Jump to content

யாழ் நிர்வாகம் தொடர்பான ஒரு அறிவித்தல்


Recommended Posts

....

வலைஞன் வந்தால் உதுவும் எழுதேலாது அந்தாளுட்டை வெட்டுக்கொத்து வாங்கினவங்களுக்கு இன்னும் காயம் ஆறியிருக்காது :lol:

கு.சா.அண்ணா அடிக்கடி வலைஞன் அண்ணாவை நினைத்து மனம் நெகிழ்ந்து கொள்ளுறது தெரிகிறது... :lol::D

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இணையம் தொடர்ந்து இயங்க இருப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி. புதிய நிருவாகத்தினர் யாழின் வடிவமைப்பிலும் சில மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

வாழ்த்துக்க‌ள்.

முல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலைஞன் திருப்பியும் வாறது உங்கை கனபேருக்கு  வயித்தைகலக்குது :lol: ...நான் வந்து எதுக்கும் எவரெடி :mellow:

ஏன் தாத்தா வலைஞன் அவர்கள் அப்படி கண்டிப்பானவரா.... :rolleyes::)

Link to comment
Share on other sites

மகிழ்ச்சி.. :D மகிழ்ச்சி.. :D மகிழ்ச்சி..! :D

எல்லாம் என்னோட ராசி :rolleyes:<_<

போனமுறை நிக்கபோகுது எனற போது லவ் பண்றதா சொன்னேன்..

இந்த வருடம் ஜீவாக்கு கல்யாணம் என்று வெடிய பத்த வச்சிட்டாங்க ..

அடுத்த முறை??????..... :rolleyes::icon_idea:

அடுத்தமுறை பிள்ளை பிறந்திட்டுது எண்டு பீதியைக் கிளப்பப் போறாங்கள்..! :lol:

Link to comment
Share on other sites

சித்திரை முதலாம் திகதியிலிருந்து, புதிய நிர்வாகத்தை பொறுப்பெடுத்து நடாத்த இருக்கும்,

இணையவன், நிழலி, வலைஞன் ஆகியோருக்கு நன்றிகள்.

எனது ஒத்துழைப்பு என்றுமே... யாழிற்கு இருக்கும்.

மோகன் அண்ணா தொடர்ந்து யாழில் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் யாழின் கொள்கைகள் என்பது மோகன் அண்ணாவின் நல்ல எண்ணங்களாகும். அதன் பால்.. ஒரு ஈடுபாட்டோடு யாழில் இணைந்திருந்தவர்கள் என்ற வகையில்.. அவர் யாழை விட்டு சற்றே விலகி நிற்பது என்பது அவர் மீது... loyalty உள்ள எம்மைப் போன்றவர்களும் சற்று விலகி நிற்கவே தூண்டச் செய்கிறது..!

யாழில் பல சர்ச்சைகள் மத்தியிலும் எமக்கு எழுத குறிப்பாக அறிவியல் சார்ந்து தமிழ் ஆக்கங்களை எழுத ஊக்கமளித்தவர்களில் மோகன் அண்ணா.. சுரதா அண்ணா... ஜேர்மனி ராஜன் அண்ணா.. ஜேர்மனி.. சோழியண்ணா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். மோகன் அண்ணா அறிவியலுக்கு என்று தனிப் பகுதியில் செய்திகளை யாழின் முகப்பில் இட ஒரு காலத்தில் நாங்களும் யாழின் நிர்வாக அலகுக்குள் நிற்க உதவி நின்றவர். அவை யாழின் வசந்த காலங்கள். அந்தக் காலம் மீண்டும் மீளவே இல்லை. காரணம் அதன் பின் வந்தவர்களால் நாங்கள் எதிரிகளாகக் காட்டிக்கொள்ளப்பட்டது தான்.

அதுமட்டுமன்றி.. இவன் எழுதிறதெல்லாம்.. ஒரு அறிவியல் செய்தியா என்று எமது வலைப்பூவில் வந்து பின்னூட்டம் இட்டவர்களும் இதே களத்தில் இன்றும் இருக்கின்றனர். அதேவேளை அந்த அறிவியல் செய்திகளுக்கு தமிழகத்தின் முன்னணி வார ஏடு ஆனந்த விகடன் கெளரவம் அளித்து அதன் இதழில்.. வலைப்பூவையும் அறிமுகம் செய்து வைத்தது. இந்த அளவில் தான் உள்ளது இன்றைய யாழில் ஒரு சுய ஆர்வமுள்ள எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பாணி. எது எப்படியோ.. அவற்றை தமிழுக்காய் தமிழ் தாய் மண்ணுக்காய் மன்னித்தோம்... மறந்தோம்..!

எதிர் வரும் ஏப்ரல் 1 இல் இருந்து யாழின் புதிய நிர்வாக நடைமுறைகளும் விதிகளும் ஒத்து வந்தால் அன்றி யாழில் அதிகம் எழுதுவது என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயமாகவே இருக்கும். புதிய நிர்வாகம் அடிப்படை கொள்கை அளவில் என்றாலும் மோகன் அண்ணாவின் வழித்தடம் பற்றி பயணித்தால் யாழோடு தொடர்ந்து உறவாடுவதில் பிரச்சனை இருக்காது. இன்றேல்.. எல்லாமே யோசிக்க வேண்டிய மாற்றமடைய வேண்டிய விடயமாகவே இருக்கும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா உண்மையான,நேர்மையான ஆள் தான் ஆனால் கடைசியாக நடந்த பிரச்சனையில் அதை கடைப் பிடிக்க முடியாத படியால் தான் அவர் யாழை விட்டுப் போகிறார்...உண்மையில் பாவம் அவர்...பார்ப்போம் எந்தளவிற்கு நிழலி யாழை கொண்டு நடத்தப் போகிறார் என?...உண்மையாய் சொல்லப் போனால் இணையவனில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.ஓர‌ளவுற்கு யாழ் நட்பு வட்டத்தையும்,மட்டு பதவியையும் நியாயமாக வெவ்வேறாக கொண்டு செல்ல முடிந்த நிழலியால் முடிகிறது ஆனால் இணையவனால் முடியவில்லை என்பது தான் என் கருத்து.இணையவன் ஆர‌ம்ப காலத்தில் தனது நட்பு வட்டார‌த்திற்கு சில சலுகைகள் காட்டிய படியால் தான் அவர்கள் படிப்படியாக வளர்ந்து பிர‌ச்சனை இந்த நிலைக்கு வந்தது...வலைஞனைப் பற்றி எனக்குத் தெரியாது அதனால் அவரைப் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை.

மோகனைப்போல இணையவனும் , வலைஞனும் மிகுந்த பொறுமைசாலிகள் ரதி. இந்த 3சாதுக்களும் ஒருநாளும் மிரண்டதில்லை. இணையவன் தனிமடல் அறிவிப்புச் செய்யாவிட்டாலும் நீதி தவறியதில்லை. இதேபோலத்தான் வலைஞனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை முதலாம் திகதியிலிருந்து, புதிய நிர்வாகத்தை பொறுப்பெடுத்து நடாத்த இருக்கும்,

இணையவன், நிழலி, வலைஞன் ஆகியோருக்கு நன்றிகள்.

எனது ஒத்துழைப்பு என்றுமே... யாழிற்கு இருக்கும்.

மோகன் அண்ணா தொடர்ந்து யாழில் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

யாழை மூடாமல், தொடரப்போவது நல்ல செய்தி.

Link to comment
Share on other sites

I was so sad to hear about the closure plans now so glad this circle to contiue.

Weldone Mohan for all the years hard job & good luck to the new management.

-Thevaki Acca-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சியும் தொடர்ந்து இணையத்தை நடத்த இருக்கும் மூவருக்கும் நன்றியும்.அத்துடன் மோகனும் தொடர்ந்து எம்முடன் இணைந்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

Link to comment
Share on other sites

எனக்கும் இங்கு என் நண்பரின் ஓர் ரவல்ஸ் நிறுவனம் ஒன்றுள்ளது. கேட்டால் உடன் தருவார் ... என்ன சிறிலங்கன் எயார்லைன்ஸ் அட்வேட்டாக இருக்கும், அது சரி வராது!

விளம்பரங்கள் கேட்கும்போது அவர்களிடம் கருணைகாட்டுமாறு கேட்பதுபோல் அல்லாது யாழில் இணைப்பதால் எப்படியான நேரடி, மறைமுக நன்மைகள் உள்ளன என விளங்கப்படுத்தி எடுத்தால் அதாவது இங்கு விளம்பரமுதலீடு செய்வதால் எப்படியான பயன்கள் கிடைக்கும் என்பதை தெளிவுபடுத்தினால் அவர் யாழுக்கு நீங்கள் விளம்பரம் பெறுவதை அவர் உங்களுக்கு உதவிபோல் செய்வதாக நீங்களோ அவரோ நினைக்கத்தேவையில்லை.

உங்கள் நண்பர் என்கின்றீர்கள், சிறீலங்கன் விமானப்பயணத்துறை சம்மந்தமானது எனவும் கூறியுள்ளீர்கள். அதாவது யதார்த்தவாழ்வில் உங்களுக்கு தெரிகின்றது எம்மைச்சுற்றியுள்ள உறவுகளிடையே குறிப்பிட்ட சில விடயங்களுக்கு (புறக்கணிப்பு) ஆதரவு இல்லை, பெறமுடியாது, சாத்தியம் இல்லையென்று. அப்படியாயின், யாழில் மட்டும் ஏன் சிலுவை சுமந்து வர்த்தகரீதியான வாய்ப்புக்களை நழுவவிடவேண்டும்? இப்படியான விடயத்தில் எமக்கு நாமே தடைகள், கட்டுபாடுகள் போட்டு சாதித்தவை எவை? யாழென்பது கொள்கைரீதியாக கற்பனையுலகில் சஞ்சரிப்பதற்கு மட்டும்தானா?

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா உண்மையான,நேர்மையான ஆள் தான் ஆனால் கடைசியாக நடந்த பிரச்சனையில் அதை கடைப் பிடிக்க முடியாத படியால் தான் அவர் யாழை விட்டுப் போகிறார்...உண்மையில் பாவம் அவர்...பார்ப்போம் எந்தளவிற்கு நிழலி யாழை கொண்டு நடத்தப் போகிறார் என?...உண்மையாய் சொல்லப் போனால் இணையவனில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.ஓர‌ளவுற்கு யாழ் நட்பு வட்டத்தையும்,மட்டு பதவியையும் நியாயமாக வெவ்வேறாக கொண்டு செல்ல முடிந்த நிழலியால் முடிகிறது ஆனால் இணையவனால் முடியவில்லை என்பது தான் என் கருத்து.இணையவன் ஆர‌ம்ப காலத்தில் தனது நட்பு வட்டார‌த்திற்கு சில சலுகைகள் காட்டிய படியால் தான் அவர்கள் படிப்படியாக வளர்ந்து பிர‌ச்சனை இந்த நிலைக்கு வந்தது...வலைஞனைப் பற்றி எனக்குத் தெரியாது அதனால் அவரைப் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை.

முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட‌ தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மட‌லிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்ச‌ம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.

முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட‌ தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மட‌லிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்ச‌ம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.

ரதி ... ஒரு பச்சை! ... உண்மையை உண்மையாக எழுதியதற்கு!

... தெரிந்தவர்கள் பலர், ஆனால் மதிப்பளிப்பது சிலருக்கே! அதில் மோகனும் ஒருவர்! அதிகம் எழுதாதவர் மட்டுமல்ல, அதிகம் கதைக்காத ஓர் பண்பாண ஜீவன்! ... என் 12 வருட யாழ் பயணத்தில் மோகன் என் மூலம் மட்டுமல்ல பல யாழ் உறவுகள் மூலமும் சந்தித்த நெருக்கடிகள் பல ... தாக்குப்பிடித்து இழுத்துக் கொண்டு சென்ற பண்பாளன்! யாழ் மூலம் பலதை செய்தோம் ... எமது விளம்பரங்களுக்காகவல்ல ... அவைகளுக்கெல்லாம் அன்று தொடக்கம் இன்று வரை ஆதரவளித்த மனிதன்! ... எல்லாவற்ருக்கும் மேலாக தமிழை வலைத்தளத்தில் பதியத்தொடங்கியதே இந்த யாழ் மூலம்தான் .. பின் சில தளங்களிலும்!

மோகன் யாழில் இருந்து தற்காலிகமாக விலகுவதை ஏற்க முடியவில்லை, ஆனால் மோகன் தற்காலிகமாக இதிலிருந்து விலகத்தான் வேண்டும் ... சிறிது மூச்சு விடட்டும்!

புதிய யாழ் நிர்வாகம் ..

நிழலி ... சுமூகமாக/சாதுரியமாக கொண்டு செல்லும் வல்லமை இருக்கிறது!

வலைஞன் ... எனக்கு பெரிதாக தெரியாது!

இணையவன் ... எனக்கு நம்பிக்கை இல்லை(மன்னிக்கவும் இப்படி எழுதுவதற்கு)!

... நான் இதுவரை யாழில் பயணித்தது போலவே ... என் கருத்துக்களாகட்டும் / கேள்விகள் கேட்பதாகட்டும் / விவாதங்கள் ஆகட்டும் ... பயணிக்க விரும்புகிறேன். என்னை மாற்றவும் முயலவில்லை/இலகுவும் அல்ல! .. அதில் உங்களுக்கு ஆட்சேபனை இருக்குமென்று நான் உணரும்போது ... உங்களுக்கு உங்கள் பார்வையில் தொடர்ந்து தொந்தரவு தராமல் விலகுவதே நன்மை! ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி, இணையவன், வலைஞன் ஆகியோருக்கு எமது மீனகம் இணையம் சார்பாக வாழ்த்துக்கள். 05.09.2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை சார் ஊடகவியலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட எமது மீனகம் இணையத்தை புலம் பெயர்வாழ் உறவுகளிடமும் தமிழகத் தமிழர்களிடம் கொண்டு சேர்த்தததில் "யாழ்" கருத்துக்களத்திற்கே முதன்மை பங்கு என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா, எனக்கு நீங்கள் யாரென்றே தெரியாது. ஆனாலும் என்னவோ உங்களை நான் miss பண்ணுறன் ....

புதிய நிர்வாகத்திற்கும் வாழ்த்துகள்...

Link to comment
Share on other sites

யாழ் தொடர்வது மகிழ்ச்சி, அத்துடன் புதிய நிர்வாகக் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். மோகன் அண்ணாவும் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

ஒரு வார விடுமுறையில் இவ்வளவும் நடந்து விட்டதா? எது எவ்வாறு இருப்பினும், ஒரு கருத்துக் களத்திலாவது நாம் ஒற்றுமையாக இருக்கலாமே என்பதே எனது வேண்டுகோள்/அவாவாகும். இனியாவது கொஞ்சம் பொறுமையுடனும் ஒற்றுமையுடனும் நாம் செயற்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா எமக்கான ஆலோசனைகளை தந்து உதவுவதுடன் தொழில்நுட்ப ரீதியிலான அனைத்து ஆதரவு மற்றும், உதவிகளை வழங்குவார்.

இங்கு எழுதப்பட்டுள்ள கருத்துக்களை பார்க்கும்போது பலர் இந்தவசனத்தை கவனிக்கவில்லை போல்த்தெரிகின்றது. மோகன் ஒரு இடமும் ஓடிஒதுங்கமாட்டார், யாழ் இணையம் உள்ளவரை திரைமறைவிலாவது இருந்து செயற்பட்டுக்கொண்டுதான் இருப்பார். 'யாழ் இணையம்' மோகனின் குழந்தை. தனது குழந்தையைவிட்டு அவர் எங்குபோய்விடமுடியும்? உங்கள் கருத்துக்களில், தெளிவான சிந்தனைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிழலி பற்றியோ வலைஞன் பற்றியோ இணையவன் பற்றியோ சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.

Link to comment
Share on other sites

தொடர்ச்சிகள் தொடரட்டும். இதற்குள் எப்படிப்பட்ட பிரச்சனைகள் உண்டென எனக்குத் தெரியாது. இருந்தும் ஒன்றாயிருப்போம்.

Link to comment
Share on other sites

மிக்க நன்றி . நான் இணைந்து கொஞ்ச நாட்களே .

சந்தோசமாக இருக்கின்றது . இன்னும் தொடர எனது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

மேலே காதல் சொன்னது போல் மோகன் அண்ணாவுடன் தனிப்பட்ட பரிச்சயம் இல்லாவிட்டாலும், ஒரு மிகுந்த மரியாதைக்குரிய நபராகத்தான் கருதுகிறேன். அவருடைய வழிகாட்டல் தொடர்ந்தும் தொடரவேண்டும், அவரது பங்களிப்பும் தொடரவேண்டும் என்பதே என் விருப்பமும்.

நிழலி, இணையவன், மற்றும், வலைஞனுக்கும் வாழ்த்துக்கள். தம் வேலை, வீடு, குடும்பம் போக, இதற்கும் நேரம் ஒதுக்குவது என்பது மிகவும் மெச்சத்தக்கது.

யாழ் களம் தொடர்ந்தும் சிறப்பாக இயங்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு. மோகன் அவர்கட்கு, சில விடையங்களை நான் கடுமையாகவே சந்திக்கப் பழக்கப் படுத்தப்பட்டுவிட்டேன். எனினும் கடந்த காலங்களில் வன்னி நிலமை மிகவும் மோசமாக இருந்த காலங்களில் தேசத்தின் தேவைகருதி நான் தங்களிடம் கேட்ட உதவிகளை உடனுக்குடன் நிறைவேற்றினீர்கள் அதற்காக, இம் முகமறியா மனிதனுக்கு நன்றி கூறுகின்றேன். தொடர்ந்தும் யாழுடன் இணைந்திருப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்துகள்

என்னால் முடிந்த பங்களிப்பினையும் நான் செய்வேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.