Jump to content

ஊனத்தின் வலி....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊனத்தின் வலியறியா மானிடா
ஓரே ஒரு பொழுது உன்
காலையோ கையையோ
கட்டிப் போட்டு கிடந்து
பார் .
ஊனத்தின் வலியறிவாய்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊனத்தின் வலியறியா மானிடா

ஓரே ஒரு பொழுது உன்

காலையோ கையையோ

கட்டிப் போட்டு கிடந்து

பார் .

ஊனத்தின் லலியறிலாய்....

 

உங்கள் தலைப்பில் த் என்ற எழுத்து  ஒன்று காணாமல் போய் விட்டது யாயினி

 

கூல் கூல்     இப்ப நீங்க எப்படி யிருக்கிறீங்கள் ஒன்றும் அப்சற் இல்லை தானே :)

ஊனம் என்பது ஒருவர் இறந்த பின்பு அந்த உடலில் இருந்து வழிவதுதான் ஊனம் ஆகும்

அதை  இறந்த உடல் அறியாது  என்பது எனது கருத்து

 

எழுத்து பிழை இல்லாமல் எழுத பழகி கருத்தாட பழகிகொள்ளுங்கள் :)

 

எங்கேயோ கேட்ட ஞாபகம்  வருதா யாயினி :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தட்டச்சு செய்யும் எழுத்தில் தவறு நிகழலாம்
யாயினியின் எழுதி உள்ள கருப் பொருள் நிதர்சனமானது.
தொடர்ந்தும் எழுதுங்கள் யாயினி...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை பகிர்ந்த முனிவருக்கும் சசியண்ணாவுக்கும் நன்றிகள்....தட்டச்சு செய்யும் போது ஏற்பட்ட பிழை தான்..தவறு தான்..இனி வரும் காலத்தில் கவனத்தில் கொள்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊனத்தின் வலியறியா மானிடா

ஓரே ஒரு பொழுது உன்

காலையோ கையையோ

கட்டிப் போட்டு கிடந்து

பார் .

ஊனத்தின் வலியறிவாய்....

 

எந்த  ஒரு வலியையும்

எம்மைத்தவிர வேறொருவர் உணரமுடியாது

 

எந்த ஒரு எமது  வேலையையும் எம்மைப்போல்

இன்னொருவர் செய்யமாட்டார்..

 

காரணம்

அவரவருக்கென்று வாழ்க்கையுள்ளது

அவரவருக்கென்று பாதையுள்ளது

அதன் அளவும்

கொள்ளளவும் குறுகியவை

அதற்குள் தான் ஒவ்வொருவரும் சுழலமுடியும்

 

இன்னொன்றை  கூட்டுவதற்கு

நாம்  மற்றதொன்றை துறந்தாகணும்..

 

இது வாழ்க்கை

அரசியல்

ஏன் எமது  போராட்டம்  எல்லாவற்றிற்கும் சரிவரும்

எல்லாத்தமிழரும் ஒத்துழைத்திருந்தால்

தலைவரால் ரொம்ப இலகுவாக போராட்டத்தை வென்றிருக்கமுடியும்

ஆனால் நடந்ததா?

 

 

ஏன்

இன்று எல்லா புலம் பெயர் மக்களும்  கைகோர்த்தால்

தாயக  மக்களின் வறுமையை  இல்லாதொழிக்கமுடியும்

முடிந்ததா??

 

போன கிழமையும்

எனது மக்களுடன்  இது பற்றி  பேசிக்கொண்டிருந்தேன்...

ஏதோ ஒரு நிலையில்

உங்களது ஒரு விரலை வெட்டிவிட்டு வாழ்ந்து பாருங்கள்

அதன் அருமை புரியும் என்றேன்...

 

இருக்கும்வரை

அதனருமை  யாருக்கு தெரிகிறது

இல்லாதவனை புரிந்து கொள்ள......?????????

 

ஏதோ  எழுதணும்  போல தோன்றிச்சு..

வாழ்க  வளமுடன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி விசுகு அண்ணா.... :)நான் அவ்வளவாக ஒன்றும் எழுதுவதில்லை....சில நேரங்களில் என்னையும் மீறி எழுத வேண்டி வந்து விடுகிறது...  தாங்கள் விரும்பிய ஒன்றை அடைந்து விட்டால்,இல்லை அதனை பெற்றே ஆக வேண்டும் என்ற ஆவேசத்தில் மற்றவர்களை  தாக்க எந்தவகை ஆயுதத்தையும் தூக்குவார்கள் இல்லயா......... :(  அதனால் ஏற்பட்ட மன பாதிப்பினால் இதை கிறுக்க வேண்டி வந்தது.. :)

Link to comment
Share on other sites

ஊனம்....என்பது ஒரு குறைபாடே இல்லை. அது ஒரு எண்ணப்பாடு மட்டும்தான். பறக்க ஆசையுள்ள மனிதனிற்கு "சிறகுகள் இல்லையே" என்ற எண்ணமே ஊனம் ஆகிறது. ஊனம் என்பது எம் மனதிலும் அதன் எண்ணத்திலுந்தான் உள்ளது.

ஆனாலும்... தங்களின் வரிகளிலுள்ள வலிகளையும் புரிந்துகொள்ள முடிகிறது சகோதரி!

 

"தன்னம்பிக்கை" என்ற ஒன்றுமட்டுமே 'ஊனம்' என்ற ஒன்றை இல்லாமற் செய்யும் வலிமைமிக்கது. :)

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊனம் என்பது நிஐமாக ஊனமுற்றவர்களில் இல்லை, அது மற்றவரிகளில் அடிமனதில் ஆழமாக ஊறியுள்ளது. அவர்கள் முன்னேற வெளிகிட்டாலும் எமது சமுதாயம் மட்டம்தட்டியே அமர்த்திவிடும். தொடருங்கள் யாயினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊனம் என்பது நிஐமாக ஊனமுற்றவர்களில் இல்லை, அது மற்றவரிகளில் அடிமனதில் ஆழமாக ஊறியுள்ளது. அவர்கள் முன்னேற வெளிகிட்டாலும் எமது சமுதாயம் மட்டம்தட்டியே அமர்த்திவிடும். தொடருங்கள் யாயினி

 

சொல்ல வேண்டியதை சுருக்கமாக நீங்களே சொல்லிட்டீங்கள் உடையார் அண்ணா...மிக்க நன்றி...எல்லாருக்கும் எல்லார் வலிகளும் தெரியாது,புரியாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் வலிகளின்
பெறுமதி அறிவேன்

கண்ணே!
சிறகெனச் சொல்லி
சிலுவை தந்து
சுமக்கச் சொல்வர்!
முத்துநகை சிதறிவிழ
முள்முடி சூடி
அழகு பார்ப்பர்!
கருணையுடன்

கைகளில் ஆணிகள்

கடாவிக் களிப்புறுவர்!
எட்டி நின்று
எட்டி தந்து
குடிக்கச் சொல்வர்!
ஏனெனில்
கடவுளின் மகள் நீ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் வலிகளின்

பெறுமதி அறிவேன்

கண்ணே!

சிறகெனச் சொல்லி

சிலுவை தந்து

சுமக்கச் சொல்வர்!

முத்துநகை சிதறிவிழ

முள்முடி சூடி

அழகு பார்ப்பர்!

கருணையுடன்

கைகளில் ஆணிகள்

கடாவிக் களிப்புறுவர்!

எட்டி நின்று

எட்டி தந்து

குடிக்கச் சொல்வர்!

ஏனெனில்

கடவுளின் மகள் நீ!

 

உங்கள் புரிதலுக்கும் கவி வரிகளுக்கும் மிக்க நன்றி வாலி..

 

ஊனத்தின் வலி....

             வலிக்கிறது

 

 

மனிதர்களை மனிதர்களாக நினைப்பவர்களுக்கு மட்டுமே எதன் வலியையும் தங்கள் வலிகளாக உணர்ந்து கொள்ள முடியும்..வேறை என்ன கறுப்பியண்ணா..உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு வரிகளானாலும் நன்றாக யோசிக்க வைக்கும் வரிகள்.
ஊனம் என்பது ஊக்கம் இல்லாதவனுக்கே. அங்கம் இழந்தவர்கள் தான்

அதிக ஓர்மத்துடன் வாழ்வை வெல்பவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் மற்றும் ஈசன் உங்கள் இருவருக்கும் நன்றிகள்..

Link to comment
Share on other sites

ஊனத்தின் வலியறியா மானிடா

ஓரே ஒரு பொழுது உன்

காலையோ கையையோ

கட்டிப் போட்டு கிடந்து

பார் .

ஊனத்தின் வலியறிவாய்....

 

சிந்திக்க தோணவில்லை ...

ஊனம் இல்லாமலே

பிச்சை எடுப்பவர்களுக்கும்,

மற்றவரை பார்த்து

பரிகாசம் பேசுவோர்க்கும்

தோன்றவில்லை

என்ன இந்த வாழ்க்கை என்று.

கொலை செய்து வாழ்பவர்களுக்கும்

கொள்ளை அடித்து வாழ்பவர்களுக்கும்

கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கும்

மதவெறிகொண்ட மதவாதிகளுக்கும்

தோன்றவில்லை

என்ன இந்த வாழ்க்கை என்று.

பல ஆயிரம் தலைமுறைகளாக

அரும்பாடுபட்டு உருவாக்கித்தந்த

பண்பாட்டையும், கலாசாரத்தையும்

நாகரீகம் என்ற மோகத்தால்

ஒரே ஒரு நுற்றாண்டில்

மின்னலைவிட வேகமாக அழித்துவிட்டோமே

நமக்கெல்லாம் தோன்றவில்லை

என்ன இந்த வாழ்க்கை என்று.

பேரும், புகழும் கிடைக்குமென்றால்

எதை வேண்டுமானாலும்

விட்டுக்கொடுக்கிறார்கள்,

பணம் கிடைக்குமென்றால்

அந்த பேரையும், புகழையும்

விட்டுக்கொடுக்கும் மனிதர்களுக்கு

தோன்றவில்லை

என்ன இந்த வாழ்க்கை என்று.-பிறகு

எப்படி உருப்படும் இந்த உலகம்!

Link to comment
Share on other sites

வெளிநாட்டவர்கள் இப்படியானோரை ஒதுக்கி விடுவதில்லை. சக மனிதர்கள் போலே நடத்துவார்கள்.

எம் சமூகத்தை பொறுத்தவரை ஒரு சிறு பகுதி மக்களை தவிர ஏனைய மக்கள் மேலே உடையார் அண்ணா கூறியது போல் புறக்கணிப்பதும் மட்டம் தட்டுவதும் என உள்ளார்கள். அதற்கெல்லாம் சோர்ந்து போகாமல் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் போராட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to comment
Share on other sites

எமக்கு ஏதும் துன்பம் வந்தால் முள்ளிவாய்க்காலில் அகப்பட்ட மக்களை நினைக்கும்படியும் அவர்களுடன் ஒப்பிடுகையில் எமக்கு ஏற்படும் துன்பங்கள் எல்லாம் துன்பங்கள் அல்ல என தோன்றும் எனவும் யாழ் இணையத்தில் ஒரு அண்ணா அடிக்கடி கூறுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்க தோணவில்லை ...

ஊனம் இல்லாமலே

பிச்சை எடுப்பவர்களுக்கும்,

மற்றவரை பார்த்து

பரிகாசம் பேசுவோர்க்கும்

தோன்றவில்லை

என்ன இந்த வாழ்க்கை என்று.

கொலை செய்து வாழ்பவர்களுக்கும்

கொள்ளை அடித்து வாழ்பவர்களுக்கும்

கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கும்

மதவெறிகொண்ட மதவாதிகளுக்கும்

தோன்றவில்லை

என்ன இந்த வாழ்க்கை என்று.

பல ஆயிரம் தலைமுறைகளாக

அரும்பாடுபட்டு உருவாக்கித்தந்த

பண்பாட்டையும், கலாசாரத்தையும்

நாகரீகம் என்ற மோகத்தால்

ஒரே ஒரு நுற்றாண்டில்

மின்னலைவிட வேகமாக அழித்துவிட்டோமே

நமக்கெல்லாம் தோன்றவில்லை

என்ன இந்த வாழ்க்கை என்று.

பேரும், புகழும் கிடைக்குமென்றால்

எதை வேண்டுமானாலும்

விட்டுக்கொடுக்கிறார்கள்,

பணம் கிடைக்குமென்றால்

அந்த பேரையும், புகழையும்

விட்டுக்கொடுக்கும் மனிதர்களுக்கு

தோன்றவில்லை

என்ன இந்த வாழ்க்கை என்று.-பிறகு

எப்படி உருப்படும் இந்த உலகம்!

 

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாறன்..

Link to comment
Share on other sites

ஆதங்க கவி அக்கா எல்லோரும் எதோ ஒரு விதத்தில் ஊனமா தான் இருக்கிறர்கள் தன்னம்பிக்கை தளராமல் இருந்தால் போதும் . :(

Link to comment
Share on other sites

படித்ததில் பிடித்த கவிதை............

 

5.jpg

 

 

ஊனம் இவரை பார்த்து
ஊமையாய் போனது!
கால்கள் இல்லையென்றாலும்,
இருக் கைகள், கைக் கொடுக்கவே
தன்னம்பிக்கை தலையாட்டுகிறது!

இவரோடு வாழவேண்டும்
இருக்கும் வரை இருக்க வேண்டும்
என்று நம்பிக்கை அடம்பிடிக்கிறது!

கண்ணீரோடும் , வாழ்க்கையோடும்,
இவர் போட்ட எதிர் நிச்சல் கண்டு,
ஊனம் ஓடி ஒழிய
குறித்த நாட்கள் கூட
கூனி குறுகிப்போனது!

 

      -x-x-x-x-x-

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.