Jump to content

வாட்ஸ் ஆப் வசீகரிப்பால் தூக்கம் தொலைக்கும் இளம் தலைமுறையினர்


Recommended Posts

செல்போனில் ‘வாட்ஸ் ஆப்’ செயலியைப் பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொள்ளும் போக்கு அண்மைக்காலங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் இளம் வயதினர் வாட்ஸ்-ஆப்-ஐ பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், நூல்களைப் படிக்கும் வழக்கம் அவர்களிடையே குறைந்து வருகிறது.

காலை நேரங்களில் படிப்பு, வேலை என்று இருக்கும் இளைஞர்கள் இரவு நேரங்களில்தான் தங்களது நண்பர்களுடன் தொடர்பு கொள் கின்றனர்.

இன்டர்நெட் வசதி கொண்ட ஸ்மார்ட் போன் இருந்தால், வாட்ஸ் ஆப், வைபர், ஹைக் போன்ற குறுஞ்செய்தி ஆப்-களை (செயலி) சுலபமாக பயன்படுத்த முடியும்.

இந்த ஆப்-களை கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொண்டால், அதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருப்பவரோடும் இலவசமாக தகவல்களைப் பரிமாறலாம், பேசவும் செய்யலாம். குறுஞ்செய்திகளைத் தவிர புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ அனுப்பிக் கொள்ளலாம்.

இதனால் செல்போன்களில் எஸ்எம்எஸ் அனுப்பும் வழக்கம் கூட தற்போது பெரிதும் குறைந்துவிட்டது.

பொறியியலில் முதுகலை படிக்கும் கண்ணன் வாட்ஸ் ஆப் குறித்து கூறும்போது, “நாங்கள் வகுப்புகளை முடித்து, நண்பர்களோடு பேசிக்கொள்ள இரவில்தான் நேரம் கிடைக்கிறது.

விடுதியில் பெரும்பாலானோர் வாட்ஸ் ஆப் பயன்படுத்து வதால், அதைப் பயன்படுத்த பெரிதும் எதிர்ப்பு இருப்பதில்லை” என்றார்.

தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் ப்ரவீணா, “நான் திருச்சியில் படித்து தற்போது பெங்களூரில் வேலை செய்கிறேன். எனது பள்ளி கல்லூரி நண்பர்களுக்காக வாட்ஸ் ஆப் குரூப் வைத்துள்ளோம். அந்த குரூப் ஆரம்பித்த பிறகுதான் நான் அவர்களுடன் தொடர்பில் இருக்க முடிகிறது.

சில நண்பர்கள் வெளி நாடுகளில் இருக்கிறார்கள். எனவே, அனைவரும் ஒன்றாக சேட்டிங் செய்யக் கூடிய நேரம் இரவுதான். ஆனால், என்னால் வாட்ஸ் ஆப் இல்லாமலும் இருக்க முடியும்” என்றார்.

ஆங்கிலத்தில் இளங்கலை படிக்கும் மரியா கூறுகையில், “வாட்ஸ் ஆப் குரூப்-ல் நடந்த விவாதங்களைப் பற்றி, சுவாரஸ்யமான ஸ்டேடஸ் பற்றி தினமும் வகுப்பில் பேசிக் கொள்வோம். எனது கைபேசியை பார்க்கும்போது அதில் குறுஞ்செய்தி எதுவும் வரவில்லை என்றால் சற்று கவலையாக இருக்கும்” என்றார்.

 

இழப்புகள் அதிகம்: மருத்துவர் கருத்து

இது குறித்து மன நல மருத்துவர் ராமானுஜம் கூறியதாவது:

ஒருவர் தமது முக்கிய பணிகளுக்கும் உறவுகளுக்கும் நேரம் ஒதுக்காமல், ஒரு செயல் அல்லது பொருளுக்கு நேரம் ஒதுக்கினால் அவர் அதற்கு அடிமையாகியுள்ளார் என்று பொருள். அதற்கு செலவழிக்கும் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வரும். அந்த பழக்கத்தால் தமக்கு, இழப்புகள் ஏற்படுகின்றன என்று தெரிந்தும் அது தொடரும். இந்திய இளைஞர்களுள் 5 முதல் 10 சதவீதம் பேர் இன்டர்நெட் பயன்பாட்டுக்கு அடிமையாகி உள்ளனர். தங்கள் பிள்ளைகள் பேஸ்புக்கிலும், இன்டர்நெட்டிலுமே அதிக கவனம் செலுத்துகின்றனர் என பல பெற்றோர் புகார் கூறுகின்றனர். வாட்ஸ் ஆப்-ஐ ஒரு தொடர்பு சாதனமாக மட்டுமே கருத வேண்டும். நண்பர்களோடு நேரில் பேசுவது, நல்ல புத்தகங்களை படிப்பது, உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றை இளைஞர்கள் வழக்கமாக கொள்ள வேண்டும் என்றார்.

 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/article6233142.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் காலத்திலை வாய் சாப்பிடுறதுக்கு மட்டும்தான் கதைக்கிறதுக்கில்லை.... <_<

இப்பவெல்லாம் மனுசி பிள்ளையளே உந்த வாட்ஸ் அப்போடை கதைகாரியங்களை முடிக்க வெளிக்கிட்டினம்..... :o

 

மனிசன் வீட்டை வாறதே கக்கா போறதுக்கும் பல்லுதீட்டுறதுக்கும்.... :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2010/11 வாக்கில் இருந்து பாவித்து வருகிறேன். இப்படியான எந்தப் பிரச்சனையும் இல்லை.

 

நன்மைகளே அதிகம்... உங்கள் போனில்.. இன்ரநெட் இருந்தால்...

 

செலவின்றி.. குறுந்தகவல்களை அனுப்ப முடிகிறது.

 

செலவின்றி உடனுக்குடன் படங்களை செய்திகளாக அனுப்ப முடிகிறது.

 

செலவின்றி வாழ்த்துச் சொல்ல முடிகிறது.

 

ஏன்.. பள்ளியில் கோம் வேர்க் தந்தால்.. அதனை நண்பர்களுடன் பகிர்ந்து செய்து கொள்ள முடிகிறது. (சிலர் கேள்வியை அனுப்பிட்டு விடையை மட்டும் திருப்பி அனுப்பு என்றவங்களுக்கும் இருக்காங்க.) :)

 

எதையும் பாவிக்கிற நாங்க தான் கட்டுப்பாட்டுக்குள்ள வைக்கனுமே தவிர.. வாட்ஸ் அப்பை திட்டி பயனில்லை..!

 

காலைக் கொண்டு போய் கல்லில அடிச்சிட்டு.. கல்லைத் திட்டப்படாது.நாங்க தான் அவதானமா நடக்கனும். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2010/11 வாக்கில் இருந்து பாவித்து வருகிறேன். இப்படியான எந்தப் பிரச்சனையும் இல்லை.

 

நன்மைகளே அதிகம்... உங்கள் போனில்.. இன்ரநெட் இருந்தால்...

 

செலவின்றி.. குறுந்தகவல்களை அனுப்ப முடிகிறது.

 

செலவின்றி உடனுக்குடன் படங்களை செய்திகளாக அனுப்ப முடிகிறது.

 

செலவின்றி வாழ்த்துச் சொல்ல முடிகிறது.

 

ஏன்.. பள்ளியில் கோம் வேர்க் தந்தால்.. அதனை நண்பர்களுடன் பகிர்ந்து செய்து கொள்ள முடிகிறது. (சிலர் கேள்வியை அனுப்பிட்டு விடையை மட்டும் திருப்பி அனுப்பு என்றவங்களுக்கும் இருக்காங்க.) :)

 

எதையும் பாவிக்கிற நாங்க தான் கட்டுப்பாட்டுக்குள்ள வைக்கனுமே தவிர.. வாட்ஸ் அப்பை திட்டி பயனில்லை..!

 

காலைக் கொண்டு போய் கல்லில அடிச்சிட்டு.. கல்லைத் திட்டப்படாது.நாங்க தான் அவதானமா நடக்கனும். :lol::icon_idea:

 

உண்மைதான்

காலைக்கொண்டு போய் கல்லில் அடிக்கலையப்பா

கல்லைத்தூக்கி

நடு வீட்டில் போட்டு விட்டார்கள்

பாவிக்கப்பழகிக்கொள்கின்றேன்

அவ்வளவு தான் :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.