Jump to content

ஐநா அனுசரணை விறுவிறுப்பு போட்டி முடிவு:


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டம்: அமெரிக்கா Vs சிறீலங்கா

இடம்: ஐநா மனித உரிமைகள் பேரவை.

 

1538829_10151984414172944_1862625700_n.j

 

கோப்பை: சிறீலங்காவில் மனித உரிமைகளை மேம்படுத்துவது.. இனங்களிடையே புரிந்துணர்வை கட்டி எழுப்பி.. பச்ச மண்ணையும் சுட்ட மண்ணையும்.. ஒன்றாக சிறீலங்கன் என்று ஒட்ட வைக்கும் வெற்றிக்கிண்ணம்.

(ஈழத்தமிழர்.. தமிழினம்.. இனப்படுகொலை.. தமிழின அழிப்பு.. போர்க்குற்றம்.. காணி சுவீகரிப்பை நிறுத்தல்.. சிறீலங்கா படைவிலக்கல்.. சுதந்திர வாக்கெடுப்பு.. வடக்குக் கிழக்கு தமிழர் தாயகம்.. வடக்குக் கிழக்கு இணைவு.. சுயநிர்ணய உரிமை.. 13+.. போராளிகள்.. அரசியல் கைதிகள் விடுவிப்பும்... புனர்வாழ்வும்.. தமிழீழம்.. இதை எல்லாம் தூக்கி நிரந்தரமாவே குப்பையில கடாசியாச்சு.)

முடிவு: 23: 12 என்ற அடிப்படையில் அமெரிக்காவுக்கு வெற்றி.

கொசுறு: இந்தியா.. பாகிஸ்தான்.. சீனா.. வியட்நாம்.. ரஷ்சியா.. கியூபா போன்ற முன்னாள் இன்னாள் கம்னியூஸ்டு அடிதடிகளும்..இஸ்லாமிய, ஹிந்திய-இந்து மதப்பயங்கரவாதிகளும்.. ஒற்றுமையோடு.. நின்று.. ஆட்டத்தை குழப்ப முயற்சி

பார்வையாளர்கள் கருத்து:

சிறீலங்காவில்:

ஜே வி பி: ஐநாவில் தோல்விக்கு மகிந்த அரசே பொறுப்பு

ஐ தே க: மகிந்த இந்த தோல்வியை தேர்தல் வெற்றிக்கு பரப்புரையாக்குகிறார்

சாதாரண சிங்கள மக்கள்: கோடி கோடியா கொண்டு போய் கொட்டிக் கொடுத்தும் தோல்வி என்றீங்களே அப்ப எங்க வரிப்பணம்.. எனி என்ன என்னத்தை விலை கூட்டி தொலைக்கப் போறாங்களோ..??!

தமிழகத்தில்:

கலைஞர்: ச்சே இதை வைச்சு காங்கிரஸை வளைப்பம்.. பாகப்பிரிவினையில் ஆளையாள் அடிபடும் பிள்ளைகளுக்கு.. ஏதாவது பதவி வேண்டி கொடுத்து சாந்தப்படுத்துவம்.. என்று பார்த்தால்.... எல்லாம் பிழைச்சிட்டே. கடும் யோசனையின் பின்.. சொன்ன கருத்து.. "இந்தியா செய்தது துரோகம்"

சிதம்பரம்: இந்தியா பண்ணினது தப்பு. அமைச்சரவைக்கு சொல்லாமல் ஒரு முடிவு. (யாரு சோனியாவும் மன்மோகன் சிங்கும் ராகுலும் சுப்பிரமணியம் சுவாமியும்..சிவசங்கர் மேனனும் மட்டும் கூடி எடுத்த முடிவென்னா சொல்ல வாறீங்க.. சிதம்பரம். என்னத்தை சொல்லி சமாளிச்சாலும்..தமிழகத்தில் காங்கிரஸ் அடி வாங்கிறது உறுதி)

 

வீரமணி: டெசொ கூட்டத்தின் தாக்கமே அமெரிக்க தீர்மான வெற்றி.

வை.கோ: ஜெனிவாவில் இந்தியா செய்தது மன்னிக்க முடியாத துரோகம். (வழமையான உச்சரிப்புக்கள். இதை எல்லாம்.. இந்திய ஆளும் வர்க்கம் கவனத்தில் எடுத்ததா தெரியல்ல.)

ராமதாஸ்: மெளனம்

 

திருமா: கலைஞர் தனக்காக கருத்துச் சொல்லுவார் என்று காத்திருப்பு.

சீமான்: இதுவரை கருத்து இல்லை.

 

ஜெயலலிதா: எல்லாரும் கருத்தைச் சொல்லட்டும் "நான்.. எனது எதிர்கால பாரதப் பிரதமர் என்ற கனவுக்கு களங்கம் வராமல் கடைசில கருத்துச் சொல்லுறன்" என்று காத்திருக்காங்க.

டி.ராஜா (கம்னியூட்டு தலைவர்): இந்தியா செய்தது துரோகம். (அப்படின்னா.. சீனா வியட்நாம் கியூபா வெனிசுலா.. முன்னாள் கம்னியூஸ்ட் ரஷ்சியா செய்ததை என்னென்பது. கம்னியூஸ்ட் ஆக்கள் நீங்கள் அவைக்கு ஒரு விளக்கமாவது கொடுத்தியளா. ஏன் இப்படி செய்யுறீங்க.. ஏன் அது கூடாதுன்னு..???!)

 

சுப்பிரமணியம் சுவாமி: நடந்து எல்லாம் நல்லபடியாகவே நடந்தது. என் பொக்கட் அடுத்த கட்டத்துக்கு நிரம்பப் போகுது. என்னை வாழ வைக்கும் இந்தியாவுக்கு என் வாழ்த்துக்கள்.

ஈழத்தில்:

சம்பந்தன்: இந்தியா எங்களை ஏமாற்றிவிட்டது.

தமிழ் மக்கள்: உவங்கள் எல்லாருமா சேர்ந்து.. எங்க பிள்ளையை நெரிச்சு கொன்று புதைச்சிட்டு.. இப்ப.. ஆண்டுக்கு ஆண்டு.. திவசத்துக்கு ஐயருக்கு பட்டு வேட்டியோ.. சும்மா வேட்டியோ கொடுக்கிறது என்று சண்டை பிடிக்கிறாங்கள். நாங்க கேட்கிறது நட்ட ஈடோ.. திவசமோ அல்ல. எங்க பிள்ளையைக் கொன்றவனுக்கு நீதியும் தண்டனையும்.. எங்கள் மிச்சப் பிள்ளைகளுக்கு எங்கள் சொந்த மண்ணில்..இன.. நில அடையாளத்தோடு கூடிய..ஐநா உதவியோடு அமைந்த.. பாதுகாப்பான சுதந்திரமான வாழ்க்கையுமே..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.