Jump to content

ஐ.நா தீர்மானங்கள் ஏன் இலங்கை அரசைத் தண்டிக்கவில்லை?:சபா நாவலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா தீர்மானங்கள் ஏன் இலங்கை அரசைத் தண்டிக்கவில்லை?:சபா நாவலன்

War-Crimes-in-Sri-Lanka.jpg

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து ஐந்து ஆண்டுகள் கடந்து போய்விட்டன. மனிதப் படுகொலைகளைத் திட்டமிட்டவர்களும், நடத்தி முடித்தவர்களும் இன்னும் இந்த உலகின் மதிப்பிற்குரிய மனிதர்களாக எந்த அச்சமுமின்றி உலாவருகின்றனர். இந்த நிலையில் ஜெனீவா மனித உரிமைத் திருவிழா நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அங்கு தான் ராஜபக்சவைத் தண்டிக்கப் போகிறார்கள் என்றும் அதனை நிறைவேற்றுவதற்காகவே தாம் இதுவரை போராடி வருவதாக புலம் பெயர் தமிழ்த் தலைமைகளும் இலங்கையில் தமிழ்த் தேசியத்தின் பெயரால் வாக்குக் கேட்கும் கட்சிகளும் கூறிவந்தன. ஐக்கிய நாடுகள் நிறுவனம், அமெரிக்க அரச தலைமையிலான உலகம் போன்றவற்றின் குறைந்தபட்சப் புரிதல்களுமின்றி ஐந்து வருடங்கள் மக்களை மாயைக்குள் மந்தைகளாக வைத்திருந்த தலைமைகள் பிழைப்பிற்காக புதிய திட்டங்களை ஆராய்ந்துகொண்டிருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் நிறுவனம் உட்பட அனைத்து நாடுகளும் இணைந்து இலங்கையில் இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய போதே அதன் பின்னணியிலுள்ள அரசியலையும் புதிய அரசியல் இயக்கத்தின் தேவையையும் மக்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக மக்களை மந்தைகளாக்கிய இக் கூட்டத்திற்கு நீண்டகால கறைபடிந்த வரலாறுண்டு. இவர்கள் அனைவரும் அழிக்கப்படும் மக்களின் கண்ணீரைத் தமது பிழைப்பிற்காகப் பயன்படுத்தியவர்கள். சமூக உணர்வும் மக்கள் பற்றும் மிக்க ஆயிரக்கணக்கனவர்களை விரக்திக்கு உள்ளாக்கியவர்கள்.

இலங்கை அரச பாசிசம் தமிழ்ப் பேசும் மக்கள் மீது திட்டமிட்ட இனப்படுகொலையைக் கட்டவிழ்த்து விடுகிறது என்றால் இந்தப் பிழைபுவாதத் தலைமைகள் அதற்கான அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்திருக்கிறார்கள்.

அமெரிக்க அரசு கடந்த பத்தாண்டுகளில் மத்திய கிழக்கை இரத்தக் காடாக மாற்றியிருக்கின்றது. ஆபிரிக்க நாடுகளை சத்தமில்லாமல் அழித்துத் துவம்சம் செய்திருக்கின்றது. இந்த நிலையில் ஆசியாவை மையப்படுத்தி தமது அழிப்பைத் தொடரவேண்டும் என்ற நோக்கில் தோற்றுவிக்கப்பட்டதே ஆசிய மையம்(Asia Pivot) என்ற அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் புதிய சேர்க்கையாகும். . இதனை அடிப்படையாகக்கொண்ட முதலாவது மிகப்பெரும் தலையீடே இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையும் அதன் பின்னணியில் செயற்பட்ட அமெரிக்க அரச அணியுமாகும்.

அமெரிக்காவின் இலங்கை தொடர்பான கொள்கை

mcdonalds.jpg

அமெரிக்காவைப் பொறுத்தவரை இலங்கை என்பது பொன் முட்டையிடும் வாத்து. தெற்காசியாவில் எந்தவித மக்கள் எதிர்ப்புமின்றி தனது நேரடிக் காலனி போன்றே அமெரிக்கா இலங்கையைப் பயன்படுத்தும் நிலை காணப்படுகின்றது . ஒரு புறத்தில் மகிந்த ராஜபக்ச அரசும் மறுபுறத்தில் அதன் எதிரிகள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வடகிழக்குத் தமிழர் தலைமைகளும் அமெரிக்க அரசின் நேரடியான கட்டுப்பாட்டிற்கு உட்பட்டே இயங்குகின்றன.

அமெரிக்க அரச தகவல்களின் அடிப்படையில் இலங்கையில் மொத்த அமெரிக்க கம்பனிகளின் முதலீட்டின் அளவு 150 மில்லியன் டொலர்கள். இலங்கையில் முதலிட்டுள்ள அமெரிக்க நிறுவனங்களில் பிரதானமானவை: Energizer Battery, Mast Industries, Smart Shirts (a subsidiary of Kellwood Industries), Chevron, Citibank, 3M, Coca-Cola, Pepsi Co, Fitch Ratings, AES Corporation, AIG/Chartis Insurance, American Liquid Packaging Systems USA, Virtusa, Avery Denison, North Sails, Motorola Solutions, Amsafe Bridport, RR Donnelly, and Revlon (through its Indian subsidiary). Several Sri Lankan-Americans have started IT and BPO companies in Sri Lanka serving the U.S. market. In addition, IBM, AT&T, Procter & Gamble, Microsoft, Intel, Oracle, DuPont, Bates Strategic Alliance, McCann-Erickson, Pricewaterhouse Coopers, Ernst and Young, and KPMG all have branches, affiliated offices, or local distributors/ representatives. Kentucky Fried Chicken, Pizza Hut, Federal Express, UPS, தவிர மக்டொனால்ட் உட்பட பல நிறுவனங்கள் உள்ளூர் முகவர்களூடாக நடத்தப்படுகின்றது.

அமெரிக்க நிறுவனங்கள் அல்லாதவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளவை: Unilever, Nestle, British American Tobacco Company, Mitsui, Pacific Dunlop/Ansell, Prima, FDK, Telekom Malaysia Bhd, S.P. Tao, HSBC, AIA Group, the Indian Oil Corporation, Bharathi Airtel and Cairn India. In 2011, Shangri La Hotels.

அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் உலக நாணய நிதியம் இலங்கையை நோக்கி மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்தது. கல்வியைத் தனியார் மயப்படுத்தவேண்டும், மருத்துவச் சேவையைத் தனியார் மயப்படுத்த வேண்டும், அன்னிய நாடுகளின் நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதே அந்த மூன்று முக்கிய கோரிக்கைகள். நேரடி முதலீட்டுக்கான தொகை 2 பில்லியன்களாக 2012 ஆம் ஆண்டிற்கு முன்பதாக எட்டியிருக்க வேண்டும் என்று உலக நாணய நிதியத்தின் குறி அமைந்திருந்த போதிலும் அது 1 பில்லியனையே எட்டியிருக்கிறது. இத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் எனினும் IMF இற்கு திருப்தியளித்திருக்கிறது என அந்த நிறுவனம் கூறுகிறது.

கல்வியைத் தனியார் மயப்படுத்தும் கோரிக்கைக்கு இலங்கை அரசு பொதுவாக மக்கள் எதிர்ப்பு எதுவுமின்றி அடிபணிந்தது. “University of Central Lancashire” (UCLAN), UK and Raffles Education Corporation, Singapore ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்கள் தமது முதலீட்டைச் சந்தடியில்லாமல் மேற்கொண்டு விட்டன. முன்னர் பலதடவைகள் கல்வியைத் தனியார் மயப்படுத்தும் திட்டத்தை உலக வங்கியும், நாணய நிதியமும் திட்டமிட்ட போதும் மக்கள் எதிர்ப்பால் நடைமுறைப்படுத்த இயலவில்லை.

இலங்கையின் முதலாவது ஏற்றுமதி நாடாக அமெரிக்காவே திகழ்கிறது.

உலக வங்கி மூலதன வியாபாரம் நடத்தும் 185 நாடுகளில் இலங்கை 81 வது இடத்தை வகிக்கிறது.

அரசையும் அரசிற்கு எதிரானவர்கள் எனக் கருதப்படுபவர்களையும் தனது கட்டுப்பாட்டினுள்ளேயே வைத்திருக்கும் அமெரிக்க அரசின் தந்திரோபாயம் ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை பிரதான முறைமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது, இலங்கையில் அமெரிக்காவின் இந்தக் கோட்பாடு மிகப்பெரும் வெற்றியை வழங்கியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால், மோடியின் அரசிற்கு அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் இழுத்துவருவது இலகுவானது. அதே வேளை மோடிக்கு எதிரானவர்கள் போலத் தோற்றமளிக்கும் ஆம் ஆத்மி போன்ற கட்சிகளையும் அமெரிக்கா தனது எல்லைக்குள் வைத்திருக்கும். ஆக, மக்கள் எதிர்ப்பையும் ஏகாதிபத்தியங்களின் கைகளுக்குள்ளேயே வைத்திருக்கும் இலங்கை போன்றதொரு நிலைமை உருவாக வாய்புக்கள் உண்டு.

இலங்கையில் ராஜபக்ச அரசை நேரடியாகவே ஆதரிக்கும் அமெரிக்க அரச அணி மறுபுறத்தில் அதன் எதிர்ப்பாளர்களையும் தனது காலடியில் வைத்திருக்கிறது.

இதனால் எவ்வகையான குறிப்பான எதிர்ப்பும் இன்றியே அமெரிக்கா தனது அரசியல் பொருளாதார இராணுவ நலன்களை நிறைவேற்றிக்கொள்கிறது. இதனைத் தொடர்வதற்காகவே ஜெனிவா தீர்மானம் போன்றவற்றை நிறைவேற்றுவதும், சில அறிக்கைகளை வெளியிடுவதும் போன்ற நாடகத்தை அமெரிக்க அரசு நடைமுறைப்படுத்துகிறது.

அமெரிக்காவின் ஆசிய மையம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த அதற்குக் கிடைத்திருக்கும் மிக நேர்த்தியான நாடு இலங்கை. இலங்கையின் எதிர் எதிரானதாகத் தோன்றும் அரசியல் சக்திகளில் ஏதாவது ஒரு பக்கம் அமெரிக்க அரசின் கைகளிலிருந்து நழுவுமானால் அதன் திட்டத்திற்குப் பாரிய பின்னடைவு ஏற்படும்.

தவிர,மேலும் சில நிகழ்வுத் தொடர்கள் அமெரிக்காவிற்கு அச்சம் தருவனவை. தமிழ்ப் பேசும் சிறுபான்மை இனங்கள் மத்தியில் போராட்ட இயக்கங்கள் தோன்றும் வாய்ப்புக்கள் உருவாகும். சிங்கள மக்கள் மத்தியில் அரசிற்கு எதிரான போராட்டங்களும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களும் வலுவடையும். அமெரிக்க எதிர்ப்பு நாடுகளின் அணியின் ஆதரவு வலிமைபெறும். ஆக, இரண்டு பக்கத்திலும் இனவாத ஏகாதிபத்திய ஆதரவு சக்திகளைப் பேணுவதே அமெரிக்காவின் நீண்டகாலத் தந்திரோபாயம்.

இலங்கையின் குறிப்பான சூழல்

JVP-suspect.jpg

காலனியத்திற்குப் பின்னைய காலம் முழுவதும் இலங்கையின் வரலாறு புரட்சிகளதும் போராட்டங்களதும் வரலாறே. குறிப்பாக 60 களின் பின்னர் இலங்கையில் ஆயுதம் தாங்கிய எழுசிகள் உட்பட பல்வேறு போராட்டங்களைச் சந்தித்தது. யாழ்ப்பாணம் சார்ந்த பகுதிகளைத் தவிர இலங்கையின் ஏனைய பகுதிகள் பிற்போக்கு நிலப்பிரபுத்துவ சிந்தனையிலிருந்து மாற்றமடையும் நிகழ்ச்சிப் போக்கிலிருந்தன. 1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி பல்வேறு மாற்றங்களை இலங்கையில் ஏற்படுத்திற்று. தொலைக் கிராமங்கள் ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பு நோக்கும் போது கல்வி வாய்ப்பை அணுக்கக்கூடிய சூழல் காணப்பட்டது.

இதனால் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டது. இலங்கை முழுவதும் பல்வேறு போராட்டங்கள் தோன்றின. போராட்டங்கள் உருவாகும் போதெல்லாம் தேசிய இன முரண்பாடு தூண்டிவிடப்பட்டது. அமைப்பு மயப்படுத்தப்பட்ட போராட்டங்களாக சண்முகதாசன் தலைமைதாங்கிய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்கள், இரண்டுதடவை ஜே.வி.பி இன் ஆயுத எழுச்சிகள், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களின் எழுச்சிகள் என்ற தொடர்ச்சியான போராட்டச் சூழலையே முள்ளிவாய்க்கால் அழிவுக்காலம் வரை இலங்கை சந்திருக்கின்றது.

இவற்றை அவதானித்த அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஏகாதிபத்தியங்கள் உலகில் முதல் தன்னார்வ நிறுவனத்தை இலங்கையிலேயே தோற்றுவித்தன. கொழும்பு பிளான் என்று அழைக்கப்பட்ட அரசுகளின் கூட்டு நிறுவனமான சேவை அமைப்பு இலங்கையில் உருவானது. அமெரிக்க அரசின் நிதி உதவியின் கீழ் மார்கா என்ற ஆய்வு நிறுவனம் 1960 களின் இறுதியில் தோற்றுவிக்கப்பட்டது. 1958 ஆம் ஆண்டு சர்வோதையா என்ற தன்னார்வ நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.

இளைஞர்களின் அரசிற்கு எதிரான கோபம் இலங்கையில் அதிகமாகக் காணப்படுவதால் மேலதிக நிதியை தன்னார்வ நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என அமெரிக்க அரசு 70களில் பரிந்துரைத்தது.

இலங்கையில் போராட்டங்களுக்கான புற்ச்சூழல் காணப்படுகின்றது என்பதும் அவற்றை அழிப்பதற்கு அமெரிக்க பிரித்தானிய அரசுகள் மிக நீண்டகாலமாகவே முனைத்துவருகின்றன என்பதும் வெளிப்படையாகத் தெரியும் உண்மைகள்.

அமெரிக்காவின் எதிரணி நாடுகள்.

venezuala.jpg

சீனா மற்றும் ரஷ்யா போன்ற முதலாளித்துவ சர்வாதிகார நாடுகளைச் சார்ந்த ஒரு சில நாடுகள் அமெரிக்க அணி என்று பரவலாக நம்பப்படுகிறது. இந்த நாடுகளிடையே பல்தேசிய வர்த்தக உறவுகளில் உடன்பாடுகளும், அமெரிக்க தலைமைக்குள் உட்படுத்தப்படாமையினால் முரண்பாடுகளும் காணப்படுகின்றன. இந்த இரண்டு நாடுகளிலும் ஒருவகையான முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சியே நடபெறுகின்றது. ஏனைய ஏகாதிபத்திய நாடுகளோடு போட்டிபோட்டுக்கொண்டு அழிக்கவல்ல நாடுகள் இவை.

இவை தவிர, வெனிசூலா, கியூபா, எக்குவாடோர் உட்பட பல லத்தீன் அமெரிக்க நாடுகள் தேசியவாத நாடுகளாக அடையாளப்படுத்தப்படலாம். இந்த நாடுகளில் தேசிய மூலதனம் கணிசமான செல்வாக்குச் செலுத்துகின்றது, இந்த எல்லா நாடுகளதும் ஒரே நோக்கம் இலங்கையில் அமெரிக்கத் தலையீட்டைப் பலமிழக்கச் செய்வது என்பதாகும். இதனால் இனவழிப்புப் போன்ற உள்நாட்டு அரசியலைக் கண்டுகொள்ளாத இந்த அரசுகள் உலகில் ஏகாதிபத்தியத் தலையீடுகளை எதிர்பது என்பதைத் தமது அடிப்படை அரசியலாக முன்வைக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபை, உலக வர்த்தக மையம், உலக வங்கி, உலக நாணய நிதியம் போன்ற அமைப்புக்கள் இரண்டாம் உலகயுத்ததின் பின்னான அமெரிக்கா தலைமையில் உருவான பொகுளாதாரக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தோற்றுவிக்கப்பட்டவை. ஆதிக்கம் செலுத்தும் மேற்கு நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளில் ஏகாதிபத்திய நட்பு அரசுகளைத் தோற்றுவித்துப் பேணுவதே இந்த அமைப்புக்களின் கடமை. அடிப்படையில் தேசியப் பொருளாதாரத்திற்கும் தேசியத்திற்கும் அடிப்படை விரோதிகளே இவை.

neoliberals.jpg

தேசியத்தைத் திறந்த பொருளாதாரம் எனப்படும் ஏகாதிபத்திய நலன்கள் சார்ந்த பொருளாதாரத்திற்கு அடகுவைப்பவர்கள் தேசிய வாதிகள் அல்ல. இவர்களையே விதேசிகள் என்கிறோம். தமிழ்த் தலைமைகளின் பொதுவான போக்கு தேசியத்திற்கு விரோதமானதாகும். அவர்களிடம் தேசியப் பொருளாதாரம், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற அடிப்படையில் குறைந்தபட்ச வேலைத்திட்டங்கள் காணப்படுமானால், தேசியத் தன்மைகளக்கொண்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகளின் ஆதரவை எதிர்பார்க வாய்ப்புக்கள் உண்டு.

அவ்வாறான வேலைத்திட்டமோ கோட்பாடுகளோ அற்ற நிலையில், இலங்கையில் அமெரிக்கத் தலையீட்டிற்கு எதிராக இந்த நாடுகள் ஐ.நாவில் வாக்களிப்பது தவிர்க்கமுடியாதது மட்டுமன்றி, அவர்கள் அளவில் அது நியாயமானதும் கூட.

இவ்வாறான உலகச் சூழலில் வாழும் பெரும்பான்மையால் வெறுக்கப்படும் ராஜபக்ச ஆட்சிக்கு எதிரான போராட்டத்தைச் சிதைப்பதில் தமிழ் அரசியல் தலைமகளுக்கு வரலாற்றுரீதியான பங்குண்டு. வன்னிப் படுகொலைகளின் பின்னர் பிற்போக்கு இனவாதிகளான தமிழ்த் தலைமைகளை முழுமையாகக் கையகப்படுத்துவது ஏகாதிபத்தியங்களுக்குக் கடினமான பணியாகவிருக்கவில்லை. எந்தவகையான குறிப்பான வேலைத்திட்டமும் அற்ற ஏகாதிபத்திய நாடுகளையும் அவற்றின் கூறான ஐ,நா வையும் மட்டுமே நம்பியிருக்கும் இத் தலைமைஅக்ள் தேசியத்திற்கு எதிரான ஏகாதிபத்திய அடியாட்படைகள். கோட்பாட்டுரீதியி, ஏகாதிபத்தியங்களையும் நடைமுறையில் அவற்றின் நிகழ்ச்ச் நிரலையும் உள்வாங்க்கி மக்களை ஏமாற்றும் இவர்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டும்.

அமெரிக்கா தலமைதாங்கும் ஏகபோக நாடுகளுக்கு எதிராகப் போராடும் ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் இலங்கை முழுவதும் வாழும் மனிதாபிமானிகளையும் இணைத்துக்கொள்ளும் ஐக்கிய முன்னணியை இலங்கையில் வாழும் முன்னேறிய மக்கள் பிரிவினர் முன்வைக்கவேண்டும். இதுவே சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் ஆணிவேர். தமிழ்நாட்டில் கோமாளித்தனமான அரசியல் நடத்தும் இனவாதப் பாசிஸ்டுக்களின் தயவில் ஈழம் பெறுவோம் என்றும் ஏகாதிபத்தியங்களின் தயவால் ஈழம் பிடிப்போம் என்று சொல்வதையும் விடுத்து மக்கள் மத்தியில் புதிய அரசியல் முன்வைக்கப்பட வேண்டும்.. போராடும் அரசியல் தலைமை தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு தோன்ற வேண்டும்.

http://inioru.com/?p=39857

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.