Jump to content

பலம் இருந்தால் தான் இன்றைய உலகில் மதிப்பு – முதல்வர் விக்னேஸ்வரன் கருத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

CV.jpg

பலம் இருந்தால் தான் இன்றைய உலகில் மதிப்பு இருப்பதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

கொழும்பு, வெள்ளவத்தையில், நடந்த மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின், தேர்தல் பரப்புரை கூட்டத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

கொழும்பில் வந்து தம்பி மனோ கணேசன் அவர்களின் கட்சிக்; கூட்டத்தில் பேசுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அரசியலே வேண்டாம் என்றிருந்த எனக்கு இப்பொழுது தான் அரசியல் சூடு பிடிக்கின்றது. 

அரசியல் மேடை என்பது ஒரு டெனிஸ் விளையாட்டு அரங்கம் போல. ஒருவர் அடிப்பதை மற்றவர் அடிப்பார். இருவரும் ஒரே பந்தைத்தான் அடிப்பார்கள். விடாமல் அடித்தால்த்தான் வெற்றி. 

அதேபோல் ஒரு தேர்தல் வருகின்றதென்றால் கட்சிகள் விடாமல் தமது கருத்துக்களை மக்களுக்கு கூறிக் கொண்டேயிருக்க வேண்டும். சற்று தளர்வடைந்து விட்டால் மற்றையவர் முந்திவிடுவார். 

ஏனென்றால் தம்பி மனோ இரு புதிய சிந்தனைகளை வலியுறுத்தி வந்துள்ளார். அதாவது சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்ற ஒரு தமிழ்த் தலைமைத்துவத்தை அவர் உருவாக்கி வருகின்றார். அதாவது அவர்களும் சேர்ந்து தம்முடன் முன்னேற வழிவகுத்து வருகின்றார். 

அடுத்து தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுத்த வரையில் இலங்கையின் எந்தப் பாகத்தில் இருந்தாலும் அவர்கள் யாவரும் இலங்கை வாழ் தமிழ்ப் பேசும் மக்களே என்ற உணர்வை வலியுறுத்தி வருகின்றார். இதைத்தான் அண்மையில் நான் குறிப்பிட்டிருந்தேன். 

அதாவது சௌமியமூர்த்தி தொண்டைமானைத் தொடர்ந்து இளம் அரசியல்வாதி மனோ கணேசனின் அரசியல்ப் பண்பாடு அவ்வாறான ஒரு சிந்தனைக்கு இட்டுச் செல்வதாகக் குறிப்பிட்டிருந்தேன். 

இதை நான் வெறும் நட்புக்காகவோ புகழ்ச்சிக்காகவோ அல்லது அரசியல் பதில் உபகாரமாகவோ அன்று கூறவில்லை. அவரைக் கூர்ந்து கவனித்து வந்ததன் விளைவாகவே இன்றும் கூறுகின்றேன். 

அவர் அடிப்படையில் ஒரு மனித உரிமைப் போராளி, ஒரு இலட்சியவாதி. 

அந்த விதத்தில் சிங்களவர் அல்லது தமிழர் அல்லது முஸ்லீம்கள் என்றோ, கொழும்பை, வடக்கை, கிழக்கை, மலையகத்தை அல்லது பிறமாகாணங்களைச் சேர்ந்தவரென்றோ பாகுபாடு காட்டாது எவருக்கு ஒரு இன்னல் நேர்ந்தாலும் அது சம்பந்தமாகக் குரல் எழுப்பி வருகின்றார். அனர்த்தம் நடந்த இடத்திற்கு விரைகின்றார். பொலிசாரைச் சில தடவைகளில் சீண்டுகின்றார். 

இந்த நாட்டில் மனித உரிமை மீறல்கள் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த அந்தக் காலத்தில், வெள்ளை வான்கள் வேலிகளுக்கு வெளியில் வெளிப்படையாகவே நின்று பலரைக் கடத்தி வேட்டையாடிய போதெல்லாம், கொழும்பு மாநகரில் சற்றுந் தளராது நின்று படையினர் பிழைகளை வெளிக்காட்டி, முடியுமானால் பிடித்துச் செல்லப்பட்டவர்களைப் பிணையில் எடுத்து, எமது அரசியல் பின்புலங்களை பிற நாடுகளுக்கும் எடுத்துரைத்து அளப்பறிய சேவையை தனி மனிதனாக அவர் அக்காலத்தில் ஆற்றியமை எல்லோராலும் மனத்தில் எடுக்கப்படவேண்டும். 

பாதிப்புற்ற மக்களின் மொழி, இனம், மதம், பால் போன்றவற்றுக்கு அப்பால் சென்ற மனிதாபிமான முறையில் சேவையாற்றியதால்தான் குறுகிய காலத்தினுள்ளேயே தம்பி மனோ கணேசன் அவர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. வடக்கில் அரசியலில் நிலைபெற்றிருந்த சிலரையுந் தம்முடன் சேர்த்துக்கொண்டதால் அவரின் தேர்தல் வியூகம் நன்றாக விரிவடைந்துள்ளது. அந்த இணைப்பையும் ஒன்றுமையையும் அவர் கட்டிக் காத்து வந்துள்ளார். 

எமது தமிழ்ப் பேசும் மக்களிடையே பல வேற்றுமைகள் இருந்து வருகின்றன. சாதி அடிப்படையில், மத அடிப்படையில், பிரதேச அடிப்படையில் ஒருவரையொருவர் நாங்கள் கடுமையாக விமர்சித்த காலம் இருந்து வந்தது. 

ஆனால் அண்மைக் காலங்களில் தமிழ்ப் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் எம் எல்லோரையும் அடக்கி ஆளப் பெரும்பான்மையின அரசியல்வாதிகள் தலைப்பட்டதால் எங்களுக்குள் ஒரு ஒற்றுமை தற்பொழுது வளர்ந்து வருகின்றது. 

நட்டங்கள் எம்மை நாடி வரும் போது நாம் நண்பர்கள் ஆகிவிடுகின்றோம். உதாரணத்திற்கு சுனாமி வந்தபோது இராணுவத்தினரும் புலிகளும் சேர்ந்து சகோதரர்கள் போல் நடந்து பாதிப்படைந்த மக்களுக்கு உதவினார்கள். 

ஆனால் ஓரிருவாரங்களுக்குள் தலைமைத்துவங்கள் அவர்களைப் பிரித்தெடுத்து விட்டன. 

எனவே எங்கள் தமிழ்ப் பேசுந் தலைமைத்துவங்கள் அதே பிழையை மீண்டும் மீண்டுஞ் செய்யாமல் எமது வடமாகாண, கிழக்குமாகாண, மலையக, கொழும்பு மாநகர மற்றைய தெற்கில் உள்ள சகல மாகாணங்களிலும் வாழும் தமிழ்ப் பேசும் மக்களை இணைத்து அரசியல் நடத்த முன் வரவேண்டும். 

அதற்காக ஒவ்வொரு உட்பிரிவினரும் தங்கள் தனித்துவ அடையாளங்களை ஒரேயடியாக கைவிட்டு விட வேண்டும் என்று நான் கூறவரவில்லை.

தமிழ்ப்பேசும் உட்பிரிவினர் சகலருந் தத்தம் தனித்துவங்களுடன் உள்வாங்கப்பட்டு அரசியல், சமூக, கலாச்சார ரீதிகளில் ஒன்று திரள முன்வர வேண்டிய அவசியத்தைத் தான் நான் குறிப்பிடுகின்றேன். தமிழ்ப் பேசும் முஸ்லிம் மக்களையும் ஒன்றிணைத்தே இதைக் கூறுகின்றேன். 

தமிழ்ப் பேசும் மக்கள் ஒன்றிணைவது இன அடிப்படையிலான ஒரு குற்றம் என்று பெரும்பான்மையினத்தினர் கூற எத்தனித்துள்ளார்கள். 

தனி மொழியை அரசியல் சட்டத்தில் உள்ளடக்கியது பெரும்பான்மையினர். தனி மத தனியுரிமையை அரசியல் யாப்பில் அரங்கேற்றியது பெரும்பான்மையினர். தமக்கே தனியாக இந்நாடு சொந்தம் என்று இன்றும் கூறிவருவதும் அவர்களே. 

ஆனால் தமிழ்ப் பேசும் மக்கள் ஒன்று சேர்ந்தால் அது தேசியத்திற்கு முரண், நாட்டுக்கு முரண், பயங்கரவாதத்தின் பிரதிபலிப்பு என்றெல்லாம் கதை கட்டி விடுகின்றார்கள். அதற்காக எம்மவரில் சிலர் தேசியக் கட்சிகளுக்கே வாக்குப் போடவேண்டும் என்றெல்லாம் கூறுகின்றார்கள். 

தேசியக் கட்சிகள் தனிப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களுக்கு வேண்டுமானால் சலுகைகளை வழங்குவன. ஆனால் ஒரு ஜனசமூகப் பிரிவினருக்கு எந்தவித உரிமைகளையும் வழங்க மாட்டார்கள். 

ஏனென்றால் அவற்றின் அதிகாரங்கள் பொதுவாக பெரும்பான்மையினர் வசமே இருந்து வந்துள்ளது. சிறுபான்மை அமைச்சர்களுக்குத் தமது பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சம் தமது சொந்த ஜனசமூகப் பிரிவினர் பற்றி அதிகம் பேசவிடாது தடுத்துள்ளது. 

இதுவரை காலமும் பெரும்பான்மையினர் நடாத்தும் தேசியக் கட்சிகளின் போக்கை எடுத்துப் பாருங்கள். தனிப்பட்டவர்கள் நயம் பெற்றார்கள். எமது சமூகத்தினர் அரசியல் ரீதியாக எதையும் பெறவில்லை என்பதே உண்மை. 

எமது தனித்துவத்தைக் கடைப்பிடித்து அதே நேரம் மற்றைய இனங்களுடன் இணைந்து முன்செல்வதானால் மட்டுமே தமிழ் மொழியும் அதைப் பேசும் இனங்களும் இந் நாட்டில் நிலை பெறுவன. 

மனோ கணேசனைப் பொறுத்த வரையில் சிங்கள மக்களுக்கும் தலைமைத்துவத்தை அளித்து அவர்களை வழிநடத்தக் கூடிய நிலையில் இருக்கின்றார். ஒரு தேசியக் கட்சியைத் தானே வழி நடத்தக் கூடிய பாங்கில் செயற்பட்டு வருகிறார். 

அதாவது தமிழ்ப் பேசும் மக்களின் ஒன்று திரளல் சிங்கள மக்களுக்கெதிரான ஒன்று அல்ல என்பதை எப்பொழுதுமே வலியுறுத்தி வருகிறார். ஆகவே அவருக்கு எம்மாலான ஒத்துழைப்புக்கள் அனைத்தையும் நாம் வழங்க வேண்டும். 

முஸ்லிம் சகோதர சகோதரிகளும்; சேர்த்து ஒன்று திரள வேண்டும் என்பது காலம் கோடிட்டுக் காட்டும் ஒரு கட்டாயமாகும். அதன் மையப் புள்ளியாக தம்பி மனோ கணேசன் திகழ்கின்றார் என்றால் அது மிகையாகாது. 

எமது தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளை நாம் உரக்கக் கூவிப் பெற்றுக்கொள்ள எத்தனிக்கும் அதே நேரம் இந் நாட்டின் மற்றைய சகல இனத்தவரையும் எம்முடன் அணைத்துச் செல்வதானது எம் நாட்டின் பன்மொழி, பன்மத, பல்லினத் தன்மையை வலியுறுத்துவதாக அமையும். 

அந்த முற்போக்கு நகர்வில் ஒரு பிரதான பாத்திரத்தை தம்பி மனோ கணேசன் வகித்து வருகின்றார். எனவேதான் எம் மக்கள் தவறாது எதிர்வரும் மேல்மாகாண சபைத் தேர்தலில் அவரது கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் சின்னமான ஏணிச் சின்னத்திற்கு வாக்களித்து அவரை அரசியல் ரீதியாகப் பலப்படுத்துமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன். 

இந்தத் தேர்தலிலும் தமிழ்ப் பேசும் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க பங்காளிக் கட்சிகளையும் சுயேற்சைக் குழுக்களையும் அரசாங்கம் களமிறக்கியுள்ளது. ஆனால் இங்கு இடம்பெறுந் தேர்தலில் எமது வாக்குகள் சிதறிவிடக் கூடாது. 

வடக்கிலோ மலையகத்திலோ அவற்றை ஈடுகட்டி விடலாம். ஏனெனில் கணிசமான தமிழ்ப் பேசுஞ் சனத் தொகை அங்குண்டு. மேல் மாகாணம் அவ்வாறல்ல. தமிழ்ப் பேசும் மக்களின் ஜனத்தொகை குறைவானது. 

எமது வாக்குச் சிதறினால் இங்கு வாழும் எமது மக்களின் இருப்பை அது அசைத்து விடும். எனவே தான் கூறுகின்றேன். வாக்குகளைச் சிதறிவிட இடமளிக்காமல் எமது தமிழ்ப் பேசும் மக்கள் ஒன்று திரண்டு ஒரு முகமாக ஜனநாயக மக்கள் முன்னணியின் சின்னமான ஏணி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென்று. 

அரசாங்கத்திற்கு எதிரான கட்சிகளுடனேயே ஜனநாயக மக்கள் முன்னணி தற்போது இணக்கப்பாட்டை வைத்துள்ளது. எனவே அரசுக்கு எதிரான தேசியக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து அவர் கடமையாற்றலாம். இதனால் தேசியக் கட்சி ஒன்றிற்கு வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாதொழிகிறது. 

எமது மக்களை வடமாகாணத்தில் வாக்களிக்குமாறு நான் கேட்டபோது இரண்டு விடயங்களுக்கு முதல் இடம் கொடுத்தேன். 

ஒன்று வாக்களிப்பு விகிதம் கூடினால்த்தான் எம்மால் எமது வெற்றியை ஊர்ஜிதப்படுத்த முடியும் என்ற கருத்து. எந்தக் காரணத்திற்காகவும் எவரும் வாளாதிருந்து வாக்களிக்காமல் போய்விடக்கூடாதென்ற கருத்தை மீண்டும் மீண்டும் எம் மக்களின் முன்வைத்தேன். அங்கு இராணுவக் கெடுபிடிக்கள் இருந்த போதும் இதை மிக அழுத்தமாக அவர்கள் முன்வைத்தேன். 

அடுத்தது பெண்கள் தேர்தலில் கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டும் என்ற கருத்து. வழமையாக எமது பெண்கள் வீட்டில் உள்ள ஆண்மக்களை வாக்களிக்க அனுப்பிவிட்டு தாங்கள் சமையலில் ஈடுபடுவார்கள். அல்லது குழந்தைகளின் பராமரிப்பில் ஈடுபடுவார்கள். 

எனவேதான் வாக்களிக்கும் தினத்தை ஒரு முக்கியமான தினமாகக் கணித்து பெண்கள் தவறாமல் சென்று வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவர்கள் என்னைக் கைவிடவில்லை. 

இதையே மேல்மாகாண வாக்காளப் பெருமக்களிடமும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். தவறாது வாக்களிக்கச் செல்லுங்கள். ஆண்கள், பெண்கள் அனைவருஞ் செல்லுங்கள். சென்று ஏணிச் சின்னத்திற்கு வாக்களியுங்கள். 

கிழக்கில் நடந்தது போல் வாக்காளப் பெருமக்கள் வாளாதிருந்து எமது வாக்குரிமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடாதீர்கள். கிழக்கில் நடந்துள்ளது உங்கள் எல்லோருக்குந் தெரியும். வாக்களிப்பில் பலர் கலந்து கொள்ளாமையால்த்தான் அங்கு தவறிழைக்கப்பட்டுள்ளது. 

வடக்கிலும் கிழக்கிலும் மாகாண ஆட்சியைத் தமிழ்ப் பேசும் மக்கள் தனித்துப் பிடித்து விடலாம். ஆனால் மேல் மாகாணம் அவ்வாறான மாகாணம் அல்ல. 

எனினும் எமது மக்களைப் பெருவாரியாகத் தேர்ந்தெடுப்பதின் மூலம், உருவாகப் போகும் ஆட்சியின் மீது நாம் அதிக பட்ச அழுத்தத்தைப் பிரயோகிக்கலாம். 

இனி வருங்காலத்தில் வடக்கு, கிழக்கு, மலையகம், மேற்கு மேலும் தமிழர் வாழ் பிறஇடங்கள் அனைத்திலும் நாம் சேர்ந்து ஒற்றுமையுடன் வாக்களிப்பதால் எமக்கு நாமே அரசியல் பலத்தைத் தேடிக் கொள்ளலாம். 

இனிவரும் காலம் வித்தியாசமான காலம் என்பதை எம் மக்கள் உணரவேண்டும். வடகிழக்கு மக்களிடம் ஆயுதம் இருந்த காலத்தில் மலையகத்தில் கூட பெரும்பான்மையோர் தமிழ் மக்களை ஓரளவு மரியாதையுடன் நடத்தினார்கள். 

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்ததும் பதுளையில் ஒரு பள்ளிக் கூடத்தில் தமிழர் ஒருவரின் சட்டபூர்வமான கோரிக்கையைக் கூட பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் ஏற்காமல், “போய் பிரபாகரனிடம் கேள்”என்று கூறியதாக எனக்கு செய்தி வந்தது. 

பலம் இருந்தால் தான் இன்றைய உலகில் மதிப்பு. அது ஆயுதப் பலம் அல்லது சரீரபலம் என்று நான் கூறவரவில்லை. ஆனால் வாக்குரிமையால் நாம் பெறும் பலம் தான் இனி எமக்கு உற்ற துணையாக இருக்கப் போகின்றது என்பதை எம் மக்கள் மறக்கக் கூடாது. 

இலங்கையில் குறிப்பாக மேல் மாகாணத்தில் தமிழ்த் தலைமைத்துவத்தைக் கொண்ட ஒரு ஜனநாயகக் குரலாக ஜனநாயக மக்கள் முன்னணி பரிணாமம் பெற்றுள்ளது. அதற்கு அனுசரணையாக இருப்பது எம் எல்லோரதும் கடமை. 

எமக்கென, எமது நலனுக்கென, நாட்டின் நலனுக்கென உருவாக்கப்பட்ட கட்சி என்ற முறையில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு எமது மக்கள் மேல் மாகாணத்தில் இம் மாதம் 29 ந் திகதியன்று வாக்களிப்பது உங்கள் ஒவ்வொருவரினதுந் தலையாய கடன் என்பதை இத் தருணத்தில் கூறி அமர்கின்றேன். என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140325110200

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.