Jump to content

தமிழ்த் திங்களின் தலைமகவே !!


Recommended Posts

பின்பனி யாமங்களின் புணர்தலில் விஞ்சிய  
மஞ்சள் மகரந்தங்கள் காற்றில் கலவி
மாந்தளிர்களையும்  பூந்தளிர்களையும்  பெற்றெடுக்கும் 
இளவேனில் இன்பமே !! தமிழ்த் திங்களின் தலைமகவே !! 
 
புவியின் சுழற்சியிலோ  பூமத்தியரேகையின் அழற்சியிலோ
மாறாது வந்து மானுடத்தை மலரவைக்கும் 
சித்திரையே !! மயங்கவைக்கும் நித்திரையே !!
 
வசந்தமே உன் வரவால் 
புஞ்சையும் நஞ்சையும் பூக்கட்டும் !!
பூமியெங்கும் வாஞ்சை பரவட்டும் !!
துயரம் ஒழியட்டும் !! இன்பம் மலியட்டும் !!
மழை பொழியட்டும் வளம் கொழிக்கட்டும் !!
தமிழ் வளரட்டும்!! தமிழர்தன் தரம் உயரட்டும் !!
 
இளவேனிலே!! இன்முகத்துடன் வாராய்!!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லொருக்கும் இனிய தமிழ் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.