டி விதி யின்படி எனக்கு ஆயிரம் பொற் காசுகள் கொடுங்கள்." அரசன், தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந் தான். உடனே சொன்னான்,

 

"இல்லை, இல்லை, நீ பொய் சொல்லவில்லை." என்று அவசரமாக மறுத்தான். ஏழை சொன்னான்," நல்லது அரசே, நான் சொன்னது பொய் இல்லை, உண்மைதான் என்றால், எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்," அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.

 

நல்ல வேளையாக இப்போது இது போன்ற புளுகுப் போட்டிகள் நடப்பதில்லை. நடந்தால் இலங்கையில் ஏட்டிக்குப் போட்டியாக புனைவுகளை நினைத்தபாட்டுக்கு அவிழ்த்து விட்டுப் பின்னர் சில கணங்களிலேயே தங்களது பொய்கள் நிர்வாணமாகிவிட, அவமானப்பட்டு, அதிகாரச் சாட்டையை ஏந்தியிருப்பவர்கள் தோற்றுப் போகவேண்டியிருக்கும்.

தங்களது புனைவுகளின் சாயம் மறுநொடியே கரைந்து ஒழுகிப்போனாலும், அதைப்பற்றி கிஞ்சித்தும் இவர்களுக்குக் கவலையில்லை. தொடர்ந்தும் ஒருவரையொருவர் மிஞ்சிக்கொண்டு தினமும் தம்சார்பான பொய்களை எந்தவித கூச்சமுமின்றி கூவிக்கூவி காற்றில் மிதக்கவிடுகிறார்கள் இவர்கள்.

 

பாதுகாப்புச் செயலர் காணாமற்போனோர் பற்றி தான் "கண்டுபிடித்த' விளக்கத்தில் "இறுதிப் போரின் போது எங்கு ஓடுவது என்று திசைதெரியாமல் தவித்த மக்கள்  செஞ்சிலுவைக் குழு ஊடாகவும், இந்திய வைத்திய சிகிச்சை நிலையம் ஊடாகவும் மாத்திரமே படைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து சேர்ந்தனர்." என்று சொல்லி கண்ணீரில் தவிக்கும் மக்களை வெறுப்பேற்றியுள்ளார்.


அவரது கூற்று படையினரால் பிடிக்கப்பட்டு, காணாமற்போனோர் பற்றிய இருப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. பாதுகாப்புச் செயலர் கூட தான் சொன்னதைத் தானே நம்பியிருக்கமாட்டார். அந்தளவுக்கு கலப்படமற்ற தூய பொய் அதுவென்று அவருக்கு மட்டுமன்றி அகில உலகத்துக்குமே தெரிந்த ஒன்று.

 

போரின் தணல்கள் உயிர் தின்னும் பேராசையுடன் குறு நிலப்பரப்பில் குருதியாற்றை ஓடவிட்ட தருணத்தில் செந்நிறமான சிலுவையை தாங்கிய கொடிகளோ அல்லது அசோகச் சக்கரத்தோடு அசைந்தாடும் மூவர்ணக் கொடிகளோ மக்களை வரவேற்கவில்லை.


ஏனெனில் போரின் வெம்மை இந்தக் கொடிகளையெல்லாம் தூர ஓடவைத்திருந்தது.  போர் நடைபெறும் இடத்திலிருந்து எட்டவாகவே இவற்றின் அமைவிடங்கள் இருந்தன. எந்தவழியால் தப்பிப்பது என்பது தெரியாமல் கொதிக்கும் போர் என்ற எண்ணெய்ச் சட்டிக்குள் தவித்த மக்கள் படைக் கட்டுப்பாட்டுப் பிரதேச "அடுப்புக்குள்' வந்து விழுந்தனர்.

 

இந்த அடுப்பு எரிந்து கொண்டிருந்த பகுதிகளில் மக்களை வாள் ஏந்திய சிங்கங்களைக் கொண்டிருந்த கொடிகளே வர வேற்ற துர்ப்பாக்கியம் நிகழ்ந்தது. போரின் மரபார்ந்த நெறிமுறைகளையெல்லாம் மிதித்துவிட்டு வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு நகர்ந்தன.


அரச பாதுகாப்புப்  படைகள் ஏந்தி நின்ற கொடிகளில் பொறிக்கப்பட்டிருந்த சிங்கத்தின் வாளில் 24 மணி நேரமும் குருதி எந்தவித உறைதலுமின்றி வழிந்தோடிக்கொண்டேயிருந்தது. எங்கும் கூக்குரல்கள்.

 

காயங்களோடு மீட்பர்களுக்காகக் காத்திருந்து, காத்திருந்து உயிரற்றுப்போன உடலங்கள். மனித உடல்களைத் தின்று கொழுத்துப்போன காகங்கள். இந்த எல்லையில் வாள் ஏந்திய சிங்கக்கொடிகளுக்கு, தூரத்தே தெரியும் வெள்ளைக்கொடிகள் கூட புலிக்கொடிகளாகவே உருமாறின.


மஞ்சள் காமாலை பிடித்தவனுக்கு காணுகின்ற எல்லாக் காட்சியும் மஞ்சளாகவே தெரியும். கந்தகப் புகையும், வெற்றி மமதையும் படைகளின் கண்களை மறைத்திருந்தன. குருடாகிப் போன கண்களுக்கு புலிக்கொடிக்கும் வெள்ளைக் கொடிக்குமான பேதம் எப்படித்தெரியும்? சாட்சிக்கு யாரும் இல்லை. வேலியும் ஓணானும் மட்டுமே எஞ்சியிருந்தன.

 

என்னதான் கண்முன்னே வேலி ஆயிரம் பேரை கழுத்தறுத்துக் கொன்றிருந்தாலும்,  "நான் நிரபராதிதானே?" என்று வேலி கேட்டால், "ஓம்" என்று தலையாட்டுவதுதானே ஓணானின் குணம். ஓணான்கள் இங்கே காட்டிக்கொடுக்கும் சாட்சிகளாயின.


அவையும் பேதம் பாராமல் தலையாட்டிக்கொண்டே இருந்தன. ஒவ்வொரு தலையாட்டுதலுக்கும் ஒவ்வொருவர் அதிகாரத்தின் குகைக்குள் தள்ளப் பட்டுக்கொண்டிருந்தனர்.

 

ஏதும் செய்யமுடியாமல் ஊமைச்சாட்சியாய் விரிந்துகிடந்த வானம், கண்ணீர்த் துளிகளை மழைவழியே சிந்துவதைவிட வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை. ஓணானும் வேலியும் ஒன்றுகூடிச் செய்த வேள்வியில் கருகிப்போன உயிர்கள் பற்றிய கடைசிச் செய்தி புகைப்படங்களாகவும், காணொலிகளாகவும் வந்தவண்ணமேயுள்ளன.


ஆனாலும் கூட சற்றும் தளராத விக்கிரமாதித்தனாக தன் மீதான பழியை இந்தியா மீதும் செஞ்சிலுவைக்குழு மீதும் "அலாக்காகத்" தூக்கிப் போட்டிருக்கிறார் கோத்தா. கலப்படமற்ற பொய் என்பது அவருக்கு மிக நன்றாகவே தெரியும்.

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா? எப்போதுமே தன்னுடைய புளுகுக்கலையை உலகுக்கு காட்ட அவர் இப்படித்தான் ஏதாவது நம்பமுடியாத விடயங்களை சொல்லிக்கொண்டேயிருப்பார்.


உலகும் மக்களும் பொய் என்று தெரிந்தும் நம்புவது போல் நடித்து, திரிசூலக்குழுவைப்போல கேட்டுச் சிரித்துவிட்டுப் போகவேண்டியதுதான். என்னதான் புனைவுகளின் மீது படுத்துறங்கினாலும் ஜெனிவாத் திருவிழாவில் பேயோட்டம் ஒன்று நடக்கப்போவது மட்டும் மிகத் துலக்கமாகத் தெரிகிறது...!

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=6195345804289527

Link to comment
Share on other sites

ஜெனீவா போயோட்டம் எமது மக்களுக்கான கதவுகளை திறந்து விடட்டும் !

 

150636_330338003732634_405371878_n.jpg

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
    • திரும்பவும் வாண வேடிக்கை ஆரம்பமாகிவிட்டது. ☹️
    • இது நன்கு திட்டமிடப்பட்,  வன்முறை, அச்சுறுத்தல் எதுவும் பாவிக்கப்படாத  கொள்ளை Heist.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.