Jump to content

நான் பார்த்த சாத்திரி!!

Recommended Posts

ஒரு பேப்பர் வாசித்த காலத்தில் இருந்து (யாழுக்கு முதலே ) சாத்திரியின் எழுத்தின் மீது ஒரு பிடிப்பும்அதே நேரம் விமர்சனமும் இருந்தது .

பிடித்திருந்தது -எதையும் அவர் எழுதும் பல்சுவை கலந்த தன்மை ,அதைவிட நன்கு ஊரடிபட்டாதால் அவருக்கு கிடைத்த அனுபவங்களும் இலகுவில் எவருக்கும் கிடைக்காதவை .

பிடிக்காதது -தனிநபர் தாக்குதலையும் மிக இலகுவாக அவர் நிகழ்த்துவார்.(இருந்த இடம் அப்படி).

ஆனால் இந்த தொடரின் ஆரம்பமே பல வித விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்தது .தனது சொந்த மாமாவை சாத்திரி அடித்ததை ரசித்தவர்களால் "அதில்" கை வைப்பதை அனுமதிக்கமுடியவில்லை .

சாத்திரி மூளையாக ஈப்பி முகாமில் நடந்த கதை என்று காமத்தை தொட்டிருந்தால் அமோக பச்சைகளுடன் சென்சரில்லாமல் இன்னமும் வலம் வரும்,(பக்கத்தில இருந்து பார்த்த மாதிரி பத்மனாபாவும் அதுதான் என்று வேறு தொடங்கியிருப்பார்கள்) இது ஆட்டில வச்சு மட்டில வச்சு கடைசியில் எங்களிலேயே ஆ என்று எம்மவர் தம்சுயமுகம் திறக்க சாத்திரிக்கு வந்தது ஆப்பு

தடை முடிய திரும்ப வந்தாலும் இனி எழுதுவதை கவனமாக எழுதும் என்ற ஒரு எச்சரிக்கை தான் இவையெல்லாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வணக்கம்,

2. குறிப்பிட்ட தொடர்கதையை ஆயிரக்கணக்கில் வாசகர்கள், கருத்துக்கள உறவுகள் பார்வையிட்டுள்ளார்கள். ஏராளம் பதில் கருத்துக்கள் வந்துள்ளன. ஆனால் சிலர் (பலர்? எத்தனைபேர்? 4? 5? 6?) தனிமடல் ஊடகவும், முறைப்பாட்டுப்பெட்டி ஊடாகவும் கூறியதன் அடிப்படையில் கதையில் காமம் பகுதியை நீக்கியது தவறாகவே தெரிகின்றது. ஒரு ஆக்கம் வந்தால் போற்றியும், தூற்றியும் கருத்துக்கள் வருவது வழமை. அதிலும் சர்ச்சைக்குரிய பகுதிகள் வரும்போது கருத்தாளர்கள் உணர்ச்சிவசப்படுவது வழமை. அதற்காக அடி, நுனி தெரியாமல் நடுவால் கத்தரித்தால் அடிப்படையில் விவாதம் என்பது பொருள் அற்றதாகிவிடும். இதை இயலாமையின் வெளிப்பாடாகவே பார்க்கவேண்டி உள்ளது. யதார்த்தத்திற்கு புறம்பான ஓர் மாயை உலகை சிருஷ்டித்து அந்த மாயை உலகினுள் கனவு காண்பதற்கே இப்படியான 'மறைப்புக்கள்' உதவும்.

இத்தகைய கசப்பான அனுபவங்கள், நடந்தவை நடந்தது போக... சாத்திரிவிடயத்தில் யாழ் கருத்துக்களத்தில் விடயங்கள் சுமுகமாகவும், நியாயத்துடனும் அமைவதற்கும், கையாளப்படுவதற்கும் கூறக்கூடிய ஆலோசனைகள்:

1. சாத்திரியின் வலைப்பூவில் ஏற்கனவே யாழில் பதியப்பட்ட பிரதான கருத்துக்கள் உள்ளன. எனவே நீக்கப்பட்ட கருத்துக்களை யாழில் மீண்டும் அந்தந்த இடங்களில் ஒட்டியதன் பின் நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ள கதைகளை மீண்டும் கதைகதையாம் பகுதிக்கு இலகுவில் கொண்டுவரப்படமுடியும். இதற்கு சாத்திரியினதும், நிர்வாகத்தினதும் ஒத்துழைப்பு தேவை.

2. சாத்திரியின் கவர்ச்சி, காதல், காமம், கண்ணியமான நட்பு, கடந்துவந்தபாதை தொடர்கதையை ஆரம்பத்தில் உள்ளதுபோலவே தொடர அனைவரும் ஒத்துழையுங்கள். கதையில் கூறப்படும் பகுதிகளுடன் உடன்பாடு இல்லாவிட்டால் உங்கள் பார்வையை அங்கு கூறுங்கள், தவறுகள் காணப்பட்டால் அவற்றை ஆதாரத்துடன் நிரூபியுங்கள். இவை சாத்தியப்படாவிட்டால் கதையை வாசிக்காதீர்கள்.

சாத்திரியின் இத்தொடர்கதை ஏறக்குறைய ஒருவரின் (சாத்திரியின்) சுயசரிதைபோல் உள்ளது. சுயசரிதையின் ஓர் பகுதியை எங்களுக்கு சொல்லாதே என்றும் எமக்கு விருப்பமான பகுதியை மட்டுமே கூறு என்றும் படைப்பாளிக்கு கட்டளையிடுவதாகவே இங்கு நடந்த சம்பவங்களை பார்க்கவேண்டியுள்ளது.

நன்றி!

கலைஞன் தங்களின் மேற்படி கருத்துக்களோடு என்னால் உடன்பட முடியவில்லை.

கதைகளில் வர்ணிக்கப்படும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை என்பதை எந்த வகையில் தற்துணிந்து கொள்வது.. (சாத்திரி மேல் அவ்வளவு நம்பிக்கையா..???!) என்று சொல்கிறீர்கள்...???!

இன்னொரு தலைப்பில் அவரிடம்.. சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் ஆதாரம் கேட்ட போது நக்கலும் நளினமுமே பதிலாகக் கிடைத்தது.

சாத்திரியின் சரியான இயக்கப் பின்னணி அறியாமல்.. அவரின் கதைகளை நாம் உண்மை என்று நம்ப முடியாது. அவற்றை காலத்தின் வரலாற்றின் பதிவாக ஏற்று நிற்க முடியாது.

இன்று வான்மீகி இராமாயணமும்.. கம்பன் இராமாயணமும் மோதுப்படுகின்றன..??! எதனால்..???! இரு படைப்பாளிகளிலும் யார் சித்தரித்தது உண்மை.. அல்லது நம்பக் கூடியது என்ற பிரச்சனை அங்கு..! கம்பன் அரச குடும்பம் மூலம்.. சமூக நன்னடத்தைக்கு பாடமெடுக்க.. வான்மீகி அரச வம்சத்தின் அடங்காப்பிடாரித் தனத்தை விபரிக்கிறான்..! ஒரு கற்பனை இலக்கியத்திற்கே இந்தக் கதி என்றால்.. காலத்தாலும் சரியாக எழுதி வைக்கப்பட வேண்டிய வரலாற்றில் ஆளாளுக்கு தங்களின் சுய காழ்புணர்ச்சிகளையும் வஞ்சகப் புகழ்ச்சிகளையும் இட்டு படைப்புக்களை ஆக்கி அவற்றை வேரும் விழுதுமாக்குவதன் மூலம்.. நிஜ வரலாறு மறைக்கப்பட்ட நிலையை விட எது தேறும்..???!

எழுதுவதெல்லாம்.. வரலாற்றிலக்கியமாக எழுந்து நிற்க அதை கைகட்டி வேடிக்கை பார்த்து நிற்க எல்லோராலும் முடியாது..!

வரலாற்றை படைப்பவனை விட அதனை எழுதி வைப்பவனுக்கு அதிக பக்குவமும்.. ஆராய்தல் திறனும்.. உண்மையை உள்ளபடி சொல்லும் கலையும் அவசியம்..! சாத்திரியிடம் அவை போதுமாக உள்ளன என்ற நம்பிக்கை இன்று பலரிடம் இல்லை. ஒரு நகைச்சுவை படைப்பாளியாக.. சாதாரண சமூகப் படைப்பாளியாக.. அவருக்குள்ள திறமைகளை வரலாற்றியல் பதிவுகளைப் பதிவிக்க போதும் என்று நாம் எடைபோட்டுக் கொள்ளக் கூடாது..! அதற்கு தனிப் பரிமானமும்.. படைப்புத் திறமையும் நேர்மையும்... கேள்வி கேட்கும் மக்களிடம் சான்றளிக்கக் கூடிய பக்குவமும்... அவசியம்..!

எமது இனம் சரியான வரலாற்றுப் பதிவின்றி இழந்தவை அதிகம். அதே நிலையில்.. வஞ்சகமும்.. காழ்புணர்வும் மிகுந்த வரலாற்றுப் பதிவு என்பது.. எமது இனத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குமே தவிர.. இவை எந்த வகையிலும் எமக்கு பலம் அளிக்கா.

அந்த வகையில் யாழில் கள உறவுகள் தமது கருத்தின் மூலம் வெளிப்படுத்தும் உணர்வுகளிற்கு படைப்பாளிகள் நியாயமான நிதானமான பதில் அளிக்கும் பக்குவத்தைக் கொண்டிருப்பதன் அடிப்படையில் தான்.. அந்தப் படைப்பை அங்கீகரிப்பதா நிராகரிப்பதா என்பதை வாசகர்களாக யாழ் கள உறவுகள் தீர்மானிக்க முடியும்.

சாத்திரி எழுதுகிறார் என்ற அந்த அடையாளத்திற்காக கைதட்டி ஆரவாரித்து.. படைப்புக்களை அங்கீகரிப்பது என்பது மிகவும் போலித்தனமான படைப்புக்கள் கூட வரலாறாகக் காட்டப்படும் நிலையே எஞ்சி நிற்கும். இதனை நீங்களும் வழிமொழிகிறீர்களா..??????!

உதாரணத்திற்கு.. சாத்திரி ஒரு ஆக்கம் படைக்கிறார்.. அதில்.. பிரபாகரனுக்கு நான்கு மனைவியர். அவர் அவர்களுடன் கூத்தடிப்பதையே செய்து கொண்டிருந்தார்.. இப்படி எழுதுகிறார் என்று வையுங்கோ.. பிரபாகரன் குறித்து பேச மறுக்கும் சமூகத்தில் சாத்திரியின் இந்த ஆக்கம்.. ஒரு புரட்சி.. என்று.. அதனைப் புரட்சியாக காட்ட ஒரு கூட்டம் வரும். பிரபாகரன் பற்றிய உண்மையைச் சொன்ன சாத்திரி வாழ்க என்று வாழ்த்த ஒரு கூட்டம் வரும்.. பிரபாகரனைப் பிடிக்காதவர்கள் எல்லாம் சாத்திரிக்கு வாசகர் வட்டம் வைத்து பொன்னாடையும் போர்க்கலாம்.. ஆனால் நிஜம் என்பது.. எந்த ஆராய்தலும் இன்றி செத்து சொற்களில் கசங்கிக் கிடக்கும்...! இந்த நிலையை நீங்கள் வரவேற்கிறீர்களா..?????! :):icon_idea::rolleyes:

நிச்சயமாக எம்மால் எம் போன்ற கள உறவுகளால்.. இவற்றை நியாயத்தின் முன் நிறுத்தாமல்.. படைப்புக்களின் பின்னணி குறித்த படைப்பாளியிடம் உள்ள ஆதாரம் தேடாமல்.. அவற்றை சமூகத்துள் நிலைநிறுத்த அனுமதிக்க முடியாது..! :icon_idea:

வலைப்பூக்களில் எவரும் எதனையும் எழுதிவிட்டுப் போகலாம். அது ஆதாரமின்றி இருப்பின்.. reliable அற்ற பதிவுகள் என்பதை உலகமே அறியும்..! (பல்கலைக்கழகங்களில் Blogs மற்றும் விக்கிபீடியா எல்லாம் மறுக்கப்பட்ட sources ஆகவே வரையறுக்கப்பட்டுள்ளன.) ஆனால் யாழ் களம் அப்படியான ஒன்றல்ல. அதற்கென ஒரு நம்பிக்கை உள்ள வாசகர் குலாம் உள்ளது. அதற்கென ஒரு தனித்தன்மை.. நாளைய வரலாற்றை பதிப்பிக்கும் ஆற்றல் உள்ளது. அதனை சிலர் தமது தேவைக்காக மலினப்படுத்த அனுமதிப்பதும் அதனை ஏற்றுக் கொள்வதும்.. உண்மையான வாசகர்களைப் பொறுத்தவரை கடினமான ஒன்றாகவே இருக்கும்..! யாழ் மோகன் அண்ணாவின் சொத்தாக இருந்தாலும் அவரின் இந்த முயற்சியின் நோக்கமும் யாழை ஒரு வரலாற்றுப் பதிவிடமாக்க வேண்டும் என்பதாகவே இருக்க முடியும்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் சமூகப்பொறுப்போடு நடந்து கொண்டால் இந்தநிலை வந்திராது. கலைஞனோ அல்லது படைப்பாளிக்கோ இந்தப்பொறுப்பு மிக அதிகம். அதை உணர்ந்தவரே எழுதத்தொடங்கணும். எதற்கெல்லாம் கைதட்டு விழுகிறது என்று பார்த்து தன் படைப்புக்களைச்செய்பவன் நல்ல படைப்பாளியாக முடியாது. அதற்கு வேறு பெயர். சாத்திரியும் இறுதியில் அந்த வரிசைக்குள் வந்ததற்கு காரணம் அவராக முடியாது. அவரை இந்த திசை நோக்கி பயணிக்க தள்ளிய அல்லது உந்து சக்தி கொடுத்த நீங்களே. இனி நீங்கள் விரும்பினாலும் இந்தப்போதையிலிருந்து அவரால் மீளவே முடியாது. இங்கு சில நாட்களாக ஒரு உக்தி கையாளப்படுகிறது. எனக்கு நீ பச்சை குத்தினால் நானும் உனக்கு பச்சை குத்துவேன். எனது ஆக்கத்தை நீ ஆதரித்து எழுதினால் உனது ஆக்கத்தை நானும் ஆதரித்து எழுதுவேன் என்பது போன்று. ஆனால் இது ஆரோக்கியமான வளர்ச்சியல்ல. இன்று இங்கு நடக்கும் பல நெருடல்களுக்கு இதுவே காரணம்.

உண்மைதான் சகோதரா, நானும் அவதானித்து வருகின்றேன்.

Link to comment
Share on other sites

யாழ் கருத்துக்களத்தில் இணைக்கப்படும் செய்திகள், எழுதப்படும் கருத்துக்கள், படைக்கப்படும் ஆக்கங்கள் ஆதாரபூர்வமாக ஐ.நா சபையின் மேற்பார்வையின்கீழ் கண்காணிக்கப்பட்டு சான்றுகள், தடயங்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிபுணர்களினால் ஆராயப்பட்டு அதன்பின்னரே பிரசுரம் செய்யப்படுவதுபோல், அதியுச்ச தராதரங்களுடன் யாழ் கருத்துக்களம் இயங்குவதுபோன்ற ஓர் பிரமையான கருத்தை நெடுக்காலபோவான் எழுதியுள்ளீர்கள். அது ஓர் பொய்மை என்பதும் நிச்சயமாக உங்களுக்குத்தெரியும்.

சாத்திரி தனது அனுபவங்களைக்கூறும்போது பல உறவுகள், பல சமயங்களில் ஆகா, ஓகோ என்று பாராட்டும்போது அவை - அந்த சம்பவங்கள் உண்மையா அல்லது பொய்யா என்பதை அறிவதற்கு காட்டாதஆவேசம், ஆதாரங்கள், உண்மையின் தரிசனத்திற்கான தேடல்கள் சில இடங்களில் மட்டும், அதாவது சார்புநிலைக்கருத்துக்கள் கூறப்படும்போது வராதது ஏன்?

அடிப்படையில் பச்சையாக சொல்வதாயிருந்தால் த.வி.பு பயிற்சிபாசறையில் இப்படியான (சாத்திரி காமம் பகுதியில் கூறுவதுபோன்று) சம்பவங்கள் நடைபெறவில்லை என்பதைவிட நடைபெற்றிருக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகவே பலர் (நிழலியின் கணக்குப்படி) யாழ் நிர்வாகத்திற்கு அழுத்தம்கொடுத்து குறிப்பிட்டபகுதியை நீக்கி தமது எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்துள்ளார்கள் என்று தோன்றுகின்றது. நிர்வாகமும் இதற்கு உடந்தையாக‌ பங்காற்றியுள்ளது.

நான் சாத்திரி எழுதுபவைகளில் சிலவற்றை வாசிப்பேன். எல்லாவற்றையும் வாசிப்பது இல்லை. இதற்காக அவரை நம்புகின்றேனோ அல்லது நம்பவில்லையோ என்று அர்த்தம் இல்லை. உண்மையில் காமம் பகுதியில் சாத்திரி எழுதியவிடயங்களில் புதுமையாக, இதுவரையில் கேள்விப்படாத பரம இரகசியங்கள் உள்ளதாகநான் நினைக்கவில்லை. கதையில் பயிற்சிப்பாசறைக்கு விஜயம்செய்யும் பொறுப்பாளர் ஒருவர் பெடியங்களுக்கு சாப்பாட்டில் மஞ்சள்தூள்போடுவதுபற்றி சொல்வதிலிருந்து (உண்மையாக இருந்தால்) அவர் அவ்வாறான பிரச்சனைகளை எவ்வளவு இலகுவாகவும், சாமர்த்தியமாகவும் கையாண்டுள்ளார் என்று தோன்றுகின்றது. அவரது யதார்த்த அறிவையும், அனுபவத்தையும் அது பறைசாற்றி நிற்கின்றது. பெடியங்கள் பத்து, இருபதுபேர் தனியே பழகும் இடத்தில் இப்படியானவிடயம் ஒன்றும் உயிர்போகும் பிரச்சனை இல்லையே? கனடா இராணுவத்தில் பல ஆயிரங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன. அதற்காக கனடா இராணுவம் மீதான எமது மதிப்பு குறைவது இல்லையே! ஆனால், த.வி.பு பயிற்சிப்பாசறையில் இவ்வாறான ஓர் சம்பவம் நடந்தது என எழுதும்போது ஏன் தமிழர் வரலாற்றுக்கே களங்கம் வந்துவிடப்போவதாய் பூச்சாண்டி காட்டி மிரள்கின்றீர்கள்?

யாழ் நிர்வாகமும், ஒருசிலரும் (பலரும்?) ஒன்றுசேர்ந்து தொடர்கதையின் காமம் பகுதியை நீக்கி நல்லது செய்வதாகநினைத்து குறிப்பிட்டகதைக்கும், கதையில்வரும் குறிப்பிட்ட சம்பவத்திற்கும் தவறான கற்பிதத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

நன்றி!

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம்,

இன்று சாத்திரியின் வலைப்பூவிற்கு சென்று சர்ச்சைக்குரிய 'காமம்' எனும் பகுதியில் எழுதப்பட்டுள்ளதை வாசித்தேன். அதில் பல விடயங்கள் பற்றி பேசப்பட்டுள்ளன. அதில் பயிற்சி முகாமில் நடைபெற்றதாக கூறப்படும் சில விடயங்களும் (காமம்) விபரிக்கப்பட்டு உள்ளன‌.

நான் இதுவரை வாசிக்கவில்லை. நேரம் கிடைக்கும்போது நிச்சயமாக வாசிப்பேன்.

குறிப்பிட்ட தொடர்கதையில் காமம் பகுதியை நீக்குவதற்கு நிழலி அவர்களினால் கீழ்வருமாறு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது:

"பல பல கள உறவுகளின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப (ரிப்போர்ட் பண்ணியும் தனிமடல்கள் மூலமும் நீக்குமாறு கேட்கப்பட்டன) சாத்திரியின் கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை என்ற திரியில் சாத்திரியால் பதியப்பட்ட 'காமம்' என்ற பதிவும் அது தொடர்பான பதில்களும் அகற்றப்படுகின்றன."

கள உறவுகள் பலராக உள்ளதால் நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். :blink:

நான் யாழ் களத்தை கடந்த கடந்த ஏழு ஆண்டுகளாக பார்வையிட்டு வருகின்றேன், ஐந்து ஆண்டுகளாக எழுதியும் வருகின்றேன். எனது அனுபவம், பார்வையின் அடிப்படையில் சாத்திரி எழுதிய தொடர்கதையின் குறிப்பிட்ட பகுதி நீக்கப்பட்டது தவறாகவே எனக்கு தெரிகின்றது.

1. தொடர்கதையின் தலைப்பிலேயே கவர்ச்சி, காதல், காமம், கண்ணியமான நட்பு, கடந்துவந்தபாதை என்பதில் காமம் என்பதும் அடங்குகின்றது. வாசிக்கும்போது தொடர்கதையின் முதல்பகுதியிலேயே அதன் கனதி தெரிகின்றது. அவ்வாறான நிலையில் காமம் பகுதியும் வரப்போகின்றது என்பது அனைவருக்கும் தெரியும். காமம் பகுதி எவ்வளவு கனதியாய் இருக்கும் என்பதும் நிச்சயம் தெரிந்திருக்கும். எனவே அதை ஏன் நிர்வாகம் ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளவில்லை? ஆரம்பத்தில் தொடர்கதையை அனுமதித்துவிட்டு இடையில் ஓர் பகுதியை அகற்றுவதை ஓர் படைப்பாளியாக என்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்ளமுடியாது.

காமத்தையும் கண்ணியமாகவும் அணுகலாம். இது ஒரு தொடர்கதை.. எழுதுபவரால் நேரடியாகப் பதியப்படப் போவது. முதலே திரைப்படம் மாதிரி அதை வெட்டி.. இதை வெட்டி.. அதை திருத்து.. இதை மாத்து.. என்று தணிக்கை செய்து வெளியிட முடியாது.. புட்போல் கிரிக்கெற் மாதிரி உடன உடன கவனித்து முடிவுகூற நடுவர்களை வேலைக்கு வைக்கலாம்தான்.. அதற்கு சம்பளம் இல்லாமல் எவராவது வருவார்களா என்ன? ஆக, பார்வையிட்டு முடிவெடுக்க கால தாமதம் ஆகும்தான். ஆயினும் இங்கே கள உறவுகளின் முறையீட்டின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மேலும் காலதாமதம் ஆயிருப்பினும் வியப்பில்லையே!

மனித வாழ்வே காமத்தின் அடிப்படையில்தான் எழுகிறது என்பது எனது கருத்து. காமம் புனிதமடைவதும் அருவருப்பூட்டுவதும் அதைக் கையாள்வதைப் பொறுத்து. திருக்குறளிலும்தான் காமம் இருக்கிறது.. கோயில் தேர்களிலும்தான் விதம் விதமான காமச் சிற்பங்கள் உள்ளன. அவை சமூகத்தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தவில்லையே..

ஆனால் யாழ் களத்தில் இப்படி ஒரு ஆக்கம் வருவதால் மட்டுறுத்தினர் கூறுவதுபோல பல அங்கத்தவர்களுக்கு ஏதாவது நெருடல் ஏற்பட்டிருக்கலாம்.. சிலவேளை நான் இங்கே கருத்தெழுதும் பெண் அங்கத்துவர் என்றால்.. காம ஆக்கங்கள் உள்ள தளத்தில் எழுதுவதால் எனக்கும் ஏதாவது அவப்பெயர் ஏற்படுமோ என நினைக்கலாம்.. இது ஒரு உதாரணம்..

தலைப்பில் காமம் இருப்பதால் காமம் சம்பந்தமாக எதையும் எழுதலாம் என்பது.. எழுத விடு வெட்டிக் கொத்தாதே என்பது.. திருமணம் செய்துவிட்டோமே.. இப்பவே மணவறையில் முதலிரவை கொண்டாட விடு எனக் கேட்பதைப்போல இல்லையா?!! :lol: :D

(மாப்பு.. வைச்சுட்டேன்பா ஆப்பு!! :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கருத்துக்களத்தில் இணைக்கப்படும் செய்திகள், எழுதப்படும் கருத்துக்கள், படைக்கப்படும் ஆக்கங்கள் ஆதாரபூர்வமாக ஐ.நா சபையின் மேற்பார்வையின்கீழ் கண்காணிக்கப்பட்டு சான்றுகள், தடயங்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிபுணர்களினால் ஆராயப்பட்டு அதன்பின்னரே பிரசுரம் செய்யப்படுவதுபோல், அதியுச்ச தராதரங்களுடன் யாழ் கருத்துக்களம் இயங்குவதுபோன்ற ஓர் பிரமையான கருத்தை நெடுக்காலபோவான் எழுதியுள்ளீர்கள். அது ஓர் பொய்மை என்பதும் நிச்சயமாக உங்களுக்குத்தெரியும்.

சாத்திரி தனது அனுபவங்களைக்கூறும்போது பல உறவுகள், பல சமயங்களில் ஆகா, ஓகோ என்று பாராட்டும்போது அவை - அந்த சம்பவங்கள் உண்மையா அல்லது பொய்யா என்பதை அறிவதற்கு காட்டாதஆவேசம், ஆதாரங்கள், உண்மையின் தரிசனத்திற்கான தேடல்கள் சில இடங்களில் மட்டும், அதாவது சார்புநிலைக்கருத்துக்கள் கூறப்படும்போது வராதது ஏன்?

அடிப்படையில் பச்சையாக சொல்வதாயிருந்தால் த.வி.பு பயிற்சிபாசறையில் இப்படியான (சாத்திரி காமம் பகுதியில் கூறுவதுபோன்று) சம்பவங்கள் நடைபெறவில்லை என்பதைவிட நடைபெற்றிருக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகவே பலர் (நிழலியின் கணக்குப்படி) யாழ் நிர்வாகத்திற்கு அழுத்தம்கொடுத்து குறிப்பிட்டபகுதியை நீக்கி தமது எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்துள்ளார்கள் என்று தோன்றுகின்றது. நிர்வாகமும் இதற்கு உடந்தையாக‌ பங்காற்றியுள்ளது.

நான் சாத்திரி எழுதுபவைகளில் சிலவற்றை வாசிப்பேன். எல்லாவற்றையும் வாசிப்பது இல்லை. இதற்காக அவரை நம்புகின்றேனோ அல்லது நம்பவில்லையோ என்று அர்த்தம் இல்லை. உண்மையில் காமம் பகுதியில் சாத்திரி எழுதியவிடயங்களில் புதுமையாக, இதுவரையில் கேள்விப்படாத பரம இரகசியங்கள் உள்ளதாகநான் நினைக்கவில்லை. கதையில் பயிற்சிப்பாசறைக்கு விஜயம்செய்யும் பொறுப்பாளர் ஒருவர் பெடியங்களுக்கு சாப்பாட்டில் மஞ்சள்தூள்போடுவதுபற்றி சொல்வதிலிருந்து (உண்மையாக இருந்தால்) அவர் அவ்வாறான பிரச்சனைகளை எவ்வளவு இலகுவாகவும், சாமர்த்தியமாகவும் கையாண்டுள்ளார் என்று தோன்றுகின்றது. அவரது யதார்த்த அறிவையும், அனுபவத்தையும் அது பறைசாற்றி நிற்கின்றது. பெடியங்கள் பத்து, இருபதுபேர் தனியே பழகும் இடத்தில் இப்படியானவிடயம் ஒன்றும் உயிர்போகும் பிரச்சனை இல்லையே? கனடா இராணுவத்தில் பல ஆயிரங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன. அதற்காக கனடா இராணுவம் மீதான எமது மதிப்பு குறைவது இல்லையே! ஆனால், த.வி.பு பயிற்சிப்பாசறையில் இவ்வாறான ஓர் சம்பவம் நடந்தது என எழுதும்போது ஏன் தமிழர் வரலாற்றுக்கே களங்கம் வந்துவிடப்போவதாய் பூச்சாண்டி காட்டி மிரள்கின்றீர்கள்?

யாழ் நிர்வாகமும், ஒருசிலரும் (பலரும்?) ஒன்றுசேர்ந்து தொடர்கதையின் காமம் பகுதியை நீக்கி நல்லது செய்வதாகநினைத்து குறிப்பிட்டகதைக்கும், கதையில்வரும் குறிப்பிட்ட சம்பவத்திற்கும் தவறான கற்பிதத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

நன்றி!

உங்கள் கருத்து தவறான புரிதல்களின் அடிப்படையில் மீண்டும் வந்திருப்பதாக நான் உணர்கிறேன்.

நாம் தொல்பியல் வரலாற்றை எழுத ஆதாரம் வைக்கச் சொல்லிச் சொல்லவில்லை... அல்லது கேட்கவில்லை.

நாம் கேட்பது எமது கண் முன்னே நடந்த வரலாற்றுக்குள் பிறழ்வுகள் புகுத்தப்படும் போது அதற்கான ஆதாரத்தை முன் வையுங்கள் என்பது தான்..! அதுதான் படைப்பின் கனதியை நம்பகத்தன்மையை படைப்பாளி மீதான மதிப்பை அதிகரிக்கும்.

உதாரணத்திற்கு.. ஒரு கிராமப் பயிற்சி முகாமில் போராளிகள் பிரச்சனை என்று குருட்டுத்தனமாக எழுதுவதை விடுத்து.. எந்தக் காலத்தில்.. எந்தப் பயிற்சி முகாமில்.. எவரின் பயிற்சித் தலைமையின் கீழ்.. இவ்வாறான சம்பவங்கள் நடந்தன என்பதைச் சொல்லும் போது.. அது தொடர்பான ஆராய்தலை.. வாசகர்கள் செய்து கொள்வார்கள். படைப்பாளி சிரமப்படத் தேவையில்லை..! இதைத்தான் வரலாற்றுப் பதிவுகளில் நாம் எதிர்பார்க்கிறோம்...???!

மேலும்.. கனடா இராணுவம் அப்படி.. அமெரிக்க இராணுவம் இப்படி.. சிறீலங்கா இராணுவம் அது செய்தது.. இந்திய இராணுவம் இது செய்தது.. ஆக விடுதலைப்புலிகளும் அதையே செய்திருக்கக் கூடும் என்று அனுமானிக்க வைக்கும் படைப்புக்களும் நமக்கு அவசியமில்லை. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு என்று சர்வதேச ரீதியிலான நன்னடைத்தைக்கான ஒரு தனி முத்திரை உண்டு. அதனை இலகுவில் தகர்க்க முடியாது. அப்படி செய்ய விரும்புகிற.. அல்லது அவர்களும் குப்பாடிகள் தான் என்று காட்ட விரும்புகிறவர்கள்.. அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும். கனடிய இராணுவம் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்று வரின்.. நிச்சயம் கனடிய அரசோ பாதுகாப்பமைச்சோ அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிராது..! நீங்கள் மதிக்கிறீங்களோ இல்லையோ.. ஒரு அரசு.. தனது படைகள் தொடர்பான நன்மதிப்பு உலக அரங்கில் கெடுவதை சுலபமாக எடுத்துக் கொள்ளாது..!

ஆனால் உங்கள் சொந்த சகோதர சகோதரிகளின் உயிர் தியாகத்தால் வளர்க்கப்பட்ட ஒரு அமைப்பின் மீது அந்த அமைப்பை விட்டு விலகிய அல்லது விலத்தி வைக்கப்பட்ட ஒருவர் சுமத்தும் குற்றச்சாட்டு என்பது.. ஆதாரமின்றி உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒன்றல்ல..! அதனையும் நீங்கள் நியாயத்தோடு ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தையும் சுட்டிக்காட்டும் இதய சுத்தியையும் இங்கு வெளிக்காட்டுதல் அவசியம்..!

நான் என் எண்ணத்திற்கு கற்பனைக்கு கலைஞன்.. ஒரு காமவெறியன்.. அவரை எனக்கு யாழ்ப்பாணத்தில் தெரியும்.. சிவன் கோவில் திருவிழாவில் அவர் ஒரு ஆன்ரியுடன் கசமுசா செய்தவர்.. என்று மிகவும் கவர்ச்சியாக.. காமம்.. காதல்.. கவர்ச்சி என்று தலைப்பிட்டு ஒரு கதை என்ன தொடரே எடுதிவிட்டு போகலாம். இதனை நீங்கள் எப்படி நோக்குவீர்கள். இதன் அடிப்படையில் உங்களை வாசகர்கள் எப்படி நோக்குவர்.. மேலும் எனது எழுத்துக்களின் பின்னால் உள்ள நம்பகத்தன்மையை வாசகர்கள் எப்படி உறுதி செய்து கொள்வர்..???!

இங்கும் நீங்கள்.. உலகத்தில் எத்தின காமுகர்கள்.. கலைஞனும் அப்படி இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு எழுந்தமானமாகவே வர முயற்சிப்பீர்களா.. இல்லை.. அது தவறான தகவலின் அடிப்படையில் அமைந்த அவதூறான எழுத்து என்று நிரூபிக்க நிற்பீர்களா..????! ஒரு தனிமனிதனின் சுய சரிதமே.. இத்தனை தடைகளை தாண்டி எழுத்தில் பதிவாக வேண்டி இருக்கும் நிலையில்.. ஒரு இனத்தின் கருப்பொருளான ஒரு வரலாற்றோடு பின்னிப் பிணைந்த அமைப்பை.. ஒரு சிலர் சகட்டு மேனிக்கு சிலாகித்து விட்டுப் போவதும்.. அதை படைப்பென்று எடுத்து.. ஆராய்தல் இன்றி புகழ்பாடுவதும்.. அதற்கு அங்கீகாரம் அளிப்பதும்.. எம்மால் நிச்சயம் செய்ய முடியாத ஒன்றாகவே இருக்கும்..! இதுதான் யதார்த்தம். புலிகளுக்கு என்றுள்ள இந்த சிலாகிப்புக்கள் ஏன் மற்றவர்கள் மீது படைப்பாகி உதிர்வதில்லை..???!

எத்தனையோ நிஜ தவறு செய்தவர்கள் காட்டிக் கொடுத்த கூலிக்கு நடிகைகளோடு கட்டிப்புரண்டவர்கள்.. மாற்று இயக்கப் பிரமுகர்களாக.. மாற்றுக் கருத்தாளர்களாக வலம் வரும் போது அவர்கள் பற்றிய ஒரு சுய சரிதை எழுத ஏன் இவர்களால்.. காமம்.. காதல்.. கவர்ச்சி என்று தலைப்பிட்டு செய்ய முடியவில்லை..!

இதற்கு இதய சுத்தியோடு பதில் அளிக்கும் வல்லமை இருப்பின்.. அதையே போராளிகள் மீதும் ஆதாரத்தோடு.. நீங்கள் காட்டச் சொல்வதில் உள்ள நியாயத்தை நான் தேடிக் கொள்ள முனைகிறேன்.!

மற்றும்படி.. நிச்சயமாக சாத்தியமான எல்லா வழிகளிலும் அவதூறுகளும்.. வன்புகழ்ச்சிகளும்.. காழ்புணர்ச்சிகளும்.. படைப்பாக வெளிவந்து வரலாறாக பரினமிக்க.. அல்லது இனங்காட்டப்பட எம்மால் இயன்ற அளவு காரணங்கள் அடையாளம் காணப்பட்ட அளவில் அந்த எழுத்தை அப்படியே அனுமதிப்பது எழுத்துத் தர்மத்திற்கே தகாத ஒன்று என்பதைப் புரிந்து கொள்கின்ற அதேவேளை அதை தடுத்து நிறுத்த முயல்வது ஒவ்வொரு தமிழனதும்.. வரலாற்றுப் பதிவை நேசிப்பவனதும் கடமையாகும்..!

அதை நாம் நிச்சயம் இங்கும் சரி எங்கும் சரி வலியுறுத்துவோம்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

2004 ஆம் ஆண்டு ஒரு சம்பவம் ஈழவரலாற்றில் நடந்தது.

என்ன காரணத்துக்கோ தெரியா கருணா புலிகள் அமைப்பில் இருந்து வெளிக்கிட போறான் என்று கதை உள்ளுக்கை அடிபடத்தொடங்கி விட்டது.

பலர் தலைவரை விட்டு கருணா போக மாட்டான் என்றார்கள். சிலர் கருணாவுக்கு பெயர் கிடைத்து விட்டது அவன் தலைவரை போல் தானும் என்ற என்னம் வந்து விட்டது ஆகவே அவன் பிரிய போகிறான் என்றார்கள். அதை விட முக்கிய சிலர் கருணா என்ன தவறும் செய்தாலும் பிரபாகரன் கருணாவை சமாதானப்படுத்தி வைத்து இருப்பார்.......... கணிப்புக்கள் மாறின காட்சிகளும் மாறின.

..............

புலிகள் ஒரு கட்டுக் கோப்பான அமைப்பு அங்கு அவர்களுக்கு என்று ஒரு ஒரு சட்ட திட்ட விதிமுறைகள் இருக்கு.....

கருணா புலிகளுடன் இருந்த காலத்தில் நல்லவன் தான் நல்ல பெயர்களும் எடுத்தவன் தான்.

சரி ஏன் தலைவர் கருணாவுக்கு அடங்கி போகவில்லை?

ஏன் கருணா தன் தவறை உணரவில்லை?

கலைஞன் சொல்ல வாரது என்ன?

சாத்திரியின் காமம் பதிவு நீக்கியது தவறு>?

அந்த கோவத்தில் சாத்திரி தன் பதிவுகளை எல்லாம் நீக்கினது சரியா?

சாத்திரி ஏன் தன் பதிவுகளை நீக்கினார்?

சரி இப்ப நான் விடையதுக்கு வாறேன்/.

சாத்திரி யின் ஆக்கத்துக்கு பலபேர் கருத்து எழுதி இருந்தார்கள். இப்ப ஆக்கம் காணாமல் போய்விட்டது அதுக்கு கீழ கருத்து எழுதினவர்கள் கேணையர்களா?

Link to comment
Share on other sites

மீண்டும் சொல்கிறேன் யாழில் சாத்திரியின் ஆக்கத்தை விரும்பி படிப்பதுக்கே நான் கூட வருகிறேன்.

பயிற்சி முகாமில் காமம் என்று சாத்திரி சொன்னதில் எனக்கு அதிர்ச்சி யில்லை.

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம்,

இன்று சாத்திரியின் வலைப்பூவிற்கு சென்று சர்ச்சைக்குரிய 'காமம்' எனும் பகுதியில் எழுதப்பட்டுள்ளதை வாசித்தேன். அதில் பல விடயங்கள் பற்றி பேசப்பட்டுள்ளன. அதில் பயிற்சி முகாமில் நடைபெற்றதாக கூறப்படும் சில விடயங்களும் (காமம்) விபரிக்கப்பட்டு உள்ளன‌.

குறிப்பிட்ட தொடர்கதையில் காமம் பகுதியை நீக்குவதற்கு நிழலி அவர்களினால் கீழ்வருமாறு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது:

"பல பல கள உறவுகளின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப (ரிப்போர்ட் பண்ணியும் தனிமடல்கள் மூலமும் நீக்குமாறு கேட்கப்பட்டன) சாத்திரியின் கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை என்ற திரியில் சாத்திரியால் பதியப்பட்ட 'காமம்' என்ற பதிவும் அது தொடர்பான பதில்களும் அகற்றப்படுகின்றன."

நான் யாழ் களத்தை கடந்த கடந்த ஏழு ஆண்டுகளாக பார்வையிட்டு வருகின்றேன், ஐந்து ஆண்டுகளாக எழுதியும் வருகின்றேன். எனது அனுபவம், பார்வையின் அடிப்படையில் சாத்திரி எழுதிய தொடர்கதையின் குறிப்பிட்ட பகுதி நீக்கப்பட்டது தவறாகவே எனக்கு தெரிகின்றது.

1. தொடர்கதையின் தலைப்பிலேயே கவர்ச்சி, காதல், காமம், கண்ணியமான நட்பு, கடந்துவந்தபாதை என்பதில் காமம் என்பதும் அடங்குகின்றது. வாசிக்கும்போது தொடர்கதையின் முதல்பகுதியிலேயே அதன் கனதி தெரிகின்றது. அவ்வாறான நிலையில் காமம் பகுதியும் வரப்போகின்றது என்பது அனைவருக்கும் தெரியும். காமம் பகுதி எவ்வளவு கனதியாய் இருக்கும் என்பதும் நிச்சயம் தெரிந்திருக்கும். எனவே அதை ஏன் நிர்வாகம் ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளவில்லை? ஆரம்பத்தில் தொடர்கதையை அனுமதித்துவிட்டு இடையில் ஓர் பகுதியை அகற்றுவதை ஓர் படைப்பாளியாக என்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்ளமுடியாது.

2. குறிப்பிட்ட தொடர்கதையை ஆயிரக்கணக்கில் வாசகர்கள், கருத்துக்கள உறவுகள் பார்வையிட்டுள்ளார்கள். ஏராளம் பதில் கருத்துக்கள் வந்துள்ளன. ஆனால் சிலர் (பலர்? எத்தனைபேர்? 4? 5? 6?) தனிமடல் ஊடகவும், முறைப்பாட்டுப்பெட்டி ஊடாகவும் கூறியதன் அடிப்படையில் கதையில் காமம் பகுதியை நீக்கியது தவறாகவே தெரிகின்றது. ஒரு ஆக்கம் வந்தால் போற்றியும், தூற்றியும் கருத்துக்கள் வருவது வழமை. அதிலும் சர்ச்சைக்குரிய பகுதிகள் வரும்போது கருத்தாளர்கள் உணர்ச்சிவசப்படுவது வழமை. அதற்காக அடி, நுனி தெரியாமல் நடுவால் கத்தரித்தால் அடிப்படையில் விவாதம் என்பது பொருள் அற்றதாகிவிடும். இதை இயலாமையின் வெளிப்பாடாகவே பார்க்கவேண்டி உள்ளது. யதார்த்தத்திற்கு புறம்பான ஓர் மாயை உலகை சிருஷ்டித்து அந்த மாயை உலகினுள் கனவு காண்பதற்கே இப்படியான 'மறைப்புக்கள்' உதவும்.

3. சாத்திரி தனது தொடர்கதையின் ஓர் பகுதி நீக்கப்பட்டதால் மனமுடைந்து தான் எழுதிய பதிவுகளை நீக்குவதற்கு யாழ் நிர்வாகமும் நிச்சயம் காரணமாக அமைந்துள்ளது. நீங்கள் ஓர் படைப்பாளியாக இருந்தால் அதை - வேதனையை, அவமானத்தை நிச்சயம் புரிந்துகொள்ளமுடியும். யாழ் இணையம் பற்றி மோகன் வெளிப்படையாகவே கூறியுள்ளார் நேரம் இல்லை, அதிககவனம் செலுத்தமுடியவில்லை என்று. இவ்வாறே கருத்துக்களத்தை நிர்வகிக்கும் நிழலி, இணையவனின் சிரமங்களையும் நாம் இலகுவில் புரிந்துகொள்ளமுடியும். அமரர் வசம்பு அவர்களின் நினைவுப்பகிர்வு பற்றிய ஓர் பகுதியில் கருத்துக்களம் பற்றிய சில சிக்கல்களை, சிரமங்களை நான் ஏற்கனவே கூறினேன். இந்தவகையில்...

இத்தகைய கசப்பான அனுபவங்கள், நடந்தவை நடந்தது போக... சாத்திரிவிடயத்தில் யாழ் கருத்துக்களத்தில் விடயங்கள் சுமுகமாகவும், நியாயத்துடனும் அமைவதற்கும், கையாளப்படுவதற்கும் கூறக்கூடிய ஆலோசனைகள்:

1. சாத்திரியின் வலைப்பூவில் ஏற்கனவே யாழில் பதியப்பட்ட பிரதான கருத்துக்கள் உள்ளன. எனவே நீக்கப்பட்ட கருத்துக்களை யாழில் மீண்டும் அந்தந்த இடங்களில் ஒட்டியதன் பின் நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ள கதைகளை மீண்டும் கதைகதையாம் பகுதிக்கு இலகுவில் கொண்டுவரப்படமுடியும். இதற்கு சாத்திரியினதும், நிர்வாகத்தினதும் ஒத்துழைப்பு தேவை.

2. சாத்திரியின் கவர்ச்சி, காதல், காமம், கண்ணியமான நட்பு, கடந்துவந்தபாதை தொடர்கதையை ஆரம்பத்தில் உள்ளதுபோலவே தொடர அனைவரும் ஒத்துழையுங்கள். கதையில் கூறப்படும் பகுதிகளுடன் உடன்பாடு இல்லாவிட்டால் உங்கள் பார்வையை அங்கு கூறுங்கள், தவறுகள் காணப்பட்டால் அவற்றை ஆதாரத்துடன் நிரூபியுங்கள். இவை சாத்தியப்படாவிட்டால் கதையை வாசிக்காதீர்கள்.

சாத்திரியின் இத்தொடர்கதை ஏறக்குறைய ஒருவரின் (சாத்திரியின்) சுயசரிதைபோல் உள்ளது. சுயசரிதையின் ஓர் பகுதியை எங்களுக்கு சொல்லாதே என்றும் எமக்கு விருப்பமான பகுதியை மட்டுமே கூறு என்றும் படைப்பாளிக்கு கட்டளையிடுவதாகவே இங்கு நடந்த சம்பவங்களை பார்க்கவேண்டியுள்ளது.

நன்றி!

கலைஞன் நிதானமாக அழகாக எழுதி இருக்கின்றீர்கள்.

ஒரு விடயம்: போராட்டத்தை, போராட்டத் தலைமையை கடுமையாக விமர்சிப்பதன் மூலம், போராட்டத்தின் தோல்வியை மீள் விமர்சனம் செய்வதற்கும் போராளிகளின் மானுட வாழ்வில் இடம்பெறும் சாதாரண பாலியல் விடயங்களை எழுதுவதற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. குழந்தைகள் மீதான, சிறுவர்கள் மீதான வன்முறை பற்றி பதிந்த ஒரு திரியில், போராளிகளின் பாலியல் நடத்தைகளை பட்டியலிட்டது மூலம் இரண்டையும் ஒரே மட்டத்தில் வைப்பதை ஏற்காமல் தான் பலரது வேண்டுகோள்கள் அந்த பதிவை மட்டும் அகற்றும் படி வந்தன. இலவம் காத்த திரியில் கூட புலிகளின் மீதான விமர்சனம் இருந்தது. ஆனால் அதனை அகற்றும் படி எவரும் கேட்டுக்கொள்ளவில்லை. சாத்திரி அந்த பதிவை பதிந்தமை எந்தக் களவிதிகளையும் மீறி அல்ல என்பது குறிப்பிட வேண்டிய விடயம்; ஆனால் சனநாயகத்தன்மையுடன் கள உறவுகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது யாழுக்கு அவசியமான ஒன்று. அதனால் தான் பலரது வேண்டுகோளுக்காக அதனை அகற்ற வேண்டி வந்தது.

அந்த பதிவு பற்றிய எனது கருத்து: மித்திரன் பத்திரிகையில் வரும் ஆண் / பெண் ஹொஸ்டலில் நடக்கும் லீலைகள் என்ற தொனியில் போராளிகளின் வாழ்வை எழுத முடியாது. அவ்வாறு எழுதுவது ஒரு இலக்கிய படைப்பாகவும் ஆகாது

நன்றி

Link to comment
Share on other sites

முதலில் சாத்திரி அவர்கள் பற்றி நான் முன்பு எழுதிய பதிவில் (2008) இருந்து...

சாத்திரி:

சாத்திரி அண்ணா யாழில இருக்கிற படைப்பாளிகளில முக்கியமான ஒருத்தர். நான் சாத்திரி அண்ணாவின் ஏராளம் ஆக்கங்களை வாசிச்சு, கேட்டு மகிழ்ந்து இருக்கிறன். அதில முக்கியமான ஒண்டு காதல் பற்றின ஒரு கவிதை. அந்தமாதிரியான ஒரு சூப்பர் கவிதை. திடீரெண்டு ஏதோ புத்தருக்கு நிறைஞானம் கிடைச்சமாதிரி அந்தக்கவிதையை எழுதி யாழில இணைச்சு இருந்தார். இந்தக்கவிதைய வாசிச்ச மணிவாசகன் என்ன சாத்திரி இவ்வளவு காலமும் சரக்கை எங்க வச்சு இருந்தனீங்கள் எண்டு பகிடியாக கேட்டு இருந்தார். அப்படி ஒரு அருமையான கவிதை அது.

இப்ப கொஞ்சக்காலமாய் சாத்திரி அண்ணைக்கு என்னோட கோபம். எனக்கும் ஒரு பட்டம் தந்து இருந்தார். மாற்றுக்கருத்து மாணிக்கம், மற்றது மீட்பர் யேசு எண்டு எதோ.. யாழில பட்டங்கள் தாறனீங்கள் தாராளமாய் தாங்கோ ஆனால் அதைவச்சு நான் காசு பண்ணக்கூடியமாதிரியான M.B.B.S, F.R.C.S, D.Sc.. அப்பிடி ஏதாவது பெரிய பட்டங்களாய் தந்தால் நான் வாழ்க்கையில பிழைச்சுக்கொள்ள உதவியாய் இருக்கும். ஹாஹா

சாத்திரி அண்ணாவிடம் ஏராளம் ஆற்றல்கள் இருக்கிது. ஆனால்.. நான் கவலைப்படுவது அந்த ஆற்றல்களை ஒரு சதத்துக்கு உபயோகம் இல்லாத ஆக்களை விமர்சனம் செய்யவெளிக்கிட்டு வீணாக்கிவிடுவாரோ எண்டு. உங்கள் எல்லாருக்கும் மாமனிதர். பொன்.கணேசமூர்த்தியை தெரிஞ்சு இருக்கும். அவர் தனது ஆற்றல்களை எப்படி பயன்படுத்தி இருந்தார் எண்டும் தெரிஞ்சு இருக்கும். ஒருவரை நேரடியாக தாக்காது, சமூகத்தில இருக்கிற பிரச்சனையை பச்சையாக சொல்லாது, சூசகமாக நாகரீகமான முறையில, மிகவும் நகைச்சுவையுடன் விழுந்து விழுந்து சிரிக்கக்கூடியதாக சொல்வதில அவர் வல்லவர். அவரிண்ட சந்தனக்காடு நாடகத்தை எத்தனைபேர் ஊரில பார்த்து இருப்பீங்களோ தெரியாது. அவரை மாதிரி சாத்திரி அண்ணாவும் தனது அடுத்த படிமுறை வளர்ச்சியை நோக்கி தனது ஆற்றல்களை ஒருமுகம் செய்து குவிச்சு, விருத்தி செய்து நல்லதொரு கலைஞராக மிளிரவேணும் என்பதே எனது எதிர்பார்ப்பும், ஆசைகளும், வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்!

++++++

இனி, மேலே நெடுக்காலபோவான் தொடக்கம் நிழலிவரை கூறிய கருத்துக்களிற்கான சுருக்கமான பதிலுரை:

(கீழே ஆட்களின் சில பெயரை குறிப்பிடுவதற்கு மன்னிக்கவும்)

நெடுக்காலபோவான் தொடக்கம் அபிராம் என்பவர் வரை த.வி.பு பற்றிய கதைகளை இங்கு பதிந்துள்ளார்கள், பதிகின்றார்கள். ஐயர் என்பவர் எழுதிய த.வி.புபற்றிய கதையும் இணைக்கப்பட்டது. கதையின் உண்மைத்தன்மைபற்றி இவர்களிடம் இங்கு ஆதாரங்கள் கேட்கப்படுகின்றனவா? ஆதாரம்இல்லை எனக்கூறி அவர்கள் ஆக்கங்கள் நீக்கப்பட்டனவா? ஆனால் சாத்திரிக்கு மட்டும் அவர் எழுதும் தனது (சொந்த அனுபவங்களிலான கதைக்கு) ஆதாரம் இல்லை என்று கூறி மலினப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. த.வி.புஇற்கு ஆதரவாக என்றால் எதையும் எழுதலாம் ஆதாரம், சான்றுகள், சாட்சிகள் தேவை இல்லை ஆனால் சற்று முகம் சுளிக்கும்வகையில் (?) அவர்கள்பற்றி எதையாவது இங்கு எழுதினால் அதற்கு சான்றுகள், சாட்சிகள், காணொளிகள் தேவை எனும்வகையில் நடப்பது ஒருதலைப்பட்சமானது. அது கருத்துக்களத்துக்கு அழகும் அல்ல, கருத்துக்களத்தின் வளர்ச்சிக்கும் உதவாது.

சப்போட்பண்ணி எழுதுவது என்றால் எதையாவது எழுதலாம் என்பது இங்கு யாழ் கருத்துக்களத்தில் எழுதப்படாத களவிதியாகவே உள்ளது. தவிர, த.வி.புகூட தமது தென்பகுதி தாக்குதல்கள், அவற்றின் இறுதிச்சம்பவங்கள், இரகசியங்கள் பற்றிமூச்சுக்காட்டுவது இல்லை. ஏன் கூடுமானவரை உத்தியோகபூர்வமாக தாக்குதலை தாம் செய்தோம் என்று ஏற்றுக்கொண்டதும் இல்லை. அப்படியாயின், அபிராம் என்பவர் பதியும் தென்பகுதி கதைகளை  யாழ் நிர்வாகம் எவ்வாறு அனுமதிக்கின்றது? அவர் த.வி.புஇடம் அனுமதி பெற்றாரா? ஆதாரங்கள், சான்றுகள் உள்ளனவா? அவற்றை உங்களிடம் சமர்ப்பித்தாரா? நீங்கள் உறுதிப்படுத்தினீர்களா? எதிர்காலத்தில் அவைமூலம் சட்டச்சிக்கல்கள் ஏற்பட்டால் யார் பொறுப்பு? அபிராம் வந்து சாட்சி சொல்வாரா? சாத்திரி பயிற்சிப்பாசறையில் தனது சொந்த அனுபவங்கள் என்று கூறுபவற்றை நிகாரிப்பவர்கள் எப்படி த.வி.புவை உலகின் மிகக்கொடிய பயங்கரவாதிகள் எனும்வகையில் காட்டப்படக்கூடிய‌ தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தும் அபிராம் என்பவர் எழுதும்கதைகள்பற்றி மூச்சுக்காட்டவில்லை? அதாவது அங்கு வீரம், தியாகம் உயர்வாக தெரிகின்றது, ஆனால் இங்கு காமம் இழிவாகத்தெரிகின்றது என்பதாலா?

செக்ஸ்பற்றி பேசும்போது ஒரு மனநலமருத்துவர் அழுக்குகள் வெளியில் இல்லை எம்முள்ளேதான் உள்ளன என்று கூறினார். வெளியில் பேசப்படாமல் இருப்பதாலேயே பலருக்கு பலவிதமான செக்ஸ் சம்மந்தமான வியாதிகள் உள்ளன என்றும் கூறுகின்றார். அதுபற்றிய காணொளி ஒன்றை நான் முன்பு யாழில் எங்கோ ஓர் பதிவில் இணைத்தேன். இந்தப்பதிவுடன் சம்மந்தப்பட்டுள்ளதால் அதை மீண்டும் கூறுகின்றேன்.

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதிரியார் வருவார் ஆனால் எப்ப வருவார் எப்படி வருவார் என்று தான் யாருக்கும் தெரியாது....."சாத்திரகாரயோ என்ட ''

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

++++++

இனி, மேலே நெடுக்காலபோவான் தொடக்கம் நிழலிவரை கூறிய கருத்துக்களிற்கான சுருக்கமான பதிலுரை:

(கீழே ஆட்களின் சில பெயரை குறிப்பிடுவதற்கு மன்னிக்கவும்)

நெடுக்காலபோவான் தொடக்கம் அபிராம் என்பவர் வரை த.வி.பு பற்றிய கதைகளை இங்கு பதிந்துள்ளார்கள், பதிகின்றார்கள். ஐயர் என்பவர் எழுதிய த.வி.புபற்றிய கதையும் இணைக்கப்பட்டது. கதையின் உண்மைத்தன்மைபற்றி இவர்களிடம் இங்கு ஆதாரங்கள் கேட்கப்படுகின்றனவா? ஆதாரம்இல்லை எனக்கூறி அவர்கள் ஆக்கங்கள் நீக்கப்பட்டனவா? ஆனால் சாத்திரிக்கு மட்டும் அவர் எழுதும் தனது (சொந்த அனுபவங்களிலான கதைக்கு) ஆதாரம் இல்லை என்று கூறி மலினப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. த.வி.புஇற்கு ஆதரவாக என்றால் எதையும் எழுதலாம் ஆதாரம், சான்றுகள், சாட்சிகள் தேவை இல்லை ஆனால் சற்று முகம் சுளிக்கும்வகையில் (?) அவர்கள்பற்றி எதையாவது இங்கு எழுதினால் அதற்கு சான்றுகள், சாட்சிகள், காணொளிகள் தேவை எனும்வகையில் நடப்பது ஒருதலைப்பட்சமானது. அது கருத்துக்களத்துக்கு அழகும் அல்ல, கருத்துக்களத்தின் வளர்ச்சிக்கும் உதவாது.

சப்போட்பண்ணி எழுதுவது என்றால் எதையாவது எழுதலாம் என்பது இங்கு யாழ் கருத்துக்களத்தில் எழுதப்படாத களவிதியாகவே உள்ளது. தவிர, த.வி.புகூட தமது தென்பகுதி தாக்குதல்கள், அவற்றின் இறுதிச்சம்பவங்கள், இரகசியங்கள் பற்றிமூச்சுக்காட்டுவது இல்லை. ஏன் கூடுமானவரை உத்தியோகபூர்வமாக தாக்குதலை தாம் செய்தோம் என்று ஏற்றுக்கொண்டதும் இல்லை. அப்படியாயின், அபிராம் என்பவர் பதியும் தென்பகுதி கதைகளை யாழ் நிர்வாகம் எவ்வாறு அனுமதிக்கின்றது? அவர் த.வி.புஇடம் அனுமதி பெற்றாரா? ஆதாரங்கள், சான்றுகள் உள்ளனவா? அவற்றை உங்களிடம் சமர்ப்பித்தாரா? நீங்கள் உறுதிப்படுத்தினீர்களா? எதிர்காலத்தில் அவைமூலம் சட்டச்சிக்கல்கள் ஏற்பட்டால் யார் பொறுப்பு? அபிராம் வந்து சாட்சி சொல்வாரா? சாத்திரி பயிற்சிப்பாசறையில் தனது சொந்த அனுபவங்கள் என்று கூறுபவற்றை நிகாரிப்பவர்கள் எப்படி த.வி.புவை உலகின் மிகக்கொடிய பயங்கரவாதிகள் எனும்வகையில் காட்டப்படக்கூடிய‌ தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தும் அபிராம் என்பவர் எழுதும் கதைகள் பற்றி மூச்சுக்காட்டவில்லை? அதாவது அங்கு வீரம், தியாகம் உயர்வாக தெரிகின்றது, ஆனால் இங்கு காமம் இழிவாகத்தெரிகின்றது என்பதாலா?

செக்ஸ்பற்றி பேசும்போது ஒரு மனநலமருத்துவர் அழுக்குகள் வெளியில் இல்லை எம்முள்ளேதான் உள்ளன என்று கூறினார். வெளியில் பேசப்படாமல் இருப்பதாலேயே பலருக்கு பலவிதமான செக்ஸ் சம்மந்தமான வியாதிகள் உள்ளன என்றும் கூறுகின்றார். அதுபற்றிய காணொளி ஒன்றை நான் முன்பு யாழில் எங்கோ ஓர் பதிவில் இணைத்தேன். இந்தப்பதிவுடன் சம்மந்தப்பட்டுள்ளதால் அதை மீண்டும் கூறுகின்றேன்.

நன்றி!

நாங்களும் கதை எழுதி இருக்கிறம். அவைக்கும் நேர்.. எதிர் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. நாங்கள் வாசகர்களின் கண்முன்னாள் நடக்கும் விடயங்களை முன்னிறுத்துகிறோம். வாசகன் தான் காணும் அனுபவத்தோடு..நிகழ்வோடு அதனை ஒப்பிட்டு சரிபார்க்கிறான்/ள். அங்கு நாங்கள் எதனையும் புதிய ஆதாரமாகக் கொண்டு வந்து கொட்ட வேண்டிய அவசியம் எழவில்லை. காரணம்.. வாசகனே ஆதாரத்தை தேடிக் கொள்ள எழுத்தில் இடமளிக்கிறோம்..!

ஆனால்.. போராளிகளின் வாழ்வு என்பது அதுவும் பயிற்சி முகாம் வாழ்வென்பது எல்லோராலும் அறியப்பட்ட விடயம் அல்ல. அங்கிருந்த கடுமையான சூழலை நாங்கள் அறிந்தவர்கள் கண்டவர்கள் என்ற நிலையில்.. எங்களுக்கும் கூட சாத்திரியின் எழுத்தில் சந்தேகம் பிறந்தது. அதனை ஆதாரம் கொண்டு விளங்கிக் கொள்ள.. எம்மால் முடியாத போது.. எழுத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக் குறியாகி நின்றது.

பயிற்சி முகாம் வாழ்வில்.. போராளிகளின் வாழ்வில்.. கடும் பயிற்சிகள்.. ஓய்வின்றிய செயற்பாடுகள்.. கால் முறிவு.. கை முறிவு.. இதனால் இணைந்ததில் இருந்து.. சண்டைக்கே போக முடியாத ஒரு போராளியின் ஏக்கம்.. பயிற்சி மரணங்கள்.. சரியான உணவின்றிய நோய்கள்.. இப்படி எத்தனையோ எழுத்தப்படாமல்.. கிடக்கின்றன..!

நீண்ட காலம் போராளிகளின் வாழ்விடங்களோடு.. வாழ்ந்தவர்கள் என்ற வகையில் அவர்களின் வாழ்க்கை பற்றி நமக்கும் கொஞ்சம் தெரியும்..! போராளிகள்.. ஜோக் அடிப்பார்கள்... பம்பலுக்கு கதைப்பார்கள்.. ஏன் சைக்கிளில் சுத்தியும் திரிவார்கள். அவர்களும் மனிதர்களே..! அவர்களிடத்தில் இயற்கையான உணர்வுகள் எழுவதை நாம் வர்ணிக்க வேண்டியதில்லை. அதே தான் நமக்குள்ளும் சாதாரணமாக எழுகிறதே..??! இல்ல அவர்களுக்குள் எழுவது வித்தியாசமோ..?????!

போராளிகளின் முகாம் வாழ்வு பற்றி மக்களுக்கு அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் போராளிகள் பற்றிய எழுத்துக்களை சரிபார்க்கும் அனுபவம் எல்லா மக்களிடமும் இல்லை. அந்த வகையில் தவறான எண்ணங்களோடு புனையப்படும் கதைகளும் ஆக்கங்களும் மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் போராளிகள் பற்றிய எண்ணக் குறைபாட்டையும் ஏற்படுத்துமே அன்றி அவர்களின் முன் ஆதாரத்தை விட்டுச் செல்லாது.. உண்மையான போராளிகளின் வரலாற்றை முன்னிறுத்தாது. இந்த ஆபத்தை நாங்கள் சாத்திரின் எழுத்தின் உணர்ந்தோம்..!

அதுமட்டுமன்றி போராளிகளின் பெரு வாழ்வு என்பது.. பல சந்தர்ப்பங்களில் இயற்கை உணர்ச்சிகளைக் கடந்து நின்றுள்ளன. அப்படி இருந்தும்.. கலியாணம் கட்ட என்று இயக்கத்தை விட்டு ஓடியவர்களும் உளர். வெளிநாட்டுக்கு ஓட என்று இயக்கத்தை விட்டு ஓடியவர்களும் உளர். காதலி கூப்பிடுறாள் என்று இயக்கத்தை விட்டு ஓடியோரும் உளர். வெளிநாட்டில் உள்ள சகோதரங்கள்.. கூப்பிட்டு ஓடியோரும் உளர். குடும்ப கஸ்டம்.. நிலையை முன் வைத்து இயக்கத்தால் விடுவிக்கப்பட்டோரும் உளர். சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு இயக்கத்தால் தண்டனை அனுபவித்து பின் இயக்கத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்டோரும் உளர். இவர்கள் ஒவ்வொருவரினதும் கதையும் போராளிகளின் கதை என்பதாகவும் இனங்காட்டப்படலாம். இதனால் பெருமளவிலான போராளிகளின் தியாகங்களும் அவர்கள் தேசத்துக்காக கட்டிக்காத்த கொள்கைகளும் வாழ்வியல் கட்டுப்பாடுகளும் அவர்களின் தனித்துவ வாழ்வும்.. இலகுவில் தகர்க்கப்பட்டு சிலாகிக்கப்பட்டால்.. ஒரு சிலருக்கு அது புகழ் வேண்டித் தரலாம். ஆனால் பெருமளவிலான போராளிகளின் வாழ்க்கையை அது நிஜத்தில் பிரதிபலித்து இலக்கியமாக முடியாது. அல்லது காத்திரமான படைப்பாக முடியாது. போராளிகளும் திருமணம் செய்துள்ளனர் தான். காதல்.. காமமின்றியா அவர்கள் திருமணம் செய்துள்ளனர். அந்த இடத்தில் அவர்களும் சாதாரண மனிதர்கள் தானே. சொந்த சமூக ஒழுங்குக்குள் அவர்கள் திருமணம் செய்து வாழ்ந்ததில் வாழ்வதில் தவறு இல்லை.

ஆனால்....

காந்தி சின்னப் பெண்களோடு தகாத உறவு கொண்டிருந்தவர் என்ற கருத்து ஒரு எழுத்தாளரால் ஆதரங்களோடு.. வெளிப்பட்ட போது அதனை இங்கு பதிந்த போது சினங்கொண்டு எழுந்தவர்களில் நீங்களும் ஒருவர். அதே கலைஞன் இன்று போராளிகள் விடயமாக முன் வைக்கப்பட்ட ஒரு ஆதாரமற்ற பதிவிற்கு என்னையா ஆதாரம் கேட்கிறீங்க.. காமம் என்றால் காமம் தான்.. அதை போராளிகளை வைச்சென்ன.. சொந்த அக்காவை வைச்சும் எழுதுவம்.. நீ.. வாசிச்சிட்டு.. போ.. என்ற கணக்கா எழுதுவது வருந்தத் தக்கது..!

பாலியலை.. உங்கள் சகோதரிகளை வைத்து.. கதையாக்கி வெளியிட நீங்கள் ஒரு சகோதரனாக அனுமதிப்பீர்களா..????! நீங்கள் ஒருவேளை பாலியலை வெளிப்படையாகக் கதைப்பது நல்லது என்று அதனை.. அனுமதிக்கலாம்.. என்னால் நிச்சயம் அதை அனுமதிக்க முடியாது. காரணம்.. அடுத்தவனின் அந்தரங்கத்தை நான் அறிய வேண்டியதில்லை. எனது அந்தரங்கத்தை நானே தான் கையாள வேண்டும். அடுத்தவன் அல்ல..! இப்போ.. சாத்திரிக்கு மனைவி குழந்தை இல்லையா.. அவர் காமுறவில்லையா.. கட்டிப்பிடிக்கவில்லையா.. அவற்றையும் கதையாக்கி.. வெளியிடலாமே..????! சாத்திரியும் ஒரு முன்னாள் போராளி தானே..???! இவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா..????! சாத்திரியின் காமம்.. காதல்.. கவர்ச்சி என்று அவர் தன்னை வைச்சே ஒரு சுய பாலியல் இலக்கியம் படைக்கலாமே..???! அதை மஞ்சள் பத்திரிகைகளிலும் வெளியிட்டு நல்ல காசும் புகழும் பார்க்கலாம்..???! செய்யலாமா... அப்படி..??! அதை யாழில் பிரசுரிக்க விடுவார்களா..????!

ஒரு வரலாற்றை கதையாக்குகின்ற ஒரு படைப்பாளிக்கு சுய வடிக்கட்டல் தன்மை இருக்க வேண்டும். இன்றைய எழுத்தாளர்கள்.. அடுத்தவனின் அந்தரங்கத்தை விபரிப்பதன் மூலம்.. விளம்பரம் தேடும் கீழ்த்தரமானவர்களாக மாறி இருக்கின்றனரே தவிர.. இவை புரட்சி கிடையாது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சில அசிங்கங்கள் இருக்கும். அதையெல்லாம் கதையாக்கிக் கொண்டிருந்தால்.. அத்தனை மனிதனுக்குள்ளும் இருக்கும் பல சிறப்புக்கள் இந்த உலகில் பதிவிடப்படாமலே போய் விடும்..!

பாலியல் என்பது இயற்கையானது. அதனை எழுதி தெரிய வேண்டியதில்லை. ஆனால் தியாகம் என்பது அப்படியல்ல. பலர் செய்ய முடியாததை ஒரு போராளி செய்திருக்கிறான் எனும் போது.. அதுதான் படைப்பில் கருப்பொருளாக வேண்டுமே தவிர.. வரலாற்றை இனம் காட்ட வேண்டுமே தவிர.. எல்லோருக்கும் தெரிந்த பாலியல் அல்ல.. அங்கு கருப்பொருளாவது.. வரலாறாவது..!

பாலியலை முன்னிறுத்தி வாசகர்களை கவர்வது இலகு. காரணம்.. தலைப்புக்களில் இருக்கும் இயற்கையான பாலியல் ஈர்ப்பு. அதன் வட்டத்துள் இன்றைய இணையத்தள தமிழ் எழுத்தாளர்கள் பலர் பிரபல்யம் அடைந்துள்ளனர். ஆனால் அதை யாழ் கள வாசகர்கள் எல்லோரும் ஊக்குவிப்பர் என்று நீங்களோ சாத்திரியோ எண்ணக் கூடாது. அதை வரவேற்கவும் இங்கு வாசகர்கள் உளர். அதேவேளை கடுமையாக விமர்ச்சிக்கவும் வாசகர் உளர். வாசகர்களின் பெரும்பான்மை கருத்தைப் பிரதிபலிக்க வேண்டியது சமூக எழுத்தாளனின் கடமை. இன்றேல் அவன் எழுத்துக்களை அவனே தான் படிக்கும் துர்ப்பாக்கிய நிலையே தோன்றும்..! அந்த நிலையை நோக்கி சாத்திரியோ.. பிற எழுத்தாளர்களோ நகராது இருப்பின்.. அதனை நிச்சயம் வாசகர்கள் வரவேற்பார்கள். இன்றேல்.. காலத்தின் போக்கில் இவர்கள் வாசகர்கள் மத்தியில் காணாமல் போவது கூட நிகழலாம்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பதிவு பற்றிய எனது கருத்து: மித்திரன் பத்திரிகையில் வரும் ஆண் / பெண் ஹொஸ்டலில் நடக்கும் லீலைகள் என்ற தொனியில் போராளிகளின் வாழ்வை எழுத முடியாது. அவ்வாறு எழுதுவது ஒரு இலக்கிய படைப்பாகவும் ஆகாது

இதுதான் உண்மை நன்றி நிழலி.

காந்தி சின்னப் பெண்களோடு தகாத உறவு கொண்டிருந்தவர் என்ற கருத்து ஒரு எழுத்தாளரால் ஆதங்களோடு.. வெளிப்பட்ட போது அதனை இங்கு பதிந்த போது சினங்கொண்டு எழுந்தவர்களில் நீங்களும் ஒருவர். அதே கலைஞன் இன்று போராளிகள் விடயமாக முன் வைக்கப்பட்ட ஒரு ஆதாரமற்ற பதிவிற்கு என்னையா ஆதாரம் கேட்கிறீங்க.. காமம் என்றால் காமம் தான்.. அதை போராளிகளை வைச்சென்ன.. சொந்த அக்காவை வைச்சும் எழுதுவம்.. நீ.. வாசிச்சிட்டு.. போ.. என்ற கணக்கா எழுதுவது வருந்தத் தக்கது..!

பாலியலை.. உங்கள் சகோதரிகளை வைத்து.. கதையாக்கி வெளியிட நீங்கள் ஒரு சகோதரனாக அனுமதிப்பீர்களா..????! நீங்கள் ஒருவேளை பாலியலை வெளிப்படையாகக் கதைப்பது நல்லது என்று அதனை.. அனுமதிக்கலாம்.. என்னால் நிச்சயம் அதை அனுமதிக்க முடியாது. காரணம்.. அடுத்தவனின் அந்தரங்கத்தை நான் அறிய வேண்டியதில்லை. எனது அந்தரங்கத்தை நானே தான் கையாள வேண்டும். அடுத்தவன் அல்ல..! இப்போ.. சாத்திரிக்கு மனைவி குழந்தை இல்லையா.. அவர் காமுறவில்லையா.. கட்டிப்பிடிக்கவில்லையா.. அவற்றையும் கதையாக்கி.. வெளியிடலாமே..????! சாத்திரியும் ஒரு முன்னாள் போராளி தானே..???! இவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா..????! சாத்திரியின் காமம்.. காதல்.. கவர்ச்சி என்று அவர் தன்னை வைச்சே ஒரு சுய பாலியல் இலக்கியம் படைக்கலாமே..???! அதை மஞ்சள் பத்திரிகைகளிலும் வெளியிட்டு நல்ல காசும் புகழும் பார்க்கலாம்..???! செய்யலாமா... அப்படி..??! அதை யாழில் பிரசுரிக்க விடுவார்களா..????!

ஒரு வரலாற்றை கதையாக்குகின்ற ஒரு படைப்பாளிக்கு சுய வடிக்கட்டல் தன்மை இருக்க வேண்டும். இன்றைய எழுத்தாளர்கள்.. அடுத்தவனின் அந்தரங்கத்தை விபரிப்பதன் மூலம்.. விளம்பரம் தேடும் கீழ்த்தரமானவர்களாக மாறி இருக்கின்றனரே தவிர.. இவை புரட்சி கிடையாது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சில அசிங்கங்கள் இருக்கும். அதையெல்லாம் கதையாக்கிக் கொண்டிருந்தால்.. அத்தனை மனிதனுக்குள்ளும் இருக்கும் பல சிறப்புக்கள் இந்த உலகில் பதிவிடப்படாமலே போய் விடும்..!

பாலியல் என்பது இயற்கையானது. அதனை எழுதி தெரிய வேண்டியதில்லை. ஆனால் தியாகம் என்பது அப்படியல்ல. பலர் செய்ய முடியாததை ஒரு போராளி செய்திருக்கிறான் எனும் போது.. அதுதான் படைப்பில் கருப்பொருளாக வேண்டுமே தவிர.. வரலாற்றை இனம் காட்ட வேண்டுமே தவிர.. எல்லோருக்கும் தெரிந்த பாலியல் அல்ல.. அங்கு கருப்பொருளாவது.. வரலாறாவது..!

பாலியலை முன்னிறுத்தி வாசகர்களை கவர்வது இலகு. காரணம்.. தலைப்புக்களின் இருக்கும் இயற்கையான பாலியல் ஈர்ப்பு. அதன் வட்டத்துள் இன்றைய இணையத்தள தமிழ் எழுத்தாளர்கள் பலர் பிரபல்யம் அடைந்துள்ளனர். ஆனால் அதை யாழ் கள வாசகர்கள் எல்லோரும் ஊக்குவிப்பர் என்று நீங்களோ சாத்திரியோ எண்ணக் கூடாது. அதை வரவேற்கவும் இங்கு வாசகர்கள் உளர். அதேவேளை கடுமையாக விமர்ச்சிக்கவும் வாசகர் உளர். வாசகர்களின் பெரும்பான்மை கருத்தைப் பிரதிபலிக்க வேண்டியது சமூக எழுத்தாளனின் கடமை. இன்றேல் அவன் எழுத்துக்களை அவனே தான் படிக்கும் துர்ப்பாக்கிய நிலையே தோன்றும்..! அந்த நிலையை நோக்கி சாத்திரியோ.. பிற எழுத்தாளர்களோ நகராது இருப்பின்.. அதனை நிச்சயம் வாசகர்கள் வரவேற்பார்கள். இன்றேல்.. காலத்தின் போக்கில் இவர்கள் வாசகர்கள் மத்தியில் காணாமல் போவது கூட நிகழலாம்..! :):icon_idea:

ஒரு கருத்துக்களத்தில் ஒரு நிலைக்கு மேல் செல்லமுடியாது. அப்படி செல்வதற்கு உந்தப்பட்டால் இப்படி பச்சையாக எழுதவேண்டிவரும். இது பின்னர் தனி மனிதத்தாக்குதலாக மாறும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

இங்கு நெடுக்கு எழுதியிருக்கும் கருத்துடன் நான் உடன்படுகின்றேன். இப்படித்தான் நானும் இனி இது தொடர்ந்தால் எழுதுவேன்.

காரணம்

எனக்காக இறந்து போன எனது தாய் தகப்பன் சகோதரர்களின் கடந்தகால செயல்களை இங்கு எழுதி வியாபாரமாக்கவோ அல்லது அவர்களை கேலிப்பொருளாக்கவோ எவரையும் அனுமதியேன்.

உங்களுக்கு தங்களது கடந்தகாலத்தை எழுதணும் என்றால் நீங்கள் செய்தவை பற்றி மட்டும் எழுதுங்கள். என் சகோதரர்கள் பற்றி எழுதக்கூடாது.

இங்கு படைப்பாளியைத்தடுக்கமுடியாது என்று வியாக்கியானம் செய்பவர்கள் ஒன்றை உணரணும். அந்தப்படைடப்பாளியை தனது ஆக்கத்தை புத்தகமாக வெளியிட்டு வெளியிட்டால் அது அவருக்கே சொந்தம். அதை வாங்ககிப்படிக்கும் கூட்டடமே விமர்சசிக்கும். அதுவும் புத்தகமாகிய பின். ஆனால் கருத்துக்களத்தில் வாசகர்களே அதை தீர்மானிப்பவர்கள்.

Link to comment
Share on other sites

உதாரணத்திற்கு.. ஒரு கிராமப் பயிற்சி முகாமில் போராளிகள் பிரச்சனை என்று குருட்டுத்தனமாக எழுதுவதை விடுத்து.. எந்தக் காலத்தில்.. எந்தப் பயிற்சி முகாமில்.. எவரின் பயிற்சித் தலைமையின் கீழ்.. இவ்வாறான சம்பவங்கள் நடந்தன என்பதைச் சொல்லும் போது.. அது தொடர்பான ஆராய்தலை.. வாசகர்கள் செய்து கொள்வார்கள். படைப்பாளி சிரமப்படத் தேவையில்லை..! இதைத்தான் வரலாற்றுப் பதிவுகளில் நாம் எதிர்பார்க்கிறோம்...???!

மேலும்.. கனடா இராணுவம் அப்படி.. அமெரிக்க இராணுவம் இப்படி.. சிறீலங்கா இராணுவம் அது செய்தது.. இந்திய இராணுவம் இது செய்தது.. ஆக விடுதலைப்புலிகளும் அதையே செய்திருக்கக் கூடும் என்று அனுமானிக்க வைக்கும் படைப்புக்களும் நமக்கு அவசியமில்லை. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு என்று சர்வதேச ரீதியிலான நன்னடைத்தைக்கான ஒரு தனி முத்திரை உண்டு. அதனை இலகுவில் தகர்க்க முடியாது. அப்படி செய்ய விரும்புகிற.. அல்லது அவர்களும் குப்பாடிகள் தான் என்று காட்ட விரும்புகிறவர்கள்.. அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும். கனடிய இராணுவம் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்று வரின்.. நிச்சயம் கனடிய அரசோ பாதுகாப்பமைச்சோ அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிராது..! நீங்கள் மதிக்கிறீங்களோ இல்லையோ.. ஒரு அரசு.. தனது படைகள் தொடர்பான நன்மதிப்பு உலக அரங்கில் கெடுவதை சுலபமாக எடுத்துக் கொள்ளாது..!

ஆனால் உங்கள் சொந்த சகோதர சகோதரிகளின் உயிர் தியாகத்தால் வளர்க்கப்பட்ட ஒரு அமைப்பின் மீது அந்த அமைப்பை விட்டு விலகிய அல்லது விலத்தி வைக்கப்பட்ட ஒருவர் சுமத்தும் குற்றச்சாட்டு என்பது.. ஆதாரமின்றி உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒன்றல்ல..! அதனையும் நீங்கள் நியாயத்தோடு ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தையும் சுட்டிக்காட்டும் இதய சுத்தியையும் இங்கு வெளிக்காட்டுதல் அவசியம்..!

unmaithaan

Link to comment
Share on other sites

இந்த திரியிலும் சாத்திரி மீதும் அவர் குடும்ப உறுப்பினர்கள் மீதும் விமர்சனம் வைக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் அவரது தற்காலிகத் தடை நீக்கப்படும் வரை பூட்டி விடுவதே சரி என்று நினைக்கின்றேன். ஒருவரை தடை செய்து அவருக்கு பதில் அளிக்கும் சந்தர்ப்பங்களை வழங்காமல் விட்டு விட்டு அவர் பற்றி, அவர் குடும்பம் பற்றி எழுதுவது சரியில்லை.

இந்த திரியை நான் தான் பூட்ட வேண்டும் என்றில்லை. அவரது தற்காலிகத் தடை இன்னும் 7 நாட்களில் முடிகின்றது. அதுவரைக்கும் சுய கட்டுப்பாட்டுடன் எவரும் பதில் கருத்து எழுதாமல் இருந்தாலே சரி.

நிழலி நீங்கள் சொல்வது சரி என்றாவது எழுதலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ் களத்தை கடந்த கடந்த ஏழு ஆண்டுகளாக பார்வையிட்டு வருகின்றேன், ஐந்து ஆண்டுகளாக எழுதியும் வருகின்றேன். எனது அனுபவம், பார்வையின் அடிப்படையில் சாத்திரி எழுதிய தொடர்கதையின் குறிப்பிட்ட பகுதி நீக்கப்பட்டது தவறாகவே எனக்கு தெரிகின்றது.

கலைஞனின் கருத்தை ஆமோதிக்கின்றேன். எனினும் அந்தப் பாகத்தில் சொல்லப்பட்ட விடயம் பரவலாக நடந்ததாகவும், அதை மேல்மட்டத்தில் இருந்தவர்கள் கண்டும் காணாமல் இருந்ததாகவும் அதன் பின்னர் வந்த கருத்துக்களில் சொல்ல முயன்றதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

Link to comment
Share on other sites

நான் பார்த்த சாத்திரி.... கடைசியாக அவர் எழுதிய தொடர்கதையின் "காமம்" எனும் பகுதியில் வேறு மாதிரியே தோற்றமளித்தார்.

அவருடைய "இலவ(ஈழ)ம் காத்தவர்கள்" கதையைக் கூட என்னால் ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியவாறு இருந்தது. ஆனால், இந்தப் பகுதியினை வாசித்த உடனேயே "இவர் ஏன் இப்படி எழுதினார்?" என எண்ணத் தோன்றியது!

வழமையாக நகைச்சுவை கலந்து உண்மைகளை வெளிக்கொணரும் எழுத்துப்பாணி அவருடையது. ஆனால் இந்தக் கதையில் பெரும் தவறினை விட்டிருந்தார்!

"காமம்"" என்ற தலைப்பில் ஒரு ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான காம உறவென்பது... குறிப்பாக எமது இனத்தில்.... முறையற்ற ஒன்று! "காமம்" என்ற தலைப்பில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உணர்வுகளை இன்னும் மிகத் தெளிவாக, சுவாரசியமாக விளக்க சந்தர்ப்பம் பெற்றுள்ள சாத்ஸ் , தேவையில்லாமல் முறையில்லாத காமத்தை ஏன் தொட்டவர்? என்ற ஆதங்கம் இருந்தாலும், அதையும் எம் போராளிகள் செய்தார்கள் !(?)என்று சொன்னது எமக்காக போராடி மடிந்த மாவீரர்களை இழிவாக்கும் செயல் என்பது என் கருத்து!!!

மே 2009க்கு முன்னர்.... இதே கதையினை சாத்திரி எழுதியிருந்தால், அதனை நான் ஒரு பொருட்டாகவே எண்ணியிருக்க மாட்டேன்! சம்மந்தப்பட்ட பலபேர் உயிருடன் இருந்தார்கள். ஆனால் அவர்களே இல்லை.... என்ற ஒரு தருணத்தில், இப்படியான கதைகளை வெளியிடுவது என்பது மகாதவறானது.

ஆனால், கருத்துக்களம் என்பது கருத்தாட உள்ள களம். ஒருவர் ஒரு கருத்தினை முன்வைத்தால் அதனை ஆதரித்தோ... எதிர்த்தோ... எம் கருத்துக்களை முன்வைப்பதுதான் முறை! அவரது கதையின் அந்த காமப் பகுதி தொடர்பாக வந்த பதில் கருத்துக்களை விரல்விட்டு எண்ணலாம் என்று நினைக்கின்றேன்!

எதிர்க்கருத்துக்கள் என்பது மூலப் படைப்பினை ஆக்கிய படைப்பாளிக்கு நேரடியாக கருத்தாளர்களால் தெரிவிக்கப்பட்டால்... தனது தவறினை அந்த படைப்பாளி உணர ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்! ஆனால் அதற்குரிய கால அவகாசம் ,சந்தர்ப்பம் என்பன "பகிரங்கமான எதிர்க்கருத்துகள்" முன்வைக்கப்படும் அளவுக்கு கொடுக்கப்படவில்லையா? அல்லது கருத்தாளர்கள் சாத்திரிக்கு முன்னால் தம் எதிர்ப்புணர்வுகளை பகிரங்கமாக முன்வைக்கத் தயங்கினார்களா??? யாழ்களத்தில் எம் மாவீரச் செல்வங்களை நாம் எப்படி மதிக்கின்றோம் என்பதனைக் காட்டக் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விட்டிருக்கின்றோம் என்றுகூடச் சொல்லலாம். வழமையாக எத்தனையோ எதிர்மறைக் கருத்துக்களை எதிர்கொள்ளும் நாம் எம் மாவீரர்களின் புனிதங்களை காப்பதற்கு அங்கு ஏன் தயங்கினோம்???

நான் அப்பொழுது யாழ் களத்தில் எழுதுவதிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்தாலும்.... இந்தக் கதையினை பார்த்துவிட்டு, உடனேயே சாத்திரிரிக்கு நேரடியாக என் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தேன்

அதற்கு அவர் சொன்ன பதில்...

"என் வாழ்வில் இது நடந்தது. அதைத்தான் எழுதினன். என்ர கதையை எழுத வரும்போது.... அதைத்தானே எழுதமுடியும்"

அதற்குமேல் நாம் அதைப்பற்றி பேசவில்லை......!

அதற்குப்பின் நடந்தது ஒரு "களவிதி மீறல்" காரணமாக சாத்திரியின் தடை! மூல ஆக்கத்தினை நீக்குவது என்ற களவிதி மீறல் என்பது அவர் தெரிந்தோ தெரியாமலோ செய்த மாபெரும் தவறுதான் ! அதனை யாரும் நியாயப்படுத்த முடியாதுதான்! நானும் அதனை நியாயப்படுத்த வரவில்லை!!!

கருத்துக்களை கருத்துக்களால் மோதினால்தான்.... அது கருத்துக்களம்! இல்லாவிட்டால் அது வெற்றுத் தளம்!! ஒரு பக்க தாளம் போட்டால்.... அது இரசிக்கும் இசையாகாது!!

மாற்றுக்கருத்துக்களுடன் மோதமுடியாத முட்டாள்களா நாங்கள்? ஒரு கருத்தினை முன்வைப்பது அவரவர் விருப்பம். அதை எதிர்த்துக் கருத்தாடுவது உண்மையான கருத்தாளனின் பொறுப்பு!

ஆனால் விதிகள் மீறப்படுவது ஏன்? என்பதும்... அந்த விதிகளை நன்கு அறிந்த ஒரு நீண்டகால உறுப்பினர் ஏன் செய்தார்? என்பதனையும் ஒருமுறையேனும் சிந்தித்து நடந்திருந்தால் .... எவ்வளவோ பிரச்சனைகளை நிர்வாகம் தவிர்த்திருக்கலாம்!

நிர்வாகத்துக்கும் சாத்திரிக்குமான வெறும் இரண்டு நிமிட கலந்துரையாடல் என்ற ஒரு சின்ன விடயம் அவர்களை நல்லதொரு புரிந்துணர்வுக்கு கொண்டுவந்திருக்கலாம். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இங்கு தவறவிடப்பட்டிருக்கின்றது என்பது கவலைக்குரியதாக இருக்கின்றது!

சாத்திரி அவர்கள்..... தான் எந்த இடத்தில் தவறிழைத்தார் ....என்பதனை, இப்பொழுது உணர்ந்திருப்பார்.

நிர்வாகத்தின் அத்தனை விளக்கங்களையும் பார்த்த பின்னரே... என் மனதுக்கு தோன்றிய நடுநிலையான எண்ணத்தினை முன் வைக்கின்றேன்.

தவறு என்பது தவறி விடுவது! ஒரு படைப்பாளியின் ஏமாற்றம்... கோபம் ஆனது ஏன்? என்ற கோணத்தில் யோசித்தால் மட்டுமே..... அவரது நியாயங்களை புரிந்து கொள்ள முடியும்! அவர்பக்க நியாயங்களை அவரே வந்து பகிரங்கமாக முன்வைப்பதே இதற்கொரு தெளிவான முடிவைத் தரும். எனவே , அதற்கு நிர்வாகம் எப்பொழுது அனுமதி கொடுக்க நினைக்கின்றதோ அப்பொழுது கொடுக்கட்டும்! விதிமுறைகள் என்பது தவறாது கடைப்பிடிக்கப்பட வேண்டியது!

விதிமுறை என்பதும்... அதனைக் கடைப்பிடிக்கும் நெறிமுறை என்பதும்.... நிர்வாகத்தால் தெளிவாக, நடுநிலையானதாக , சமதர்மத்தோடு நடைமுறைப்படுத்தப்படும்.... என்பதனையும் நான் நம்புகின்றேன்!!!

யாழ் களத்தின் ஒரு சிறந்த கருத்தாளனை இழக்க விரும்பவில்லை! என்ற என் தனிப்பட்ட பார்வையில்..... மேலுள்ள கருத்துக்கள் அனைத்தும் என்னால் முன்வைக்கப் பட்டவை.

சாத்திரி மீண்டும் வரவேண்டும்! அவருடன் சண்டை பிடிக்க வேண்டும்!! :)

Link to comment
Share on other sites

இங்கு இட்ட தலைப்பு பிழையானது ... நான் பார்த்த சாத்திரி ... அல்ல ... நான் வாசித்த சாத்திரி(யின் எழுத்துக்கள்)!!! ...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.