Jump to content

கனடிய பிரஜை (தமிழர்) ஒருவர் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டுள்ளார்


Recommended Posts

வடமராட்சி வதிரி கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட கனேடியப் பிரஜை நடராசா ஜெகநாதன் கடத்தப்பட்டார்

யாழ்ப்பாணம் சென்றிருந்த கனேடிய பிரஜை ஒருவர் இன்று கடத்தப்பட்டுள்ளதாக புகார் செய்யபப்பட்டுள்ளது. வடமராட்சியின் வதிரி கரவெட்டியை சேர்ந்தவரான 53 வயதுடைய நடராசா ஜெகநாதன் என்பவரே கடத்தப்பட்டுள்ளார். தனது தம்பியாராது மகனது திருமணத்திற்காக சுமார் 25 வருடங்களின் பின்னர் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் சகிதம் வந்திருந்ததாக தெரியவருகின்றது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 4 மணியளவில் வாகனமொன்றினில் சென்ற ஆயுததாரிகள் சிலர் அவரை விசாரணைக்கென அழைத்து சென்றுள்ளனர். எனினும் அவரை எங்கு கொண்டு செல்கின்றனர் என்ற எந்தவொரு தகவலையும் தமக்கு தெரிவிக்கவில்லை என குடும்பத்தவர்கள் தெரிவித்தனர்.

ஆயினும் கொழும்பிலிருந்து சென்ற தந்திருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரே அவரை விசாரணைக்கு கொண்டு சென்றதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 25 வருடங்களுக்கு முன்னதாக கனடாவிற்கு புலம் பெயர்ந்திருந்த நிலையில் ஜெகநாதன் தற்போதே நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக குடும்பத்தவர்கள் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகின்றது.

புலம் பெயர்ந்து பின் நாடு திரும்பிய கனேடிய பிரஜை ஒருவர் அண்மையிலே கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் இவ் ஆட் கடத்தல் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/80737/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

[size=4]இவரின் உறவுகள் கனேடிய தூதுவராலயத்துடன் தொடர்புகளை மேற்கொண்டு இவரை விடுவிக்கவேண்டும். [/size]

[size=4]இந்நிலையில் இன்று பிற்பகல் 4 மணியளவில் வாகனமொன்றினில் சென்ற ஆயுததாரிகள் சிலர் அவரை விசாரணைக்கென அழைத்து சென்றுள்ளனர். எனினும் அவரை எங்கு கொண்டு செல்கின்றனர் என்ற எந்தவொரு தகவலையும் தமக்கு தெரிவிக்கவில்லை என குடும்பத்தவர்கள் தெரிவித்தனர்.
[/size]
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியைப் பார்த்த பின், ஸ்ரீலங்காவுக்கு கொலிடே போக, ரிக்கற் வாங்கியவர்களுக்கு வயித்தில் புளியை கரைக்கும்.

Link to comment
Share on other sites

இந்தச் செய்தியைப் பார்த்த பின், ஸ்ரீலங்காவுக்கு கொலிடே போக, ரிக்கற் வாங்கியவர்களுக்கு வயித்தில் புளியை கரைக்கும்.

[size=4]'எனக்கு அப்படி நடக்காது' - இப்படியே கூறித்தான் விமான சீட்டுக்களை நாம் வாங்குகின்றோம். [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]'எனக்கு அப்படி நடக்காது' - இப்படியே கூறித்தான் விமான சீட்டுக்களை நாம் வாங்குகின்றோம். [/size]

அப்படி ஒன்று நடந்து விட்டால்...

உயிருக்கு உத்தரவாதம் இல்லை, எத்தனை அலைச்சல், பணவிரயம், மற்றவர்களுக்கு கவலை போன்றவற்றை... பெரும்பாலானோர் சிந்திப்பதில்லை.

Link to comment
Share on other sites

அப்படி ஒன்று நடந்து விட்டால்...

உயிருக்கு உத்தரவாதம் இல்லை, எத்தனை அலைச்சல், பணவிரயம், மற்றவர்களுக்கு கவலை போன்றவற்றை... பெரும்பாலானோர் சிந்திப்பதில்லை.

[size=4]அப்படிச்சொன்னால், 'யதார்த்தம் தெரியாமல் உள்ளீர்கள்' என்கிறார்கள். [/size]

Link to comment
Share on other sites

இவரின் உறவுகள் கனேடிய தூதுவராலயத்துடன் தொடர்புகளை மேற்கொண்டு இவரை விடுவிக்கவேண்டும்...

Link to comment
Share on other sites

இச்செய்தியை அனைவருக்கும் தெரிய படுத்துங்கள்... காலம் கடக்க வேண்டாம் .... உடனடியாக எதாவது செய்யுங்கள் தொழார் களே ....

நன்றி

ஏழுமலை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.