Jump to content

கொஞ்சம் வாங்க பேசலாம் - மலேசிய விமானம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மலேசிய  விமானம்

திசை  மாறி

காணமல்போய்

பதுக்கி  வைக்கப்பட்டு

திருடப்பட்டு

கடத்தப்பட்டு

வெடிக்க  வைக்கப்பட்டு

விமானி  தற்கொலை செய்து

புகை வந்து

கடலில் வீழுந்து................

 

உங்கள் கணிப்பு என்ன?

பேசலாம் வாங்கோ..........

 

இதில் உண்மை இருக்கணும் என்றில்லை

உண்மையாகவும் இருக்கலாம்

உங்கள் ஆராய்ச்சியாகவும்  இருக்கலாம்

கற்பனையாகவும் இருக்கலாம்

.............

 

எழுதலாமே........

 

போன  கிழமை  எனது மகனைக்கேட்டேன்

எங்க போயிற்றுது மலேசிய  விமானம் என?

அவன் சொன்னான்

எங்கட  கார்  பாங்கிங்கில  கொண்டு வந்து நிற்பாட்டியிருக்கிறன்

நீங்க  பார்க்கலையா என?

ஒரு விதத்தில் இது பகிடியாக இருந்தாலும்

கனக்க அர்த்தம் அதற்குள் இருப்பதால்  சிரிக்க முடியல என்னால்.......

 

இனி  நீங்கள்...........?

 

Link to comment
Share on other sites

கடத்தல் முயற்சி அல்லது விமானியே திசை திருப்பி சென்றிருக்கலாம். சுட்டு விழுத்திவிட்டார்கள் என்பதே என் எண்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலதரப்பட்ட அழுத்தங்கள் காரணமாக ஏதோ ஒன்றைச் சொல்லி தப்பிக்கொள்வோம் என்றும் இப்படிச் சொல்லலாம்,சொல்கிறார்கள் என்று தான் நினைக்கிறேன்.கடலில் தான் விமானம் விழுந்து விட்தென்றால் ஒரு உதிரிப்பாகம்,உடல்பாகம் ஒன்றும் கிடைக்காமல் எங்கே போய் விட்டது.சுனாமி பேரலை வந்த போது கூட இப்படி ஒரு மர்மத்தை கேள்விப்பட இல்லை..அதே நேரம் இன்னும் ஒன்றையும் மக்கள் கவனிக்க வேண்டும்..கடலில் தான் விமானம் விழுந்து விட்டது என்றால் கடல்வாள் உயிரணங்களின், உணவுகள் உண்பதைப் கூட கொஞ்சக் காலாமாவது  தள்ளிப் போட வேண்டும்..எது எப்படி இருப்பினும் சூனியக்காறியை அழைத்தும் ஒரு தீர்க்கமான முடிவை அறிய முடியாத மர்மாகி விட்ட விடையம்...
 

Link to comment
Share on other sites

அதில் நிறைய தங்கமும் சீனாவிற்கு செலப்பட்டதாம் என்னுடைய கருத்து அந்த PILOT கட்டுபாட்டு கோபிரத்துக்கு good bye என்று சொல்லிவிட்டு விமானத்தை செலுத்தும் போது எதோ நடக்க கூடாதது நடந்திட்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

beads.jpg

பெரிய கம்பனிகள்.

2014-livin-lite-quicksilver-vrm-28fbd-to

6a00e54efbe3a188330120a7805b95970b-800wi

airplanes-rc-airplanes-toys.jpg

செம்மார் வீதி ( ஸ்டான்லி ரோட்டிலிருந்து மலாயா கபேக்கு அருகில் போகும் வீதி.ஆக்களுக்கு கிடைத்தால் இதுதான் செய்ய முடியும்.

IMG_3065-001.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

9/11 தாக்குதலில் வெள்ளை மாளிகையில் ஒரு சின்ன ஓட்டைக்குள் அப்படியொரு பெரிய விமானம் உட்புகுந்து கொள்ள முடியும் என்றால்...

 

அந்த விமானத்தின் துண்டுகளை வெறுமனே கையினால் பொறுக்கி எடுத்துக்கொணடு செல்ல முடியுமென்றால்....

 

வாழ்வில் அரைவாசியை விமானத்திலயே முடித்த பெரிய விமானிகள் எல்லாம் தங்களால் அப்படி ஒரு குறுகிய பரப்பளவிற்குள் அப்படி ஒரு விமானத்தை திருப்பவே முடியது என்று சொல்லிய பின்னர் வெறும் சில மணிநேரங்களே பயிற்சிபெற்ற சிலர் அதை செய்ய முடியுமென்றால்...

 

இந்த மலேசிய விமானம் மாயமான முறையில மறைஞ்சதை நான் நம்பிறன். இது ஒரு "முத்துமாலை" சிக்கல் போல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடத்தல் முயற்சி அல்லது விமானியே திசை திருப்பி சென்றிருக்கலாம். சுட்டு விழுத்திவிட்டார்கள் என்பதே என் எண்ணம்

 

 

இதைத்தான் நானும் தொடர்ந்து எழுதி  வருகின்றேன்

 

நேற்று ஒரு விமானி  எனது கடைக்கு வந்திருந்தார்.........

உங்கள் அபிப்பிராயம் என்ன  என்று கேட்டேன்

கடுமையாக சிந்தித்தார்

சுட்டு   வீழ்த்தப்பட்டிருக்கலாமா என்றேன்

எனக்கும் அந்த சந்தேகம் உண்டு என்றார்

ஆனால் அதற்கான  காரணம்  தான் தெரியவில்லை என்றார்

 

சரி

மலேசியாவில் உள்ள  ஒரு கோபுரத்தை தாக்குவதற்காக

விமானம் கடத்தப்பட்டிருப்பது தெரிந்தால்

அதனால் வரும் மனித மற்றும் பொருள் அழிவுகளுடன் ஒப்பிட்டால்

குறைந்தளவு மனிதர்களுடன் கடலுக்கு மேலால்  சாதகமான  சூழலில் 

பறந்து கொண்டிருக்கும் விமானம்  

குறி  வைக்கப்படுவதற்கு உந்துதல் உண்டா என்று கேட்டேன்

மேலும் கீழும் பார்த்துவிட்டு

இந்த பக்கத்தால் நான் சிந்திக்கவில்லை

உங்கள் கருத்தை மறுக்க முடியாது என்றார்

 

உலகத்தலைவர்கள் மட்டத்தில்  முடிவெடுத்து வீழ்த்திவிட்டு

இறந்தவர்களின்  உறவுகளுக்கு என்ன  பதில் சொல்வது என்று

இப்பொழுத சோடிக்கிறார்கள் என்ற போது

காரணத்தை அவர்கள் சொல்லாதவரை

உங்களின் சந்தேகம் மறுப்பதற்கில்லை என்றார்.

இது போன்ற  ஒரு சந்தேகம்

விமானத்திலிருந்த பயணிகளின் உறவுகளுக்கு வந்தால்

விளைவு........???

இப்படியே  விடை பெற்றார்.

Link to comment
Share on other sites

மலேசிய அரசாங்கத்திற்கு முன்பே தெரியும் என்ன நடந்திருக்கு என்று ஆனால் முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போல் பல விடயங்களை மறைக்கின்றார்கள் என்பது தான் உண்மை. நான் நினைக்கின்றேன் அமெரிக்க ராணுவம் தான் சுட்டுவிழுத்தியிருக்கவேண்டும் அதனால் தான் அவர்களும் சேர்ந்து வேறு திசையில் எல்லோரையும் திசை திருப்பி தேடவைத்தார்கள்.  இப்போது விமானி வந்து சாட்ச்சி சொல்லமாட்டார் என்பதால் அவரின் மேல் எல்லா பழிகளையும் போடபாக்கின்றார்கள்.  எதையுமே ஆதாரத்தோடோ, இல்லை ஆணித்தரமாகவோ சொல்லாமல் நேரத்திற்கு ஒரு கதை அவிழ்த்து விடுகின்றார்கள்.

இப்போது கூட செய்மதியின் படிதான் இந்திய கடலில் வீழ்ந்திருக்கின்றார்கள் என்கின்றார்களே தவிர எந்தவித ஆதாரமும் அவர்களிடம் இல்லை.

மலேசிய அரசாங்கம் நடந்த உண்மையை ஒழிக்காமல் சொன்னாலே அன்றி விமானத்திற்கு என்ன நடந்திருக்கும் என்பது ஒரு புரியாத புதிர் :rolleyes:

Link to comment
Share on other sites

மலேசிய அரசாங்கம் எதையும் இலகுவில் சொல்லமாட்டார்கள். சொன்னால் அங்கு பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளன என்று சுற்றுலாப் பயணிகளும், ஏனைய பயணிகளும் போகமாட்டார்கள். நாட்டிற்கு மிகப்பெரிய பொருளாதார சீர்குலைவு வந்துவிடும். மலேசியன் விமான நிறுவனமும் படுத்துவிடும்..  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித உயிர்களை வைத்துக்கொண்டு  ஊடகங்கள்  இப்படி எல்லாமுமா காமடி பண்ணுவது..ஒன்று இரண்டு உயிர்களா இதற்குள் அடக்கம்.....

 

1975016_10151979593817944_1762651543_n.j

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித உயிர்களை வைத்துக்கொண்டு  ஊடகங்கள்  இப்படி எல்லாமுமா காமடி பண்ணுவது..ஒன்று இரண்டு உயிர்களா இதற்குள் அடக்கம்.....

 

1975016_10151979593817944_1762651543_n.j

 

 

உண்மைதான் யாயினி

 

நான் இதைத்தொடங்கும் போது...

இதில் உண்மை இருக்கணும் என்றில்லை

உண்மையாகவும் இருக்கலாம்

உங்கள் ஆராய்ச்சியாகவும்  இருக்கலாம்

கற்பனையாகவும் இருக்கலாம்

.............

 

எழுதலாமே........

(இறுதியில் பகிடியாகவும் இருக்கலாம் என  எழுதி அதை வெட்டியிருந்தேன்.  இந்த வேதனையை நாம் ரசிப்பது சரியல்ல  என்பதால் பகிடியாகவும் இருக்கலாம்  என்பதை அழித்திருந்தேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியா அரசாங்கம் தான் முழு மூச்சாக   தேடவேண்டும். பாதிக்கபட்ட  பெரும்பாலானவர்கள் சீனர்கள் அதனால் அவர்களது ஆத்திரம்  இவர்கள்மேல் உள்ளது  வெறுமனே விமானம் விபத்துக்குளாகி  விட்டது அத்தனைபேரும்  இறந்துவிட்டார்கள்  உயிர் தப்ப   சாத்தியம் இல்லை என்பதால் ..இன்னும் வெருப்புக்கு  ஆளாகி  விட்டது மலேசியா  ..இறப்புக்கு ஆதாரம் கேட்கிறார்கள் சீனர்கள் .. எம்பசியின் முன்  தண்ணீர் போத்தல்காளால் வீசி ஆர்பாட்டம்  நடத்து கிறார்கள் . ஏதாவது ஒரு ஆதாரம்  காட்ட  வேண்டும் இல்லையேல் உலகின்  வெறுப்புக்கும்   சீனர்களின் கோபத்துக்கும் ..உலகின் ஏளனத்துக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும்

Link to comment
Share on other sites

இசை அண்ணா எனக்கு ஒரு விமானி சொன்னார் மலேசிய விமான நிறுவனத்தின் டிக்கெட் sales 35% குறைந்து விட்டதாம்......

சோ தாக்கம் ஏற்கனவே வரத்தொடங்கிட்டு.......

Link to comment
Share on other sites

அதுவும் பாத்திங்க எண்டா ஆஸ்திரேலியா வின் தேடுதல் பகுதிக்குள் சரியாக கொண்டு வந்து விமானத்தை விழுத்தி இருப்பதை பார்த்தால் சம்திங் வ்ரோங் ......

விசாரணை வந்தாலும் அது ஆஸ்திரேலியா தான் செய்ய வேண்டி வரும்.....

மற்றும் படி விசு அண்ணா நினைக்கிற மாதிரி தீவிரவாதிகள் கடத்தி மலேசியாவை தாக்க வாய்ப்பே இல்லை அவர்களோடு மினக்கெட மலேசியா ஒன்றும் பெரிய இலக்கும் அல்ல ... ஆகவே விசு அண்ணாவின் கருத்தை நான் முற்றாக நிராகரிகின்றேன்..... இங்கே ஆஸ்திரேலியா பத்திரிகைகள் எழுதுவது போல விமானத்தில் எதோ ஒரு முக்கிய பொருள் போய் இருக்கு சீனாவிற்கு.... அதை கடத்த முற்பட்டு இருக்கலாம் இல்லை அழிக்க முற்பட்டு இருக்கலாம்

Link to comment
Share on other sites

எனக்கு ஆரம்பத்தில் இருந்த ஒரு பெரிய சந்தேகம், இவ் விமானம் உண்மையிலேயே Take off ஆனதா என்பதுதான். :)

 

இவ்வளவு மனுச உயிர்கள் போயிருக்கு, என்ன நக்கலா என்று நீங்கள் சொல்வது கேட்கின்றது. சரி, உண்மையில் நடந்து இருக்கக் கூடியதாக நான் நினைப்பது பின்வருவன.

 

1. தன் நண்பரான மலேசிய எதிர்க்கட்சி தலைவரை சிறைக்கு அனுப்பியமையாலும், மனைவி பிரிந்து போனமையாலும் ஏற்பட்ட மனவுளைச்சலில் ஆத்திரத்தில் முதன்மை விமானி தற்கொலை செய்து இருக்கலாம். முதல் நாள்தான் அந்த விமானி நீதிமன்றத்தில் தீர்ப்பினைக் கேட்க வந்து பின் தீர்ப்பினை கேட்ட பின் அழுதிருக்கின்றார். மலேசிய ஆளும் கட்சிக்கு ஒரு பாடத்தினை படிப்பிக்க நினைச்சு இதனை செய்து இருக்கலாம். இறுதியில் Good night சொல்ல முன்னர்  ஆளும் கட்சிக்கும் பிரதமருக்கும் எதிராக வேறு ஏதும் கடுமையாக சொல்லி அதனை மலேசிய அரசு மறைக்கலாம்.

 

2. தவறுதலாக  சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம். ஆனாலும் இதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அப்படி சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கும் பட்சத்தில் உலகின் கண்ணுக்கு விமானத்தின் சிதைவுகளை எக்காலத்திலும் காட்ட மாட்டார்கள். முக்கியமாக கருப்புப் பெட்டியை தேடி எடுக்க மாட்டார்கள்

 

3. தொழில்நுட்ப ரீதியிலமைந்த தவறான சமிக்ஞைகளாலும், வேகம், உயரம் தொடர்பான தவறான தானியங்கிகளின் கணிப்புகளாலும் விபத்து நடந்து இருக்கலாம்.

Link to comment
Share on other sites

 'Towed Pinger Locator' மூலம் கறுப்புப் பெட்டியைத் தேடி எடுப்பதற்காக, அமெரிக்கா தனது கடற் படைக்  கப்பலை அனுப்பியுள்ளது. கறுப்பு பெட்டியின் மின்கலத்தின்  ஆயுட்காலம் 30 நாட்கள்தான். இன்னும் 13 நாட்களுக்குள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இதை என் ஆரம்பத்திலேயே செய்யவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.கடலில் தான் விமானம் விழுந்து விட்தென்றால் ஒரு உதிரிப்பாகம்,உடல்பாகம் ஒன்றும் கிடைக்காமல் எங்கே போய் விட்டது.சுனாமி பேரலை வந்த போது கூட இப்படி ஒரு மர்மத்தை கேள்விப்பட இல்லை..

 

 

 

உங்கள்  கேள்விக்குள் பதில் இருக்கலாம் யாயினி

இதவும் எனது சந்தேகம் தான்

 

இவர்கள் சுட்டிருந்தால்

சுட்ட இடத்தை இவர்களுக்கு தெரியும்

அதனால் அந்த இடத்தை தவிர்த்து

வேற இடங்களில் தேடுகிறார்கள்

 

இது நித்திரை மாதிரி  நடிப்பவனின் வேலை.........? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனைச் சுட்டதாகத் தெரியவில்லை.  யாரோ கடத்திக் கொண்டுபோயிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதில் நிறைய தங்கமும் சீனாவிற்கு செலப்பட்டதாம் என்னுடைய கருத்து அந்த PILOT கட்டுபாட்டு கோபிரத்துக்கு good bye என்று சொல்லிவிட்டு விமானத்தை செலுத்தும் போது எதோ நடக்க கூடாதது நடந்திட்டு

 

சீனா  நோக்கித்தானே  விமானம் போய்க்கொண்டிருந்தது

அது ஏன் திரும்பணும்?

திரும்பினாலும் ஏன் இவ்வளவு தூரம்  ஓடணும்?

இவ்வளவு தூரம் ஓடும்  போதும் ஏன் இவர்களுக்கு (கட்டுப்பாட்டு அறைக்கு)அது தெரியவில்லை

இவ்வளவு தூரம் ஓடும் போதும்  பயணிகளுக்கு தெரியவில்லை?

ஒரு பயணி  கூட தனது கைத்தொலைபேசி  உட்பட எதையும் பாவிக்கவில்லை ஏன்?

ஏன்?

ஏன்?  ஏன்?? :(

பெரிய கம்பனிகள்.

6a00e54efbe3a188330120a7805b95970b-800wi

செம்மார் வீதி ( ஸ்டான்லி ரோட்டிலிருந்து மலாயா கபேக்கு அருகில் போகும் வீதி.ஆக்களுக்கு கிடைத்தால் இதுதான் செய்ய முடியும்.

IMG_3065-001.JPG

ம்ம்ம் :lol:

9/11 தாக்குதலில் வெள்ளை மாளிகையில் ஒரு சின்ன ஓட்டைக்குள் அப்படியொரு பெரிய விமானம் உட்புகுந்து கொள்ள முடியும் என்றால்...

 

அந்த விமானத்தின் துண்டுகளை வெறுமனே கையினால் பொறுக்கி எடுத்துக்கொணடு செல்ல முடியுமென்றால்....

 

வாழ்வில் அரைவாசியை விமானத்திலயே முடித்த பெரிய விமானிகள் எல்லாம் தங்களால் அப்படி ஒரு குறுகிய பரப்பளவிற்குள் அப்படி ஒரு விமானத்தை திருப்பவே முடியது என்று சொல்லிய பின்னர் வெறும் சில மணிநேரங்களே பயிற்சிபெற்ற சிலர் அதை செய்ய முடியுமென்றால்...

 

இந்த மலேசிய விமானம் மாயமான முறையில மறைஞ்சதை நான் நம்பிறன். இது ஒரு "முத்துமாலை" சிக்கல் போல...

 

 

வரும்

ஆனால் வராது........ :(

மலேசிய அரசாங்கத்திற்கு முன்பே தெரியும் என்ன நடந்திருக்கு என்று ஆனால் முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போல் பல விடயங்களை மறைக்கின்றார்கள் என்பது தான் உண்மை. நான் நினைக்கின்றேன் அமெரிக்க ராணுவம் தான் சுட்டுவிழுத்தியிருக்கவேண்டும் அதனால் தான் அவர்களும் சேர்ந்து வேறு திசையில் எல்லோரையும் திசை திருப்பி தேடவைத்தார்கள்.  இப்போது விமானி வந்து சாட்ச்சி சொல்லமாட்டார் என்பதால் அவரின் மேல் எல்லா பழிகளையும் போடபாக்கின்றார்கள்.  எதையுமே ஆதாரத்தோடோ, இல்லை ஆணித்தரமாகவோ சொல்லாமல் நேரத்திற்கு ஒரு கதை அவிழ்த்து விடுகின்றார்கள்.

இப்போது கூட செய்மதியின் படிதான் இந்திய கடலில் வீழ்ந்திருக்கின்றார்கள் என்கின்றார்களே தவிர எந்தவித ஆதாரமும் அவர்களிடம் இல்லை.

மலேசிய அரசாங்கம் நடந்த உண்மையை ஒழிக்காமல் சொன்னாலே அன்றி விமானத்திற்கு என்ன நடந்திருக்கும் என்பது ஒரு புரியாத புதிர் :rolleyes:

 

உண்மை

நேற்று இதை அறிவித்தபோது

பயணிகளின் உறவுகளை  வெளியேற்ற  

காவல்த்துறையினர் அதிகளவில் குவிந்திருந்ததை காண  முடிந்தது.

அடாத்தனமாக  அவர்களை  தூக்கிச்சென்று வெளியேற்றியதையும்  காண  முடிந்தது.

அந்தவகையில் எவரும் அவர்களது கதையை  நம்பவில்லை என்பது உறுதி.

Link to comment
Share on other sites

கடுமையான புகை வந்ந்திருந்தாலோ இல்லது பயணிகளுக்கு விமானத்தை அதி உச்சத்துக்கு கொண்டு போய் சுவாசப்பிரிச்சனை உண்டு பண்ணி இருந்தாலோ பயணிகள் எல்லோரும் மயக்கமடைய வாய்ப்புகள் அதிகம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேறொரு திரியில்... காணாமல் போன விமானத்தைப் பற்றி, கருத்துச் சொல்லப் போக...
சூறாவளி... எனக்கு தந்த பதிலுக்குப் பிறகு, நான் வாயை மூடிக் கொண்டு இருந்திட்டன். :D  :lol:

 

விமானம் கடத்தப் பட்டிருந்தால்....
ஏன்... ஒரு பயணியும், தமது கைத்தொலை பேசியின் மூலம் உறவினர்களை தொடர்பு கொள்ளவோ... குறுஞ் செய்தி அனுப்பவோ.. முயற்சிக்கவில்லை.
வேறு... ஏதோ... பெரிய மர்மம் நிகழ்ந்துள்ளது.

 

அனுப்பியிருக்கலாந்தான் ஆனாலும் சிக்கினலும் வேணுமே?

யாரோ எதோ இதென்ன யாழ் கொளும்பு பசுவண்டியா சிறி?

 

 

Link to comment
Share on other sites

இது வேற்றுக்கிரக வாசிகளால் முக்கியமாக, செவ்வாக்கிரக வாசிகளால் கடத்தப்பட்டிருக்கலாம். நம்மடை ஆட்கள் பலர் செவ்வாய்குப் போவதற்கு இப்பவே ரிக்கெற்ரும் வாங்கிவிட்டார்கள். தங்கள் கிரகத்திற்கு வரப்போகும் பூவுலகவாசிகள் எப்படி இருப்பார்கள் என்பதை முற்கூட்டியே அறிவதற்காக அங்கு விமானம் கடத்திக்கொண்டு செல்லப்பட்டதாக ஒரு தகவல். கிரக வாசிகளுக்கும் தலைமை விமானிக்கும் ஏறகெனவே தொடர்புகளும் உண்டாம்.

செய்மதிகளுக்கே தெரியாது விமானத்தைக் கொண்டுசெல்ல முடிந்த விமானிக்கு தொலைத் தொடர்புகளை முடக்கத்தெரியாது விட்டால்....சிந்தனை செய்மனமே. :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.