Jump to content

பிரபஞ்சம் - தமிழும், தமிழரும்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபஞ்ச வரலாறில்,தமிழ் தோன்றியது எப்போது தமிழர் நாகரிகமும்,சீன நாகரிகமும் உலகின் மிகப் பழமையான இரு நாகரிகங்கள் என்பது வெள்ளிடை மலை.

இந்தியாவும் சீனமும் எவ்வாறு உலகின் செல்வந்த நாடுகளாக விளங்கின.

கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம்.முதன் முதலில் தமிழ் நாட்டில் தோன்றியது.தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000 இக்கால இந்தியாவின் தமிழ் நாடு,பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000 முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000 யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000 நியாண்டெர்தல் மனிதன் கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர். கி.மு. 75000 கடைகி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000 தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000 தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 - 20000 ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000

ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527

முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 - 6100

பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000 கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது.உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087 கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 - 3000 கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண ல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000 உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, அரப்பா.

கி.மு. 4000 சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு - 4000 கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம்.சுமேரியாவில் புதைபொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு - 3200 சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின்முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர். கி.மு - 3113 அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு - 3102 சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது. மண்டையோட்டு வடிவங்களின் வகைகள் இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.

கி.மு - 3100 - 3000

ஆரியர்சுள் சித்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்துசமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு - 2600 எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு - 2387 இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000 காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ்மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915 திருப்புரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. - 1900 வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500 முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்குஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. - 1450 உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. - 1316 மகாபாரத கதை வியாசரால் அமைக்கப் பட்டது.

கி. மு. 1250 மோசசு 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினர்.

கி. மு . 1200 ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000 உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600 வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950 அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950 வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925 யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900

இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850பின் இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநாணூறு, புறநாணூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நாணூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கி. மு. 776 கிரேக்கத்தில் (கிரிசு) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி. குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)

கி. மு. 750 பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700 சொரோசுடிரேணியிசம் பெர்சியாவில் சொரோசுடரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543 கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600 லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600

கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று,

கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமசுகிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமசுகிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 - 527 மகவீரர் காலம். செயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560 பித்தகோரசு கிரேகத்தில் (கீரிசு) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478 கன்பூசியசு காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500 கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478 இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல். கி. மு. 450 ஏதேன்சில் சாக்கரடீசு புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 - 348 சாக்கரடீசு மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400 கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 - 328 உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 - 270 மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326 அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305 சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302 சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300 சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300

கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232 மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245 சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251 புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220 சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221 புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200 கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180 குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200 முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200 தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87 ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62 செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42 யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25 பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என ஒளவை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31 உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9 இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1 கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

கி.மு. 4 ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார். எனவேதான் கல்தோண்றி மண்தோண்றாக் காலத்தே தோண்றிய மூத்தகுடி தமிழ்க்குடி என்ற சொல்லடை வழக்கத்தில் வந்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.