Jump to content

பத்மநாபா – வலி நிறைந்த மரணமும் மாற்றங்களும் : சபா நாவலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒ கரும்பு;

என்ன விளங்கவில்லை

முதலாவது,

நீங்கள் சொன்னதையே நானும் நம்புகிறேன்- சம்பாத்து துடைப்பது..அதையே தான் பின்னானில் சிறையில் அடித்து கொல்லப்பட்ட நிமலரூபன் என்ற கைதிக்கும் செய்தார்கள்.

இரண்டாவது

நெ எழுதியிருந்தார் குத்து மதிப்பாக எழுதுவது என்று- பின்னர் அவரே சொல்லுகிறார் தான் ஒரு கட்டுரை வாசித்தது என்று..முடிவாக சொல்லுகிறார், ஆனத்தராசா கொலைக்கு யாரும் கவலைப்படவில்லை என்று..அதை எங்கிருந்து எடுத்தாரோ தெரியாது..ஆனால் இப்ப நீங்களும் சொல்லுகிறீர்கள் மைதானத்தில் நின்றவரும், மேலும் பலரும் கவலைப்படவில்லை என்று .. எனக்கு தெரியாது, நான் அப்போது படித்த பாடசாலயில் கருப்பு பட்டி போட்டிருந்தனான்கள்..

ஒன்று செய்யலாம், இதுகள் எல்லாம் தெரிந்தவர்கள், அது பற்றி ஒரு கட்டுரை வரையலாம்..அதை இன்னும் கொஞ்சபோர் திருத்தலாம், முடிவாக அக்ககுரைன்தது ஒரு 30 வருடத்துக்கு முந்திய வரலாறாவது திருத்தமாக தெரியும். ஆளுக்கு ஆள் ஒவ்வொரு வரலாறும் வியாக்கியானங்களும் கொடுக்காமல்.

Link to comment
Share on other sites

1989களில் எனது நண்பன் ஈபிஆர்எல்எவ் (ஈப்பி) இனால் பலாத்காரமாக பிடிக்கப்பட்டு மொட்டை அடிக்கப்பட்டு வேலணையில் வைத்து கட்டாய ஆயுதப்பயிற்சி கொடுக்கப்பட்டான். அப்போது பல தடவைகள் ஈப்பியிடம் இருந்து தப்புவதற்கு முயற்சித்தான். ஒரு தடவை அவனுக்கு தண்டனையாக பத்மநாபாவின் சப்பாத்தை துடைத்துவிடுமாறு கட்டளையிடப்பட்டதாகவும், பத்மநாபா சப்பாத்துடன் கம்பீரமாக நிற்க தான் சப்பாத்தை துடைத்துவிட்டதாகவும் கூறினான். இது ஓர் உதாரணம் மாத்திரமே.

இதைவிட கேவலமாக அனைத்து இயக்க தலைவர்களை பற்றியும் கதைகள் பல கேள்விப்பட்டிருக்கின்றேன் .மிக கேவலமான கீழ்தரமான குற்றசாட்டு .இப்படிநடந்திருக்க ஒரு வீதம் கூட சந்தர்ப்பம் இல்லை .

Link to comment
Share on other sites

Volcano,

அதிபர் கொலை பற்றி பெரிதாக யாரும் கவலைப்படவில்லை என நான் எழுதியது எனது கருத்து இல்லை. குறிப்பிட்ட காலத்தில் சென்.ஜோன்சில் கல்விகற்ற மாணவர் ஒருவரின் கருத்து அது. வரலாற்றை எழுதுபவர்களும் தனிநபர்களே. தனிநபர்களின் கருத்துக்களில் முரண்பாடுகள் காணப்படலாம். அதேசமயம் பலரும் அறியப்பட்ட எழுத்தாளர்கள் அற்புதன் கூறிவிட்டார், அல்லது சிவராம் கூறிவிட்டார் என்பதற்காக ஒரு விடயத்தை அப்படியே உண்மை என்றும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

அர்ஜுன்,

சும்மா சிவனே எனப்படித்துக்கொண்டிருந்த எனது நண்பனின் வாழ்க்கை ஈப்பியினால் தலைகீழாக எழுதப்பட்டது. அவன் கடைசியில் வேலணையிலிருந்து தப்பியோடி உயிரைக்காப்பாற்றிக்கொள்வதற்காக த.வி.புவுடன் இணைந்துகொண்டான். இந்திய இராணுவம் விலகிச்சென்றபின்னர் அவனை நான் சந்தித்தபோது ஈப்பி மீது கடும் சினத்துடன் காணப்பட்டான். பத்மநாபாவின் தாயார் கொழும்பில் வீதி விபத்தில் கொல்லப்பட்டது தற்செயலான விபத்து இல்லையெனவும், திட்டமிட்ட கொலையெனவும் கூறினார். ஈப்பியினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களினாலேயே பத்மநாபாவின் தாயார் கொல்லப்பட்டதாகக்கூறினான்.

ஈப்பினினால் எனது தனிப்பட்ட வாழ்க்கையில்பட்ட அவலங்கள் பல. அதை ஓர் புத்தகமாகவே எழுதலாம். இந்தியன் ஆமி இலங்கையைவிட்டு வெளியேறியதைவிட ஈப்பி இயக்கம் ஊரைவிட்டு ஓடிப்போனதே எனக்கு அப்போது அதிகமகிழ்ச்சியை ஏற்படுத்தியது எனக்கூறலாம்.

நீங்கள் 1984 ஆண்டிலேயே நாட்டைவிட்டுப்போய்விட்டதாக எங்கோ எழுதி வாசித்த ஞாபகம். பத்மநாபாவின் சப்பாத்தை எனது நண்பன் துடைத்த கதையை உங்களினால் ஒருவீதமும் நம்பமுடியாமல் உள்ள தாற்பரியத்தை நானும் உணர்ந்துகொள்கின்றேன். பிரச்சனைக்காலத்தில் ஊரில் வாழாத உங்களினால் எமது நேரடி அனுபவங்களைப்புரிந்துகொள்வது கடினமாகவே அமையும்.

Link to comment
Share on other sites

நான் சாகப்போகும் தறுவாயிலும் மன்னிக்கத் தயாராக இல்லாதது இரண்டு விடயங்கள். ஒன்று ஈ.பி.ஆர்.எல்.இனை அடுத்தது மாணிக்கதாசன் எனும் அரக்கனை வளர்த்தெடுத்த புளொட்டை

முந்தியும் எழுதி இருக்கின்றன். பத்மநாபா கொல்லப்பட்ட போது என் வயது பதின்ம வயதின் ஆரம்பம். ஆனால் அவர் கொல்லப்பட்ட செய்தியை கேட்ட சந்தோசத்தை பின்னர் வேறு எவரும் கொல்லப்பட்ட போதும் அடையவில்லை (சிங்கள தளபதிகளின் சாவு கூட அந்தளவுக்கு மகிழ்ச்சி தரவில்லை). அன்று எனது திருவிழா என்றே கொண்டாடினேன்.

பதின்ம வயதின் பின் ஆயிரக்கணக்கான சம்பவங்கள், அனுபவங்கள் ஏற்பட்ட பின்னும் ஒரு சொட்டும் குறையாமல் அந்த உணர்வு இன்றும் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து ‘சே’ என்று அழைக்கும் அளவிற்கு கவர்ச்சிகரமானவர். சில வேளைகளில் தாடியும் , நட்சத்திரத் தொப்பியுமாக பத்மனாபாவைப் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு புரட்சிக்காரன் என்று சொல்லிவிடலாம்.

இந்த ஒரு எழுத்தே காணும் பத்மநாபா எப்படியானவர் என்று அறிந்து கொள்ள அவர் ஒரு புரட்சிகர கீரோ மாதிரி இருந்திருக்கிறார்...அவருக்கு இவர்(நாவலன்) பட்டம் கொடுத்து மகிழ்கிறார்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கட்டுரை மூலம் சபாநாவலனின் சுயதம்பட்டம் தவிர வேறு ஒன்றையும் அறியக்கூடியதாக இல்லை.

உண்மையை இதைவிட விளக்கி குறுக்கி எழுதமுடியாது.

புலிவாந்தி எடுப்பவர்களுக்கு புலிகள் மேல் யார் சேறு வாருவார் நாங்கள் அதை காவலாம் என்று காத்திருப்பார். எந்த ஆதாரமோ அடிப்படையோ கால நேர மதிப்பீடோ எதுவும் தேவையில்லை. புலிக்கு எதிராக இரோண்டொரு வார்த்தையாவது இருக்காதா என்ற தாகத்திற்கு ஒரு சிறு துளி கிடைத்தாலே போதும் காவ வேண்டியதுதான். அவர்களுக்கு காவடி எடுப்பது என்பது இவர்களது பிறவி வேண்டுதலோ என்னமோ. சொந்த கண்ணோடுதான் மற்றவரையும் பார்ப்பார்கள்.

எதோ எழுத தெரியும் அதை குறைந்த செலவில் அச்சிட முடியும் என்பதால்

சாதியம் பூதியம் பாதியம் என்று அங்கு இல்லாதவைக்கு விளக்கம் எழுதுவதிவிடுவார். அதை வாசித்து தாம்தான் விளங்கியதாக ஒரு நாடகம் போடுபவர்கள் காவிதிரிவார்கள். தாம் கான்னை மூடியதால் உலகம் இருண்டதாக கற்பனை செய்து வாழும் கூட்டம். அதை வேறு யார் மீதாவது சுமத்திவிட்டு தமது சொந்த சுயதம்பட்டம் அடிக்க தொடங்கிவிடும்.

இந்த பூதார வாணவேடிக்கைகள் அங்கே நடந்த காலத்தில் அங்கே இல்லாத ஒரு மூன்றாம் தரப்பு தகவல்களை கேட்டறிந்து வாழ்ந்த கூட்டம். அங்கே நடந்தவை பற்றி அங்கு இருந்தவர்களுக்கு விளக்கம் கொடுப்பது இதை எப்படி தமிழில் சொல்வது என்பது எனக்கு தெரியாது. ஆனால் தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள் "பத்து பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் முக்கிகாட்டினாளாம்" இந்த விண்ணான வேலையைத்தான் எதோ நியாவதிகள்போல் வேடமிட்டு ஒரு கூட்டம் இங்கே செய்கிறது. இதன் உள்நோக்கமும் நாம் எல்லா புத்தகமும் படித்து நல்ல அறிவோடு பேசுகிறோம் என்ற சுய விளம்பரம்தான்.

இந்த கட்டுரையை எழுதுபவர்களின் (sub contractors ) கிளைகள்தான் இவர்கள் இருவரின் நோக்கமும் எண்ணமும் ஒன்றுதான் சுயவிளம்பரம்.

அடுத்தவன் எழுதி தெரியும் நிலையில் இருக்கும் நீங்கள் இவளவு நாளும் எங்கு இருந்தீர்கள்?

இன்று தமிழ் கலாச்சார சீரழிவை செய்ய சிங்களவன் செய்யும் விபச்சார வேலைகளை யாழில் அசோகா கொட்டல் முன்பாக பட்பனாபவின் முகாமுக்கு முன்பாக இவர்களது நேரடி பாதுகாப்புடன் இவர்களே முப்பது வருடங்களுக்கு முன்பாக செய்தார்கள். (சுத்தி துரோக கூட்டம் அதற்கு பாதுகாப்பு இந்திய நாய்கள்...... அதற்குள்ளும் சென்று பட்டபகலில் வெடி தீர்த்து வந்தார்கள் . அவர்களுக்கு கொள்கை இருந்தது பாதை இருந்தது தடைகள் இருந்தால் தகர்த்தே சென்றார்கள். இன்று இந்த கும்பலுக்கு ஆலவட்டம் காட்டி பிழைப்பு பார்க்கிறது ஒரு கூட்டம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.