Jump to content

கைதிகள் மரணம் தொடர்பில் மன்னிப்புக் கோர வேண்டிய தேவையில்லை ; டக்ளஸ்


Recommended Posts

[size=4][size=5]நெருப்பு சுடும் எண்டு கைய விட்டுப் பார்த்தா தெரியவேணும் நெருப்புக்குள் கையை வைத்து தான் சுட்டுக் கொள்ளப் போகிறீர்கள் என்றால் அதை எப்படி நியாயம் என்று சொல்ல முடியும். அது பிழை தான் அதற்காக யாரும் மன்னிப்பு கேட்க முடியாது. அத்துடன் மன்னிப்பை ஏன் கோர வேண்டும் [/size]என டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக தெரிவித்தார்.

வவுனியா சிறையில் நடைபெற்ற கலவரத்தையடுத்து சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளான நிமலரூபன் மற்றும் டெல்றொக்சன் ஆகியோர் தொடர்பில் ஊடகவியலாளர்களினால் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நானும் ஒரு முன்னாள் அரசியல் கைதி தான். நானும் MP தான். நான் இங்கு MP என்று கூறுவது MP பதவியை அல்ல Member of Prison எனக்கும் அந்த அனுபவங்கள் நன்றாகத் தெரியும்.

வவுனியாவில் இருந்தவர்கள் சிறைச்சாலை அதிகாரிகள் 3 போரைப் பிடித்து அடைத்து வைத்திருந்தார்கள். அது பிழையான விடயம் அதனால் தான் இவ்வாறு நடந்தது. இவர்கள் தாக்கப்பட்ட இச்சம்பவத்தில் நாங்கள் எதனை எதிர்பார்க்க முடியும்.

[size=5]குறித்த கைதிகளை சிறை அதிகாரிகள் வலோக்காரமான முறையில் தாக்கப்பட்டிருந்தால் அதனைப் பற்றிப் பேசுவதில் ஒரு யதார்த்தம் இருக்கும்.ஆனால் இவ்விடயம் அவ்வாறு அமையவில்லை.[/size]இதற்கு எவ்வாறு மன்னிப்புக் கோருவது. மன்னிப்புக் கோர வேண்டிய தேவையில்லை. நெருப்பு என்று தெரிந்தும் கையை வைத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்.

ஜனநாயக பூர்வமான ஆர்ப்பாட்டங்கள் , உண்ணா விரதங்களைச் செய்ய வேண்டும். அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் வன்முறை சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தவறைச் செய்து விட்டு உண்ணாவிரதம் இருந்தனர். அது தவறான விடயம். இது தொடர்பில் எனக்கு கதைக்க உரிமை இருக்கு. நான் ஒருமுன்னாள் போராளி.

பலாங்கொடை இராணுவ முகாமில் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருடன் நான் இருந்த காலத்தில் அவர்கள் இறந்து போய்விட்டார்கள் நாம் அரசியல் கைதிகள் எங்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினோம்.

குட்டிமணியும் தங்கத்துரையும் விரும்பவில்லை. ஏனெினில் அவர்களின் குடும்பத்தினரை பார்வையிட ஆமி அனுமதி வழங்கியிருந்தது. அதனால் எமது உண்ணா விரதப் போராட்டத்திற்கு அவர்கள் பங்கு கொள்ளவில்லை. எனினும் நான் 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன். எங்களுக்குரிய அந்தஸ்தும் வழங்கப்பட்டது.

அவ்வாறு தான் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து தற்போது அரசியல் கைதிகளின் படுகொலை தொடர்பில் கதைக்கும் சுரேஸ்பிரேமச்சந்திரன் மனோ கணேசன் என எல்லோரும் என்ன செய்தார்கள் என்று எனக்குத் தெரியும்.

சுரேஸ்பிரேமச் சந்திரன் நெருப்பு தினம் கொண்டாடிட்டு ஓடிவிட்டார்.குட்டையைக் கிழப்பி விடுறது தான் இவர்களின் நோக்கம் தீர்வு காண்பது அல்ல. தீர்வு என்பது இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைபெற்றிருந்தால் நடைபெற்றிருக்கும். ஆனால் தீர்வு என்று கூறி சில அரசியல் வாதிகள் சுயலாபம் கருதிச் செயற்பட்டு வருகின்றனர். பெற முடியாத ஒன்றிற்காக கதைத்துக் கொண்டு இருக்கிறார்கள் இதற்கு பத்திரிகைகள் துணை போகின்றன.

அத்துடன் பத்திரிகைகள் சவப்பெட்டிக் கடைக்காரர்கள் போலவே செயற்பட்டு வருகின்றன.

அரசியல் வாதிகள் தமது குடும்பங்களை வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கையினை அனுபவிக்க விட்டுவிட்டு தாங்கள் இங்கு வந்து போகிறார்கள். இவர்கள் கோயிற் திருவிழாவிற்கு மூட்டை முடிச்சுகளுடன் கலர் கலராக வந்து திருவிழா முடிய போகும் வியாபாரிகள் போலத்தான் இவர்களும் செய்கின்றார்கள்.

இருப்பினும் கைதிகளும் தமது நிலைமைகளை உணர்ந்து செயற்பட வேண்டும். நான் சொல்வதை மூத்த அனுபவ சாலி சொல்வதாக எடுத்துக்கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்த கைதிகளை உணவினை உண்ணுமாறு துன்புறுத்தியதில் ஏற்பட்ட அசம்பாவிதத்தினையடுத்து கைதிகள் சிறை அதிகாரிகள் மூவரை பிடித்து பணயம் வைத்திருந்தனர். அதனையடுத்து அங்கு விசேட அதிரடிப்டையினர் வரவழைக்கப்பட்டு குறித்த மூவரும் மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து நடைபெற்ற அசம்பாவிதத்தில் தாக்குதலுக்கு இலக்காகி ராகமை வைத்தியசாலையில் நிமலரூபன் மரணமடைந்தான்.ஆனாலும் அவனது இறுதிக் கிரிகைகளையாவது பெற்றோர் தமது சுதந்திரத்துடன் நடாத்தி முடிக்கவில்லை.

அது போல தாக்குதலுக்கு இலக்காகி கோமா நிலையில் இருந்த டெல்றொக்சனும் மரணத்தை தழுவிக் கொண்டான். எனினும் கோமா நிலைியிலும் அவனது கால்கள் இரண்டும் சங்கிலியால் கட்டப்பட்டே இருந்தன.

இவை அனைத்தும் தமிழ் மக்களுக்கு அரசு செய்து வரும் ஆதிக்கம் என்றே கூறிக்கொள்ள வேண்டும். இதற்காக அரசியல் கைதிகளது விடுதலை படுகொலை ஆகியவற்றைக் கண்டித்து தமிழ் அரசியல் கட்சிகள் பல குரல் கொடுத்து வருகின்றது.

[size=5]எனினும் சமாதானம் என்று அரச தரப்புக்களால் கூறிவரும் நிலையிலும், நாட்டில் உள்ள அனைவரும் சரிசமனாக கணிக்கப்படுகின்றனர் என்று கூறும் நிலையிலும் இவர்கள் இருவரது மரணங்களும் இலங்கையில் ஒவ்வொரு தமிழனும் எவ்வாறான நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றான் [/size]என்ற உண்மையினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த நல்ல தருணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.[/size]

http://onlineuthayan.com/News_More.php?id=331411320414604280

Link to comment
Share on other sites

அதாவது அடிமைகள் தமது அடிமை வாழ்வை ஏற்றுக்கொண்டு தொடர்ந்தும் அடிமைகளாகவே வாழவேண்டும் என்று முன்னாள் போராளி(?) இந்நாள் ரவுடி கூறுகின்றார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளி.....???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

மகே அம்மே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் எந்தப் பள்ளிவாயலுக்கும் ஆபத்தில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். ஏம். அஸ்வர்

அரசாங்க உறுப்பினர் என்றால் இப்படிதான் கருத்து சொல்லமுடியும் அவர் ..தமிழரோ முஸ்லிமோ

Link to comment
Share on other sites

ஐயாவை பனான்கொடையில் வைச்சே வகுப்பு எடுத்திருக்கணும் ஐயா அப்பவே குழப்பம் தான். அப்புறம் எதுக்கு இபி ஆர் எல் எப் இல் இராணுவ தளபதி ஆனார். தலைவர் விட்ட பிழையில் இதுவும் ஒன்று . சில வெறிநாய்களை விட்டு வைச்சது. இவன் எல்லாம் மனுஷ ஜென்மமா இல்லை வேறு ஏதாவது ஜென்மமா என்று புரியலை.. சிங்களவனுக்கு உள்ள மனிதாபிமானம் இந்த அத்தியடி குத்தியனுக்கு இல்லை

Link to comment
Share on other sites

[size=5]களவு, கடத்தல், கொலை என டக்ளஸ் தனது வாழ்நாளில் முக்கால்வாசியை சிறையில் கழித்தவர்[/size]

[size=4]வங்கியில் கொள்ளையடித்து, பிள்ளைகளை கடத்தி, கம்பம் கேட்டு, கொலை செய்து தனது வாழ்நாளின் முக்கால் வாசியை சிறையிலேயே கழித்த அமைச்சர் டக்ளஸ் சிறைக் கைதிக ளை பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்.[/size]

[size=4]சிறையில் வளர்ந்தவர்கள்தான் சிறைக்கைதிகள் பற்றிப் பேசவேண்டும் என்றுள்ளதா? அதுபோக சிறைச்சாலை படுகொலைக்காக மன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது என அவர் கூறினால் படுகொலைகள் சரியென ஒப்புக்கொள்கின்றாரா? என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.[/size]

[size=4]கூட்டமைப்பின் யாழ்.அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.[/size]

[size=4]இதில் அவர் மேலும் உரையாற்றுகையில்,[/size]

[size=4]சிறையில் கைதிகள் காவலாளிகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர் என்றால் அதற்க்குத் தண்டனையாக படுகொலை செய்யலாமா?[/size]

[size=4]சிறையில் கைதிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளையும், மயக்க மருந்துகளையும் தெளித்து அவர்கள் மயக்கமடைந்த பின்னர் அவர்களை அனுராதபுரத்திற்குக் கொண்டு சென்று அங்கு வைத்து மயக்கம் தெளியாத நிலையில் வைத்துத்தான் அடித்து நொருக்கினார்கள்.[/size]

[size=4]எனவே கைதிகளை அடித்ததும், படுகொலை செய்ததும் சரியானதொரு விடயம், அவர்களை அப்படித்தான் செய்யவேண்டும் என்று அமைச்சர் ஏற்றுக் கொள்கின்றாரா என்பதை இந்த அமைச்சர் கூறவேண்டும் என்றார்.[/size]

[size=4]இதேவேளை ரெசோ மாநாடு குறித்தும், தீர்மானங்கள் குறித்தும் கேட்டபோது தீர்மானங்கள் எமக்கு ஒருபோதும் தீர்வைப் பெற்றுத்தரப்போவதில்லை. ஆனால் குறித்த மாநாட்டில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை நாங்கள் வரவேற்கின்றோம்.[/size]

[size=4]இனிமேல்தான் கருணாநிதிக்கு வேலையிருக்கின்றது. எடுக்கப்பட்ட தீர்மானங்களை மத்திய அரசுக்கும், ஜ.நாவுக்கும் கொண்டு சென்று அவை நிறைவேற்றப்படுவதற்கு போதுமானளவு அழுத்தங்களை அவர் கொடுக்கவேண்டும்.[/size]

[size=4]அப்போதே ஈழத்தமிழர் மீது அவர் கொண்டிருக்கின்ற உண்மையான உளப்பாங்கை நாம் பார்க்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம் என்றார்.

அபிவிருத்தி என அரசாங்கம் பேசிக் கொண்டிருந்தாலும், மறுபுறத்தில் தமிழர்களுடைய பெறுமதியான வளங்களை அரசாங்கம் தொடர்ந்தும் சூறையாடிக் கொண்டிருக்கின்றது. எனவே அவை தடுத்து நிறுத்தப்படவேண்டும்.[/size]

[size=4]மேலும் இலங்கையிலிருந்து பெருமளவு இளைஞர் யுவதிகள் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றார்கள். இது திட்டமிட்ட ஒரு செயல், இதில் அதிகாரிகளுக்கும் நிறையவே தொடர்புகள் இருக்கின்றன. இது நன்கு திட்டமிட்ட ஒரு செயலாகும், இங்கு பிரச்சினை அனைவருக்கும் உள்ளது என்பதை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஆனால் அதற்காக எங்கள் நிலங்களை விட்டு ஓட முடியாது. இந்த சூழலோடு வாழ்ந்தாகவேண்டும் என்பதை எல்லோருக்கும் கூட்டமைப்பு சுட்டிக்காட்ட விரும்புகின்றது என்றார்.[/size]

[size=4]http://www.thinakkathir.com/?p=40282[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.