Jump to content

திருமலையில் பேசிய வீர வசனத்தை, சர்வதேச அரங்கிலும் சொல்வாரா சம்பந்தன்?


Recommended Posts

மீண்டும் வீர வசனங்களை அள்ளி வீச ஆரம்பித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன்.

அதாவது, தமிழ் தேசிய இனத்தின் இருப்பை இல்லாதொழிக்க சிங்களம் முயற்சிப்பதாகவும், தமிழ் மக்களின் பிறப்புரிமையை பறிக்க எவரையும் அனுமதிக்க முடியாதெனவும் சம்பந்தன் கூறிய வீர வசனங்கள் ஊடகங்களில் பரவலாக இடம் பிடித்திருந்தது.

 

 

அதுமட்டுமல்லாது, எதிர்வரும் மாதங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாமென்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.

அமெரிக்காவின் வசந்த அழைப்பும், தென்னாபிரிக்கா பயணமும், மார்ச் மனித உரிமைப் பேரவையில் சிங்களத்திற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேறும் என்கிற எதிர்பார்ப்பும் இணைந்து ,சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதுதான் சம்பந்தனின் கணிப்பு. இவ்வகையான பிழைத்துப்போன கணிப்பீடுகளின் பின்னடைவு வரலாறுகளை நாம் பல தடவைகள் எதிர்கொண்டுள்ளோம்.

 

வீர வசனங்கள் பேசும்போது, தேர்தல் மழைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். அது வட மாகாண சபைத் தேர்தலாகவும் இருக்கலாம்.

இருப்பினும் எப்போது தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பதனை சகல வல்லமை பொருந்திய மகிந்தரே தீர்மானிப்பார் என்பதுதான் உண்மை. மாகாணசபைத் தேர்தல் குறித்து ,உலக மகா கருத்துருவாக்கிகளான 'சர்வதேச நெருக்கடிக்குழு' [iCG] எத்தனை பரிந்துரைகளை வழங்கினாலும், சிங்களம் அசையப்போவதில்லை.

 

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தல்களுக்கு நாம் அடிபணிய மாட்டோமென்கிற செய்தியை , தேசப்பற்றுள்ள அமைப்புக்களின் கூட்டமைப்பு ஊடாக, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மகிந்த ஆட்சியாளர் வெளிப்படுத்தி வருவதைக் காண்கிறோம்.

இம்மாதம் 26 ஆம் திகதியன்று , அமெரிக்க இராஜாங்க திணைக்கள பிரதி உதவிச் செயலாளர்களான விக்ரம் சிங் , ஜேம்ஸ் மூர் மற்றும் ஜேன் சிமர்மான் போன்றோர் இலங்கைக்கு விஜயம் செய்வதாக செய்தி வெளிவந்தவுடன், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கடும் கண்டனத்தை வெளியிட ஆரம்பித்துள்ளார். பேரினவாதம் மேற்கொள்ளும் இன ஒடுக்குமுறையை மூடிமறைக்கும் கருவியாக, ஏகாதிபத்திய எதிர்ப்பு தொழில்படும் என்று அவர் முடிவெடுத்து விட்டார் போல் தெரிகிறது.


அதேவேளை இம்மூவரின் வருகை , ஜெனீவா இராஜதந்திரச் சமருக்கு அமெரிக்கா விடுக்கும் அறைகூவல் என்பதாக அமையும் என்கிறார் இந்தக் கலாநிதி. அதாவது பயணிப்பவர்களின் நிகழ்ச்சிநிரலில், அரசியல் தீர்வொன்று உடனடியாக எட்டப்பட வேண்டும் என்கிற விடயம் உள்ளடக்கப்படலாம் என்று இச் சிங்கள கடும்போக்குவாதிகள் பதட்டமடைகிறார்கள் . அவ்வாறெல்லாம், அமெரிக்காவின் திட்டத்தில், 'தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை கொடு' என்பதான பிறப்புரிமைக் கோட்பாடுகள் இருக்கப்போவதில்லை. அதனை சர்வதேச நெருக்கடிக் குழுவும் தெளிவாக முன்வைத்து விட்டது.

 

'நீங்கள் எந்தவகையான அழுத்தங்களையும் எமக்குக் கொடுக்கலாம். ஆனால் தீர்வு குறித்த விடயத்தில் மட்டும் தலையிடாமல் இருந்தால் போதும்' என்பதுதான் ஒட்டுமொத்த பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளின் பெருவிருப்பாக இருக்கிறது. அதனையும் மீறி எம்மீது போர்க்குற்றங்கள் , மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு என்கிற பேராயுதங்களை பிரயோகித்தால், நாம் சீனாவிடம் சரணடைவதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்பதனை குணதாச அமரசேகர மட்டுமல்ல கோத்தபாய இராஜபக்சேவும் சொல்ல ஆரம்பித்து விட்டார்.

இந்த சீனச் சரணடைவுதான் எமக்கான முதல் வாசலைத் திறக்குமென தமிழ் மக்கள் எதிர்பார்கின்றார்கள். அதனைத் தடுப்பதற்காகவே மேற்குலகும் இந்தியாவும் பல காய்நகர்த்தல்களை தீவிரமாக மேற்கொள்கின்றன.


அண்மையில் கொழும்பு கில்டன் விடுதியில் நடைபெற்ற இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் நிகழ்வொன்றில் உரையாற்றிய பாதுக்காப்புச் செயலாளர் கோத்தபாய ,இலங்கைப் படையினருக்கு புலமைப் பரிசில்களை வழங்காவிட்டால் சீனாவிடம் செல்வோம் என்று அமெரிக்காவை எச்சரித்திருந்தார். முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை புரிந்த கட்டளைத்தளபதிக்கு பயிற்சி வழங்கினால் , மனித உரிமைச் சங்கங்கள் போர்க்கொடி தூக்கி தம் மீது அழுத்தங்களைக் கொடுக்கும் என்பதால், அதனை நிராகரித்ததாக அமெரிக்கத் தரப்பு சொல்வதை கோத்தபாய ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு யாரையும் அனுப்புங்கள் நாம் பயிற்சி கொடுக்கின்றோம் என்பதுதான் அமெரிக்காவின் நிலைப்பாடு.

 

ஆகவே சிங்களத்தின் உறவினை முற்று முழுதாக முறித்துக்கொள்ள அமெரிக்கா விரும்பவில்லை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.


கோத்தபாயாவின் இச்செய்தி இந்தியாவிற்கும் பொருந்தும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை , அமெரிக்கா போன்று போர்க்குற்ற அழுத்தங்களை சிங்களத்தின் மீது பிரயோகிப்பதில்லை. வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரீஸை அழைத்து, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்தே இந்தியா பேசும்.

 

இருப்பினும் இந்தியாவின் வழி நடத்தலில் பயணிக்கின்றோம் என்று பிடி கொடுக்காமல் பேசும் கூட்டமைப்பினர் மத்தியில் , அந்தப் பயணப் பாதை முட்களால் நிரம்பிய வலி நிறைந்த பாதை என்று கூறத் தொடங்கி விட்டார் சுரேஷ் பிரேமச்சந்திரன் . இலங்கை குறித்தான இந்தியாவின் கொள்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் , தற்போது தென்னாபிரிக்கா எடுக்கும் முயற்சியிலும் நம்பிக்கை இல்லை என்கிறார்.


கொழும்பிலிருந்து வெளியாகும் 'தினக்குரல்' பத்திரிகையின் தலைப்புச் செய்தியில் சுரேசின் இந்த ஆதங்கம் வெளிப்பட்டுள்ளது. ஆனாலும் தென்னாபிரிக்காவின் நகர்வில் நம்பிக்கையற்றவர்கள் , உலகத் தமிழர் பேரவையின் பொதுப் பிரகடன மேடையில் ஏன் கலந்து கொள்கிறார்கள் என்று புரியவில்லை. அமெரிக்கப் பின்னணியில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்காமல் தவிர்த்தால், சம்பந்தன் கூறும் 'மாற்றங்கள் ஏற்படும்' என்கிற வீர வசனம் அர்த்தமற்றதாகிவிடும் என்பதால் கலந்து கொள்கிறார்களோ தெரியவில்லை.

 

வல்லரசுகள் பயன்படுத்தும் மென்போக்கு, கடும்போக்கு இராஜதந்திரங்கள் , யாருடைய நலன்களுக்காகப் பிரயோகிக்கப்படுகின்றது என்பதனைப் புரிந்து கொள்ளாவிட்டால், எல்லாமே எமது நன்மைக்காகத்தான் நடக்கிறது என்று மக்களை ஏமாற்ற இலகுவாகவிருக்கும் .


உதாரணமாக, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கைது குறித்து ,ஒட்டு மொத்த உலகத் தமிழ் சமூகமும் வெகுண்டெழுந்தபோது மௌன விரதமிருந்த வல்லரசாளர்கள், சிங்கள அதிகார மையம் பிரதம நீதியரசி சிராணி பண்டாரநாயக்க மீது குற்றப்பிரேரணையை முன்வைத்தவுடன், இலங்கையின் ஜனநாயக மணி உடைந்து விட்டதென ஆர்ப்பரித்தார்கள்.

 

18 வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது அசிரத்தையாக இருந்தவர்கள், அச்சட்டம் வழங்கிய அதிகாரத்தைக் கொண்டு சிராணியைப் பதவியிலிருந்து நீக்கியவுடன் ,நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும், அரசியலமைப்பையே மாற்ற வேண்டும் என்கிறார்கள்.


ஆட்சியை மாற்றினால் எல்லாமே மாறிவிடும் என்போர், அரசியலமைப்பில் முழுமையாக மாறுதல்களை ஏற்படுத்தாமல் , தேசிய இனச் சிக்கலுக்கு தீர்வினைக் கண்டடைய முடியாது என்பதையாவது புரிந்து கொள்ள வேண்டும்.

 

ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சரத் போன்செக்கா, அல்லது ரணில் விக்கிரசிங்கா அல்லது புதிதாகக் களமிறக்கப்படவுள்ள சந்திரிக்கா குமாரணதுங்க பதவிக்கு வந்தாலும், பௌத்தமே நாட்டின் மதம், சிங்களமே நாட்டின் ஆட்சி மொழி என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட குடியரசு யாப்பினை புறந்தள்ள, மகா நாயக்க தேரர்களும் அஸ்கிரிய பீடாதிபதிகளும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கப் பிதாமகர்களும் அனுமதிப்பார்களா?.
இனவாத அரசியல் பேசாமல் இவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியுமா?.


ஆட்சிக்கு வந்தால் சனாதிபதி முறைமையை மாற்றியமைப்போம் என்று மக்களுக்குப் பொய்யுரைத்து பதவிக்கு வந்தவர்கள், அந்நாற்காலியைக் கட்டிப்பிடித்து , அதிகாரங்களை மேலும் குவித்துக் கொண்டதுதான் வரலாறு.

பிடியாணை இல்லாமல் கைது செய்யப்பட்ட ஒருவரை , 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றின் முன் நிறுத்த வேண்டும் என்கிற சட்டத்தை, 48 மணி நேரமாக அதிகரித்துள்ளது இலங்கை நாடாளுமன்றம். ஆனால் பயங்கர வாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். அவர்களுக்கு வெலிக்கந்தை முகாமில் புனர்வாழ்வு அளிக்கலாம். நீதி மன்றம் இது குறித்து கேள்வி எழுப்ப முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் முறையிட்டால், அதற்கு எதிராக ஒரு வழக்குப் போடுகிறோம் என்று வீர வசனம் பேசுவார்கள்.

இவர்கள் போடும் வழக்குகள் சிங்களத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமே தவிர , தீர்வினைப் பெற்றுக் கொடுக்காது.


ஆக மொத்தம், மக்களின் இறைமை தற்போது மகிந்தரின் கைகளிலும் , நாடாளுமன்ற வளாகத்துள் மட்டுமே அடங்கிக் கிடக்கிறது. ஆனால் இங்கு தமிழ் பேசும் மக்களின் இறைமை பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் அது சிங்கள ஆட்சியாளர்களின் கைப்பிடிக்குள் 1948 இலிருந்து அமுங்கிக் கிடக்கிறது. அதனை மீட்கப் போராடியவர்களையே, ஜனநாயக மறுப்புவாதிகள் என்று சிங்கள நாடாளுமன்றில் சம்பந்தன் கூறியிருந்தார்.

 

'ஒரு உண்மை தெரிஞ்சாக வேண்டும் ' என்று எவராவது விரும்பினால், இந்தியாவின் அல்லது அமெரிக்காவின் இலங்கை குறித்தான மூலோபாயத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த, கூட்டமைப்பால் இல்லையேல் உலகத் தமிழர் பேரவையால் முடியுமா என்கிற கேள்வியை கேளுங்கள்.


'சுயநிர்ணய உரிமை ' என்கிற தமிழினத்தின் பிறப்புரிமையை ஏற்றுக் கொள்ள மறுக்கும்,சர்வதேச நெருக்கடிக் குழு மற்றும் இப்பிரச்சினையில் தலையிடும் வல்லரசு நாடுகளிடம் , எமது  பிறப்புரிமையை விட்டுக்கொடுக்க முடியாதென சம்பந்தனால் கூற முடியுமா?.

 

திருமலையில் பேசிய இந்த வீர வசனத்தை, சர்வதேச அரங்கிலும் சம்பந்தன் சொல்வாரா? . பொறுத்திருந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லையென்று நினைக்கின்றேன்.

 

- இதயச்சந்திரன்

 

http://www.sankathi24.com/news/26317/64//d,fullart.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
    • தனிப்பட்ட செல்வாக்கு? அதே போல் கன்யாகுமரியில் பொன் ராதா வுக்கும் வாய்பிருப்பதாக தெரிகிறது.    
    • எங்களுடைய கட்சியின் பலம் பலவீனங்களை நாங்கள் சொல்லிக் கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Shritharan) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது தமிழரசுக் கட்சிக்குள்ளே பல இடைவெளிகள் அதிகரித்திருக்கின்றன என்பது உண்மைதான். திகதியை மறுத்த சுமந்திரன் அடுத்தடுத்த கலந்துரையாடல்கள் ஜனவரி மாதம் 10ஆம் திகதி நாங்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் ஒன்றினை கொழும்பில் உள்ள சம்பந்தன்(R.Sampanthan) ஐயாவின் வீட்டிலே நடத்தியிருந்தோம்.                                சில முரண்பாடான நிலைகள் தொடர்பில் இதன்போது கலுந்துரையாடப்பட்டது. இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M.A.Sumanthiran) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் உள்ளிட்டோர் மறுதினம்(11 ஜனவரி) என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான இடத்தில் கலந்துரையாடியிருந்தோம். அதன் பின்னர் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் நான் ஒரு திகதி கூறியிருந்தேன். சுமந்திரன் அதனை மறுத்து மற்றுமொரு திகதி குறிப்பிட்டார். எனினும் மத்திய செயற்குழு கூட்டம் நிறுத்தப்பட்டது. மாவை சேனாதிராஜா தான் நிறுத்தவில்லை என்று தெரிவித்ததுடன், மருத்துவர் சத்தியலிங்கம் பேசும் நிலையிலேயே இல்லை. இதற்கிடையில் பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.    https://tamilwin.com/article/ilangai-tamil-arasuk-katchi-current-issues-1713545072
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.